Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் நியாயமானதே - நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

  • Replies 81
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருக்கும் போது பேகர் சாப்பிட்டார் என்ற செய்தி தவறு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவர் உண்ணாவிரதம் இருந்தது உண்மை என்றாகிவிட்டது.

ஆனால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வழங்கப்பட்ட உறுதிமொழிகள் என்ன.. யாரால் அவை வழங்கப்பட்டன.. ஏன் அவை முள்ளிவாய்க்கால் மனித அவலங்களை தடுத்து நிறுத்த பாவிக்கப்படவில்லை.. முள்ளிவாய்க்காலின் பின்னான முகாம் படுகொலைகளை சித்திரவதைகளை நிறுத்த பயன்படவில்லை.. இப்படி நிறைய கேள்விகள் தொக்கு நிற்கின்றன.

இருந்தாலும் தனிமனிதனாக இந்த வழக்கை சந்தித்து வென்றிருக்கிறார் என்ற வகையில்.. அவருக்கு மக்கள் நிச்சயம் ஆதரவும் ஆறுதலும் அளிப்பார்கள். ஆனால் உண்மையில் இந்த உண்ணாவிரதம் எதிர்பார்த்த பயனை அளிக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்..! ஆனால் தமிழ் மக்களின் உணர்வுகளை மேற்குலகில் வெளிப்படுத்த இது உதவி இருக்கிறது. தாயகத்தில் இதன் தாக்கம் பெரிதாக மக்களைக் காக்கத் தவறிவிட்டது.

Edited by nedukkalapoovan

இதுதொடர்பாக முன்பு வந்த பதிவு

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் ஏமாற்று வேலையா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64833&st=0

நன்றி...

Edited by நிழலி

வாழ்த்துக்கள்....

இவரின்வெற்றியைபற்றி கூறியபோது "இது உளைப்பதுக்கு நல்லவழி" என்றுகூறும் நன்றி கெட்ட தமிழ் ---- எம்முடன் இருக்கின்றன...

Edited by நிழலி
நீக்கப்பட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hunger striker libel win: 'I considered suicide'

29 July 2010

By Dominic Ponsford, Roger Pearson

A Parliament Square hunger striker who was accused in the Daily Mail and the Sun of sneaking away to eat Macdonald’s burgers today accepted “substantial” but undisclosed libel damages from the two papers and a public apology at London’s High Court.

Speaking afterwards the man said he was so upset by the stories that he considered killing himself.

Mr Justice David Eady was told that Parameswaran Subramanyam, a Tamil refugee from Sri Lanka, went on hunger strike on 7 April 2009 in an attempt to raise awareness of the plight of Sri Lankan Tamils and in a bid to persuade the UK Government to intervene.

His solicitor, Magnus Boyd from Carter Ruck, told the judge that Subramanyam received substantial public support from both within the Tamil community and the public more generally and that hundreds of supporters kept vigil outside the his tent throughout his hunger strike and thousands queued on a daily basis to show their respect for his action.

He officially ended the hunger strike on 30 April 2009, said Boyd, and at the time had not eaten any food for 23 days and had to be hospitalised for five nights.

However, he said that almost six months later the Daily Mail published a story headed “Hunger Striker’s £7m Big Mac” which claimed that he had been sneaking away to eat fast food during the hunger strike.

The Sun also published an article based on the Mail story headed “Hunger Striker was Lovin’ It” with a large photograph of the Mr Subramanyam captioned “Bogus…striker was ‘eating burgers’ ”.

“The articles reported claims that the claimant had been secretly eating McDonald’s burgers throughout his hunger strike and that he had consequently caused the police to waste a fortune in public money. The articles stated that police surveillance teams had caught the claimant eating the burgers on specialist monitoring equipment,” said Boyd.

However, he continued: “The allegations are entirely false which both defendants now accept. The claimant did not consume any food at all throughout his hunger strike. The Metropolitan Police Superintendent who was in charge of the operation in Parliament Square confirmed that there was no police surveillance team using 'specialist monitoring equipment' and that no video evidence existed.”

He said the articles struck at the heart of Subramanyam’s integrity, and undermined the single achievement for which he had become known and respected.

He told the judge that both papers now apologised and were to pay substantial damages and Subramanyam’s legal costs.

'Unbearable strain'

Parameswaran said today: “I am relieved that this matter is now resolved and I can start to rebuild my life again The past eight months have been an unbearable strain on my life, to the extent that at times I have even contemplated taking my own life.

"As a result of the lies that the Newspapers published about me, and through no fault of my own, I have lost friends, been shunned by family members and completely ostracised from the Tamil community."

Liberal democrat MP Simon Hughes MP said: "I saw Parameswaran for nearly every day of his hunger strike last year and have stayed in contact since. From all I saw and knew about the protest, Parameswaran always acted out of principle and for real.

"The false allegations about Parameswaran were not just hurtful but clearly aimed at undermining Parameswaran’s credibility and the credibility of the whole Tamil protest.”

http://www.pressgazette.co.uk/story.asp?sectioncode=1&storycode=45776&c=1

முதலில் பரமேஸ்வரனிடம் மன்னிப்பை கோரி ... இச்செய்தி வந்து பலரது ஏழனங்களுக்கும், சிலரது உருட்டுப்பிரட்டல்களுக்கும் முகம் கொடுக்க முடியாது, சில கருத்துக்களை எழுதியதற்காக ...

.... பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த அத்தனை நாட்களும் சில மணி நேரங்களாவது கலந்து கொண்டவன் என்ற முறையில், சிறிய மனத்திருப்தி, ஆனால் இப்போராட்டத்தினால் ...

* ஏற்பட்ட பலன் என்ன?

* சிங்களத்தின் இனப்படுகொலைகளை தடுக்க முடிந்ததா?

* ...?????

.... இல்லையாயின், இவ்விளையர்கள் பிழையாக வழிநடாத்தப்படாமல், இனிமேலாவது நன்கு திட்டமிட்டு இலைஞர் போராட்டங்கள் அமைய வேண்டும்!

மிக்க மகிழ்சியாக உள்ளது .... :lol:

1000ம்... 1000ம் நன்றிகள் பரமேஸ்வரன்... நன்றி :lol:

Edited by Netfriend

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலத்தில் வந்த இதுபற்றிய செய்திக்கு எனதுபின்னுட்டம் இப்படித்தான் இருந்தது.

இங்கு பரமேஸ்வரன் செய்த ஒரே தவறு இவ்வேள்வியில் தன்னை ஆகுதியாக்காததே. இதுவே அவரைப்பற்றி விமர்சனம் செய்வதற்கு ஏதுவாகவிருக்கின்றது. மேலும் சண் எனும் செய்துயூடகம் ஒரு திரியினைக் கொழுத்திப் போட்டுள்ளது, இதன் பின்பு நடைபெறும் சம்பவங்களை நாம் நன்றாகக் கவனித்தல் வெண்டும். இங்கு கருத்தெழுதுபவர்களில் யாராவது இங்கிலாந்தில் வசித்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்கலாம். இச்செய்தி உண்மையற்றதாக இருந்தால் சட்ட நடவடிக்கைமூலம் சம்பந்தப்பட்டோர் எதற்காக இதனை வெளியிட்டார்கள் என அறியமுயலலாம்.

இதற்க்காகத்தான் நான் எப்போதும் கூறுவது புலம்பெயர் தமிழினம் எப்போதும் பொருளாதார நிலையிலும். பல்துறைசார்ந்த கல்வியறிவிலும் முண்ணணியில் இருக்க முயலவேண்டுமென. நாம் அப்படி இருப்போமாகவிருந்தால், (இச்செய்தி தவறாகவிருந்தால்) சண் பத்திரிகை இதுபோன்ற பொறுப்பற்ற செய்திகளை வெளியிடுவதில் தயக்கம் காட்டும். இப்பத்திரிகை நிறுவனம் ஒருவேளை தவறான செய்தியினை வெளியிட்டதாகவிருந்தால் அதற்கு எதிராக நாம்தான் நடவடிக்கையெடுக்க வேண்டும். இங்குள்ள மனிதவுரிமை நிறுவனங்களோ, அன்றேல் அரசோ நடவடிக்கை எடுக்காது.

யாராவது பரமேஸ்வரனுடன் தொடர்புகொண்டு இதிபற்றி விசாரித்து, சண் பத்திரிகை சொல்வது நூறுவீதம் பொய்யாக இருந்தால், புலம்பெயர் உறவுகளே அப்பத்திரிகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். இதில் யாழ்கள உறவுகளும் பங்களிக்கலாம். எவ்வளவோ (?) செய்துவிட்டோம் இதைச் செய்யாதுவிடுவோமா? மற்றும்படி இதில் உணர்ச்சிவசப்படுவதற்கு எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இது நீதிக்குக் கிடைத்த வெற்றி! அவர பேகர் சாப்பிட்டுத்தான் உண்ணாவிரதம் இருந்தார் என்ற செய்தி 2 பேப்பரிலதான் வந்தது.இப்ப அது பிழையான செய்தி என்றும் சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் மூக்குடைபட்ட செய்தி எல்லாப் பத்திரிகைகளும் நாளைக்கு எழுதப் போகின்றன. இதைத்தான் சொல்லுறது பொல்லைக் குடுத்து அடி வாங்கிறதெண்டு.மக்கள் அந்தப் பத்திரிகைகளின் தராதரங்களைப் புரிந்து கொள்வார்கள்.வாழ்த்துக்கள் பரமேசுவரா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

.

பரமேஸ்வரனுக்கு ஏற்பட்ட மனக்காயங்கள் இந்த தீர்ப்புடன் ஆறட்டும்.

பரமேஸ்வரன் மீது குற்றம் சுமத்திய எம்மவர்கள் இனியாவது திருந்த முயற்சிக்க வேண்டும்.

இனிமேலாவது உண்மையும் அறியாமல்..... சொந்த இனத்தவன் மீது காறி உமிழ்வதை நிறுத்துங்கள்.

.

சரியாகச் சொன்னீர்கள் சிறி அண்ணா

http://www.youtube.com/watch?v=DWvnE7QfbMo&feature=player_embedded#!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நான் அவரின் நேர்மைக்கும் புனிதமான நோக்கத்திற்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். பரமேஸ்வரன் இன்னொரு பணியையும் செய்யவேண்டும்.இந்த பத்திரிக்கைச் செய்திக்கு பின்னால் இருக்கும் சூத்திரதாரி யார் என்பதையும் வெளிக்கொணரும் முயற்சி எடுக்க வேண்டும்.அது அம்சாவாக இருந்தாலும் அவனது அரசாக இருந்தாலும் அவர்களின் நயவஞ்சக முகங்களை பிரித்தானிய மக்களுக்கு தோலுரித்துக் காட்ட வேண்டும். இந்த நாய்கள்தான் பசுத்தோல் போர்த்திய நரிகள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.அப்புறம் மிக முககியமாக விமல் வீரவசேயை, பரமேஸ்வரனிடம்.............. கொஞ்சம் வாங்கி குடிக்கச் சொல்ல வேண்டும்

தமிழரின் போராட்டம் நியாயமானதே என இந்த சர்வதேசம் சொல்லும்வரை நாம் தொடருவோம் எமது நியாயப் போராட்டத்தை.

எமக்கு கிடைத்த ஜி.எஸ்.பி வெற்றி, பரமேஸ்வரனின் வெற்றி - இவற்றை அடிப்படையாகக் கொண்டு.

இதை நான் அவரின் நேர்மைக்கும் புனிதமான நோக்கத்திற்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். பரமேஸ்வரன் இன்னொரு பணியையும் செய்யவேண்டும்.இந்த பத்திரிக்கைச் செய்திக்கு பின்னால் இருக்கும் சூத்திரதாரி யார் என்பதையும் வெளிக்கொணரும் முயற்சி எடுக்க வேண்டும்.அது அம்சாவாக இருந்தாலும் அவனது அரசாக இருந்தாலும் அவர்களின் நயவஞ்சக முகங்களை பிரித்தானிய மக்களுக்கு தோலுரித்துக் காட்ட வேண்டும். இந்த நாய்கள்தான் பசுத்தோல் போர்த்திய நரிகள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.அப்புறம் மிக முககியமாக விமல் வீரவசேயை, பரமேஸ்வரனிடம்.............. கொஞ்சம் வாங்கி குடிக்கச் சொல்ல வேண்டும்

====================================================

to: letters@the-sun.co.uk

cc: talkback@the-sun.co.uk

Subject: Parameswaran Subramanyam - Apology

Dear Editor,

Thanks for this sincere apology ( here). What I wished you did more as the damage cannot be measured by monetary compensation alone ( 77K Pounds).

Not only Tamils were subject to Genocide in the hands of Sri Lanka and it continues to date. Still there are more than 100000 Tamils in the camps and Tamilsare left with no protection.

I urge your paper to highlight the plight of Tamils and to become a champion for the voiceless and hapless Tamils in Sri Lanka!

Write an editorial asking the British to boycott Sri Lanka until the Tamils grievances are addressed.

Urge UK government to do question Sri Lanka on its alleged war crimes.

And these and more would be the real apology to Parameswaran Subramanyam and Tamils at large!

Thanks,

Sincerely,

Edited by akootha

ஊடகத்துறையில் ஊடுருவிய சிங்கள, இந்திய பயங்கரவாதிகளின் தாளத்துக்கு ஆடிய பத்திரிகைகளின் முகம் கிழிந்துவிட்டது. இங்கிலாந்தில் இன்னமும் நடுநிலையான நீதிபதிகள் சிலராவது உள்ளனர் என்பது மகிழ்ச்சி.

இந்த செய்தியை BBC நன்றாக உணர்ந்து, அதனுள் ஊடுருவியதாக கருதப்படும் இந்திய பயங்கரவாதிகள் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும்.

சிங்கள, இந்திய பயங்கரவாதிகளின் அராஜகங்களை மறைத்து, ஈழத்தமிழர்களின் நேர்மையான போராட்டங்களை கொச்சைப்படுத்தும் அனைவர் மேலும் புலம் பெயர் தமிழர் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

பரமேஸ்வரன் மீது அவதூறு வீசிய புலம் பெயர் தமிழரும் மன்னிப்புக் கேட்பதுதான் நாகரீகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் பரமேஸ்வரன் அவர்களே

செய்தி வெளியிட்டவர்கள் மன்னிப்பு கேட்டிட்டினம். விமர்சிதவர்கள் எப்போது மன்னிப்பு

கேட்கப் போகினம். இந்த சம்பவம் பிரித்தானிய அரசிற்கு ஈழத் தமிழர்கள் பால் இருந்த நம்பகத்தன்னையை மேலும் வலுவாக்கியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சன், டெய்லி மீரர் பத்திரிகைகள் மன்னிப்புக் கோரியுள்ளன. இங்கு யாழ் இணையத்தில் முன்பு இவரின் உண்ணாவிரத்தைக் கொச்சைப் படுத்தி எழுதியவர்கள் எப்பொழுது மன்னிப்புக் கேட்கப் போகிறீர்கள்? சில ஊடகங்களில் இவரின் உண்ணாவிரத்தைக் கொச்சைப் படுத்தியவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கோருவார்களா?

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

.

குட்டி, உங்கள் இணைப்பை பார்த்ததன் மூலம்......

இதற்குப் பின்னணியில் யார் இருந்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.

அத்துடன் இந்தக் காணொளி பலரின் உண்மை முகங்களை கிழித்தெறிந்திருக்கின்றது.

ஒரு உண்மையான வீரனுக்கு, எம்மவர்களே..... எவ்வளவு இடைஞ்சல்கள் செய்திருக்கின்றார்கள் என்னும் போது...... வெட்கி தலை குனிய வேண்டி உள்ளது.

.

அதெல்லாம் இருக்கட்டும்....இந்த மனிதரை, அவர் உண்ணாநோண்பை இதே யாழ் இணையத்தில் பத்திரிக்கைகளின் பொய் பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்து கேவலப் படுத்திய தமிழர்கள்(?) எங்கே? என்னைக்காவது தமிழனை நம்பினீர்களா, ஈனமனிதர்களே? போகட்டும் இனியாவது நம்பித்தொலையுங்கள் தமிழனுக்காக அல்ல உங்களுக்காக!!!!...இல்லை என்றால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுக்கள் பரமேஸ்வரா! நீ அநீதி ஒன்றை எதிர்த்து போராடி வென்றிருக்கின்றாய்!!

பொதுவாக எம்மினத்தின் குணம் இவ்வாறு அநீதி நிகழும் போது விதியை நொந்துவிட்டு அடங்கிப் போவது. அதற்கு காரணம் எம் சமூகம். இவ்வாறான அநீதி நிகழும் போது எம்மை சுற்றியிருக்கும் மேதாவிகள் ஆலோசனை சொல்லுவார்கள் ... தம்பி வழக்கு கிழக்கெண்டு போய் காசை கரியாக்காதை. அவங்களெல்லாம் பெரிய தலைகள். மோதினா இன்னும் சேதாரம் நமக்குத் தான். ஏதோ நம்ம விதி இப்பிடியப் போச்சு எண்டு தத்துவம் பேசி இருக்கிற எழுச்சியையும் கெடுத்து விடுங்கள். எனவே எம்மினம் இதை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும். உலகமே சேர்ந்து எம்மை அழித்து விட்டதே என்று பெருமூச்செறிந்து பின் சோர்ந்துவிடுவதை நிறுத்துவோம். போராடுவோம். மனந்தளரா தொடர்ச்சியான போராட்டம் எமக்கு நிகழ்த்தப் பட்ட அநீதிகளுக்கு நியாயமானதொரு முடிவைச் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

சன், டெய்லி மீரர் பத்திரிகைகள் மன்னிப்புக் கோரியுள்ளன. இங்கு யாழ் இணையத்தில் முன்பு இவரின் உண்ணாவிரத்தைக் கொச்சைப் படுத்தி எழுதியவர்கள் எப்பொழுது மன்னிப்புக் கேட்கப் போகிறீர்கள்? சில ஊடகங்களில் இவரின் உண்ணாவிரத்தைக் கொச்சைப் படுத்தியவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கோருவார்களா?

மன்னிப்பா அவர்கள் மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டார்கள்...ஆனால் சொல்கிறார்கல் பரமேஸ்வரன் உண்ணா விரதமிருந்தும் என்ன பயன் போராட்டம் வெற்றியளிக்கவில்லை என்டு ஆனால் அவர்கள் தங்களை புலி ஆதரவாளர்கள் எனச் சொல்வது தான் வேடிக்கை...எங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை மற்றவனை சொல்லி என்ன பயன்!

அண்ணர் பரமேஸு... நீரும் ஒரு யாழ் வாசகர் எண்டு எனக்கு நிச்சயமாக தெரியும்..

பட்டது போதும் இந்த தமிழ் சனியன்களுக்காக..... . காசை எடுத்கொண்டு மாறுற வழியப்பாரும்..

சோறுகள் எண்டு அழைக்கபடும் இந்த பிந்தங்கிய கூட்டம், நாய்பீ மாதிரி........ தொட்டால் நாறுரது, வட்டத்தை விட்டு வெளியே வந்த நாங்கள்தான்..

Edited by Panangkai

அண்ணர் பரமேஸு... நீரும் ஒரு யாழ் வாசகர் எண்டு எனக்கு நிச்சயமாக தெரியும்..

பட்டது போதும் இந்த தமிழ் சனியன்களுக்காக..... . காசை எடுத்கொண்டு மாறுற வழியப்பாரும்..

சோறுகள் எண்டு அழைக்கபடும் இந்த பிந்தங்கிய கூட்டம், நாய்பீ மாதிரி........ தொட்டால் நாறுரது, வட்டத்தை விட்டு வெளியே வந்த நாங்கள்தான்..

பனங்காய்

முன்பெல்லாம் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக நிறைய கருத்துக்கள் எழுதுவீர்கள். இப்போது ஏன் இந்த வெறுப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பரமேஸ்வரன்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பரமேஸ்வரன்!

உண்மை தர்மம் நிச்சயம் ஒருநாள் வெளியில் வரும் நிச்சயம் ஜெயிக்கும்

எனக்கு என்றும் இவர்கள் போல் எமக்காக உழைத்தவர்கள் மேல் ஒரு நிலைப்பாடுதான்

தடுமாறுவது எல்லாம் இடையில் உள்ளவர்களும் எமக்கு தோள் கொடுக்காது பார்வையாளராகவும் பகிடி வதைகாரர்களாகவும் நின்றோரே...

இன்று அவர்களது முகம் கிளிக்கப்பட்டுள்ளது

அவர்கள் எங்கே....???

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64833&st=60

வைத்தியர்களின் அறிக்கை பதிலைத்தரும் என்று.

என்னைப்பொறுத்தவரை

அந்த நண்பன் பரமேசுவரன் அவர்களை நான் மதிக்கின்றேன்

அந்த குளிருக்குள் அந்த நண்பர் எமக்காக பட்ட துன்பங்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை

கேவலப்படுத்தியவர்களை நான் மன்னிக்கவே மாட்டேன்

காலம் பதில் சொல்லும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சன், டெய்லி மீரர் பத்திரிகைகள் மன்னிப்புக் கோரியுள்ளன. இங்கு யாழ் இணையத்தில் முன்பு இவரின் உண்ணாவிரத்தைக் கொச்சைப் படுத்தி எழுதியவர்கள் எப்பொழுது மன்னிப்புக் கேட்கப் போகிறீர்கள்? சில ஊடகங்களில் இவரின் உண்ணாவிரத்தைக் கொச்சைப் படுத்தியவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கோருவார்களா?

கந்தப்பு.. பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்தையிட்டு தமிழ் மக்கள் அக்கறை காட்டியது அவர் வைத்திருந்த கோரிக்கையின் பால் தான் என்பதை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். பரமேஸ்வரன் என்ற தனிநபர் சார்ந்து அல்ல அந்த அக்கறை ஆரம்பத்தில் எழுந்தது. இன்று பரமேஸ்வரனில் அக்கறை காட்டவும் அதுதான் காரணம்.

உண்ணாவிரதம் உண்மையா பொய்யா என்பது என்ற இந்த விசாரணை.. தீர்ப்பு.. பரமேஸ்வரன் வைத்திருந்த கோரிக்கைகளுக்கு என்னானது என்பதை தட்டிக்கழிக்கச் செய்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த வெற்றி பரமேஸ்வரன் இருந்த உண்ணாவிரதம் உண்மை என்று சொல்ல வைத்திருக்கிறதே அன்றி பரமேஸ்வரன் இந்த உண்ணா நோன்பின் போது வைத்திருந்த கோரிக்கைகளுக்கும்... அவற்றுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளுக்கும்.. அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பயனுக்கும் ஒரு விளக்கம் இதுவரை பரமேஸ்வரன் தரப்பாலோ அல்லது உறுதிமொழி வழங்கியோர் தரப்பாலோ தரப்படவில்லை.

உண்ணாவிரதம் உண்மை என்று நிரூபிகப்பட்டுள்ள இந்த வேளையிலாவது அந்த உறுதிமொழிகளை அவை எவரால் எப்போது யாருக்காக வழங்கப்பட்டன.. ஏன் அவை சரியான நேரத்தில் அமுலாகி மக்களை காக்கத் தவறிவிட்டன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சொல்ல முன் வர வேண்டும்.

திலீபன் அண்ணா தெளிவாக 5 அம்சக் கோரிக்கையை முன் வைத்தார். அவை மக்களுக்கு சொல்லப்பட்டன. பேச்சுக்கள் நடந்தன. உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டன. அவையும் உடனுக்குடன் மக்களுக்குச் சொல்லப்பட்டன. ஆனால் உறுதி மொழிகள் உடனேயே காற்றில் பறந்தன.. திலீபனும் வற்புறுத்திக் கேட்டுப்பார்த்தார். இந்தியா மசியவில்லை. மாண்டார்.

மக்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொண்டார்.. திலீபனின் நியாயபூர்வமான கோரிக்கையை இந்தியா தான் வழங்கிய போலியான தற்காலிக வாகுறுதிகளைக் கூட நிறைவேற்றாமல் அவரைச் சாகடித்து விட்டது என்பதை.

அங்கும் திலீபனுக்கு கான்சர்.. சாக இருந்தவனை உண்ணா நோன்பிருக்கச் செய்தார்கள்.. திலீபனுக்கு ஆட்டுக்குடல்.. அவன் அதிக காலம் வாழ முடியாது.. அதுதான் சாகடித்துவிட்டார்கள்.. திலீபன் தண்ணி குடிச்சான்.. இப்படி அப்பவும் எம்மவர்கள் பேசிக் கொண்டனர் தான். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி திலீபனின் தியாகம் இன்றும் மதிக்கப்படுகிறது என்றால் அங்கு திலீபனின் கோரிக்கைகள் தொடர்பில் புலிகள் மக்களின் முன் வெளிப்படையாக நடந்து கொண்டதால் தான்.

ஆனால் இங்கு கோரிக்கை.. உண்ணாவிரதம்.. உறுதிமொழி.. கைவிடல்.. இவை குறித்து மக்களிடம் இன்னும் பல விடயங்கள் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. அதுமட்டுமன்றி மக்கள் இந்த உண்ணாவிரதத்தின் பயன் என்ன என்றுதான் கேட்பார்களே அன்றி.. உண்ணாவிரதம் உண்மையா என்பது அல்ல மக்களின் எதிர்பார்ப்பு. உண்ணாவிரதம் உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் வேண்டுகோள்.

சன்னும்.. டெயிலி மெயிலும் மன்னிப்புக் கேட்க வேண்டிய தேவை உண்டு. காரணம் அவர்களின் அக்கறை 7 மில்லியன் பவுன்கள் மீதும் மக்களின் வரிப்பணம் விரையமானது மீதும் இருந்தது.. அதன் அடிப்படையில் அரசின் மீது வீண் செலவீனக் குற்றம் சுமத்தி அதற்கு நெருக்கடியை கொடுக்க பொய்யை புனைந்தார்கள். அதற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு தேவை.. வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு என்னானது என்ற விளக்கமே ஆகும்.

அதனை பரமேஸ்வரன் வழங்க வேண்டும். இன்று அவரின் உண்ணாவிரதம் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில்.. அவரின் கோரிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் என்ன.. ஏன் அவை மக்களை காக்க தவறிவிட்டன.. என்பதையிட்டு பரமேஸ்வரன் உட்பட்டவர்கள் மக்களுக்கு வெளிப்படையாகச் சொல்வது அவசியம். அதைச் செய்யாமல்.. மக்களை இதனை நம்பு என்று சொல்ல வைப்பது கடினம்.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.