Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த எழுத்தாளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரியான இணைப்பு: http://sundararamaswamy.com/

கஸ்டப்பட்டு உழைத்த காசுக்கு சுடிதாரும் சாறியும், தங்க நகையும் வாங்காமல் விட்ட "ரதி" நீங்களாகத்தான் இருக்கும் :D

கிருபன் உங்கள் புத்தகத் தாகத்திற்கு அமேசன் கிண்டில் வாங்கி ஈபுக்கில சேர்த்து வையுங்கோ. மலிவும்.. ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒரு கையில் கொண்டு திரியலாம்.. படிக்கலாம். :D:)

http://www.amazon.co.uk/Kindle-Wireless-Reader-Wifi-Graphite/dp/B002Y27P46/ref=amb_link_157546987_2/279-6816348-8851333?pf_rd_m=A3P5ROKL5A1OLE&pf_rd_s=center-1&pf_rd_r=1QR5NBC8SQBTDSBW8G4A&pf_rd_t=101&pf_rd_p=211179027&pf_rd_i=468294

Edited by nedukkalapoovan

  • Replies 152
  • Views 25.6k
  • Created
  • Last Reply

இங்கு பலருக்கு என்னை பிடிப்பதில்லை என்று தெரியும் அதற்காக உண்மைகள் இல்லையென்று ஆகிவிடாது.

நாகர்கோவிலில் எழுத்தாளர் சுந்தரராமசாமி வீட்டிற்கு போய் உணவு கூட உண்டிருக்கின்றேன்.காலச்சுவடு நடாத்துவது அவரின் மகன் கண்ணன் தான்.மருதங்கேணி தம்பிக்கு இனி படங்கள்தான் இணைக்க வேண்டும் போலுள்ளது.நாகர் கோவில் கேரள எல்லையில் இருக்கும் மிக அழகான ஓர் பட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலருக்கு என்னை பிடிப்பதில்லை என்று தெரியும் அதற்காக உண்மைகள் இல்லையென்று ஆகிவிடாது.

அண்ணா உங்களை பிடிக்காது என்று எவருக்கும் இல்லை. சக கள உறவாக எல்லாருக்கும் உங்களை பிடிக்கும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் உங்கள் எழுத்து சிலரை கடுப்படிக்குது.. அவ்வளவும் தான். :):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனது உயர்தர வகுப்பு வயதில் எனது அண்ணருடைய கடையிலேயே தங்கியிருந்து படித்தேன்

அந்த கடைக்கு முன்பாக ஒரு புத்தகக்கடை இருந்தது

அந்த புத்தகக்கடையில் என்னுடன் ஒன்றாக ஊரில் படித்த நண்பர் தனது படிப்பை நிறுத்திவிட்டு

தனது தகப்பனாருக்கு உதவியாக இருந்தார்

அதனால் எனக்கு எல்லாப்புத்தகமும் இலவசம்

பார்த்துவிட்டு நல்ல நிலையில் கொடுத்துவிடுவேன்

அது அம்புலி மாமா தொடங்கி

ராணி வாராந்தரி.... ஜெமினி சினிமா......யிலிருந்து அந்தரங்க லீலைகள் வரை .....

அனைத்து புத்தகங்களும் படிப்பேன்

புதிதாக எதுவந்தாலும் ஒன்று எனக்காக எடுத்து வைத்துவிடுவார்

பிரான்சுக்கு வந்தபின் ராணி வாராந்தரி, தராசு, ஆனந்தவிகடன், குமுதம், ஜீனியர் விகடன், போன்ற புத்தகங்களை ஓடர் செய்து எடுப்பேன் இங்கு இருந்த ஒரேஒரு குறிப்பிட்ட கடையில்.

அதன்பின் கணணி என்று வெளிக்கிட்டதும்

புத்தகம் வாசிப்பது முற்றாக நின்றுவிட்டது

இங்கு புத்தக வெளியீடுகளுக்கு அழைப்பார்கள்

அங்கு மேடைகளில் தரும் புத்தகங்கள் கூட அவர்கள் தந்த பைகளுடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன

இளைப்பாறியதும் தூசு தட்டப்படுவதற்காக....

அதைவிட

அமைப்பினால் வெளியிடப்படும்

அத்தனை புத்தகங்களும்(எரிமலையிலிருந்து களத்தில் .....மற்றும் பாலா அண்ணாவின் புத்தகங்கள் வரை)

சிடிக்களும்(தரிசனம், ஒளிவீச்சு......) வாங்கி

பத்திரமாக கீழ் அறையில் அடுக்கி வைத்துள்ளேன்

அதுவும்எதிர் காலத்தில் வாசிப்பதற்காகவே...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட

அமைப்பினால் வெளியிடப்படும்

அத்தனை புத்தகங்களும்(எரிமலையிலிருந்து களத்தில் .....மற்றும் பாலா அண்ணாவின் புத்தகங்கள் வரை)

சிடிக்களும்(தரிசனம் ஒளிவீச்சு) வாங்கி

பத்திரமாக கீழ் அறையில் அடுக்கி வைத்துள்ளேன்

அதுவும் எதிர்காலத்தில் வாசிப்பதற்காகவும் வரலாற்றை பத்திரப்படுத்துவதற்காகவுமே..

  • கருத்துக்கள உறவுகள்

"வாசிக்கும் பழக்கமது வழக்கொழிந்து போவதனால்

வரண்டு வற்றியெல்லாம் வீம்பாகி வீங்குதிங்கே" என்ற நிலையிலே " எனக்குப் பிடித்த எழுத்தாளர்" என நல்லதொரு விடயத்தை எடுத்திருக்கும் ரதியவர்களுக்குப் பாராட்டுகள்.

சிறியவயதில் தெரிவுகளற்ற காலத்தில் புஸ்பா தங்கத்துரை முதல் பல்வேறு எழுத்தாளர்களது புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் (சிரித்திரன்) வாசித்துள்ளேன். ஓரளவுக்கு குமுகாய வெளியினுள் நுளைந்த காலத்தில், அறிவுக்கெட்டிய காலத்தில் செங்கை ஆழியான், தாமரைச் செல்வி, அண்மைய காலங்களில் சா.வே.பஞ்சாட்சரம் ஆகியோரது எழுத்து நடை மிகவும் பிடிக்கும். செங்கையாழியான் அவர்களது யானை, மழைக்காலம், காட்டாறு, நடந்தாய் வாழி வழுக்கியாறு போன்றவற்றை வாசிக்கும்போது நாமும் அந்த வெளியினூடே பயணிப்பதுபோல் இருக்கும். தாமரைச்செல்வி அவர்களது நாவலின் பெயர் ஞாபகமில்லை அவரது கதைகளும் குமுகாயத்தோடு இணைந்தவையே. மீண்டும் இந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவல். அண்மைய காலங்களில் மலைமகள் எழுதிய "புதிய கதைகள்" களமுனை வாழ்வின் வரிகளாக.... காலம் அடித்தச் சென்றாலும் பதிவுகளாக .... பலவிடயங்களை அழகாக எழுதியிருந்தார்.scannen0001ly.jpg

ஞாபகம் வரும்போது இன்னும் எழுதுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்கள் புத்தகத் தாகத்திற்கு அமேசன் கிண்டில் வாங்கி ஈபுக்கில சேர்த்து வையுங்கோ. மலிவும்.. ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒரு கையில் கொண்டு திரியலாம்.. படிக்கலாம். :wub::huh:

http://www.amazon.co.uk/Kindle-Wireless-Reader-Wifi-Graphite/dp/B002Y27P46/ref=amb_link_157546987_2/279-6816348-8851333?pf_rd_m=A3P5ROKL5A1OLE&pf_rd_s=center-1&pf_rd_r=1QR5NBC8SQBTDSBW8G4A&pf_rd_t=101&pf_rd_p=211179027&pf_rd_i=468294

கிண்டில் வாங்கிப் புத்தகம் படிக்க இன்னமும் காலமிருக்கு. தமிழ்ப் புத்தகங்களை ஸ்கான் செய்யாமல் ஒழுங்கான ஈபுக்கில் விற்பனை செய்யும்போது பார்க்கலாம்.

ஐ-பாட்டிலும் புத்தகம் வாசிக்கலாம்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

கிண்டில் வாங்கிப் புத்தகம் படிக்க இன்னமும் காலமிருக்கு. தமிழ்ப் புத்தகங்களை ஸ்கான் செய்யாமல் ஒழுங்கான ஈபுக்கில் விற்பனை செய்யும்போது பார்க்கலாம்.

ஐ-பாட்டிலும் புத்தகம் வாசிக்கலாம்தானே!

ஐ பாட்டில் வாசிக்கலாம். அது விலையும் அதிகம்.. அதன் வேறு பல தொழிற்பாடுகளும் வேறு தேவைகளும் உண்டும். அதுமட்டுமன்றி அதன் ஸ்கிரீன் பவர்.. நீண்ட நேரம் புத்தகங்களை வாசிக்க கண்ணுக்கு உகந்ததல்ல. ஆனால் கிண்டில்.. வாசிப்புக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் உள் வீட்டிலிருந்து தொடங்க வேனும்.அப்படிப்பார்த்தால் எனக்கு

பிடித்த எழத்தாளர்கள் புத்தன்,தூயா,மாப்பு,நெடுக்ஸ்,சாத்திரி,ஆபிராம், இன்னுமொருவன்,சஜந்தன்,இன்னும் சிலரின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம்.நினைவு வந்தால் பின் இணைக்கிறேன்.சரி வெளியில் போனால் சான்டில்யன்,சுஜாதா,புஷ்ப்பாதங்கத்துரை போன்றோர் தான் இப்போதைக்கு நினைவுக்கு வருகிறார்கள்.

Edited by sagevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பவும் உள் வீட்டிலிருந்து தொடங்க வேனும்.அப்படிப்பார்த்தால் எனக்கு

பிடித்த எழத்தாளர்கள் புத்தன்,தூயா,மாப்பு,நெடுக்ஸ்,ஆபிராம், இன்னுமொருவன்,சஜந்தன்,இன்னும் சிலரின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம்.நினைவு வந்தால் பின் இணைக்கிறேன்.சரி வெளியில் போனால் சான்டில்யன்,சுஜாதா,புஷ்ப்பாதங்கத்துரை போன்றோர் தான் இப்போதைக்கு நினைவுக்கு வருகிறார்கள்.

சரியாச்சொன்னியள் :huh::wub:

எஸ்.போ வை பற்றி செய்தி இன்றுவந்ததால் நல்லவேளை அவர் ஞாபகத்திற்கு வந்தார். ஓ/எல் படிக்கும் போது பொதுஅறிவு போட்டியில் முதலாம் இடம் வந்ததற்கு எஸ்.போ வின் "சடங்கு" கதையை எனக்கு பரிசாகத் தந்தார்கள்.எனக்கு அப்ப ஒரு சவமும் விளங்கவில்லை.அக்காமார் கொஞ்சம் நக்கலடித்து சிரித்த ஞாபகம்.பின்னர் அவரின் விசிறியாகிவிட்டேன்.

கெட்டவன் நடேசன் என பெயர் ஏன் வந்ததும்(கெட்டவன் நடேசனை எனக்கு தெரியும்).ஊரில நடந்த அந்த மாதிரியான விசயங்களையும் பச்சையாக எழுதிய ஒரு எழுத்தாளர்.

புலியில் இருந்து இறந்த தனது மகனைபற்றி எழுதும் போது ஒவ்வொரு பெற்றோருக்கும் இப்படித்தானே இருந்திருக்கும் என நினைத்தேன்.

நினைவிடை தோய்தல் இவரின் ஒரு சிறு கதை தொகுப்பு வாசித்து இன்புறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாச்சொன்னியள் :wub::o

சிரிப்பப் பார்த்தா.. ஐயோ ஐயோ இந்த 7 idiots.. யையும் இவன் சிங்கிள் வரில சிங்கனா போட்டு தாக்கி இருக்கானே என்ற மாதிரி இருக்கு. மவனே குசா இருக்கு.. இந்த நக்கல் நளினம் தானே வேணாங்கிறது..! அப்புறம் கள்ளுக்கொட்டில் நாஸ்தியாயிடும் சொல்லிப்புட்டன்..! :huh::)

நூல்களை எழுதி கடதாசியில் பதித்தவர்களே எழுத்தாளர்கள் என்று சொல்வதற்கு இல்லை. மற்றும் பந்தி, பந்தியாக எழுதுபவர்களே எழுத்தாளர்கள் என்றும் சொல்வதற்கு இல்லை. நாங்கள் தற்போது நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப உலகில் வாழ்கின்றோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழமை. சஜீவன் கூறியது போல் யாழ் கருத்துக்களமும் ஓர் நூற் களஞ்சியமே. இங்கு கருத்துக்களை பகிர்ந்து கொள்பவர்கள் எழுத்தாளர்களே.

எனக்கு பிடித்த எழுத்தாளர் என்று ஒருவரும் இல்லை. சமயம், வசதி கிடைக்கும்போது வாசிப்பேன். பால், வயது, கல்வித்தகமை, பெயர், ஊர், குலம், கோத்திரம் பார்த்து வாசிப்பது இல்லை. கூறப்பட்ட விடயம் பயனுள்ளதாக அல்லது சுவாரசியமாக இருந்தால் நிச்சயம் அவற்றை நினைவில் இணைத்துக் கொள்வேன், தொடர்ந்து வாசிப்பேன். அத்துடன், அவற்றை எனது வாழ்வில் நடைமுறை ரீதியாகவும் பிரயோகம் செய்வேன்.

யாழை பொறுத்தளவில் தனிப்பட எனக்கு விருப்பமானவர்கள் எழுதும் எல்லாவற்றையும் அது அவர்கள் எழுதியது ஓர் வசனமாக இருந்தாலும் வாசிப்பேன். மிகுதி, சமூக நலன்களை கருத்திற் கொண்டு நாங்கள் ஊக்கப்படுத்த வேண்டிய ஆக்கங்களையும் வாசிப்பேன். இவ்வாறே யாழுக்கு புதியவர்கள் இணைக்கும் ஆக்கங்களையும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக வாசிப்பேன். தவிர, யாராவது எழுதும் சுய ஆக்கங்களிற்கு ஒருவரும் பதில் இடாவிட்டால் அவற்றையும் வாசிப்பேன், பின்னூட்டலும் இடுவேன்.

தமிழக பிரபல எழுத்தாளர்களுக்கே சவாலாக எழுத கூடிய இலங்கை எழுத்தாளர் ரஞ்சகுமாரின் மோகவாசல் சிறுகதை தொகுப்பை இந்த இணைப்பில் சென்று வாசித்து பாருங்கள் http://noolaham.net/project/01/04/04.htm

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எந்த எழுத்தாளர்களையும் பிடிக்காது. :)

ஆனால் அவர்களின் எழுத்துக்களைப் பிடிக்கும். :D

எனது அப்பா சிறு வயதில் கூறியது.

வாசி வாசி எல்லாவற்றையும் அறிந்து கொள்.

உனக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்.

மீதியை மறந்து விடு.

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்.

இந்த வசனங்கள் என் மனதில் என்றும் அழியாதவை.

வாத்தியார்

**********

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக பிரபல எழுத்தாளர்களுக்கே சவாலாக எழுத கூடிய இலங்கை எழுத்தாளர் ரஞ்சகுமாரின் மோகவாசல் சிறுகதை தொகுப்பை இந்த இணைப்பில் சென்று வாசித்து பாருங்கள் http://noolaham.net/project/01/04/04.htm

நானும் இவருடைய நாவலை கேள்விப்பட்டு வாசிக்க வேண்டும் என இருந்தனான் இணைப்பிற்கு நன்றி.

இணைப்பிற்கு நன்றி கறுப்பி,கிருபன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லங்கா ராணி என்னும் புத்தகத்தை யாராவது வாசித்து உள்ளீர்களா...இணையத்தில் வாசிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்போவின் சடங்கு ஒரு அருமையான புத்தகம் அதை வாசிக்கும்போது ஒரு விடையம் நினைவு வரும். எனது மூத்த அண்ணர் முடமாவடியில (நல்லுர்) அந்தக்காலத்தில ஒருபெட்டையைக் காதலித்தவர். விட்டில எனத பெற்றார் கொடுத்த ரோச்சரில. மறக்கவில்லை கொஞ்சமென்ன ரெம்பவெ விலகிவிட்டார். பின்பு வேறோரு பெண்ணைக்கலியானமும் கட்டிவிட்டாh. இந்தியராணவத்தின் அதீத பசிக்கு இரையாகிய அவரை எண்பதுகளில் அடிக்கடி முடமாவடிப்பக்கம் காணக்கூடியதாகவிரந்ததென எனது நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இளவயதில் அவருக்கிருந்த நினைவுகள் ஐம்பதைத் தாண்டியும் விலகவில்லை என இப்போது எனக்குப் புரிகிறது. இதை இங்கு நான் எழுதக்காரணம் சடங்கு நாவலை நான் வாசித்தபோது அண்ணரின் ஞாபகம் வந்தது எஸ்போ கூட நலலூர் முடமாவடியைச் சேர்நதவர் என அறிந்தேன். மற்றப்படி அனைத்து எழுத்தாளர்களையும் எனக்குப்பிடிக்கும் ஆனால் சில பேனாக்கள் சிலவேளைகளில் சாக்கடையைக் கிளறும் தற்போது அவ்வரிசையில் சோபாசக்தியும் அடக்கம்.

லங்கா ராணி என்னும் புத்தகத்தை யாராவது வாசித்து உள்ளீர்களா...இணையத்தில் வாசிக்க முடியுமா?

இந்த இணைப்பில் சென்று வாசிக்கவும் http://noolaham.net/project/15/1492/1492.pdf

எப்பவும் உள் வீட்டிலிருந்து தொடங்க வேனும்.அப்படிப்பார்த்தால் எனக்கு

பிடித்த எழத்தாளர்கள் புத்தன்,தூயா,மாப்பு,நெடுக்ஸ்,சாத்திரி,ஆபிராம், இன்னுமொருவன்,சஜந்தன்,இன்னும் சிலரின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம்.நினைவு வந்தால் பின் இணைக்கிறேன்.

இந்த பிரபல யாழ் எழுத்தாளர்களில் யார் கொழும்பில் நடக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில்(விழா) கலந்து கொள்வதாக உத்தேசம்.......

Edited by Jil

எனக்கு பிடித்த எழுத்தாளர்கள்- செங்கை ஆழியான் - கண்ணதாசன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த எழுத்தாளர்கள்- செங்கை ஆழியான் - கண்ணதாசன்

நான் முதன்முதல் முழுவதுமாகப் படித்த நாவல் செங்கை ஆழியானின் "கங்கைக் கரையோரம்". கங்காவை இன்னமும் காணக்கிடைக்கவில்லை :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பிரபல யாழ் எழுத்தாளர்களில் யார் கொழும்பில் நடக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில்(விழா) கலந்து கொள்வதாக உத்தேசம்.......

இன்னும் அழைப்பு அனுப்பல்லையே.. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதுற ஆக்கள்ளை எங்கடை சாத்திரியாரையும் எனக்கு பிடிக்கும்.

ஐரோப்பிய அவலத்தை ஒருக்கால் வாசிச்சு பாருங்கோ :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டும் வேண்டாம் எண்டிட்டு சும்மாயிருக்கிறன் ஆளால் பேந்தும் பேந்தும் வம்புக்கிழுக்கிறதெண்டே அடம் பிடிக்கிறீங்களே ??அதுவும் இந்த நேரத்திலை :D:(அவலத்தாலை பாதிக்கப்பட்ட பலபேர் இன்னமும் இங்கை உலாவினம் எதுக்கு அவங்களை கடுப்பேத்துவான் அதுதான் :(:lol:

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.