Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா இராணுவத்தில் இணைக்கப்படுகிறார் கே.பி – பிரிகேடியர் பதவி வழங்க அரசு திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா இராணுவத்தில் இணைக்கப்படுகிறார் கே.பி – பிரிகேடியர் பதவி வழங்க அரசு திட்டம்

திகதி:18.08.2010

சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டுவரும் குமரன் பத்மநாதன் சிறீலங்கா இராணுவத்தில் இணைந்து செயற்படவுள்ளதாகவும், அவருக்கு பிரிகேடியர் பதவி வழங்க கோத்தபாயா முன்வந்துள்ளதாகவும் கொழும்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப்புலிகளின் முன்னாள் போரளிகளை ஒன்றுதிரட்டி ஊர்காவல்படை ஒன்றை (துணைஇராணுவக் குழு) அமைப்பதற்கும் அதற்கு கட்டளை அதிகாரியாக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை நியமிப்பதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த ஊர்காவல் படையணியின் முகாம் வன்னியில் அமைக்கப்படவுள்ளது. எனினும் இதந்கு எதிராக சிறீலங்கா இராணுவத்திற்குள் எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளபோதும் அரசு அதில் உறுதியாக உள்ளது.

மலேசியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட கே.பி கொழும்பில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்ததுடன், அவருக்கு கொமோண்டோ பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்ததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sankathi

ஆஆஆஆஆ........ இவரை வைத்து தொடங்கின திரிகளே முடியல்ல. தொடரா போயிட்டிருக்கு. அடுத்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒன்றுமே இல்ல. இவர் இப்போ கோத்தபாய கையில் இருக்கும் பலூன். அவர் ஊதிற மாதிரிக்கு இவர் உருவம் மாறிக் கொண்டே இருப்பார்.

எனக்குப் புரியாத விடயம்.. இவர் எதிரியிடம் இருந்து கொண்டு விடும் அறிக்கைகளுக்கு பேட்டிகளுக்கு ஏன் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் ஊடகங்களும் முக்கியம் கொடுக்கின்றன.

இவரை விடுதலைப்புலிகளின் தலைவராக விடுதலைப்புலிகள் அறிவிக்கவில்லை. இவர் இறுதி நேரத்தில் வெளிவிவாகரத்துறையை கவனிப்பார் என்று தான் சொல்லப்பட்டது. இயக்கத்தை கவனிப்பார் என்றும் சொல்லவில்லை.

இந்த நிலையில் எதிரியிடம் சிக்கி எதிரிக்கு ஏற்றாப் போல் கதைக்கும் இவரின் செய்திகளுக்கு ஏன் முக்கியம் அளிக்கப்படுகின்றன என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

டக்கிளஸ் அரசோடு இணைந்த போதும் இப்படித்தான் சொல்லி திரிந்தார். அப்புறம் கருணா.. அப்புறம் தயா மாஸ்டர்.. இப்ப இவர்..!

இத்தனை பாடங்களை படிச்சும் எங்கட ஆக்களில் சிலருக்கு தெளிவு பிறக்கல்லைன்னா.. அவங்கள விட்டுத்தள்ளிட்டு.. மிச்சாக்கள் வேற உருப்படியான வேலையைப் பாருங்கடோய்..!

Edited by nedukkalapoovan

இவர் ஒன்றுமே இல்ல. இவர் இப்போ கோத்தபாய கையில் இருக்கும் பலூன். அவர் ஊதிற மாதிரிக்கு இவர் உருவம் மாறிக் கொண்டே இருப்பார்.

எனக்குப் புரியாத விடயம்.. இவர் எதிரியிடம் இருந்து கொண்டு விடும் அறிக்கைகளுக்கு பேட்டிகளுக்கு ஏன் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் ஊடகங்களும் முக்கியம் கொடுக்கின்றன.

இவர் விடுதலைப்புலிகளின் தலைவராக விடுதலைப்புலிகள் அறிவிக்கவில்லை. இவர் இறுதி நேரத்தில் வெளிவிவாகரத்துறையை கவனிப்பார் என்று தான் சொல்லப்பட்டது. இயக்கத்தை கவனிப்பார் என்றும் சொல்லவில்லை.

இந்த நிலையில் எதிரியிடம் சிக்கி எதிரிக்கு ஏற்றாப் போல் கதைக்கும் இவரின் செய்திகளுக்கு ஏன் முக்கியம் அளிக்கப்படுகின்றன என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

டக்கிளஸ் அரசோடு இணைந்த போதும் இப்படித்தான் சொல்லி திரிந்தார். அப்புறம் கருணா.. அப்புறம் தயா மாஸ்டர்.. இப்ப இவர்..!

இத்தனை பாடங்களை படிச்சும் எங்கட ஆக்களில் சிலருக்கு தெளிவு பிறக்கல்லைன்னா.. அவங்கள விட்டுத்தள்ளிட்டு.. வேற உருப்படியான வேலையைப் பாருங்கடோய்..!

சிங்களவனுக்கு எம்மைப் பற்றி நல்லாத் தெருயும் கிழமைக்கு இப்படி 2 அறிக்கை விட்டால், கஸ்ட்ரோ, நெடியவன்,கே.பீ என்று நாமே எமக்குள் அடிபடுவம் என்று, அதை விடுங்கோ யாழ்ப்பாணம் போய் ஒருக்கா காலாட்டி போட்டு வந்தால் நாடே நல்லாத் தான் இருக்கு,சிங்களவன் ரொம்ப நல்லவன் என்று அறிக்கை விடும் அறிவாளிகள் தானே எம்மவர்கள், வன்னியில் மத மாற்றம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் வன்னியில் இன மாற்றமே நட்க்குது தமிழனின் வீரத்துக்கு ஆதாரமாய் இருந்த பூமியில் இனிமேல் புத்த விகாரையும், சிங்கள மொழியும் தான் கேட்கப் போகுது, போற போக்கில் பல மாவீரர் குடுமபங்களே தமிழ் இன அடையாளம் இழந்து சிங்களவர்களாக் மாறப் போகிரார்கள், ஆனால் உதெல்லாம் யாழ்பாணம் போகும் அறிவாளிகளுக்கு விளங்காது, அங்கு போட்டு வந்து ஒரு அறிக்கை விடுவீனம், இப்ப நாடு அந்த மாதிரி, அப்ப 2002இல் நாடு என்ன சுடுகாடாகவா இருந்தது, 2002இல் மகிழ்ச்சியாக இருந்தவன் எல்லம் இப்போது தெருவில் இருக்கிறான் அது இதுகளுக்கு தெரியாது, நானும் எதோ தமிழன் உணர்வுடன் போராடுகிறான் என்று யோசித்தேன் ஆனால் இப்போது தான் விளங்குது யாழ்ப்பாணம் போக இலகுவான ஒர் வழி செய்து தருமாரு போராடிய்ருக்கிரான் என்று. இப்போது எமது இனத்தில் ஒரு புதுக் கூட்டம் இருக்கு அவை என்ன சொல்லீனம் தெரியுமோ கெர்மனியிலும்,பிரான்ஸிலும்,இங்கிலாந்திலும் எப்படி அந்த நாட்டு மொழியை கதைத்து வாழீனமோ, அப்படி ஈழத்திழும் சிங்களத்தில் கதைத்து வாழ்ந்தால் என்னவென்று, நான் யோசிக்கிறேன் இப்படியும் ஒரு கேடு கெட்ட இனமா எமது இனம்

சரியான சொன்னீர்கள் நெடுக்காலபோவான். புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து ஆறாவது அறிவும் கொஞ்சம் கொஞ்சமாக புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறது. .

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய செய்தி

கே.பி. சிறிலங்காவின் உதவி ஜனாதிபதி
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகளுக்கு நீங்கள் காட்டுகின்ற முக்கியத்துவம், தொடர்ச்சியாக இப்படிச் செய்திகள் வருவதற்குக் காரணமாக அமைகின்றது.

கே.p இன்னமும் ஒரு கைதி! அவரின் தொலைபேசி உரையாடல்கள் முதல் அனைத்து நடவடிக்கைகளும் இராணுவத்தல் கண்காணிப்புக்பகுட்படுத்தப்படுகிறது! கே.பி சுதந்திரமாக சவளியல் நடமாட முடியாது! இரண்டு காவலர்களுடன் முன் அனுமதி பெற்றே அவர் எங்கும் போய்வர முடியும்! கே.பி அரசியல் மற்றும் வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நிரந்தரமாக பானகொடை அல்லது மகசீன் சிறையில் அடைக்கப்படுவர். 1983 முதல் 2002 வரை ஒரு சிறந்த ராஜதந்திரியாக திகழ்ந்தமையால் தான் பல கப்பல்களை வாங்கி அதன் முலம் தொடர்ச்சியான வழங்கல்களை வழங்கி புலிகளின் வெற்றிகக்கு அடித்தளம் இட்டவர். தனது ராஜதந்திரத்தின் மூலமே இன்றும் கைதியாக இருந்தும் சில சலுகைகளை அனுபவிக்கிறார். வரலாறு தெரியாத கத்துக்குட்டிகள் இன்று அந்த மனிதருக்கு துரோகி பட்டம் சூட்டுவதுடன் புலிகளின் தோல்வியை அவர்மேல் போட்டு அவமானப்படுத்துகிறார்கள்! புலிகளின் தலைவர் இனி வரமாட்டார் என்பது நன்கே தெரிந்து விட்டது போல் உள்ளது! கே.பியும் கருணாவும் ஒன்றல்ல என்பது அவருடன் பழகிய பலருக்கு தெரிந்த உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

கேபி மட்டும் தான் ராஜதந்திரியாக இருக்க வேண்டுமா??

காலம் பதில் சொல்லும்!

  • கருத்துக்கள உறவுகள்

எம்பாம் செய்யப்பட்ட உடலை எப்படியும் அசைக்கலாம் கதக்கிரமாதிரியும் செய்யலாம் ...இதுதான் கே.பி .....எனவே அது வெறும் உடலம் எனநினைத்துவிட்டு...எம்முன் உள்ள பணிகளை முன்னெடுப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் புரியாத விடயம்.. இவர் எதிரியிடம் இருந்து கொண்டு விடும் அறிக்கைகளுக்கு பேட்டிகளுக்கு ஏன் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் ஊடகங்களும் முக்கியம் கொடுக்கின்றன.

எல்லாம் வயித்துப் பிழைப்புக்காகத்தான்! வேற வழி?????

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை... கருணா இதை விடப் பெரிய ராசதந்திரி போலக் கிடக்கு பேண்டு007. வந்தவுடன அமைச்சர் பதவி, பெட்டைககள் என்று எவ்வளவு சுகபோக வாழ்க்கை ஆ!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தெரிஞ்ச ராஜதந்திரிக்கு 30 வருடமாக சர்வதேச புலனாய்வுத்துறைக்கே தண்ணி காட்டிய ராஜதந்திரிக்கு புலிகளின் அழிவின் பின் 3 மாதம் கூட தாக்கு பிடிக்க முடியலைன்னா அது எப்படீ?????????????????

அது எப்படினா புலவர், 30 வருடமாக சிங்கள அரசை தனித்து நின்று எதிர்த்து போராடி கரும்புலிகள் கடற்புலிகள் விமானப்படை xxx ர ட்ரா ட்ரா என்று வைத்து கொண்டு போதாததுக்கு உலகின் 4வது வல்லரசை விரட்டி அடிச்ச புலிகள் தோத்தது போலத்தான்.

அதுக்காக போராட்டம் தோற்றதையும் கேபி யின் கைதும் ஒன்றல்லா ஆனால் கேபி விடையத்தில் கனக்க குளறுபடி இருக்கு..... ஆனால் நான் கேபி யை கைதுக்கு முன் கைதுக்கு பின் என்று பார்ப்பதால் தெளிவாக இருக்கேன்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: டாஷ் சரியாகச் சொன்னீர்கள்,

இங்குள்ள எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் யாழ் சென்று திரும்பியிருந்தார். அவரின் கதைகளைக் கேட்டால் அறைய வேண்டும்போல இருக்கும். வயதில் மூத்தவர், குடும்ப நண்பர் என்றபடியால் பேசாமலிருக்க வேண்டியிருக்கு.

அவரின் திருவாய் மலர்ந்தருளிய சில வசனங்கலை இங்கே தருகிறேன்,

" யாழ்ப்பாணம் இப்ப அந்த மாதிரி"

" சனமெல்லாம் சந்தோஷமாத் திரியுது"

"ஊரில நடக்கிற கடத்தல், களவெல்லாம் சனத்தின்ர தனிப்பட்ட பிரச்சனைதான் காரணம்"

" தங்கட வீட்டுக்கு அருகில இருக்கிற ஆமிக்காம்பை அகற்ற வேண்டாம் எண்டு சனம் ராணுவத்துக்கு அல்லும் பகலும் கரைச்சல் குடுத்தபடி"

"கொக்குவில் பொற்பதி ரோட்டில ராணுவ முகாம் இல்லாதபடியாலதான் அங்க களவும், கடத்தலும் நடக்குது"

"கொழும்பு போல் போலீஸ்காரன்கள் துவக்கில்லாமல் வெறும் தடியோடதான் திரியிறாங்கள்"

"இப்ப ஆரும் வந்து தனிநாடு, சுதந்திரம் எண்டு யாழ்ப்பாணத்தில கதைச்சால் சனம் வெட்டுவம் எண்டு சொல்லுது"

"கன சனத்துக்கு இப்ப நல்லாச் சிங்களம் தெரியும், ஆமிக்காரரோட சிங்களத்தில கதைச்சுக்கொண்டு சனம் பஸ்வழிய திரியுது"

"யாழ்ப்பாணத்துச் சனத்துக்கு இப்ப எந்தக் கவலையுமில்லை, சும்மா வெளிநாட்டில இருந்து கொண்டு எங்கட சனம் போடுற கூச்சலை அங்க யாரும் கண்க்கெடுக்கிறதில்லை, இன்னும் சொல்லப்போனால் ஆத்திரத்தோடுதான் இருக்குது"

"இவ்வளவு சனமும் செத்ததையும், சிங்களக் குடியேற்றங்கள் நடக்கிறதையும் எடுத்துவிட்டுப் பார்த்தால் சனம் நல்ல சந்தோஷமாத்தான் திரியுது"

"சிங்களவங்களைக் குடியேற்றைறதால என்ன பிரச்சனை எண்டு சனம் கவலைப்படவில்லை"

"பொடியளை விட ஆமிக்காரர் எவ்வளவோ மேல் எண்டு சனம் வெளிப்படையாச் சொல்லுது"

என்னத்தைச் சொல்ல??

சனம் சந்தோசமாக இருக்க வேண்டுமென்பதில மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை என்னவென்று எவருக்காவது தெரியுமா??

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் வன்னியில் புலிகளைப் பற்றிக் கதைச்சால் சனம் கோப்படுது. என்ற வாசகத்தை என் வன்னிவாழ் உறவினர் ஒருவர் சொன்ன தர்க்கம் இது தான். யாரையும் நம்பமுடியவில்லை. உறவினர் ஆக இருப்பினும், அரச உளவாளியாக இருக்குமோ என்ற சந்தேகம். எனி மேல் இப்படித் தான் வாழ முடியும் என்ற நிலையில் இப்படித் தான் எங்களால் பேசமுடியும் என்றார். ( அவர் சகோதரன் புலிகளில் இருந்து ஒரு காலை இழந்திருந்தார். சமீபத்தில் தான் இவரால் ஒன்றுமே செய்ய முடியாது என நம்பிச் சிங்கள அரசு விடுதலை செய்திருந்தது)

:wub: டாஷ் சரியாகச் சொன்னீர்கள்,

இங்குள்ள எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் யாழ் சென்று திரும்பியிருந்தார். அவரின் கதைகளைக் கேட்டால் அறைய வேண்டும்போல இருக்கும். வயதில் மூத்தவர், குடும்ப நண்பர் என்றபடியால் பேசாமலிருக்க வேண்டியிருக்கு.

அவரின் திருவாய் மலர்ந்தருளிய சில வசனங்கலை இங்கே தருகிறேன்,

" யாழ்ப்பாணம் இப்ப அந்த மாதிரி"

" சனமெல்லாம் சந்தோஷமாத் திரியுது"

"ஊரில நடக்கிற கடத்தல், களவெல்லாம் சனத்தின்ர தனிப்பட்ட பிரச்சனைதான் காரணம்"

" தங்கட வீட்டுக்கு அருகில இருக்கிற ஆமிக்காம்பை அகற்ற வேண்டாம் எண்டு சனம் ராணுவத்துக்கு அல்லும் பகலும் கரைச்சல் குடுத்தபடி"

"கொக்குவில் பொற்பதி ரோட்டில ராணுவ முகாம் இல்லாதபடியாலதான் அங்க களவும், கடத்தலும் நடக்குது"

"கொழும்பு போல் போலீஸ்காரன்கள் துவக்கில்லாமல் வெறும் தடியோடதான் திரியிறாங்கள்"

"இப்ப ஆரும் வந்து தனிநாடு, சுதந்திரம் எண்டு யாழ்ப்பாணத்தில கதைச்சால் சனம் வெட்டுவம் எண்டு சொல்லுது"

"கன சனத்துக்கு இப்ப நல்லாச் சிங்களம் தெரியும், ஆமிக்காரரோட சிங்களத்தில கதைச்சுக்கொண்டு சனம் பஸ்வழிய திரியுது"

"யாழ்ப்பாணத்துச் சனத்துக்கு இப்ப எந்தக் கவலையுமில்லை, சும்மா வெளிநாட்டில இருந்து கொண்டு எங்கட சனம் போடுற கூச்சலை அங்க யாரும் கண்க்கெடுக்கிறதில்லை, இன்னும் சொல்லப்போனால் ஆத்திரத்தோடுதான் இருக்குது"

"இவ்வளவு சனமும் செத்ததையும், சிங்களக் குடியேற்றங்கள் நடக்கிறதையும் எடுத்துவிட்டுப் பார்த்தால் சனம் நல்ல சந்தோஷமாத்தான் திரியுது"

"சிங்களவங்களைக் குடியேற்றைறதால என்ன பிரச்சனை எண்டு சனம் கவலைப்படவில்லை"

"பொடியளை விட ஆமிக்காரர் எவ்வளவோ மேல் எண்டு சனம் வெளிப்படையாச் சொல்லுது"

என்னத்தைச் சொல்ல??

சனம் சந்தோசமாக இருக்க வேண்டுமென்பதில மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை என்னவென்று எவருக்காவது தெரியுமா??

இதையேதான் நானும் எழுத வேண்டும் என்று நினைத்தேன். எனக்கும் இவ்வாறு பலர் கூறியுள்ளனர். சிங்களவரிடம் தோற்றதைகூட பொறுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் எம்மவர்களின் இது போன்ற கருத்துக்களைக் கேட்க சகிக்க முடியவில்லை. வலுவிழந்த நிலையிலிருந்து இவர்களுடன் தர்க்கம் செய்ய விருப்பமில்லை.

:lol: டாஷ் சரியாகச் சொன்னீர்கள்,

இங்குள்ள எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் யாழ் சென்று திரும்பியிருந்தார். அவரின் கதைகளைக் கேட்டால் அறைய வேண்டும்போல இருக்கும். வயதில் மூத்தவர், குடும்ப நண்பர் என்றபடியால் பேசாமலிருக்க வேண்டியிருக்கு.

அவரின் திருவாய் மலர்ந்தருளிய சில வசனங்கலை இங்கே தருகிறேன்,

" யாழ்ப்பாணம் இப்ப அந்த மாதிரி"

" சனமெல்லாம் சந்தோஷமாத் திரியுது"

"ஊரில நடக்கிற கடத்தல், களவெல்லாம் சனத்தின்ர தனிப்பட்ட பிரச்சனைதான் காரணம்"

" தங்கட வீட்டுக்கு அருகில இருக்கிற ஆமிக்காம்பை அகற்ற வேண்டாம் எண்டு சனம் ராணுவத்துக்கு அல்லும் பகலும் கரைச்சல் குடுத்தபடி"

"கொக்குவில் பொற்பதி ரோட்டில ராணுவ முகாம் இல்லாதபடியாலதான் அங்க களவும், கடத்தலும் நடக்குது"

"கொழும்பு போல் போலீஸ்காரன்கள் துவக்கில்லாமல் வெறும் தடியோடதான் திரியிறாங்கள்"

"இப்ப ஆரும் வந்து தனிநாடு, சுதந்திரம் எண்டு யாழ்ப்பாணத்தில கதைச்சால் சனம் வெட்டுவம் எண்டு சொல்லுது"

"கன சனத்துக்கு இப்ப நல்லாச் சிங்களம் தெரியும், ஆமிக்காரரோட சிங்களத்தில கதைச்சுக்கொண்டு சனம் பஸ்வழிய திரியுது"

"யாழ்ப்பாணத்துச் சனத்துக்கு இப்ப எந்தக் கவலையுமில்லை, சும்மா வெளிநாட்டில இருந்து கொண்டு எங்கட சனம் போடுற கூச்சலை அங்க யாரும் கண்க்கெடுக்கிறதில்லை, இன்னும் சொல்லப்போனால் ஆத்திரத்தோடுதான் இருக்குது"

"இவ்வளவு சனமும் செத்ததையும், சிங்களக் குடியேற்றங்கள் நடக்கிறதையும் எடுத்துவிட்டுப் பார்த்தால் சனம் நல்ல சந்தோஷமாத்தான் திரியுது"

"சிங்களவங்களைக் குடியேற்றைறதால என்ன பிரச்சனை எண்டு சனம் கவலைப்படவில்லை"

"பொடியளை விட ஆமிக்காரர் எவ்வளவோ மேல் எண்டு சனம் வெளிப்படையாச் சொல்லுது"

என்னத்தைச் சொல்ல??

சனம் சந்தோசமாக இருக்க வேண்டுமென்பதில மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை என்னவென்று எவருக்காவது தெரியுமா??

ம்ம்ம்... இந்த நிலைக்கு சனத்தை கொண்டு வந்த பெருமை ...????? :wub:

சனத்தை யாரும் கொண்டு வர இல்லை இப்படி சனம் இருக்கிறதாலை தான் இந்த நிலையே... ! லண்டனிலை இருந்து கொழும்பு போய் விடுமுறையை களிச்சு போட்டு ஒருத்தர் வாறார் எண்டா அவருக்கு அங்கை ஒரு பிரச்சினையும் இல்லை எண்டு தான் அர்த்தம்...

அப்படி போட்டு வந்தவர் வாயாலை வெட்டி வீசுவார் மக்கள் அவர்களின் விடுதலை எண்டு... சனத்தை காப்பாத வேணும் எண்டு நினைக்கிற போய் வந்தவர் போன செலவை முதலிலை அந்த சனத்துக்கு குடுத்து இருக்க வேண்டும்... செய்து இருக்க மாட்டார்...! எல்லாம் வாய் வீரம் கண்டியளோ... எவையாவது எதையாவது செய்ய வெளிக்கிட்டால் அதுக்கும் நொட்டை சொல்லுவினம்...

நான் யாரை சொல்லுறன் எண்டது உங்களுக்கே தெரியும்...

Edited by தயா

.... ம்ம்ம்ம் ... அங்கு யாழ்பாணத்திலை போய் பாருங்கோ, இங்கு முன்னுக்கு நிண்ட எல்லோரும் காலேடேயில் நிற்கிறார்களாம்!

ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் எண்டுறீயள் போல கிடக்கு...?? ஆக்களை அடையாளம் காண சிறப்பான காலம் இது...!

ஒரு தலைமையை மக்கள் தெரிவு செய்கிறார்கள் எண்டாலோ இல்லை , உங்கட மனிசி உங்களை நம்பி உங்களுடன் வாழ்கிறார் எண்டாலோ, இல்லை உங்கட நண்பர்கள் உங்களை நம்பி நட்பாக இருக்கிறார்கள் எண்டாலோ அதுக்கு காரணம் தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நீங்கள் காப்பாதுவீர்கள் எண்று நம்புவதுதான்...

நம்பிக்கையைய சிதறடிக்கும் போது மக்கள் தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தானாக விலக்கிக்கொள்கிறார்கள்...

மக்கள் உங்கள் மீது நம்பிக்கையை வைக்க வேண்டும் எண்றால் நீங்கள் நம்பிக்கையானவர்களாக உருவாக வேண்டும்... அப்போது நீங்கள் சொல்வதை எல்லாரும் ஏற்பார்கள்...

அப்படி உங்களாலை முடியுமா...?? இலங்கைக்கு விடுமுறைக்கு போ ய் வந்திட்டு மக்கள் அங்கை கஸ்ரப்படுகினம் அதுக்கு காரணம் நெடியவன் குறூப் தான் எண்டு சொல்ல தகுதி எப்படி வருகிறது...??

Edited by தயா

சில செயல்பாட்டார்களின் ந*கு திறன் கண்டு கருணாவே கலங்கிப் போய் உள்ளதாக தகவல்.

அப்பு தயா, .... இலங்கைக்கு செல்லுதல் ... பலவேளை உயிராபத்துக்களையும் தாண்டி செல்வதற்கு எங்கள் குடும்பங்கள் அங்கே!!! அது குடும்பம் என்று ஒன்று/அங்குள்ளவனுக்கு புரியும்!

புதிய காஸ்ரோக்களின் தேசியத்தலைவர் நெடியவன் : யார் குறை அவரை கூறுவது! மே18இற்கு முன்னம் ஏறக்குறைய ஒரு வருட காலமாக நடந்த/இன்று வரை நடக்கும்(எங்கும் அனுப்பபடாமல்) தமிழ்த்தேசியத்தின் பெயரில் நடக்கும் வசூல்களின் ராஜாவல்லோ அவர்!!! இன்று புலம்பெயர் தேசங்களில் தமிழர்களை அரசியல் மயப்படுத்த பதிவு/ஈழமுரசு,அதியமான்கள், நெடியமான்களை வைத்து சாக்கடைக்குள் தாட்டெடுக்கும் அறிவுக்களஞ்சியமல்லோ அவர்! .... அவரை யார் பிழை சொல்லுவது????? ... அவரோடை கூடவந்து ஐபிசியை வழினடத்திய இன்னொரு ... ஒரு பெண்ணுடனும், மில்லியனுக்கு மேற்பட்ட பொருளுடனும் இன்று லண்டனில் செட்டிலாம்! நவீன தேசியத்தலைவர் இன்று நோர்வேயில் குடும்பத்தை கவணிக்கிறாராம், அவர் வந்தது புலிக்காசில், கட்டியது புலியின் .., இன்று செட்டிலாம்! ... கதைக்கவில்லை அவரைப்பற்றி!!!!!

தொடருங்கள்

ஏதோ தங்களால் முடிந்தளவு தாளுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.