Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் செய்யும் எண்ணத்தோடு இருப்பவர்கள் இதைப் இதைப் பார்த்தவுடன் திருமணமே செய்ய மாட்டார்கள்...நீங்களும் இப்படி எதாவது இருந்தால் இணையுங்கள் :lol:

ஒருவன் தூக்குமேடை ஏறுவதும்,ஒரு பெண்ணை திருமணம் செய்வ கொள்வதும் விதியினால் ஏற்படுபவை. :D

போருக்குப் புறப்படு முன் ஒரு முறை பிரார்த்தனை செய்,

கடலில் செல்லும் முன் இரு முறை பிரார்த்தனை செய்,

திருமணம் செய்யும் முன் ஓயாமல் பிரார்த்தனை செய்.

மனைவிக்குப் பயப்படாத ஆண் யார்?

அவன் தான் பிரமச்சாரி :D

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்தவுடன் திருமணமே செய்ய மாட்டார்கள்..

.நீங்களும் இப்படி எதாவது இருந்தால் இணையுங்கள் :lol:.............................................

......எதையம்மா பார்ப்பது .................

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

Wife is a knife which cuts your life..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

"டாக்டர்..... எனக்கு அடிக்கடி பயங்கரமான கனவு வருது!"

"கலியாணம் பண்ணிக்கிட்டா சரியாயிடும்!"

"அப்புறம் அந்த... மாதிரி கனவெல்லாம் வராதா?"

"ஹ்ஹூம்.... அப்புறம் உங்களுக்கு தூக்கமே வராதே!"

  • கருத்துக்கள உறவுகள்

மனைவிக்குப் பயப்படாத ஆண் யார்?

ஏன் நானிருக்கிறன்!

"ஓமப்பா அப்படியே சொல்லிட்டன்."

ஆண்: சாமி, எனது மனைவியின் வாயை கட்டிப் போட ஏதாவது மந்திரம் சொல்லுங்க சாமி.

சாமி: அதை என்னால செய்ய முடியாமல் தான் சாமியாரானேன்....

------

ஒருவர்: ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!

மற்றவர்: என்னாச்சி?

ஒருத்தர்: போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி....

------

கணவன்: ஜானு ஒரு டீ!

மனைவி: என்னது?

கணவன்: இல்லை ஜானு, உங்களுக்கு டீ போட்டுமா என்று கேட்டான்!

மனைவி: அது தானே பார்த்தன்!!

------

கணவன்: இஞ்சரப்பா... உம்மட சமையல் அந்தமாதிரி இருக்கு...

மனைவி: என்னதான் ஐஸ் வைச்சாலும் நீங்கள் தான் இனி வீட்டில சமையல்!

------

மாப்பிளை ஆகப் போகிறவர்: யோசியரே இந்தக் கலியாணத்துக்குப் பிறகு என்ர செவ்வாய் தோஷமெல்லாம் நீங்கி விடும் தானே?

யோசியர்: தம்பியாண்டான், ஒன்னு சொல்லுறேன் நன்னா கேட்டுக்கோங்கோ செவ்வாய் தோஷம் நீங்குதோ இல்லையோ, ஆனால் உம்மட சந்தோஷம் நிச்சயம் நீங்கும். சந்தோஷமா போப்பா...

திரிக்கு ஏற்றது போல கொஞ்சம் மாற்றி எழுதியுள்ளேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணம் செய்யும் எண்ணத்தோடு இருப்பவர்கள் இதைப் இதைப் பார்த்தவுடன் திருமணமே செய்ய மாட்டார்கள்...நீங்களும் இப்படி எதாவது இருந்தால் இணையுங்கள் :lol:

ஒருவன் தூக்குமேடை ஏறுவதும்,ஒரு பெண்ணை திருமணம் செய்வ கொள்வதும் விதியினால் ஏற்படுபவை. :D

போருக்குப் புறப்படு முன் ஒரு முறை பிரார்த்தனை செய்,

கடலில் செல்லும் முன் இரு முறை பிரார்த்தனை செய்,

திருமணம் செய்யும் முன் ஓயாமல் பிரார்த்தனை செய்.

மனைவிக்குப் பயப்படாத ஆண் யார்?

அவன் தான் பிரமச்சாரி :D

தங்கச்சி ரதிக்கு என்ன பிரச்சனையோ?

வாழ்க்கையிலை கலியாணம் எண்டதும் ஒரு அங்கம்

அதிலை..

ஏற்றத்தாழ்வுகள் பிரச்சனையள் இருக்கும் இருக்கத்தான் வேணும்

இல்லாட்டி அது வாழ்க்கையில்லை

அலையடிக்காட்டி அது கடலில்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று கூறுகின்றார்கள்.

ஆனால் நாம் இருப்பதோ நரக உலகில்.

சொர்க்கத்தில் இருந்து நரகத்திற்கு தரகு வேலை செய்பவர் யார்???.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

கைதி 1: ஏப்பா இவ்வளவு அப்பாவியா இருக்கிற நீ.. ஜெயிலுக்கு வந்தே...??!

கைதி 2: என் பொண்டாட்டிட்ட படுற சித்திரவதையைக் காட்டிலும் ஜெயில் எவ்வளவோ சேவ். அது தான்.

--------------------------------

இராணுவ வீரன் 1: ஏண்டா நண்பா நீ தான் இராணுவ சேவை வேணான்னு விலகிப் போனியே இப்ப ஏன் திடீருன்னு.. திரும்பி வந்துட்டே..??!

இராணுவ வீரன் 2: தினம் தினம் வீட்டில போடுற சண்டையைக் காட்டிலும் போடரில சண்டை குறைவுப்பா அதுதான்.

-------------------------------

மனைவி: எதுக்குத்தான் ஆக்கள் முன்னால உம் என்று கொண்டிருந்து மானத்தை வாங்கிறீங்க.

கணவன்: வெளிக்கிடும் போது நீர் தானே சொன்னீர் வாயே திறக்கப்படாது என்று.

மனைவி: அதுக்காக கொட்டிக்காமலா இருக்கீங்க...?!

கணவன்: உன்னைக் கட்டிக்காத வரைக்கும் கொட்டிக்கிட்டுத்தான் இருந்தன். இப்ப என் வாய்க்கு பேச மட்டுமில்ல.. சாப்பிடக் கூட உரிமை இல்லை.

மனைவி: உஸ்ஸ் வாயைத் திறந்தீங்க கொலை பண்ணிடுவன். :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கட்டளை 1

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது

கட்டளை 2

உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?

உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.

கட்டளை 3

திருமணம் என்பது பெரும் கொடை

அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது

கட்டளை 4

திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.

கட்டளை 5

ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...

கட்டளை 6

ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.

கட்டளை 7

திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.

கட்டளை 8

மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.

கட்டளை 9

காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.

கட்டளை 10

ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.

1) Life ல Girlfriend கெடச்சா Life ஜாலி! அதே Girlfriend Lover ஆனா Pocket காலி!!

அதே Lover மனைவியா வந்தா... மவனே நீயே காலி!!!...........

2) கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!

3) மனைவி: ஏன் இன்னிக்கு அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்துட்டீங்க?

கணவன்: இன்னிக்கு என் அலுவலகத்தில் ஒரு தவறு பண்ணிட்டேன். என் மேலாளர் "நரகத்திற்கு போய்த்தொலை" என்றார். அதனால்தான்???

4) மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?

கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

5)

மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு

6)கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

7)புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...

வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க...!??

Edited by வீணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்னா என்ன அர்த்தம்?"

"தாலி கட்டினவன் எந்த கழுதையாய் இருந்தாலும் மதித்து தொலைக்கனும்னு அர்த்தம்."

பரிசம் போட்ட பெண்ணீன் கவலை பாதிக் கவலை‍ ‍‍...திருமணம் செய்த பெண்ணீன் கவலை நிலைத்த கவலை.

திருமணத்தின் போது தாலிக்கு மூன்டு முடிச்சு போடுகிறார்களே ஏன்?

தூக்குக் கையிற்றீல் கூட மூன்டு முடிச்சு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி--திருமணநாள் அன்று எங்க போய் சுத்திப்போட்டு வாறீங்கள்

கணவன்--எமக்கு திருமணம் ஒழுங்கு செய்த புறோக்கரை தேடிப்பிடித்து நாலு சாத்து சாத்திப்போட்டு வாறன். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு கோவைசரளா ஜோடி போல வாழ்க்கை அமைந்தால் ஒடிவிடுவார்கள் தோழர் ரதி.. மனைவியிடம் பூரி கட்டையால் அடிவாங்கியவர்கள்.... இங்கு பலர் பேர் இருக்கணும்.... அதை வெளிப்படையா கூச்சத்தை விட்டு பகிர்ந்தகொள்ளணும்........

215.gif

http://www.youtube.com/watch?v=E3f0RGPpw_o

http://www.youtube.com/watch?v=9UglP9bBbUk

http://www.youtube.com/watch?v=1TQJ_xV57S8

http://www.youtube.com/watch?v=ZijiRrZOv8E

திரும்ப திரும்ப வடிவேலு உதைவாங்குவதை பாருங்க உங்களுக்கு கல்யாண ஆசையே வராது... :wub::lol:

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி ஒரு கம்பளம் மாதிரி;அதைப் இழுத்திப் போர்த்திக் கொண்டால் தொந்தரவாய் இருக்கிறது...விலக்கிக் கொண்டால் குளிர் வாட்டுகிறது.

என் சக்திக்கு மீறி எதையும் நான் செய்வதில்லை என்றார் அடிக்கடி ஒருவர் அது சரி அப்படித் தானே இருக்கணும் என்றேன் பிறகு தானே தெரிந்தது அவர் மனைவியின் பெயர் சக்தி என்டு :huh:

  • கருத்துக்கள உறவுகள்

எமது தாயகத்தில் எழுதுமட்டுவாள் எனறு ஒரு ஊர்உள்ளது.அதன் அர்த்தம்.எழுதும் மட்டும் வாழ்.அதாவது திருமண எழுத்து எழுதும் மட்டும் நன்றாக வாழ். :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.