Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அல்லலுறும் போராளிகள், பொதுமக்களின் புனர்வாழ்வே முக்கிய தேவை – நேர்டோ கனடாக் கிளை 16.09.2010

Featured Replies

தலைவனின் சொல்லுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களின் வழித் தோன்றல்களான போராளிகள் இன்று திக்குச்திசை தெரியாமல் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல இந்தப் போராட்டத்தைத் தாங்கிப்பிடித்த மக்கள் வாழ்வதற்கு வழிதெரியாமல் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அடிப்பைட வாழ்விற்கான தேவைகளை நிறைவேற்றுவதே எமது தற்போதைய தலையாய கடமை என்றும், இவர்கள் புலம்பெயர்ந்த உறவுகளை தங்கள் வாழ்வின் விடிவெள்ளிகளாக நினைத்துக் காத்திருக்கும் இவ்வேளையில், நாம் இவர்களது அன்றாட வாழ்விற்குத் திரும்ப உதவி செய்யாவிட்டால் நாம் தமிழராய் பிறந்ததில் பலனேயில்லையென நேற்று நடைபெற்ற நேர்டோக் கனடாக் கிளையின் அங்குரார்பனக் கூட்டத்தில் திரு. இன்பம் பேரின்பநாயகம் குறிப்பிட்டார்.

கனடாவிலுள்ள தமிழுணர்வாளர்கள் சுமார் 20 பேர் கூடி ஆரம்பிக்கப்பட்ட நேர்டோக் கனடாக் கிளையின் கூட்டத்தில் மேலும் அவர் பேசுகையில், 30 ஆண்டு காலம் நாங்கள் எதற்காக உழைத்தோமோ அதன் எச்ச உழைப்பு அந்த மக்கள் நிர்கதியாகாமல் மீண்டும் தங்களது வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு உதவுவதேயாகும். இதனை நாங்கள் செய்யத் தவறுவோமாயின் இறைவன் எம்மை மன்னிக்க மாட்டான் எனவும் தெரிவித்தார்.

எந்தவித அரசியல் அபிலாசைகளையும் தற்போதைக்கு முன்னிறுத்தாமல் தற்போது முகாம்களிலும், வெளியிலும் வாடிக் கொண்டிருக்கும் போராளிகள் அவர்களது குடும்பங்கள் மற்றும் பொதுமக்களிற்கு எம்மால் இயன்றதைச் செய்வதே இந்த அமைப்பின் குறிக்கோள் எனத் தெரிவிக்கப்பட்டதோடு, இலங்கையின் யதார்த்த நிலையை உணராமல் அல்லது எமது ஆயுதப் போராட்டம் முழுமையாக தோற்கடிப்பட்டதை மறைத்து மக்களை மாயை நிலையில் வைத்திருப்பதானாது ஒரு ஆபத்தான நிலைக்கே ஒட்டுமொத்த தமிழினத்தையும் இட்டுச் செல்லுமெனத் தெரிவிக்கப்பட்டதோடு, அவ்வாறான உண்மையற்ற நிலையை ஏற்படுத்தி மக்களை மயக்க நிலையில் வைத்திருப்பது கொண்ட இலட்சியத்திற்காக தங்களை ஆகுதியாக்கிய போராளிகள், பொதுமக்களை அவமதிக்கும் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகளாக நில ஆளுமையோடு விளங்கிய காலத்தில் கூட தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கை வங்கிகளில் கணக்கு வைத்து இலங்கை அரசில் பதிவு செய்தே இயங்கியது என்பது சுட்டிக்காட்டப்பட்டதோடு, எனவே தற்போது தமிழர் சக்தி அங்கு இல்லாத சூழலில் இலங்கை அரசின் அனுசரணையின்றிச் செயற்படுவது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என விளக்கப்பட்டது.

எனவே புலம்பெயர்ந்த தமிழுறவுகளின் உதவிக்காக ஏங்கிக் காத்திருக்கும் சிறையிலுள்ள மறறும் விடுதலை செய்யப்பட்ட போராளிகள், பொதுமக்களிற்கு தொழில்தொடங்குவதற்கு ஏதுவான பயிற்சிநெறிகளை வழங்குதல், கல்வி கற்கைக்கான உதவிகளை வழங்குதல், தொழில் உபகரணங்களை வழங்குதல், தாய் தந்தையற்ற பிள்ளைகளைப் பராமரித்தல் போன்றனவே இந்த அமைப்பின் தற்போதைய திட்டம் எனவும், இலங்கை அரசில் பதிவு செய்யப்பட்டுள்ள (பதிவுப் பத்திரம் இணைக்கப்பட்டுள்ளது) வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வு, புனரமைப்புக் கழகம் என அழைக்கப்படும் நேர்டோவின் கிளைகள் இதர நாடுகளிலும் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்பட்டு அந்த நாடுகளிலுள்ள தமிழுறவுகளின் உதவிகள் எமது மக்களிற்காகப் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிறைகளில் வாடும் போராளிகளின் மற்றும் பொதுமக்களின் தேவைகளிற்காக கனடிய தமிழ் உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் மூலமாக எமது மக்களின் வாழ்வாதரத்திற்குத் தேவையான நடவடிக்கை விரைந்து கவனிப்பதென்றும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நோர்டோவின் கனடாக் கிளையின் செயற்திட்டங்களைக் கவனிக்கவென திரு. இன்பம் பேரின்பநாயகம், திரு. ரெஜி சபாரத்தினம், திரு. சிறீரஞ்சன் கந்தையா, திரு. சாள்ஸ் தேவசகாயம், திரு. சக்தி சிவா, திரு. இராஜரத்தினம் சுப்பிரமணியம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் இணைப்பாளராக விரைவில் தெரிவு செய்யப்படுவார்.

www.nerdo.lk

  • கருத்துக்கள உறவுகள்

தலைவனின் சொல்லுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களின் வழித் தோன்றல்களான போராளிகள் இன்று திக்குச்திசை தெரியாமல் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த முதல் வரியிலயே திருகுதாளம் விளங்குது. இந்தப் போராளிகள் சிறையில வாடுறதுக்கு எந்த அரசாங்கம் காரணமோ அந்த அரசாங்கத்தோடு வேலை செய்யிறவை வேறை இடத்தில நிண்டுகொண்டு புலம்புகினம். இது இந்தியாவில் ஆளுங்கட்சி உறுப்பினர்களே சில முக்கிய பிரச்சினைகளில் உண்ணாவிரதம் என்று சொல்லி பிரச்சினையைத் திசை திருப்ப முனைவதற்கு ஒப்பானது. :D

அதிகாரம் உள்ள நீங்கள் போராளிகளை வெளியே எடுக்கலாமே.. எதற்கு வெளிநாட்டில் நின்று புலம்புகிறீர்கள்? :D:D

  • தொடங்கியவர்

அரசு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த போராளிகளை விடுவிக்க தயாராக உள்ளது. அனால் இவர்கள் ஒரு தொழில் பயிற்சி பெற்று ஒரு வேலையுடன் அல்லது முழுநேர உயர்படிப்புடன் வெளியேறுவதை தான் அனுமதிக்கும். விடுவிக்கப்படும் அனைவரும் நிண்ட காலத்திற்கு கண்காணிப்பில் இருக்கவேண்டும். இவர்கள் வேலையற்று வெறுமனே ஒன்றும் செய்யாதிருந்தால் இவர்களை மீள தடுத்துவைக்க அரசிற்கு அதிகாரங்கள் உள்ளது. அரசைப்பொறுத்தவரை இவர்கள் விடயத்தில் ஒரு சிறிதளவேனும் ரிஸ்க் எடுக்கவோ இரக்கம் காட்டவோ விருப்பமில்லை.

இந்த இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் அரசின் கையிலேயே தங்கியுள்ளது. அனால் அரசு தனது சொந்த நிதியில் இவர்களை முற்று முழுதாக புதிய வாழ்விற்கு தயார் படுத்த தயாரில்லை. போரின் பங்காளிகளாக புலம் பெயர்ந்தவர்களும் இருந்ததால் அவர்களை பங்களிக்குமாறு அரசு கூறுகிறது.

ஒட்டுக்குழுக்கள் மற்றும் சிறீலங்கா அரசாங்கத்தின் கடந்தகால அறிக்கைகளின்படி புலிகள் தமிழ்மக்களைப் பணயக்கைதிகளாக வைத்திருந்தார்கள். வன்னியில் நேரடியானதாகவும், தாயகத்தின் பிற பகுதிகளில் மறைமுகமானதாகவும் இந்த அச்சுறுத்தல் இருந்ததாகக் கூறினார்கள். வெளிநாடுகளிலும் புலிகளின் முகவர்களின் தொல்லை என்று கூறப்பட்டது. அதாவது புலிகளுக்கு தமிழர்களின் ஆதரவு இருந்திருக்கவில்லை என்றும் அது ஒரு பயங்கரவாதப் பிரச்சினை என்றும் கூறப்பட்டது. :D

இப்போது திடீரென்று போரின் பங்காளிகள் புலம்பெயர் தமிழர் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. எம்மைப்பொறுத்தவரையில், புலிப்பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். சரணடைந்த போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளிக்கவேண்டியது சிங்கள அரசின் பொறுப்பாகும். அதேசமயத்தில் புலம்பெயர் தமிழராகிய நாம் புலிப்பயங்கரவாதத்திலிருந்து எம்மை விடுவித்த அரசுக்கு நன்றி கூறுகிறோம்.

அதேசமயத்தில் புலிப்பயங்கரவாதத்திலிருந்து முன்னரே எம்மைக் காக்கத் தவறிய சிங்கள அரசின்மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப் போட புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். எமது புலம்பெயர்வுக்கு காரணம் சிங்கள அரசின் கையாலாகாத்தனம். இதற்கு வழக்குப்போடுவதுதான் சரியான வழி..! :D :D

யாராவது அங்குள்ள மக்களுக்கு.போராளிகளின் குடும்பங்களுக்கு உதவி புரிய வேண்டுமாயின் நேரடியாக உதவுங்கள்!! ... மேலுள்ள கூட்டம், யமனை பச்சடி போட்ட திருடர்கள், இன்று பணத்துக்காக ஓநாய் அழுகை அழுகிறது இக்கூட்டம்!!! அவர்கள் விரும்பின் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதிகள், விடுதலைப்புலிகளிடம் கைப்பற்றப்பட்ட பணங்கள்/தங்கங்கள் போதியளவு சிங்களத்தின் கைகளில் முடக்கப்பட்டிருக்கிறது!!! அதனை அவர்களின் எஜமானர்கள் மூலம் பெற்றுச் செய்யட்டும்!!! உங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த ஓநாய்களின் அழுகைகளை புரியச்செய்யுங்கள்!!!

  • தொடங்கியவர்

ஒட்டுக்குழுக்கள் மற்றும் சிறீலங்கா அரசாங்கத்தின் கடந்தகால அறிக்கைகளின்படி புலிகள் தமிழ்மக்களைப் பணயக்கைதிகளாக வைத்திருந்தார்கள். வன்னியில் நேரடியானதாகவும், தாயகத்தின் பிற பகுதிகளில் மறைமுகமானதாகவும் இந்த அச்சுறுத்தல் இருந்ததாகக் கூறினார்கள். வெளிநாடுகளிலும் புலிகளின் முகவர்களின் தொல்லை என்று கூறப்பட்டது. அதாவது புலிகளுக்கு தமிழர்களின் ஆதரவு இருந்திருக்கவில்லை என்றும் அது ஒரு பயங்கரவாதப் பிரச்சினை என்றும் கூறப்பட்டது. :D

இப்போது திடீரென்று போரின் பங்காளிகள் புலம்பெயர் தமிழர் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. எம்மைப்பொறுத்தவரையில், புலிப்பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். சரணடைந்த போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளிக்கவேண்டியது சிங்கள அரசின் பொறுப்பாகும். அதேசமயத்தில் புலம்பெயர் தமிழராகிய நாம் புலிப்பயங்கரவாதத்திலிருந்து எம்மை விடுவித்த அரசுக்கு நன்றி கூறுகிறோம்.

அதேசமயத்தில் புலிப்பயங்கரவாதத்திலிருந்து முன்னரே எம்மைக் காக்கத் தவறிய சிங்கள அரசின்மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப் போட புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். எமது புலம்பெயர்வுக்கு காரணம் சிங்கள அரசின் கையாலாகாத்தனம். இதற்கு வழக்குப்போடுவதுதான் சரியான வழி..! :D :D

ha ha ha good joke...

  • கருத்துக்கள உறவுகள்

ha ha ha good joke...

அதையேதான் நாங்களும் சொல்லுறம்..! நேர்டோவின் அறிக்கை நல்ல ஜோக் எண்டு..! :D :D

  • தொடங்கியவர்

நமக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரிய வாய்ப்பு! ஆனால் அதை கை நழுவ விட்டு விட்டு பின்னர் கலைப்படுவது தான் நாம் இன்று வரை செய்வது! உலக்கை போற இடம் பாரது ஊசி போற இடத்தை நல்லாபாருங்கள்! அனால் உண்மை தன் பயணத்தை தொடர்ந்த வண்ணம் இருக்க பொய் விரைவில் மரணித்து விடும்!

Edited by Bond007

அரசு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த போராளிகளை விடுவிக்க தயாராக உள்ளது. அனால் இவர்கள் ஒரு தொழில் பயிற்சி பெற்று ஒரு வேலையுடன் அல்லது முழுநேர உயர்படிப்புடன் வெளியேறுவதை தான் அனுமதிக்கும். விடுவிக்கப்படும் அனைவரும் நிண்ட காலத்திற்கு கண்காணிப்பில் இருக்கவேண்டும்..

அண்ணை தயவு செய்து எனக்கு தெரிந்த ஏராளமான போராளிகள் உள்ளை இருக்கினம் அவையை வெளியிலை எடுத்து விட்டியள் எண்டால் நான் அவர்களுக்கான உதவியை எனக்கு தெரிஞ்சவையோடை சேர்ந்து செய்து நல்ல வாழ்வை அமைச்சு குடுப்பன்...!

இப்படி பொறுப்பு எடுக்க எனக்கு தெரிஞ்ச நிறையப்பேர்களும் அவர்களின் சொந்தங்களும் இருக்கினம்... நீங்கள் செய்ய வேண்டியது ஒண்டுதான் அவர்களை வெளியிலை விடுவியுங்கோ...!

குறைஞ்சது வெளியிலை இருக்கும் ஆக்கள் பொறுப்பெடுக்க தயாராக இருக்கும் போராளிகளையாவது உடனடியாக வெளியிலை விடுவியுங்கோ....! தலைக்கு என்ன விலை எண்டு சொன்னியள் எண்டாலும் பறவாய் இல்லை...!

காசை கொண்டுவந்து உங்களிட்டை தந்தால் தான் காப்பாத்துவியள் எண்டால் அதுக்கு பெயர் உதவி இல்லையண்ணோய்... !

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நேர்டோவின் உத்தியோகபூர்வ(??) யுரிப் இணைப்பில் என்ன இருக்கின்றது என்று பார்த்தேன். 21 வயதுப் பிள்ளையாம். அவாவின் பிறந்தநாள் படம் என்று இணைத்திருக்கினம். பிள்ளை குளிக்கப் போகும்போது இழுத்துக் கொண்டு வந்து படம் எடுத்திருக்கினம்போல இருக்கு... பல இடங்களில் குறுக்குக்கட்டோடேயே நிற்குது..

http://www.youtube.com/watch?v=-CqCUOTAT6w

  • கருத்துக்கள உறவுகள்

திரு பேரின்பநாயகம் இந்தக் காணோளியில் 2ம் நிமிடத் துளியின் பின்னர் முன்னாள் போராளிகளை வடுதலை செய்வதால் என்ன பிரச்சனை என்று விளக்குகின்றார். ஆனால் ஒரு விடயம் பல திருமணமான போராளிகள் இருக்கின்றார்கள். அவர்களின் குடும்பங்கள் பணவுதவி இன்றி ரெம்பவே கஸ்டப்படுவதை அந்த முன்னாள் போராளிகள் பல தடவை சொல்லியிருக்கின்றார்கள். அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இதுவரைக்கும்எவ்வாறான பணியை நோய்டோ செய்ததாக பட்டியலிடப்படவில்லை. கேபி கையளித்த சொத்துக்கள் எவ்வகையில் பாவிக்கப்பட்டன என்பது தொடர்பாகவும் சொல்லப்படவில்லை. எந்த மூங்சியை வைத்து இவர்களுக்கு உதவ முடியும்??

பிள்ளையார் சூழி போடுவது போல தேசியத்தலைவரையும், போராளிகளையும் விளித்து, கட்டுரை வரையும் ஏமாற்று வேலைகளை நிறுத்த வேண்டும்.

Edited by தூயவன்

தமிழ் இனம் நிம்மதியாக தன காலில் வாழ தேவையானது ஒரு அரசியல் தீர்வு. அதை தர சிங்களம் என்றுமே தயாராக இருந்தது இல்லை.

சாதாரண தமிழ் மக்கள் கூட வழ முடியாத நிலை. எந்த வித பொருளாதார முன்னெடுப்பும் இல்லை. பட்டதாரிகளுக்கு வேலை வைப்பு இல்லை.

இந்த போராளிகளை தடுத்து வைத்திருப்பது ஒரு போர்க்குற்றம் ! இந்த நிலையில் "போராளிகளுக்கு" புனர் வாழ்வு என்பது தமிழரை மேலும் மடையராக்கும் எண்ணமே. தமிழர் புனர்வழ்வுக்கழகத்தை ஒப்பிடுவது முற்றிலும் கேலிக்குரியது.

புலம் பெயர் தமிழர் ஒரு களம் காலம் கனியும் வரை தம்மை ஒரு பொருளாதார அரசியல் சக்தியாக தம் தம் நாடுகளில் வளரவேண்டும்.

=================================

இந்த அமைப்புக்கு பண உதவி செய்வது இந்த கவர்ச்சிகரமான வார்த்தைகளுக்கு நம்பி....

a) "கனடாவிலுள்ள தமிழுணர்வாளர்கள் சுமார் 20 பேர் கூடி.."

b) " இவர்கள் புலம்பெயர்ந்த உறவுகளை தங்கள் வாழ்வின் விடிவெள்ளிகளாக நினைத்துக் காத்திருக்கும் இவ்வேளையில்.."

Edited by akootha

அல்லலுறும் போராளிகள், பொதுமக்களின் புனர்வாழ்வே முக்கிய தேவை – நேர்டோ

"தமிழ் இளைஞர்களை நீதித்துறை கைவிட்டுவிட்டது" - மூத்த இராஜதந்திரியான நந்தா கொடகே

இலங்கையில் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல், பல்லாயிரக் கணக்கான சிறுபான்மைத் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, இலங்கையின் ஓய்வு பெற்ற மூத்த இராஜதந்திரியான நந்தா கொடகே தெரிவித்திருக்கிறார்.

இவர்களில் பலர், பல ஆண்டுகளாக இவ்வாறு அகப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீதித்துறை அவர்களை கைவிட்டு விட்டது என்று அவர் குற்றஞ்சாட்டினார். இவர்களை இந்த மாதிரி தொடர்ந்து தடுத்து வைத்திருந்தால், பல பிரபாகரன்கள் தோன்றுவதற்கு அது வழி செய்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். .

மிகவும் மூத்த உறுப்பினரான கேபி என்று அழைக்கப்படுபவர், பெயரளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்கிறார்.

மற்றுமொரு மூத்த உறுப்பினரான தயா மாஸ்டர்- தற்போது நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஒரு தொலைக்காட்சி நிலையத்தை நடத்துவதற்கு தான் உதவிக்கொண்டிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100916_srilankacommission.shtml

இப்படியே இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர இதுவரையில் எதையாவது செய்தார்களா என்பதைக் காணவேயில்லை. இதுவரையில் என்ன செய்திருக்கிறீர்கள் எனக் கேட்டால் பணவுதவி கேட்கிறார்களாம்.

சிங்கள அரச பயங்கரவாதிகளின் இந்திய அரச பயங்கரவாதிகளின் ஒட்டுண்ணிகளின் முதலைக் கண்ணீர் நிதிதிரட்டல்களை தமிழர் நம்பி ஏமாறப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அரசு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த போராளிகளை விடுவிக்க தயாராக உள்ளது. அனால் இவர்கள் ஒரு தொழில் பயிற்சி பெற்று ஒரு வேலையுடன் அல்லது முழுநேர உயர்படிப்புடன் வெளியேறுவதை தான் அனுமதிக்கும். விடுவிக்கப்படும் அனைவரும் நிண்ட காலத்திற்கு கண்காணிப்பில் இருக்கவேண்டும். இவர்கள் வேலையற்று வெறுமனே ஒன்றும் செய்யாதிருந்தால் இவர்களை மீள தடுத்துவைக்க அரசிற்கு அதிகாரங்கள் உள்ளது. அரசைப்பொறுத்தவரை இவர்கள் விடயத்தில் ஒரு சிறிதளவேனும் ரிஸ்க் எடுக்கவோ இரக்கம் காட்டவோ விருப்பமில்லை.

இந்த இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் அரசின் கையிலேயே தங்கியுள்ளது. அனால் அரசு தனது சொந்த நிதியில் இவர்களை முற்று முழுதாக புதிய வாழ்விற்கு தயார் படுத்த தயாரில்லை. போரின் பங்காளிகளாக புலம் பெயர்ந்தவர்களும் இருந்ததால் அவர்களை பங்களிக்குமாறு அரசு கூறுகிறது.

ஆகா என்ன அக்கறை, என்ன பரிவு, இவையோடு சேர்ந்து கனடாவிலையும் கொஞ்சப்பேர் வெளிக்கிட்டினம்..ஜயகோ இதை எப்படி சொல்வது?

இலங்கை அரசின் பிடியில் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு அரசோடு இணைந்துதான் உதவமுடியும் என்பதே உண்மை. பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் படிப்படியாக விடுவிக்கப்படுகின்றனர். அடிப்படையில் சிறைப்பட்ட போராளிகளாகட்டும் மக்களாகட்டும் அல்லது அரசோடு சேர்ந்து இயங்கும் குழுக்கள் நபர்களாகட்டும் எவரும் சிங்கள பேரினவாத அரசின் விருப்பத்திற்கு மாறாக எந்த ஒன்றையும் செய்ய முடியாது. இலங்கையில் தமிழர்களின் இருப்பானது சிங்கள அரசின் விருப்பத்துக்கு உட்பட்டுத்தான் தக்கவைக்க முடியும். சிங்கள அரசில் இருந்து சிங்கள அரசின் விருப்பில் இருந்து புறம்புபட்ட ஒரு அரசியல் தமிழர்களுக்கு இப்போது இல்லை. அதற்கான சூழல் இல்லை. புலம்பயெர் தமிழர்களாகிய நாம் சிங்கள அரச அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு தமிழ்த்தேசியம் தமிழர் நலன் பேசுவதற்கும் சிங்கள அதிகாரத்தின் முற்றுமுளுதான பிடிக்குள் இருந்து தாயக மக்கள் தங்கள் நலன்கள் குறித்து பேசுவதற்கும் உள்ள இடைவெளி மிகப்பெரியது. இரு துருவங்களுக்கு ஒப்பானது. இங்ட்கிருந்து எம்மால் இலகுவாக துரோகிப்பட்டங்கள் சூட்டவும் தேசியம் பேசவும் முடியும். ஆனால் அதற்கும் தாயக மக்களுக்குமான அடிப்படை உறவு என்பது துளியும் இல்லை. முதலில் எமக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவு ஏற்படவேண்டும் இதுதான் இன்றைக்கான அரசியல். இந்த உறவு சிங்களத்தை தவிர்த்து இன்றய சூழலில் ஏற்பட முடியாது. சிங்கள அரசின் ஊடாகத்தான் இது ஏற்பட முடியும். புலம்பெயர் தமிழ்த்தேசியம் மிக இலகுவாக எமக்கும் தாயக மக்களுக்கும் இடையில் சிங்களம் என்ற வேலி இருப்பதை மறந்துவிடுகின்றது. அந்த வேலிக்குள்ளாக போவதை துரோகம் என்கின்றது. பத்மநாதன் முன்னாள் போராளிகளிகளின் புனர்வாழ்வுக்கு காசுகேட்டால் துரோகம் என்கின்றது ஆனால் தேருக்கும் திருவிழாவுக்கும் சுற்றுலா வுக்கும் விடுமுறையை கழிக்கவும் என இலங்கை சென்று நூறுமடங்கு அதிகமான அந்நியச் செலவாணியை இலங்கை அரசுக்கு வழங்குவது குறித்து ஒரு பொருட்டும் இல்லை. நாடுகடந்த அரசை நிறுவி முதலாம் இரண்டாம் அமர்வுகளை செய்து சீமானை விடுதலை செய்என்று அறிக்கை விடுவதற்கு தேசியவாதி என்பதற்கும் பல்லாயிரம் போராளிகள் மக்களை சிங்கள சிறைகளில் இருந்து விடுவிப்பதற்கு சிங்களத்தின் சப்பாத்துகளை துடைப்பதற்கு துரோகி என்பதற்கும் இடையில் தமிழர்களின் அரசியல் இனியும் தொடரமுடியாது. தேசியவாதியும் துரோகியும் ஒருவரே. இரண்டும் நாமே. இந்த சிந்தனை முறையே ஆரோக்கியமானது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளுக்கு 400 ரூபா ஒருவருக்கு செலவிடும் அரசு அந்த காசை தொடர்ந்து செலவளிக்காமல் 10000 ரூபாவை ரொக்கமாக கொடுத்து வெளியில் அனுப்பலாமே??.

ஏற்கனவே தொழிற்பயிற்சி பெற்றிருக்கிறார்கள்(ஒரு வருடத்துக்கு மேலாக பயிற்சி பெற்றதாக கூறுகிறார்கள்). யார் உதவினாலும் 12000 பேரும் வெளியில் வந்து சுதந்திர வாழ்வு வாழ வேண்டும்.

கே.பி தமிழ் மக்களை குழப்பியடித்தவர்களில் ஒருவர்.இன்று இவரை தலைமையாக கொண்டு அரசு இவரை இயக்குவது பலத்த சந்தேகங்களை மக்கள் மத்தியில் எழுப்புகின்றன.உண்மையில் இவர்கள் மக்களுக்கு தொண்டு செய்வார்களானால் செயல்முரையில் காட்டி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.அது வரை யாரும் பணம் கொடுக்க போவதில்லை.

உலகில் எத்தனையோ பொது நிறுவனங்கள் பல நாடுகளில் சேவைகள் செய்து வருகின்றன.அவைகளில் ஒன்றாவது இலங்கை அரசுக்கு நம்பிக்கை தரவில்லையா?.புலிகளுக்கு பல காலமாக ஆயுதங்களை கடத்தி கொடுத்தவரை ஒரு வருடத்தில் அரசின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி விட்டார் என்றால் எங்கோ பலமாக உதைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளுக்கு 400 ரூபா ஒருவருக்கு செலவிடும் அரசு அந்த காசை தொடர்ந்து செலவளிக்காமல் 10000 ரூபாவை ரொக்கமாக கொடுத்து வெளியில் அனுப்பலாமே??.

ஏற்கனவே தொழிற்பயிற்சி பெற்றிருக்கிறார்கள்(ஒரு வருடத்துக்கு மேலாக பயிற்சி பெற்றதாக கூறுகிறார்கள்). யார் உதவினாலும் 12000 பேரும் வெளியில் வந்து சுதந்திர வாழ்வு வாழ வேண்டும்.

-------

சரியாக சொன்னீர்கள் நுணாவிலான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளுக்கு 400 ரூபா ஒருவருக்கு செலவிடும் அரசு அந்த காசை தொடர்ந்து செலவளிக்காமல் 10000 ரூபாவை ரொக்கமாக கொடுத்து வெளியில் அனுப்பலாமே??.

ஏற்கனவே தொழிற்பயிற்சி பெற்றிருக்கிறார்கள்(ஒரு வருடத்துக்கு மேலாக பயிற்சி பெற்றதாக கூறுகிறார்கள்). யார் உதவினாலும் 12000 பேரும் வெளியில் வந்து சுதந்திர வாழ்வு வாழ வேண்டும்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தங்கள் சொந்த வாழ்வைக் கட்டியெழுப்ப முன்னரே அவர்களை மீண்டும் ஒன்றிணைகின்றார்கள் என்று கைது செய்யும் இலங்கை அரசு 10000 ரூபாவைக் கொடுத்து வெளியில் விடவா போகின்றது? வெளியில் அனுப்ப முன்னர் முன்னாள் போராளிகளால் நாட்டின் பாதுகாப்பிற்குப் பங்கம் இல்லை என்பதை இலங்கையரசு உறுதி செய்யக் காலம் எடுக்கலாம். அத்தோடு தாயகத்தில் மக்கள் அவலப்பட்டால்தான் புலம்பெயர்ந்த நாடுகளில் தேசியத்தை வளர்க்கமுடியும் என்று "தேசியச் சிந்தனை" உள்ளவர்கள் உள்ளபோது, முன்னாள் போராளிகள் வெளியில் விரைவாக வரமுடியாது.

இலங்கை அரசின் பிடியில் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு அரசோடு இணைந்துதான் உதவமுடியும் என்பதே உண்மை. பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் படிப்படியாக விடுவிக்கப்படுகின்றனர். அடிப்படையில் சிறைப்பட்ட போராளிகளாகட்டும் மக்களாகட்டும் அல்லது அரசோடு சேர்ந்து இயங்கும் குழுக்கள் நபர்களாகட்டும் எவரும் சிங்கள பேரினவாத அரசின் விருப்பத்திற்கு மாறாக எந்த ஒன்றையும் செய்ய முடியாது. இலங்கையில் தமிழர்களின் இருப்பானது சிங்கள அரசின் விருப்பத்துக்கு உட்பட்டுத்தான் தக்கவைக்க முடியும். சிங்கள அரசில் இருந்து சிங்கள அரசின் விருப்பில் இருந்து புறம்புபட்ட ஒரு அரசியல் தமிழர்களுக்கு இப்போது இல்லை. அதற்கான சூழல் இல்லை. புலம்பயெர் தமிழர்களாகிய நாம் சிங்கள அரச அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு தமிழ்த்தேசியம் தமிழர் நலன் பேசுவதற்கும் சிங்கள அதிகாரத்தின் முற்றுமுளுதான பிடிக்குள் இருந்து தாயக மக்கள் தங்கள் நலன்கள் குறித்து பேசுவதற்கும் உள்ள இடைவெளி மிகப்பெரியது. இரு துருவங்களுக்கு ஒப்பானது. இங்ட்கிருந்து எம்மால் இலகுவாக துரோகிப்பட்டங்கள் சூட்டவும் தேசியம் பேசவும் முடியும். ஆனால் அதற்கும் தாயக மக்களுக்குமான அடிப்படை உறவு என்பது துளியும் இல்லை. முதலில் எமக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவு ஏற்படவேண்டும் இதுதான் இன்றைக்கான அரசியல். இந்த உறவு சிங்களத்தை தவிர்த்து இன்றய சூழலில் ஏற்பட முடியாது. சிங்கள அரசின் ஊடாகத்தான் இது ஏற்பட முடியும். புலம்பெயர் தமிழ்த்தேசியம் மிக இலகுவாக எமக்கும் தாயக மக்களுக்கும் இடையில் சிங்களம் என்ற வேலி இருப்பதை மறந்துவிடுகின்றது. அந்த வேலிக்குள்ளாக போவதை துரோகம் என்கின்றது. பத்மநாதன் முன்னாள் போராளிகளிகளின் புனர்வாழ்வுக்கு காசுகேட்டால் துரோகம் என்கின்றது ஆனால் தேருக்கும் திருவிழாவுக்கும் சுற்றுலா வுக்கும் விடுமுறையை கழிக்கவும் என இலங்கை சென்று நூறுமடங்கு அதிகமான அந்நியச் செலவாணியை இலங்கை அரசுக்கு வழங்குவது குறித்து ஒரு பொருட்டும் இல்லை. நாடுகடந்த அரசை நிறுவி முதலாம் இரண்டாம் அமர்வுகளை செய்து சீமானை விடுதலை செய்என்று அறிக்கை விடுவதற்கு தேசியவாதி என்பதற்கும் பல்லாயிரம் போராளிகள் மக்களை சிங்கள சிறைகளில் இருந்து விடுவிப்பதற்கு சிங்களத்தின் சப்பாத்துகளை துடைப்பதற்கு துரோகி என்பதற்கும் இடையில் தமிழர்களின் அரசியல் இனியும் தொடரமுடியாது. தேசியவாதியும் துரோகியும் ஒருவரே. இரண்டும் நாமே. இந்த சிந்தனை முறையே ஆரோக்கியமானது

மிக மிக உண்மையான கருத்து. நூறு பச்சைப் புள்ளிகளாவது வழங்க வேண்டும் சுகனுக்கு. தமிழ் தேசிய புலம் பெயர் வியாபாரிகளுக்கு இந்த உண்மை நன்கு புரிந்தாலும் வயிற்றுப் பாட்டுக்கு வேறு வழியில்லை என்பதால் புரியாது நடிக்கின்றனர்

வெள்ளைக்காரன் வெளிக்கிட்டதிலிருந்து இற்றுவரை 60இற்கு மேற்பட்ட கால வரலாற்றை வெகு விரைவாக மறக்கின்றோம்!!! புலியின் ஆயுதப்போராட்டம் அதில் வெறும் 30 வருடங்களுக்கு உட்பட்டவையே!!!!

ஆமா. இந்த 60 வருடங்களுக்கு மேற்பட்ட காயங்களுக்கான ஒரு மருந்தைக் கூட சிங்களம் தர முயற்சிக்காத நிலையில், நாம் அனைத்தையும் கை விடவேண்டுமாம் .... இந்த போராளிகளின் விடுதலை ஒன்றுக்காக??????!!!!!!!! ....... யுத்த நிறுத்த மீறல்;கள், மனித உரிமை மீறல்கள், தொடரும் இனவழிப்புகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், ...........

ஆமா, புலத்திலோ/களத்திலோ எல்லாவற்ரையும் .... எல்லாவற்றையும் ... விட்டவுடன் இந்த போராளிகளை சிங்களவன் விட்டு விடுவன்??????? .... சிங்களவன் நல்லவன்!!! :mellow:

அதான் எல்லாரையும் வாங்கோ இணக்கமா இருப்பம் எண்டு சொல்லுறானே நெல்லை.. வேறை என்ன வேணும்? :D

கொஞ்சக்காலத்தில திருப்பியும் முதுகில ஒரு போடு போடப்போறான்..! அப்பத் தெரியும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக உண்மையான கருத்து. நூறு பச்சைப் புள்ளிகளாவது வழங்க வேண்டும் சுகனுக்கு. தமிழ் தேசிய புலம் பெயர் வியாபாரிகளுக்கு இந்த உண்மை நன்கு புரிந்தாலும் வயிற்றுப் பாட்டுக்கு வேறு வழியில்லை என்பதால் புரியாது நடிக்கின்றனர்

கே.பி உட்பட பலர் தம்மை கேலிப்பொருளாக்கி.......

இம்மக்களுக்கான உதவிகளைச்செய்யவே முயல்கிறார்கள் என்றே நினைக்கின்றேன்

அதனால்தான் எனக்கு இதில் சில சந்தேகங்கள் இருப்பினும்

அவர்களது இந்த சுயபோராட்டத்துக்கு எதிராக எழுதுவதில்லை.

யார் குத்தியும் அரிசியானால் சரி என்றுதான் அந்த மக்களை நேசிப்பவன் இவ்வேளை முடிவெடுப்பான்

மிகுதியெல்லாம்...............???

கைக்கூலிகளாக புலம் பெயர்ந்தவர்களால் முத்திரை குத்தப்பட்டிருக்கும் கருணா,டக்கிளஸ் கூட முடிந்தவரை முகாம்க்ளில் இருப்பவர்களை வெளியில் கொண்டுவந்து கொண்டுதானிருக்கின்றார்கள்.(பணம் வாங்கியென சொல்லுவீர்கள்).அவர்களில் சிலர் இந்தியாவிற்கே வந்துவிட்டார்கள்.

புலத்தில் இருக்கும் பெரும்பான்மையான புலிகள் அங்கிருக்கும் பிரச்சனைகளை ஊதிப் பெருக்கி முகாம்களில் இருக்கும் தமிழனுக்கு பெரிதாக ஏதும் அழிவு வராதா என ஏங்கித்தவிக்கின்றார்கள்.எவர் அழிந்தாலும் தமது புலம் பெயர் அரசியல் தொடர வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்.இதை விளங்காமல் இன்னும் சிலர் அவர்கள் பின்னால் அலைகின்றார்கள்.அவர்களை நம்புகின்றார்கள்.அவர்களோ பாகப்பிரிவினையின் உச்ச கட்டத்தில் நிற்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.