Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திருக்கோவில் மாணவி முதலாமிடம்

Featured Replies

2010 ஆம் ஆண்டு 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபெறுகள் வெளியாகியுள்ளன. இதில் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவி மாளவன் சுபதா 193 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றுள்ளார்.

இந்தநிலையில், அகில இலங்கை ரீதியில் கண்டி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கலஹா ராமகிருஸ்ண மத்திய கல்லூரி மாணவன் என்.எஸ்.என்.ஸபீர் 2 வது இடத்தை பெற்றுள்ளார்.

இவர் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இதேவேளை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இவர் அகில இலங்கை ரீதியில் 3 வது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தில் சித்தியடைவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை

கடவுளின் துணை இல்லாவிட்டால் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்றிருக்க முடியாது.

எனவே, இப்பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள ஒத்துழைத்த சகலருக்கும் நான் நன்றி கூறுகின்றேன் என்று நேற்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் தமிழ் மொழி மூலத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தில் சித்தியடைந்த மாணவி மாளவன் சுபதா தெரிவித்தார்.

193 புள்ளிகளுடன் சித்தியடைந்துள்ள இவர், தம்பிலுவில் அம்மன் கோவில் முன் வீதியில் வசித்துவரும் மாளவன் உமையாள் தம்பதிகளின் புதல்வியாவார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவேன் என எதிர்பார்த்திருந்தேன்.

ஆனால் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தில் சித்தியடைவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

நன்றாகப் படித்து, முயற்சி செய்ததன் பலனாக இப்பெறுபேறு கிடைத்துள்ளது.

இப்பரீட்சையில் தோற்றி சிறப்பாக சித்தியடைவதற்கு எனது பெற்றோர், அதிபர், ஆசியர்கள் மற்றும் ஊக்கமளித்த சகலருக்கும் நன்றி கூறுகிறேன்.

Edited by சிறிலிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் கல்வியில் பிந்தங்கிய இடங்களாக கணிக்கப்பட்ட பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் ஆற்றியுள்ள இந்தச் சாதனை கல்வியில் முன்னேறியதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டு கலவியில் முன்னேறிக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் திருமலை மட்டக்களப்பு போன்ற நகர்ப்புற மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதனை தமக்கான இறுதி எச்சரிக்கையாக கொள்ள வேண்டும்.

கஸ்டத்தில் பிறப்பதுவே உண்மையான கல்வி..! அதாவது கஸ்டப்பட்டு முயற்சி செய்து படித்தால் தான் கல்வியிலும் சாதிக்க முடியும்..!

சின்னஞ்சிறிய வயதில்.. நீங்கள் ஆற்றியுள்ள உங்கள் சாதனைகளுக்கு வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே. :)

Edited by nedukkalapoovan

சுபதாவுக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

தென் தமிழீழத்திலிருந்து இன்னும் பல சாதனைகளை எதிர்பார்கின்றோம்......

  • கருத்துக்கள உறவுகள்

சுபதாவுக்கு எனது பாராட்டுகளும்,வாழ்த்துகளும்...தொடர்ந்தும் சிறப்பகாக கல்வி கற்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.. :lol:

00020116.gif00020116.gif

  • கருத்துக்கள உறவுகள்

Grade 5 scholarship results announced

Sep 22, 2010 8:15 PM · A student of Dharmapala Maha Vidyalaya, Pannipitiya has topped the Grade Five Scholarship examination this year.

The boy, Sanuja Kalhan Edirisinghe, has gained 196 out of 200 marks, said the Department of Examinations today (Sept. 22).

Navin Yasanka Premaratne of Horagahamulla Primary School, Minuwangoda, J.G. Kalani Pabasara of Meegahatenna Primary School, Kalutara and R.L. Lakith Navodya of Mahinda Vidyalaya, Galle came second with 194 marks.

In the Tamil medium, the first place went to Malavan Supatha of Thambuluvil Kalaimahal Vidyalayam of Kalmunai who obtained 193 marks.

Around 315,000 students sat for the examination in August, and 31,000, or 10 per cent, of them have won scholarships.

The results will be posted on the department website tomorrow.

Thehttp://www.colombotoday.com/english/articles/Lite/Grade-5-scholarship-results-announced/15261.htm

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி..நாங்களும் சுபதாவை யும் பெற்றோரையும் பாராட்டுகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

சின்னஞ்சிறிய வயதில்..

நீங்கள் ஆற்றியுள்ள உங்கள் சாதனைகளுக்கு வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மானவியை உங்கள் எல்லோருடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்.ஆனால் இவரைப்போல திறமை உள்ள எத்தனையோ மாணவர்கள் இன்னும் வசதி இன்மை காரனமாக பாடசாலை போக முடியாமல் உள்ளார்கள்.அவர்களுக்கு நாம் உதவுததுதான் அந்த மாணவிக்கு நாம் சொல்லும் உண்மையான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்போல திறமை உள்ள எத்தனையோ மாணவர்கள் இன்னும் வசதி இன்மை காரனமாக பாடசாலை போக முடியாமல் உள்ளார்கள்.அவர்களுக்கு நாம் உதவுததுதான் அந்த மாணவிக்கு நாம் சொல்லும் உண்மையான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் :lol:

ஒரு பச்சை போட்டுள்ளேன் தங்களது இந்த வேண்டுதலுக்கு...

கடின உழைப்பிற்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு, மேலும் கல்வியில் சிறந்தது விளங்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!!!தொடர்ந்து கல்வியில் முன்னிலையில் இருந்த யாழ்ப்பாணத்திற்கு என்ன நடந்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.