Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2010.10.30) 20 வருடங்கள் பூர்த்தி ‐ வெளியேற்றப்பட்ட விடயத்தை மறக்கலாம் என்று சொல்கிறார்கள் ‐ நாங்கள் போட்ட செருப்பில்லையே எங்களுடைய வாழ்க்கை.....GTN னின் விசேட தொகுப்பு‐மீள்பிரசுரம்‐

Featured Replies

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2009.10.30) 19 வருடங்கள் பூர்த்தி ‐ வெளியேற்றப்பட்ட விடயத்தை மறக்கலாம் என்று சொல்கிறார்கள் ‐ நாங்கள் போட்ட செருப்பில்லையே எங்களுடைய வாழ்க்கை.....GTN னின் விசேட தொகுப்பு:‐

1990 ஒக்.30ஆம் திகதி வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் 19 வருடங்கள் கழிந்து விட்டன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த இம்மக்கள் மீது காட்டிக் கொடுப்பு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 24 மணித்தியாலத்துள் தமது இருப்பிடம் மற்றும் உடமைகள் அனைத்தையும் விட்டு உடனடியாகவே வெளியேறுமாறு விடுதலைப் புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாக அங்கிருந்து வெளியேறினார்கள்.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயத்தை மறக்கலாம் என்று சொல்கிறார்கள். நாங்கள் போட்ட செருப்பில்லையே எங்களுடைய வாழ்க்கை. செருப்பு என்று சொன்னால் கழற்றி விட்டு இன்னொன்று புதிதாக வாங்கிக் கொள்ளலாம். ஆனால் எங்களுடைய உரிமைகள் உடமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அனாதைகளாக, இன்று வரைக்கும் பசுமரத்தாணிகளாக அகதி என்ற அந்தஸ்துடன் எந்த சமூகத்திலும் வாழ இயலாத நிலைமையில் தான் நாங்கள் இருக்கிறோம் என்கிறார் ஜனூஷா முஜீப் என்கிற முன்பள்ளி ஆசிரியர். புத்தளத்தில் வசித்து வரும் இவர் இவர் தற்போது முன்பள்ளி ஆசிரியராக இருக்கிறார்.

ஓரே இரவில் ஏறத்தாழ எண்பதாயிரம் முஸ்லிம்கள் மேற்குறித்த ஐந்து மாவட்டங்களிலிருந்தும் அகதிகளாக வெளியேற்றப்பட்டார்கள். அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வந்த இம்மக்களில் பெரும்பன்மையானவர்கள் புத்தளத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு குடியேற்றப்பட்டார்கள். இது தவிர கொழும்பு, குருநாகல், மாத்தளை ஆகிய இடங்களிலும் குடியேறினார்கள்.

பெரும்பான்மையான இடம் பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட முகாம்களிலேயே இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள். அறுபதாயிரம் முஸ்லிம்கள் 141 இடம் பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள் என்று அரசாங்கப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு இலட்சத்து 25 ஆயிரம் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருவதாக முஸ்லிம் கவுன்ஸில்; தெரிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை தமது மீள் குடியேற்றத்திற்கு வழிகோலும் என்று இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் நம்பினார்கள். இக்காலகட்டத்தின் போது சில முஸ்லிம்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று குடியேற ஆரம்பித்தார்கள்.

2006இல் போர் மீள ஆரம்பித்ததோடு அவர்களுடைய மீள் குடியேற்றமும் ஆபத்துக்குள்ளானது. எனினும் 2009இல் போர் முடிவடைந்த பிற்பாடு தாம் மீளவும் தமது சொந்த இடங்களில் குடியேறலாம் என்ற நம்பிக்கை அவர்களிடம் துளிர்விட ஆரம்பித்துள்ளது. நாங்கள் அரசாங்கத்திடமும் அமைச்சர்களிடமும் சர்வதேச உதவி நிறுவனங்களிடமும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் நாம் எமது சொந்த இடங்களுக்குச் சென்று குடியேறவும் நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் எமக்கு உதவி செய்யுங்கள் என்று கல்பிட்டி அகதி முகாமிலிருக்கும் எம் ரெய்சுடீன் வலியுறுத்துகிறார்.

முஸ்லிம் கவுன்ஸில் இந்த மக்கள் மீளவும் தமது இருப்பிடங்களுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீள்குடியேற்றத்துக்குத் தயாரானவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக அச்சிடப்பட்ட விண்ணப்பங்களைக் கொடுத்து அவற்றை பூர்த்தி செய்து பெற்று வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அவ்வமைப்பால் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் மக்களுடன் சேர்ந்து அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் மீளவும் தத்தமது வீடுகளுக்குச் சென்று குடியேறுவதற்கான அவர்களுடைய வாழ்வுரிமை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் இவ்விடயத்தில் அதிக சிரத்தை எடுத்து வருகிறோம் என்று முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார்.

இவ்விண்ணப்பப்படிவங்களை ஒன்றாக ஆராய்ந்து காணி உள்ளவர்கள் வேறாக காணியற்றவர்கள் வேறாகப் பிரித்து அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, அவர்கள் அங்கு மீள் குடியேறுவதற்கு ஏதுவான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, தொழில் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்வதற்கான திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன்.

கொழும்புக்கு அண்மித்தாக உள்ள மட்டக்குளியில் இடம் பெயர்ந்த 125 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. 1990ஆம் ஆண்டு இடம் பெயர்ந்ததிலிருந்து இங்குள்ள முகாம் ஒன்றிலேயே வாழ்ந்து வருகிறோம். எமது மீள் குடியேற்றம் பற்றி எம்முடன் வந்து பேசினார்கள். எனினும் நாம் உடனடியாகவே எமது பிரதேசங்களில் குடியேறுவதற்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக அங்கு எமக்கு தற்போது வீடுவாசல் எதுவும் இல்லை. அவை எல்லாம் அழிந்து கிடக்கின்றன. தமிழர்களை மீள் குடியேற்றம் என்ற பெயரில் தற்போது கொண்டு வைத்து அவர்கள் சீரழிவதைப் போல நாம் சீரழிய விரும்பவில்லை. எங்களுக்கென்று வீடுவாசல் ஏதாவது அமைத்துத் தந்து போய் இருங்கள் என்று சொன்னால் நாம் போகத் தயார். வீடுவாசல் இல்லாமல் அங்கு போய் எங்கே இருப்பது தான் எம்முடைய கேள்வி என்கிறார் மட்டக்குளி முகாமில் இருக்கும் சக்காரியா.

வீடுகட்டித் தந்து அங்கு போய் இருங்கள் என்று சொன்னால் நாம் நாளைக்கும் போகத் தயாராக இருக்கிறோம். இல்லாவிட்டால் நாம் தொழில் ரீதியாக மிகவும் பாதிக்கப்படுவோம். 19 வருடங்களாக இங்கு தொழில் செய்து பழகிய எங்களுக்கு அங்கு போய் தொழில் செய்வது சாத்தியமில்லை. அங்கு போய் தொழிலை ஆரம்பிப்பது என்றால் முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எமது பிள்ளைகளுக்கு அங்கு போக விருப்பமில்லை. வடக்கில் தொழிற்சாலைகள் ஏதாவது இருக்கும் என்றால் கூட நாம் அங்கு போய் தொழில் செய்யலாம். அப்படி எதுவும் அங்கில்லை. இடம் பெயர்ந்து இங்கு வந்த நாங்கள் தொழில் தான் செய்து வருகிறோம். யாரும் களவெடுக்கவில்லை. பிச்சை எடுக்கவில்லை. ஆனால் எமக்கு சொந்த வீடுவாசல் கட்டித் தருவீர்களானால் எமது பிள்ளைகள் வராவிட்டாலும் நாங்கள் அங்கு போகத் தயாராக உள்ளோம் என்கிறார் மட்டக்குளி முகாமிலிருக்கும் என்.எம்.ஹனீபா.

தனக்கோ அங்கு மீண்டும் போக விருப்பமில்லை என்கிறார் இன்னொரு முகாம்வாசியான முஹமட் ஜாஹிர். எங்களுக்கு ஏதாவது நஷ்டஈடு கிடைச்சால் எங்களுடைய பிரச்சினையை நாங்களே பார்த்துக் கொள்வோம் என்கிறர் அவர்.

இரண்டு மூன்று பிள்ளைகளுடன் அங்கிருந்து வந்தோம். இப்போது அவர்களும் மணம் முடித்து அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரு வீட்டுக்குள் வாழ முடியாது. அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இரண்டு அல்லது மூன்று வீடுகள் தேவைப்படுகின்றன. அரசாங்கம் அவ்வாறு கட்டித் தருமா? அப்படி இல்லாமல் அங்கு போய் வாழ முடியாது. அதற்கு முடியாவிட்டால் நஷ்ட ஈடு ஏதாவது தந்தால் நாங்கள் எங்காவது காணி பார்த்து வாங்கிக் குடியேறுவோம் என்கிறார் என்.எம்.ஹனீபா.

முஸ்லிம் சமாதான பேரவையின் புத்தளம் கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2009.10.30) பத்தொன்பது வருடங்கள் பூர்த்தியடைந்தன. 1990ஆம்ஆண்டு இம்மக்கள் வடமாகாணத்தில், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளியேறி தற்போது புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமது வெளியேற்றம் குறித்தும், இத்தினத்தை நினைவு கூரும் வகையிலும் முஸ்லிம் சமாதான பேரவையின் புத்தளம் கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

சமாதான செயலகத்தின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.என்.எல்.எம்.சுஹைர் தலைமையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பதினொரு தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை வெளியிடப்பட்டது.

அவை வருமாறு :

1) இரண்டு மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக விசாரித்து, ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளுடன், அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

2) பலவந்த வெளியேற்றத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு, இன்னமும் அகதிவாழ்வு நடத்திவரும், வடக்கு முஸ்லிம்களுக்கு உரிய நஷ்டஈடுகள் துரித கதியில் வழங்கப்பட வேண்டும்.

3) மீள்குடியேற்ற நிகழ்வில் முஸ்லிம்களின் விவகாரம், தெரிவிக்கப்பட்டு அது அவர்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

4) மீள்குடியேற்றத்தின் போது 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களின்,வடக்கிலுள்ள பூர்வீக சொத்துக்களுக்கு PசுநுளுஊசுஐPவுஐழுN ழுசுனுஐNயுNஊநு எக்காரணம் கொண்டும் பிரயோகிக்கப்படக் கூடாது.

6) பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வடக்கிலுள்ள காணிகள் அவர்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்.

7) 1990இல் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 19 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே அதிகரித்துள்ள குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்தின் போது புதிதாகக் காணிகள் வழங்கப்பட வேண்டும்.

8) பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு 1990 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும், நிவாரணத் தொகை ஆரம்பம் முதல் அதே தொகையாகவே இருந்து வருகின்றது. சுமார் 19 வருடகாலப் பகுதியில், ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கவனத்திற் கொண்டு தற்போதைய நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.

9) அரச நியமனங்கள், வளப்பகிர்வுகளின் போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பங்குகள் சரியாக, நிறைவாக வழங்கப்பட வேண்டும்.

10) யுத்த காலத்தில் கடத்தப்பட்டு இதுவரை காலமும் தகவல் இல்லாத முஸ்லிம் குடும்பங்களுக்குத் துரிதமாக நஷ்டஈடு வழங்கப்படுவதுடன், மரண அத்தாட்சி பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.

11) பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் இரு தசாப்தங்களாக புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதன் நிமித்தம் புத்தளம் பிரதேச பூர்வீக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காணிப் பங்கீடு, கல்வி, அரச நியமனங்கள், தொழில்வாய்ப்பு, சுகாதாரம், பல்கலைக்கழக அனுமதி உட்பட எல்லா வகைகளிலுமான, இழப்புகளும் அவசரமாக உரிய முறையில் ஈடு செய்யப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16672&cat=8

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியில் இருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டு 21 வருடங்கள்... அதை யாரும் கதைக்கமாட்டார்கள்!

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2010.10.30) 20 வருடங்கள் பூர்த்தி..

ஓரே இரவில் ஏறத்தாழ எண்பதாயிரம் முஸ்லிம்கள் மேற்குறித்த ஐந்து மாவட்டங்களிலிருந்தும் அகதிகளாக வெளியேற்றப்பட்டார்கள்.

...

தற்போது ஒரு இலட்சத்து 25 ஆயிரம் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருவதாக முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.

20 வருடங்களில் இவர்கள் சனத்தொகை 56% ம் அதிகரிப்பு..!!

முஸ்லீம்களுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் மட்டு அம்பாறை தமிழர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.

தமிழ் பேசும் முஸ்லீம்கள், இந்துக்கள், கிரிஸ்தவர்கள்.. எல்லம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்தான்.. ஒருவரும் மற்றவருக்கு சளைத்தவர் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

Right of Movement of Expelled Northern Muslims through Wilpattu Park .

. .Protect Wilpattu Park and The Right of Movement of Expelled Northern Muslims We, the undersigned organizations call on the Government to take immediate action to prevent the destruction of the Wilpattu National Park, while continuing to provide access through the road from Puttalama to Mannar via the park. We believe that through taking corrective measures the Government can ensure that both issues are addressed in order to protect the rights of the expelled Northern Muslims and the natural heritage of the area.

We call upon the Government to ensure that steps are taken to maintain an access way through the park as it is vital for civilians in the area, especially the Northern Muslim population in the area who were forcibly expelled by the LTTE in 1990. The road which was a unpaved track used by civilians in the past, is proving crucial for the return of Northern Muslims, the majority of whom were displaced in Puttalam for over twenty years. The expulsion was a painful process where the entire population was instructed to leave the area by the LTTE with only Rs 200 and they are now attempting to return and rebuild. This road provides easy access from Puttalam to Mussali in Southern Mannar as the alternate route which goes via Medawachchiya takes double the time. On humanitarian groups we are appealing to the Government and the Wildlife Authorities to allow for reasonable usage of this road. We are not asking for a new highway to be built through the park.

We are greatly disturbed by reports in the media that the Wilpattu Park is being destroyed as a result of illegal felling, mining and the construction of new roads through the park. Wilpattu Park is a unique habitat for both fauna and flora, and needs to be protected. As people of the area we recognize its value. We call on the Government to take steps to ensure the further destruction of the park is immediately stopped. We feel that a balance has to be and can be found between the demands of the people of the area and nature through preventing actions that damage the park while providing reasonable access through one road through the park. Access roads through national parks are not unusual either in Sri Lanka or internationally and we fully recognize that measures will have to be taken to ensure that the wildlife and the forest are not impacted negatively by the movement of civilians.

After twenty years of displacement and living in suffering in welfare camps in Puttalam the Northern Muslims Community now have the opportunity to return. Access through this road will be one critical step to support this process.

Dated: July 27th 2010

Signatories:

Citizens’ Committee for Musali Muslims

Mannar Women for Human Rights and Democracy

Musali Graduate Association

Musali People’s Parliament

Musali Teachers’ Association

Order – Sri Lanka

Secretariat for Evicted Muslims

Trustees of Moor Street Grand Mosque, Mannar

http://ver2.muslimguardian.net/index.php?option=com_content&view=article&id=928:right-of-movement-of-expelled-northern-muslims-through-wilpattu-park&catid=103:lead-news&Itemid=480

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2010.10.30) 20 வருடங்கள் பூர்த்தி

இந்த வாசகம் சரித்திரமயமாகிறது.

30 வருட ஈழப்போரில் நடந்த ஒரே ஒரு இடப்பெயர்வு இதுதான் போல.

.

கிழக்கில், சிலாபத்தில், புத்தளத்தில், மன்னாரில் முஸ்லிம்களால் தங்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்பட்டதுண்டா?

முஸ்லிம்களால் சாய்ந்தமருதிலிருந்து தமிழர்கள் விரட்டப்பட்டு 43 வருடங்கள்.

முஸ்லிம்களால் வீரமுனையிலிருந்து தமிழர்கள் விரட்டப்பட்டு -- வருடங்கள்.

முஸ்லிம்களால் திரைய்க்கேணி இலிருந்து விரட்டப்பட்டு தமிழர்கள் விரட்டப்பட்டு -- வருடங்கள்.

............................................

..............................................

இன்றும் விரட்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பட்டியல் முடியாது.

யாழிலிருந்து இலட்சக்கணக்கில் துரத்தியடிகப்பட்ட தமிழர்களின் கதி?...............

வன்னியில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்கள் நிலை?......

ஒருபக்கம் - வட பகுதியில் இருந்து ஈரிரு தினங்களில் முஸ்லீங்கள் வெளியேற்றப்பட்டவை என்ற விடயமானது தமிழ் சமூகம் செய்த பாரிய பிழை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, அம்மம்க்கள் ஓரிரு தினங்களில் துரத்தப்பட்ட போது அனுபவித்த வேதனை, இன்று எம்மக்கள் அனுபவிக்கும்போதுதான் எம்மால் உணரக்கூடியதாக உள்ளது! முதலில் பிழைகளை பிழைகள் என்று கூறுவோம்! பிழை ஒரு போதும் சரியாகாது!

மறுபக்கம் - கிழக்கு மாகாணத்தில் அக்காலகட்டத்தில் சிங்கள அரசின் ஏவலில் செயற்பட்ட முஸ்லீம் குழுக்கள், அங்கிருந்த முஸ்லீம் காடைகளுடன் இணைத்து நடத்திய அழிப்புகள். மறக்கக்கூடியவையா??? மூதூர் தொடக்கம் அம்பாறை வரை உள்ள எத்தனை தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டன, எத்தனை பெண்கள் கற்பளிக்கப்பட்டு குதறப்பட்டார்கள்! அங்கு அக்காலத்தில் நடந்த இந்த மத சார்பு வன்முறைகள் சொல்லில் அடங்காதவை! இவைகள் எல்லாம் இந்த வடபகுதியில் இருந்து முஸ்லீம் மக்கள் துரத்தப்பட்ட செய்தியோடு மறக்கப்பட்டு விட்டனவோ??

இம்முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டு இத்தனை வருடங்களும் தென்பகுதிகளில் உள்ள முகாங்களில் காட்சி பொருட்களாகதான் வைக்கப்படிருந்தனர். இவ்வெளியேற்ற துர்பாக்கிய சம்பவத்தை இனமுரண்பாட்டை தோற்றுவிக்கவும், சர்வதேச அளவில் புலிகளும் இன சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தியை தொடர்ந்து சொல்லவுமே சிங்களம் விரும்பியதும், பயன்படுத்தியதும்! இதற்கு இன்று தமிழ் மக்களின் அழிவிற்கு துணை போகும் தமிழினத்தில் பிறந்த வடுக்களான சில ஜடங்களை போன்று, முஸ்லீம் இனத்தில் இருந்து சிங்களத்துடன் காலா காலமாக பதவிக்காக ஒட்டியவர்களும் துணை போனார்கள்!

தமிழ் பேசும் மக்களிடையே இரு பகுதியினரும் முரன்பாட்டை தோற்றுவிக்க காரணமாக இருந்தனர் என்பது மறக்க முடியாத உண்மையாகும்! இன்றும் இம்முரன்பாட்டை சீர் செய்ய முனைவதௌ விடுத்து, மென்மேலும் இரு பகுதியினருக்குமான முரன்பாடுகளை விரிவுபடுத்துவதிலேயே சிலர், குறிப்பாக முஸ்லீம் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று சொல்லொனா துயரங்களுக்குள் இருக்கும் தமிழ் மக்களை மென்மேலும் இந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் காட்டுமிராண்டித்தனமாக வஞ்சிப்பதிலும், பழி வாங்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

அன்று தொடக்கம் இன்றுவரை மாற்றுக்கருத்து, நடுநிலைமை எனும் பெயர்களில் முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தை ... புலிகளின் எதிர்ப்புக்கு .. மட்டுமே அரசியலாக்கி குரல் கொடுத்து வந்த ஜடங்கள், முஸ்லீம் குழுக்களினால் தமிழ் மக்களின் இழைக்கப்பட்ட இன்னல்கள், இன்று முஸ்லீம் அமைச்சர்களினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுப்பார்களா??? இல்லை" நாங்கள் என்றும் தமிழின எதிர்பாளர்கள்" என்பதனை மீண்டும் நிரூபிக்க போகிறார்களா?

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட அட.... எப்படி பலவந்தமாக பிளேட்டை திருப்பி போடினம் பார்த்தியளே?.

எங்களில இரண்டு மில்லியன் பேரை அடிச்சு விரட்டிய சர்வாதிகாரிக்கு மனு குடுக்க போகினமாம். நல்ல தமாசு.

இவை, காத்தன்குடியில எங்கட தமிழ் சனத்தில முன்னூறு பேரை கொன்று போட்டதை பற்றி விசாரிக்க மாட்டினம் பாருங்கோ!

அந்த நேரம் கிழக்கில இருந்து இவை விரட்டியடிச்ச இந்து கிறித்தவ தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் வடக்கு மாவட்டங்களுக்கு ஓடிவந்து தான் டென்சன் தொடங்கினது. புலி இல்லாட்டி இவை எல்லாரையும் வடக்கு சனம் அடிச்சு நொறுக்கியிருக்கும். தமிழ் பேசினாலும் அராபிய மதத்தால் தம்மை பிரித்து வைத்திருப்பவர்கள்.

மற்றும், இவை ஆயுதங்களுடன் மசூதிக்குள் முஸ்லிம் நாடு கோரி கூட்டம் போட எங்கட அமைச்சர் கருணா குழுவினர் தான் போய் இரு நூறு பேரை போட்டு தள்ளினவை.

அவருக்கு எதிராக விசாரணை செய்வினமே? மாட்டினம். பயம்!

சும்மா, எதோ புலிக்கு எதிராக திருகி விட்ட பொம்மைகள் மாதிரி தெரியுது!

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2010.10.30) 20 வருடங்கள் பூர்த்தி

இந்த வாசகம் சரித்திரமயமாகிறது.

30 வருட ஈழப்போரில் நடந்த ஒரே ஒரு இடப்பெயர்வு இதுதான் போல.

.

கிழக்கில், சிலாபத்தில், புத்தளத்தில், மன்னாரில் முஸ்லிம்களால் தங்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்பட்டதுண்டா?

முஸ்லிம்களால் சாய்ந்தமருதிலிருந்து தமிழர்கள் விரட்டப்பட்டு 43 வருடங்கள்.

முஸ்லிம்களால் வீரமுனையிலிருந்து தமிழர்கள் விரட்டப்பட்டு -- வருடங்கள்.

முஸ்லிம்களால் திரைய்க்கேணி இலிருந்து விரட்டப்பட்டு தமிழர்கள் விரட்டப்பட்டு -- வருடங்கள்.

............................................

..............................................

இன்றும் விரட்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பட்டியல் முடியாது.

யாழிலிருந்து இலட்சக்கணக்கில் துரத்தியடிகப்பட்ட தமிழர்களின் கதி?...............

வன்னியில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்கள் நிலை?......

இவை தான் உண்மை.

சுரேஷ் பிரேமச்சந்திரன் முதல் சில அரசியல்வாதிகள் தமிழர் விரட்டி அடிப்பு பற்றி கதைக்காமல் முதுகெலும்பற்ற, மன்னிப்பு கேட்ட்கும் ஈனத்தனமான அரசியல் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.

1956 இலிருந்து இலங்கையின் பல பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களுக்கு முதலில் நட்ட ஈடுகளையும், காணிகளையும் வழங்கட்டும். அதன் பின்னர் மிகுதியைப் பேசலாம்.

1990 ஒக்.30ஆம் திகதி வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் 19 வருடங்கள் கழிந்து விட்டன.

இயக்கங்களுக்கடையிலான மோதல்கள் முதலில் இது இனவிடுதலைக்கான போராட்டம் தானா என்ற சந்தேகத்தை விதைத்தது இஸ்லாமியத் தமிழர்களின் வெளியேற்றம் மதரீதியான ஒரு பிளவை தோற்றுவித்ததோடு மட்டுமில்லாமல் போராட்டம் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கானதில்லை மாறாக தமிழர்களின் ஒரு குறிப்பிட்ட ஆதிக்கத் தரப்பின் கருத்துநிலை சார்ந்தது. பயங்கரவாதம் சார்ந்தது என்ற ஆழமான கருத்தை சர்வதேசரீதியில் விதைத்தநாள். என்னும் சொல்லப்போனால் இனத்துக்கான விடுதலை என்ற கருவில் இருந்து விலத்தியநாள் இது என்றும் சொல்லலாம். பல இயக்கங்களும் அரசுடன் இணைவுப்போக்கான அரசியலை நாடிச்செல்லும் நிர்ப்பந்தம் உருவானது. மிகச் சுலபமாக ஒற்றை வார்த்தையில் அதை எல்லாம் துரோகம் என வரையறுத்தோம். மத அடிப்படையில் இஸ்லாமியத் தமிழர்கள் அரசுடன் இணைவுப்போக்கான அரசியலை நாடவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. ஒவ்வொரு பிளவுகளையும் சிங்களம் வாரி அணைத்துக்கொண்டது. சிங்களத்துக்கெதிராக ஆயுதப்போராட்டம் செய்த மிக முக்கிய புள்ளியான கருணாவைக் கூட பிரதேசவாரியான அடித்தளத்துடன் அணைத்துக்கொண்டது. சிங்களத்தின் நிதானமும் தூரநோக்கும் ஆத்திரங்களை அவசரமில்லாமல் கையாழும் விவோகமும் கூடவே இந்தியா பாகிஸ்த்தான் சீனா அரபுநாடுகள் மேற்கு நாடுகள் என அனைத்து முரண்பட்ட கோணங்களையும் ஒரு நேர்கோட்டில் கையாழும் ராஜதந்திரமும் உலகின் அவர்களின் புத்திசாலித்தனத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. நாங்கள் என்னும் அவனை இவனை துரோகி என்றும் மதவாரியான விரோதத்தையும் காவிக்கொண்டு திரிகின்றோம். தமிழரின் அரசியல் அத்திவாரத்தில் தமிழர் என்றால் அவர்களின் பண்பாடு கலாச்சாரம் என்றால் இவ்வளவுதான் என்றொரு உள்ளடக்கம் இருக்கின்றது. மிகக் குறுகிய ஒரு வட்டம். அதை வைத்து ஒரு கட்டடம் கட்டலாம் என்ற நினைப்பு. கடசியில் பிழைப்பை கெடுத்து சல்லிக் காசுக்கு பெறுமதி இல்லாமல் ஆக்கிவிட்டது. இவற்றை எல்லாம் நாங்கள் பெரிதுபடுத்தாமல் சிங்களவனுக்கு மேல்மாடியில் ஒண்டுமில்லை என்பதுதான் ஆரோக்கியம். பிள்ளையார் அம்மை அப்பனை சுற்றிவந்து ஞானப்பழத்தை பெற்றதுபோல் ஒரு தேங்காயை எடுத்து கோயிலை சுற்றி அங்கப்பிரதட்சணை செய்து தமிழீழம் என்று சொல்லி உடைத்துப்போட்டு காரியங்களை செய்ய எல்லாம் சித்தியாகும்.

இயக்கங்களுக்கடையிலான மோதல்கள் முதலில் இது இனவிடுதலைக்கான போராட்டம் தானா என்ற சந்தேகத்தை விதைத்தது இஸ்லாமியத் தமிழர்களின் வெளியேற்றம் மதரீதியான ஒரு பிளவை தோற்றுவித்ததோடு மட்டுமில்லாமல் போராட்டம் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கானதில்லை மாறாக தமிழர்களின் ஒரு குறிப்பிட்ட ஆதிக்கத் தரப்பின் கருத்துநிலை சார்ந்தது. பயங்கரவாதம் சார்ந்தது என்ற ஆழமான கருத்தை சர்வதேசரீதியில் விதைத்தநாள். என்னும் சொல்லப்போனால் இனத்துக்கான விடுதலை என்ற கருவில் இருந்து விலத்தியநாள் இது என்றும் சொல்லலாம். பல இயக்கங்களும் அரசுடன் இணைவுப்போக்கான அரசியலை நாடிச்செல்லும் நிர்ப்பந்தம் உருவானது. மிகச் சுலபமாக ஒற்றை வார்த்தையில் அதை எல்லாம் துரோகம் என வரையறுத்தோம். மத அடிப்படையில் இஸ்லாமியத் தமிழர்கள் அரசுடன் இணைவுப்போக்கான அரசியலை நாடவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. ஒவ்வொரு பிளவுகளையும் சிங்களம் வாரி அணைத்துக்கொண்டது. சிங்களத்துக்கெதிராக ஆயுதப்போராட்டம் செய்த மிக முக்கிய புள்ளியான கருணாவைக் கூட பிரதேசவாரியான அடித்தளத்துடன் அணைத்துக்கொண்டது. சிங்களத்தின் நிதானமும் தூரநோக்கும் ஆத்திரங்களை அவசரமில்லாமல் கையாழும் விவோகமும் கூடவே இந்தியா பாகிஸ்த்தான் சீனா அரபுநாடுகள் மேற்கு நாடுகள் என அனைத்து முரண்பட்ட கோணங்களையும் ஒரு நேர்கோட்டில் கையாழும் ராஜதந்திரமும் உலகின் அவர்களின் புத்திசாலித்தனத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. நாங்கள் என்னும் அவனை இவனை துரோகி என்றும் மதவாரியான விரோதத்தையும் காவிக்கொண்டு திரிகின்றோம். தமிழரின் அரசியல் அத்திவாரத்தில் தமிழர் என்றால் அவர்களின் பண்பாடு கலாச்சாரம் என்றால் இவ்வளவுதான் என்றொரு உள்ளடக்கம் இருக்கின்றது. மிகக் குறுகிய ஒரு வட்டம். அதை வைத்து ஒரு கட்டடம் கட்டலாம் என்ற நினைப்பு. கடசியில் பிழைப்பை கெடுத்து சல்லிக் காசுக்கு பெறுமதி இல்லாமல் ஆக்கிவிட்டது. இவற்றை எல்லாம் நாங்கள் பெரிதுபடுத்தாமல் சிங்களவனுக்கு மேல்மாடியில் ஒண்டுமில்லை என்பதுதான் ஆரோக்கியம். பிள்ளையார் அம்மை அப்பனை சுற்றிவந்து ஞானப்பழத்தை பெற்றதுபோல் ஒரு தேங்காயை எடுத்து கோயிலை சுற்றி அங்கப்பிரதட்சணை செய்து தமிழீழம் என்று சொல்லி உடைத்துப்போட்டு காரியங்களை செய்ய எல்லாம் சித்தியாகும்.

இரண்டு வியங்களை கருத்தில் கொள்ள தவறுகிறீர்கள்.... அதனால் விடயத்தையும் திசை திருப்புகிறீர்கள்...



  1. இயக்கங்களுக்கு இடையான முரண்பாடுகள் என்பது இயக்கங்களை பலதாக உருவாக்கியவர்களால் ( இந்திய புலநாய்வு பிரிவு) தூண்டப்பட்டும், பொறாமைகளை ஊட்டியும் ஏற்படுத்தினார்கள்... புலிகள் அதுக்கு தங்களை தயார் படுத்த வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளபட்டார்கள்...

  2. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் முஸ்லீம்கள் தங்களை எப்போது தமிழர்களாக இனம் காட்டியது கிடையாது... அவர்கள் தங்களை தனி ஒரு இனமாகவே காட்டிக்கொண்டார்கள்... அவர்களை வெளியேற்றியதுக்கு பின்னர்தான் இனப்பிரிவினை வந்ததாக சொல்வது வெறும் புரட்டு...

Edited by தயா

முஸ்லீம்களையும் தமிழர்கள் என்று அழைப்பது; அணைப்பது.. கிழக்கு மாகாணத்தமிழர்கள் முஸ்லீம்கள் கையில் அனுபவித்த, அனுபவிக்கும் துன்பங்களை எள்ளளவுக்கும் பொருட்படுத்தாத தன்மையே. இது அம்மக்களை மிகவும் அவமரியாதை செய்யும் செயலாகும்.

தமிழருள் முஸ்லீம்களும் அடங்குவர் என்பது இயற்கையானது அல்ல.

தயா சொல்வது போல், முஸ்லீம்கள் தம்மை எப்போதுமே தமிழராக அடையாளப் படுத்தியதே இல்லை.

சிங்க‌ள‌ இன‌வாத‌ம் எம்மையே குறிவைக்கிற‌து. (ஆங்கிலேய‌ர் கால‌த்தில் முஸ்லீம்க‌ளிற்கெதிரான‌ க‌ல‌வ‌ரம் நிக‌ழ்ந்த‌து. இது ஆங்கிலேய‌ரினது அடிவ‌ருடிகளான கிறிஸ்த‌வ‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளினால் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌து)

சிங்கள இனவாதத்தால் தமிழர் அடக்கப் படும் போது அங்கு கிடைக்கும் பயனை அனுபவிப்பதற்கான சாத்தியம் முஸ்லீம்களிற்கு நிறையவே இருக்கின்றது. இப்படி இருக்க அவர்கள் சிங்களவர்களிற்கெதிராக தமிழருடன் இணைந்து போராடுவார்கள் என்பவர்களின் அறிவியற் பிண்ணனி....???

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் தங்களை என்றுமே தமிழர்களாக அடையாளம் காண்வில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியே இருக்கிறது. அந்த அடிப்படையில், தமிழரல்லாதவர்களுக்காகவும் நாங்கள் வருத்தப்படும் மனிதப் பண்பைக் கொண்டிருக்கிறோம் என்பது இங்கு புலனாகிறது. :lol:

அப்படியாயின், முஸ்லிம் இடப்பெயர்வுக்கு முன்னர் போரினால் யாழை விட்டு வெளியேறிய சிங்களவர்களுக்கு ஏன் நாங்கள் இரங்கல்பா படிப்பதில்லை? :huh: அவர்களும் பாவம் தானே..! :)

  • தொடங்கியவர்

இலங்கை முஸ்லிம்கள் தமிழர்கள் என்ற இன அடையாளத்துக்குள் தம்மை சேர்க்க முயன்றதில்லை, தம்மை என்றுமே தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என்றே அழைக்க விரும்பினர். தாம் தனித்துவமான ஒரு இனமாகவே தம்மை இனங்காட்டினர். அவ்வாறு விரும்புவதும், தம்மை அடையாளப் படுத்துவதும் அவர்களுக்கான உரிமை. கனடாவில் வாழும் தமிழர்கள் கனடியர்கள் என்ற பொதுவான தேசிய அடையாளத்தினை விரும்பாது, கனடிய தமிழர்கள் என்று தம்மை அடையாளப் படுத்துவது போன்றது. ஆனால் சிங்கள அரசுகளின் இனவாத சிந்தனையும், அட்டூளியங்களும் தமிழர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் என்று பல பொதுவான அரசியல் பிரச்சனைகளை தோற்றுவித்து இருந்தது. அதனால்தான் அந்த பொதுவான பிரச்சனைகள் அகிம்சை முறையில் தீர்க்க முடியாது என்று கருதி தமிழ் மக்கள் ஆயுதங்களை தூக்கியபோது முஸ்லிம் இளைஞர்களில் பலரும் தமிழ் விடுதலை இயங்கங்களில் தம்மை இணைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக போராடி இருந்தனர்.

வடக்கு கிழக்கு என்பது, தமிழ் பேசும் மக்களின் தாயக பூமி. இந்த கருத்தியலை உடைப்பதற்காகத்தான் இந்திய உதவியுடன் (ஈ.பி,ஆர். எல் .எப் இந்திய படை காலத்தில் கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய இன்னல்கள் தான் முதல் விரிசல்) பிரேமதாசா அவர்கள் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் கடும் பிரச்சனைகளை தோற்றுவித்து இரு இனத்துக்கும் இடையில் மீள முடியாக விரிசலை ஏற்படுத்தினார். இந்தியச் சதியில் எப்படி மொக்குத்தனமாக மாட்டுப்பட்டு இயக்கங்களுக்கு இடையிலான சண்டையில் ஈடுபட்டோமோ, அவ்வாறுதான் சிங்களச் சதியில் தமிழர்களாகிய நாமும் முஸ்லிம்களும் மாட்டுப்பட்டு விலகி நிற்கின்றோம்.

இனி வரும் காலங்களிலாவது, எதிரியின் சதிகளை முன்னுணர்ந்து எம் வழிகளை நாமே தீர்மானித்து நடக்க கற்றுக் கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலங்களிலாவது, எதிரியின் சதிகளை முன்னுணர்ந்து எம் வழிகளை நாமே தீர்மானித்து நடக்க கற்றுக் கொள்வோம்.

அட போப்பா! நடக்கிற வேலையைச் சொல்லிறதை விட்டிட்டு நம்பாததைச் சொல்லிண்டு இருக்கிறியள் :)

வடக்கு கிழக்கு என்பது, தமிழ் பேசும் மக்களின் தாயக பூமி. இந்த கருத்தியலை உடைப்பதற்காகத்தான் இந்திய உதவியுடன் (ஈ.பி,ஆர். எல் .எப் இந்திய படை காலத்தில் கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய இன்னல்கள் தான் முதல் விரிசல்) பிரேமதாசா அவர்கள் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் கடும் பிரச்சனைகளை தோற்றுவித்து இரு இனத்துக்கும் இடையில் மீள முடியாக விரிசலை ஏற்படுத்தினார்.

கால காலமாகவே விரிசல் உண்டு. கிழக்கில் 1983 இற்கு முன்பே நடந்த முஸ்லிம் தமிழ் இனக்கலவரங்களை பற்றி சற்று பிரட்டி பாத்தால் அறிந்து கொள்ளலாம். நிறைய தமிழ் கிராமங்கள் முஸ்லிம்மயப்படுத்தப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

தவிர முஸ்லீம்களுக்கும் சிங்களவருக்கும் இடையில்கூட வன்முறைகள் வெடித்திருக்கின்றன. 1915 ஆம் ஆண்டில் என நினைக்கிறேன். ஆக, தமிழர்கள் மட்டும்தான் முஸ்லீம்களுடன் பிரச்சினைப்பட்டார்கள் என்று இல்லை.

1983 கலவரத்தில் எங்கள் பெருந்தெருவில் வசித்த முஸ்லிம்கள் சிங்களவருடன் சேர்ந்து தமிழர் சொத்துக்களை அழித்ததும் பறித்ததும் இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஒரு சில முஸ்லிம்கள் செய்த இச்செயல் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பொருந்தாது. அதுபோல ஒரு சில இயக்கங்களும் அதன் பிரதித் தலைவர்களும் செய்ததுகூட ஒட்டுமொத்தத் தமிழருக்கும் பொருந்தாது. :rolleyes:

இன்னும் சில வருடங்களில் இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களை விடப் பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள். அதற்காக அவர்கள் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமிக்கத் தேவையில்லை. புத்தளம், மன்னார், மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் மதமாற்றத்தை விரைவுபடுத்தினாலே போதுமானது. இஸ்லாம் மதத்தைத் தழுவுபவர்களுக்கு இறைவனின் ஆசியும் சமூக அந்தஸ்தும் கிடைக்கிறது. இந்த அகிம்சை வழியிலான இன ஆக்கிரமிப்பை அனுபவ ரீதியாகக் கண்டிருக்கிறேன்.

இலங்கையில் தமிழினம் நிலைத்து நிற்க வேண்டுமாயின், தமிழினத்தைப் பலவீனப் படுத்தும் மதத் திரைகளை அகற்ற முயற்சிக்க வேண்டும் அல்லது எமது சமுதாயத்தில் உள்ள பலவீனங்களை அகற்ற வேண்டும்

.

வடக்கு கிழக்கு என்பது, தமிழ் பேசும் மக்களின் தாயக பூமி. இந்த கருத்தியலை உடைப்பதற்காகத்தான் இந்திய உதவியுடன் (ஈ.பி,ஆர். எல் .எப் இந்திய படை காலத்தில் கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய இன்னல்கள் தான் முதல் விரிசல்) பிரேமதாசா அவர்கள் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் கடும் பிரச்சனைகளை தோற்றுவித்து இரு இனத்துக்கும் இடையில் மீள முடியாக விரிசலை ஏற்படுத்தினார்.

நிழலி, தமிழ் முஸ்லீம் கலவரங்கள் பிரேமதாச காலத்துக்கு முன்பே தொடங்கி விட்டது! 85களில் கிழக்கில் தமிழ் கிராமங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன, இந்த சூறையாடலை ஜெயவர்த்தனாவின் திட்டமிடலில் அப்போது சபாநாயகராக இருந்த எம்.எச்.எம் முகமட், மற்றும் சில முஸ்லீம் அமைச்சர்களும் இணைந்து நடத்தினர். அப்போ கிழக்கு அழிவிற்கு என்று தென் பகுதியில் இருந்து முஸ்லீம் காடைகள் லாறி லாறியாக ஏற்றி அனுப்பப்பட்டனர், மருதானை பகுதியில் இருந்தும் முஸ்லீம் காடைகள் சென்றதௌ கண்டவர்கள் பலர்!!

இந்தியச் சதியில் எப்படி மொக்குத்தனமாக மாட்டுப்பட்டு இயக்கங்களுக்கு இடையிலான சண்டையில் ஈடுபட்டோமோ, அவ்வாறுதான் சிங்களச் சதியில் தமிழர்களாகிய நாமும் முஸ்லிம்களும் மாட்டுப்பட்டு விலகி நிற்கின்றோம்.

ம்ம்ம்ம்.... நாயுக்காம் எங்கை அடி பட்டாலும் ஏதோ ஒரு காலைத்தானாம் துக்குமாம் ... அப்படி எமக்கும் இந்தியா என்ற காலதான்!! ... நிழலி, 80களுக்கு முன்னமே பிரபாகரன்.உமாமகேஸ்வரன் சண்டை பாண்டி பஜாருக்கு முன்னம் யாழில் பல கொலைகளுடன் தொடங்கீட்டுது!! அதுவும் இந்திய ...??????

இன்னும் சில வருடங்களில் இலங்கையில் முஸ்லிம்கள் தமிழர்களை விடப் பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள். அதற்காக அவர்கள் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமிக்கத் தேவையில்லை. புத்தளம், மன்னார், மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் மதமாற்றத்தை விரைவுபடுத்தினாலே போதுமானது. இஸ்லாம் மதத்தைத் தழுவுபவர்களுக்கு இறைவனின் ஆசியும் சமூக அந்தஸ்தும் கிடைக்கிறது. இந்த அகிம்சை வழியிலான இன ஆக்கிரமிப்பை அனுபவ ரீதியாகக் கண்டிருக்கிறேன்.

இலங்கையில் தமிழினம் நிலைத்து நிற்க வேண்டுமாயின், தமிழினத்தைப் பலவீனப் படுத்தும் மதத் திரைகளை அகற்ற முயற்சிக்க வேண்டும் அல்லது எமது சமுதாயத்தில் உள்ள பலவீனங்களை அகற்ற வேண்டும்

.

நீங்கள் கூறுவது சரியானது, ஆனால் இதனால் எமது சமுதாயத்தில் எவ்வகையான தாக்கம் ஏற்பட்டு உள்ளது, எத்தனை வீதமான மக்கள் மதம் மாறியுள்ளனர், எவ்வகையான மக்கள் குறி வைக்கப் படுகின்றன்ர் எமது இன அமைப்புக்கள் என்னெ செய்கின்றன, இதை தடுக்க என்ன வழி, இவ்வாறு மதம் மாறிய மக்களை மீண்டும் எம்மதம் திருப்ப என்ன வழி, உங்கள் அனுபவத்தை ஒருக்கால் விரிவு படுத்த முடியுமா, என்னைப் பொறுத்த வரையில் சிங்கள்வனை விட இது தான் எமக்கு பெரிய பிரச்சனை, இது நாம் தீர்க்கமாக ஆராய வேண்டிய ஒன்று

ம்ம்ம்ம்.... நாயுக்காம் எங்கை அடி பட்டாலும் ஏதோ ஒரு காலைத்தானாம் துக்குமாம் ... அப்படி எமக்கும் இந்தியா என்ற காலதான்!! ... நிழலி, 80களுக்கு முன்னமே பிரபாகரன்.உமாமகேஸ்வரன் சண்டை பாண்டி பஜாருக்கு முன்னம் யாழில் பல கொலைகளுடன் தொடங்கீட்டுது!! அதுவும் இந்திய ...??????

உது எந்தப்படத்திலை வந்த கட்டம்...?? இல்லை நண்பர் யாராவது போண் அடிச்சு சொன்ன விண்ணாணமோ...??

லெப் சங்கர் வீரச்சாவடையும் போது எங்கட தலைவர் உமாஅகேஸ்வரனுடனான பாண்டிபஜர் சம்பவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார்... அப்ப ஆண்டு 1982 ... தலைவர் பதவியில் இருந்த தங்கத்துரையண்ணைக்காக சிறிசபாரத்தினம் பதிவியேற்ற காலம் அது...

இதேகாலப்பகுதியி போராளிகள் இந்திய அரசியல் வாதிகளுடன் பேச்சில் ஈடுபட்ட காலம், அதனால் தான் தலைவர் சிறையில் அடைக்கப்படாமல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார்...!

இதைதான் சொல்வது திருப்பதிக்கே லட்டா என்று.

சரித்திரம் தெரியாவிட்டால் ஜ்யரின் பதிவுகளை பார்க்கவும் . 99 % உண்மையான பதிவு அது

.அந்த சம்பவத்தில் இருந்த இருவரிடம் என்ன நடந்தது என நானே நேரில் கேட்டேன்.81 இல நடந்தது.ஜ்யர் எழுதாத இன்னுமொன்றை எழுதுகின்றேன் .அமிர்தலிங்கம் சந்திக்க வரச் சொல்லி உமா,சீசர் சகிதம் சாந்தி தியேட்டருக்கு முன்னால் உள்ள அண்டெர்கிரவுண்ட் பாதையால் போக உமா சின்ன ஒரு டவுட்டில் சீசரை மாத்திரம் அனுப்பிவிட்டு சுத்திப் போனார்.அதனால் அன்று தப்பினார் அதனால் தான் அரைவாசி அழிவு தமிழனுக்கு இன்று.

இதைதான் சொல்வது திருப்பதிக்கே லட்டா என்று.

சரித்திரம் தெரியாவிட்டால் ஜ்யரின் பதிவுகளை பார்க்கவும் . 99 % உண்மையான பதிவு அது

.அந்த சம்பவத்தில் இருந்த இருவரிடம் என்ன நடந்தது என நானே நேரில் கேட்டேன்.81 இல நடந்தது.ஜ்யர் எழுதாத இன்னுமொன்றை எழுதுகின்றேன் .அமிர்தலிங்கம் சந்திக்க வரச் சொல்லி உமா,சீசர் சகிதம் சாந்தி தியேட்டருக்கு முன்னால் உள்ள அண்டெர்கிரவுண்ட் பாதையால் போக உமா சின்ன ஒரு டவுட்டில் சீசரை மாத்திரம் அனுப்பிவிட்டு சுத்திப் போனார்.அதனால் அன்று தப்பினார் அதனால் தான் அரைவாசி அழிவு தமிழனுக்கு இன்று.

உங்கட ஐயரை விட எல்லாவித்தத்திலையும் நம்பிக்கையான எங்கட தலைவர் சொன்னது... சங்கர் அண்ணை வீரச்சாவடையும் போது தான் உமாமகேஸ்வர சம்பவத்தால் சிறைவைக்க பட்டு இருந்தேன் எண்று...

சங்கர் அண்ணை வீரச்சாவடைந்தது 1982 ம் ஆண்டு கார்த்திகை 27...

இல்லை எண்டு உங்களாலை நிரூபிக்க முடியுமா...?? நான் சரி எண்று என்னால் நிரூபிக்க முடியும்... விடுதலை தீப்பொறி எனும் ஒளிப்பேளையில் இருக்கிறது....

சாந்தி தியட்டர் இருப்பது அண்ணா சாலையில் , ஆனால் துப்பாக்கி சூடு நடந்தது பாண்டி பஜாரில்... பாண்டி பஜார் கடற்கரையில் இருக்கிறது... இரண்டுக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்கும் எண்டு அண்ணளவாக தன்னும் தெரியுமோ...

அண்ணோய் நீர் எவ்வளவு பெரிய சுத்தல் மன்னன் எண்டு இப்ப விளங்குது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டி பஜார் சம்பவம் என்னால் மறக்கப்பட முடியாதது. இந்திரா அம்மையாருக்குப் பெரும் அதிர்ச்சியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்திய சம்பவம் அது. அச்சமயத்தில் டில்லி செங்கோட்டையில் அவருடன் அளவளாவிக் கொண்டிருந்த என்னால் இதை அவதானிக்க முடிந்தது..! :rolleyes::D:lol:

1.இயக்கங்களுக்கு இடையான முரண்பாடுகள் என்பது இயக்கங்களை பலதாக உருவாக்கியவர்களால் ( இந்திய புலநாய்வு பிரிவு) தூண்டப்பட்டும், பொறாமைகளை ஊட்டியும் ஏற்படுத்தினார்கள்... புலிகள் அதுக்கு தங்களை தயார் படுத்த வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளபட்டார்கள்...

எங்களுக்குள் நாங்கள் மோதிக்கொண்டால் அது சிங்களத்துக்கே சாதகமானது என்பதை எந்த ஒரு இயக்கத்தலமையும் உணர்ந்ததில்லையா? இந்தியப் புலனாய்வாளர்கள் பொறாமையை ஊட்டுவதற்கு இயக்கத்தலமைகள் என்ன பவாக்களா? சொந்தப் புத்தி எங்கே போனது? இவ்வாறு தமிழர்கள் அல்லாத ஒரு முன்றாம் நபர் கேள்வி கேட்கலாம் ஆனால் எம்மால் அதை கேட்கமுடியாது. எமக்கந்த அருகதை இல்லை. நினைத்தபடி எம்மை அடுத்தவன் ஆட்டிவைக்குமளவுக்கு எம்மிடம் பலவீனம் தொன்றுதொட்டு இருக்கின்றது. பிடிவாதம் விட்டுக்கொடுக்கமுடியாத தனிமனிதக் குணம் என மிக இறுக்கமான நிலை என்பது அனைத்து இயக்கத்தலைமைகளினதும் மற்றும் அனைவரினதும் சொத்து தவிர அது புலிகளினதோ அல்லது தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட குணாதிசயம் இல்லை. என்னால் சுட்டிக்காட்டப்படுவது இயக்கமேதல்களையும் அதன் விழைவுகளையுமே.

2.இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் முஸ்லீம்கள் தங்களை எப்போது தமிழர்களாக இனம் காட்டியது கிடையாது... அவர்கள் தங்களை தனி ஒரு இனமாகவே காட்டிக்கொண்டார்கள்... அவர்களை வெளியேற்றியதுக்கு பின்னர்தான் இனப்பிரிவினை வந்ததாக சொல்வது வெறும் புரட்டு...

இனத்துக்கான விடுதலைப்போராட்டத்தில் மதப்பிளவுகள் என்பது இனவிடுதலையை கேள்விக்குறியாக்கியது என்பதை மறைக்கமுடியாது. இன அடிப்படையில் பிரிவினையா அல்லது மத அடிப்படையில் பிரிவினையா என்ற அடிப்படையை தோற்றுவித்தது. இந்துக்களுக்கு ஒரு தமிழீழம் இஸ்லாமியர்களுக்கு ஒரு தமிழீழம் குறித்து சிந்திக்க முடியாது. பிறகு மலையகத் தமிழர்களுக்கு ஒரு குட்டித் தமிழீழம் யாழ்பாணத்துக்குள் இருக்கும் புரட்டஸ்தாந்துக்களுக்கு ஒரு சுக்குட்டி தமிழீழம் என பட்டியல் நீண்டு செல்லும்.

சுந்திரம் கிடைத்த பின்பு அல்ல அதற்கு முன்னமும் இந்துக்கள் கிருத்துவர்கள் முஸ்லீம்கள் என அளுக்கு ஆள் எட்டாம் பொருத்தம் தான். தமிழினம் என்பது முஸ்லீம் கிருத்துவர் இந்துக்கள் என்ற மும்மதங்களையும் பின்பற்றும் மக்களும் இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் அடக்கியதுதான். இஸ்லாமியர்கள் இனத்தை விட மதத்துக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுத்தார்கள் என்பதும் உண்மை ஏனைய இந்து கிருத்துவர்கள் சாதி மதம் பிரதேசவாதம் என்பதற்கு பின்பே இனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதும் உண்மை. இதுதான் தொன்று தொட்டு தொடர்ந்த நிலை. சிங்களம் இனரீதியாக ஒடுக்கியபோதே இனம் என்ற முக்கியத்துவம் முன்னுக்கு வர முற்பட்டது. ஆரம்ப காலங்களில் பல்லாயிரம் முஸ்லீம் போராளிகளும் இனவிடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொண்டதும் இந்த அடிப்படையில் தான்.

இணையவன் குறிப்பிட்டது போல் என்னும் சில வருடங்களில் இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மையான மக்கள் தமிழ்பேசும் முஸ்லீம்கள் என்பது தவிர்க்கமுடியாதது. அதன் பின் மூன்றாவது சிறுபான்மையாக தமிழ்பேசும் இந்துக்களும் கிருத்துவர்களும் இருப்பார்கள். பெரும்பான்மை இந்துக்களை கொண்ட சிங்களத்துக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்பேசும் முஸ்லீம்கள் எவ்வாறு முரண்பட்டார்களோ அவ்வாறானதொரு நிலை எதிர்வரும் காலங்களில் பெரும்பான்மை இஸ்லாமியத்தமிழர்கள் முன்னெடுக்கப்போகும் போராட்டத்தில் இந்துக்களுக்கு வரலாம்.

இன அடிப்படையில் சிங்களம் தமிழனை அம்மணமாக்கி விட்டிருப்பினும் தமிழனுக்கு மதம் என்ற சட்டை நிர்வாணத்தை மறைப்பதாகவே அவன் எண்ணுகின்றான். இதற்கு தீர்வே இல்லை. இப்படியே அழியவேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.