Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவருக்கு அக வணக்கம் செலுத்துவது பற்றி….

Featured Replies

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எண்டு விரும்பினால், ''நேர்டோ'' போன்ற சிங்களவரின் கண்காணிப்பின் கீழியங்கும் எலும்பு பொறுக்கி கூட்டத்தின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவது சிறந்த தொண்டாகும்..

ஆக மொத்தத்தில் யார்ஒருவனும் போரினால் பாதிக்கப்பட்டவனுக்கு உதவக்கூடாது. ந க அரசுக்கும் பேரவைகளுக்கும் ஆமாம்சாமி போட்டுக்கொண்டிருக்கவேண்டும் இதற்குப்பெயர்தான் தேசியம்.

சிங்களவனுக்கு கீழ் அடிமையாகவிருக்கும் மக்களுக்கு சிங்களவனை எதிர்த்து ஒரு துரும்பைத் தன்னிலும் உதவ முடியாது என்பது யதார்த்தம் சிங்களவனூடாக உதவ முற்பட்டால் அவர்கள் எலும்பை பொறுக்கும் கூட்டம். சிங்களவரின் கண்காணிப்பில் இருந்து விலத்தி போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டங்கள் நா கா அரசுகளிடமும் பேரவைகளிடமும் இருக்கின்றதோ

தேசிய உணர்ச்சி பீறிட்டுப்பாய்கின்றது. சல்லிக் காசுக்குப் பிரயோசனமில்லாத உணர்ச்சியிது. இதை வைத்து நாலுபேருக்கு துரோகிப்பட்டம் கட்டவும் ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லாமல் மக்களை குழப்பியடிக்கவுமே முடியும்.

மக்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று தான்தோன்றித்தனமான அதிகார அரசியல் அடிப்படையிலான அடயாளத்தேடல் தேசியவாதிகள் மக்களால் நிரகரிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. சிங்களத்தை அனுசரித்தேனும் மக்களுடன் எவன் இணைந்திருக்கின்றானோ அவனே மேலானவன். மண்ணையும் மக்களையும் தெடர்பையும் துண்டித்து மக்களுக்கான தேசியம் விடுதலைபேசும் புலத்துப் போலிகளால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் எக்காலத்திலும் இல்லை. இந்தத் தலமுறை முடியும் வரை கூட்டங்களும் அமர்வுகளும் அரங்கேற்றங்களும் நடத்தி அடயாளம் தேடிக்கொண்டிருங்கள்.

எலும்பு பொறுக்கி துரோகி கேடுகெட்ட கூட்டம் என்று உணர்சிவசப்படுவதற்குப்பெயர் தமிழ்த்தேசியம் என்றால் சிங்களவனை அனுசரித்து அதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தேசியத்தை விட மேலான ஒன்றுதான்.

  • Replies 71
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மணி மகுடம் வைத்தாற் போல என்பார்கள் அது இது தான்.

"

தண்ணியை கலக்கி குட்டையாக்கிறதை தயவு செய்து விட்டு விடுங்கள்...

போர்க்குற்ற விசாரணைகள் மும்முரமாகும் இந்த வேளையில் இதைப்பற்றிய விளக்கங்களோ தரவுகளை பற்றி பேசவோ எனக்கு எந்தவிதமான உடன்பாடுகளும் இல்லை...

தலைவர் இருக்கிறாரோ ? அது அவரவர் பிரச்சினை.. இண்று இருக்கும் பொதுவான பிரச்சினை படுகொலைகள் இனவளிப்புக்கள்... மக்களின் மீள் கட்டுமானம்... இதுக்காக உங்களாலை ஒரு துரும்பை நகர்த்த முடிந்தாலும் மகிழ்ச்சி...

This post has been edited by தயா: Yesterday, 09:42 PM "

நாமும் திருந்த்த போவதில்லை ஆளுக்கொரு கட்சி அதற்கு ஒரு ரசிகர் மன்றம் இப்படி இருப்போம்

மேலும் மேலும் நசுக்குவான்,

அதை பற்றி பேசுவதை விட்டு போட்டு பப்ளிசிட்டி தேடுவதுக்கு

என்னத்தை விக்கலாம் என்று ஆளாளுக்கு மூளையை போட்டு பிறாண்டுவம்.

"மா சே துங் சொன்னார் மீனை குடுக்காதே தூண்டிலை கொடு" என்று.

காலத்துக்கு தேவையானதை விட்டு போட்டு தேவை அற்ற விடயங்களில் வாழ்க்கை போகுது.

நடந்த கொலைகளுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் அவன் மேலும் மேலும் அந்த மக்களை அழிப்பான்,

நிலங்களை அபகரிப்பான் அந்த மக்களுக்கு இப்ப வேண்டியது உங்களது வாய்க்கரிசி அல்ல

உரிமை. அது இல்லாவிட்டால் இலங்கையில் தமிழினம் இருந்த்தது அதன் அந்திம காலத்தில் இப்படித்தான்

நாங்கள் புலத்தில் இருந்தது 'ரொகர்' விட்டனாங்கள் ஆனா இப்ப அழிஞ்சு போச்சு அதுக்கு இவர் காரணம் அவர் காரணம் என்று இணையத்தில் கட்டுரை போட்டு சந்த்தோசப்படலாம்.

ஆருக்கு வேணுமெண்டாலும் அகவணக்கம் செலுத்தலாம் அது டக்லஸ் அல்லது வரதரோ அவரவர் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: வன்னி மக்களின் மறுவாழ்வுக்கு புலம்பெயர் தமிழர் உதவ வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சுகன், டாம், சுமங்களா, காந்திக்குப் பாடமெடுத்தவர் எல்லாம் கேட்பதில் இரண்டு சூட்சுமங்கள் ஒளிந்திருக்கின்றன.

தேசியவாதிகள் கைவிரித்து விட்டதனால் இனிச் சிங்களவனுடன் சேர்ந்து வேலை செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்பது. இப்படிச் சொல்வதன் மூலம் அவர்கள் இரண்டு விடயங்களை நாசுக்காகச் சொல்கின்றனர். ஒன்று, சிங்களம் புரிந்த போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளை தடுப்பது அல்லது பலமிழக்கச் செய்வது. இரண்டாவது தமிழர்கள் இனிமேல் சுயாற்சி, அரசியல் தீர்வு, சுதந்திரம் என்று பேசாமல் சிங்களவனுடன் அண்டி வாழப் பழகுவது.

சிங்களவனுடன் கூடிக் குலாவுவது என்று முடிவெடுத்த பின், அவனுக்கெதிராக போர்க்குற்ற விசாரணை நடத்துவது எப்படி? அல்லது தமிழருக்குச் சுயாற்சியோ அல்லது அரசியல் தீர்வோ தருமாறு கேட்பது எப்படி??

கூடியிருந்து கேட்கலாமென்றால், புலிகள் போராடிய காலம் தொட்டே சிங்களவனிடம் கூடிக் குலாவி வரும் இந்தப் பச்சோந்திகள் அவற்றைப் பெற்றிருக்கலாமே??

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: வசி,

சரியாகச் சொன்னீர்கள். சிலருக்கு என்ன எழுதுவதென்றே தெரிவதில்லை. மாவீரர் நாள் வருகிறது, ஆகவே தலைவருக்கும் கொண்டாடுவோம். சரி, தலைவர் இரந்துவிட்டார் (சபேசன் போன்றவர்களின் திருப்திக்காக மட்டும்) என்றே வைத்துக்கொள்வோம், இனி என்ன செய்வதாக உத்தேசம்?? வருடா வருடம் கொண்டாடி விட்டு கொட்டாவி விடுவோமா??

எம்மைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது?? நாம் ஏதாவது செய்யலாமா என்கிற சிந்தனை கூட இல்லையென்றால் எப்படி?? அவனவன் இந்தச் சந்தர்ப்பத்தில் போர்க்குற்ற விசாரனை, மனித குலத்திற்கெதிரான குற்றங்களுக்கான விசாரணை, இனவழிப்பு சாட்சியங்களைத் தேடுதல் என்று மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்க, சிலர் பழையபடி தூசி தட்டிக் கொண்டு எழுந்து வந்திருக்கிறார்கள்?!

இப்போது செய்ய வேண்டியதை மட்டும் செய்யுங்கள். பின்னர் அவரவர் தங்களது ஆசா பாசங்களை பற்றி யோசிக்கலாம்.

நீங்கள் தவறவிடும் ஒவ்வொரு சந்தர்ப்பமும், தட்டிக்கழிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் சிங்களவன் தான் செய்த இனவழிப்பை மறைக்கவும், இன்னுமின்னும் தொடர்ந்து குடியேற்றங்கள், தமிழர் தாயகச் சிதைப்பு என்று தொடரவும் வழிவகுத்துக்கொண்டிருக்கிறது. உங்களது ஆசைகளால் சரியான பாதையில் பயணிக்கும் மற்றவர்களையும் சங்கடப்படுத்த வேண்டாம்.

வன்னி மக்களின் மறுவாழ்வுக்கு புலம்பெயர் தமிழர் உதவ வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சுகன், டாம், சுமங்களா, காந்திக்குப் பாடமெடுத்தவர் எல்லாம் கேட்பதில் இரண்டு சூட்சுமங்கள் ஒளிந்திருக்கின்றன.

தேசியவாதிகள் கைவிரித்து விட்டதனால் இனிச் சிங்களவனுடன் சேர்ந்து வேலை செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்பது. இப்படிச் சொல்வதன் மூலம் அவர்கள் இரண்டு விடயங்களை நாசுக்காகச் சொல்கின்றனர். ஒன்று, சிங்களம் புரிந்த போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளை தடுப்பது அல்லது பலமிழக்கச் செய்வது. இரண்டாவது தமிழர்கள் இனிமேல் சுயாற்சி, அரசியல் தீர்வு, சுதந்திரம் என்று பேசாமல் சிங்களவனுடன் அண்டி வாழப் பழகுவது.

சிங்களவனுடன் கூடிக் குலாவுவது என்று முடிவெடுத்த பின், அவனுக்கெதிராக போர்க்குற்ற விசாரணை நடத்துவது எப்படி? அல்லது தமிழருக்குச் சுயாற்சியோ அல்லது அரசியல் தீர்வோ தருமாறு கேட்பது எப்படி??

கூடியிருந்து கேட்கலாமென்றால், புலிகள் போராடிய காலம் தொட்டே சிங்களவனிடம் கூடிக் குலாவி வரும் இந்தப் பச்சோந்திகள் அவற்றைப் பெற்றிருக்கலாமே??

ஆரம்பத்தில் புறநிலை அரசு நாடுகடந்த அரசு போன்றவற்றுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக மனித உரிமைகளுக்கான ஒரு அமைப்பை நிறுவுங்கள் புனர்வாழ்வுக்கான ஒரு அமைப்பை நிறுவுங்கள் அதுவே பிற்காலத்தில் நாடுகடந்த அரசு அமைப்பாக வளர முடியும் என்று தொடர்ந்து கருத்தை முன்வைத்து வந்துள்ளேன். ஒரு போர்குற்ற விசாரணைக்கு ஏதுவானது இவ்வாறானதொரு அமைப்பே. இவ்வாறானதொரு அமைப்பை நிறுவியிருந்தால் அதன்கீழ் மக்கள் தங்களால் முடிந்தளவுக்கு மனித உரிமை மீறலுக்கு எதிராக கவனயீர்ப்பைச் செய்திருப்பார்கள். சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிரக விசாரணைகளை நடத்தும்படி மக்கள் புனர்வாழ்வு குறித்து மக்கள் தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் இங்கு நடந்ததோ அவைகள் அரசு அமைத்தல் அமர்வு நடத்தல் அதில் நான்குபேர் சர்வதேச சட்டங்களை வளைத்துப் புடுங்கிறம் என்ற படங்காட்டல்கள் போதக் குறைக்கு இந்தியா நாடுகடந்த அரசுக்கு பயப்படுகின்றது இலங்கை பயப்படுகின்றது என்ற பழைய பாணிப் புலுடாக்கள் வேறு. மக்களை செயற்திறனற்றவர்களாக்கியது இந்தச் சிந்தனை முறைதான். இதுவே சிங்கள அரசுக்கு சாதகமானது. இதுவே மனித உரிமை மீறல்களில் இருந்து சிங்கள அரசை காப்பாற்றும் உள்ளடக்கமானது.

இவ்வாறு நடப்பதற்குத் தான் அதிகமான சந்தர்ப்பங்கள் உள்ளது. எமது முன்னெடுப்புகள் அரசு என்ற புள்ளியில் தொடங்குவதைக்காட்டிலும் மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்குமம் ஒரு அமைப்பாக வலுவாக இயங்கி அதனூடாகவே அரசு என்ற புள்ளியை நோக்கி நகரவேண்டும். இதுவே இந்த புதிய போட்டிநிலை உலக நடைமுறைக்கு ஊடாக எமது போராட்டத்தை தொடரச்செய்வதற்கான வழியாக அமையும்.

எமது தனியரசுக் கனவு கலையாமல் அப்படியே இருக்கின்றது. அது குற்றமும் இல்லை. ஆனால் அரசு என்பது மக்களால் இயக்கப்படும் ஒன்று. இதை அறிந்தே மக்களை முடமாக்கியுள்ளது சிங்கள அரசு. தாயகத்தில் மக்கள் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே ஒரு அரசை இயக்கும் சிந்தனைக்கு மக்கள் நகர்வார்கள். நாம் மக்களை இயல்பு நிலைக்கு திருப்புவதற்கு இப்போது குரல்கொடுப்பது இன்றி அமையாதது. எமது மக்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கண்காணிப்பில் பாதுகாப்பாக இருப்பதற்கு போராட வேண்டும். அப்போது தான் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்புவார்கள். சிங்களத்தின் சிறைக்குள் இருக்கும் வரை மக்கள் இயல்பாக வாழப்போவதில்லை. எமது கனவும் சாத்தியப்படப்போவதில்லை. எனவே படிப்படியாக நகர்ந்தே அரசு என்ற புள்ளியை எட்ட வேண்டிய அவசியம் இருக்கின்றது. இல்லாத பட்சத்தில் தாயக மக்களே இந்த புறநிலை அரசை எதிர்க்கும் அளவுக்கு நிலைமை சிங்களத்தால் மாற்றப்படும்.

இலங்கைத் தீவில் புலிகள் அரசு என்ற அடிப்படையில் அரசு மிகப்பெரும் பயங்கரவாதம் புரிகின்றது. இது உலகத்திற்கு நன்கு தெரிந்தும் போட்டி நிலைச் சதிகளில் இந்த பிரச்சனை முடங்கிப்போகின்றது. அரசின் பயங்கரவாதச் செயலை துணிந்து பேசுவது ஒன்றே தொடர்ச்சியாகும். ஒன்றுபட்டு பேசுவது ஒன்றே தொடர்ச்சியாகும். பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு விட்டதாக மிகப்பெரும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப்போராடாமல் அரசு ஒன்றை அமைப்பதில் குறியாய் இருந்தால் புலிகளின் நடவடிக்கை இன்னமும் உள்ளது என்று அரச பயங்கரவாதம் தொடரவும் நியாயப்படுத்தப்படவும் வழிவகுக்கும்.

சிறுபான்மை இனம் என்ற சொல்லையே அகராதியில் இருந்து நீக்குவதாக இலங்கை அரசு கூறுகின்றது. எல்லோரும் இலங்கையர் என்ற அடிப்படையில் தமிழர்களின் இடங்களில் சிங்களவர்களும் சிங்களவர்களின் இடங்களில் தமிழர்களுமாக கலப்படம் செய்யப்படுகின்றது. தமிழர்களுக்கான தனித்துவமே அனைத்துக் கூறுகளிலும் சிதைக்கப்படுகின்றது. பிரிவினைக்கோ தனியாக சுய அதிகாரத்துடன் வாழும் தன்மையோ அடிப்படையில் நிர்மூலமாக்கப்படுகின்றது. இந்த நிலையில் புறநிலை அரசு என்பது நாளை தாயகத்தில் ஒரு அரசு அமைப்பதற்கான சநந்தர்பத்தை இழந்து விட அதிக சந்தர்ப்பங்கள் உள்ளது. தூரநோக்கில் நிறைய சிக்கல்கள் இருக்கவே செய்கின்றது. தற்போது நாம் ஒரு அமைப்பாக ஒன்றாகி எமது மக்களின் பாதுகாப்பு உலக நிறுவனங்களின் தலையீடு கண்காணிப்பு அதனூடாக மக்கள் இயல்பாக வாழ வழி செய்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெறவேண்டும்.

நீங்கள் இணைத்த இணைப்பில் முன்பு எழுதிய கருத்து

http://www.yarl.com/forum3/index.php?showtopic=60379&st=0

நிறையவே சம்மந்தம் இருக்கின்றது. நாடுகடந்த அரசு முனைப்பு சிங்களத்திற்கு அச்சுறுத்தலாகவே அமையும் தவிர தமிழர்களுக்கு நன்மையாக அமையாது. இந்த முனைப்பை முறியடிக்க சிங்கள அரசு மாற்று நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும். நாடுகடந்த அரசை தாயகத்தில் வருங்காலத்தில் நிறுவுவதை தடுப்பதற்கு அனைத்து வழிமுறைகளையும் சிங்களம் கையாழும். இதில் பிரதானமானது சிங்களக் குடியேற்றங்களும் மக்கள் தனித்துவமற்று கலந்து வாழும் சூழலை ஏற்படுத்துவதுமாக இருக்கும். இதனால் நெருக்கடிக்கு உள்ளாகப்போவது அவலப்பட்ட மக்களே. தாயகத்தில் ஏஞ்சியுள்ள தமிழ்த்தேசிய உணர்வு துடைத்தளிக்கப்படும். இந்த நாடுகடந்த அரசு முயற்சியானது தாயக மக்களின் விருப்பு வெறுப்பு தற்போதைய அவலநிலை அதிலிருந்து மீளும் முயற்சி அனைத்தையும் நிராகரித்து புலம்பெயர் வழிநடத்துனர்களால் தான்தோன்றித்தனமாக ஏற்படுத்தப்படுவதாகும்.

முள்ளிவாய்க்காலில் தமிழரின் தனியரசு இலட்சியம் உடைத்தெறியப்பட்டது. அதே மூச்சோடு புலத்தில் நாடுகடந்த அரசு முயற்ச்சி தொடங்கப்பட்டது. இங்கே அவலப்பட்ட மக்கள் குறித்தும் அவர்களது மறுவாழ்வு குறித்தும் எதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லை மாறாக தனியரசு குறித்த கனவும் கருத்தாதிக்கமுமே கோலோச்சுகின்றது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். மக்கள் மீண்டெழுந்தால் தான் எதுவும் சாத்தியப்படும். இவ்வாறான சிந்தனை அடியோடு நிராகரிக்கப்பட்டது. புலத்தில் இருந்து எவனும் தாயகம் சென்று அமைக்கப்படும் அரசில் பங்கு பெறப்போவதில்லை. இன்நிலையில் தாயக மக்களே முயச்சிகளின் பிரதான சக்தியாக இருக்கவும் அதற்கு துணையாகவுமே புலம்பெயர் மக்கள் இருக்கவும் முடியும். இங்கு நடப்பதோ தலைகீழானது.

நாடுகடந்த அரசு முயற்ச்சியை புலம்பெயர் மக்கள் முனைப்பது தனியே புலம்பெயர் தமிழ்மக்களின் முடிவல்ல மாறாக இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முனையும் இந்திய மேற்குலகு போன்ற நாடுகளின் மறைமுக உந்துதலும் இதற்குப் பின்னணியில் இருக்கவே அதிகமான சந்தர்ப்பம் இருக்கின்றது. எவ்வாறு தமிழர்களின் தனிநாட்டுக்கு கோரிக்கைக்கும் அது சார்ந்த ஆயுதப்போராட்டத்திற்கும் ஆரம்பத்தில் ஆதரவு வழங்கி வளர்த்த இந்தியா மேற்குலகு போன்ற நாடுகள் பின்னர் அதை கட்டுப்படுத்துவது போல் இலங்கை அரசுடன் உறவாடியதோ அதே பாணியிலான நாடுகடந்த அரசும் அதை இலங்கைக்காக தாடுப்பதற்குமாக தொடர்ச்சியான இலங்கைக்குள் மூக்கு நுழைக்கும் நடவடிக்கையே.

எமது முனைப்புகளே எமக்கு எமனாக இனியும் அமையக் கூடாது. எமது முனைப்புகளை இந்தியாவோ அல்லது மேற்குலகமோ தமது சுய லாபங்களுக்கும் போட்டிகளுக்கும் பயன்படுத்தக் அனுமதிக்கக் கூடாத. தற்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான மக்களின் ஆதரவோடு கூடிய மனித உரிமைகளுக்கான தமிழர் அமைப்பே தவிர நாடுகடந்த அரசு இல்லை. தனியே அரசுக்கனவும் கருத்தாதிக்கமும் எம்மை அழிக்கும். எம்மை அழிப்பதற்கு எதிரிகளுக்கு அதிக சந்தர்ப்பத்தை கொடுக்கும். எம்மை அழிப்பது குறித்த பெரும் திட்டமிடல்களை உருவாக்கும். அழிவின் விழிம்பில் நிற்கும் நாம் ஆபத்துடன் விழையாட முடியாது. எஞ்சிய மக்களை ஸ்திரப்படுத்துவதன் ஊடகவே எமது கருத்தையும் கனவையும் நோக்கி நகரமுடியும். நாம் அவலப்படும் மக்களுக்காக அழிக்ப்படும் மக்களுக்காக உலகில் குரல்கொடுக்கும் மனித உரிமை அமைப்பாகவே இப்போத எழுச்சி பெற வேண்டும். அவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனமாக எழுச்சி பெற வேண்டும். இதுவோ ஒரு கால இடைவெளியின் பின்பு நாடுகடந்த அரசு என்ற கோணத்தில் மாற வேண்டும். இதனால் ஏற்படக் கூடிய நன்மைகளாக, எம்மை இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் பயன்படுத்துவதில் இருந்து விலகி இலக்கு நோக்கி பயணிக்க முடியும். சிங்களத்தை அச்சுறுத்தி எமது தாயகம் தனித்தவத்தை சிதைப்பதை தடுக்க முடியும். அவலப்பட்ட மக்கள் வாழ்வை மீளக் கடடி எழுப்பவும் அதற்கான காலத்தையும் கொடுக்க முடியும். தாயக மக்களை அழித்தால் குரல்கொடுக்க ஒரு பெரிய சக்தி இருக்கின்றத என்று அவர்களின் அழிவுகளை மட்டுப்படுதத்த முடியும். எமக்கும் தாயக மக்களுக்கம் இடையில் உறவை ஏற்படுத்த முடியும். அடியாளத்தேடிலின் அல்பத்தனத்துக்குள் புதைந்திருக்கும் எமது சமூகத்தில் இருந்து ஒரு தலைமையை இனம்காண கால அவகாசம் கிடைக்கும். நாடுகடந்த அரசுக்குப் பதிலாக மனித உரிமை அமைப்பே சிறந்தது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70151

சிங்களத்திற்கு சாதகமானது உங்களது தேசிய உணர்ச்சியும் சிந்தனை முறையுமே தவிர எனது கருத்துக்கள் இல்லை.

Edited by sukan

சுகன்.

மக்களின் கழுத்தை பிடிச்சு திருகி வைச்சு கொண்டு எதிரி இருக்கும் போது எங்களாலை அவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய உதவி அந்த கைகளை எடுக்க செய்வதுதான்...

அவர்களின் வாழ்க்கை முறைய உயர்த்தாமல் அதுக்கான வளிகளை ஏற்படுத்தாமல் நளாந்தம் சோத்துக்கு அந்த மக்களுக்கு காசை எறிவதைத்தான் நீங்கள் உதவி என்கிறீர்கள் எண்றால் தயவு செய்து அந்த உதவியை செய்யாதீர்கள்...

பிச்சைக்காறருக்கு போல நீங்கள் எறியும் காசு அந்த மக்களை நிரந்தமாக உங்களின் கைகளை நம்பி இருக்கும் பிச்சைக்காறர்களாக மாற்றி விடும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் தலைவர் உயிரோட இருக்கிறார் என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் தற்போதைய நிலையில் அதிலும் பார்க்க முக்கியமாக செய்ய வேண்டிய பல கடமைகள் உண்டு.

முன்னர் ஞாபகம் இருக்கிறதா..? நீங்கள் வன்னிப்படுகொலைகள் நடந்த காலத்தில் சித்திரை வருடப்பிறப்பு தமிழர்களின் பண்டிகை இல்லை எண்று ஆரம்பித்தீர்கள்....???

ஊரில் பிரச்சினை வலுத்துகொண்டிருக்கும்போது, நாம், நம்ம சபேசன் தயவில் பாப்பன சங்காரம் அன்டி-தீபாவளி.. நரகாசுரன் ஆதரவு.. எண்டு இன்னும் எவ்வளவு மிக மிக முக்கியமான விடயங்களை கராசாரமக வாதிட்டு மகிழ்ந்தோம்..

சபேசன் தலைவர் உயிரோட இருக்கிறார் என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் தற்போதைய நிலையில் அதிலும் பார்க்க முக்கியமாக செய்ய வேண்டிய பல கடமைகள் உண்டு.

ஓஓஓ!!! ??? அவை என்ன என்பதை கொஞ்சம் விளக்கமுடியுமா!?

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று தான்தோன்றித்தனமான அதிகார அரசியல் அடிப்படையிலான அடயாளத்தேடல் தேசியவாதிகள் மக்களால் நிரகரிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. சிங்களத்தை அனுசரித்தேனும் மக்களுடன் எவன் இணைந்திருக்கின்றானோ அவனே மேலானவன். மண்ணையும் மக்களையும் தெடர்பையும் துண்டித்து மக்களுக்கான தேசியம் விடுதலைபேசும் புலத்துப் போலிகளால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் எக்காலத்திலும் இல்லை. இந்தத் தலமுறை முடியும் வரை கூட்டங்களும் அமர்வுகளும் அரங்கேற்றங்களும் நடத்தி அடயாளம் தேடிக்கொண்டிருங்கள்.

எலும்பு பொறுக்கி துரோகி கேடுகெட்ட கூட்டம் என்று உணர்சிவசப்படுவதற்குப்பெயர் தமிழ்த்தேசியம் என்றால் சிங்களவனை அனுசரித்து அதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தேசியத்தை விட மேலான ஒன்றுதான்.

தங்களுடன் முரண்படுவதில்லை என்று முடிவெடுத்தாலும் தாங்களும் தங்கள் கருத்துக்களும் என்னை துரத்துகின்றன

சரி

தாங்கள் சொல்வது போல் சிங்களவனுடன் சேர்ந்து நின்று மகேசன் சேவை செய்யும் கூட்டம் கடைசியாக நடந்த தேர்தலிலும் மக்களால் அங்கீகரிக்கப்படவில்லையே ஏன்....?

மக்கள் தூங்குகிறார்களா...?

அல்லது இன்னும் மக்கள் விரும்புவதுபோல் இவர்கள் சிங்களவனிடம் நக்கவில்லையா...?

  • தொடங்கியவர்

இங்கே கட்டுரை சாராத சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவைக்கு பின்பு தனியாக பதில்களைத் தருகிறேன்.

உருத்திரகுமாரனும் தேசியத் தலைவர் வீரச் சாவடைந்து விட்டார் என்பதை நன்கு அறிந்தே இருக்கிறார். அவர் தற்பொழுது ஒரு அரசியல்வாதி ஆகிவிட்டதால் உண்மையை சொல்லாமல் சுற்றி வளைத்து மென்று முழுங்குகிறார்.

தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய் சொல்லித் திரிபவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

இங்கே சிலர் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. இங்கே எத்தனையோ போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. ஆனால் தலைவருக்கு மட்டும் வீரவணக்கம் செலுத்தக் கூடாது என்கிறீர்கள்

அவர் இருப்பதாக பொய் சொல்லித் திரிபவர்களுக்கு பயந்து போய் இதைச் சொல்கிறீர்கள். தேவையில்லாத பிரச்சனை வரும் என்று அச்சத்தில் தேசியத் தலைவர் பற்றி பேசுவதை தவிர்த்து வேறு விடயங்களை பேசும் படி கோருகிறீர்கள்.

என்னைக் கேட்டால் N;தசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றுகின்ற இந்த மோசடிப் பேர்வழிகளோடு எந்த விதமான ஒற்றுமையும் வேண்டாம் என்றே சொல்வேன்.

இவர்களோடு ஒற்றுமையாக இருப்பதை விட டக்ளஸ், வரதராஜப்பெருமாள், சித்தார்த்தன்.... போன்றவர்களோடு ஒற்றுமையாக இருப்பது தமிழினத்திற்கு நன்மை பயக்கும்.

யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை நடத்துங்கள்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பொய்மையையும் உண்மையையும் ஒற்றுமையாக இருக்கும்படி கேட்காதீர்கள். பொய்யை வெற்றி பெறவும் விடாதீர்கள். பொய் வெற்றி பெற்றால் தமிழர்கள் தோற்றுப் போவார்கள்.

பொய்யான நிகழ்வுகள் நடைபெறும் வரை உண்மைக்கான போராட்டங்களும் இருக்கவே செய்யும். உண்மைக்காகப் போராடுபவர்களை சாக்குப் போக்குச் சொல்லி போராட்டத்தை ஒத்திப் போடும்படி கேட்காதீர்கள்.

தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்பதை தமிழர்கள் ஏற்றுக் கொள்கின்ற நிலைமை வருகின்ற போது மட்டுமே போராட்டமும் சரியான திசையில் பயணிக்கும். தமிழர்களை ஒரு அணியில் திரட்டவும் முடியும்.

அது வரை இங்கே யாராலும் எதையுமே செய்ய முடியாது.

இங்கே சுருக்கமான பதில்களையே தருகிறேன். இந்தக் கட்டுரையில் தேசியத் தலைவருக்கு அகவணக்கம் செலுத்துவது பற்றி மட்டுமே எழுதியிருக்கிறேன்

தொடர்ந்து எழுதப் போகின்ற கட்டுரைகளில் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக நம்புவதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் பற்றி விரிவாக பேசுவேன். அதில் மேலும் தெளிவு பிறக்கலாம் என்று நம்புகிறேன்.

:lol::D:lol:

Edited by பையன்26

சபேசன் தேசியத்தலைவர் உயிரோடை இல்லை எண்று உங்களுக்கு உறுதியாக சொன்னவர் யார்....??? இந்தியாவால் வலை வீசி தேடப்பட்டு வந்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய KP யா...?? இல்லை எண்றால் யார்... அவர் இல்லை என்பதுக்கு நீங்கள் தரும் ஆதாரங்கள் என்ன...??? எனக்கு இதுக்கு மட்டும் பதில் தாருங்கள்....

நேரடியாகவே சொல்கிறேன் மக்களை குழப்ப நிற்க்கும், மக்களுக்குள் குழப்பம் விளைவிக்கும் ஆக்களில் நீங்களும் ஒருவரா என்பது மட்டுமே எனக்கு தெரிய வேண்டியது... ஆகவே மேலை நான் கேட்டவைகளுக்கு மட்டும் உங்களின் பதிலை எதிர்பார்க்கின்றேன்... பூசி மெழுகல் வேண்டாம் நேரடியான பதில்...

நான் வேறு எதையும் உங்களுக்கு சொல்வதுக்கு இல்லை....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது இந்தக் கட்டுரை எழுத வேண்டிய தேவை எதற்கு?இதனால் என்ன இலாபம்?தலைவர் இருக்கிறார் என்று நம்புவர்கள் தங்கள் நம்பிக்கையைத் தொடரட்டும் இல்லை என்பவர்கள் இல்லை என்றே சொல்லட்டும்.இப்பொழுது செய்ய வேண்டிய வேலை சிறிலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை சர்வதேசீதிமன்றத்தில் நடாத்துவதற்குரிய வேலைகளைச் செய்வதுதான் அதை எப்படிச் செய்யலாம் என்பதை அரசியல் அறிஞர்கள் ஆய்வாளர்கள்? எழுத்தார்வம் உள்ளவர்கள் அதுபற்றிய கட்டுரைகளை எழுதுவதால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நன்மை உண்டாகலாம்.அதை விடுத்து தலைவர் இறந்துவிட்டார் அவருக்குத் துவசம் செய்தால்தான் போராட்டம் தொடர்ந்து முன்நகரும் என்பது போல எழுதுவதும் இந்த வருடம் நீங்கள் துவசத் செய்யாவிட்டால் அடுத்த வருடம் நாங்களே தனியாக துவசம் செய்வோம் என்று மிரட்டுவதும் எந்த வகையில் பகுத்தறிவானது?இல்லை என்று சொல்பவனுக்கு நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. உண்டு என்று சொல்பவனுக்கே அதற்கான தேவைகள் இருக்கிறது.இது கடவுளுக்கும் பொருந்தும் தலைவனுக்கும் பொருந்தும். மக்களுக்கு கேபியையும் தெரியும் மக்களவையையும் தெரியும் நாடு கடந்த அரசையும் தெரியும் மக்களுக்கு எதுவும் தெரியாது எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற சொல்லும் பகுத்தறிவாளர்களை நினைக்கத்தான் பாவமாக இருக்கிறது.

காலம் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் அதுவரை கேள்விகளை மட்டும் கேட்டுக் கொண்டிருக்காது கடமைகளைச் சிந்தித்துச் செய்ய வேண்டும்.அப்பிள் ஏன் கீழே விழுந்தது என்று நியூட்டன் கேள்வியை மட்டும் கேட்கவில்லை.அதற்காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காகச் சிந்தித்தான் அதுவே அவன் செய்த கடமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் தேசியத்தலைவர் உயிரோடை இல்லை எண்று உங்களுக்கு உறுதியாக சொன்னவர் யார்....??? இந்தியாவால் வலை வீசி தேடப்பட்டு வந்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய KP யா...?? இல்லை எண்றால் யார்... அவர் இல்லை என்பதுக்கு நீங்கள் தரும் ஆதாரங்கள் என்ன...??? எனக்கு இதுக்கு மட்டும் பதில் தாருங்கள்....

நேரடியாகவே சொல்கிறேன் மக்களை குழப்ப நிற்க்கும், மக்களுக்குள் குழப்பம் விளைவிக்கும் ஆக்களில் நீங்களும் ஒருவரா என்பது மட்டுமே எனக்கு தெரிய வேண்டியது... ஆகவே மேலை நான் கேட்டவைகளுக்கு மட்டும் உங்களின் பதிலை எதிர்பார்க்கின்றேன்... பூசி மெழுகல் வேண்டாம் நேரடியான பதில்...

நான் வேறு எதையும் உங்களுக்கு சொல்வதுக்கு இல்லை....

உது மில்லியன் டொலர் கேள்வி உது தெரிந்தால் ஏன் புலத்தில் உந்த புடுங்குபாடு, மே 18 உடன் உதற்கான பதில்களும் மைளனித்து விட்டது.

இவர்களோடு ஒற்றுமையாக இருப்பதை விட டக்ளஸ், வரதராஜப்பெருமாள், சித்தார்த்தன்.... போன்றவர்களோடு ஒற்றுமையாக இருப்பது தமிழினத்திற்கு நன்மை பயக்கும்.

image012k.gif

... சபேசன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல ... மிகச்சிறந்த நகைச்சுவையாளர்!! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

image012k.gif

... சபேசன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல ... மிகச்சிறந்த நகைச்சுவையாளர்!! :lol:

ஒட்டு குழுக்களுக்கு நல்லதொரு கட்டுரையாளர் கிடைத்து இருக்கிரார் சந்தர்பத்தை தவற விடாமல் அமுக்குங்கோ :lol::D :D

இங்கே கட்டுரை சாராத சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவைக்கு பின்பு தனியாக பதில்களைத் தருகிறேன்.

உருத்திரகுமாரனும் தேசியத் தலைவர் வீரச் சாவடைந்து விட்டார் என்பதை நன்கு அறிந்தே இருக்கிறார். அவர் தற்பொழுது ஒரு அரசியல்வாதி ஆகிவிட்டதால் உண்மையை சொல்லாமல் சுற்றி வளைத்து மென்று முழுங்குகிறார்.

தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய் சொல்லித் திரிபவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

இங்கே சிலர் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. இங்கே எத்தனையோ போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. ஆனால் தலைவருக்கு மட்டும் வீரவணக்கம் செலுத்தக் கூடாது என்கிறீர்கள்

அவர் இருப்பதாக பொய் சொல்லித் திரிபவர்களுக்கு பயந்து போய் இதைச் சொல்கிறீர்கள். தேவையில்லாத பிரச்சனை வரும் என்று அச்சத்தில் தேசியத் தலைவர் பற்றி பேசுவதை தவிர்த்து வேறு விடயங்களை பேசும் படி கோருகிறீர்கள்.

என்னைக் கேட்டால் N;தசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றுகின்ற இந்த மோசடிப் பேர்வழிகளோடு எந்த விதமான ஒற்றுமையும் வேண்டாம் என்றே சொல்வேன்.

இவர்களோடு ஒற்றுமையாக இருப்பதை விட டக்ளஸ், வரதராஜப்பெருமாள், சித்தார்த்தன்.... போன்றவர்களோடு ஒற்றுமையாக இருப்பது தமிழினத்திற்கு நன்மை பயக்கும்.

யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை நடத்துங்கள்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். பொய்மையையும் உண்மையையும் ஒற்றுமையாக இருக்கும்படி கேட்காதீர்கள். பொய்யை வெற்றி பெறவும் விடாதீர்கள். பொய் வெற்றி பெற்றால் தமிழர்கள் தோற்றுப் போவார்கள்.

பொய்யான நிகழ்வுகள் நடைபெறும் வரை உண்மைக்கான போராட்டங்களும் இருக்கவே செய்யும். உண்மைக்காகப் போராடுபவர்களை சாக்குப் போக்குச் சொல்லி போராட்டத்தை ஒத்திப் போடும்படி கேட்காதீர்கள்.

தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்பதை தமிழர்கள் ஏற்றுக் கொள்கின்ற நிலைமை வருகின்ற போது மட்டுமே போராட்டமும் சரியான திசையில் பயணிக்கும். தமிழர்களை ஒரு அணியில் திரட்டவும் முடியும்.

அது வரை இங்கே யாராலும் எதையுமே செய்ய முடியாது.

இங்கே சுருக்கமான பதில்களையே தருகிறேன். இந்தக் கட்டுரையில் தேசியத் தலைவருக்கு அகவணக்கம் செலுத்துவது பற்றி மட்டுமே எழுதியிருக்கிறேன்

தொடர்ந்து எழுதப் போகின்ற கட்டுரைகளில் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக நம்புவதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் பற்றி விரிவாக பேசுவேன். அதில் மேலும் தெளிவு பிறக்கலாம் என்று நம்புகிறேன்.

சபேசன், நீங்கள் வேணும் என்றால் உங்கள் வழிகாட்டிகளுடன் சேர்ந்து முடிந்தால் மக்களுக்கு நல்லதை தேவையானதைச் செய்யுங்கோ யார் வேண்டாம் என்றது? (மக்களுக்குத் தேவையானது அவர்களின் உறவினர்களை கடத்தப்பட்டு கொலைசெய்வதோ, மானபங்கப் படுத்துவதோ இல்லை என்று நினைக்கிறன். ஏனெனில் இதைதான் நீங்கள் குறிப்பிட்டவர்கள் செய்கிறதாக செய்திகள் வெளியாகின்றன... டக்ளசின் சேவை சொல்லி மாளாது... :lol: )

தலைவரில், அவரின் கொள்கையில் நம்பிக்கை வைத்து செயல்படும் மக்களின் நம்பிக்கையை உங்கள் எழுத்துகளால் அசைக்கமுடியாது சபேசன். அவர்கள் தமது பாதையில் செயல்படட்டும்.

பாதைகள் வேறாக இருந்தாலும் இலக்கு ஒன்றாக அமையட்டும்!

[நீங்கள் எழுதிய கட்டுரைக்கு ஏதும் ஒரு காரணம்/ விளக்கம் இருக்குமா இருந்தால்... தயா அண்ணையின் கேள்விக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பதில் சொல்லுங்கோ]

இங்கே சிலர் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. இங்கே எத்தனையோ போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. ஆனால் தலைவருக்கு மட்டும் வீரவணக்கம் செலுத்தக் கூடாது என்கிறீர்கள்.

அகம் என்பது புறத்தை குறிக்கவில்லை. அகவணக்கம் என்பது புறநிலையில் பலரினால் இங்கு பலவந்தமாக எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஏனைய உயிர்நீத்த போராளிகளிற்கும் பொருந்தும். மரியாதை செலுத்துதலை புறநிலையில் எதிர்பார்க்கலாம். ஆனால்.. அதேவிடயத்தை அகவணக்கம் என்று கூறும்போது அதன் அர்த்தத்தில் தவறு உள்ளதோ என்று எண்ணுகின்றேன். எனது சந்தேகம் தலைப்புடன் தொடர்புபட்டதாயினும், நீங்கள் கூறவருகின்ற விடயத்தில் இருந்து விலகிச்செல்வதால் இதுபற்றி முன்பு நான் கருத்துக்கூற விரும்பவில்லை. அகவணக்கம் எனும் பதம் த.வி.பு பயன்படுத்துவதற்கு முன்பதாக தமிழில் பயன்படுத்தப்பட்டு உள்ளதா? அவ்வாறாயின், அது எவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது? முடியுமானால் இதுபற்றியும் நேரம் கிடைக்கும்போது ஆராய்ந்து கூறுங்கள்.

கருத்தாளரிடம் ஏன், எப்படி, எதற்காக என்று சில கேள்விகள், ஆதங்கள், வாதங்கள்

1. தேசியத் தலைவரை விட்டு விட்டு எமது போராட்டம் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது. எமது போராட்டத்தை முடக்கிப் போட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்வி அல்ல, மாறாக தேசியத் தலைவரின் இருப்பு அல்லது இறப்புப் பற்றிய குழப்பமே எம்மை மொத்தமாக முடக்கிப் போட்டது.

"எமது போராட்டம் எமது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க, எமது தாயாக பிரதேசத்தில் நாம் எம்மை ஆண்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக" அதற்காக தான் "உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஒன்று பட்டு செயல் படுகின்றனர்" என சொன்னதும் தேசிய தலைவர் தான்!

2. தேசியத் தலைவர் வீரச் சாவு அடைந்தார் என்கின்ற உண்மையை தமிழினம் ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைக்குப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கும். தமிழினம் தேசியத் தலைவரின் பெயரில் ஒற்றுமையாக நின்று சிறிலங்கா அரசுக்கு சவால் விட்டிருக்கும்.

எமது தேசியத்தலைமைக்கு கீழும் நாம் முற்று முழுதாக ஒற்றுமைப்பட்டு இருக்கவில்லை. அன்றும் போராட்டம் முன்னகர்ந்தது. இன்றும் நகருகின்றது. உண்மை வெல்லும் வரை, விடுதலை கிடைக்கும் வரை நகரும்.

3. "குழப்பத்திற்கு சிறிலங்கா அரசே காரணம்"

இல்லை நான் தான் காரணம் என்று யார் தான் சொல்லப்போகின்றார்கள்?

பல கள உறவுகள் இந்த திரியிலும் மற்றும் வேறு திரிகளிலும் குறிப்பிட்ட மாதிரி மக்கள் தெளிவாகத்தான் சிலரின் தேவையில்லாத கருத்துக்கள் தான் குழப்புகின்றன. தாங்கள் ஒளிந்து கொள்ள மேலே உள்ள தலைப்பு கவசமாக அமைந்து விடுகின்றது.

4. இங்கே கருத்து எழுதிய யாருமே தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக வாதிடவில்லை என்பது நல்ல ஒரு முன்னேற்றம். கடந்த ஆண்டு இதை எழுதியிருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும்.

கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது போன்று இன்று பெரும்பாலான தமிழர்கள் தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

அவருக்கு அஞ்சலி செலுத்துகின்ற விடயத்தில் வேறுபடுகிறார்கள்.

உங்களைபோல ஒரு திறமையானவர், இங்கே ஒருவரும் ஏன் வாதிடவில்லை என்பது உங்களுக்கு புரிந்தும் புரியாமல் இருப்பது வெள்ளிடைமலை.

5. உலகநாடுகள் மகிந்தவைக் கூண்டில் நிறுத்தி சிறைத் தண்டனை பெற்றுக் கொடுக்கும் என்றும், அப்படியே தமிழீழத்தையும் தூக்கித் தந்துவிடுவார்கள் என்றும் யாராவது கனவு கண்டு கொண்டிருந்தால், அதை தயவுசெய்து இன்றோடு விட்டு விடுங்கள்.

உங்களின் சகல கற்பனைகளுக்கும் இது ஒரு கிரீடம் வைத்தால் போலுள்ளது. அத்துடன் இந்த களத்தில், எமது தளங்களில் எவ்வளவு தூரம் உண்மையை கண்டும் காணாமல் இருக்கின்றீர்கள் என கோடு போட்டு காட்டிவிட்டீர்கள், நன்றி.

6. தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்பதை தமிழர்கள் ஏற்றுக் கொள்கின்ற நிலைமை வருகின்ற போது மட்டுமே போராட்டமும் சரியான திசையில் பயணிக்கும். தமிழர்களை ஒரு அணியில் திரட்டவும் முடியும்.

அது வரை இங்கே யாராலும் எதையுமே செய்ய முடியாது.

இப்படி சொல்லுவதில் நீங்கள் முதல் ஆளும் இல்லை, கடைசி ஆளும் இல்லை. தமிழ் மக்கள் பல முறை நிரூபித்து காட்டியுள்ளனர் தமது இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என.

இறுதியாக ஒரு அன்பான வேண்டுகோள்:

தேசிய தலைவர் உள்ளாரா இல்லையா என்பதற்கு அப்பால்;

அவருக்கு அகவணக்கம் செலுத்தினால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்ற விதண்டா வாதத்திற்கு மேலாக;

தளபதிகள், மாவீரர்கள், போராளிகள் தியாகங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து;

சிங்கள பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு உண்மையாக,

மிகுந்த அவலத்துக்குள் இருக்கும் எம்மக்களை எவ்வாறு மீட்டு எடுக்கலாம் என்பதை உள்ளத்தில் கொண்டு;

எவ்வாறு தமிழீழத்தை மீட்டெடுத்து எமது இருப்பை நிலையாக்கலாம் என்று முடிந்தால் எழுதுங்கள், அலசுவோம், ஆராய்வோம்.

உங்கள் திறமையை, ஆற்றலை ஒரு சமுதாயத்திற்கு உரமாக்குங்கள்:

- பல கள உறவுகளுக்கு, சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக

- ஒரு தன்னம்பிக்கையை ஊட்டுபவனாக

- எமது விடுதலைக்கு வலுச்சேர்ப்பவனாக

வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓஓ!!! ??? அவை என்ன என்பதை கொஞ்சம் விளக்கமுடியுமா!?

இது கூடத் தெரியாமலா இருக்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக ஒரு அன்பான வேண்டுகோள்:

தேசிய தலைவர் உள்ளாரா இல்லையா என்பதற்கு அப்பால்;

அவருக்கு அகவணக்கம் செலுத்தினால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்ற விதண்டா வாதத்திற்கு மேலாக;

தளபதிகள், மாவீரர்கள், போராளிகள் தியாகங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து;

சிங்கள பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு உண்மையாக,

மிகுந்த அவலத்துக்குள் இருக்கும் எம்மக்களை எவ்வாறு மீட்டு எடுக்கலாம் என்பதை உள்ளத்தில் கொண்டு;

எவ்வாறு தமிழீழத்தை மீட்டெடுத்து எமது இருப்பை நிலையாக்கலாம் என்று முடிந்தால் எழுதுங்கள், அலசுவோம், ஆராய்வோம்.

உங்கள் திறமையை, ஆற்றலை ஒரு சமுதாயத்திற்கு உரமாக்குங்கள்:

- பல கள உறவுகளுக்கு, சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக

- ஒரு தன்னம்பிக்கையை ஊட்டுபவனாக

- எமது விடுதலைக்கு வலுச்சேர்ப்பவனாக

வணக்கம்.

நன்றி நன்றி நன்றி

இது தான் எமது இன்றைய தேவை

வேலை

எமக்கும் இவர் போல் ஆசைகள் உண்டு

கேள்விகள் உண்டுகோபங்கள் உண்டு

அதற்கான நேரமல்ல இது.

குளப்பங்களைத்தவிர்த்து எம்மை நாம் பலப்படுத்தாவிட்டால்...

நன்மை எதிரிக்கே

முதலில் சபேசனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு,

... நேற்று என்னைப்பார்த்து கேட்டேன், மே18இர்கு பின்னம் கருத்துச்சுதந்திரம் கதைத்த நீயா, இவ்வாறு சபேசனின் எழுத்துக்கு எழுதினாய்???

பதில் மனதிலிருந்து வந்தது ... மே18இனூடு இவ்வளவு அழிவும் நிகழ்ந்தது, இறுதிக்காலத்தில் புலிகள் செய்த தவறுகள், சில அரசியல் சாணக்கயமற்ற செயல்களால் பலரது மனதை குடைந்து, மிகப்பெரியளவிலான விமர்சனத்துக்கு உள்ளாகியது!! அதே சமயம் புலத்தில் தம்மை புலிகளின் பிரதிநிதிகள் என்று கூறியோர்/செயற்பட்டோர் மே18இற்கு பின்னம் நடந்து கொண்ட விதங்கள் இன்றுவரை மக்களை வெறுப்படைய வைத்திருக்கிறது!!!... இவையெல்லாம் பலரை பகிரங்கமாக விமர்சிக்க வைத்தது!!! அதனை தவிர்க்க முடியாமல் போய் விட்டது!!!

இதே நேரம் புலி அழிவினுடன் சர்வதேசமும் ஏதாவது தரும்!!!! சிறிலங்காவை இந்தியா அரசியல் தீர்வு வழங்க வற்புறுத்தும்!!!! மேலாக புலி அழிப்பில் சிங்களத்துடன் ஒட்டியிருந்த மாற்றுக்கருத்து மாமணிகள் தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வை ஒட்டி, இனி சிங்களத்துடன் ஒட்டாமல் உறுதியாக செயற்படுவர்!!! ... போன்ற கனவுகளில் சரி பிழைகளை கதைத்தோம்!!! ஆனால் நடந்தது ஒன்றுமில்லை!!! புலி அழிப்பு அப்படியே பின் தமிழின அழிப்பாக தொடர்கிறது!!

நாம் கடந்த கால சரி/பிழைகளை கதைத்து எம்மிலும் மாற்றங்களை கொண்டு வரமுடியவில்லை, அதேசமயம் இவை எம்மை பலவீனப்படுத்ததான் பயன்படுகிறது சிங்களத்துக்கு!!!

இவை எம் நடவடிக்கைகளை/விமர்சனங்களை/குறை கூறுவதை மீளாய்வு செய்யச் சொல்கிறது!!

நாம் விமர்சனம், சரி/பிழைகள் எனும் பெயரில் நடத்தும் அரசியல்கள் சரியானவையா???? அல்லது இவை எமக்கு நல்லதை செய்யக்கூடியவைகளா???

சிந்திப்பது நல்லது??????

... சபேசன் போன்றோர், இங்கு பலர்(நான் உட்பட) குழம்பிய போது உறுதியாக இருந்தார்கள்!! இன்று தளர்ந்து விட்டார்களா??? ... நாம் சரி/பிழை சொல்பவர்களை, கடந்த காலங்களில் செய்தவைகளைப் போல எதிரியின்/துரோகிகளின் கூடாரத்துக்கு தள்ளிச் சென்று விடலாகாது!!! ... இல்லை விமர்சிக்க வேண்டுமாயின், எம் வட்டத்தினுள்ளேயே நின்று விமர்ச்சிப்போம்!!! ... நாம் அவ்வட்டத்தை தாண்டினால், அது எதிரிக்கு இலகுவாக போய் விடும்!!!!

நன்றி ஐயா

தங்களிடமிருந்து வந்த இந்த வரிகள் எம்மை நிச்சயம் பலப்படுத்தும்

உண்மையை சொன்னால் அடிக்கவருவீர்கள்.

நீங்கள் நின்றதும்,இப்போது நிற்பதும் கூட ஒரு சிறுவட்டம் தான்.அப்படியாக உங்களை எமது போராட்டம் கொண்டுவந்துவிட்டது.

நல்ல பல கேள்விகளை உம்மை பார்த்தே கேட்டிருக்கின்றீகள்.பல கேள்விகளுக்கு பதில் ரிசிமூலம் நதிமூலம் தேடிப் போகவேண்டும்.ஏன் இப்படியெல்லாம் நடந்தது என விளங்கிக் கொள்ளாமல் ஒரு சொல்லில் பதில் தேடினால் கிடைக்காது.

தலைவர் இறந்ததைகூட நம்ம முடியாத அளவிற்கு பலரை மாயையில் வைத்திருந்ததே புலிகளின் வெற்றி.கடவுள்,அவதாரம்,தர்ம யுத்தம்,இப்படியாக அடிக்கிக் கொண்டே போலாம்.நான் அடிக்கடி நண்பர்களிடம் கூறுவே ஒரு நாளைக்கு பாம்பு கடித்துக் கூட தலைவர் இறக்கலாம் இதை கூட புரிந்துகொள்ளாமல் கதைக்காக நாங்கள் உருவகப்படுத்திய ஒரு விடயத்தை உண்மை என்று நம்ம தொடங்கிவிட்டார்களோ என்று.

அந்த ஒரு நிலையை தமது தேவை கருதி உருவாக்கியிருந்தார்கள்.மற்றவன் கேள்வி கேட்டக் கூடாது என்பதற்காக.நாட்டில் இருந்தவர்கள் ஓரளவு யதார்த்த நிலையை புரிந்துகொண்டுதான் இருந்தார்கள்.

கடைசியில் நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை.ஒட்டி நின்றவர்களே இன்று நாடு போகும் நிலையை பார்த்து பயப்பிடும் நிலை உருவாகியிருக்கின்றது.அதுவும் சிலவேளை ராசபக்சாகுடும்பத்தின் அழிவிற்கு முதல் படியோ எனத் தோன்றுகின்றது.புலிகளை பார்த்துதான் ராஜபக்சா அரசியல் செய்தார் அதையே இப்பவும் தொடர்கின்றார் அவரும் பாடம் படித்தகாக தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.