Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவின் வருகையை எதிர்த்து லண்டன் விமான நிலையத்தில் இன்று திடீர் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சவின் வருகையை எதிர்த்து லண்டன் விமான நிலையத்தில் இன்று திடீர் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு!

திகதி: 29.11.2010

மகிந்த பிரித்தானிய வருகையை ஒட்டி விமானநிலையத்தில் திடீர் போராட்டம் நடக்கவிருப்பதாக அறியப்படுகிறது.

இன்று இலங்கையில் இருந்து UL 509 என்ற இலக்கமுடைய ஏர் லங்கா விமானத்தில் மகிந்த லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் இன்று இரவு சுமார் 10.00 மணிக்கு டேர்மினல் - 4 கிற்கு வந்தடையவுள்ளார். அவர் விமானநிலையத்துக்கு வரும்போது தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காண்பிக்க இன்று திடீர் போராட்டம் ஒன்று நடக்கவுள்ளது. இப் போராட்டத்துக்கான அழைப்பை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றாக விடுத்துள்ளன. பிரித்தானிய மண்ணில் காலடி எடுத்துவைக்கும் மகிந்தவுக்கு முதல் எதிர்ப்பைக் காட்ட தமிழர்கள் உடனடியாக ஒன்று திரளுமாறு வேண்டப்படுகின்றனர்.

இன்று இரவு 10 மணிக்கு லண்டன் ஹீத்துரு விமானநிலையத்தில் உள்ள டேர்மினல் 4 இற்கு மக்களை உடனே அணி திரளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர். கறுப்பு உடைகளை அணிந்தும், கறுப்புக்கொடிகளை சுமந்தவாறும் இப் போராட்டம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இனப்படுகொலை புரிந்து, பல்லாயிரம் தமிழர்களின் உயிரைக் குடித்த மகிந்த லண்டன் வருவதை தற்போது சட்டரீதியாக தடுக்கமுடியாத நிலை தோன்றியுள்ளது. ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியில் அவரைக் கைதுசெய்ய இயலாது என்று பிரித்தானிய யூரிகள் அடங்கிய சபை விளக்கம் கொடுத்துள்ள நிலையில், இறுமாப்போடு பிரித்தானிய வரும் மகிந்தவுக்கு தகுந்த விதத்தில் கரி பூச மக்கள் ஒன்றுபடவேண்டும்.

பிரித்தானிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மக்கள் தமது எதிர்ப்பை அரசியல் ரீதியாகக் காண்பிக்கவேண்டும். இன்று போராட்டத்திற்கு வரும் மக்கள் தமது எதிர்ப்பை சாத்வீகமுறையில் தெரிவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்தோடு குளிர் அதிகமாக உள்ள காரணத்தால் அதற்கேற்ற உடைகளையும் அணிந்துவருமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

சங்கதி

ராசபக்சேக்கு எதிரான முயற்சிகள் மூலமாக செய்த - தொடரும் அவலங்கள் உலகிற்கு முன் வரட்டும். அரச பயங்கரவாதம் வெளிக்கொணரப்படல் வேண்டும்.

நாம் தனியே போக இது வழி சமைக்கும். எமது மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது 1000 பேருக்கு மேல் அங்கு குழுமியுள்ளதாக அங்கிருந்து நேரடியாக ஜி.ரிவி யில் அறிவித்திருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இலண்டனில் இல்லையே என்று கவலையாக இருக்கிறது.

... நான் அருகில் இருந்தும் போக முடியாமல் போய் விட்டது!! ... நன்றிகள் சென்றெல்லோருக்கும்!!! ... இந்த கொலைகார, யுத்த கிரிமினல்கள் நிம்மதியாக இங்கு வந்து உலாவ அனுமதிக்க கூடாது!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்சவின் வருகையை எதிர்த்து லண்டன் விமான நிலையத்தில் இன்று திடீர் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு!

திகதி: 29.11.2010

மகிந்த பிரித்தானிய வருகையை ஒட்டி விமானநிலையத்தில் திடீர் போராட்டம் நடக்கவிருப்பதாக அறியப்படுகிறது.

இன்று இலங்கையில் இருந்து UL 509 என்ற இலக்கமுடைய ஏர் லங்கா விமானத்தில் மகிந்த லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் இன்று இரவு சுமார் 10.00 மணிக்கு டேர்மினல் - 4 கிற்கு வந்தடையவுள்ளார். அவர் விமானநிலையத்துக்கு வரும்போது தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காண்பிக்க இன்று திடீர் போராட்டம் ஒன்று நடக்கவுள்ளது. இப் போராட்டத்துக்கான அழைப்பை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றாக விடுத்துள்ளன. பிரித்தானிய மண்ணில் காலடி எடுத்துவைக்கும் மகிந்தவுக்கு முதல் எதிர்ப்பைக் காட்ட தமிழர்கள் உடனடியாக ஒன்று திரளுமாறு வேண்டப்படுகின்றனர்.

இன்று இரவு 10 மணிக்கு லண்டன் ஹீத்துரு விமானநிலையத்தில் உள்ள டேர்மினல் 4 இற்கு மக்களை உடனே அணி திரளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர். கறுப்பு உடைகளை அணிந்தும், கறுப்புக்கொடிகளை சுமந்தவாறும் இப் போராட்டம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இனப்படுகொலை புரிந்து, பல்லாயிரம் தமிழர்களின் உயிரைக் குடித்த மகிந்த லண்டன் வருவதை தற்போது சட்டரீதியாக தடுக்கமுடியாத நிலை தோன்றியுள்ளது. ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியில் அவரைக் கைதுசெய்ய இயலாது என்று பிரித்தானிய யூரிகள் அடங்கிய சபை விளக்கம் கொடுத்துள்ள நிலையில், இறுமாப்போடு பிரித்தானிய வரும் மகிந்தவுக்கு தகுந்த விதத்தில் கரி பூச மக்கள் ஒன்றுபடவேண்டும்.

பிரித்தானிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மக்கள் தமது எதிர்ப்பை அரசியல் ரீதியாகக் காண்பிக்கவேண்டும். இன்று போராட்டத்திற்கு வரும் மக்கள் தமது எதிர்ப்பை சாத்வீகமுறையில் தெரிவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்தோடு குளிர் அதிகமாக உள்ள காரணத்தால் அதற்கேற்ற உடைகளையும் அணிந்துவருமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

சங்கதி

நான் போய்விட்டு சற்று நேரத்துக்கு முன்புதான் வந்தேன். ஆயிரம் பேருக்கு மேல் ter - 4 arival ஐ சூழ்ந்து ராஜபக்க்ஷ போர் குற்றவாளி, நாட்டுக்குள் அனுமதிக்காதே போன்ற பல கோசங்களை எழுப்பப்பட்டது. புலிக்கொடிகளும் தாராளமாகப் பறந்தது, போலீசார் ஒன்றும் செய்யவில்லை.

முக்கியவிடயம் என்னவென்றால் the world 2nd busiest airport's flight arrival information display தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது, காரணம் போர்குற்றவாளி வரும் விமானம் தரையிறங்கிவிட்டது எனும் செய்தி தெரிந்ததும் மக்களின் ஆவேசம் கூடி ஏதாலும் நடந்துவிடாமல் இருக்க பொலீசார் முன்னெச்சரிக்கையாகவே தெரிகிறது.

அத்துடன் ராஜபக்க்ஷ V.I.P லோஞ்சுக்குள்ளாகவே கொண்டு செல்லப்படுவார் என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தும் ராஜபக்க்ஷவின் வருகைக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் இந்தப்போராட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது சிறு குழந்தைகளுடனும் திடீரென விடுக்கப்பட்ட அழைப்புக்கு மக்கள் வந்தது இந்தப் போர்க்குற்றவாளிக் கும்பல்களை கூண்டில் ஏற்றும் வரை ஓயாது என்பதையே சுட்டிக்காட்டி நிற்கிறது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் வருகையை எதிர்த்து லண்டன் விமானநிலையத்தில் தமிழர்கள் நடாத்திய போராட்டம் (photo in)

* Tuesday, November 30, 2010, 3:51

போர்க்குற்றவாளியும், தமிழின அழிப்பின் சூத்திரதாரியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து லண்டன் கீத்றூ விமானநிலையத்தில் நேற்று இரவு ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கூடி எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டம் நடாத்தியுள்ளனர்.

நேற்று (29-11-2010) இரவு 8:00 மணிமுதல் லண்டன் கீத்றூ விமானநிலையத்துக்குள் வர ஆரம்பித்த தமிழ் மக்கள் 10:00 மணியளவில் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடாத்தினர். ஆயிரத்துக்கும் அதிகமாக அங்கு கூடிய தமிழ்மக்களில் பலர் “ஸ்ரொப் ஜெனசைட்” என குறிக்கப்பட்ட மேலங்கிகளை அணிந்தவாறும் படுகொலை செய்யப்பட்ட மக்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறும் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தமிழர்களின் இந்த திடீர்போராட்டத்தால் அங்கு கூடிய அதிகளவான காவல்துறையினருக்கு மத்தியிலும் அதிகளவானோர் தமது கரங்களில் தமிழீழ தேசியக் கொடியினை ஏந்தியவாறு

“போர்க்குற்றவாளி மஹிந்தவே திரும்பிப் போ”

“சிறீலங்கா ஜனாதிபதி பயங்கரவாதி”

“இனப்படுகொலை செய்த அரக்கனே திரும்பிப் போ”

“சிறீலங்கா ஜனாதிபதி போர்க்குற்றவாளி”

போன்ற கோசங்களை உரத்த குரலில் எழுப்பி விமானநிலையமே அதிரும் வண்ணம் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அனுமதியற்ற போராட்டமாக இருந்த போதும், அங்கு தேசியக்கொடிகள் பிடிக்கப்பட்டு உரத்தகுரலில் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றபோதும் அங்கு கூடிய பிரித்தானிய காவல்துறையினர் எந்தவித இடையூறும் கொடுக்காததும், அதேபோல் போராட்டம் முடிவடையும் போது தமிழர்கள் பலர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துச் சென்றதோடு அங்கு எதுவித அசம்பாவிதங்களோ, அன்றி கைதுகளோ நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடு செய்யப்படாத இந்த திடீர் போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் அங்குகூடி போராட்டம் நடாத்தியதால் மகிந்த ராஜபக்ஷ மட்டுமன்றி அந்த விமானத்தில் வந்த அதிகளவான சிங்களவர்களையும் காவல்துறையினர் வேறு வழிகளினூடாக வெளியேற்றியிருந்தனர்.

அச்சமடைந்த மகிந்தவை விமானம் தரை இறங்கியதும் விமானத்திற்கு அருகில் சென்ற நான்கு காவல்துறையினரின் வாகனங்கள் பாதுகாப்பு கொடுக்க ஒரு வாகனம் அவரை ஏற்றிக்கொண்டு வேறுவழியால் சென்று ஹட்ரன் குறஸ் நிலக்கீழ் தொடரூந்து நிலைய வழியாக ஏ312 வீதியூடாக சென்றல் லண்டனை நோக்கி விரந்து சென்றுள்ளது. வேறுவழிகளால் செல்லும் வாய்ப்பே அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்து கண்காணிப்பில் பல இடங்களிலும் நின்ற தமிழர்களால் இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி எதிர்வரும் 2-ஆம் திகதி ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்திலும் மகிந்த உரையாற்றவுள்ளதால் இதை விட அதிகளவான தமிழர்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளதும் இங்கு சுட்டிக்காட்டதக்கது.

உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.

ukmahin01.jpg

ukmahin02.jpg

ukmahin03.jpg

ukmahin04.jpg

ukmahin05.jpg

ukmahin06.jpg

ukmahin08.jpg

ukmahin13.jpg

http://www.tamilthai.com/?p=5922

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் வந்த ராஜபக்சேவை கண்டித்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் போராட்டம்-பின்வாசல் வழியாக ஓட்டம்!

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 30, 2010, 10:19[iST]

லண்டன்: கடும் எதிர்ப்பையும் மீறி லண்டன் வந்துள்ள ராஜபக்சேவுக்கு ஹீத்ரு விமான நிலையத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால், ராஜபக்சேவை விமான நிலையத்தின் வேறு பகுதி வழியாக போலீஸார் வேகமாக அழைத்துச் சென்றனர். இதனால் ஹீத்ரூ விமான நிலையமே பரபரப்பானது.

உலகிலேயே மிகவும் பரபரப்பான, பிசியான ஹீத்ரூ விமான நிலையத்தை நேற்று தமிழர்களின் 'படையெடுப்பு' பெரும் பரபரப்பாக்கி விட்டது. ஒரு நாட்டின் தலைவரை இப்படி புறவாசல் வழியாக கூட்டிச் சென்றது ஹீத்ரூ விமான நிலைய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. லண்டனுக்கு இனி ஒரு சிங்களத் தலைவர் படு சுதந்திரமாக வந்து போவது எளிதான காரியமல்ல என்பதை ஈழத் தமிழர்கள் நேற்று ராஜபக்சேவுக்குக் காட்டி விட்டனர்.

ராஜபக்சே இங்கிலாந்து நேரப்படி நேற்று இரவு 9.50 மணிக்கு லண்டன் போய்ச் சேர்ந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நூற்றுக்கணக்கான தமிழர்கள் விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் திரண்டிருந்தனர். தமிழீழ கொடிகளை ஏந்தியபடியும், போர்க் குற்றவாளி ராஜபக்சேவே இங்கிலாந்துக்குள் வராதே என்று கூறும் வாசகங்கள எழுதிய பதாகைகளையும் தாங்கியபடி அனைவரும் அமைதியாக காத்திருந்தனர்.

யாரும் எதிர்பாராத அளவுக்கு தமிழர்கள் பெருமளவில் கூடியிருந்ததால் ராஜபக்சேவின் வருகை தாமதப்பட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாக அவர் வந்து சேர்ந்தார். தமிழர்கள் பெருமளவில் கூடியிருந்தபோதும் எந்தவித பிரச்சினையும் தராமல் போராட்டத்தை நடத்தினர். இனப்படுகொலை செய்த ராஜபக்சேவே திரும்பிப் போ என்று கூறி உரத்த குரலில் அவர்கள் போட்ட கோஷத்தால் விமான நிலைய வரவேற்புப் பகுதியே மிரண்டு போனது.

முதலில் போலீஸார் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். ஆனால் தமிழர்களின் உணர்ச்சிகளைப் பார்த்தோ என்னவோ, போராட்டத்தை தொடர அனுமதித்தனர். அதேசமயம், போலீஸாருக்கு வேலை இல்லாத வகையில் மிகவும் கட்டுக்கோப்பாகவும், அமைதியாகவும் போராட்டம் நடந்தது.

தமிழர்கள் பெருமளவில் கூடியிருந்த பகுதி வழியாக ராஜபக்சேவை அழைத்து வராமல் வேறு ஒரு பகுதி வழியாக ராஜபக்சேவை போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கும் பெரும் திரளான தமிழர்கள் கூடி விட்டதால் தமிழர்களின் எதிர்ப்பைக் காணாமல் போகும் ராஜபக்சேவின் திட்டம் பலிக்கவில்லை. இருப்பினும் ராஜபக்சே கார் மறிக்கப்படும் நிலை உருவாகி விடாமல் தடுக்கும் வகையில் அங்கு கூடியிருந்த தமிழர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி ராஜபக்சே காரை போக விட்டனர். கிட்டத்தட்ட தப்பித்தோம், பிழைத்தோம் என்ற கணக்கில்தான் விமான நிலையத்தை விட்டு ராஜபக்சேவால் வெளியேற முடிந்தது.

அதேசமயம், ராஜபக்சேவுடன் வந்த சிங்களக் குழுவினர் மிகவும் பீதி அடைந்த முகத்துடன் படு பதட்டமாக அந்த இடத்தை விட்டு வெளியேறியதையும் காண முடிந்தது.

தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த அதிரடிப் போராட்டத்தை நடத்தினர். செல்போன் மூலம் சக தமிழர்களுக்குத் தகவல் கூறி விமானம் வரும் நேரத்தில் அனைவரையும் திரட்டி அதிர வைத்தனர்.

லண்டனில் தற்போது பூஜ்யத்திற்கும் குறைவான கடும்குளிர் அடிக்கிறது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் தமிழர்கள் திரண்டு வந்திருந்தது விமான நிலையத்திற்கு வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தப் போராட்டம் குறித்து ஒரு தமிழர் கூறுகையில், இங்கிலாந்து பிரஜைகளான நாங்கள், இந்த நாட்டுக்குள் ஒரு போர்க்குற்றவாளி வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று எங்களது அரசுக்கு உணர்த்தவே இப்போராட்டத்தை நடத்தினோம்.

40 ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்ற ஒரு கொலையாளி, போர்க்குற்றவாளி இலங்கையின் அதிபர் என்பதை இந்த நாட்டு மக்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டம் என்றார்.

மிகப் பெரிய அளவில் தமிழர்கள் திரண்டு நின்றதைப் பார்த்த பலரும் தங்களது செல்போன்களில் அவர்களை ஆர்வத்துடன் படம் எடுத்தனர். பலர் போராட்டம் நடத்தியவர்களிடம் வந்து பேசி என்ன என்று கேட்டறிந்து கொண்டனர்.

தனிப்பட்ட பயணமாக ராஜபக்சே லண்டன் வந்துள்ளார். டிசம்பர் 2ம் தேதி அவர் ஆக்ஸ்போர்ட் யூனியனில் பேசவுள்ளார். லண்டனிலேயே மிகவும் சொகுசான, ஆடம்பரமான டோர்சஸ்டரில் ராஜபக்சேவும், அவருடன் வந்திருப்பவர்களும் தங்குகின்றனர்.

தமிழர்கள் மட்டுமல்லாமல் லண்டன் வாழ் சிங்களர்களும் கூட ராஜபக்சே மீது அதிருப்தியில் உள்ளனர். அதற்குக் காரணம், தங்களது 'மாவீரனான' பொன்சேகாவை சிறையில் போட்டு பூட்டி வைத்திருப்பதால் என்பது குறிப்பிடத்தக்கது.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

மிகக் குறுகிய கால அவகாசத்தில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அமைதியான முறையில், கொடுங்கோலனின் வருகைக்கு எதிர்ப்பை தெரிவித்த ஈழத்தமிழர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

இதே நிகழ்வு, மீனம்பாக்கத்தில் நடந்திருந்தால்..

"துட்ட காமுனு..மகனே வருக..!

விட்ட தமிழனை 'முடித்து'த் தருக..!!"

என காலில் விழுந்து வணங்கி, செங்கம்பள வரவேற்பே எம்மீனத்தலீவர் பெருமகனார், தமிழகம் சார்பாக கொடுத்திருப்பார். :rolleyes:

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 30, 2010

மகிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து லண்டன் கீத்றூ விமான நிலையத்தில் நேற்றிரவு 500- 1000 வரையான தமிழர்கள் கூடி, தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அவசர அவசரமாக குறுஞ்ச்செய்திகள் மூலம் பரிமாறப்பட்ட செய்திகளின் படி குறித்த நேரத்திற்குள் தமிழர்கள் அங்கு திரண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் "Stop Genocide" என்று பொறிக்கப்பட்ட மேலங்கிகளை அணிந்தவாறு கைகளில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களினது புகைப்படங்களையும் தாங்கியிருந்தனர். இதனால் விமான நிலையப் பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்றிரவு 8:00 மணிமுதல் லண்டன் கீத்றூ விமான நிலையத்துக்குள் வர ஆரம்பித்த தமிழ் மக்கள் 10:00 மணியளவில் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனால் அதிருப்தியுற்ற பொலிசார் இது அனுமதியற்ற போராட்டம் என குறிப்பிட்டுள்ளனர்.

ஈழ நாதம்

இலண்டன் வந்தால் கைது செய்ப்படுவார் என்று சில அமைப்புக்கள் பூச்சாண்டி காட்டினவை. அது சம்மந்தமாக எந்தவித முயற்சியும் செய்ததுபோல தெரியவில்லையே.

சிலவேளை கே.பி போல மகிந்தவுடன் ஏதாவது உடன்பாட்டுக்கு வந்திருப்பினமோ என்னவோ

போர்க்குற்றவாளியான மகிந்த தன்னுடைய மந்திரிகள் கும்பலுடன் இன்று இலண்டன் வந்தடைந்தார்.

இவரது வரவை அறிந்த மக்கள் ஓர் இரு மணித்தியால ஏற்பாட்டில் மகிந்த வரவிருந்த இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் திரண்டனர். விமான காவல் அதிகாரிகள் செய்வதரியாது திகைத்து நிற்க தேசியக் கொடி ஏந்தியவாறு மக்கள் போர்க் குற்றவாளி மகிந்த போர்க் குற்றவாளி மகிந்த என பெரும் குரல் கொடுத்து போராட்டம் நடத்தினார்கள்.

மக்களின் அக்குரல் விமான நிலையமெங்கும் எதிரொளித்தது அந்த எதிரொளியில் விமான நிலைய வரவேற்பிடமே அதிர்ந்தது.

அதன் பின்பு மக்களிம் வந்த காவல் துறையினர் இங்கு போராட்டம் நடாத்த அனுமதி இல்லை இருப்பினும் நீங்கள் இங்கு போராட்டம் நடத்த அனுமதி தருவதாக கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.

மகிந்தவின் விமானத்தில் வந்த சில தமிழர்களை அழைத்து இளையோர்கள் விசாரித்ததில் மகிந்த மக்கள் திரண்டிருப்பதை அவர்கள் அறிந்து மாற்றுப்பாதை ஊடாக விமான நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்தனர்.

விலைக்கு வாங்கிய சில தமிழர்களை கொழும்பில் சந்தித்துவிட்டு புலம்பெயர் மக்களை சந்தித்ததாக புலுடா விடும் மகிந்த கொம்பனி இன்று உண்மையான புலம்பெயர் தமிழர்களை கண்டு பின் வாசல் வழியாக ஓட்டமெடுக்க வைத்தனர் புலம்பெயர் மக்கள்.

மகிந்தவின் விமானத்தில் வந்த சிங்களவர்கள் பலர் அவ்வழியே வந்தனர் தேசியக் கொடியேந்திய தமிழ் மக்களை கண்டவுடன் மிரண்ட அவர்கள் சுவர் ஓரமாக ஒதிங்கியபடியே சென்றனர்.

இருப்பினம் எந்தவெரு தமிழரும் எந்தவெரு சிங்களவருக்கும் எவ்வித சிக்கல்களையும் ஏற்படுத்தவில்லை.

http://www.rste.org/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D!.html

இலண்டன் வந்தால் கைது செய்ப்படுவார் என்று சில அமைப்புக்கள் பூச்சாண்டி காட்டினவை. அது சம்மந்தமாக எந்தவித முயற்சியும் செய்ததுபோல தெரியவில்லையே.

சிலவேளை கே.பி போல மகிந்தவுடன் ஏதாவது உடன்பாட்டுக்கு வந்திருப்பினமோ என்னவோ

எனக்கு தெரிஞ்ச வரையில் அப்பிடி ஒன்றுமே நடக்க இல்ல, ஆனால் 48 மணி நேரத்திற்குள்ள யாராவது ஓர் பாதிகப்பட்டவர் வழக்கு போடலாம் என்று சொன்ன ஞாபகம் இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிட்டனில் கைது செய்யப்படாதிருக்க உதவுங்கள்: மகாராணிக்கு மஹிந்தர் இரகசிய கடிதம்

தான் பிரிட்டனில் கைது செய்யப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சும் வகையில் இங்கிலாந்தின் அரசி எலிசபெத் மகாராணியாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசியக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து உறுதி செய்யப்படுகின்றது.

அக்கடிதம் ஜனாதிபதியின் இரண்டாம் பதவிப் பிரமாணத்துக்கு முன் மகாராணிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மிக உருக்கமான முறையில் கடிதம் தயாரிக்கப்பட்டிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

பிரிட்டன் சுற்றுப் பிரயாணத்தின் போது தான் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் மற்றும் தன்னை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்பன குறித்து மகாராணிக்கு அதில் விளக்கமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

"மாட்சிமை தாங்கிய மகாராணியின் தலைமையிலான பிரித்தானியாவினால் அறிமுகம் செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமையின் கீழ் நான் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கின்றேன்.ஜனாதிபதித் தோ்தலின் போதும் நான் பெருமளவான இலங்கை மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.இன, மத, மொழி பேதமின்றி இலங்கையின் பெருவாரியான மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.உலகின் மோசமான பயங்கரவாத அமைப்பைத் தோற்கடிப்பதற்கு நான் தலைமைத்துவம் வழங்கியதன் காரணமாகவே என் தேசத்து மக்கள் என் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்" என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேக்காவை சிறைப்படுத்தி வைப்பதற்கு நேரிட்ட விடயங்கள் அவரது குற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி தனது கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதற்கு மேலாக " நான் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் குறித்த விடயங்களை விரைவாக முன்னெடுக்க உள்ளேன். அவ்வாறான நிலையில் பிரித்தானியாவில் என் மீதான நடவடிக்கைகள் அதனைத் தாமதப்படுத்தச் செய்யும். எனவே நான் பிரித்தானியாவில் இருக்கும் காலப் பகுதிக்குள் எதுவித சட்டச் சிக்கல்களிலும் சிக்காதிருக்கும் வண்ணம் மாட்சிமை தாங்கிய மகாராணியின் கருணையை எதிர்பார்க்கின்றேன்" என்பதாக அவர் தன் கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.

கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மகாராணியின் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட ஏதோ ஒரு உறுதிமொழியின் பேரிலேயே ஜனாதிபதி மஹிந்த தைரியமாக பிரித்தானியாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இது ஒருபுறமிருக்க தான் கைது செய்யப்படாதிருக்க வேண்டி இந்தளவுக்கு ஒரு நாட்டுத் தலைவர் இறங்கிப் போய் கெஞ்ச நோ்ந்துள்ள சந்தர்ப்பம் உலக வரலாற்றில் இதுவே முதல் தடவை என்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மகிந்த வருகைக்கு எதிராக ஹீத்ரோவில் நடந்த போராட்டம்

இன்று (29.11.10) லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் நான்காவது இறங்குதளத்தில் நடைபெற்ற மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிரான போராட்டத்தில் 500 வரையான பிரித்தானியா வாழ் தமிழர்கள் உணர்வு பூர்வமாகக் கலந்துகொண்டனர். இன்று அறிக்கப்பட்ட போராடம் குறித்த் நிகழ்வில் இவ்வளவு தொகையானோர் கலந்துகொண்டமை எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும். கலந்துகொண்டவர்கள் மகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளியென முழக்கமிட்டனர்.

பத்து மணியளவில் சுமார் பத்துப் பேர்வரை மறைத்து வைத்திருந்த புலிக் கொடிகளோடு ஆர்ப்பாட்டத்தின் முன்னேவந்து நின்றனர்.

இதனால் அதிர்ப்தியடைந்த பலர் ஆர்ப்பாட்ட நிகழ்விலிருந்து விலகிச்சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. அதே வேளை பார்வையாளர்களாக நின்றிருந்த ஏனைய இனத்தவர் சிலர் புலிக் கொடிகளைக் கண்டதும் “தமிழ்ப் புலிகள்” என்று பேசிக்கொண்டனர்.

மக்கள் எழுச்சியைப் புலிகளின் எழுச்சியாகக் காட்ட முனைந்தமை புலம் பெயர் நாடுகளில் பல போராட்டங்களின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தது என்பதை பலர் உணரமறுக்கின்றனர். புலிக் கொடிகளோடு போராட்டங்களின் இடையே நுளைபவர்கள் “இவைகள் எல்லாம் புலிகளின் திட்டம்” என்ற இலங்கை அர்சின் பிரச்சாரத்திற்குத் துணைபோகின்றனர். இவர்கள் இலங்கை அரச உளவாளிக் குழுக்களில் அங்கம் வகிக்கலாம் என்ற சந்தேகங்களும் விலகிச்சென்ற பலரின் மத்தியில் காணக்கூடியதாக இருந்தது.

http://inioru.com/?p=18454

மகிந்த பிரிட்டிஷ் குயினுக்கு அனுப்பிய கடிதம் விலாசம் மாறி யாழ் குயினுக்கு வந்த்திட்டுது போல.

  • கருத்துக்கள உறவுகள்

... நேற்று ஹீத்ரோ விமான நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது, அங்கு சில ஒட்டுக்குழுக்களுன் உறுப்பினர்களும் சென்று ஓரமாக நின்றதை சிலர் கண்டுள்ளனர்!!! ... இவர்களை சிங்கள அரசு இப்போராட்டத்தை குழப்ப திட்டமிட்டு அனுப்பியதா??? அது முடியாமல் போய் விட்டதா??? .... சுகனுக்கு ஏதாவது தெரியுமா?????????

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பிரிட்டிஷ் குயினுக்கு அனுப்பிய கடிதம் விலாசம் மாறி யாழ் குயினுக்கு வந்த்திட்டுது போல.

http://www.tharavu.com/2010/11/blog-post_5064.html :rolleyes::)

மகிந்த பிரிட்டிஷ் குயினுக்கு அனுப்பிய கடிதம் விலாசம் மாறி யாழ் குயினுக்கு வந்த்திட்டுது போல.

அர்ஜுன், ... இங்கு இராணியின் ஆட்சி ... இங்கு எக்கட்சி ஆட்சி புரிந்தாலும் ... அதனை இராணியினது அரசு என்று தான் அழைப்பார்கள்!!! அவ பொம்மைதான் ... ஆட்டுவிக்க ஆடும், எழுதிக்கொடுத்ததை வாசிக்கும், ... பொம்மைதான்!!! ... பிரித்தானிய பா.ம. கூட்டத்தொடரை ஆர்ம்பிப்பது என்றால் என்ன, புதிய பிரதமரை பதவி ஏற்கச்செய்ய சொன்னால் என்ன, .... இப்படி பலதுகள் அவவின் பெயரில்தான் நடைபெறுகிறது!! நான் நினைக்கிறேன் கனடாவும் ஏறக்குறைய அதே கட்டமைப்பில் உள்ள நாடுதானே!!! ... ஆகவே இராஜதந்திர காரியங்களானாலும், அவை இராணியின் பெயரிலேயே(ஏனைய நாடுகளில் ஜனாதிபதியோ, பிரதமரோ போல) கையாளப்படுகிறது!!!

Edited by Nellaiyan

மகிந்த வருகைக்கு எதிராக ஹீத்ரோவில் நடந்த போராட்டம்

பத்து மணியளவில் சுமார் பத்துப் பேர்வரை மறைத்து வைத்திருந்த புலிக் கொடிகளோடு ஆர்ப்பாட்டத்தின் முன்னேவந்து நின்றனர்.

இதனால் அதிர்ப்தியடைந்த பலர் ஆர்ப்பாட்ட நிகழ்விலிருந்து விலகிச்சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. அதே வேளை பார்வையாளர்களாக நின்றிருந்த ஏனைய இனத்தவர் சிலர் புலிக் கொடிகளைக் கண்டதும் “தமிழ்ப் புலிகள்” என்று பேசிக்கொண்டனர்.

மக்கள் எழுச்சியைப் புலிகளின் எழுச்சியாகக் காட்ட முனைந்தமை புலம் பெயர் நாடுகளில் பல போராட்டங்களின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தது என்பதை பலர் உணரமறுக்கின்றனர். புலிக் கொடிகளோடு போராட்டங்களின் இடையே நுளைபவர்கள் “இவைகள் எல்லாம் புலிகளின் திட்டம்” என்ற இலங்கை அர்சின் பிரச்சாரத்திற்குத் துணைபோகின்றனர். இவர்கள் இலங்கை அரச உளவாளிக் குழுக்களில் அங்கம் வகிக்கலாம் என்ற சந்தேகங்களும் விலகிச்சென்ற பலரின் மத்தியில் காணக்கூடியதாக இருந்தது.

http://inioru.com/?p=18454

இதில் இந்த " பத்து பேர் " கொடு பிடித்ததும் அதை ஆய்வதும் நல்லதே. அதை பெரிதாய் ஊதாமல் சமூகமளித்த ஆயிரம் பேர், எனவே 99% வீதமானோர் பற்றியும் அவர்களுக்கு ஆதரவும் கொடுப்போம்.

வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்..

வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்...

Edited by akootha

நாங்கள் போக வெண்டிய தூரம் வேறு.இந்த பகட்டும் சும்மா விலாசமும் இல்லை.

நாங்கள் என்ன செய்கின்றோம் என்று அவர்கள் மண்டயை உடைக்க வேணும் .

ஒபாமாவிடமும், ஐனா விடமும் நாங்கள் ஒட்டிவிட்டோம் உங்கள் பாடு திண்ட்டாட்டம் தான் என்று சீன் விட வேண்டும்,அதே போல் அதற்கான வேலையயும் செய்ய வேண்டும்.

சண்டித்தனம் தான் என்று அலையுறீங்க இப்படியே தொடருங்கோ ஒன்றும் கிடைக்காது.

இதில் இந்த " பத்து பேர் " கொடு பிடித்ததும் அதை ஆய்வதும் நல்லதே. அதை பெரிதாய் ஊதாமல் சமூகமளித்த ஆயிரம் பேர், எனவே 99% வீதமானோர் பற்றியும் அவர்களுக்கு ஆதரவும் கொடுப்போம்.

வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்..

வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்...

அடையாள கொடியை கொண்டு போய் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் யார் யாருக்காக என்ன செய்கிறார்கள் என்று வெளியில் நின்று பார்க்கின்ற அல்லது செய்தி திரட்ட வருபவருக்கோ ஒருவருக்கும் விளங்காது.

நிச்சயம் எங்கள் அடையாளம் தான் தமிழர் சிங்கள ஏகாதி பத்தியத்திற் எதிராக போராடுகிறார்கள்ள் என்ற உண்மை விளங்கும்..

இல்லையேல் மற்ற நாட்டு போராட்டங்கள் போல் எம்மையும் சொல்வார்கள்.

உதாரணமாக ஈரான் நாட்டு அரசுக்கு எதிராக புலம் பெயர்ந்த நாட்டில் உள்ள ஈரானிய மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் போது தங்கள் நாட்டு ஈரான் கொடியையே கொண்டு செல்வார்கள். அது அவர்களுக்குள் இருக்கும் அரசியல் பிரச்சனை.

ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை, தமிழர்கள் சிங்க கொடியையோ, சிறிலங்கா என்ற தேசத்தையே ஏற்காதவர்கள்.

நிச்சயம் நாம் யார் என்ற அடையாளம் காட்ட கொடி தேவை.30 வருட உழைப்பில் ,உயிர்கொடையில் கிடைத்ததுதான் இந்த அடையாளம்.

அதைப்பார்த்து ஒதுங்குவது, வேண்டாம் என்பது ஒரு அபத்தமான வாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

[/qஅடையாள கொடியை கொண்டு போய் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் யார் யாருக்காக என்ன செய்கிறார்கள் என்று வெளியில் நின்று பார்க்கின்ற அல்லது செய்தி திரட்ட வருபவருக்கோ ஒருவருக்கும் விளங்காது.uote]

புலிக்கொடி புலிகளின் கொடியல்ல தமிழர்களின் கொடியென்பதை பிரித்தானியாவில் சட்டரீதியாக நிறுவவேண்டும்.வழக்குப்போட்டாவது செய்யவேண்டும்.மற்றைய நாடுகளி;ல் அமெரிக்கா உட்பட)பிரச்சனை இல்லை.பிரித்தானியாவில் உள்ள சில தமிழர்கள்தான் இதைக் கிண்டி விடுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.