Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் இயக்கம் - ஒழுங்கமைக்கும் நடவடிக்கையில் போராளிகள்

Featured Replies

இது வரை உள்வட்டாரங்களில் மட்டுமே அறியப்பட்டிருந்த பரபரப்பு மிகுந்த செய்தி ஒன்றை இம் முறை நடந்த மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் அரங்கத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.

விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட

என்றும் இல்லாதபடி வழமைக்கு மாறான வகையில் இம்முறை இரண்டு மாவீரர் நாள் அறிக்கைகள் வெளியாகின. ஒரு அறிக்கை வழமையைப் போன்று விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரில் நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

மற்றைய அறிக்கை விடுதலைப் புலிகளின் மரபுக்கு முரணாக அனைத்துலகப் பணியகத்தின் பெயரில் நவம்பர் 26 அன்றே வெளியிடப்பட்டிருந்தது.

சில நாடுகளில் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது. சில நாடுகளில் அனைத்துலகப் பணியகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில நடந்த மாவீரர் நாள் நிகழ்வில் அனைத்துலகச் செயலகத்தின் அறிக்கை வாசிக்கப்பட, அவுஸ்ரேலியாவிலேயே உள்ள சிட்னியில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வில் அனைத்துலப் பணியகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்ட அலங்கோலமும் நடந்தேறியது.

விடுதலைப் புலிகளின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கின்ற தலைமைச் செயலகத்திற்கு விடுதலைப் புலிகளின் துறைகள் ஒன்றின் உப பிரிவான அனைத்துலகப் பணியகம் கட்டுப்பட மறுப்பதோடு தலைமைக்கு சவாலும் விடுகிறது என்கின்ற பாரதூரமான செய்தியை இந்த நிகழ்வுகள் அம்பலப்படுத்தின.

இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் பற்றி கூறியாக வேண்டும். மே 2009 வரை தேசியத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தமிழீழத் தாயகத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் இயங்கி வந்தது. முள்ளிவாய்க்கால் அனர்த்தத்திற்கு பின்பு தேசியத் தலைவரின் நேரடி வழிநடத்தலை இழந்த தலைமைச் செயலகம் குறிப்பிட்ட காலத்திற்கு தன்னுடைய செயற்பாட்டையும் இழந்து போயிருந்தது.

ஆயினும் சிறிலங்காப் படைகளின் முற்றுகையை உடைத்து வெளியேறிய போராளிகள் மீண்டும் தலைமைச் செயலகத்தை புறநிலை நாடுகளில் இருந்து செயற்பட வைத்தார்கள். பல மூத்த தளபதிகள் போரில் கொல்லப்பட்டு விட்டாலும், ஆளுமை மிக்க சில தளபதிகள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் எனக் குறிப்பிடத்தக்க சிலர் தப்பி வந்து இந்த தலைமைச் செயலகத்தை மீள உருவாக்கி, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியமைக்கும் பணியில் இறங்கினார்கள்.

ஆனால் இந்தப் பணியில் இவர்களுக்கு ஒரு பெரும் சவால் காத்திருந்தது. தலைமைச் செயலகத்தை உருவாக்கிய போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் நன்கு அறிமுகமானவர்களாகவே இருந்தார்கள். வெளிநாட்டுக் கிளைகளின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான் அவர்கள். ஆனால் புலம்பெயர் வாழ் மக்களுடன் அவர்களுக்கு அறிமுகம் இருந்திருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் புலம்பெயர் வாழ் மக்களிற்கும் பாலமாக செயற்பட்டு வந்த அனைத்துலகப் பணியகம் சிலருடைய தவறான வழிநடத்தலால் குளறுபடியாக நடக்கத் தொடங்கியது. புலம்பெயர் மக்களுடன் தமக்கு இருக்கும் நேரடித் தொடர்பை தமது பலமாக கருதிய குறிப்பிட்ட நபர்கள் சில விடயங்களில் தான் தோன்றித்தனமாக நடக்கத் தொடங்கினார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தரவுகள் சிலவற்றை செயற்படுத்தவும் இவர்கள் மறுத்தார்கள்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அனைத்துலகப் பணியகத்தின் செல்வாக்கில் செயற்படுகின்ற ஊடகங்களாகிய பதிவு, ஈழமுரசு, கருப்பு போன்றவற்றில் விடுதலைச் செயற்பாட்டாளர்களை கொச்சைப்படுத்துகின்ற “திறந்த மடல்”, கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் வெளிவரத் தொடங்கிய பொழுது, அவைகளை நிறுத்தும்படி கண்டிப்பான உத்தரவு விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து சென்றது.

ஆனால் அவற்றை நிறுத்துவதற்குப் பதிலாக போராளிகளைக் காட்டிக் கொடுக்கின்ற கைங்கர்யத்தில் இந்த ஊடகங்கள் இறங்கின. ரகசியமாக செயற்பட்டு வந்த போராளிகள் சிலரின் பெயர்களையும் இருப்பிடங்களையும் வெளியிட்டு கட்டுரை வரைந்து பெரும் துரோகச் செயலை இந்த ஊடகங்கள் செய்தன. இந்தக் காட்டிக்கொடுப்பின் காரணமாக சில நெருக்கடிகளையும் போராளிகள் சந்திக்க நேர்ந்தது.

பேச்சுக்களின் மூலம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அதுவரை சிலரிடம் இருந்த நம்பிக்கையின் மீது இந்தச் சம்பவம் கல்லைத் தூக்கிப் போட்டது. அனைத்துலப் பணியகம் நவம்பர் 26 அன்று மாவீரர் நாள் அறிக்கை விட்டு செய்த மலிவான அரசியல் நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது.

இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. தலைமைச் செயலகம் சார்பில் குறிப்பிட்ட நாடுகளுக்கு போராளிகள் அனுப்பப்பட்டு நிர்வாக மாற்றங்களுக்கான வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் தமது ஊடக பலத்தை பயன்படுத்தி போராளிகளை “மர்ம நபர்கள்”, “கேபியின் ஆட்கள்” என்று பரப்புரை மேற்கொள்ளவும், எதிரியிடம் காட்டிக் கொடுக்கவும் தயங்காத கூட்டத்தை கையாள்வது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உண்மையிலேயே சவாலான விடயமாகவே இருக்கப் போகிறது.

ஆயினும் தலைமைச் செயலகத்தில் செயற்படுகின்ற போராளிகள் புலிகளுக்கே உரிய உறுதியோடு இருக்கிறார்கள். நிலைமையை ஒழுங்குபடுத்தி புலிகள் இயக்கத்தை துடிப்போடு செயற்பட வைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

வரும் வாரங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகம் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளில் பல மட்டங்களில் பலவிதமாக விளங்கிக் கொள்ளப்படும். குழப்பங்களுக்கு இடம் அளிக்காது மக்களும் விடுதலைச் செயற்பாட்டாளர்களும் தெளிவாக இருக்க வேண்டியது இந்த இடத்தில் மிக முக்கியமானதாகும்

சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காது, சொந்த மூளையைக் கொண்டு சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டியது மிகவும் அவசியம். சில பொய்ப் பரப்புரைகளுக்கு பலியானால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் எழுச்சியை இல்லாமல் செய்வதிலேயே போய் முடியும்.

ஆகவே வரும் வாரங்களில் புலம்பெயர் ஊடகங்களின் வெளிவர இருக்கின்ற செய்திகள் குறித்து மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.

புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை தீர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்திறன் மிக்க ஒரு இயக்கமாக மீண்டும் உருவெடுக்க இருக்கின்ற ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றோம் என்பதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும்.

முக்கிய குறிப்பு: இக் கட்டுரையில் பல விடயங்கள் சுயதணிக்கை செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் விரிவாக பேச முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் காலத்தின் தேவை கருதி தவிர்க்கப்பட்டுள்ளன. நிலைமை அனுமதித்தால் முழு விபரங்களோடு விரிவான கட்டுரை வெளிவரும்.

பாராட்டுக்கள் சபேசன். உங்கள் துணிச்சலான முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். அதேநேரம் உந்த பதிவு ஈழம்ஈநியூஸ் அதிர்வு ஈழநாடு என்ற குப்பைகள் உங்களுக்கு துரோகி பட்டம் தருவதற்கு தயாராகி கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில நடந்த மாவீரர் நாள் நிகழ்வில் அனைத்துலகச் செயலகத்தின் அறிக்கை வாசிக்கப்பட, அவுஸ்ரேலியாவிலேயே உள்ள சிட்னியில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வில் அனைத்துலப் பணியகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்ட அலங்கோலமும் நடந்தேறியது.

என்ன வித்தியாசம்? :)

எனக்கு தெரிய ஆசிய நாடு ஒண்றில் இருந்து ஒலிபரப்பாகும் புலிகளின் குரல் வானொலியில் புலிகளின் செலயகத்தால் வந்த மாவீரர் நாள் "அறிக்கை" யே வெளி வந்து இருந்தது... அதுதான் விடுதலைப்புலிகளினதும் கூட ....

வேறு வந்ததா என்பது எனக்கு தெரியாது...

சில சமயங்களில் நாங்கள் வேண்டாதவர்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ எண்று தோண்றுகின்றது... !

Edited by தயா

விடுதலைப்புலிகள் அமைப்பானது முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் முற்று முழுதாக துடைத்து அழிக்கப்பட்டு விட்டது என்பது நடைமுறை யதார்த்தம். தற்போது உதிரியாக விடுதலைப்புலிகளின் பெயரினை உபயோகித்து “செயற்படுகின்ற” அமைப்புக்களுக்கு விடுதலைப்புலிகளின் எந்தவொரு பண்புகளோ, பார்வைகளோ அல்லது விடுதலைப்புலிகளுக்கேயுரிய ஆளுமையோ கிடையாது. இவர்கள் விடுதலைப்புலிகளின் பெயர்களைப் பாவித்து ஒரு குறிப்பிட்ட குழுமத்தின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் தக்க வைப்பதற்கும் பொதுமக்களுக்கு ஒரு போலியான நம்பிக்கையை ஏற்படுத்தி தமது நலன்களை முன்நிறுத்தவே முயற்சிக்கின்றார்கள்.

தற்போதைய நிலையில் மக்களாகிய நாம் “விடுதலைப்புலிகள்” என்கின்ற பெயரில் செயற்படும் அனைவரையும் நிராகரிப்பதே பொருத்தமானதாகவிருக்கும்.

மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் தங்களது செயற்பாடுகளின் மூலம் மக்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஆரம்பித்திலிருந்து கட்டியெழுப்ப முயற்சித்தல் வேண்டும்.

முள்ளிவாய்க்காலின் பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது தற்போதும், எதிர்காலத்திலும் செயற்படுகின்ற, செயற்படப்போகின்ற அமைப்புக்களினதும், தனிநபர்களினதும் நடவடிக்கைகளை ஒப்பிட உபயோகப்படுத்தப்படக்கூடிய ஒரு அளவுகோல் மட்டுமே. அது மக்களை வழிநடத்தும் அமைப்பாக இருக்கக்கூடிய எல்லா அம்ச்ங்களையும் இன்று இழந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை அழிக்க இனி சிங்களவன் தேவையில்லை :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனை அழிக்க இனி சிங்களவன் தேவையில்லை :(

அக்கா,

நீங்க சிரிச்சிட்டு,நக்கலாக சொன்னால் கூட அது தான் உண்மை.

(நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன) :)

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா,

நீங்க சிரிச்சிட்டு,நக்கலாக சொன்னால் கூட அது தான் உண்மை.

(நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன) :)

அதென்ன நான் என்ன நாயா?...நான் எதை நக்கினேன் என சொல்லுங்கோ பார்ப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

தற்போதைய நிலையில் மக்களாகிய நாம் “விடுதலைப்புலிகள்” என்கின்ற பெயரில் செயற்படும் அனைவரையும் நிராகரிப்பதே பொருத்தமானதாகவிருக்கும்.

இது தான் எனது நிலைப்பாடும். புலி,புலி என்று சொல்லி இருக்கிற சனத்துக்கும் புதைகுழி தோண்டாமல் ஆக்கபூர்வமான செயற்பாடுகளைச் செய்வது தான் சிறந்தது. புலி என்ற பெயரில் சிலர் தமது சொந்த வயிற்றுப்பிழைப்பையும்,இந்திய,இலங்கை அரசுகள் தமது இருப்பையும் உறுதியாக்குகின்றன அதுக்கு கிள்ளுக்கீரையாக தமிழினம்.

யார் உண்மையான புலிகள் யார் பொய்யான புலிகள் என்பது அவர்களின் அரசியற் தெளிவு அதன் பாற்பட்ட செயற்திறன் ஆகியவறில் இருந்தே மக்களால் அடையாளங்க்காணப்படும்.

புலிகளின் பெயரில் கருணானிதியின் செம்மொழி மானாட்டை வாழ்த்தி அறிக்கை விட்டவர்கள் யார்? இவர்களின் அரசியற் தெளிவு மக்களின் எண்னக்களுடன் மாறுபட்டதாக இருந்தது.மக்களின் விடுதலையை முன் நிறுத்தாத அவர்களின் அரசியலை முன் நிறுத்தாத செயற்பாடுகளை உடையோர் தேசிய விடுதலைப் போராட்டத்துக்குத் தலமை தாங்க முடியாது.புலிகளும் பிரபாகரனும் தமது அரசியலாலும் செயற்பாட்டாலும் மட்டுமே மக்களிடம் தமக்கான இடத்தைப் பிடித்தனர்.அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு வருபவர்கள் தமது செயற்பாட்டாலும் தமது மக்கள் சார்ந்த அரசியலாலும் மட்டுமே மக்காசியளின் அங்கீகாரத்தைக் கோர முடியும்.

கருணாவும் கேபியும் புலிகள், அவர்களின் அரசியலால் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டனர்.ஒருவர் புலியாக இருந்தால் மட்டும் அவர் இன்று மக்களின் ஆதரவைக் கோர முடியாது.இந்த அறிக்கைப் போரை நிற்பாட்டி விட்டு களத்திலும் புலத்திலும் மக்கள் மத்தியில் செயற்படுவதே முக்கியமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன நான் என்ன நாயா?...நான் எதை நக்கினேன் என சொல்லுங்கோ பார்ப்போம்

ஜயோ...நீங்க ரொம்ப படிச்சிருக்கிறிங்க அக்கா, உங்க கூட பேசினது தப்பா போச்சு????? :)

நான் தமிழரோடை நிலைய சொன்னேன். என்னையும் சேர்த்து அகதி வாழ்வில் சுகம் காணுற,அதை பெருமையா பேசுற ஒரு இனத்துக்கு விடுதலை தேவையா என்பதை தான்"நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்ற பழமொழி மூலம் சொன்ன்னேன்.

(மற்றும் படி என் அக்காவை நான் ஏன் தரகுறைவா சொல்லணும்?????) :(

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் மாறி மாறி அடிபட்டுச் சாகவேண்டியதுதான்.றோவின் சமீபத்திய அறிக்கைகளுக்கு பக்கபலமாக இருக்கிறது கட்டுரை.இந்தக் களேபரங்களுக்கள் போர்குற்ற விசாரணைக்கான அழுத்தங்கள் கிடப்பில் போடப்பட்டு தமிழர்களை ஒரு மாய போதைக்கள் வைத்திருக்க இந்தியாவும் சிறிலங்காவும் போடுகின்ற திட்டங்கள் வெற்றிகரமாக நம்மவர்கள் சிலரால் முன்னெடுக்கப்படுகின்றது.சர்வதேசம் தமிழர்களுக்கு நீதி வழங்காவிடின் புலிகளின் மீளெழுச்சி தவிர்க்க முடியாதது.ஆனால் புலிகள் தோன்றிய காலத்திலிருந்து தங்கள் எந்த நடவடிக்கைகளையும் பகிரங்கமாகச் சொல்லி விட்டுச் செய்வதில்லை. (சொல்லுக்கு முன்னே செயல் இருக்கும்).அதுவும் பகிரங்கமாக கட்டுரைகளை எழுதும் ஆய்வாளர்களுக்கு? சொன்னால் என்ன ஆகும்.இந்தக் கட்டுரையைக் கண்டும் காணமல் விடவதே தமிழர்களின் எதிர்காலத்துக்கு நல்லது.

தமிழனை அழிக்க இனி சிங்களவன் தேவையில்லை :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது உண்மை...எது பொய்.....யார் நல்லவர்....யார் துரோகி.....?? இவை அனைத்துக்குமான விடை அண்ணை வெளியில வரும் போதுதான் தெரியவரும்....அதுவரைக்கும் எங்களுக்குள்ளேயே நாங்கள் சண்டை பிடிக்கிறது தவிர்க்க இயலாததும் கூட...!!!, ஆனால் தவிர்ப்பது நல்லது....

நாங்கள் இரண்டு பட்டால் இதன் மொத்த பலனையும் பெறப் போவது எதிரி தான்.....புரிஞ்சு செயல்படுங்கோ...இப்பிடி தமிழினம் எங்களுக்குள்ளேயே அடிபட்டு அழிஞ்சு போறதுக்கா அத்தனை ஆயிரம் மாவீரர்???

நீங்கள் தலைவனின் வழியை விட்டு விலகுகின்றவர்களை விமர்சிப்பதை விட்டு; தலைவனின் வழியில் செல்பவர்களோடு சேர்ந்து செயல்படுங்கள்; இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் விமர்சனத்திலேயே வாழப்போகின்றோம்...துரோகத்தை தொடர்ந்தும் விமர்சிப்பதால் என்ன பயன்??

துரோகத்தை விமர்சிப்பதை விட்டு விட்டு; துரோகத்தை புறக்கணியுங்கள்; அது தன் வழியே சுவடே இல்லாமல் அழிந்து விடும்...

தமிழீழம், தமிழீழம், தமிழீழம் அதன் வழி செல்பவர்களோடு கை கோர்த்து நடவுங்கள்; அதை விட்டு விலகுகின்றவர்களை வழியிலேயே விட்டு விட்டு நீங்கள் பயணத்தை தொடருங்கள்.....

வரலாற்று தாய் எமக்கென சுமக்கின்ற தமிழீழ குழந்தை பிறப்பெடுக்கும் பொழுது அவர்களுக்குரிய தண்டனை அறிவிக்கப்படும்......

தொடருங்கள்; காத்திருங்கள் - தமிழீழம் பிறப்பதும் உறுதி; துரோகிகள் அழிவதும் உறுதி...

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

Edited by சுடரொளி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தலைவனின் வழியை விட்டு விலகுகின்றவர்களை விமர்சிப்பதை விட்டு; தலைவனின் வழியில் செல்பவர்களோடு சேர்ந்து செயல்படுங்கள்.

யார் அவர்கள்?

கேபியும் தலைவரின் வழி என்கிறார். புலத்தில் மந்தை மேய்ப்பவர்களும் தலைவர் வழி என்கின்றனர்.

ஒருவரோடும் சேராமல் தாயகத்தில் உண்மையான கஷ்டங்களை அனுபவிக்கும் மக்களுக்கு ஏதாவது உதவிகள் செய்து மக்களை மீண்டும் தமது சொந்தக்காலில் நிற்கவைத்தால், அவர்களாகவே அரசியல்விடுதலையைத் தமக்குத் தெரிந்தவழியில் தேடுவார்கள்.

நீங்கள் சொல்லுற இரண்டையும் தாண்டி மூண்டாவதாகவும் ஒரு அணி இருக்கிறது... ! இதை தாண்டி விவரிக்க மனசு வரவில்லை... எனக்கு தேவை இல்லாதை வேலை அது எண்டு உள்ளுணர்வு சொல்லுது... ( தெரிந்தவைகளை கூட பொதுவான இடத்தில் சொல்ல முடியவில்லை.. மன்னிக்கவும்)

யார் உண்மையான புலிகள் யார் பொய்யான புலிகள் என்பது அவர்களின் அரசியற் தெளிவு அதன் பாற்பட்ட செயற்திறன் ஆகியவறில் இருந்தே மக்களால் அடையாளங்க்காணப்படும்.

புலிகளின் பெயரில் கருணானிதியின் செம்மொழி மானாட்டை வாழ்த்தி அறிக்கை விட்டவர்கள் யார்? இவர்களின் அரசியற் தெளிவு மக்களின் எண்னக்களுடன் மாறுபட்டதாக இருந்தது.மக்களின் விடுதலையை முன் நிறுத்தாத அவர்களின் அரசியலை முன் நிறுத்தாத செயற்பாடுகளை உடையோர் தேசிய விடுதலைப் போராட்டத்துக்குத் தலமை தாங்க முடியாது.புலிகளும் பிரபாகரனும் தமது அரசியலாலும் செயற்பாட்டாலும் மட்டுமே மக்களிடம் தமக்கான இடத்தைப் பிடித்தனர்.அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு வருபவர்கள் தமது செயற்பாட்டாலும் தமது மக்கள் சார்ந்த அரசியலாலும் மட்டுமே மக்காசியளின் அங்கீகாரத்தைக் கோர முடியும்.

கருணாவும் கேபியும் புலிகள், அவர்களின் அரசியலால் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டனர்.ஒருவர் புலியாக இருந்தால் மட்டும் அவர் இன்று மக்களின் ஆதரவைக் கோர முடியாது.இந்த அறிக்கைப் போரை நிற்பாட்டி விட்டு களத்திலும் புலத்திலும் மக்கள் மத்தியில் செயற்படுவதே முக்கியமானது.

நாரதர் கலகம் நன்மையில் முடியட்டும்... கருணா நிதிக்கு புலிகள் கடிதம் எழுதியது ஒருபக்கம் இருக்க கருணா நிதியின் மான் ஆட மைலாட சேர்மனியில் நடக்குதாம் அதுகும் புலிகளின் செயற்பாட்டாளர்கள் என கூறும் சிலர் மக்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றுதான் நடக்குது.

ஐக்கியராட்சியத்தில் மானாட மைலாட புறக்கணிக்க வேண்டும் என்று புலிக்கு வேலை செய்வோர் சொன்ன ஞாபகம் இருக்கு. இப்ப நாட்டிற்கு நாடு புலி மாறுதோ அல்லது புலி செயற்பாட்டாளர்கள் மாறிவிட்டினமோ தெரியாது.

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்திருந்து பார்ப்போம். உண்மை பொய் ஒவ்வொருவரின் செய்றபாட்டின் மூலம் மக்களே அறிந்து கொள்வார்கள். ஆனால் இப்படியான கட்டுரைகள் றோ போன்றவர்களுக்கு புகுந்து விளையாட மிகுந்த வசதியை கொடுத்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுற இரண்டையும் தாண்டி மூண்டாவதாகவும் ஒரு அணி இருக்கிறது... ! இதை தாண்டி விவரிக்க மனசு வரவில்லை... எனக்கு தேவை இல்லாதை வேலை அது எண்டு உள்ளுணர்வு சொல்லுது... ( தெரிந்தவைகளை கூட பொதுவான இடத்தில் சொல்ல முடியவில்லை.. மன்னிக்கவும்)

ஐயோ.. வேணாங்க, விட்டிருங்க! அப்புறம், ஒங்களையும் 'ரா'வோட ஆளுன்னுடுவாங்க.. :)

ஐயோ.. வேணாங்க, விட்டிருங்க! அப்புறம், ஒங்களையும் 'ரா'வோட ஆளுன்னுடுவாங்க.. :)

எல்லாவற்றையும் வாசித்து நினைத்து ரோ, சிங்களம் இன்னும் பலர் சந்தோசமாக இருப்பார்கள் என்பது மட்டும் உண்மை

பொருத்தமில்லாத தனிநபர் கட்டுரை!

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய குறிப்பு: இக் கட்டுரையில் பல விடயங்கள் சுயதணிக்கை செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் விரிவாக பேச முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் காலத்தின் தேவை கருதி தவிர்க்கப்பட்டுள்ளன. நிலைமை அனுமதித்தால் முழு விபரங்களோடு விரிவான கட்டுரை வெளிவரும்.

நீங்கள் சொல்லுற இரண்டையும் தாண்டி மூண்டாவதாகவும் ஒரு அணி இருக்கிறது... ! இதை தாண்டி விவரிக்க மனசு வரவில்லை... எனக்கு தேவை இல்லாதை வேலை அது எண்டு உள்ளுணர்வு சொல்லுது... ( தெரிந்தவைகளை கூட பொதுவான இடத்தில் சொல்ல முடியவில்லை.. மன்னிக்கவும்)

அப்போ தயா

சபேசனும் அதைத்தான் சொல்ல வாறாரோ.....???

அப்போ தயா

சபேசனும் அதைத்தான் சொல்ல வாறாரோ.....???

தெரியவில்லை அண்ணா...! என்னை விட அதிகமான விடயங்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

தெரியவில்லை அண்ணா...! என்னை விட அதிகமான விடயங்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்....

பொறுப்போடு அமைதியாக இருப்பது என்பது இக்காலத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

அதைத்தான் தற்போது என்னைப்போல் தங்களைப்போல் பலரும் செய்கின்றனர்

அதுதான் சபேசனின் நோக்கமும் என்றால் இதற்கு முன் தலைவர் பற்றிய எழுத்தும் தற்போது புலிகள் பற்றிய வெளியில் கொட்டுதல்களும் ஏன்..............???

விட்டால் எங்கள் நாலுபேருக்குத்தான் தலைவர் ஒளிந்திருக்கும் இடமும் தெரியும் என்பீர்கள் போலிருக்கு?

முள்ளிக்கம்பிக்கால ஆற்றகாலை பிடிச்சு எண்டாலும் வெளியில வந்தாக்காணும் என சனம் நிக்குது .இப்பவும் அமைதிகாப்போம்,மௌனித்திருக்கின்றோம்,பொறுத்திருப்போம்,நேரம் வரட்டும், இந்த படங்காட்டல் எல்லாம் இனி செல்லாது.

இனியும் ஏமாற ஒருத்தருக்கும் ரெடியில்லை.யாழ் கருத்துக்களிலேயே எவ்வளவு மாற்றங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.