Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது

Featured Replies

sudan.gif

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த போதே தெற்குச் சூடானிலும் விடுதலைப்போர் ஆரம்பமானது. 25 ஆண்டுகளுக்கு மேலான காலம் தொடர்ந்த அந்தப் போராட்டம் தற்போது வெற்றியின் விளிம்பை எட்டிப் பிடித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் அல்லது ஓரிரு மாதங்களில் தென் சூடான் தனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டுவிடும்.

தென்சூடானில் கடந்த இருபத்திரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு விடுதலைப் போராட்டம், வெற்றியைத்தொட்டு நிற்கிறது. பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், வேதனைகள் எல்லாம் மறந்து உண்மை யான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தென் சூடானியர்கள் தயாராகி நிற்கிறார்கள். 2005 ஆம் ஆண்டில் கென்யாவின் மத்தியஸ்தத்துடன் வட சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை தனிநாட்டுக் கோரிக்கைக்கான விருப்பு வாக்கெடுப்புவரை கொண்டு வந்துள்ளது. முழுச்சுதந்திர தேசமாகத் தென்சூடான் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ள இன்னும் சில படிகளே இருக்கின்றன. நடந்து முடிந்த கருத்துக் கணிப்பில் இதில் தென்சூடானிய மக்களும், வடசூடானில் வாழும் தென்சூடானிய மக்களும் உலகம் முழுதும் புலம்பெயர்ந்து வாழும் தென்சூடானிய பூர்வீகக் குடிகளும் ஆர்வம் காட்டினர். வாக்கெடுப்பில் 97.5% வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் குழுத் துணைத்தலைவர் டிமோன் வான் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தார்.வடக்கு சூடானில் நடத்தப்பட்ட ஆதரவு வாக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட 116,857 வாக்காளர்களில் 67,597 பேர் வாக்களித்திருந்தனர். இவர்களில் 41% ஒருங்கிணைவுக்கும், 55% தனிநாட்டுக்கும் ஆதரவாகத் தமது வாக்குகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் பெப்ரவரி இடைப் பகுதியில் வெளியிடப்படும். அத்தேர்தல் முடிவுகளின்படி ஜூலை நடுப்பகுதியில் தனி நாட்டு பிரகடனம் மேற் கொள்ளப்படும். வெகுவிரைவில் ஆபிரிக்கா கண்டத்தின் ஐம்பத்து ஐந்தாவது தேசம் உதயமாகும்.

தென்சூடானின் உருவாக்கம்

இன்றைய சூடான் தற்போது இருக்கும் இடத்தில் முன்னர் எகிப்திய நாகரிகங்களுக்குச் சவால் விடும் வகையில் எழுச்சி பெற்றிருந்தது நூபியா என்ற ஆபிரிக்கப் பேரரசு 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பேரரசு நிலை பெற்றிருந்தது என்று கூறப்பட்டாலும் ஆபிரிக்கா வில் நாகரிக உருவாக்க காலம் அதையும் கடந்து செல்வதை ஆராய்ச்சிகள்தெரிவிக்கின்றன. இந்தப் பேரரசு பல்வேறு தாக்குதல்களினால் மெல்ல மெல்ல நலிவுற்றுச் சிதைந்தது. இந்தப் படையெடுப்பாளர்களில் பெரும் பகுதியினர் இஸ்லாமியராக இருந்தனர். அவர்கள் வடசூடானில் வாழ்ந்த நூபியா பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர். இதனால் சூடானிய அரேபியர்கள் என்ற புதிய இனம் வடசூடானில் உருவாகியது. அரேபிய யர்கள் வணிகத்தையும் கடல்சார் பயணங்களையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தமையால் பொருளாதார மற்றும் படை பலமுடையவர்களாக வடசூடானிய அரேபியர்கள் விளங்கினர்.வடசூடான் வெளியாள்களின் படையெடுப்புகளுக்கு உட்பட்ட அளவிற்கு சூடானின் தென்பகுதியானது, ஆரம்பம் முதலே அதிகளவான படையெடுப்புகளால் தாக்கப்படவில்லை. எப்போதும் தனது பழங்குடிப் பண்பாட்டுத் தனித்துவத்தை இழக்காமல் அது இருந்தது. தென்சூடானியப் பிராந்தியத்தில் இன்னும் பண்டைய மக்களது பல்வேறு வாழ்வியல் கூறுகளை அவதானிக்கலாம். இந்தப் போக்கு சூடானின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பெருமளவு வெவ்வேறுபட்ட கலாசாரங்கள் தழைத்தோங்கி வளர்வதற்கான உந்துதலைத் தந்தது. இவ்வாறு ஒரு தேசத்திற்குள்ளேயே வடக்கு தெற்கு என இரு வேறு திசைகளில் பயணித்தவர்களை ஆங்கிலேயரது காலனித்துவம் வெகுவாகப் பாதித்தது. ஆங்கிலேயர் தமது நலன் சார்ந்து செயற்பட்ட வடசூடானில் அதிகளவு அபிவிருத்திகளை மேற்கொண்டனர். தென்சூடான் அடிமைகளை உற்பத்தி செய்யும் நிலமாகவே அவர்களால் பார்க்கப்பட்டது. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தென்சூடான் புறக்கணிக்கப் பட்டது. ஆங்கிலேயர்கள் தமது மதம் சார் அமைப்புக்களுக்கூடாக தென்சூடானில் மக்களை நாகரிகப் படுத்துவதாக அவர்கள் கூறிய பணியை மட்டுமே மேற்கொண்டனர். இறுதியில் நேரடிக் காலனித்துவத்தை ஆங்கிலேயர்கள் உலகத்தி லிருந்து கைவிடும்போது அனைத்து ஆட்சி அதிகாரங்களையும் வடசூடானிடம் வழங்கிவிட்டுச் சென்றனர். ஆட்சியை ஏற்றுக் கொண்ட வடசூடானிய அரேபியர்கள் மொழி, மதம், கலாசார விழுமியங்கள் என்ற விடயங்களில் தென்சூடானியர் மீதான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். 1969 ஆம் ஆண்டில் இருந்து சதிப்புரட்சி மூலம் வடக்கில் ஆட்சிக்கு வந்த கேணல் நிமேரி பல்வேறு அடிப்படைவாத ஒடுக்குமுறைகளைக் கடைப்பிடித்தார். இஸ்லாமிய ஷரியாச் சட்டம் தென்சூடானிலும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இது தென்சூடானியர்களை மத, இன,கலாசாரரீதியாகப் புண்படுத்தியது. இதனால், அதிருப்தியுற்ற தென்சூடானியப் பழங்குடியினர் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் குதித்தனர்.

சூடான் மக்கள் விடுதலைப் படையும் ஆயுதப் போராட்டமும்

தென்சூடானியர்கள் அரசுக்கு எதிராக ஆரம் பித்த வன்முறைப் போராட்டங்கள், கிளர்ச்சிகள் நீடித்துப் பெருகின. 1983 ஆம் ஆண்டளவில் பெரியளவிலான வன்முறையாக அது வெடித்தது. இதனை அடக்குவதற்கு வடசூடானில் இருந்து படையினர் அனுப்பப்பட்டனர். இப்படையினருக்குத் தலைமை வகித்து வந்த ஜோன் கரெங் தென்சூடானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் சொந்த மக்களுடன் இணைந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார். இவரைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே சூடானிய விடுதலை இயக்கம். இந்த இயக்கமானது இராணுவத்துறை, அரசியல் துறை, வெளியுறவுத்துறை என்ற அமைப்பு வடிவில் போராட்டத்தை முன்னெடுத்தது.

ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே வடசூடானின் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களைச் சூடான் மக்கள் விடுதலைப் படையினர் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இவர்களுக்கான ஆயுத வழங்கலை அமெரிக்கா கென்யாவூடாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது. சூடானிய விடுதலை இயக்கத்தின் வெளியுறவுத்துறை யானது அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய வல்லரசுகளுடனும், உலகம் தழுவிய ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடனும் பரஸ்பர நல்லு றவைப் பேணுவதில் கவனம் செலுத்தியது.எப்படித்தான் கட்டுக்கோப்புடைய இயக்கமாக அது இருந்தாலும் அமெரிக்கா சார்புடைய ஒரு விடுதலைப் போராட்டக் குழுவாகத் தான் மாறுவதை அதனால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடிந்ததில்லை. இயக்கத்துக்குள் உட்பிளவுகள் பலவும் சிக்கல் கள் பலவும் இருக்கின்றன. பிரதேசரீதியான, இனரீதியான தன்னாதிக்கத்தையே இந்தப் பிளவுகள் காட்டுகின்றன என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தென்சூடான் அந்தச் சவாலையும் வென்றது

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=96

Edited by Nellaiyan

  • Replies 90
  • Views 5.7k
  • Created
  • Last Reply

நாசமறுந்த இந்தியாக்காறங்கள் மட்டுல் இல்லாட்டி.......... :huh:

இன்றைய எகிப்தில் நடக்கும் சர்வதிகார அதிபருக்கு எதிரான போராட்டம் பற்றி பல ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் உலகம் முழுவதும் வரையப்படுகின்றன. அதில் ஒன்றில் ஒரு மக்கள் போராட்டம் வெல்ல மூன்று காரணிகள் ஒரே கோட்டில் வரவேண்டும் என சொல்லப்படுகின்றது.

  1. சர்வதேச (மேற்குலக) ஆதரவு
  2. அந்த நாட்டை ஆளக்கூடிய தலைமை
  3. இராணுவ ஆதரவு

ஒவ்வொரு போராட்டமும் தனித்துவமானது.

எமது போராட்டம் ஒரு இன விடுதலைப்போராட்டம் என்ற வகையில் எகிப்தில் நடக்கும் போராட்டத்தை விட வித்தியாசமானது. இருந்தாலும் நாம் பல விடயங்களை இதில் இருந்து கற்கமுடியும்.

அந்த நாட்டை ஆளக்கூடிய தலைமை

மேற்குலகம் எகிப்திய அதிபரை கைவிட்டுள்ளது. ஆனால், ஒரு "சரியான" தலைவரை இன்னும் தேடிக்கொண்டுள்ளது.

இராணுவ ஆதரவு

  • மக்களுக்கு இராணுவ ஆதரவு இருந்தபடியால் பிலிப்பைன்ஸ் அதிபர் - சர்வாதிகாரி மார்கோஸ் தோற்கடிக்கப்படார்.
  • சிலி நாட்டின் சர்வாதிகாரி பினசெட், இராணுவ ஆதரவு இருந்த படியால் மக்கள் போராட்டத்தை நசுக்கினார்.

பல தடைகளையும் தாண்டி தென் சூடான் மலர்ந்தது ஒரு பெரிய நம்பிக்கை தரும் செய்தி.

Edited by akootha

  • தொடங்கியவர்

எம்மிடம் ...

* இலக்கு இருந்தது!

* கொள்கை இருந்தது!

* நேர்மையான தலைமை இருந்தது!

* முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைமை இருந்தது!

* மக்கள் பலம் இருந்தது!

* ...

.... ஆனால்

... இராஜதந்திரம் ... மட்டும் இருக்கவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கு சூடானியர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்.எண்ணை வளம் பொருந்திய இடம்.வடக்கு சூடானில் உள்ளவர்கள் அரபியர்கள்,இஸ்லாமியர்கள்.

எம்மிடம் எண்ணையும் இல்லை நாம் கிறிஸ்தவர்களும் இல்லை. எம்மிடம் இன்றும் இலக்கு, கொள்கை மற்றும் மக்கள் பலம் உள்ளன.

எதை தேடி எம்மை சர்வதேசம், அதன் இராசதந்திரம் வரும்?, அவற்றை நாம் உருவாக்கல் வேண்டும்.

இன்று பலப்படும் சிங்கள - சீன - ஈரான் உறவுகளே மேற்குலகத்தையும் இந்தியாவையும் எமது பக்கம் (இராசதந்திர ரீதியாக) திருப்பும் சாத்தியம் உள்ளது.

உண்மையை யாரும் ஒப்புக்கொள்ள போவதில்லை, நாங்கள் செய்தது பயங்கரவாதம் உலகின் கண்களுக்கு.(உண்மையும் கூட)

"பயங்கரவாதம்" என்பது வரைவிலக்கணம் இல்லாத ஒன்று. அது, உண்மையை பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் புனையும் பலம் கொண்ட ஆயுதம்.

எங்கள் போராட்டமானது (பயங்கரவாதமானதா இல்லையா) கோழியா முட்டையா முதலில் வந்தது போன்ற ஒரு அறிவுபூர்வமான கேள்வி அல்ல, இலங்கையின் சரித்திரம் ( குறைந்தது 1948 இல் இருந்து) தெரிந்தவர்களுக்கு.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை யாரும் ஒப்புக்கொள்ள போவதில்லை, நாங்கள் செய்தது பயங்கரவாதம் உலகின் கண்களுக்கு.(உண்மையும் கூட)

பிரித்தானியர்களினால் பயங்கரவாதிகளாகச் சொல்லப்பட்ட நெல்சல் மண்டேலாவின் சிலை பிரித்தானியா பாராளுமன்றத்துக்கு முன்பாக இருக்கும் பூங்காவில் இப்பொழுது இருக்கிறது.

பிரித்தானியர்களினால் பயங்கரவாதிகளாகச் சொல்லப்பட்ட நெல்சல் மண்டேலாவின் சிலை பிரித்தானியா பாராளுமன்றத்துக்கு முன்பாக இருக்கும் பூங்காவில் இப்பொழுது இருக்கிறது.

விடுதலை கிடைக்க முதல் பயங்கரவாதி

விதலை கிடைத்திருந்தால் தலவருக்கும் அமேரிக்காவில் சிலை வைச்சிருப்பாங்கள்,

ஏன் இந்தியாவுடன் அனுசரித்துபோய் இருந்தால் டில்லியிலேயே சிலை வைச்சிருப்பாங்கள்

அப்புவுக்கு ஒரு பச்சை...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை யாரும் ஒப்புக்கொள்ள போவதில்லை, நாங்கள் செய்தது பயங்கரவாதம் உலகின் கண்களுக்கு.(உண்மையும் கூட)

அமெரிக்கா ஈராக்,ஆப்கானிஸ்தான் மக்கள் மீது நடாத்தும் மிலேச்சதனமான தாக்குதலாகட்டும்,இந்தியா காஸ்மீர் மக்கள் மீது மக்கள் மீது இராணுவம் மூலம் நடாத்தும் அராஜகங்கள் எப்படி கூறப்படும்?

குறிப்பு: கேள்வி கேட்டால் தயவு செய்து பதில் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொசோவாவில் அல்லது பங்காளதேத்தில் என்ன வளம் இருந்தது?வல்லமை மிகுந்த நாடுகளின் தேவைகளைப் பொறுத்தே(அரசியல் பொருளாதாரம் பாதுகாப்பு மதம் இனம் அமைவிடம்)ஒரு விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு வல்லரசகளால் வழங்கப்படும்.மற்றைய போராட்டங்கள் எல்லாம் அவர்களைப் பொறுத்தவரை பயங்கரவாதமே.காலம் மாறி வரும் போது பயங்கரவாதம் விடுதலைப்போராட்டமாகவும் விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமாகவும் மாற்றம் பெறும்.அந்த வரிசையில் எமக்கான காலம் நெருங்கி வரும் வரைக்கும் எமது விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்பு நிலையில் வைத்திருத்தலே எமது விடுதலைக்கான வெற்றியைக் கொடுக்கும்.நாடு கடந்த அரசும் அத்தகைய ஓர் முயற்சியே.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடம் ...

* இலக்கு இருந்தது!

* கொள்கை இருந்தது!

* நேர்மையான தலைமை இருந்தது!

* முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைமை இருந்தது!

* மக்கள் பலம் இருந்தது!

* ...

.... ஆனால்

... இராஜதந்திரம் ... மட்டும் இருக்கவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஏன் எங்கள் போராட்டத்தை மக்கள் எழுச்சியாக மாற்ற முடியவில்லை?

எகிப்து நாட்டில் மக்களின் பல நாள் போராட்டத்தின் விளைவாக எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக ஹொஸ்னி முபாரக் அறிவித்துள்ளார்.

மேலும் அதிபர் பதவிக்காக தேர்தலில் மீண்டும் ஒருமுறை களமிறங்க மாட்டேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

நேற்று மாலை அந்நாட்டு அரச ஊடகமொன்றில் தோன்றிய அவர் மேற்படி கருத்தை தெரிவித்தார்.

எகிப்தில் அந்நாட்டு அதிபருக்கு எதிராக கடந்த சில நாட்களாக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

தாம் சுமார் 30 ஆண்டுகளாக ஹொஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு முகங்கொடுத்துவருவதாகவும் இதனால் எகிப்து ஊழல்கள் நிறைந்த பொருளாதாரத்தில் சீரழிந்த நிலைக்கு சென்று விட்டதாக கூறி மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அந்நாட்டு அதிபரின் கட்டளையை இராணுவம் ஏற்க மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எங்கள் போராட்டத்தை மக்கள் எழுச்சியாக மாற்ற முடியவில்லை?

மக்கள் மந்தைகளாக நினைக்கும் போக்கு இருந்ததுதான். மக்களின் சிந்தனையோடு, அவர்களின் விருப்பத்தோடு, தேவையான இராஜதந்திரத்தோடு போராட்டம் (அரசியல், இராணுவம்) முன்நகர்த்தப்பட்டிருந்தால் விடுதலை கிடைத்திருக்கலாம்.

செய்வதில் எல்லாம் வென்றால் மக்கள் பின்னால் வருவார்கள் என்ற நம்பிக்கை, தோற்றால் மக்கள் என்ன செய்வார்கள் என்பதைச் சிந்திக்கவைக்கவில்லை.

சரியாய் சொன்னீங்கள்

கொசோவாவில் அல்லது பங்காளதேத்தில் என்ன வளம் இருந்தது?வல்லமை மிகுந்த நாடுகளின் தேவைகளைப் பொறுத்தே(அரசியல் பொருளாதாரம் பாதுகாப்பு மதம் இனம் அமைவிடம்)ஒரு விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு வல்லரசகளால் வழங்கப்படும்.மற்றைய போராட்டங்கள் எல்லாம் அவர்களைப் பொறுத்தவரை பயங்கரவாதமே.காலம் மாறி வரும் போது பயங்கரவாதம் விடுதலைப்போராட்டமாகவும் விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமாகவும் மாற்றம் பெறும்.அந்த வரிசையில் எமக்கான காலம் நெருங்கி வரும் வரைக்கும் எமது விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்பு நிலையில் வைத்திருத்தலே எமது விடுதலைக்கான வெற்றியைக் கொடுக்கும்.நாடு கடந்த அரசும் அத்தகைய ஓர் முயற்சியே.

புலவருக்கு நாளைக்கு ஒரு பச்சை குத்துவேன்

மக்கள் மந்தைகளாக நினைக்கும் போக்கு இருந்ததுதான். மக்களின் சிந்தனையோடு, அவர்களின் விருப்பத்தோடு, தேவையான இராஜதந்திரத்தோடு போராட்டம் (அரசியல், இராணுவம்) முன்நகர்த்தப்பட்டிருந்தால் விடுதலை கிடைத்திருக்கலாம்.

செய்வதில் எல்லாம் வென்றால் மக்கள் பின்னால் வருவார்கள் என்ற நம்பிக்கை, தோற்றால் மக்கள் என்ன செய்வார்கள் என்பதைச் சிந்திக்கவைக்கவில்லை.

தென் சூடன் ஒன்றும் போராடி மட்டும் விடுதலை பெறவில்லை.

எண்ணை வளத்தை யார் யாருக்கு தாரைவார்த்தார்களோ தெரியவில்லை.

கொசோவாவில் அல்லது பங்காளதேத்தில் என்ன வளம் இருந்தது?வல்லமை மிகுந்த நாடுகளின் தேவைகளைப் பொறுத்தே(அரசியல் பொருளாதாரம் பாதுகாப்பு மதம் இனம் அமைவிடம்)ஒரு விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு வல்லரசகளால் வழங்கப்படும்.மற்றைய போராட்டங்கள் எல்லாம் அவர்களைப் பொறுத்தவரை பயங்கரவாதமே.காலம் மாறி வரும் போது பயங்கரவாதம் விடுதலைப்போராட்டமாகவும் விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமாகவும் மாற்றம் பெறும்.அந்த வரிசையில் எமக்கான காலம் நெருங்கி வரும் வரைக்கும் எமது விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்பு நிலையில் வைத்திருத்தலே எமது விடுதலைக்கான வெற்றியைக் கொடுக்கும்.நாடு கடந்த அரசும் அத்தகைய ஓர் முயற்சியே.

பங்களாதேசம் பிரிக்கப்பட்டது பாகிஸ்தானை பழிவாங்க.

கோசோவவை பிரித்ததும் யோகசுலவாக்கியவை பழிவாங்குவதுக்கு.

எங்களை பிரிச்சு யாரை பழிவாங்களாம்?

மக்கள் மந்தைகளாக நினைக்கும் போக்கு இருந்ததுதான். மக்களின் சிந்தனையோடு, அவர்களின் விருப்பத்தோடு, தேவையான இராஜதந்திரத்தோடு போராட்டம் (அரசியல், இராணுவம்) முன்நகர்த்தப்பட்டிருந்தால் விடுதலை கிடைத்திருக்கலாம்.

செய்வதில் எல்லாம் வென்றால் மக்கள் பின்னால் வருவார்கள் என்ற நம்பிக்கை, தோற்றால் மக்கள் என்ன செய்வார்கள் என்பதைச் சிந்திக்கவைக்கவில்லை.

தென் சூடானின் இராச தந்திரம் வெண்டது தான் உண்மை... அது தென் சூடான் போராட்டத்துக்கு சர்வதேச ஆதரவை பெற்றுத்தரவில்லை.. மாறாக வட சூடானின் அரசுக்கும், அதிபர் ஒமர் அல் பஷீர் ருக்கும் எதிரான சரவ்தேச நிலைப்பாடுதான் தென் சூடானுக்கு விடுதலையை பெற்று தந்தது...

எங்களது நகர்வும் இப்படித்தான் இருந்தது இருக்க வேண்டியதும்... சூடானின் போராட்ட தலைவர் விமான விபத்தில் கொல்லப்பட்டு போராடிய பயங்கரவாத அமைப்பு தனது பெயரை அரசியல் ரீதியில் மாற்றி அமைத்து தடைகள் அற்ற அரசியலுக்குள் நுளைந்தனர்... !

இண்டைக்கு இலங்கைக்கும் இதுதான் நிலமை... ! ( சரத் பொன் சேகா வந்திருந்தால் நிலமை வேறாகி இருக்கும்)

எங்களுக்கு சாதகமானதுகளை விட்டு போட்டு சம்பந்தமே இல்லாத விடயங்களை பேசி திசை திருப்பல்கள் தான் வேகமான எங்களது நகர்வின் தடைக்கற்கள்... !

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தயா

முள்ளிவாய்க்காலில் தலைவர் மறைவுடன் சொல்லப்பட்ட செய்தியை ஒழுங்கமைத்து செயற்படுத்தியிருந்தால்...

மகிந்தவும் சிறிலங்காவும் இன்று தமிழருக்கு இனஅழிப்புச்செய்தவர்களாக ஒடுக்கப்பட்டு ஈழம் அதிலிருந்து பிறந்திருக்கும்.

எனக்கு இது போன்ற திரிகளைக்கண்டால் கோபம் வரும்

எம்முன்னால்இருக்கும் வெற்றிக்கனியை பறிப்பதை விடுத்து

அவன் வென்றான்

இவன் வென்றான் என்று .........................படி.????????

Edited by விசுகு

ஏன் எங்கள் போராட்டத்தை மக்கள் எழுச்சியாக மாற்ற முடியவில்லை?

எதைவைத்து நாம் முடிவெடுப்பது எங்கள் போராட்டம் மக்கள் எழுச்சியுடன் தான் நடந்தது? இல்லை எழுச்சியுடன் நடக்கலவில்லை?? என.

சர்வதேசம் பயங்கரவாதம் என்று சொன்ன கொசவா லிபரேசன் ஆமியை ஏற்றுக்கொண்டது, கொசவாவையும் அங்கீகரித்தது.

கிழக்கு தீமோரில் மக்கள் போராட்டத்தை உடனடியாக "எழுச்சி" என்று ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது.

மொத்தத்தில் இரண்டு இலட்சத்திற்கு மேலாக மக்களை இழந்து; பல்லாயிரம் வீரர்களை இழந்து; ஆயிரக்கணக்கில் சாத்வீக போராட்டங்களை உலகம் முழுவதிலும் நடத்தும் தமிழர்கள் போராட்டம் மக்கள் எழுச்சியுடன் தான் நடந்தது, நடக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இல்லை எம்மிடம்? அறிவாளிகள் இல்லையா? புலம்பெயர் பலம் இல்லையா? சாட்சிகள் இல்லையா? இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் தொடரவில்லையா? அல்லது சிங்களம் தனது ஆட்டத்தை நிறுத்திவிட்டதா?

இத்தனையும் இருந்தும் பயங்கரவாதம் என்று சொன்ன இயக்கம் அடக்கிவாசிக்கத்தொடங்கியும்........ ஏன் ஏன் இன்னும் அடுத்தபடிக்கு போகமுடியவில்லை. காலம் கடந்து விடவில்லை. புலிகளை எதிர்பார்ப்பதைவிடுத்து நாடுகடந்த அரசிற்கு ஆதரவு வழங்கி அடுத்த படியை ஆரம்பிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை யாரும் ஒப்புக்கொள்ள போவதில்லை, நாங்கள் செய்தது பயங்கரவாதம் உலகின் கண்களுக்கு.(உண்மையும் கூட)

ஆனால் அதே உலகம் நடவடிக்கை எடுக்காதபடிக்கு புகுந்து விளையாடுறீங்க.. அப்பிடித்தானே..?! :rolleyes::lol:

என்ன இல்லை எம்மிடம்? அறிவாளிகள் இல்லையா? புலம்பெயர் பலம் இல்லையா? சாட்சிகள் இல்லையா? இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் தொடரவில்லையா? அல்லது சிங்களம் தனது ஆட்டத்தை நிறுத்திவிட்டதா?

இத்தனையும் இருந்தும் பயங்கரவாதம் என்று சொன்ன இயக்கம் அடக்கிவாசிக்கத்தொடங்கியும்........ ஏன் ஏன் இன்னும் அடுத்தபடிக்கு போகமுடியவில்லை. காலம் கடந்து விடவில்லை. புலிகளை எதிர்பார்ப்பதைவிடுத்து நாடுகடந்த அரசிற்கு ஆதரவு வழங்கி அடுத்த படியை ஆரம்பிப்போம்

:D:D:D

கந்தப்பு-

முன்னர் பயங்கரவாதி என் உலகால் கூறப்பட்ட நெல்சன் மண்டேலாவின் சிலை உலகெங்கும் இருக்கு. அதே மாதிரி தலைவரின் சிலைகளும் வரும் என்கின்றீரா? புரியவில்லை.

துரையப்பாவை கொன்றது ஒரு சம்பவம் ஆனால் முள்ளிவாய்க்கால வரை அதையே தொடர்ந்தார்கள்.எந்தப் பெரிய ஒரு விடுதலை அமைப்பு காலத்திற்கேற்ப தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.தற்கொலை தாக்குதல் மூலம் நாடுபிடிக்கலாம் என்றால் இன்று எத்தனையோ நாடுகள் உருவாகியிருக்கும்.ஒரு பிரேமதாசவை கொன்றால் ஒரு சந்திரிகா ,ஒரு பொன்சேகாவை கொன்றால் இன்னொரு கோத்தபாயா.இது விளங்காமல் பழி தீர்ப்பதற்கென்று தற்கொலைதாக்குதல் செய்து தனிநபர் கொலை மூலம் எந்த தீர்வையும் எட்டமுடியாது

நுணாவிலான் -

அமெரிக்கா,இந்தியா செய்யுது என்று அதை நாங்களும் செய்யமுடியுமா?.உலக அரசியலின் அடிப்படையே அதுதானே.சின்ன மீனை சாப்பிட்டால் தான் பெரியமீன் உயிர்வாழலாம்.எனது பொஸ் ஒவ்வொரு நாளும் ரிலீஸ் ஆகும் புதுப்படத்தை வீட்டிற்கு கொண்டுபோவான் அதை நான் கொண்டுபோகமுடியுமா?பின்னர் ஏன் யூ.என்.ஓ? 5 சுபர் பவர்கள் அவர்களுக்கு வீட்டோ அதிகாரம்.எங்கள் வரையறை தெரிந்து தான் நாங்கள் அரசியல் செய்ய வேண்டும்.ஆயுதம் வாங்கபோனாலும் அதே நிலைதான் காசு இருக்குதென்று விரும்பியதை வாங்கிவிடமுடியாது.

ரஸ்யர்களுடனா போரில் முஜாகிடீன்கள் பாவித்த ஸ்ரிங்கர் மிசைலை புலிகள் வாங்கியிருந்தால் போராட்டம் எப்போதோ முடிந்திருக்கும்.அது அமெரிக்கா ரஸ்யர்களை அடிக்க கொடுத்தது.

இவர்களுக்கால் சுழிஓடி எமக்கு தேவையானதை நாம் பெற்றுக்கொள்வதே இராஜதந்திரம்.அதற்கு தான் சிறுவயதில் சிவனை சுற்றிவந்து பிள்ளையார் மாம்பழம் பெற்ற கதை படிப்பித்தார்கள்.

இன்னமும் பிடிக்கவேண்டியவர்களை பிடித்தால் எமக்கான ஒரு விடிவு தூரமில்லை.90 களிலேயே தொடங்கவேண்டிய "லொபியிங்கை" இப்ப தானெ எங்கட ஆட்கள் தொடங்கியிருக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.