Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சிக் கடலில் யாழ் மீனவர்களால் 90 இந்திய மீனவர்கள் சுற்றிவளைப்பு

Featured Replies

  • தொடங்கியவர்

இலங்கை தூதரகம் முன் திமுக நாளை ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறியுள்ளனர்.

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=48660

இந்திய மீனவர் விடயத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்: அமைச்சர் டக்ளஸ்

]இச்சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் தகவலறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். அங்கிருந்தவாறே கடற்படைத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபருடன் அமைச்சர் தொடர்புகொண்ட நிலையில் வடபகுதி பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி அமரக்கோன் மற்றும் வடபிராந்திய பதில் கடற்படைக் கட்டளைத் தளபதி கொமடோர் என்.கே.டி.நாணயக்கார ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/16578-2011-02-15-23-00-14.html

தமிழக மீனவ உறவுகள் 106 பேரை, 18 இழுவைப் படகுகளை, கரைக்கு கொண்டுவர எத்தனை தமிழீழ மீனக உறவுகள் இருந்திருக்க வேண்டும்?

தமிழக மீனவ உறவுகளை கைது செய்து உள்ளபடியால் அவர்களை சிறையில் அல்லவா வைக்க வேண்டும்? நீதிபதிக்கு முன்னால் நிறுத்தப்படுவார்களா?

தமிழக மீனவ உறவுகளை ஏன் யாழில் உள்ள அவர்களது துணைதூதுவரகம் வந்து சந்திக்கவில்லை?

தமிழக மீனவ உறவுகளை ஏன் ஒரு சுயாதீன ஊடகங்களும் சந்திக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து தமிழன் ஒரு ஏமாந்த சோணகிரி என்ட படியால் தான் தமிழ்நாட்டுக்காரன் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கிறான்...கேட்பதற்கு யாரும் இல்லை முந்தியாவது புலி இருந்திருந்த காரணத்தால் எல்லை மீறாமல் இருந்தார்கள் தற்போது அவர்கள் இல்லாத படியால் வேலி பாய்கிறார்கள்...சிங்கள ஆமி தமிழக மீனவர்கள் எல்லை மீறுகிறார்கள் என்டு சுட்டால் அது ஒரு இனத்திற்கு எதிரான பிரச்சனையாக முடிந்து விடும்...பிரச்சனையை தீர்க்க இது தான் சிறந்த வழி...ஏதோ இவ்வளவு காலமும் தமிழ்நாட்டுக்காரர் எங்கள் இனத்திற்கு பெரிய உதவி செய்து கிழித்து விட்டார்கள் போலவும் மேலும் உதவி செய்வார்கள் எதிர்பார்த்து கொஞ்சப் பேர் காத்துக் கிடப்பது தான் வேடிக்கை.

பின்னிபோட்டிங்க போங்க!

கருநாய் நிதியின் தேர்தல் நாடகம்.

"தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடை பெற்று வரும் மீனவர் படுகொலைகள் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் என்பதே கடந்த 20 ஆண்டுகளாக எவ்வித எதிர்ப்பும் காட்டாது கள்ள மவுனம் காத்த மத்திய அரசு இப்போது புதிதாக பெயரளவுக்கு கண்டனம் தெரிவிப்பதற்கும் வெளியறவு செயலர் நிருபமாராவ் திடீர் இலங்கை பயணத்திற்கும் உண்மை காரணமாகும்.

இலங்கை அரசு தனது தமிழின அழிப்பு நடவடிக்கை தொடர்வதற்கு தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதையே விரும்புகின்றது.

இதனால் சிங்கள ராஜபக்சே அரசு மிகப்பெரிய சதி நட வடிக்கை ஒன்றை அரங்கேற்ற முடிவு செய்து, அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றது எனவும் அதற்கு இந்திய அரசு மறைமுக உதவி புரிவதாகவும் “ஆபரேஷன் கடல் சிங்கம்” என்ற திட்டத்துடன் இது நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன."

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81515&st=0&p=638683&hl=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&fromsearch=1&#entry638683

இலங்கை கடற்படையை கண்டித்து ரசிகர்களுடன் விஜய் ஆர்பாட்டம்

http://thatstamil.oneindia.in/movies/heroes/2011/02/vijay-protest-against-lankan-navy-with-his-fans-aid0128.html

கொலை செய்யப்படும்போது வாயே திறக்காதவர்கள் இன்று கண்டனம் தெரிவிப்பு

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம்

தமிழக மீனவர்கள் 106 சிறைபிடிக்கப்பட்டதற்கு பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலஙகை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங்,

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பு இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=48691

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாட்களுக்கு முன் காரைநகரில் உள்ள மீன் பிடி வலைகளை, தமிழக மீனவர்களால் சேதமாக்கப் பட்டதாக ஒரு செய்தியை கசிய விட்டிருந்தார்கள்.

அதற்கு அடுத்து ஈழத்து மீனவர்களால், தமிழக மீனவர்கள் சுற்றிவழைப்பு என்னும் செய்தி வருகின்ற போது இதன் பின்னணியில் உள்ள பெரிய சக்திகளை ஆராயாது, எழுந்த மானத்துக்கு தமிழக மீனவர்களை குற்றம் சாட்டுவது நல்லதல்ல.

சிங்களவனால் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் அடிக்கப் படும் ஆப்பு என்பதை மறக்க வேண்டாம்.

றோலரில் வந்து வடமாராட்சி கடற்கரையோரங்களில் அவர்கள் மீன் பிடித்தார்களாம்.............?

இப்படியேவிட்டா தண்ணிக்குள் மீன் என்று ஒரு வகை உயிரினம் உள்ளது என்று இனி படம் காட்டுவாங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

றோலரில் வந்து வடமாராட்சி கடற்கரையோரங்களில் அவர்கள் மீன் பிடித்தார்களாம்.............?

இப்படியேவிட்டா தண்ணிக்குள் மீன் என்று ஒரு வகை உயிரினம் உள்ளது என்று இனி படம் காட்டுவாங்கள்!

மருதங்கேணி,

டெல்லியும், கொழும்பும், கருணாநிதியும், டக்ளசும் செய்யும் சதி வேலைகளில் இங்கு யாழில் கருத்து எழுதும் பெரிய ஜம்பவான்களே.......

நம்பும் போது.... சாதாரண தமிழ் மக்கள் எப்படி உணர்வார்கள் என்பதை நினைக்க..... ஆபத்தான, ஆரம்பமாக.... தெரிகின்றது.

வரும் தமிழ் நாட்டுத் தேர்தலில் தமிழக மீனவர்களின் பிரச்சனை தலைதூக்காமல் இருக்க ஆடும் நாடகம்.

மீனவர்களை நாய் மாதிரி சுட்டுச் சாகடிக்கும் பொழுது வெறும் கடிதம் எழுதியவர்கள், சில மீனவர்கள் கைது செய்யப்பட்டதும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களாம்.

எங்கட ஊடகங்களின் அறியாமையை என்னவென்பது?

கஷ்டமான காலத்தில் தமிழக மீனவர்களே போராட்டத்திற்கு முண்டு கொடுத்தார்கள். அல்லது சண்டை பிடிக்க பெற்றோல், டீசல் ஆயுதம் கிடைத்திருக்காது.

நடக்கிறதெல்லாம் பார்க்கக்க தமிழனை மீண்டும் மீண்டும் முட்டாளாக்க சிங்களவன் நிறைய கஷ்டப்படத் தேவையில்லை போல கிடக்கு.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் சதிவலைகளும் சூழ்சிகளும் பின்னப்பட்டிருக்கின்றன.தமிழகமீனவர் சிறிது எல்லை மீறி விட்டாலோ(எல்லை மீறா விட்டாலும்)கண் கொத்திப் பாம்பாம்பாகக் காத்திருந்து சுட்டுத்தள்ளும் இலங்கைக் கடற்படை சம்பவம் நடந்த பொழுது எங்கே போய் இருந்தார்கள்.அதுவும் தமிழீழ மீனவர்கள் பல படகுகளில் சென்று ஆயுதமில்லாமல் அவர்களைச் சற்றி வளைக்கும் போது கை கலப்பு ஏற்பட்டிருக்காதா?அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் பல தமிழக மீனவர்களைத் தாக்குவது தமிழர்கள்தானே ஒழிய சிறிலங்கா கடற்படை அல்ல என்று நமப வைக்க செய்யப்படும் முயற்சியாகும்.இது இந்திய மத்திய அரசும் திமுக அரசும் சிறிலங்கா அரசும் செய்யும் கூடடுச்சதியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடடா என்ன ஒரு உணர்வு...

எங்கட ஊருக்க சிங்களவன் வந்து குடிசை போட்டு விட்டுகளுக்கை இருந்து தமிழர்களை துரத்தி விடும் போது இப்படி ஒரு உரையை ஆற்றி இருந்தீங்கள்... அண்டே தமிழீழம் பிறந்து இருக்கும்....

:lol: :lol: :lol:

டெல்லியும், கொழும்பும், கருணாநிதியும், டக்ளசும் செய்யும் சதி வேலைகளில் இங்கு யாழில் கருத்து எழுதும் பெரிய ஜம்பவான்களே.......

நம்பும் போது.... சாதாரண தமிழ் மக்கள் எப்படி உணர்வார்கள் என்பதை நினைக்க..... ஆபத்தான, ஆரம்பமாக.... தெரிகின்றது-தமிழ் சிறி.

இப்போதாவது கொஞ்சம் விளங்குகின்றது என நினைக்க சந்தோசம்.இதுதான் அரசியல் இதை காய்வெட்டிஓடியிருக்க வேண்டியதுதான் எமது கடமை.அதைவிட்டு தலைவர் எல்லோருக்கும் அந்தமாதிரி குடுப்பார் என கனவு கண்டீர்கள் அது தப்பு.

உதை அப்பவே சொன்ன, எழுதிய எங்களை துரோகிகளாக்கி காசை மாத்திரம் கொடுங்கோ தலைவர் மிச்சத்தை பார்ப்பார் என்ற பிரச்சாரமே எங்கும் நிறைந்திருந்தது.இதிலும் காசை கொடுத்துவிட்டு தான் தப்பிப்பதற்கு தான் புலம் பெயர் தமிழன் திட்டம் போட்டான்.எல்லாம் பாழாய் போனது அதனால் தான்.

உங்கட பிள்ளைக்கு பிரச்சனை என்றால் தயவுசெய்து இனிமேல் நீங்கள் போங்கோ பக்கத்துவீட்டுக்காரனை அனுப்பாதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு கடற்கரையிலேயே மீன் பிடிக்க விடாமல் சுட்ட இலங்கை கடற்படை யாழ்ப்பாணத்தில் அவர்கள் வந்து மீன் பிடிக்க விட்டதாம். இலங்கை, இந்திய அரசின் சதி அரங்கேறுகிறது என்பது மட்டும் விளங்குகிறது.

reson for editing: spelling

Edited by nunavilan

வரலாற்றில் முதல் முறையாக புதுடெல்லி தமிழக உயிர்களை கொல்லும் சிங்கள இனவாத அரசு மீது கொஞ்சம் அழுத்தம் கொடுக்கத்தொடங்கியிருந்தது. உண்மையாக அப்படி செய்ததா இல்லை நடித்துள்ளதா என்பதை காலம் சொல்லும்.

ஆனால், சில அரசியல் நாடகங்கள் தமிழ் உறவுகளை வைத்து பின்னப்படுகின்றன போலுள்ளது. இந்த அரசியல் வலைக்குள் தமிழ் உறவுகள் சிக்கக்கூடாது.

இந்த தமிழக உறவுகளை போய் சென்னையில் தேடப்படும் அமைச்சர் சந்தித்துள்ளது மேலும் சந்தேகத்தை தருவதாக உள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/16578-2011-02-15-23-00-14.html

உங்களிடம் இருந்து இந்த கருத்தை எதிர்பார்க்கவில்லை.

கருனாநிதியும் காங்கிரசும் ஆட்சியில் தொடரவேண்டும் என்பது இலங்கை அரசின் விருப்பம்( ஜெயலலிதாவந்தாலும் அது தான்) ஆனால் வேற கட்சிகள் வந்தால் நடந்த சதித் திட்டம் வெளிவரலாம் என்று இந்த முக்கோனக் கூட்டனிக்கு சின்ன பயம் இருகலாம். ராஜபாக்ஸவை ஜ நாவில் பாதுகாக்கவாது காங்கிரஸ் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று இலங்கை விரும்பலாம்.

ஏன் என்றால் முதல் முறையாக மீனவர்களை கைது செய்து 24 மணி கூட ஆக முன் ஆர்ப்பாட்டம் கண்டனம் என்பதே இஅவர்களை காட்டிக் கொடுத்து விட்டது.

  • தொடங்கியவர்

மேலும் 26 இந்திய மீனவர்கள் இலங்கையில் இன்று கைது

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 26 பேர் இன்று புதன்கிழமை இரவு இலங்கை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மாதகல் கடற்பகுதியில் 7 இந்திய படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 26 இந்திய மீனவர்கள் அப்படகுகள் சகிதம் மாதகல் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மாதகல் பகுதியிலிருந்து 10 படகுகளில் சென்ற சென்ற மீனவர்களாலேயே மேற்படி இந்திய மீனவர்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டதாக வலி தென்மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் விநாயகமூர்த்தி சுப்ரமணியம் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

இம்மீனவர்களை இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை வடமராட்சி கடற்பரப்பில் 108 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் சுற்றி வளைக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித் துறை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/16629--26-.html

  • கருத்துக்கள உறவுகள்

எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பயன்

டெல்லியும், கொழும்பும், கருணாநிதியும், டக்ளசும் செய்யும் சதி வேலைகளில் இங்கு யாழில் கருத்து எழுதும் பெரிய ஜம்பவான்களே.......

நம்பும் போது.... சாதாரண தமிழ் மக்கள் எப்படி உணர்வார்கள் என்பதை நினைக்க..... ஆபத்தான, ஆரம்பமாக.... தெரிகின்றது-தமிழ் சிறி.

இப்போதாவது கொஞ்சம் விளங்குகின்றது என நினைக்க சந்தோசம்.இதுதான் அரசியல் இதை காய்வெட்டிஓடியிருக்க வேண்டியதுதான் எமது கடமை.அதைவிட்டு தலைவர் எல்லோருக்கும் அந்தமாதிரி குடுப்பார் என கனவு கண்டீர்கள் அது தப்பு.

உதை அப்பவே சொன்ன, எழுதிய எங்களை துரோகிகளாக்கி காசை மாத்திரம் கொடுங்கோ தலைவர் மிச்சத்தை பார்ப்பார் என்ற பிரச்சாரமே எங்கும் நிறைந்திருந்தது.இதிலும் காசை கொடுத்துவிட்டு தான் தப்பிப்பதற்கு தான் புலம் பெயர் தமிழன் திட்டம் போட்டான்.எல்லாம் பாழாய் போனது அதனால் தான்.

உங்கட பிள்ளைக்கு பிரச்சனை என்றால் தயவுசெய்து இனிமேல் நீங்கள் போங்கோ பக்கத்துவீட்டுக்காரனை அனுப்பாதையுங்கோ.

*மக்கள் புரட்சி* மாமா அர்ஜுன், ..... ஒரு செய்தி வருமிடத்து பலரிடமிருந்து பல கருத்துக்களும், ஊகங்களும் வரும், அது தெரியாமலா மக்கள் புரட்சிக்கு போனனீர்கள்! ... அதுக்குள் ஆட்டுக்குள் மாட்டையும் சொருகி உங்கள் கைவண்ணத்தைக் காட்டுகிறீர்கள்(அதற்கு ஒன்று பச்சையும் அடித்திருக்குது!!!!)!!!!!!!!

மாமா, .... இவ்வளவு காலமும் தமிழக மீனவர்கள் எல்லை கடந்தாலேயே சுட்டுக் கொல்லுபவன், இன்று வடமராட்சி கடல் வரை வர விட்டிருக்கிறான்?????? அங்கு இப்போ மீன் பிடிக்கவே போக பல இடையூறுகள் சிங்கள கடற்படையினரால், அப்படியிருக்க மீனவர்கள் கூட்டமாய் போய் பெருந்தாக்குதலை செய்து வர பார்த்துக் கொண்டிருக்கிறான்??????? ..... என்ன சுதந்திரம், அமைதி, ஜனநாயகமா அங்கு?????????? ... அப்படியிருக்க பல சந்தேகங்கள் வரும்தான்!! .... உவை மக்கள் யுத்தக்காரருக்கு எவ்வாறு புரியப் போகிறது .... புரிந்த பாசை ... சோற்றுப்பார்சல்கள்தான்!!!!!! :lol:

அதை பதிவுகளே சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன.

உலக அறிவும் வேணும். கல்வி இன்றியமையாதது.

புலி எதிர்ப்பு என்ற ஒரு அடிப்படைக்குள் எப்படி ஒவ்வொரு விடயத்திலுமே வித்தியாசங்களில் துருவங்களாக விளங்குகின்றார்கள்?

வடக்கில் மீனவவ்ர்களை சந்தித்து பேசியபின் இதற்கு கருத்தெழுதவும். புலியாம் முரண்பாடாம் வந்திட்டானுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கில் மீனவவ்ர்களை சந்தித்து பேசியபின் இதற்கு கருத்தெழுதவும். புலியாம் முரண்பாடாம் வந்திட்டானுகள்.

ஐயா! இப்ப இருபது வருடங்களுக்கு மேலாக, புலித்துவேசிகள் என்ன சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்?

"எம்மோடு கதைப்பவர்கள் எல்லாரும்..... 'புலியை விட ஆமியே மேலாம்.....' " இப்படி மேற்கோள்களை நாம் எவளவு காலம் ஐயா கேட்டுக்கொண்டிருக்கின்றோம். நீங்களும் வேறா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக அறிவும் வேணும். கல்வி இன்றியமையாதது.

இல்லாதவனுக்கு இருப்பவன் தான் கொடுக்க வேணும். இல்லாததை இருக்கென்று சொல்லிக் கொடுப்பது அது அறிவின் வெளிப்பாடு இல்லையுங்கோ! அது பம்மாத்து.

இந்தப் பதிவு இங்கு எதற்கு ஐயா?

எனக்கு இல்லை என்பதைச் சொல்லவா?

உங்களுக்கு இருப்பதைச் சொல்லவா?

அறிவுடமைக்கு இப்படியும் ஒரு பண்பு இருக்கின்றது என்பதை நான் இன்றுதான் அறிந்தேன்!

கல்வி அறிவும், உலக அறிவும் இல்லாத என்போன்றவர்களால் உலகத்திற்கு ஒரு கெடுதியும் இல்லை ஐயா?

அதர்மம் நிறைந்திருப்பவன்தான், கட்டிய தன் மனைவிக்கு, தன் பிள்ளைகளுக்கே விசம் போன்றவன்.

ஊர் உலகத்திற்கு வேறு எப்படி இருப்பான்?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து தமிழன் ஒரு ஏமாந்த சோணகிரி என்ட படியால் தான் தமிழ்நாட்டுக்காரன் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கிறான்...கேட்பதற்கு யாரும் இல்லை முந்தியாவது புலி இருந்திருந்த காரணத்தால் எல்லை மீறாமல் இருந்தார்கள் தற்போது அவர்கள் இல்லாத படியால் வேலி பாய்கிறார்கள்...சிங்கள ஆமி தமிழக மீனவர்கள் எல்லை மீறுகிறார்கள் என்டு சுட்டால் அது ஒரு இனத்திற்கு எதிரான பிரச்சனையாக முடிந்து விடும்...பிரச்சனையை தீர்க்க இது தான் சிறந்த வழி...ஏதோ இவ்வளவு காலமும் தமிழ்நாட்டுக்காரர் எங்கள் இனத்திற்கு பெரிய உதவி செய்து கிழித்து விட்டார்கள் போலவும் மேலும் உதவி செய்வார்கள் எதிர்பார்த்து கொஞ்சப் பேர் காத்துக் கிடப்பது தான் வேடிக்கை.

Refugees_India5_2006.jpg

தமிழ்நாடு பக்கமும் வராமல் கேரளா பக்கமும் போகாமல் நேரடியாக

வெளிநாட்டுக்கு பிளைட்டு ஏறியவர்கள் எப்படி?? எனக்கு ஒன்னும் பிரியல..

air_port_sri_lanka.jpg

அப்ப வசதியானவுக வெளிநாடு போயிடுறாங்க .. அஞ்ச ...பத்த.... குடுத்து மீதி பேர் தனுஸ் கோடிக்கு வந்து அல்லல் படுறாங்க ம்ம்ம்... இவரக்ளை நாளை கவனித்து கொள்ளுறேன்..

டிஸ்கி:

ஏசு வை ஒன்னா கும்ம்பிட்ட வெள்ளை காரர்களே ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு உலக போர் என்று செத்தான்... இதில் இனமென்ன.. குலமென்ன.. வரும் காலம்தான் உணர்த்தும்.. :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

.

மற்றவர்கள் கடலில் சென்று மீன் பிடிப்பது தவறானது என்பது தமிழக மீனவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆந்திர மீனவர்களுடன் பெரும் வெட்டுக்கொத்து அளவுக்கு சண்டை சென்றிருக்கின்றது.

இந்த சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்த தமிழக மீனவ சமூகமும் யாழ் மீனவர் மீது கோபம் கொள்ள வேண்டிய நியாயம் அங்கு இல்லை என்பதை அவர்கள் உளப் பூர்வமாக அறிவார்கள். அவர் அவர் தொழில் நியாயங்கள் அவர் அவர்களுக்கே தெரியும்.

இதை யார் செய்தார்களோ.. சில நன்மைகளும் விளைந்திருக்கின்றன.

யாழ் மீனவர்களின் பிரச்சனை மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. பிழையான இராசதந்திரத்திற்காக அவர்கள் தொடர்ந்து பிச்சை எடுக்க முடியாது.

மன்மோகன் சிங் அளவிற்கு பிரச்சனை சென்றிருப்பதால் சிங்களம் மீண்டும் இப்படியான ஒரு நாடகத்தை நடத்த சற்று யோசிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியும், கொழும்பும், கருணாநிதியும், டக்ளசும் செய்யும் சதி வேலைகளில் இங்கு யாழில் கருத்து எழுதும் பெரிய ஜம்பவான்களே.......

நம்பும் போது.... சாதாரண தமிழ் மக்கள் எப்படி உணர்வார்கள் என்பதை நினைக்க..... ஆபத்தான, ஆரம்பமாக.... தெரிகின்றது-தமிழ் சிறி.

இப்போதாவது கொஞ்சம் விளங்குகின்றது என நினைக்க சந்தோசம்.இதுதான் அரசியல் இதை காய்வெட்டிஓடியிருக்க வேண்டியதுதான் எமது கடமை.அதைவிட்டு தலைவர் எல்லோருக்கும் அந்தமாதிரி குடுப்பார் என கனவு கண்டீர்கள் அது தப்பு.

உதை அப்பவே சொன்ன, எழுதிய எங்களை துரோகிகளாக்கி காசை மாத்திரம் கொடுங்கோ தலைவர் மிச்சத்தை பார்ப்பார் என்ற பிரச்சாரமே எங்கும் நிறைந்திருந்தது.இதிலும் காசை கொடுத்துவிட்டு தான் தப்பிப்பதற்கு தான் புலம் பெயர் தமிழன் திட்டம் போட்டான்.எல்லாம் பாழாய் போனது அதனால் தான்.

உங்கட பிள்ளைக்கு பிரச்சனை என்றால் தயவுசெய்து இனிமேல் நீங்கள் போங்கோ பக்கத்துவீட்டுக்காரனை அனுப்பாதையுங்கோ.

இந்த நேரம்பார்த்து நிர்வாகம் பொறுப்புடன் எழுதட்டாம்.............

ஐயா உங்களுடைய எழுத்துக்களை வாசிக்கும்போதே எனக்கொரு சந்தேகம் இருந்தது....... என்ன இவர் இந்த உலகத்திற்கு சம்மந்தமில்லாதவைகளை எழுதுகின்றார்? என்று. ஆனால் இன்றுதான் எனது சந்தேகங்களை நீக்கியுள்ளீர்கள்.

சிங்களவன் அடித்தபோது நாம் திருப்பி அடிக்கவில்லைதான் புலம்பெயாந்துவிட்டோம்.......... நீங்கள் அவனை அடி அடி என்று அடித்து உதவிக்கு யாரும் வரததால் அவன் அடித்து நீங்கள் இறந்துபோய் இப்போது பேயாய் வந்து கருத்துக்களை எழுதுகின்றீர்கள்?

ஊருக்கு உபதேசம் என்றால்............. இதைவிட நல்லாய் எங்களுக்கும் எழுததெரியும். புலம்பெயர்ந்தவர்கள் குறைந்தளவு பணஉதவி செய்தாவது போராட்டத்தை நடத்தினார்கள். நீங்கள் கிழிச்ச கிழிப்புகளை கொஞ்சம் விளக்கி எழுதலாமே?

ஊரை ஏய்த்துபிழைக்கும் சாத்திரிகள் சொல்வதுபோல் எதையோ சொல்லிவிட்டு நாம் சொன்னதுதான் நடந்தது என்று மெகாசீரியல் காட்ட எமக்கும் தெரியும். யாருக்கு சொன்னது என்ன சொன்னது எப்போது சொன்னது என்பதற்கு எல்லாம் கதாபாத்திரங்களை வடிவமைப்பது என்பதும் எமக்கு தெரியும்.

எங்கட வீட்டு பிரச்சனை என்றால் நாங்கள்தான் பார்க்க வேண்டும். உங்கட வீட்டில் பிரச்சனை இருக்கவே இல்லை இதைதான் நீங்கள் திரும்ப திரும்ப சொல்றீங்கள் ஆனால் நாங்கள் அதை சொன்னால் குயோ மாயோ என்று கத்துறீங்கள்.

கள்ளனின் வீட்டில் களவு பிரச்சனை இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

Refugees_India5_2006.jpg

தமிழ்நாடு பக்கமும் வராமல் கேரளா பக்கமும் போகாமல் நேரடியாக

வெளிநாட்டுக்கு பிளைட்டு ஏறியவர்கள் எப்படி?? எனக்கு ஒன்னும் பிரியல..

air_port_sri_lanka.jpg

அப்ப வசதியானவுக வெளிநாடு போயிடுறாங்க .. அஞ்ச ...பத்த.... குடுத்து மீதி பேர் தனுஸ் கோடிக்கு வந்து அல்லல் படுறாங்க ம்ம்ம்... இவரக்ளை நாளை கவனித்து கொள்ளுறேன்..

டிஸ்கி:

ஏசு வை ஒன்னா கும்ம்பிட்ட வெள்ளை காரர்களே ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு உலக போர் என்று செத்தான்... இதில் இனமென்ன.. குலமென்ன.. வரும் காலம்தான் உணர்த்தும்.. :(

தோழர் தமிழனாக பிறந்துவிட்டோம்.............

எமது இனத்திற்குள் நாய் நரி மட்டுமல்ல சில அறணைகளையும் வைத்திருக்கிறோம். கோபபடாதீர்கள் பொறுத்தருளுங்கள்!

நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் எப்போது அடித்துகொள்வோம் என்று ஒரு கூட்டமே உட்காதிருந்து பார்த்துகொண்டிருக்கின்றது.

அப்ப அப்ப சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் எண்ணையை ஊற்றிவிடுகிறார்கள் அவ்வளவே!

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணக் கடலில் மீன்களா? அல்லது தமிழக மீனவர்களா? மாதகல் மீனவர்களாலும் 26 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு

[Thursday, 2011-02-17 01:46:23]

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் வைத்து மேலும் 26 இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளனர். கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த 7 வள்ளங்களையும் 26 மீனவர்களையுமே மாதகல் மீனவர்கள் நேற்றிரவு 7 மணியளவில் பிடித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் மாதகல் கடற்கரையிலிருந்து நான்கு மைல் தொலைவில் (கடலில்) வைத்தே சுற்றிவளைக்கப்பட்டனர்

இந்த மீனவர்களை இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நேற்றிரவு திட்டமிடப்பட்டிருந்தது. இந்தத் தகவலை வலி தென் மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் விநாயகமூர்த்தி சுப்பிரமணியம் இதனைத் தெரிவித்தார்.

seithy.com

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துக்கும், ஈழத்துக்கும் இடையில் உள்ள நீண்ட கடற்பகுதியை இந்தியாவாலோ, ஸ்ரீலங்காவாலோ... தொடர்ந்து பாதுகாப்பதற்கு பெருத்த பொருட்செலவும்,கடற்படையினரும் தேவைப்படுவார்கள். அதனைத் தவிர்க்கவே.... பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக..... இருந்த மீனவர்களை தூண்டி விட்டு நிரந்தர பகை ஏற்படுத்த இரண்டு அரசுகளும் முயற்சிக்கின்றன. இவர்கள் சண்டை பிடிப்பதால்..... அகதியாக ஈழத்திலிருந்து யாரும் தப்பி விடாமல் இருப்பதை தடுக்கவும் முடியும். இந்த சண்டையில் சிங்களவனும், இந்தியனும் குளிர்காய்ந்த பின்..... ஈழத்தில் வைத்து மிச்ச தமிழரின் தலையில் பெரிய பாறாங்கல்லை போட்டு விட்டால்...... முழு நாடும் சிங்களவனுக்குத்தான்.... , அப்பவும் கருணாநிதி போன்றவர்கள் கடிதமும், கவிதையும் எழுதிக் கொண்டிருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.