Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோக்கியோவை கழுவிச்சென்ற பெரும் சுனாமி இன்று அதிகாலை அனர்த்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலம் இப்படியே போகப் போவதும் இல்லை...வருகின்ற தலைமுறைகள் அடிமையாகவே இருந்துவிடப் போவதும் இல்லை.. எமக்கு உதவி செய்யவில்லை என்பதற்காக இன்று எந்த நாடுகளை நாசமாக போகவேண்டும் என்று நினைகின்றோமோ, அந்த நாடுகளின் உதவிகளை மீண்டும் நாட வேண்டி வரும் என்பதை மறக்க வேண்டாம்

உண்மை தான். இந்நேரம் பாலகுமார் அண்ணா சொன்ன ஞாபகம்.அதாவது இதே உலகில் இதே மக்களுடன் தான் மீண்டும் வாழப்போகிறோம் என்ற தொனிப்பட கூறி இருந்தார்.

இவ் அனர்த்தத்தில் இறந்த பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவராவத் வன்னியில் குண்டடிப்பட்டு சாகவேண்டும் என்றோ அகதியாக தமிழன் இருக்க வேண்டும் என்றோ நினைத்துக்கூட இருக்க மாட்டான்.ஆகவே அவர்களுக்கு ஆறுதல் கூறுவதில் நாம் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை.இழக்கப்போவதும் இல்லை.

எமது மக்களின் இறப்பில் இவ்வுலகம் இன்புற்ற அரக்கர்களாக இருக்கலாம்.அதற்காக நாமும் அப்படி இருக்க வேண்டுமா? காலம் ஒரே மாதிரி எப்போதும் இருக்கப் போவதில்லை.எமக்கும் திரும்ப ஒரு காலம் வரும்.இன்றைய எதிரிகள் கூட நாளைய நண்பர்களாகலாம். யாருக்கு தெரியும்? .தொடர்ந்து எதிரிகளை உருவாக்காமல் நண்பர்களை உருவாக்கவேண்டும்.

  • Replies 90
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் எவரும் நடந்து முடிந்த மனித அவலத்தை மனதில் இருந்து இறக்கக் கூடாது, மறக்கக் கூடாது

இது தான் தாரக மந்திரமாய் இருக்க வேண்டும்.

நாங்கள் இப்படியே எல்லோரையும் திட்டிக்கொண்டு அழிந்துபோய்விடுவோம்.(அதுமாத்திரம் தானே தெரியும்) அர்ஜுன்.

நாங்கள் என்று என்னையும் சேர்த்துத்தான் எழுதினான்.

ஏதோ முள்ளிவாய்க்கால் அழிவு மற்றவர்களுக்கு சந்தோசத்தை கொடுத்த மாதிரி எழுதுகின்றீர்கள்.முள்ளிவாய்காலுக்கு அவ்வளவு மக்களையும் தாங்கள் தப்புவதற்கு இழுத்துக்கொண்டு போன புலிகளில் தான் கோவம் உலகத்தின் மீது அல்ல.

அதைவிட அந்தளவு பிரச்சனைகளுக்குள்ளும் புலிக்கொடியை பிடித்து அங்கீகாரத்திற்கு நின்ற புலம் பெயர் புண்ணாக்குகளில் தான் பெரும் கோவம்.

நீங்கள் எங்க கேட்டனீர்கள் மக்களை காப்பாற்றசொல்லி? மக்களை காப்பாற்ற கேட்பதற்கு புலிக்கொடி எதற்கு.

அவ்வளவு தமிழ் மக்களையும் கொன்றது நீங்கள் தான் மறந்துவிடாதீர்கள்.இப்போ மிஞ்சி இருப்பவர்களையும் கொல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில்தான் இப்போது இறங்கியுள்ளீர்கள்?

ஏன் உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் மக்கள் அழிந்தாலும் பறவாயில்லை புலிகள் அழிய வேண்டும் என்று தான் நீங்களும் உங்கள் கூட்டமும் எதிர்பார்த்தீர்கள்.அது தான் நடந்தது.பிறகு பிளேட்டை மாற்றி புலிகள் தான் மக்களை கொண்டு போய் கொன்றார்கள் என்கிறீர்கள்.எந்த உலக சட்டத்தில் புலிகளுடன் சேர்ந்து நிற்கும் மக்களை கொல்ல வேண்டும் என்று உள்ளது என்று கூறினால் மிக்க நன்றாக இருக்கும்.

மேலும் புலிகளை அரசுடன் சேர்ந்து காட்டிக்கொடுத்த சித்தார்த்தன் கூட்டத்தில் வந்த உங்களை எப்படி தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பீர்கள் என்று எதிர் பார்க்கலாம்.செய்தது முழுக்க கொலைகளும் கடத்தல்களும், காட்டிக்கொடுப்புகளும்.இதற்கு மற்ற ஆட்களை புண்ணாக்கு என்று சொல்ல நீங்கள் யார்?

கடந்த 2 வருடங்களாக புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் யார் மக்களை கடத்தி கொல்கிறார்கள் என்று எல்லோருக்குமே தெரியும்.மிஞ்சி இருக்கும் தமிழர்களை கொல்பவர்கள் அரச குண்டர்களுடன் உங்கள் குண்டர்களும் சேர்ந்து தான் என்பது வெள்ளிடை மலை.இதற்கு நீங்கள் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போல் அங்கு தேனும் பாலும் ஓடுகிறது என்று சொன்னதும் சந்துக்குள் சிந்து பாடுவதும் எல்லோருக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியின் பேரழிவானது இயற்கை அனர்த்தம். இதை மனிதனால் தடுக்க முடியாது. பாதிக்கப் பட்ட இடங்களுக்கு, மக்களுக்கு நிவாரணம் செய்ய முடியும். இதற்கு யப்பானிடம் இல்லாத ஜென்னா!

எமக்கு ஏற்பட்ட அவலம் என்பது செயற்கையாக உலக வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் முள்ளிவாய்க்காலில் வட இந்தியன் இலங்கை ராணுவத்தை உபயோகித்து நிகழ்த்திய கொடூரம்! இதற்கு யாரும், எந்த நாடும் ஈடு செய்ய முடியாது.

என்னுடைய மனம் எமக்கு நடந்த அவலத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இதற்குப் பின் உலகில் எப்பேர்ப்பட்ட கொடூர சாவுகள் நடந்தாலும் இம்மியளவு கூட மனம் அதற்காக பரிதாபமோ, வருத்தமோ படுவதில்லை. :unsure:

நிழலி நீங்களே... சுவியும், கு.சா அண்ணையும் எழுதியதை விளங்காமல் மற்றப் பதிவுகளிலிருந்து மேற்கோள் காட்டலாமா?

சுவி குறிப்பிட்டது வட இந்தியர்களை. சுவர்ணலதாவும், முரளியும் தென்னிந்தியர்கள். அதனால் தான் அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார்கள்.

தமிழ் சிறி,

நான் கூறியது, மிகக் கொடூரமான சாவுகள், படுகொலைகள், சித்திரவதைகள் என்று எல்லாம் பார்த்த பின்பும் இன்னொரு மனிதரின் சாவுக்கு கவலைப் படும் ஈரம் எங்களிடம் இருக்கு என்பதற்கே. சாவது தமிழனா, தென் இந்தியனா என்று மனம் பார்ப்பதில்லை. மைக்கல் ஜாக்சன் இறந்ததுக்கும் கவலைப் படவில்லையா...விக்கி லீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க விமானத் தாக்குதல் காட்சி ஒன்றில் தன் குழந்தைகளை பள்ளிக்கூடம் விட்டு கூட்டிக் கொண்டு வந்த தந்தை ஒருவர் வீதியில் காயம் பட்டு வீழ்ந்து கிடக்கும் மனிதர்களை காப்பாற்ற முயலும் போது சுடப்பட்டு இறந்ததைக் கண்டு மனம் பதை பதைக்கவில்லையா...

எமக்குள் இன்னமும் மனித தன்மையும், அதன் காரணாமாக மனித விடுதலையை நேசிக்கும் குணமும், அதனால் எம் விடுதலையை அவாவும் பெருவிருப்பும் இருக்கு என்றே நம்புகின்றேன். ஒரு சக மனிதனுக்கு அவலம் வரும் போது ரசிக்கும் குரூர மனதை எமக்கு எம் தோல்வி தந்துவிடவில்லை

சுவி யதார்த்தத்தில் அப்படி இருக்க பழக வேண்டும் என்று சொன்னது ஒரு முடியாத விடயம். ஒரு வேளை நாம் அப்படியான ஒரு குரூர இனமாக மாறினால், எமக்கு விடுதலை அவசியம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியின் பேரழிவானது இயற்கை அனர்த்தம். இதை மனிதனால் தடுக்க முடியாது. பாதிக்கப் பட்ட இடங்களுக்கு, மக்களுக்கு நிவாரணம் செய்ய முடியும். இதற்கு யப்பானிடம் இல்லாத ஜென்னா!

எமக்கு ஏற்பட்ட அவலம் என்பது செயற்கையாக உலக வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் முள்ளிவாய்க்காலில் வட இந்தியன் இலங்கை ராணுவத்தை உபயோகித்து நிகழ்த்திய கொடூரம்! இதற்கு யாரும், எந்த நாடும் ஈடு செய்ய முடியாது.

என்னுடைய மனம் எமக்கு நடந்த அவலத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இதற்குப் பின் உலகில் எப்பேர்ப்பட்ட கொடூர சாவுகள் நடந்தாலும் இம்மியளவு கூட மனம் அதற்காக பரிதாபமோ, வருத்தமோ படுவதில்லை. :unsure:

Suvy anna, ippadi thaan naanum unarkiren. Haiti il nadantha pOthum ithaiye koorinen.

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா, இப்படி ஒருத்தரை மாற்றி ஒருத்தர் எந்த நிகழ்வுகளிலும், முன்னர் நீங்கள் அப்படி இருந்தவங்கள்தானே என குறை கூறி சேறு இறைப்பதைவிட, தவறுகளை உணர்ந்து இனியாவது திருந்தி உங்கள் நிலையிலிருந்து இறங்கி ஒன்று சேர வரவே மாட்டீர்களா?

ஈழத்தமிழன் மீது வைத்திருந்த மதிப்பு, இந்த இழிநிலை வந்தும் ஒன்று சேராத உங்களால் இறங்கிக்கொண்டுதான் வருகிறது...

ஈழத்தமிழர்கள் எப்போதுமே இப்படித்தான் என்ற நிலையை பொது அடிப்படை விதியாக்கிவிடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குள் இன்னமும் மனித தன்மையும், அதன் காரணாமாக மனித விடுதலையை நேசிக்கும் குணமும், அதனால் எம் விடுதலையை அவாவும் பெருவிருப்பும் இருக்கு என்றே நம்புகின்றேன். ஒரு சக மனிதனுக்கு அவலம் வரும் போது ரசிக்கும் குரூர மனதை எமக்கு எம் தோல்வி தந்துவிடவில்லை

காலையில் செய்தியைக்கேட்டதும் இனம் புரியாத உணர்வு நிழலி

எமக்குத்தெரியும் நாம் அழிந்ததுக்கு இந்த எமது எல்லாவற்றையும் சிந்தித்து அரவணைக்கும் குணமும் காரணம்.

எமக்குள் முரண்பாடில்லை. எவரையும் அழிக்க துன்புறுத்த நாம் நினைத்ததில்லை சிங்களவன் உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

எமது மக்கள் வன்னியில் கற்பிணிப் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த உலகத்தையே... எட்டிப் பார்க்காத சிசுவின் மரணத்தில் இருந்து....

கிளிநொச்சியில் முதியோர் விடுதியில் இருந்த 101 வயது மூதாட்டியையும் கொன்ற இந்த உலகம், சும்மா வேடிக்கை பார்த்த போது...

அதற்குக் காரணமாக நின்ற யசூசியின் நாட்டின் மீது சுனாமிப் பேரலை வந்தது, எமது சிறு ஆறுதலுக்காக சந்தோசப் படுவதே தவிர, யப்பான் நாட்டு மக்கள் மீதல்ல. :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

காலையில் செய்தியைக்கேட்டதும் இனம் புரியாத உணர்வு நிழலி

எமக்குத்தெரியும் நாம் அழிந்ததுக்கு இந்த எமது எல்லாவற்றையும் சிந்தித்து அரவணைக்கும் குணமும் காரணம்.

எமக்குள் முரண்பாடில்லை. எவரையும் அழிக்க துன்புறுத்த நாம் நினைத்ததில்லை சிங்களவன் உட்பட.

நாங்கள் பொம்மைகள் அல்ல நிஜங்கள்தான். இயற்கையே நாங்கள் என்ன பாவம் செய்தோம்.

tsunami%20japan.jpg

எமது மக்களின் இன்றைய நிலைக்கு, அழிவுக்கு முக்கிய காரணம் சர்வதேசம், அதிலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நாடுகள்: அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நோர்வே மற்றும் ஜப்பான். அந்த வகையில் கோபம், ஆத்திரம் தனிப்பட்ட ரீதியில் இருப்பதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அதுபோலத்தான் ஜப்பானியர்களும் தனிப்பட்ட ரீதியில் அமெரிக்கா அணுக்குண்டு இரண்டாம் உலக மகாயுத்தத்தில் குண்டு போட்டதை மறக்க மாட்டார்கள். அமெரிக்கா அண்மையிலேயே முதல் முறையாக தாம் தமது பிரதிநிதி ஒருவரை ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி நிகழ்வுகளுக்கு அனுப்பியிருந்தது. ஆனால், அவர்கள் பொருளாதார பலமாக மாறி இன்றைய அழிவில் ஆயிரத்துக்குள்ளேயே மக்கள் இறந்ததுக்கு வழி சமைத்துள்ளர்கள்.

நாமும் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நோர்வே, ஜப்பான், இந்தியா, சீனா என எல்லோரையும் பகைத்து சிங்களத்தை எதிர்க்க முடியாது. எமது மக்களை சிங்களத்தின் வருங்கால அழிவுகளில் இருந்து பாதுக்காக நாமும் இராசதந்திர ரீதியாக நகரவேண்டும். நாமும் ஒரு பொருளாதார பலமாக மாற வேண்டும். நாமும் விடுதலை பெறவேண்டும்.

  • தொடங்கியவர்

இதுவரை 700 சடலங்கள் மீட்கபட்டுள்ளதாம். எப்படித்தான் தொழில் நுட்பத்தில் மனிதன் உயர்ந்தாலும் இயற்கையின் ஆக்கத்தினையும் அழிவினையும் கட்டுப்படுத்தவோ அன்றி முன்னெற்பாடுகளை செய்வதோ கடினம்.

இயற்கையோடு ஒத்துப்போவதே மனித குலத்திற்கு புத்திசாலித்தனம் .

விஞ்ஞானம் என்ற பெயரிலும் , அபிவிருத்தி என்ற பேரிலும் இயற்கையினை அழித்து, அகழ்ந்து, அபரிவிதமாக தீண்டிப்பார்த்து மனிதன் சோதனை செய்தால் இயற்கை இதுமட்டுமல்ல இனியும் பெரும் அழிவுகளைத்தான் பதிலாக தரும்.

அளவற்ற பயன்பாடும் இயற்கையின் சீற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. அப்படியென்றால் பண்டைய காலத்தில் இயற்கை அழிவுகள் நடக்கவில்லையா என்ர கேள்வியும் எழத்தான் செய்கின்றது?

தமிழ் சிறி,

நான் கூறியது, மிகக் கொடூரமான சாவுகள், படுகொலைகள், சித்திரவதைகள் என்று எல்லாம் பார்த்த பின்பும் இன்னொரு மனிதரின் சாவுக்கு கவலைப் படும் ஈரம் எங்களிடம் இருக்கு என்பதற்கே. சாவது தமிழனா, தென் இந்தியனா என்று மனம் பார்ப்பதில்லை. மைக்கல் ஜாக்சன் இறந்ததுக்கும் கவலைப் படவில்லையா...விக்கி லீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க விமானத் தாக்குதல் காட்சி ஒன்றில் தன் குழந்தைகளை பள்ளிக்கூடம் விட்டு கூட்டிக் கொண்டு வந்த தந்தை ஒருவர் வீதியில் காயம் பட்டு வீழ்ந்து கிடக்கும் மனிதர்களை காப்பாற்ற முயலும் போது சுடப்பட்டு இறந்ததைக் கண்டு மனம் பதை பதைக்கவில்லையா...

எமக்குள் இன்னமும் மனித தன்மையும், அதன் காரணாமாக மனித விடுதலையை நேசிக்கும் குணமும், அதனால் எம் விடுதலையை அவாவும் பெருவிருப்பும் இருக்கு என்றே நம்புகின்றேன். ஒரு சக மனிதனுக்கு அவலம் வரும் போது ரசிக்கும் குரூர மனதை எமக்கு எம் தோல்வி தந்துவிடவில்லை

சுவி யதார்த்தத்தில் அப்படி இருக்க பழக வேண்டும் என்று சொன்னது ஒரு முடியாத விடயம். ஒரு வேளை நாம் அப்படியான ஒரு குரூர இனமாக மாறினால், எமக்கு விடுதலை அவசியம் இல்லை

நிழலி, உங்கள் மனோநிலையில்தான் நானும் உள்ளேன்.உங்கள் கருத்துதான் எனதும்.

இதுவரை 700 சடலங்கள் மீட்கபட்டுள்ளதாம். எப்படித்தான் தொழில் நுட்பத்தில் மனிதன் உயர்ந்தாலும் இயற்கையின் ஆக்கத்தினையும் அழிவினையும் கட்டுப்படுத்தவோ அன்றி முன்னெற்பாடுகளை செய்வதோ கடினம்.

இயற்கையோடு ஒத்துப்போவதே மனித குலத்திற்கு புத்திசாலித்தனம் .

இதுவே ஒரு மூன்றாம் உலக நாட்டில் நடந்து இருந்தால் இலட்சக்கணக்கில் மக்கள் இறந்திருப்பார். ஜப்பானின் கட்டடக்கலை, தொழில்நுட்பம் அவர்களை பெருமளவில் காப்பற்றியுள்ளது.

Japan’s Strict Building Codes Saved Lives

From seawalls that line stretches of Japan’s coastline, to skyscrapers that sway to absorb earthquakes, to building codes that are among the world’s most rigorous, no country may be better prepared to withstand earthquakes than Japan.

Had any other populous country suffered the 8.9 magnitude earthquake that shook Japan on Friday, tens of thousands of people might already be counted among the dead. So far, Japan’s death toll is in the hundreds, although it is certain to rise.

http://www.nytimes.com/2011/03/12/world/asia/12codes.html?_r=1&hp

- The magnitude 8.9 offshore quake

- unleashed a 7-meter tsunami and

- was followed by more than 50 aftershocks for hours many of them of more than magnitude 6.0.

- Scientists say the massive earthquake ranks as the fifth largest jolt in the world since 1900

- It was nearly 8,000 times stronger than one that devastated Christchurch, New Zealand, last month

Edited by akootha

நாங்கள் இப்படியே எல்லோரையும் திட்டிக்கொண்டு அழிந்துபோய்விடுவோம்.(அதுமாத்திரம் தானே தெரியும்) அர்ஜுன்.

நாங்கள் என்று என்னையும் சேர்த்துத்தான் எழுதினான்.

ஏதோ முள்ளிவாய்க்கால் அழிவு மற்றவர்களுக்கு சந்தோசத்தை கொடுத்த மாதிரி எழுதுகின்றீர்கள்.முள்ளிவாய்காலுக்கு அவ்வளவு மக்களையும் தாங்கள் தப்புவதற்கு இழுத்துக்கொண்டு போன புலிகளில் தான் கோவம் உலகத்தின் மீது அல்ல.

அதைவிட அந்தளவு பிரச்சனைகளுக்குள்ளும் புலிக்கொடியை பிடித்து அங்கீகாரத்திற்கு நின்ற புலம் பெயர் புண்ணாக்குகளில் தான் பெரும் கோவம்.

நீங்கள் எங்க கேட்டனீர்கள் மக்களை காப்பாற்றசொல்லி? மக்களை காப்பாற்ற கேட்பதற்கு புலிக்கொடி எதற்கு.

அவ்வளவு தமிழ் மக்களையும் கொன்றது நீங்கள் தான் மறந்துவிடாதீர்கள்.இப்போ மிஞ்சி இருப்பவர்களையும் கொல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில்தான் இப்போது இறங்கியுள்ளீர்கள்?

இந்த கருத்துடன் உடன்படுவம் என்றால், முடியாமல் உள்ளது: " இன்று லிபியாவில் கடாபி பொதுமக்களை கொல்வதை ஏன் பார்த்ததும், தெரிந்தும் ஏன் இன்னும் தடுத்து நிறுத்தவில்லை? " என்ற கேள்வி பதிலாக அமைகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இப்படியே எல்லோரையும் திட்டிக்கொண்டு அழிந்துபோய்விடுவோம்.(அதுமாத்திரம் தானே தெரியும்) அர்ஜுன்.

நாங்கள் என்று என்னையும் சேர்த்துத்தான் எழுதினான்.

ஏதோ முள்ளிவாய்க்கால் அழிவு மற்றவர்களுக்கு சந்தோசத்தை கொடுத்த மாதிரி எழுதுகின்றீர்கள்.முள்ளிவாய்காலுக்கு அவ்வளவு மக்களையும் தாங்கள் தப்புவதற்கு இழுத்துக்கொண்டு போன புலிகளில் தான் கோவம் உலகத்தின் மீது அல்ல.

அதைவிட அந்தளவு பிரச்சனைகளுக்குள்ளும் புலிக்கொடியை பிடித்து அங்கீகாரத்திற்கு நின்ற புலம் பெயர் புண்ணாக்குகளில் தான் பெரும் கோவம்.

நீங்கள் எங்க கேட்டனீர்கள் மக்களை காப்பாற்றசொல்லி? மக்களை காப்பாற்ற கேட்பதற்கு புலிக்கொடி எதற்கு.

அவ்வளவு தமிழ் மக்களையும் கொன்றது நீங்கள் தான் மறந்துவிடாதீர்கள்.இப்போ மிஞ்சி இருப்பவர்களையும் கொல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில்தான் இப்போது இறங்கியுள்ளீர்கள்?

தலைப்பு எதுவாக இருந்தாலும், கொட்டப்படும் சரக்கு ஒன்றே!

ஒட்டுமொத்த தமிழனின் சாம்பலின்மேல் நிறு புலிஅழிவைக் கொண்டாடுபவன், தமிழனுக்கு புத்தி சொல்ல வரும் அருகதை இருக்கே அது தூசணத்தால் அரிச்சனை செய்வதைப் போல் இருக்கின்றது!

படிக்காதது எடுத்த துப்பாக்கி முப்பது வருடம் உலகவல்லரசை தடை போட்டு வைத்திருந்தது.

நான்கு மனிதருக்கு மனம் கோணாமல் கதைக்கும் வகை 'தெரியாமை' அரசியல் கதைக்க வந்ததுதான் தப்பு!

சும்மா ஒரு சீரியலை பார்க்கவே கண்ணீர் வருகின்றது.நாம் எல்லோரும் மனிதர்கள் தான்.எமக்குள் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் சகமனிதன் என்ற உணர்வும் மனிதாபிமானமும் இல்லாமல் போககூடாது.

எம்முடன் வேலைபார்பவர்களுடன் இன மத வேறுபாடில்லாமல் அவர்கள் சுக,துக்கங்களில் பங்கெடுக்கவில்லையா?எம்மினத்தின் அழிவின் போது எத்தனை பேர் எமக்கு ஆறுதல் சொன்னார்கள்.உலகம் எம்மை பயங்கரவாதிகளாக சித்தரித்துவிட்டது அதனால் தான் எமதுபக்க அழிவுகளை பெரிதாக பொதுமக்கள் மத்தியில் கொண்டுவரமுடியாமல் போய்விட்டது.

இன்னமும் கூட நாங்கள் ஒன்றும் செய்யாவிட்டாலும் போர்க்குற்றவிசாரணைவேண்டும் என ஒரு குறிப்பிட்ட பகுதியினர் அழுத்தம் கொடுத்துக்கொண்டுதானிருக்கின்றார்கள்.

எமக்கென்றொரு நியாயதை நாங்கள் உருவாக்கிவைத்துக்கொண்டு மற்றவர்களை குற்றம் பிடிப்பதைவிட நாமும் உலகஒழுங்குடன் நியாயம் கேட்பதெ சரியானது

அது என்ன? பார்வதி அம்மாவின் மரண காரியத்தில் மட்டும் அல்ல, புலி உறுப்பினரின் மரணங்களில் கூட தங்கள் வஞ்சத்தை எவளவு அசிங்கமாக கொண்டாடுகின்றீர்கள்? இந்த விடயங்களில் எல்லாம் அத்தகைய பண்பு ஓய்வெடுத்துக் கொண்டதாலோ, இந்த வகையான பதிவுகள் படைக்கப் பட்டன?

  • கருத்துக்கள உறவுகள்

http://videos.tf1.fr/jt-we/apres-le-passage-du-tsunami-un-paysage-de-desolation-6308423.html

http://videos.tf1.fr/jt-we/seisme-au-japon-la-nature-s-est-dechainee-6308421.html

Séisme au Japon: plus de 350 morts et plus de 500 disparus

Par TF1 News (D'après agence), le 11 mars 2011 à 07h32, mis à jour le 11 mars 2011 à 20:40

Dossier : Le Japon après le séisme

Le séisme de magnitude 8,9 qui s'est produit vendredi au large de la côte nord-est du Japon a fait au moins 351 morts, selon un bilan de la police établi vendredi dans la soirée. 200 à 300 corps ont notamment été retrouvés sur une plage. 547 personnes étaient également portées disparues.

http://lci.tf1.fr/monde/asie/2011-03/tres-violent-seisme-pres-de-tokyo-alerte-au-tsunami-6307277.html

http://news.fr.msn.com/m6-actualite/video/

http://jt.france3.fr/1920/

Edited by விசுகு

இன்னமும் கூட நாங்கள் ஒன்றும் செய்யாவிட்டாலும் போர்க்குற்றவிசாரணைவேண்டும் என ஒரு குறிப்பிட்ட பகுதியினர் அழுத்தம் கொடுத்துக்கொண்டுதானிருக்கின்றார்கள்.

முழுமையான ஆதராங்கள் இருந்தும் அழுத்தம் கொடுப்பது மேற்குலகம் மட்டுமே (சீனாவோ, உருசியாவோ, இந்தியாவோ அல்ல). காரணம் அரசியல் + பொருளாதார நோக்கே, மாறாக மனிதநேயம் அல்ல.

எமக்கென்றொரு நியாயதை நாங்கள் உருவாக்கிவைத்துக்கொண்டு மற்றவர்களை குற்றம் பிடிப்பதைவிட நாமும் உலகஒழுங்குடன் நியாயம் கேட்பதெ சரியானது

நாமும் அன்று தொடக்கம் இன்றுவரை உலக ஒழுங்குடன் சேர்ந்தே, உலக அடிப்படை உரிமைகளுக்கு இணங்க, எமது நாட்டில் நாம் சுதந்திரமாக வாழ கேட்கிறோம். வேறு என்னத்தை கேட்டோம்? இல்லை அடிப்படை சுதந்திரங்களை கேட்பது உலக ஒழுங்கில் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

2004 இல் சுனாமி தமிழர்களைத் தாக்கியதற்கும் இவ்வாறு காரணங்கள் உண்டா ?

2009 இல் எமது இனம் அழியும் போது பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்த்தவர்கள்.அதற்கு எல்லா வகையிலும் உதவியவர்கள் பாதிக்கப்படும் போது நாம் ஏன் இரக்கப்பட வேண்டும்.யப்பானில் உயிரழிவு மிகச் சொற்பமே.பொருளாதார அழிவுதான் மிகவும் அதிகம் இந்தப் பொருளாதாரமே எம்மை அழித்தது.அந்தப் பொருளாதாரம் அழிவது எமக்கு மகிழ்ச்சியே!

அரசன்(வல்லரசுகள்) அன்று அறுப்பவன்.

தெய்வமே நின்று அறுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை அழிவுகள் எல்லோருக்கும் பொதுவானவை. இதனை பழிவாங்கலாக கருதுவது மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்டது. ஜப்பானியர்கள்.. என்ற அடையாளத்துக்கு அப்பால் அவர்கள் மனிதர்கள் என்று நோக்கப்படும் போது அழிவுகள் துன்பகரமானவை.

இயற்கையின் அளவு கடந்த சக்தியின் முன் மனிதன் செயலற்றுப் போவது ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும் மனிதன் தானே மாற்றி அமைத்துள்ள இயற்கையின் வடிவங்களே அவனுக்கு அழிவாவது தான் இங்கு அதிகம்.

பூகம்பமோ.. சுனாமியோ நேரடியாக ஏற்படுத்தும் அழிவை விட அவை மனிதன் ஆக்கியுள்ள கூறுகள் மீது செய்யும் அழிவுகள் மனிதனை அழிக்கின்றன. இது ஒரு வகையில் மனிதனே தன்னை தானே அழித்துக் கொள்கின்ற வகையினது.

ஜப்பானியர்களை இந்த இடத்தில் பாராட்டலாம். இவ்வளவு பெரிய இயற்கையின் சக்தி வெளிப்பாட்டை அவர்கள் அழிவுகளை குறைத்து எதிர்கொள்கின்ற விதம் பாராட்டத்தக்கது. அது மட்டுமன்றி துன்பப்படும் அந்த மக்களுக்கு உதவ வேண்டியது சக மனிதர்களாக எமது கடமையும் கூட. அதனை புறக்கணிக்கக் கூடாது. அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக நாமும் அதே தவறை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் எமது எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப முதலில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும் நிரந்தரமில்லை. சாவு ஒன்றைத் தவிர..!

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் இற்கு ஒரு 10 பச்சை குத்தவேண்டும்

மனிதாபிமானம்.

என்னும் இந்தச் சொல்லால் அழிந்தவன் தமிழன்.

ஈழப் போராட்டம் உச்சகரமாக நடந்த போதும்.... புலிகள் சாதாரண சிங்களவரை கொல்லவில்லை.

இன்று நடப்பதுடன் ஒப்பிடும் போது.... மனிதாபிமானத்தை தூக்கி, உங்கள் குப்பை தொட்டியில் போடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.