Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பனங்காய் தீம்(theme)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூத்தவளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திக்கு சிவாவின் மனைவி ஒரு மாதத்திற்கு முன்பாக ஆயத்தங்கள் செய்ய தொடங்கிவிட்டாள்,இது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.சிவாவின் மனைவி சுதா பல வருடங்களுக்கு முதலேசிட்னிக்கு குடிபெயர்ந்தவள்.சிவா அவளை திருமனம் செய்தபடியால் அவுஸ்ரேலியா பிரஜாவுரிமை கிடைத்தது.சிவாவைவிட சுதாவுக்கு வெளிநாட்டு அனுபவங்கள் அதிகமாகவே இருந்தது சப்ரைஸ் பார்டிகள்,பிறந்தநாள் பார்டிகள் ஒழுங்கு செய்வதுபோன்றவற்றில் அவளுக்குத்தான் அதிகம் அனுபவமிருந்தது.

பிள்ளைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது என்றால் ஒரு புது சட்டை உடுத்தி,கேக் வெட்டி ,5,6 பலூன் கட்டி கொண்டாடினால் போதும்தானே இதற்கு போய் ஏன் ஒரு மாததிற்கு முதலே பெரிய கலியாணவீடு செய்யிறமாதிரி பில்டப் காட்டுவான் என நினைத்தான்.

மூத்தவளின் பிறந்தநாளுக்கு "பட்டர்விளை தீம்"என்று போட்டு சகல தும் வண்னாத்திபூச்சி வடிவில் தெரிவு செய்தாள் .அழகான வ,பூச்சி கேக்,வ.பூச்சிசட்டை,மேசை விரிப்புக்கள்,கதிரை விரிப்புக்கள் ,அலங்கார பொருட்கள் எல்லாம் வ..பூச்சி வடிவிலோ அல்லது வ.பூச்சியின் படம் போட்டதாகவோ தெறிவு செய்திருந்தாள்.

முத்தவளுக்கு பாவித்த பட்டர்விளை தீம் பொருட்களை பத்திரபடுத்தி வைத்திருந்தான் தனது இரண்டாவது பையனின் பிறந்தநாளுக்கு பாவிக்கலாம் என்ற எண்ணத்தில்,தீம் பொருட்கள் பையனுக்கு வேறு பெண்களுக்கு வேறு என்று அவனுக்கு மனைவி சொன்னபின்புதான் தெரிய வந்து.பட்டர்விளை தீம் எல்லாத்தையும் குப்பைதொட்டியில் போட்டுவிட்டான்.

பையனின் பிறந்தநாளுக்கு "கார் தீம்",அதாவது கேக் கார் வடிவில் செய்யபட்டது,சாதாரணகார் வடிவில் அல்ல பிராண்டட் கார் வடிவில். கார்வடிவ மெலுகுவர்த்தி ,மேசை விரிப்பு,கதிரைவிரிப்பு ,கோப்பைகள்,கப்கள்,எல்லாவற்றிலும் கார் படங்கள் போடப்பட்டிருந்தன.

காலப்போக்கில் இந்த தீம் விளையாட்டு சிவாவுக்கு பிடித்து போய்விட்டது.அவனது பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு அவனே பல தீம் ஜடியாக்களை உண்டாக்கினான்.ஒரு தீம் ஸ்பேசலிஸ்ட் ஆக மாறிவிட்டான்.அவனது நண்பர்கள் ,நண்பர்களின் மனைவிமார் எல்லாம் சிலவேளையில் இவனிடம் ஜடியாக்கள் கேட்பதுண்டு.

ஒருமுறை மகனின் பிறந்தநாளுக்குமகன் கேட்டான் அம்மா எனது பிறந்த நாளுக்கு துப்பாக்கி தீம் வைப்போமோ?துப்பாக்கி எல்லாம் கூடாது நாங்கள் வேறு நல்ல தீம்மாக அப்பாவிடம் கேட்போம் என சமாளித்திவிட்டாள்.

மூத்தவள் வளர்ந்தவுடன் அவளே தீம் களை தெரிவு செய்வாள்,நண்பிகளின் பிறந்தநாளுக்கு செல்லும் பொழுது ஒவ்வொரு தீம் மை பற்றி சொல்லுவாள்.ஒரு முறை கறி தீம் என்றாள் ,அதாவது எல்லோரும் சீலை உடுத்துக்கொண்டு போகவேண்டும் அதுவும் எல்லோரும் ஒரே மாதிரியான சேலை கட்ட வேண்டும் என்று ஒரு கிழமையாக கடைகள் திரிந்து வாங்கி வந்தாள்.

இன்னோரு நாள் போலிவூட் தீம் என்றாள் அதுக்கு கிந்தி படத்தில வாரமாதிரி உடுத்து கொண்டு போக வேணும் என்று சுரிதார்,மற்றும் வளையல் தோடு என்று அணிந்து சென்றாள்.

பன்கி தீம் என்று தலைமுடியை கலர் பண்ணிபோட்டு,காதைவிட பெரிய வளையல் ஒன்றை காதில மாட்டியும்(ஊரில் கடலைகார ஆச்சிமார் போடுவினம்)சட்டைக்கு ஒரு கையும் மற்ற கை கிழிந்த மாதிரி தொங்கவிட்டபடியும்,ஜீன்ஸ் பொக்கட்டில் குஞ்சங்கள் தொங்கவிட்டபடியும்,ஜீன்ஸ் ரொட்டை கூட்டுமளவுக்கு அணிந்திருந்தாள்

பெடியன் கிரிகட் தீம் என்று போட்டு பற்றும் போலும் போட்ட டி சேர்ட் வாங்கவேண்டும் என்று போய் வாங்கி கொன்டுவந்தான்,இன்னோருநாள் பீயர் தீம் என்றான் .போயிட்டு வந்து ஒரு பியர் கானை 3 நண்பர்கள் சேர்ந்து குடிச்சோம் என தந்தையிடம் சொன்னான்.தந்தை உண்மையை சொல்லு பீயரோ விஸ்கியோ குடிச்சா? என வினாவ கொஞ்சம் விஸ்கி குடிச்சனான் என பதிலளித்தான்.

சுதாவின் 45 வது பிறந்த நாளுக்கு பிள்ளைகளும் சிவாவும் மண்டையை போட்டு உடைத்துகொண்டிருந்தார்கள் எந்த தீம் செலக்ட் பண்னுவது என்று இறுதியாக களர் என முடிவு செய்தார்கள்.பின்பு எந்தகளர் என யோசித்து கொண்டிருந்தார்கள் நீலகர்தான் அம்மாவுக்கு பிடித்தகலர் என பிள்ளைகள் சொல்ல சிவாவும் ஒம் அவளுக்கு பிடித்தது நீலம்தான் என்றான்....

பெரிய மண்டபம் ஒன்றை ஒழுங்கு பண்ணி,செப்ரைஸ் ஆக சகல ஏற்பாடுகளையும் செய்தார்கள்.மண்டபம் முழுவதும் நீல நிறத்தால் அலங்காரம் செய்தனர்.கேக் நீலம்,கதிரை மேசை விரிப்புக்கள் நீலம்,குளிர்பாண போத்தல்கள் நீலம்,பிளேட் ,கப் எல்லாம் நீல மயம்.

சிவாவும் நீலநிறகல் வைத்த நகை செட் செய்து நடு இரவில் (24:01) பரிசாக கொடுத்தான்.பிள்ளைகள் இருவரும் நீலநிறத்தில் விலை உயர்ந்த சேலையை பரிசாக அளித்தனர்,சுதா நீல மயமானால்.

சிவாவின் 50வது பிறந்த நாளுக்கு மனைவியும் பிள்ளைகளும் அப்பாவுக்கு போத்தல் தீம் தான் சரி என முடிவெடுத்தனர்,சிவாஸ் றீகலின் வடிவில் கேக் செய்யப்பட்டது .விருந்து வைபவத்தில் சிவாஸ் றீகல் பரிமாரப்பட்டது.அலங்காரங்கள் போத்தல் வடிவில் செய்யப்பட்டது. சிவா குடித்தால் கொஞ்சம் அலட்டத் தொடங்குவான் அதனால் மனிசி அவனை அதிகம் குடிக்கவிடுவதில்லை,அன்று 50 வது பிறந்தநாள் என்றபடியால் மனிசி கண்டு கொள்ளவில்லை சிவா நல்லாய் ஊத்திபோட்டான்.

உண்மையில் என்னுடைய பெயர் சிவா இல்லை,ஷிவாஸ் ....அதுதான் மனிசி ஷிவாஸ் ரீகலை எனது பிறந்த நாளுக்கு தீம்மாக எடுத்திருந்தவ என புலம்ப்பத் தொடங்கிவிட்டான். அன்றிலிருந்து நண்பர்கள் எல்லாம் சிவாவை ஷிவாஸ் என அழைக்க தொடங்கிவிட்டார்கள்.

ஷிவாவின் 55 வது பிறந்த நாள் இந்த வருடம் வருகிறது அதற்கு தானே தீமை செலக்ட் பண்ணி வைத்திருக்கிறான்.சகல் தீம்களையும் செய்து அலுத்துபோனபடியால் புதுமையாக செய்ய வேண்டும் அத்துடன் தனது கலாச்சரத்துடனும்(????) சம்பந்தப்பட்டதாகவும் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பனங்காயை தீம் தெரிவுசெய்தான். அதற்காக பனங்கிழங்கு,பனங்காய்பணியாரம்,பிணாட்டு,பனங்கட்டி,ஒடியல் ,ஒடியல் மா ,பூரான்.போன்றவற்றை யாழ்ப்பாணத்திற்கு சென்று பிரத்தியே விமானத்தில்வாங்கி வருவதற்கு எண்ணியுள்ளான் , பனைஒலையில் பிண்ணப்பட்டமேசை விரிப்புக்கள் (பாய் போன்றது),கதிரையை பனை மரத்தில் செய்து இறக்குமதி செய்வதாக உத்தேசித்துள்ளான்.

பனங்கள்,பனம்சாரயம் போன்றவற்றை விசேடமாக போத்தல் அமைத்து "யவ்னா ஷிவாஸ்"என லேபிள் இட்டு புலம்பெயர் தமிழருக்கு மட்டும் என தயாரித்து இறக்குமதி செய்யவுள்ளான்.

கடகம் ,சுளகு போன்றவற்றை சிறிதாக வடிவமைத்து அதை கோப்பையாக பாவிக்கவுள்ளான்.

பெரிய மண்டபம் ஒன்றை ஒழுங்கு செய்து பனை மரம் போன்ற வடிவில் உள்ள பார்ம் மரம்களை உள்ளே வைத்து பனைவடலி போன்ற தோற்றத்தை உருவாக்கி எல்லா பனம் பொருட்களையும் வைத்து தனது 55 வது பிறந்த நாளை ஷிவாஸ் கொண்டாட போகின்றான் .

வாசகர்களே உங்களுக்கும் எதாவது புது தீம் ஜடியாக்கள் இருந்தால் ஷிவாவுக்கு சொல்லுங்கோ.....

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் தீம் செலக்ட் பண்ணியதற்காக சிவாக்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் எனக்கும் இந்த 'ஷிவாஸ்' உடைய தொடர்பு விபரங்களைத் தாங்கோ. கனக்க 'தீம்ஸ்' ஐடியாக்கள் என்னிட்டையும் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பனங்கிழங்கு,பனங்காய்பணியாரம்,பிணாட்டு,பனங்கட்டி,ஒடியல் ,ஒடியல் மா ,பூரான்.போன்றவற்றை யாழ்ப்பாணத்திற்கு சென்று பிரத்தியே விமானத்தில்வாங்கி வருவதற்கு எண்ணியுள்ளான் , பனைஒலையில் பிண்ணப்பட்டமேசை விரிப்புக்கள் (பாய் போன்றது),கதிரையை பனை மரத்தில் செய்து இறக்குமதி செய்வதாக உத்தேசித்துள்ளான்.

சிவாவின் லிஸ்ட்டில பனந் துலாவை விட்டுட்டார், மறக்காமல் அதையும் கொண்டு வரும்படி ஷிவாசிடம் கூறுங்கள்! :lol:

சிவாவின் லிஸ்ட்டில பனந் துலாவை விட்டுட்டார், மறக்காமல் அதையும் கொண்டு வரும்படி ஷிவாசிடம் கூறுங்கள்! :lol:

துலாவா பிளாவா ? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் தீம் செலக்ட் பண்ணியதற்காக சிவாக்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன். :rolleyes:

பச்சை குத்தியமைக்கு நன்றிகள் வல்வைசகாரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் எனக்கும் இந்த 'ஷிவாஸ்' உடைய தொடர்பு விபரங்களைத் தாங்கோ. கனக்க 'தீம்ஸ்' ஐடியாக்கள் என்னிட்டையும் இருக்கு.

நன்றிகள்Punkayooran புத்தனுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளவும் :D:D

சிவாவின் லிஸ்ட்டில பனந் துலாவை விட்டுட்டார், மறக்காமல் அதையும் கொண்டு வரும்படி ஷிவாசிடம் கூறுங்கள்! :lol:

சொன்னால் போச்சு :D நன்றிகள் சுவே

துலாவா பிளாவா ? :)

நன்றிகள் ஈசன் இரண்டையும் இறக்குமதி செய்வோம்...துலாவை சின்னதாக செய்து அழகு பொருளாக வைக்கலாம்,பிளாவை .....கிண்ணமாக பாவிக்கலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் என்ட தலைப்பை பார்த்து நான் நினைத்தேன் யாழ் கள பனங்காயை பற்றி ஏதோ எழுதி உள்ளீர்களாக்கும் என்டும் பரவாயில்லை எனது சார்பாக சிவாவின் ஜடியாவிற்கு ஓர் பச்சை

பனங்காய் தீம் செலக்ட் பண்ணியதற்காக சிவாக்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன். :rolleyes:

நானும் இதற்காவே ஒரு பச்சை புள்ளி போட்டுள்ளேன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் என்ட தலைப்பை பார்த்து நான் நினைத்தேன் யாழ் கள பனங்காயை பற்றி ஏதோ எழுதி உள்ளீர்களாக்கும் என்டும் பரவாயில்லை எனது சார்பாக சிவாவின் ஜடியாவிற்கு ஓர் பச்சை

நன்றிகள் ரதி அப்படி எழுதியிருந்தால் நிர்வாகம் தூக்கிப்போடும்..தனிநபர் தாக்குதல் என்டு.... :D

நானும் இதற்காவே ஒரு பச்சை புள்ளி போட்டுள்ளேன் :D

பச்சை குத்தியதற்கு நன்றிகள் நிழலி

ஷிவாஸின் எழுபதாவது பிறந்தநாளுக்கு "மரவள்ளிக்கிழங்கு தீம்" நல்லதாக இருக்கும் என நம்புகின்றேன்.அவிச்ச மரவள்ளிகிழங்கு டின்னர்,மரவள்ளி இலையாலும்,தடியாலும் டெக்கரேசன்,மரவள்ளிகிழங்கில் செய்த காச்சு சாராயம்.

கடைசியில் ஷிவாவிற்கு சேர்ப்பிரைஸ் கிப்ற் தொட்டுத்தின்ன "இஞ்சிச்சம்பல்"

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் கலை ரசனையுள்ள பதிவுக்கு என்பாராட்டுக்கள.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு பச்சை குத்தியுள்ளேன்.சூப்புறதை நினைவு படுத்தியத்துக்கு.அதுதானப்பா கொழும்பில் படிக்கப்போன புதுசில் எங்களை அங்குள்ள கொழும்புத்தமில்ஸ் :unsure: அழைப்பது பனங்கொட்டடை சூப்பிகள் என்று :rolleyes::lol:

மரவள்ளிக்கிழங்கு நல்ல தீம்தான் ஆனால் இஞ்சி சம்பல்??பிறந்தநாளுக்கு தீம் கேட்டால் நீங்கள் சங்கு ஊதுறதுக்கு தீம் சொல்லுறீயள்... :D .நன்றிகள் அர்ஜூன்

புத்தனின் கலை ரசனையுள்ள பதிவுக்கு என்பாராட்டுக்கள.

நன்றிகள் நிலாமதி

நானும் ஒரு பச்சை குத்தியுள்ளேன்.சூப்புறதை நினைவு படுத்தியத்துக்கு.அதுதானப்பா கொழும்பில் படிக்கப்போன புதுசில் எங்களை அங்குள்ள கொழும்புத்தமில்ஸ் :unsure: அழைப்பது பனங்கொட்டடை சூப்பிகள் என்று :rolleyes::lol:

இயற்கை அன்னை எங்களுக்கு அளித்த வரப்பிரசாதம் இந்த பனங்கொட்டை....மற்றவர்களுக்கு அது கிடைக்கவில்லை என்ற எரிச்சல் அதுதான் எங்களை அப்பட் சொல்லுறவையள்

எனக்கு பிடித்தது "அப்பம்" தீம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சுதாவின் 45 வது பிறந்த நாளுக்கு பிள்ளைகளும் சிவாவும் மண்டையை போட்டு உடைத்துகொண்டிருந்தார்கள் எந்த தீம் செலக்ட் பண்னுவது என்று இறுதியாக களர் என முடிவு செய்தார்கள்.பின்பு எந்தகளர் என யோசித்து கொண்டிருந்தார்கள் நீலகர்தான் அம்மாவுக்கு பிடித்தகலர் என பிள்ளைகள் சொல்ல சிவாவும் ஒம் அவளுக்கு பிடித்தது நீலம்தான் என்றான்....

பெரிய மண்டபம் ஒன்றை ஒழுங்கு பண்ணி,செப்ரைஸ் ஆக சகல ஏற்பாடுகளையும் செய்தார்கள்.மண்டபம் முழுவதும் நீல நிறத்தால் அலங்காரம் செய்தனர்.கேக் நீலம்,கதிரை மேசை விரிப்புக்கள் நீலம்,குளிர்பாண போத்தல்கள் நீலம்,பிளேட் ,கப் எல்லாம் நீல மயம்.

சிவாவும் நீலநிறகல் வைத்த நகை செட் செய்து நடு இரவில் (24:01) பரிசாக கொடுத்தான்.பிள்ளைகள் இருவரும் நீலநிறத்தில் விலை உயர்ந்த சேலையை பரிசாக அளித்தனர்,சுதா நீல மயமானால்.

நல்ல காலம் அன்று நீலப்படம் பார்க்கவில்லை.

நல்ல காலம் அன்று நீலப்படம் பார்க்கவில்லை.

புத்தன் தணிக்கை செய்துவிட்டாரோ தெரியாது.

எனினும் நல்ல ஆக்கம் புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவனமாகவும் சுடாதபடியும் எமது மக்களின் ஏட்டிக்குபோட்டி பார்ட்டிகளை குத்தியுள்ளார்.

அதற்காக ஒரு பச்சை புத்தன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்தது "அப்பம்" தீம் தான்.

நன்றிகள் யாழ்கவி,அப்பம் தீம்......ம்ம்ம்ம்ம்ம்

நல்ல காலம் அன்று நீலப்படம் பார்க்கவில்லை.

அப்பு நீலப்படம் என்றால் என்ன?நன்றிகள் அப்பு

புத்தன் தணிக்கை செய்துவிட்டாரோ தெரியாது.

எனினும் நல்ல ஆக்கம் புத்தன்.

நன்றிகள் ஈஸ்...

மிகவும் கவனமாகவும் சுடாதபடியும் எமது மக்களின் ஏட்டிக்குபோட்டி பார்ட்டிகளை குத்தியுள்ளார்.

அதற்காக ஒரு பச்சை புத்தன்.

நன்றிகள் விசுகு

நல்ல காலம் இப்படி ஒரு தீம் உள்ள பார்ட்டிகளுக்கு நான் என்னும் போக இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.