Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷை விசாரணை செய்யும் இராணுவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்டதாக கூறப்படும் விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷை விசாரணை செய்யும் இராணுவம்!

வெள்ளி, 08 ஏப்ரல் 2011 09:02

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் என அழைக்கப்படும் தம்பிராசா துரைசிங்கம் என்பவரை இராணுவத்தினர் விசாரணை செய்கின்ற காணொளி மனித உரிமை கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குனர் பிரேட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு பொறுப்பாக இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் இராணுவத்தினரால் தடுத்து வைத்திருக்கப்பட்டது தொடர்பான காணொளி 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடகங்களில் வெளிவந்திருந்தது.

இதுவரை ரமேஷ் தொடர்பாக 6 காணொளிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த காணொளிகள் பொய்யானது எனவும் ரமேஷ் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இறந்துவிட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

tamilenn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Friday, 08 April 2011 01:49

தலைவர் பிரபாகரனின் மனைவி எங்கே ரமேஷிடம் இராணுவம் கேள்வி:: வீடியோ !

இலங்கை இராணுவத்திடம் 17ம் திகதி சரணடைந்ததாகக் கூறப்படும் கேணல் ரமேஷிடம், தேசிய தலைவரின் மகள் (துவாரகா) எங்கே என்று இராணுவம் கேட்டுள்ளது. அதற்கு அவர் தனக்குத் தெரியாது எனப் பதிலளித்துள்ளார். அதுமட்டும் அல்லாது, தேசிய தலைவரின் மனைவி எங்கே என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கும் ரமேஷ் அவர்கள் தெரியாது என்றே பதில் வழங்கியுள்ளார். பின்னர் தளபதி ஜெயம் எங்கே? அவர் எந்த இடத்திற்கு பொறுப்பாக இருந்தார்?, தேசிய தலைவரின் நெருங்கிய நண்பர்கள் யார்? யார்? இறுதிப் போர் நடைபெற்ற வேளையில் தேசியதலைவருடன் யார் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் என்ற கேள்விகளும் ரமேஷிடம் முன்வைக்கப்பட்டுள்ளதை வீடியோவில் காணலாம்.

இறுதி யுத்தத்தின் போதும் 16, 17, 18 என மூன்று நாட்களாக பல கட்டங்களாக புலிகளின் சில சிரேஷ்ட தளபதிகளும், அரசியல்துறைப் பொறுப்பாளர்களும், ஆயுதம் தாங்காத செயற்பாட்டாளர்களும் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். ஆனால் அவர்களில் கணிசமான பேரை இராணுவம் கடுமையாகத் தாக்கி விசாரித்து பின்னர் படுகொலை செய்துள்ளது. பல தளபதிகளின் உடல்கள் இவைதான் என அடையாளம் காட்டிய தேசிய பாதுகாப்பு இணையம், பொட்டம்மானைப் பற்றி வாயே திறக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர் குறித்து எந்த ஒரு கருத்தையும் இலங்கை அரசு இதுவரை முன்வைக்கவில்லை. இந் நிலையில் சரணடைந்த கேணல் ரமேஷிடம் தலைவரின் மனைவி எங்கே என இராணுவம் விசாரித்துள்ளது.

அதாவது இந்த விசாரணை மே 18ம் திகதி போர் முடிவடைந்து, அனைத்துப் பகுதிகளையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்னரே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட முடியாத நிலையில், தேசிய தலைவர் அவர்களின் மனைவி இருப்பதை இலங்கைப் புலனாய்வு வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறது என்பதற்கு இந்த வீடியோவே ஆதாரமாக உள்ளது எனலாம். இதுபோன்று விடைகாண முடியாத பல சிக்கல்கள் இன்னும் தொடர்கிறது. சரணடைந்த பல போராளிகளும் சில தளபதிகளும் கொல்லப்பட்ட நிலையில், கேணல் ரமேஷின் நிலை என்ன என்று இன்னும் தெரியவில்லை. அவரை இராணுவம் உயிரோடு பிடித்து விசாரிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளதே தவிர அவரின் இன்றைய நிலை என்ன என்பதை எவராலும் கூறமுடியாத நிலை காணப்படுகிறது.

அவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காணப்படுவதாக, சட்டத்துக்குப் புறம்பான கொலைகளை ஆராயும் ஐ.நா அதிகாரி இணையத்துக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

sankathi

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்;சு கனக்கின்றது. ஒளிப்பதிவின் முடியும் நேரத்தில் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கலாம் போல் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உடம்பு எல்லாம் காயம்..

  • கருத்துக்கள உறவுகள்

:( எங்கள் விடுதலைக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது நெஞ்சு கனக்கிறது.

சரணடைதல் என்பது எவ்வளவு கொடூரமானதென்பதை இவர்களைச் சரணடையச் சொன்னவர்கள் நிச்சயம் தெரிந்தே செய்திருப்பார்கள்.

தலமையின் வழிநடத்தலின்றி துரோகிகளால் வழிநடத்தப்பட்ட இறுதி நாட்களில் இவருடன் சேர்ந்து இன்னும் ஆயிரக்கணக்கான தளபதிகள் போராளிகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்ய காலம் செய்த கோலம்..!

நெஞ்சு கனத்து கண்ணீர் கண்களை நிரப்பிவிட்டது... :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தான் குட்டி..!

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் இந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் போட்டு எம்மை அந்த அதிர்ச்சிக்குள் அழவிட்டுவிட்டு.............

சிங்களம் முன்னேறியபடி உள்ளதை நாம் மறந்துவிடுகிறோம்.

இதுவும் சிங்களத்தின் வெற்றியே................. :(:(:(

இங்கும் சிலர் அதை மீண்டும் மீண்டும் இணைத்து அதற்கு நாங்கள் முன்னமே சொன்னோம் இவர்கள் இப்படித்தான் ஆவார்கள் என்றபடி எம்மை பலயீனப்படுத்தி தாங்கள் குளிர்காய்வதையும் நாம் அனுமதிக்கின்றோம்.

ரமேசின் வீரத்தின் கால் தூசுக்கு வருவார்களா இந்த மண்ணாங்கட்டிகள்...........?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் அதுவும் அதிர்ச்சி தரும் இழப்புக்களை நாம் பல காலங்களில் பல தடவைகள் சந்தித்துவிட்டோம். இன்றும் அதே தான். இழப்புக்களைக் கண்டு இலட்சியத்தை தவற விட முடியாது. எந்த இலட்சியப் பற்றுறிதோடு இந்த வீரர்கள் வீழ்ந்தார்களோ.. அதை சாத்தியமாக்குவதே இவர்களுக்கு நாம் செய்யும் சிறிய உதவியாக இருக்கும்.

இன்றைய சூழலில்.. இப்படியான ஒளிநாடாக்கள் வெளியிடப்படுதலில் இரண்டு நோக்கங்கள் இருக்கலாம். ஒன்று போர்க்குற்ற விசாரணை அறிக்கை வரவுள்ள நிலையில் அதற்கான ஆதாரமாக மனித உரிமை அமைப்புக்கள் தாம் ரகசியமாகப் பெற்ற ஒளிநாடாக்களை வெளியிட்டிருக்கலாம்.

இன்னொரு முனையில்.. சிறீலங்கா அரசு அவசரகாலச் சட்டத்தை நீட்டிக்க முன் வைத்த குற்றச்சாட்டுக்களில்.. முக்கியமானது விடுதலை செய்யப்படும் போராளிகளும்.. புலம்பெயர் தமிழர்களும்.. சில அரசியல்வாதிகளும்.. வெளிநாடுகளும் புலிகளுக்கு உயிர்ப்பளிக்கின்றனர் என்று. தேசிய தலைவரின் குடும்பத்தினர் அடங்கிய கேள்விகளோடு இந்த ஒளிநாடா வெளியிடப்பட்டுள்ளதோடு தேசிய தலைவர் கண்டெடுக்கப்பட்டார் என்பது போன்ற செய்திகளையும் சேர்த்துவிடுகின்றனர்.இதன் மூலம் தேசிய தலைவரை சார்ந்தோர் தப்பி இருக்கக் கூடும் என்ற செய்தியை வெளியிட விரும்புகின்றனர். அது புலிகளை மீளமைக்கும் என்று பின்னர் அறிக்கை விட வாய்ப்பாகும் என்றும் கருதுகின்றனர். இதன் மூலம் போராளிகளின் விடுதலையை இல்லாமல் செய்யலாம் அல்லது அவர்களை படுகொலை செய்யலாம்.

இதன் பின்னணியில் சிறீலங்கா அரசே பல தேவைகள் கருதி இப்படியான ஒளிநாடாக்களை வெளியிடக் கூடும். அதுமட்டுமன்றி அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த பொன்சேகா சார்ந்த எதிரிகட்சிகளும் இவற்றை வெளியிடக் கூடும்.

எதுஎப்படி இருந்தாலும் நாம் எமக்கு கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு போர் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி எமது இலட்சியத்தை அடைவது பற்றியதான சாத்தியப்பாடு குறித்தே இப்போது சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இன்றும் கூட யாழ்ப்பாணக் கடலும் கிணறுகளும் குளங்களும் பிணங்களால் நிரம்பி வழிகின்றன. தினமும் கிணறுகள் சடலங்களை பிரசவிக்கின்றன. இந்தப் பிணங்களின் சொந்தக்காரர்கள் யார் என்று கேட்க இந்த உலகில் யாரும் இல்லை. அவர்களுக்கு மனித உரிமைகளும் இல்லை. லிபியாவில் மட்டும் நடக்காத படுகொலைக்கு நடவடிக்கைகள் துரித வேகத்தில்..!

கருணாநிதி சொல்கிறார் சகோதர யுத்தம் தானாம் நடந்து பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆக கருணாநிதிக்கு 2009 இல் நடந்ததும் சகோதர யுத்தமாகவே தெரிகிறது. உண்மையில் இப்போ தெரிந்து கொள்ளுங்கள்.. சகோதர யுத்தத்தை தூண்டிவிட்டு யார் இவ்வளவு காலமும் குளிர்காய்ந்திருக்கிறார்கள் என்று. இவர்களுக்கு துணை போய் சகோதர யுத்தம் செய்தது மட்டுமன்றி எதிரிக்கு ஒரு இனத்தையே பலியிட்ட எம்மினத் துரோகிகளை நாம் என்றும் மறக்கக் கூடாது. இன்றும் அவர்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பதையும் நினைவிருத்திக் கொண்டு எமது இலட்சியப் பயணத்தை தொடர்ந்து இந்த வீரர்களின் எதிர்பார்ப்பை மெய்ப்பிப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் செய்நன்றிக்கடனாக இருக்கும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வீரன் எப்போதும் வீரன்தான்

எதிரியின் கைகளில் சிக்கியிருந்தும் தலைமையைப்பற்றிய உச்சரிப்பு.....

அடபோங்கடா தமிழீழ விடுதலைப்புலிகளை ஒருவரும் வீழ்த்திவிட முடியாது. எந்தக்குப்பையில் போட்டாலும் குண்டுமணி கறுக்காது.

சிங்களம் சந்தியில் அம்மணமாய் நிற்கிறது.

:( எங்கள் விடுதலைக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது நெஞ்சு கனக்கிறது.

சரணடைதல் என்பது எவ்வளவு கொடூரமானதென்பதை இவர்களைச் சரணடையச் சொன்னவர்கள் நிச்சயம் தெரிந்தே செய்திருப்பார்கள்.

தலமையின் வழிநடத்தலின்றி துரோகிகளால் வழிநடத்தப்பட்ட இறுதி நாட்களில் இவருடன் சேர்ந்து இன்னும் ஆயிரக்கணக்கான தளபதிகள் போராளிகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரன் எப்போதும் வீரன்தான்

எதிரியின் கைகளில் சிக்கியிருந்தும் தலைமையைப்பற்றிய உச்சரிப்பு.....

அடபோங்கடா தமிழீழ விடுதலைப்புலிகளை ஒருவரும் வீழ்த்திவிட முடியாது. எந்தக்குப்பையில் போட்டாலும் குண்டுமணி கறுக்காது.

சிங்களம் சந்தியில் அம்மணமாய் நிற்கிறது.

உண்மையக்கா

புலியாக எல்லோராலும் இருந்துவிட முடியாது.

வாழ்ந்து காட்டமுடியாது.

அதேநேரம் இந்த நிலைக்கு அவர்களை ஆக்கியவர்கள் நாங்கள்தான். சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்துடன் அவர்களுக்கான மாற்றீடுகளைச்செய்து அவர்களை அவர்களின் குடும்பங்களுடனோ அல்லது விரும்பிய இடங்களுக்கு மாறிவாழவோ வழி செய்யாது தொடர்ந்து ஒருவர் மேலேயே சுமைகளை போட்டுவிட்டு இருந்துவிட்டு இன்று சிலர் அந்த களைப்பிலும் குடும்ப நலன்கருதியும் துரோகத்தை ஏற்கும்போது மட்டும் நாம் மீண்டும்வீராப்பு பேசுகின்றாம். அதிலும் இந்த சுணை கெட்டதுகள் அதை ஊதிப்பூதாகாரப்படுத்தி தாங்களும் குளிர் காய்ந்தபடி எம்மையும் ஒன்றுபடவிடாது செய்தவண்ணமுள்ளன.

இது பற்றி தனியே விவாதிக்கலாம் என்று இருக்கின்றேன். நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த.... ஒளிப்பதிவில்,

2:07 என்னும் நிமிடமளவில்.... தளபதி ரமேஷ் அவர்களை....

டேய்....., டேய் என்று, கூப்பிடுகின்றான் ஒரு காட்டிக் கொடுக்கும் நாய்த்தமிழன்.

இந்த நாய்களால்... தான் எமக்கு, இந்தக் கேவலம் பட்டு அலையுறம்.

உந்த இழி வேலை செய்யும்.... பிறப்புகள் இருக்கும் வரைக்கும், தமிழனுக்கு விடிவு என்பது எட்டாக்கனி.

எமது விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் அதுவும் அதிர்ச்சி தரும் இழப்புக்களை நாம் பல காலங்களில் பல தடவைகள் சந்தித்துவிட்டோம். இன்றும் அதே தான். இழப்புக்களைக் கண்டு இலட்சியத்தை தவற விட முடியாது. எந்த இலட்சியப் பற்றுறிதோடு இந்த வீரர்கள் வீழ்ந்தார்களோ.. அதை சாத்தியமாக்குவதே இவர்களுக்கு நாம் செய்யும் சிறிய உதவியாக இருக்கும்.

இன்றைய சூழலில்.. இப்படியான ஒளிநாடாக்கள் வெளியிடப்படுதலில் இரண்டு நோக்கங்கள் இருக்கலாம். ஒன்று போர்க்குற்ற விசாரணை அறிக்கை வரவுள்ள நிலையில் அதற்கான ஆதாரமாக மனித உரிமை அமைப்புக்கள் தாம் ரகசியமாகப் பெற்ற ஒளிநாடாக்களை வெளியிட்டிருக்கலாம்.

இன்னொரு முனையில்.. சிறீலங்கா அரசு அவசரகாலச் சட்டத்தை நீட்டிக்க முன் வைத்த குற்றச்சாட்டுக்களில்.. முக்கியமானது விடுதலை செய்யப்படும் போராளிகளும்.. புலம்பெயர் தமிழர்களும்.. சில அரசியல்வாதிகளும்.. வெளிநாடுகளும் புலிகளுக்கு உயிர்ப்பளிக்கின்றனர் என்று. தேசிய தலைவரின் குடும்பத்தினர் அடங்கிய கேள்விகளோடு இந்த ஒளிநாடா வெளியிடப்பட்டுள்ளதோடு தேசிய தலைவர் கண்டெடுக்கப்பட்டார் என்பது போன்ற செய்திகளையும் சேர்த்துவிடுகின்றனர்.இதன் மூலம் தேசிய தலைவரை சார்ந்தோர் தப்பி இருக்கக் கூடும் என்ற செய்தியை வெளியிட விரும்புகின்றனர். அது புலிகளை மீளமைக்கும் என்று பின்னர் அறிக்கை விட வாய்ப்பாகும் என்றும் கருதுகின்றனர். இதன் மூலம் போராளிகளின் விடுதலையை இல்லாமல் செய்யலாம் அல்லது அவர்களை படுகொலை செய்யலாம்.

இதன் பின்னணியில் சிறீலங்கா அரசே பல தேவைகள் கருதி இப்படியான ஒளிநாடாக்களை வெளியிடக் கூடும். அதுமட்டுமன்றி அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த பொன்சேகா சார்ந்த எதிரிகட்சிகளும் இவற்றை வெளியிடக் கூடும்.

எதுஎப்படி இருந்தாலும் நாம் எமக்கு கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு போர் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி எமது இலட்சியத்தை அடைவது பற்றியதான சாத்தியப்பாடு குறித்தே இப்போது சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இன்றும் கூட யாழ்ப்பாணக் கடலும் கிணறுகளும் குளங்களும் பிணங்களால் நிரம்பி வழிகின்றன. தினமும் கிணறுகள் சடலங்களை பிரசவிக்கின்றன. இந்தப் பிணங்களின் சொந்தக்காரர்கள் யார் என்று கேட்க இந்த உலகில் யாரும் இல்லை. அவர்களுக்கு மனித உரிமைகளும் இல்லை. லிபியாவில் மட்டும் நடக்காத படுகொலைக்கு நடவடிக்கைகள் துரித வேகத்தில்..!

....

உண்மை தான் நெடுக்ஸ்

வீரன் எப்போதும் வீரன்தான்

எதிரியின் கைகளில் சிக்கியிருந்தும் தலைமையைப்பற்றிய உச்சரிப்பு.....

அடபோங்கடா தமிழீழ விடுதலைப்புலிகளை ஒருவரும் வீழ்த்திவிட முடியாது. எந்தக்குப்பையில் போட்டாலும் குண்டுமணி கறுக்காது.

சிங்களம் சந்தியில் அம்மணமாய் நிற்கிறது.

உண்மையக்கா

புலியாக எல்லோராலும் இருந்துவிட முடியாது.

வாழ்ந்து காட்டமுடியாது.

அதேநேரம் இந்த நிலைக்கு அவர்களை ஆக்கியவர்கள் நாங்கள்தான். சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்துடன் அவர்களுக்கான மாற்றீடுகளைச்செய்து அவர்களை அவர்களின் குடும்பங்களுடனோ அல்லது விரும்பிய இடங்களுக்கு மாறிவாழவோ வழி செய்யாது தொடர்ந்து ஒருவர் மேலேயே சுமைகளை போட்டுவிட்டு இருந்துவிட்டு இன்று சிலர் அந்த களைப்பிலும் குடும்ப நலன்கருதியும் துரோகத்தை ஏற்கும்போது மட்டும் நாம் மீண்டும்வீராப்பு பேசுகின்றாம். அதிலும் இந்த சுணை கெட்டதுகள் அதை ஊதிப்பூதாகாரப்படுத்தி தாங்களும் குளிர் காய்ந்தபடி எம்மையும் ஒன்றுபடவிடாது செய்தவண்ணமுள்ளன.

இது பற்றி தனியே விவாதிக்கலாம் என்று இருக்கின்றேன். நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம்.

:lol: :lol: :lol:

அதேநேரம் இந்த நிலைக்கு அவர்களை ஆக்கியவர்கள் நாங்கள்தான்.

... நாம் உதவவில்லை!!! ... எம் முழு ஆதரவையும் கொடுக்கவில்லை ... கேட்டதை கொடுத்திருந்தால் ?????? ... இது இன்றும் தொடர்ந்து வருகிறது!!! ... இல்லை ... நாம் முழு ஆதரவையும் கொடுத்து ... கேட்டவற்றை அள்ளிக்கொடுத்திருந்தால் ... வெற்றி பெற்றிருப்போமா?????????? ... புரியவில்லை!!!!!!!!

.... நொண்டிச்சாட்டுகள் தேடுகிறோமா???????????? நாங்கள் விட்ட தவறுகளை இன்னும் படிக்கவில்லையா???? ... இன்று விக்கிலீக்ஸோ, அதோ, இதோ என்று ஒவ்வொன்றாக கூறுகிறார்கள் ... எம்மை அழிக்க உலகம் எவ்வாறு சிங்களத்துடன் கை கோர்த்ததென்று!!!!! ... இதை நாம் தடுத்திருக்க முடியுமா??????? இல்லை வெற்றி கொண்டிருக்க முடியுமா?????? ... வெற்றி கொள்ள எம்மை விட வேறு யார், எமக்கு ஆதரவாக இருந்தார்கள்?????

... இன்று தலபான்/அல்கைதா ... அமெரிக்க கூட்டுத்தலைமை நாடுகளுக்கு எதிராக போர் புரிகிறது ... ஆனால் தலபானுக்கு சீனாவோ, ஈரானோ சில அரபு நாடுகளிலிருந்து பணம், ஆயுதம் கிடைக்கிறது!!! ... எதிருக்கு எதிரி நண்பன் என்பார்கள், நமக்கோ எல்லோரும் எதிரிகள்!!!!

நேர்மையான, கொள்கைப்பற்றுடைய தலைமையும், உறுதியான போராளிகளும் இருந்தது, ஆனால் ... நாம் உலக ஓட்டத்துக்கு ஏற்ப மாறவில்லை... நெழிவு சுழிவுகளினூடு செல்ல முற்படவில்லை, ... .... அழிக்கப்பட்டு விட்டோம்

இப்பதான் முழுமையாக வீடியோ பார்த்தேன்...எழுத வார்த்தைகளும் இல்லை, அழ கண்ணீரும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பயந்த சிங்களவையும் வீர புலியையும் 1996 ஆண்டு கிலாலி கடலில் நேர பார்த்தவன் நான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... நாம் உதவவில்லை!!! ... எம் முழு ஆதரவையும் கொடுக்கவில்லை ... கேட்டதை கொடுத்திருந்தால் ?????? ... இது இன்றும் தொடர்ந்து வருகிறது!!! ... இல்லை ... நாம் முழு ஆதரவையும் கொடுத்து ... கேட்டவற்றை அள்ளிக்கொடுத்திருந்தால் ... வெற்றி பெற்றிருப்போமா?????????? ... புரியவில்லை!!!!!!!!

.... நொண்டிச்சாட்டுகள் தேடுகிறோமா???????????? நாங்கள் விட்ட தவறுகளை இன்னும் படிக்கவில்லையா???? ... இன்று விக்கிலீக்ஸோ, அதோ, இதோ என்று ஒவ்வொன்றாக கூறுகிறார்கள் ... எம்மை அழிக்க உலகம் எவ்வாறு சிங்களத்துடன் கை கோர்த்ததென்று!!!!! ... இதை நாம் தடுத்திருக்க முடியுமா??????? இல்லை வெற்றி கொண்டிருக்க முடியுமா?????? ... வெற்றி கொள்ள எம்மை விட வேறு யார், எமக்கு ஆதரவாக இருந்தார்கள்?????

... இன்று தலபான்/அல்கைதா ... அமெரிக்க கூட்டுத்தலைமை நாடுகளுக்கு எதிராக போர் புரிகிறது ... ஆனால் தலபானுக்கு சீனாவோ, ஈரானோ சில அரபு நாடுகளிலிருந்து பணம், ஆயுதம் கிடைக்கிறது!!! ... எதிருக்கு எதிரி நண்பன் என்பார்கள், நமக்கோ எல்லோரும் எதிரிகள்!!!!

நேர்மையான, கொள்கைப்பற்றுடைய தலைமையும், உறுதியான போராளிகளும் இருந்தது, ஆனால் ... நாம் உலக ஓட்டத்துக்கு ஏற்ப மாறவில்லை... நெழிவு சுழிவுகளினூடு செல்ல முற்படவில்லை, ... .... அழிக்கப்பட்டு விட்டோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:( எங்கள் விடுதலைக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது நெஞ்சு கனக்கிறது.

சரணடைதல் என்பது எவ்வளவு கொடூரமானதென்பதை இவர்களைச் சரணடையச் சொன்னவர்கள் நிச்சயம் தெரிந்தே செய்திருப்பார்கள்.

தலமையின் வழிநடத்தலின்றி துரோகிகளால் வழிநடத்தப்பட்ட இறுதி நாட்களில் இவருடன் சேர்ந்து இன்னும் ஆயிரக்கணக்கான தளபதிகள் போராளிகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில் கேபிக்கு பெரும் பங்கு இருக்கிறது. கண்டவர்களையும் எடுத்த எடுப்பில் நம்பி நம்பி, மீண்டும் மீண்டும் இந்த நிலையை அடையாது, மிகவும் யோசித்து எமது அடுத்த அடிகளை எடுத்து வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரமிகு தளபதிகளையெல்லாம் சரணடையச் செய்யப் பண்ணிய அரசியலை விட்டுவிட்டு ஒரு சிலர் மீது பழிபோட்டுவிட்டால் எமது பிரச்சினை சுலபமாக முடிந்துவிடும்தான் என்று பலர் தற்போதும் நினைக்கின்றார்கள். எத்தனையோ வருட இராணுவ அரசியல் அனுபவங்களும் பட்டறிவுகளும் பெற்ற ஒரு அமைப்பையும் அதன் தலைமைத்துவத்தையும், ஒருவர், இருவர் ஏமாற்றினர் என்று சொல்லுவதில் அர்த்தமில்லை.

கிருபன் விசயமே தெரியாதா?

இப்ப புலம்பெயர்ந்த நாடுகளில கையாலாகாதவர்களும், செல்லாக்காசுகளுந்தான் கோலோச்சிக் கொண்டு(!) இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிட்ட இருந்து எப்படித் தெளிவான கருத்துகள் பிறக்கும்? ஒரு சிலரை நம்பி தமிழீழவிடுதலைப்புலிகள் குடை சாஞ்சினம் எண்டு சொல்லிப் புழைப்பை பாக்கலாம் எண்டு நினைக்கினம். சரி அப்பிடியே அவயிந்த கருத்தை வச்சுப் பார்த்தாலும் அந்ந ஒரு சிலரை நம்பின போராளிகள் இப்ப நிண்டு விண்ணானம் கதைக்கிறவையை ஏன் நம்பேல்லை. பிளேட்டை மாத்திப்போட்டு கேள்விகளை கேட்டுப் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

வீரமிகு தளபதிகளையெல்லாம் சரணடையச் செய்யப் பண்ணிய அரசியலை விட்டுவிட்டு ஒரு சிலர் மீது பழிபோட்டுவிட்டால் எமது பிரச்சினை சுலபமாக முடிந்துவிடும்தான் என்று பலர் தற்போதும் நினைக்கின்றார்கள். எத்தனையோ வருட இராணுவ அரசியல் அனுபவங்களும் பட்டறிவுகளும் பெற்ற ஒரு அமைப்பையும் அதன் தலைமைத்துவத்தையும், ஒருவர், இருவர் ஏமாற்றினர் என்று சொல்லுவதில் அர்த்தமில்லை.

அந்த ஓரிருவரில் கே.பி எப்படியான மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.