Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணம் .....................

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் கதை அருமையாகப் போகின்றது!!! மேலும் எதிர்பார்கின்றோம்!!!

நீங்கள் தங்கிய இடத்தில் இருந்து எடுத்த படத்தில் மொட்டை மாடியில் காய்வது என்ன? கருவாடா அல்லது ஏதும் சதுரமான அப்பளமா?

இரண்டும் இல்லை அது பினாட்டு. :lol: :lol:

  • Replies 283
  • Views 41k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டோனியலுடன் அதிகாலை 5 மணிவரை கதைத்துவிட்டு வந்து படுத்தாலும் புதிய இடம் தூக்கம் அதிகம் வரவில்லை காலை 9மணிக்கெல்லாம் எழுந்து தயாராகிவிட்டிருந்தேன்.மும்பையில் நான் சந்திக்கவேண்டியவர்களையெல்லாம் மலைமாதா கேயிலடிக்கே வரச்சொல்லியிருந்தேன். டோனியல் என்னை அழைத்து போவதற்காக ஒரு ஆட்டோவுடன் தயாராக வந்திருந்தான். இந்தியாவில் மும்பையில் மட்டுமல்ல மகாராஸ்ரா மானிலத்தின் அனைத்து பகுதிகளிலும் எனக்கு ஒரேயொரு ஆச்சரியம் என்னவென்றால். அங்கு அனைத்து ஆட்டோக்களிலும் மீற்றர் போட்டு அதற்கான பணம் மட்டுமே வாங்கினார்கள்.

மாதா தேவாலயத்திற்கு சென்று இறங்கியதும் டோனியல் தன்னுடைய கடைக்கு அழைத்துப்போனான். அங்கு ஒரு கால் சரியாக நடக்க முடியாத ஒரு 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெடியன் கடையை கவனித்துக்கொண்டிருந்தான்.அவனிற்கு என்னை கிந்தியில் அறிமுகப்படுத்தியவன்.என்னிடம் நான் இங்கை கடை தொடங்கிய காலத்திலை இந்தப்பய இங்கைதான் பிச்சையெடுத்திட்டு திரிஞ்சான். அனாதைப்பய அவனை பிடிச்சு பிச்சை எடுக்கிறது கூடாது வா நான் வேலை போட்டுத்தாறேன்.படிக்கிறியா என்று கேட்டேன் அவனும் ஆமான்னான்.பகலிலை கடையை பாத்துக்கிறான்.இரவு பள்ளியிலை சேத்திருக்கிறன். படிக்கப்போறான்.என்றான். மும்பையில் இறங்கியதுமே டோனியலிற்கு ஒரு சிறுதொகை பணத்தினை கொடுப்பதற்காக எடுத்து தயாராக வைத்திருந்தேன் அதனை அவன் கையில் கொடுத்தால் வாங்கமாட்டான்.என்பது எனக்கு தெரியும் அதற்கான சந்தர்ப்பம் இப்பொழுது எனக்கு கிடைத்திருந்தது.அவனுடன் பேசிய படியே கடையில் இரண்டு மெழுகு திரியை எடுத்தேன். என்ன அக்கா(எனது மனைவியை) கோயிலுக்கு போகணுமா என்றான் இல்லை நானும்தான் என்றேன் என்னை ஆச்சரியமாக பார்த்தவன் என்ன சாமிப் பக்தியெல்லாம் வந்திட்டுதா??என்றான்.

ஏனெனில் எனது சிறிய வயதில் தீவிர சாமிப்பக்தனாக இருந்த நான் எனது பதினாறு வயதுகளிலிருந்து நாத்திகனாக மாறிவிட்டிருந்தேன். அது டோனியலிற்கு தெரியும்.அதனால்தான் அவன் அப்படிக்கேட்டான். எங்கள் சுயநலத்திற்காகவும் எங்கள் தேவைகளிற்காகவும் சிலநேரங்களில் சாமியை நம்பவேண்டியிருக்கிறது என்றபடி நான் தயாராய் வைத்திருந்த பணத்தையெடுத்து அந்தப் பையனின் கையில் திணித்தோன். அந்தப் பையன் எதுவும் புரியாமல் முழித்தபடி டோனியலை பார்க்க டோனியல் இதென்னடா என்றான். இது மெழுகு திரிக்கானது இதனை வாங்காவிட்டால் எனக்கு மெழுகுதிரிவேண்டாம் நான் கோயிலுக்கு போகவில்லையென்றேன்.அதுக்காக என்று இழுத்தவன் சரி நம்ம கடைக்கு இப்படியான கஸ்ரமர் நிறைய வந்தால் நான் சீக்கிரமே மில்லியனர் ஆயிடுவேன்டா என்று சிரித்தபடி எனது மெழுகுவர்த்திகளை அவன் வாங்கியபடி மேலும் சில மெழுகுதிரிகளை கடையில் எடுத்தபடி கோயிலிற்குள் நடந்தான். நாங்களும் அவனுடன் கோயிலிள் நுளைந்து மெழுகுதிரிகளை ஏற்றிவிட்டு எனக்கு கடவுளிடம் வேண்டுதல்களை வைப்பதில் உடன்பாடில்லை எனவே எல்லாரும் நல்லா இருக்கவேணும் என மனதில் வேணடிவிட்டு.வெளியே வந்து காத்திருந்தேன்.

மற்றைய நண்பர்களும் வந்து சேர்ந்ததும் ஒரு உணவு விடுதியில் அனைவரும் மதிய உணவை உண்டபடி பேசிவிட்டு. மீண்டும் எப்பொழுதாவது சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போமென கூறி விடை பெற்றுக்கொண்டேன். அன்றிரவு பெல்கம் (கர்னாடகா மானிலம்)புறப்படவேண்டும் அங்குதான் மனைவியின் தாயார் குடியிருக்கிறார்.எனவே மனைவி கடைத்தெருவிற்கு போய் கொஞ்சம் பொருட்கள் வாங்கவேண்டுமென்றாள். பெண்களுடன் கடைக்கு பேவதென்றால் என்னவென்பது திருமணமான அனைத்து ஆண்களிற்கும் அனுபவப்பட்ட விடயம்தானே .அந்த அவஸ்த்தையை நான் அனுபவிக்க விரும்பாததால் நான் அறைக்குபோகிறேன் நீ போயிட்டுவா என வழியனுப்பி வைத்துவிட்டு அறைக்கு போய் விட்டேன் .டோனியலும் கடைக்கு போய் விட்டு இரவு வழியனுப்ப பஸ் நிலையம் வருவதாக கூறி சென்று விட்டான். நான் அறைக்கு சென்று ஓய்வெடுத்த பின்னர். அன்றிரவு எமது பெல்கம் நோக்கிய பயணம் தொடங்கியது. .....இந்தப் பயணம் பற்றிய தொடர் எழுதுவதற்கு எனக்குரிய வேலைப்பழுக்கள் மற்றும் நேரமின்மை காரணமாக விரிவாக எழுதாமல் சுருக்கமாக முக்கியமானவற்றை மட்டும் எழுத முடிவெடுத்துள்ளேன் அதன்படி எனது அடுத்த பயணமாக சென்னை நோக்கிய பணயம். அங்கு முக்கியதாக நான் சந்தித்தவர்கள்.சுசீந்திரன். யாழ்கள உறவும் பேட்டைக்காரனுமான வ.ஜ.ச.ஜெயபாலன்.இடதுசாரி கட்சி நண்பர் சி.மகேந்திரன்.மற்றும் மனிதம் அமைப்பின் அமைப்பாளர் அக்கினி சுப்பிரமணியம் மற்றும் பலருடனான சந்திப்புக்கள் பற்றி விரைவில்............................................

DSCF0265.jpg

ஆடுகளத்திலை அந்தச்சேவல் நல்லாத்தானே நடிச்சிச்சுது பிறகெதுக்கு அதை அடிச்சு குளம்பு வைச்சீங்கண்ணா

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேசையிலை கிடக்கிற தேங்காயெண்ணை போத்திலை உங்கடை முதுகு மறைக்குது.மற்றும் படி எல்லாம் கிளியர் :D

  • கருத்துக்கள உறவுகள்

மேசையிலை கிடக்கிற தேங்காயெண்ணை போத்திலை உங்கடை முதுகு மறைக்குது.மற்றும் படி எல்லாம் கிளியர் :D

அது தேங்காய் எண்ணை போத்தல் தான் என கவிஞர் இருக்கும் விதத்தை வைத்தே சொல்லி விடலாம். :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேசையிலை கிடக்கிற தேங்காயெண்ணை போத்திலை உங்கடை முதுகு மறைக்குது.மற்றும் படி எல்லாம் கிளியர் :D

சுத்தமான தேங்காயெ;ணை பூசி குளிச்சால் உடம்புக்கு நல்லதெண்டு ஒரு சித்த வைத்தியர் சொன்னவர் அதுதான். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னைக்கு நான் வருவதாக நண்பர்களிற்கு சொன்ன திகதிக்கு போகமுடியவில்லை திடீரென புனேக்கு செல்லவேண்டி வந்ததால் பூனே பயணத்தை முடித்துக்கொண்டு ஒரு வாரம் கழித்துத்தான் சென்னைக்கு புறப்பட்டேன்..எனது சென்னைப் பயணம் எந்தக் காரணத்தாலும் அரசியலாகியோ பலரிற்கு அவலாகியோ விடக்கூடாது என்பதில் மிக கனவனமாக இருந்தேன்.அதனால் தனியாக தங்குவதற்கு சென்னை செல்ல முன்னரேயே நண்பர் சுசியிடம் சென்னையில் எனக்கு தங்குவதற்கு ஒரு இடம் பார்க்குமாறு கூறியிருந்தேன். இந்தச் சென்னை மகா நகரத்தில் தங்குவதற்கா இடமில்லை வாருங்கள் தாராளமாக இடம் இருக்கிறதென்றார். காலை 6 மணிக்கு சென்னை கோயம்பேடு அண்ணாச்சியின் சரவணபவான் சாப்பாட்டுக்கடை முன்னால் பஸ் நின்றது. இறங்கியதும் சுசிக்கு நான் வந்துசேர்ந்துவிட்டதாக தொலைபேயடித்தேன் அரைமணி நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லியிருந்தார். சரவணபவானிற்கு முன்னால் படிக்கட்டில் அமர்ந்நதபடியே இப்படி உலகம் முழுதும் கடையை துறந்து வைச்சிட்டு அண்ணாச்சி ஒரு பெண்ணைத்தொடப்போய் அனியாயமாய் உள்ளை கம்பிஎண்ணிக்கொண்டிருக்கிறாரே ஆசை யாரை விட்டதுஎன மனதில் நினைத்தேன். சுசி வந்து காரில் ஏற்றிக்கொண்டு விடுதியை நோக்கி போய்க்கொண்டிருந்தார் அவருடன் கதைத்தபடியே போய்க்கொண்டிருக்கும் போது ஒரு பூங்காவையும் அதனருகே ஒருசிலையையும் கவனித்த எனக்கு இந்த பூங்கா நல்ல பழக்கமானதொரு பூங்கா எனநினைத்தபடி சட்டென்று சுசியிடம் இது பனகல்பார்க்தானே என்றேன்.அதேதான் இது பாண்டிபஜார் இங்குதான் றூம்போடடிருக்கிறேன் போலீஸ் ஸ்ரேசன் பக்கத்திலைதான் அன்று பிரபாகரனை கைது செய்த இங்ஸ்பெக்ரர் நந்தகுமார் இப்போது உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ தெரியாது என்று சொல்லி சிரித்தார்.

பாண்டிபஜாரிற்கும் எமக்கும் ஏதோ பூர்வீக தொடர்பு இருக்கிறது போலை என்று நினைத்தபடியே. 1981ம் ஆண்டு அன்று பாண்டிபஜாரில் பிரபாகரனும் உமாவும் சந்திக்காமல் போயிருந்தால்????எனது மனதில் ஓடத்தொடங்கிய சிந்தனையை பலவந்தமாக கலைத்துவிட்டேன். வரலாற்றின் பக்கத்தில் தற்செயலான நிகழ்வுகள் சாதகமாக அமைந்துவிட்டால் அது தன்னால்தான் என மார்தட்டிக்கொள்ளும் மனிதர்கள். அவை தவறாகப்போய்விட்டால் அப்படி நடக்காமல் விட்டிருக்கிலாம்.அப்படி செய்யாமல் விட்டிருக்கலாம்.என ஆயிரம் ல்' களையும் ம்" களையும் மாறி மாறி போட்டுப்பார்த்து புலம்பிக்கொண்டிருக்கும். என்று எனக்கு நன்றாக தெரிந்திருந்தாலும் எமது தோல்விகளின் தாக்கம் இந்தியப்பயணத்தில் நானும் பல இடங்களில் அந்த ல்"களையும்.ம்" களையும் நினைத்துப்பார்த்து புலம்பியதும் உண்டு.

கார் தியாகராஜா வீதியில் ஒரு விடுதியின் முன்னால் வந்து நின்றது.அறைக்கு சொன்று ஓய்வெடுக்குமாறும் தான் மதியம் வருவதாக சுசி கூறிச்சொன்றுவிட்டார். தமிழ்நாட்டில் நான் நின்ற சமயம் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்த நேரம் எனவே செய்திகளை அறிவதற்காய் தொலைக்காட்சியில் சண் செய்திகளை போட்டுவிட்டு படுத்துக்கொண்டேன். நான் முதலேயே முன்று பேரை பற்றி எழுதுவேன் என சொல்லியிருந்தது போல் இப்பொழுது நான் சந்தித்திருக்கும் இரண்டாம் நபர் சுசீந்திரன். பெரும்பாலும் நம்மவர்கள் அறிந்த ஒரு பெயர்தான் ஆனால் பலர் இப்பொழுது மறந்திருப்பார்கள்.ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவான இன்னொருவர் இவர். இராஜீவ் காந்தி கொலை வழக்கின் போது இவரும் ஒரு முக்கிய நபராக சேரக்கப்பட்டு கைது செய்யப்பட்டு முதலில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒருவர் தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் எட்டரை ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்து விட்டு வெளியே வந்திரப்பவர்.

வெளியே வந்த பின்னர் இன்னமும் அதே வழக்கில் உள்ளே இருப்பவர்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் முயற்சிகளில் ஈடுபட்டக்கொண்டிருப்பவர்களில் ஒருவர்.தமிழினத்திற்கான இவரது பங்களிப்பு அர்ப்பணிப்பக்கள் ஏராளமானது அவற்றை இங்கு விபரமாக எழுதமுடியாவிட்டாலும் தமிழ் நாட்டில் ஈழத்தமிழனிற்காக தன் வாழ்க்கையை தொலைத்தவர்களில் இவருமொருவர்.ஈழத்தமிழையும் இந்திய தமிழையும் கலந்து பேசுவார் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் தொடர்புகளும் உள்ளவர்.ஆனால் எந்த அரசியல் வாதியையும் பிடிக்காது. மதியமளவில் எழும்பி குளித்து விட்டு ஜெயபாலன் அவர்களிற்கு போனடித்து நான் இருக்கும் இடத்தை கூறினேன்.பக்கத்தில்தான் இருக்கிறேன் சிறிது நேரத்தில் வருகிறேன் என்றார். அதற்கிடையில் சுசியும் வந்துசேர ஜெயபாலனும் வந்து சேர்ந்தார். அவர்களுடன் வன்னியில் இறுதி நேர யுத்தத்தில் காயமடைந்து தற்சமயம் தமிழ் நாட்டில் சிகிச்சை பெறும் நண்பர் ஒருவரும் வந்து சேர்ந்திருந்தார். பிறகென்ன அரசியல் விவாதம் சூடுபிடித்தது.

ஏன் எமக்கு இந்தத் தோல்வியென்று பல காரணங்கள் பலமணிநேரம் விவாதம் தொடர்ந்தது.அங்கிருந்த அனைவருமே ஏதோ ஒரு விடயத்தில் புலிகள் அமைப்புடன் அல்லது அதன் முக்கிய நபர்களுடன் இறுதிவரை தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என்பதால். இதுவரை வெளிவராத அல்லது மெல்லமாய் வெளிவந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் பலதும் சூடான விவாதங்களாகியது.இந்தியாவை நாம் எதிரியாகப் பார்க்கக்கூடாது இந்தியாவில் எவரையும் பகைக்கக்கூடாது எல்ரையும் அரவணைக்கவேண்டும். எதிரிகளானாலும் அரவணைத்துப்போகவேண்டும் என்று திரும்ப திரும்ப ஜெயபாலன் வலியுறுத்கொண்டிருந்தார். புலிகள் அமைப்பு பேச்சு வார்த்தை காலத்தில் விட்ட தவறுகள் இறுதி யுத்தத்தின் போது எடுத்த சில தவறான முடிவுகள் பலதையும் விமர்சித்தார்.அதே நேரம் சாள்சின் (பிரபாகரனின் மகன்) தவறான நடவடிக்கைகளாலும் அவனது எதேச்சையான போக்குகளாலும் பழைய அனுபவப் பட்ட மூத்ததனபதிகளே இறுதிச்சமரில் மனச்சோர்வடைந்து சரியாக தங்கள் படையணிகளை வழிநடத்தாமல் பின்வாங்கியிருந்தனர் என்கிற செய்தி நான் முதலே அறிந்திருந்ததுதான்.அதனையும் ஜெயபாலன் சுட்டிக்காட்டினார்.

சாள்சின் நடவடிக்கைகள் மேசமானதாக இருந்தது என்பதனை அங்கிருந்த அனைவருமே ஏற்றுக்கொண்டிருந்தோம்.ஆனால் ஜெயபாலனின் பிரபாகரன் மீதான விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்ளத்தயாராய் இருக்கவில்லை.30 வருட ஆயுதப்போரை நடாத்திய பிரபாகரன் சில தவறுகளை விட்டிருக்கலாம்.. ஆனால் அதனை விமர்சிக்கும் அருகதையை இந்த நுற்றாண்டில் வாழும் யாரும் கொண்டிருக்கவில்லை என்பதே எனது கருத்து.பிரபாகரனைவிட மேலானதொரு ஆயுத விடுதலைப்போரை நடத்தி வெற்றி பெற்ற ஒரு மனிதனே பிரபாகரனை விமர்சிக்கும் தகமையுடையன். என்றேன் நான்.எங்களது விவாதம் மதியத்திலிருந்து நள்ளிரவையும் தாண்டிப்போய்க்கொண்டிருந்தது. அரசியல் ஆயுதப்போர் விவாதங்களை பசி பின்னிற்கு தற்றியது.விடுதியின் உணவகத்தில் போய் உணவருந்திக்கொண்டிருந்தபோது ஒருவர் ஜெயபலனை பார்த்து அண்ணா நீங்கள்தானே ஆடுகளத்திலை பேட்டைக்காரன் என்றார். ஆமா நான் என்றவர் பெருமிதத்துடன் என்னைப்பார்த்து பாத்தியா....அந்தப் படத்தை பாத்தியா என்றார்.பாத்தேன் குரல்தான் சரியில்லை பொருந்தவில்லை டப்பிங்குடுத்து கெடுத்திட்டாங்கள் என்றேன். இறுதியாக ஜெயபலனிடம் நீங்கள் இந்தியாவில் பலதரப்பட்டவர்களுடனும் பலதரப்பட்ட மட்டங்களிலும் தொடர்புகளை பேணும் ஒருவர் அதுமட்டுமல்லாது அடிக்கடி இந்தியா வந்து செல்பவரும்கூட அதனால் எமது நேசக்கரம் தொடர்ந்து முன்னெடுக்கவிருக்கும் தாயகத்து மக்களிற்கான பொருளாதாரப்பணிகளிற்கு உங்களாலான உதவிகளை கட்டாயம் வழங்கவேண்டுமென கூறி விடைபெற்றுக்கொண்டேன். படுக்கைக்கு போகலாமென நினைத்து அறைக்கு திரும்பியிருந்தபோது தொலைபேசி மணி அடித்தது தொலைபேசியில் அழைத்தவர்.சி.மகேந்திரன் அவர்கள்;. இவர் இந்திய கம்யூனிஸ் கட்சியின் முக்கியஉறுப்பினர் ஆவார். தம்பி இன்னிக்குத்தான் சேலத்திலை தேர்தல் மனு தாக்கல்செய்யவேண்டியிருந்தது...முடிச்சிட்டோம் நாளைக்கு காத்தாலை எப்படியும் உங்களை வந்து சந்திக்கிறேன் என்றார். தொடரும்..........................

DSCF0266.jpg

சுசீந்திரனுடன்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா நீங்கள் இந்தியாவிற்கு போனதில் இருந்து உடுப்பு மாற்றக் கூட நேரம் கிடைக்கவில்லை போல கிடக்கு :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா நீங்கள் இந்தியாவிற்கு போனதில் இருந்து உடுப்பு மாற்றக் கூட நேரம் கிடைக்கவில்லை போல கிடக்கு :lol:

ரதி சிவப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு.... படங்களை வடிவாய் பார்க்கவும் முதலில் போட்டிருப்பது முழுக்கை சேட்..பிறகு போட்டிருப்பது ரி.சேட். :lol: :lol:

Edited by sathiri

வணக்கம் சாத்திரியார்,

திண்ணையில் பார்த்துவிட்டுதான் இங்கு வந்தேன். யாழ்களத்தின் புதிய பதிவாளனான எனக்கு இன்றுதான் திண்ணையே கண்ணில் காட்டினார்கள்.

உங்கள் பயணகட்டுரை வாசித்தேன் என்னை நான் முன்னொரு காலத்தில் சந்தித்த பகுதிகளுக்கெல்லாம் கூட்டிச் சென்றுவிட்டீர்கள். தொடருங்கள் உங்கள் பயணத்தை.......

  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்ட்காரனை சந்திக்கவென்றே அதற்கேற்ற உடுப்பும்

யார்யாரை எப்படி மடக்க வேண்டும் என்று ரொம்பவே தெரிந்து வைத்துள்ளீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்ட்காரனை சந்திக்கவென்றே அதற்கேற்ற உடுப்பும்

யார்யாரை எப்படி மடக்க வேண்டும் என்று ரொம்பவே தெரிந்து வைத்துள்ளீர்கள்.

இடம் பொருள் ஏவல்....அதுதான் நம்ம பாணியே . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா நீங்கள் இந்தியாவிற்கு போனதில் இருந்து உடுப்பு மாற்றக் கூட நேரம் கிடைக்கவில்லை போல கிடக்கு :lol:

தங்கச்சி!

எதுக்கும் கண்டாக்குத்தரிட்டை போய் கண்ணை செக் பண்ணுறது நல்லது. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரியார்,

திண்ணையில் பார்த்துவிட்டுதான் இங்கு வந்தேன். யாழ்களத்தின் புதிய பதிவாளனான எனக்கு இன்றுதான் திண்ணையே கண்ணில் காட்டினார்கள்.

உங்கள் பயணகட்டுரை வாசித்தேன் என்னை நான் முன்னொரு காலத்தில் சந்தித்த பகுதிகளுக்கெல்லாம் கூட்டிச் சென்றுவிட்டீர்கள். தொடருங்கள் உங்கள் பயணத்தை.......

புதிய வரவான உங்களை வரவேற்பதோடு கிடைக்கும் நேரங்களில் தொடர்வேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

பயணம் தொடரட்டும்

அப்படியே ஒரு தோணிய செற் பண்ணியிருந்தால் இங்கேயும் வந்து போயிருக்கலாம் :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேலத்திலிருந்து இரவோடிரவாக பயணம் செய்து சென்னை வந்தடைந்த மகேந்திரன் அவர்கள் காலை 7 மணிக்கொல்லாம் நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்திருந்தார். காலை தேனீரருந்தியபடி தொடங்கிய எமது உரையாடல் நான்கு மணித்தியாலங்கள் நீடித்தது. நான் இந்தியாவில் சந்தித்திருந்த சாதாரணமானவர்களுடனெல்லாமே அதிகம் பேசியது அரசியல்தான்.இப்பொழுது ஒரு அரசியல் வாதியையே சந்திருக்கிறேன் எனவே பேசியதெல்லாமே 100 வீதம் அரசியல் மட்டும்தான். இவர்களது கொமினிச கட்சி கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் இணைந்திருந்தனர்.இந்தத் தேர்தலிலும் அதே கூட்டணி தொடர்கின்றது. தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் வை.கோ அவசரபட்டு உணர்ச்சி வசப்பட்டு வெளியேறிவிட்டார்.அதனால் வாக்குகள் பிரிந்து கொஞ்சம். தி.மு.க பக்கம் போகும் வாய்ப்புக்கள் உள்ளது.எங்களிற்கும் முதலில் தொகுதி பங்கீட்டுப் பிரச்சனை இருந்தது ஆனால் பொறுமையாக பேசி எமக்கான இடங்களை பெற்றுக்கொண்டோம். அவசரப்படாமல் ஆறுதலாகப் பேசியிருந்தால் வைகோவிற்காகவும் நாங்களே அந்தம்மாவுடன் பேசி ஒரு நல்ல முடிவிற்கு வந்திருக்கலாம் ஆனாலும் வெற்றி வாய்ப்பு எமது கூட்ணிக்குத்தான் அதிகமுள்ளதென்றார்.

இங்கு மகேந்திரன் அவர்களைப்பற்றி நான் அதிகம் எழுதவேண்டியதில்லை பெரும்பாலான எம்மவர்க்கு அவர் அறிமுகமானவொருவர்தான். ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளிற்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் போராட்டங்கள் நடாத்துவது மட்டுமல்லாமல் செயற்பாடுகளிலும் உள்ள ஒருவர். ராஜீவ் காந்தி கொலைச்சம்பவத்தின் பின்னர் தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாகவும் வேண்டாத பொருளாகவும் இருந்த ஈழத்தமிழ் ஆதரவினைமீண்டும் ஊதி ஊதி பெரு நெருப்பாக்கியவர்கள் கொமினிஸ் கட்சியினர். அதில் மகேந்திரன் அவர்களின் கணிசமான பங்கு உண்டென்றால் அது மிகையாகாது. அதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தில் மாணவர்களின் எழுச்சி.வக்கீல்களின் போராட்டம். பொதுமக்களின் உண்ணாவிதரம். என ஆரம்பித்து உணச்சிவசப்பட்ட உறவுகளின் தீக்குளிப்பு என தமிழகமே கொந்தளித்த நிலைக்குள் வந்துகொண்டிருந்தபொழுது அதனை தனது அரசியல் சாணக்கியத்தால் கருணாநிதி கையாண்டு மாணவர் போராட்டங்களை தடுக்க கல்லூரிகளிற்கு கட்டாய விடுமுறையை அறிவித்துவிட்டு தானே ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம் நடாத்தியும்.வக்கீல்களின் போராட்டத்தை பின்தள்ள தானே 3 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு இலங்கையில் போர் ஓய்ந்து விட்தென அறிக்கையும் விட்டு அனைத்து போராட்டங்களையும் பிசு பிசுக்க வைத்தது மட்டுமல்லாமல் உலகத்திலேயே 3 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரேயொரு நபர் என்கிற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

அது மட்டுமல்லாது பெரும் போராட்டங்களை முன்னின்று நடாத்திவந்த மகேந்திரன் அவர்களிற்கும் அன்றைய காலகட்டத்தில் ஒரு சதிவலை பின்னப்பட்டது. அப்பொழுது சென்னை இலங்கைத் தூதரகத்தில்: துணைத் தூதராக இருந்த அம்சாவினாலும்.(அம்சா இப்பொழுது இங்கிலாந்தில் இலங்கைத்தூதராக இருக்கிறார்)ஈழத்தமிழர் போராட்டங்களிற்கு எதிரானவர்கள் மற்றும் மகேந்திரன் அவர்களினை பிடிக்காத அவரது சில கட்சி உறுப்பினர்கள் பலரும் சேர்ந்து திட்டமிட்டு மகேந்திரன் அவர்களிற்கான சதிவலையை விரித்தனர். எந்த ஈழத்தமிழர்களிற்காக அவர் முன்னின்று போராட்டங்களை நடாத்திவந்தாரோ அதே ஈழத்தமிழ் பெண் ஒருத்தியை வைத்து மகேந்திரன் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை கிழப்பினார்கள். நடசத்திர விடுதி ஒன்றில் திடீரென தமிழகத்தின் பிரபல பத்திரிகைகள் அனைத்தையும் கூட்டிய அந்தப் பெண்மணி மகேந்திரன் அவர்களுடன் தனக்கு உறவு இருந்ததாகவும் தன்னை திருமணம் செய்வதாக கூறிஅவர் ஏமாற்றிவிட்டதாகவும் அதே நேரம் தன்னிடம் ஒரு தொகை பணத்தினையும் வாங்கி ஏமாற்றிவிட்டார் என ஒரு பரபரப்பு அறிக்கையை விட்டிருந்ததோடு பத்திரிகைகளின் கேள்விகளிற்கு பதிலளிக்காமல்.உடனடியாகவே இந்தியாவை விட்டு வெளியேறி தென்னாபிரிக்கா சென்றுவிட்டார்.

அந்த அறிக்கை பெரும்பாலான பத்திரிகைகளில் வெளிவந்த அதே நேரம் தமிழ்நாட்டில் வாடைகை வீடு ஒன்றில் தங்கியிருந்த சாதாரண ஒரு பெண்ணால் எப்படி நட்சத்திர விடுதியில் அனைத்து பிரபல பத்திரிகைகளையும் ஒரே நேரத்தில் கூட்ட முடிந்தது?? அதே நேரம் மகேந்திரன் அவர்கள் பணம் ஏமாற்றினார் என்பதனையும் நம்பமுடியவில்லை என பலகேள்விகளை எழுப்பியிருந்தனர். அதுமட்டுமல்ல பதவி பணம் சுகபோகம் இவை எவற்றையுமே விரும்பாத ஒரு அரசியல்வாதி இன்று தமிழ்நாட்டில் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சி.மகேந்திரன் என்று சொல்லிவிடலாம்.செய்தியறிந்த நான் உடனடியாக மகேந்திரன் அவர்களை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தேன். ஒருவரின் சிபாரிசுடன் சென்று மகேந்திரன் அவர்களிடம் உதவி பெற்ற பெண்மணிதான் அவர் என்பதனையும் அறிந்து கொண்டு.எமக்காக தொடர்ந்து போராடும் ஒருவர் மீது எம்மவர் ஒருவராலேயே ஏற்படுத்தப்பட்ட களங்கத்தை போக்குவது எமது கடைமை என நினைத்தேன்.வேகமாக செயலில் இறங்கியிருந்த நான் அப்பெண்மணியின் பூர்வீகம் அவர்எப்படியானவர் அவரது தில்லு முள்ளுக்கள் என்ன என்கிற அனைத்து விபரங்களையும் திரட்டி சிறு குறிப்பாக அனைத்து பத்திரிகைகளிற்கும் அனுப்பி வைத்தோடு மட்டுமல்லாமல்.அன்றைய காலகட்டத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த ஒரு பேப்பர் என்கிற பத்திரிகையிலும் ஒரு விரிவான கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தேன். யாழிலும் இணைத்திருந்தேன்.கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்.

அத்துடன் அந்த விவகாரம் அமுங்கிப்போனது.

நடக்கவிருக்கும் தேர்தலில் யாருடைய கூட்டணி வெல்லும் என சரியாக தெரியாத குழப்பநிலையாகவே எனக்கு இருந்தது எனவே ஜெயலலிதா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எம்முடைய நேசக்கரத்தின் மனிதாபிமானப்பணிகளிற்கு மேலும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டதோடு அதே நேரம் ஜ.நா சபையால் இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றிய அறிக்கை வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரம் (இப்பொழு வெளியாகிவிட்டது) அப்படி அறிக்கை வெளியானாலும் அது எவ்வளவு தூரம் போர்க்குற்ற விசாரணையாக மாறும் என்பது சந்தேகமானதொன்றாகவே இருந்தது. அப்படி வெளியாகும் அறிக்கையை பாவித்து அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை செய்யலாம் என்பது பற்றியும் விவாதித்தோம். இறுதியாக எம்மால் மனிதம் வெளியீடாக வெளியிடப்பட்ட இலங்கை மனிதப் படுகொலைகள் 1956 ... 2008 என்கிற ஆவணப் புத்தகம் ஒன்றினையும் மகேந்திரன் அவர்களிற்கு கொடுத்தேன். அவரும் இலங்கை தமிழர் பிரச்சனைகள் பற்றி அவரால் எழுதி வெளியிடப்பட்ட தீக்குள் விரலை வைத்தால்.மற்றும் இந்திய அரசே நியாயந்தானா என்கிற இரண்டு புத்தகங்களை என்னிடம் தந்து விடைபெற்றார்.அத்தனை தேர்தல் பணிகளிற்கு மத்தியிலும் எனக்காத நேரம் ஒதுக்கி என்னை வந்து சந்தித்து நான்கு மணித்தியாலங்கள் என்னுடன் உரையாடிதற்காக அவரிற்கும் நன்றிகள் கூறியதோடு தேர்தல் பணிகளிற்காக வெளியூர்களில் தங்கியிருந்த நல்லக்கண்ணு அண்ணன் தா.பாண்டியன் அண்ணன் போன்றவர்களை சந்திக்கமுடியததற்கு வருத்தம் தெரிவித்ததோடு அடுத்தடைவை சென்னை வரும்போது நிச்சயமாக அவர்களையும் சந்திப்பதாக கூறிவிடச்சொல்லி மகேந்திரன் அவர்களை வழியனுப்ப விடுதியை விட்டு வெளியே அழைத்துவந்த நான் இறுதியாக மகேந்திரனிடம் அண்ணை நான் வை.கோ அவர்களை இந்தப் பயணத்தில் சந்திக்கவில்லை ஆனால் முடிந்தால் நீங்கள் அவரிடம் ஒரு விடயத்தை சொல்லிவிடுங்கள். வெளிநாடுகளில் உள்ள சிலரின் பேச்சைக்கேட்டு தயவு செய்து இனிவரும் காலங்களில் 5 ஆயிரம் படைகளுடன் பிரபாகரன் தயாராய் இருக்கிறார். 5 ம் கட்ட ஈழப்போர் விரைவில் வெடிக்கும் என ஆவேச அறிக்கைகள் விடாமல் உருப்படியாக அடுத்தகட்ட நடவடிக்கைளை எதையாவது செய்யச்சொல்லுங்கள்.என்றேன்.சிரித்தபடி தலையாட்டிய மகேந்திரன் அவர்கள் என்ன செய்ய தம்பி தமிழ்நாட்டு அரசியல் இப்படித்தான் அடுத்த தடைவை சந்திக்கும் போது கட்டாயம் சொல்கிறேன் எனக்கூறி விடைபெற்றார்.தொடரும்....................

Edited by sathiri

சாத்திரி தொடர் நன்றாகப் போகின்றது

நீங்கள் சந்தித்து இருக்கும் இவர்களில் இருவரை நானும் சந்தித்து இருக்கின்றேன். ஒருவர் வ.ஐ.ச, மற்றவர் மகேந்திரன் அவர்கள். அவரது இலக்கிய அறிவும் பரந்தது

ஆனால் நீங்கள் இந்தியாவில் சந்தித்த 'அவா' வை சந்திக்கவில்லை...அவா பற்றியும் எழுதுவீர்கள் தானே?

Edited by நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி தொடர் நன்றாகப் போகின்றது

நீங்கள் சந்தித்து இருக்கும் இவர்களில் இருவரை நானும் சந்தித்து இருக்கின்றேன். ஒருவர் வ.ஐ.ச, மற்றவர் மகேந்திரன் அவர்கள். அவரது இலக்கிய அறிவும் பரந்தது

ஆனால் நீங்கள் இந்தியாவில் சந்தித்த 'அவா' வை சந்திக்கவில்லை...அவா பற்றியும் எழுதுவீர்கள் தானே?

இடையிடை வந்து திட்டமிட்டு சதி செய்யும் நிழலியை வன்மையாக கண்டிக்கிறேன்..(நிழலி சொப்பன சுந்தரியைத்தானே கேக்கிறீங்கள் இதெல்லாம் இரகசியமா தனிமடலிலை கேட்கவேண்டிய விசயம் இப்பிடி பகிரங்கமா கேட்டால் எனக்கு கோவம் வரும்) :lol: :lol:மற்றும் மகேந்திரன் அவர்களை தற்சமயம் ஆசிரியராக கொண்டு வெளிவரும் தாமரையில் எழுதச் சொல்லி பலதடைவை அவர் என்னிடம் கேட்டிருந்தார். பா.ஜீவானந்தம்...கே .டானியல் போன்றவர்கள் எழுதிய தாமரையில் எழுதுவதற்கு எனக்கும் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.ஆனால் என்னவே இதுவரை எழுத முயற்சிக்கவில்லை பாக்கலாம் :(

பயணம் தொடரட்டும்

அப்படியே ஒரு தோணிய செற் பண்ணியிருந்தால் இங்கேயும் வந்து போயிருக்கலாம் :lol: :lol:

மீண்டும் தோணியா.வேண்டாம் சாமி.. :( சே முனிவர்.. :) நீங்கள் பாலைவனத்தை விட்டு இலங்கை போயிட்டீங்களா?? :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், பயணக்கதை நன்றாகப் போகின்றது!

கமரா கையை விட்டிட்டுது போல கிடக்கு!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது..! பயணங்கள் தொடரட்டும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நான் வை.கோ அவர்களை இந்தப் பயணத்தில் சந்திக்கவில்லை ஆனால் முடிந்தால் நீங்கள் அவரிடம் ஒரு விடயத்தை சொல்லிவிடுங்கள். வெளிநாடுகளில் உள்ள சிலரின் பேச்சைக்கேட்டு தயவு செய்து இனிவரும் காலங்களில் 5 ஆயிரம் படைகளுடன் பிரபாகரன் தயாராய் இருக்கிறார். 5 ம் கட்ட ஈழப்போர் விரைவில் வெடிக்கும் என ஆவேச அறிக்கைகள் விடாமல் உருப்படியாக அடுத்தகட்ட நடவடிக்கைளை எதையாவது செய்யச்சொல்லுங்கள்.என்றேன்.சிரித்தபடி தலையாட்டிய மகேந்திரன் அவர்கள் என்ன செய்ய தம்பி தமிழ்நாட்டு அரசியல் இப்படித்தான் அடுத்த தடைவை சந்திக்கும் போது கட்டாயம் சொல்கிறேன் எனக்கூறி விடைபெற்றார்.தொடரும்....................

இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் சாத்திரி. வை.கோவை வைச்சு ஒரு கரும்புலியணியை தயார் செய்யலாமெண்ட கனவை கலைக்கவிடமாட்டம். :lol:

5ஆயிரம் பேருடன் வை.கோ.மற்றும் நெடுமாறன் ஐயா வீடுகளில் தேனீர் விருந்தில் கலந்து கொள்ள தலைவர் காத்திருக்கிறார் என்ற அறிக்கையை விடாமல் காப்பாற்றச் சொல்லியிருந்தால் புண்ணியமாயிருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், அப்படிஎன்றால் வை. கோ வீணாக அவசரப் பட்டு விட்டாரோ! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், பயணக்கதை நன்றாகப் போகின்றது!

கமரா கையை விட்டிட்டுது போல கிடக்கு!!! :D

மகேந்திரனை எங்கே எந்தச்சந்தர்ப்பத்தில் கவிழ்க்கலாமென ஒரு கும்பல் எப்பொழுதும் தயாராய் திரிகின்றது.அனால்தான் மகேந்திரன் அவர்களுடனான படத்தினை போடவில்லை. பிறகு அதைவைத்தே ஏதாவது புரளியை கிழப்பிவிடுவார்கள். தமிழ்நாட்டு பத்திரிகைகளும் எதையாவது பரபரப்பாய் எழுதி பத்திகைகளை விற்று வியாபாரம் பார்க்க ஏதாவது கிடைக்காதா என அலைகின்றனர்.எனவேதான் சொந்தச் செலவிலை எதற்கு சூனியம் வைப்பான் என்றுதான். எந்தப் படமும் போடவில்லை. உங்கள் எதிர்பார்ப்பு வீணாகாமல் அடுத்த தொடரில் பலபடங்களை போடுகிறேன். :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், அப்படிஎன்றால் வை. கோ வீணாக அவசரப் பட்டு விட்டாரோ! :unsure:

வை.கோ உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவெடுப்பது ஒன்றும் புதிய விடயம் இல்லையே. அவர் முதன் முதலில் தி.மு.க விலிருந்து வெளியேறியதே ஒரு அவசர முடிவால்தான். அவரிற்காக பல தொண்டர்கள் 5பேர் என நினைக்கிறேன் தீக்குளித்து இறந்து போனார்கள்.தி.மு.க வை தமிழ்நாட்டில் இல்லதொழிப்பது என இறந்து போனவர்களின் இறுதி கிரியையில் சுடலையில் நின்று சபதம் செய்தார். பிறகு நடந்தவை உங்களிற்கு தெரியும்தானே.தி.மு.க ...அ.தி.மு.க மாறி மாறி ஓடி களைத்துப்போய்விட்டார். :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயணங்கள், பயணக்கதைகள் பயனுள்ளவை, சுவாரியமானவை..அது யார் சொன்னாலும் கூட,.. அந்த காலத்தில் வாசித்த மணியனின் இலங்கை பயணத்தில் எழுதிய..யாழ்பானதவரின் இயல்புகள்..இயல்பானவை..அண்மையில் யாரோ இணைத்த தமிழர் என்பதின் இயல்புகள் என்பதை விட யாதர்தமானவை - அது கூட நான் நினைக்கிறன் 2002 பகுதிகள் வந்த அனந்த விகடனில் வந்த பகுதி ஒன்றின் தழுவலே.

மணியன் சொன்ன..யாழ்ப்பாணத்தவரின் குணங்கள், சைக்கிள் என்றால் raleigh ரலி, மெசின் ஒன்றால் ட்ராக்டர், கார் என்றால் இங்கிலாந்து கார் -A 40 , மொறிஸ் models , அதைத்தவிர, தோசை சுடுவது என்றால் முதல் நாளே சொல்லுவது- அதை அவர் இந்த தமிழர்களுடன் நாங்கள் பண்பாடுட்டு ரீதியில் விலகி உள்ளோம் என காட்ட பாவித்திருந்தார்..

அது போல சாத்திரியின் பதிவுகள் எங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுகிறேன்..

வொல்கனோ என்னுடைய இந்த பயணம் உண்மையில் மகிழ்ச்சியானது அல்ல பேசியதெல்லாம் வெறும் இழப்புக்கள் பற்றியதே .அதிலிருந்து அடுத்தது என்னவென்பதும்தான். மற்றும்படி மணியனின் வாசிங்டன் திருமணம் போல் சுவாரசியமாக என்னால் எழுத முடியாது யதார்த்தத்தினை மட்டுமே எனது எழுத்து நடையில் எழுதத் தெரியும். ஆனால் எமக்கென ஒரு நாடு கிடைத்திருந்தால் எனது 20 வருடகால அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட தீர்மானித்து அதற்கான குறிப்புக்களையும் சேர்த்து வைத்திருந்தேன்.அப்படி எழுதியிருந்தால் மேலும் பல தகவல்கள் வெளிவந்திருக்கும் ஆனால் என்னடைய சேகரிப்பு குறிப்பக்கள் அனைத்தையும் நான் அழித்து இரண்டு வருடங்களாகிறது. மிகுதி ஞாபகங்களும் என்னுடனேயே அழிந்து போகட்டும். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.