Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணம் .....................

Featured Replies

உண்மையாகவா தப்பிலி அப்படி வயதைக் கூட்டினால் அவருக்கு கிட்ட,தட்ட என்ட அப்பாவின் வயசு வரும்...இனி மேல் தமிழ்சிறியோடு கருத்தாடும் போது மரியாதையாக கருத்தாட வேண்டும் :)

ஐயோ ரதி சும்மா வம்புக்கு எழுதினேன். :lol:

ஹி இஸ் ஆல்ஸோ சிக்ஸ்டீன் யா :lol:

  • Replies 283
  • Views 41k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி உங்கள் வயதை சொல்லாமல் சொன்னதிற்கு நன்றி :lol:

அவர் சொன்னது ஒரே கல்லூரி என்றுதான்.ஒரே வகுப்பு என்று சொல்ல வில்லை.எது எப்ப்டியோ வயதில் ஒன்றுமே இல்லை.மனம் தான் முக்கியம்.வயது என்பது வெறும் இலக்கங்கள் மட்டுமே. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஹரிச்சந்திராவுடன் ஒரே கல்லுரியில் படித்தேன். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.

maaveerarltcolraatha5gn.jpgLt-Col-Ratha-189x175.jpg

இது யாருக்கோ சும்மா கடுக்காய் குடுக்கிறதுக்காக எழுதினமாதிரி இருக்கு..! :rolleyes::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயணக்கதை பணயக்கதை ஆகி மீண்டும் பயணத்திற்கே வருகிறேன் . ஆனல் உண்மைகளை சிகாலங்களிற்கு மட்டுமே மறைக்க முடியும். என்றோ ஒருநாள் விரிவாக வெளிவரும் அதுவரை எனது பயணத்தை தொடர்கிறேன். எனவே மீண்டும் அந்த பொலிஸ் காரருடன் இணைவோம்.

அந்த பாரில் தண்ணியடித்துக்கொண்டிருக்கும் போது நான் கோழிபொரியலிற்கு ஓடர் கொடுத்தேன் அப்பொழுது என்னிடம் அதிகமா சாப்பிடவேணாம் டின்னர் எங்களது வீட்டிலைதான் வீட்டுக்காரிட்டை ரெடிபண்ண சொல்லிட்டன் என்றார். கொஞ்சம் ஆச்சரியமாக அவரை பார்த்தேன். ஏனென்றால் எனக்கும் அவரிற்கும் குறைந்தது இருபது வருடங்களிற்குமேல் பழக்கம். ஒரநாள்கூட அவர் தன்னுடைய பாதுகாப்பு கருதி என்னை வீட்டிற்கு அழைத்து கிடையாது அதே நேரம் நாங்களும் அவரிடம் கொடுத்த வேலையை செய்து முடித்ததும் கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு போய்கொண்டேயிருப்போம். அவரது தனிப்பட்ட வாழ்புபற்றி அறிய முற்பட்டதில்லை. அவர் என்னை வீட்டிற்கு விருந்திற்கு அழைத்ததுதான் ஆச்சரியமாக இருந்தது. சிலநேரம் ஒரு மரியாதைக்காக கூப்பிட்டிருக்கலாமென நினைத்து வேண்டாங்க எனக்கு பசியில்லை நீங்க போயிடுங்க என்றேன். இல்லப்பா இத்தினை வருசமா பழகியிருக்கோம் பலவாட்டி கூப்பிட நிசை;சிருக்கேன் ஆனா என்று இழுத்தார் ...புரியிது அதுதான் வேணாம் என்கிறன் என்றேன். ஆனா இப்ப அப்படியில்லை கட்டாயம் வரணும் நான் சொன்னா கேக்கமாட்டிங்க என்றுவிட்டு திடீரென அவரது மனைவிக்கு போனடித்து என்னம்மா அவரு வரமாட்டேங்குரார் நீயே பேசு என்று போனை எனது காதில் வைத்தார் நான் அவரது மனைவியை அதற்குமுதல் பார்த்ததோ பேசியதோ கிடையாது அவர் என்னிடம் அண்ணா எல்லாம் பண்ணியாச்சு கட்டாயம் வரணும் கட்டளைமட்டும் போனில் வந்தது நானும் தட்டுத்தடுமாறி சரிங்க வரேன் வரேன் ...என்று இழுத்து நிறுத்தினேன். சிரித்தபடி போனை நிறுத்திவிட்டு உங்களையெல்லாம் அவங்களிற்கு தெரியாது ஆனால் நிறையவே சொல்லியிருக்கேன். எனக்கு பையன் பிறந்தப்போ புலேந்திரன் என்னு பெயரை நான் செலக்ற் பண்ணினப்ப என் வீட்டுக்காரி இதென்ன பேரு என்னு றெம்ப பிரச்சனை பண்ணினா பின்ன அவனை பத்தி சொன்னப்புறம் ஓத்தக்கிட்டா என்றார்.

அவரது வீட்டில் சாப்பிடபோவதென்று முடிவெடுத்து விட்டதால் அளவுடன் நிறுத்திவிட்டு போகலாம் என்றேன். ஆனால் போலிஸ் காரரோ ஒரு போத்தலை வாங்கியபடி இது வீட்டிலை என்றபடி புறப்பட்டார். அவரது வீட்டில் அன்பான உபசரிப்பு சாப்பாட்டின்போதும் நண்பர் கிளாசில் விஸ்கியை ஊற்றிக்கொண்டேயிருந்தார். தலை கிறுகிறுத்தாலும் எல்லாம் நல்லபடியாய் நடக்கவேணும் என்று மனதில் நினைத்தபடி சாப்பிட்டு முடித்துவிட்டு விடை பெற்றபொழுது நானே கொண்டாந்து விடறெனே என்றபடி நண்பர் எழுந்து வந்தார். போலிசே தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது நான் ஆட்டேவிலையே பேயிறேன் என்றுவிட்டு சரிங்க நான் கிழம்புறேன் என்று அவரது மனைவியை பார்த்து கூறியபொழுது அவரும் மகனுமாக திடீரென எனது கால் அருகில் குனிந்து தொட்டு கும்பிட்டது எனக்கு ஏதோபோல் ஆகிவிட்டது அதன்பிறகு போலிஸ்காரரும் என்னை இறுக்க கட்டிப்பிடித்தபடி சே இப்படியாயிட்தே .. என்றார். அதுவரை நான் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் சிந்தனைகள் எல்லாமே கண்ணீர் துளிகளாகமாறிவிட்டிருந்தது. முடிந்தவரை அடக்கிப்பார்க முயன்றேன் முடியவில்லை. ஒரு மனிதன் போதையில் இருக்கும்போதும் உணர்வுகளை அடக்க முடியாதென்பதை அந்தத் தருணங்களில் உணர்ந்தேன்.

வெளியே என்னுடன் கூடவந்த நண்பன் அங்கு நின்றிருந்த ஒரு ஆட்டோவை கூப்பிட்டு (ஆட்டே காரர் தமிழர்தான்) என்னை ஏற்றிவிட்டு பணம் எதுவும் அவங்ககிட்டை கேக்காதை எங்கிட்டை வாய்யா நான் கொடுக்கிறேன் என்றுவிட்டு மீண்டும் ஒருமுறை கட்டிப்பிடித்து விடைபெறும்போது மெதுவாக காதருகில் இருக்கிறாரா என்றான்...தலையசைவை மட்டும் பதிலாக்கிவிட்டு ஆட்டேவில் ஏறி அமர்ந்தேன். அவர் வீட்டின் முன்னால் இருந்த பூச்சாடியை காலால் ஓங்கிஅடித்துவிட்டு வீட்டிற்குள் போய்விட்டார் .ஆட்டோ விவேக் நகர் நோக்கி நகர ஆரம்பித்தது.. விவேக் நகரில் என்னை இறக்கிய ஆட்டோ காரரிடம் எவ்வளவு ஆச்சுப்பா என்றதும் ஜயோ வேணாங்க அவரு சொன்னப்புறம் வாங்கினா நம்ம பிழைப்பு ஆகாது என்றபடி விடைபெற்றார். அடுத்ததாக கதையின் ஆரம்பத்திலேயே சொன்னதுபோல் மூன்றாவது நண்பன் பற்றி அடுத்ததாக பாக்கலாம்....

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழைய பதிவென்றில் நான் ராதா பற்றி எழுதியிருந்தது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=11201

ராதாவை பற்றிய பதிவுகளுக்கு நன்றி சாத்திரி.அவரும் நானும் 8 ஆம் வகுப்பில் இருந்து பாடசாலை லீவ் பண்ணமட்டும் (எ/எல் 2ஆம் வருடம்) ஒன்றாகப்படித்தோம்.ஏ எல் இல்தான் மிக நெருங்கிய நண்பர்களாக மாறினோம்.அதுவரை அவர் வேறு செற் நான் வேறுசெற்.லண்டனில் இருந்து எனது அத்தான் அனுப்பிய பேப்பர் சேட் மிக பிரபலம்..அதை அணியாத நண்பர்களே இல்லை.நான் கொழும்பு போகும் போது அதை அணிந்து சென்றால் ரெயினில் அதை உற்று பார்காத நபர்களே இல்லை.ராதவும் அதை சில காலம் அணிந்திருந்தார்.

பாடசாலை முடிய சிலவேளைகளில் பீ.ஏ தம்பி லேனுக்குள் இருக்கும் நண்பர்வீட்டில் போய் கிரிகெட் விளயாடுவோம்.அவர்தான் ராதாவின் மிக நெருங்கிய நண்பர்.பெயர் சிறிதரன்.இப்போ லண்டனில் உள்ளார்.நான் லண்டன் சென்றபிறகு ராதா வங்கியில் வேலை செய்வதாக அறிந்தேன்.பின் 83 உடன் இயக்கம்.

சிறிதரன் கனடாவந்த போது சொன்னார்.தான் 85 இல் என நம்புகின்றேன் இலங்கை போனபோது ராதாவை சந்தித்ததாகவும் அவர் வருமுன் வந்த பொடிகாட்ஸ் பற்றியும் இயக்கத்தில் மிக மரியாத்தைகுரியவராகவும் இருந்தவரென்றும் தன்னிடம் புலிகள் பற்றி லண்டனில் என்ன கதைக்கினம் என்றே திரும்ப திரும்ப கேட்டதாகவும் சொன்னார்.

நான் இந்தியா இருக்கும் போது அவர் மன்னாரில்.பின் அனுராதபுரதாக்குதலுக்கு போனவர் என் அறிய நம்பமுடியவில்லை.

மாணவர் தலைவராகவும்,கடேட்டிங் பொறுப்பாளராகவும் இருந்தார்.அவர் குடும்பமே எனக்கு பழக்கம்.தம்பி பிரேமச்சந்திரா இன்றும் தொடர்பில்.

மன்னார் மாவட்டத்தில் விக்ரரிற்கு பின்னர் புலிகள் இயக்கத்தின் தளபதியாக ராதா பொறுப்பேற்றார் பின்னர் யாழில் கிட்டு மீதான தாக்குதலின் பின்னர் (நடத்தியது தீப்பொறி மற்றும் .என்.எல்.எவ்.ரி.இயக்கம்.) கிட்டு சிகிச்சைக்காக இந்தியா சென்றபின்னர். ராதா யாழ்மாவட்ட பொறுப்பேற்றார். அவரது வருகை யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல மினிமுகாம்கள் அழிக்கப்பட்டது. அவர் கட்டுவனில் இறந்த பின்னர் அவரிற்கு பின்னர் மாத்தையா யாழ் மவட்டத்திற்கு பொறுப்பேற்றார். அவரிற்கும் எனக்குமான மோதல் மிக நீண்டது எழுத விருப்பம் இல்லை :(

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அதன்பிறகு போலிஸ்காரரும் என்னை இறுக்க கட்டிப்பிடித்தபடி சே இப்படியாயிட்தே .. என்றார். அதுவரை நான் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் சிந்தனைகள் எல்லாமே கண்ணீர் துளிகளாகமாறிவிட்டிருந்தது. முடிந்தவரை அடக்கிப்பார்க முயன்றேன் முடியவில்லை.

இழப்பின் அளவு, அளவிட முடியாதது தான் சாத்திரி அண்ணா, ஏனெனில் நாம் கொடுத்த விலை எந்த அளவு கோல்களாலும் அளவிட முடியாதது!

தொடருங்கள் உங்கள் பயணத்தை!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் சாத்திரி..நிறைய சம்பவங்களை இணைத்து எழுதுவது "சே இப்படியாய் போச்சே" என்கின்ற உணர்வை மீள மீள வரவைக்கிறது. முன்பும் ஒருமுறை எழுதியிருந்தேன், தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, இந்தியாவா என்று கேட்டால், இல்லை தமிழ்நாடு என்று சொல்லும் தமிழர்களும் இருக்கிறார்கள். அதேநேரத்தில் இப்ப எல்லாம் பிரச்சனையும் முடிந்து போய்விட்டதுதானே என்றும் சொல்லுகிற தமிழ் _இந்தயர்களும் உள்ளார்கள்.

இதில் இணைக்கப்படிருந்த, இணைப்பில் நீங்கள் பதிந்த நிழலாடும் நினைவுகளும் வாசித்தேன், மனம் கனத்து போனது.

உங்களுடைய இன்னுமொரு இணைப்பில் - மகளின் நாடகம் போட்டிருந்தீர்கள்..நன்றாக இருந்தது..சொல்லத்தெரியவில்லை நாங்கள் செய்ய நினைத்து, விரும்பியது எல்லாவற்றையும் எங்கள் பிள்ளைகள் மூலம் அடைய நினைப்பதும், அதற்காக அவர்களை தயார் படுத்துவதும். ???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் பகின்ற அனைவரிற்கும் நன்றிகள். அதே நேரம் இந்தத் தடைவை சுமார் பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் பெங்களுர் செல்லும் போது தொழில்நுட்ப நகரம் மெட்ரே சிட்டி என இதுவரை காலங்களும் பெங்களுர் பற்றிய செய்திகளில் படித்தவற்றைமனதில் வைத்து பெங்களுர் பாங்காக் கோலாலம்பூர் போல வேகமாக மாற்றடைந்திருக்கும் என்று கற்பனையுடன்தான் போயிருந்தேன்.ஆனால் பெரிய மாற்றம் எதுவும் இல்லை இடம் கிடைத்த இடத்திலெல்லாம் திட்டமிடல் எதுவுமே இல்லாமல் மாடிக்குடியிருப்புக்களை கட்டி வாடைகைக்கு விட்டிருக்கிறார்கள்.கழிவுநீரோ மழை நீரோ ஓடுவதற்கு எவ்வித வாய்கால் வசதிகளும் இல்லை கொஞ்சம் பெரிய மழையடித்தால் வீதியிலேயே நீச்சலடிக்கலாம்.நான் தங்கியிருந்த நண்பனின் வீடு புதியதொருமாடிக்குடியிருப்பு மாடிப்படிகள் மிக ஒடுக்கமானது மட்டுமல்ல அவனது பல்கணியிலிருந்து மின்சார கம்பிகளை கையாலேயே எட்டிப்பிடிக்கலாம்.சிறிய குழந்தை ஏதாவது ஒரு தடியால் அதைத்தொட்டால் அவ்வளவுதான் இப்படியாக எவ்விட அடிப்படை பாதுகாப்பு வசதிகளுமற்று கட்டிடங்கள் எழும்புகின்றது.

DSCF0244.jpg

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணாவுக்கு தமிழ்சிறியையும் தெரிந்து இருக்கும் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை கட்டிப்பிடித்து விடைபெறும்போது மெதுவாக காதருகில் இருக்கிறாரா என்றான்...தலையசைவை மட்டும் பதிலாக்கிவிட்டு ஆட்டேவில் ஏறி அமர்ந்தேன். அவர் வீட்டின் முன்னால் இருந்த பூச்சாடியை காலால் ஓங்கிஅடித்துவிட்டு வீட்டிற்குள் போய்விட்டார் .....

:(

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்மம் என்ன செய்யிறது சாத்திரி அண்ணா எல்லாமே இப்பிடி ஆகிட்டுதே...

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்வதற்கு நன்றி சாத்திரி அண்ணா. எனக்கு இந்தியா போக மிகவும் விருப்பம், வாழ்நாளில் இதுவரை போனது கிடையாது. எனது இங்கிருக்கும் பல இந்திய நண்பர்கள் (தெலுங்கர்கள், மலையாளிகள், பஞ்சாபிகள்) கண்டிப்பா வரவேண்டும் என் அடிக்கடி கூறுவார்கள்.

தொடருங்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்களும் நாட்டுக்கு சேவை செய்ததில் பெரிய ஆள் போலத்தான் கிடக்கு. மன்னிக்கவும், எனக்கு உங்களைப்பற்றி அதிகம் இதுவரை தெரியாது.

எங்கள் அரசியல் பிரச்சனைகளை தவிர்த்துப்பார்தால் இந்தியா நிச்சயம் சென்று பார்க்கவேண்டியதொருஇடம். கோவில் அழகுகளிற்காக தமிழ்நாட்டையும். இயற்கை அழகிற்காக கேரளாவையும்.கேட்டைகனின் அழகிற்காக ராஜஸ்தானையும் உலக அதிசயம் ஆக்ராவில் தாச் மகாலையும் பஞ்சாப்பில் பொற்கோயிலையும் கட்டாயம் பார்க்கவேண்டும். தாச்மகாலை இரண்டுதடைவைகள் வியந்து பார்த்துவிட்டேன். இன்னமும் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்களும் நாட்டுக்கு சேவை செய்ததில் பெரிய ஆள் போலத்தான் கிடக்கு. மன்னிக்கவும், எனக்கு உங்களைப்பற்றி அதிகம் இதுவரை தெரியாது.

களத்தில் நின்று போராடி உயிரை விட்டவர்களின் தியாகங்குடன் ஒப்பிட்டால் நான் செய்தவைகள் சிறியளவு பங்கு மட்டுமே. 1984 ல் தொடங்கி 2001 வரை17 வருடங்கள் என்னால் முடிந்ததை செய்தேன். அவற்றை எழுதவும் முடியாது எழுதினால் ஒன்று சுயதம்பட்டம்.அடுத்தது எனக்கே ஆபத்தாக முடியும்.சில அனுபவங்களை மட்டும் எழுதியிருக்கிறேன். என்னைவிட நிறைய வேலைகள் நாட்டிற்காக செய்தவர்கள் பல நண்பர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் அவர்கள் எழுத்துப்பக்கங்களில் மினக்கெடுவது இல்லை. ஆனால் இந்த 17 வருடங்களில் நான் இழந்தவைகள் அதிகம் ஆனால் அவைகள் எல்லாம் வீணாகிப்போனதே என்பதுதான் மிகப்பெரிய வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்களும் நாட்டுக்கு சேவை செய்ததில் பெரிய ஆள் போலத்தான் கிடக்கு. மன்னிக்கவும், எனக்கு உங்களைப்பற்றி அதிகம் இதுவரை தெரியாது.

வேர்கள் வெளியில் தெரிவதில்லை சில வேங்கைகள்......... :huh:

களத்தில் நின்று போராடி உயிரை விட்டவர்களின் தியாகங்குடன் ஒப்பிட்டால் நான் செய்தவைகள் சிறியளவு பங்கு மட்டுமே. 1984 ல் தொடங்கி 2001 வரை17 வருடங்கள் என்னால் முடிந்ததை செய்தேன். அவற்றை எழுதவும் முடியாது எழுதினால் ஒன்று சுயதம்பட்டம்.அடுத்தது எனக்கே ஆபத்தாக முடியும்.சில அனுபவங்களை மட்டும் எழுதியிருக்கிறேன். என்னைவிட நிறைய வேலைகள் நாட்டிற்காக செய்தவர்கள் பல நண்பர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் அவர்கள் எழுத்துப்பக்கங்களில் மினக்கெடுவது இல்லை. ஆனால் இந்த 17 வருடங்களில் நான் இழந்தவைகள் அதிகம் ஆனால் அவைகள் எல்லாம் வீணாகிப்போனதே என்பதுதான் மிகப்பெரிய வேதனை.

உண்மை தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறுநாள் கலைஎழுந்து நண்பனிடம் விடைபெற்றுக்கொண்டு எனது அடுத்த பயணத்தினை தொடர்ந்தேன்.அடுத்த பயணம் அன்ரனிதாசை பாரக்கவேண்டும். அவன் பெங்களுரில் இருந்து சுமார் 270 கி;மீற்றர் துரத்திலிருக்கும் கணேஸ்பூர் என்கிற குக்கிராமத்தில் வாழ்கிறான். கூகிளில் தேடினாலும் கிடைக்காத அந்தக் குக்கிராமத்திற்கு போவதற்கு நான் முன்று பஸ்மாறி ஏறியிறங்கவேண்டும். அதுவும் உள்ளுர் பஸ்சில்தான் போகவேண்டும் அது அத்தனை நிறுத்தங்களிலும் நின்று நின்றுதான் போகும் (கர்கால்) பெங்களுரில் முதலாவது பஸ்சில் ஏறியாகிவிட்டது காலை எட்டுமணிக்கு ஏறியபஸ் ஆடியசைந்தபடி தனது பயணத்தை தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல வெய்யிலும் ஏற புழுதி வெக்கை முதல்நாள் இரவு அடித்த தண்ணியின் தாக்கம் எல்லாம் கலந்து தலையை தாக்கியது. நேரத்தை போக்குவதற்காக மகேந்திரன் அவர்கள் தந்த புத்தகத்தை படிக்கலாமென நினைத்து படிக்கத் தொடங்கினேன் முடியவில்லை.

தலையிடிக்கு தயாராய் வைத்திருந்த குளிசையை எடுத்து போட்டுக்கொண்டேன்.மதியம் கடந்து இரண்டாவது பஸ்சும் மாறிவிட்டிருந்தேன் பசிப்பதுபோல் இருந்தது ஆனாலும் சாப்பிட்டால் சத்தி (வாந்தி)வந்துவிடும் போல் இருந்தததால் அவ்வப்பொழு நிறுத்தங்களில் இளநீரை மட்டும் வாங்கிக் குடித்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தேன். நேரம் மாரை 5 மணியை தாண்டிஓடிக்கொண்டிருந்தது எனக்கு பணயங்களின் போது நித்திரை வராது ஆனாலும் நேரத்தை கொல்வதற்காய் கஸ்ரப்பட்டு கண்ணை மூடிக:;கொண்டிருந்தேன். ஒரு நிறுத்தத்தில் கொஞ்ச கட்டிட தொழிலாளர்கள் ஏறினார்கள் எனக்குப்பகத்தில் இருந்த இடத்தில் ஒருவர் அமர்ந்தார் பஸ் ஓடத்தொடங்கிய சிறிது நேரத்தில் அவரிற்கு வலிப்பு வந்துவிட்டது வலிப்புவந்தவர் கீழே விழுந்து இழுத்படி இருந்தார். அவர் விழுந்த சத்தத்தில் வில்லங்கத்திற்கு கண்ணை முடியபடி இருந்த நான் கண்ணை திறந்து பார்த்தேன். வேறு யாருமே அவரை கண்டுகொள்ளவேயில்லை அவருடன் வந்திருந்த தொழிலாளர்கள் உட்பட.எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை வலிப்பு வந்தவர்களிற்கு கையில் இரும்பை கொடுத்தால் நிற்கும் என்கிற நாட்டு வைத்தியமும் தமிழ் சினிமா வைத்தியமும் நினைவிற்குவர அவரது கையை பிடித்து இருக்கையின் கீழ் இருந்த கம்பியில் அமத்தினேன் அவர் அதை பிடித்தபடியே துடித்தார்.

அதே நேரம் அவர் என்னை செருகிய கண்களால் பார்ததது என்னை ஏதோ செய்தது.உடனேயே பஸ்சின் முன்பகம் போய் நடத்துனரிரை தட்டி தெரிந்த கன்னடத்தில் பேசி அவரை காட்டினேன். பஸ் நடத்துடர் பஸ்சை நிறுத்துமாறு கத்தி விட்டு இன்னெருவரின் உதவியுடன் வலிப்புவந்தவரை கீழே இறக்கி அங்கிருந்த கடை ஒன்றின் முன்னால் கிடத்திவிட்டு அவரது பையையும் அவரருகில் போட்டுவிட்டு ஓடிவந்து விசிலடித்தார் பஸ் புறப்பட்டது. நான் யன்னால் எட்டிப்பார்த்படியே இருந்தேன் வலிப்பு வந்தவரே துடித்துக்கொண்டேயிருந்தார்.அவரைச்சுற்றி மக்கள் கூடத்தொடங்கியிருந்தனர். அவரையாரவது வைத்தியசாலையில் சேர்த்திருப்பார்களா?? அல்லது வலிப்பு தானாக நின்றிருக்குமா?? என கொஞ்சநேரமாக அவரது நினைவாகவே இருந்தது.இரண்டாவது பஸ்சும் மாறி மூன்றாவது பஸ்சை பிடித்தாகிவிட்டது இனியும் அன்ரனிதாசைப்பற்றி சொல்லாமல் கதையை நகர்த்முடியாது

86ம் ஆண்டு சித்திரை மாதம் 17 ந்திகதியன்று மாதகல் கடற்கரையிலிருந்து சில கடல்மைல்கள் தொலைவில் புலிகள் மூன்று படகுகள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் அழிக்கப்டுகின்றது.

படகில் இருந்தபொருட்களில் முக்கியமான பொருட்கள் தாக்குதலில் சேதமடையாதவை. படகுகள் அழிக்கபட்ட இடமும் பெரும் ஆழம் இல்லாத பகுதி என்பதால் சுழியோடிகளை வைத்து பொருட்களை தேடிப்பார்பதென புலிகள் முடிசெய்திருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில்தான் புலிகளின் ஆரம்பகால போராளிகளில் ஒருவரான தளபதி அருணாவும் கொல்லப்பட்டதாக புலிகள் நினைத்து அஞ்சலி செலுத்திய பொழுதே ரெலோவுடனான முறுகல் ஏற்பட்டது அதனை விபரமாக நான் ஏற்கனவே இங்கு எழுதிவிட்டபடியால் அதை விடுத்து தொடர்கிறேன். சுழியோடுவதற்காக தமிழ்நாட்டிலிருந்து திறைமையான நான்கு சுழியோடிகள் அழைத்துவரப்பட்டனர் அவர்களுடன் எமது சுழியோடிகள் ஜந்துபேருமாக சேர்ந்து அந்தப் பொருட்களை தேடி சுழியோடினார்கள். அந்த சம்பவத்திற்காக வந்தவர்களில் ஒரவன்தான் அன்ரனிதாஸ்.புலிகள் அமைப்பிடம் நவீன வசதிகள் ஏதுமற்ற அன்றைய காலகட்டத்தில் நீச்சலிற்காக பயன்படுத்தும் கண்ணாடிகளை மட்டும் போட்டுக்கொண்டு பலரும் சுழியோடினார்கள்.அதில் திறைமையாக அதிக நேரம் அன்ரனிதாசும் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவரும் சுழியோடி பொருட்களை எடுத்தனர். அப்பொழுது தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட சுழியோடிகளை மாதகலில் ஒரு வீட்டில் தங்கவைத்து அவர்களது தேவைகளை நானே கவனித்திருந்தேன். சுழியோடும் நிகழ்வுகள் முடிவடைந்ததும் மற்றைய மூவரும் இந்தியா திரும்பிவிட அன்ரனிதாஸ் மட்டும் அங்கேயே தங்கிவிட்டான்.பின்னர் புலிகள் அமைப்பிற்கு வண்டி(வள்ளம்)ஓட்டுனராக மாறிவிட்டிருந்தான்.அன்று எனக்கும் அவனிற்குமான பழக்கம் பின்னர் நல்லதொரு நட்பாக மாறிவிட்டிருந்தது. 94ம் ஆண்டு கடலில் நடந்த இலங்கைப்படையின் தாக்குதலில் குண்டடிபட்ட அன்ரனிதாஸ் அவனது நண்பர்களால் தமிழ்நாட்டிற்கு காப்பாற்றி கொண்டு செல்லப்பட்டான்.அன்ரனிதாசின் இடுப்பில் பாய்ந்த குண்டுகள் அவனது முதுகெலும்பையும் பாதித்திருந்தது அதனால் இரண்டரை ஆண்டுகள் எழுந்து நடக்கமுடியாமல் சிகிச்சை பெற்று தேறிவந்தான்.

அவன் காயம் பட்டவருடம்தான் திருமணமும் செய்திருந்தான் .கர்ப்பமாக இருந்த அவனது மனைவி இவன் வைத்திய சாலையில் இருந்த காலங்களில் இன்னொருவருடன் தொடர்பு ஏற்பட்டு பிள்ளையை பெற்றுக்கொண்டதுடன் அதனை அன்ரனிதாசின் தயார் வீட்டில் போட்டுவிட்டு அவனுடன் போய்விட்டாள். கொஞசம் தேறி நடக்கக்கூடிய நிலையில் வைத்திய சாலையை விட்டு வெளியே வந்த அன்ரனிதாஸ் தன்னுடைய கிராமத்தில் வாழவிரும்பாமல் தாயாரிடம் பிள்ளையை விட்டுவிட்டு நண்பன் ஒருவனின் உதவியுடன் கர்நாடகாவின் கணேஸ்பூர் கிராமத்திற்கு வந்து சேர்கிறான்.................

DSCF0227.jpg

நடுவில் எனக்கருகே நிற்பவன்தான் அன்ரனிதாஸ்

Edited by sathiri

படகில் இருந்தபொருட்களில் முக்கியமான பொருட்கள் தாக்குதலில் சேதமடையாதவை. படகுகள் அழிக்கபட்ட இடமும் பெரும் ஆழம் இல்லாத பகுதி என்பதால் சுழியோடிகளை வைத்து பொருட்களை தேடிப்பார்பதென புலிகள் முடிசெய்திருந்தனர்.

அதென்ன முக்கிய பொருட்கள் சொன்னால் நாங்களும் தெரிந்துகொள்ளலாமே

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன முக்கிய பொருட்கள் சொன்னால் நாங்களும் தெரிந்துகொள்ளலாமே

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவன் காயம் பட்டவருடம்தான் திருமணமும் செய்திருந்தான் .கர்ப்பமாக இருந்த அவனது மனைவி இவன் வைத்திய சாலையில் இருந்த காலங்களில் இன்னொருவருடன் தொடர்பு ஏற்பட்டு பிள்ளையை பெற்றுக்கொண்டதுடன் அதனை அன்ரனிதாசின் தயார் வீட்டில் போட்டுவிட்டு அவனுடன் போய்விட்டாள். கொஞசம் தேறி நடக்கக்கூடிய நிலையில் வைத்திய சாலையை விட்டு வெளியே வந்த அன்ரனிதாஸ் தன்னுடைய கிராமத்தில் வாழவிரும்பாமல் தாயாரிடம் பிள்ளையை விட்டுவிட்டு நண்பன் ஒருவனின் உதவியுடன் கர்நாடகாவின் கணேஸ்பூர் கிராமத்திற்கு வந்து சேர்கிறான்.................

ஒரு போராட்டத்தில் பார்வையாளராக இருப்பதற்கும், பங்காளராக இருப்பதற்கும், எவ்வளவு வேறுபாடுகள் உண்டு என்பதை உங்கள் கதை விளங்க வைக்கின்றது சாத்திரியார்!

தனிப்பட்ட போராளிகளின் இழப்புக்கள்,வெளியே தெரியாமலே கண்ணீர்க் கதைகளாக அவர்களுக்குள்ளேயே பெரும்பாலும் மரணித்து விடுகின்றன!!!

தொடருங்கள் சாத்திரி!!!

  • கருத்துக்கள உறவுகள்

அவன் காயம் பட்டவருடம்தான் திருமணமும் செய்திருந்தான் .கர்ப்பமாக இருந்த அவனது மனைவி இவன் வைத்திய சாலையில் இருந்த காலங்களில் இன்னொருவருடன் தொடர்பு ஏற்பட்டு பிள்ளையை பெற்றுக்கொண்டதுடன் அதனை அன்ரனிதாசின் தயார் வீட்டில் போட்டுவிட்டு அவனுடன் போய்விட்டாள். கொஞசம் தேறி நடக்கக்கூடிய நிலையில் வைத்திய சாலையை விட்டு வெளியே வந்த அன்ரனிதாஸ் தன்னுடைய கிராமத்தில் வாழவிரும்பாமல் தாயாரிடம் பிள்ளையை விட்டுவிட்டு நண்பன் ஒருவனின் உதவியுடன் கர்நாடகாவின் கணேஸ்பூர் கிராமத்திற்கு வந்து சேர்கிறான்.................

ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு உதவப் போய் தனது வாழ்க்கையை இழந்த இன்னுமொரு தமிழகத்துத் தமிழன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன முக்கிய பொருட்கள் சொன்னால் நாங்களும் தெரிந்துகொள்ளலாமே

முக்கிப்பாருங்கள் ஏதாவது பொருள் வரும் அதுதான் முக்கியபொருள் :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.