Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீ சத்ய சாயி பாபா சற்று முன்னர் காலமானார்

Featured Replies

ஸ்ரீ சத்ய சாயி பாபா சற்று முன்னர் காலமாகிவிட்டார்!

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011 10:32

saibabaprayer295.jpg

ஆன்மீகத் தலைவராக மக்களால் நேசிக்கப்பட்ட சத்தியசாயிபாபா அவர்கள் சற்று முன்னர் மகா சமாதியானார்.

இவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தில் உள்ள மருத்துவமனையொன்றில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகிவிட்டார்.

tamilcnn

Edited by நிழலி
தலைப்பு திருத்தப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

Sri_Sathya_Sai_Baba2.jpg

சத்யசாய் பாபா ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டு ஏழைகளுக்கு செய்த கோடிக்கணக்கான திட்டங்களை நல்ல திட்டங்களை பாராட்டும் வேளையில், ஈழத் தமிழர்கள் அவரது பக்தர்களாக இருந்தும், போர் உக்கிரமாக நடந்த வேளையில் அம்மக்களை காப்பாற்ற தனது அரசியல் செல்வாக்ககைப் பாவித்து நிறுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலை அளிக்கும் விடயம். சில மாதங்களுக்கு முன்னர் இவர் சுகயீனமுற முன்னர், ஸ்ரீலங்கா சென்று மகிந்தராஜபக்ஸவை சந்திக்க இருந்ததாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதன் பின்பே.... இவர் தீவிர நோய் வாய்ப்பட்டார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உலக மக்களின் மனம் கவர்ந்த இந்த மகானின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் அதே வேளை, அவர் எங்கே மீண்டும் பிறப்பார் என்பதையும் அறியத் தந்தால், பாலன் இயேசுவை வரவேற்றது போல், நாங்களும் ஏதும் செய்ய வசதியாக இருக்கும்!!!

ஐயோ கடவுளே மண்டையப் போட்டுட்டாரே!!!!

உலக மக்களின் மனம் கவர்ந்த இந்த மகானின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் அதே வேளை, அவர் எங்கே மீண்டும் பிறப்பார் என்பதையும் அறியத் தந்தால், பாலன் இயேசுவை வரவேற்றது போல், நாங்களும் ஏதும் செய்ய வசதியாக இருக்கும்!!!

நல்லா வரவேற்புக் கொடுங்கோ

தமிழின அழிப்பிற்த் தலைமை தாங்கிய அனைவருக்கும் இந்தப் பிறப்பில் அவர் வழங்கிய ஆசி போதாது. அடுத்த பிறப்பில் வந்தும் வழங்க வேணுமல்லோ. நல்லா வரவேற்புக் கொடுங்கோ

Edited by மின்னல்

தமிழ் ஊடகங்கள் செய்தியைத் திரித்து எழுதியுள்ளன. சமாதி ஆகுவதற்கும் சிகிச்சை பலனளிக்காமல் இறப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஊடகங்கள் செய்தியைத் திரித்து எழுதியுள்ளன. சமாதி ஆகுவதற்கும் சிகிச்சை பலனளிக்காமல் இறப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

சிகிச்சை பலனளிக்காமல் மகா சமாதியானார். :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவரைக் கும்பிட்டவர்கள் இனி மேல் யாரைக் கும்பிடுவார்கள் :unsure: ஆனாலும் இவர் கொடுத்து வைத்தவர் இறந்த பிறகு எத்தனை பேர் இவர‌து ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்பார்கள்

தமிழ் ஊடகங்கள் செய்தியைத் திரித்து எழுதியுள்ளன. சமாதி ஆகுவதற்கும் சிகிச்சை பலனளிக்காமல் இறப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

Satya Sai Baba, Indian guru, dies at 84

One of India's most revered spiritual leaders, Sri Satya Sai Baba, has died in hospital at the age of 84.

Doctors say the guru, who is thought to have millions of followers around the world, died following a cardiac arrest.

He had been admitted to hospital in his hometown of Puttaparthi last month, suffering from respiratory problems and kidney failure.

He enjoyed support from all areas of Indian society - including Bollywood filmstars and senior politicians.

His high-profile followers include former Indian Prime Minster Atal Behari Vajpayee and cricket legend Sachin Tendulkar.

Many devotees considered him a living god, and credited him with mystical powers including the ability to conjure objects out of the air.

Prime Minister Manmohan Singh described his death as an "irreparable loss".

"He was a spiritual leader who inspired millions to lead a moral and meaningful life even as they followed the religion of their choice," said Mr Singh.

http://www.bbc.co.uk/news/world-south-asia-13180011

Edited by மின்னல்

1969ம் ஆண்டு கடவுள் அறிவிச்சாராம் தான் இன்னும் 50 ஆண்டுகள் அதாவது 2019ம் ஆண்டுவரை உயிர் வாழ்வேன் என்று ஆனால் எட்டு ஆண்டுகளிற்கு முன்னமே கடவுள் போய்ட்டார்.

வயசானதில 2011 ஐ 2019 எண்டு நினைச்சு மண்டையைப் போட்டிருப்பாரோ???

Edited by மின்னல்

இனி அவருடைய சொத்தையெல்லாம் யார் அனுபவிக்கப்போகிறார்கள்? :wub::wub::wub:

இந்தியாவின் புகழ் பூத்த மஜிக் கலைஞர் சத்யசாயி பாபாவின் மறைவு மஜிக் கலைக்கு ஒரு பேரிழப்பு.

எனினும் அவரது இடத்தை நிரப்புவதற்கு 'அம்மா', 'அப்பா' , 'அக்கா' , 'அண்ணா' எனப் பலரும் இருப்பதால் இரசிகர்களுக்குப் பிரச்சினையிராது.

  • கருத்துக்கள உறவுகள்

புட்டபர்த்தி சாய்பாபா காலமானார்: புத‌ன்‌கிழமை உட‌ல் அட‌க்க‌ம்

ஞாயிறு, 24 ஏப்ரல் 2011( 15:47 IST )

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புட்டபர்த்தி சாய்பாபா இன்று காலை காலமானார்.

மூச்சுத் திணறல் காரணமாக சாய்பாபா அறக்கட்டளையின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 86 வயதான சாய்பாபா கடந்த 28 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் சாய்பாபாவின் ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை 7.40 மணியளவில் சாய்பாபா உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாய்பாபா மறைவிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆ‌ந்‌திர முத‌ல்வ‌ர் உ‌ட்பட அமை‌ச்ச‌ர்க‌ள், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் என அனைவரு‌ம் அ‌ஞ்ச‌லி செலு‌த்த பு‌ட்டபர்‌த்‌தி செ‌ன்று‌ள்ளன‌ர்.

சாய்பாபாவின் உடல் இன்று மாலை 6 மணி முதல் இரண்டு நாட்களுக்கு பொது மக்கள் அஞ்சலிக்காக கு‌ல்வ‌‌‌‌ந் அர‌ங்‌கி‌ல் வைக்கப்படுகிறது. இர‌ண்டு நா‌ட்க‌ள் அ‌ஞ்ச‌லி‌க்கு‌ப் ‌பிறகு புத‌ன்‌கிழமை சா‌‌ய்பாபா உட‌ல் அட‌க்க‌ம் நடைபெறவு‌ள்ளது.

தனது உடலை அட‌க்க‌ம் செ‌ய்ய சா‌ய்பாபா ஏ‌ற்கனவே இட‌த்தை‌க் கு‌றி‌ப்‌பி‌‌ட்டு‌க் கொடு‌த்‌திரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1104/24/1110424002_1.htm

தமிழச்சியின் கேள்விக்கான பதில் இதிலுள்ளது.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=92f8c04c5c475993f26a

http://video.google.com/videoplay?docid=-808477868886321422#

உலகம் நல்ல ஒரு மாஜிக் நிபுணரை இழந்து விட்டது !!

சீப்பான மஜிக் கலைஞர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தள்ளுவண்டில் போட்டுது.....அடுத்த தள்ளுவண்டில் எப்ப.........................................?

நிண்டவன் போனவன் எல்லாம் கடவுளாகிப் போன கலிகாலம் இது.

யாரும் சுஜாதாவின் "மாயா" வாசித்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பாபா புட்டுக்கிட்டாரா?பலருக்கு மருத்துவராகவும்,பலருக்கு மீட்பராகவும் இருந்தவர் பாடையில போய்யிட்டரா?

மனிதன்....மனிதனாகத்தான் மரணிக்க முடியும்.....

இவருடைய முடி(மயிர்)பல் போன்றவற்றை யாராவது எடுத்து வைத்து பூஜை செய்வார்கள்.பிறகு அந்த மதத்தை பின்பற்றி ஒரு சமுகம் உருவாகும் அதிலிருந்து ஒரு தீவிரவாத அரசியல் தலைவன் உருவாகி மாற்று சமுகத்தை அழிப்பான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

முக்தி அடைந்தார் ஸ்ரீ சத்ய சாய் பாபா

First Published : 25 Apr 2011 01:54:33 AM IST

Last Updated : 25 Apr 2011 07:27:46 AM IST

புட்டபர்த்தி, ஏப்.24: ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் புட்டபர்த்தி என்ற சிற்றூரில் அவதரித்து உலகம் முழுக்க தன்னுடைய அருள் வெள்ளத்தைப் பாய்ச்சிய ஆன்மிகச் செல்வர் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு முக்தி அடைந்தார். அவருக்கு வயது 86.

வெறும் உபதேசங்கள் மட்டும் போதாது என்று உணர்ந்து ஏழைகள் பால் கருணையும் இரக்கமும் கொண்டு கல்வி நிலையங்களையும் மருத்துவமனைகளையும் நிறுவி இலவசமாகவே எல்லாவற்றையும் பெற வழிகாட்டிய அருள் செல்வரின் மறைவு மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.

நாட்டு மக்களின் நலனுக்காகவே தன் வழியில் உழைத்த பாபா, மார்ச் 28 முதல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் நினைவு திரும்பாமலேயே இயற்கை எய்தினார்.

மருத்துவ அறிக்கை: பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா இன்று நம்மிடையே இல்லை. இதயம் செயலிழந்ததால் காலை 7.40 மணிக்கு அவர் தன்னுடைய பூத உடலை நீத்தார். புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் அரங்கில் அவருடைய பூத உடல் பக்தர்கள் தரிசிக்க வசதியாக ஞாயிறு மாலை 6 மணி முதல் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களும் வைக்கப்பட்டிருக்கும்' என்று ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிலையத்தின் இயக்குநரான ஏ.என். சஃபாயா அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.

கீதா ரெட்டி: ஆந்திரத் தொழில்துறை அமைச்சரும் சாய் பக்தருமான ஜே.கீதா ரெட்டி, ஒருங்கிணைப்புப் பணிக்காக பிரசாந்தி நிலையத்தில் முகாமிட்டிருக்கிறார். பாபாவின் பூத உடல் வரும் புதன்கிழமை காலை குல்வந்த் அரங்கிலேயே அடக்கம் செய்யப்படும் என்றும் நேரம் பிறகு தீர்மானிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

4 நாள் அரசு துக்கம்: ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு சுமார் 170 நாடுகளில் 3 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் இருப்பதால் அவர்கள் கடல் கடந்து வந்து பாபாவைத் தரிசிக்க வசதியாக 4 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உடல் அடக்கம் நடைபெறும் புதன்கிழமை, அனந்தப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ சத்ய சாய் பாபா ஆன்மிகப் பேரரசை நிறுவியவர் என்பதால் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்துவது என்று ஆந்திர அரசு முடிவு செய்திருக்கிறது.

தலைவர்கள் வருகை: பாபாவின் மறைவுச் செய்தி கேட்டவுடன் மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், முதலமைச்சர் என்.கிரண்குமார் ரெட்டி ஆகியோர் புட்டபர்த்திக்கு விரைந்தனர். பாபாவின்பால் பக்தி கொண்ட அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்படக் கலைஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள் புட்டபர்த்தி நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

புட்டபர்த்தியில் உள்ள சாய் அறக்கட்டளைக்குச் சொந்தமான தனி விமான நிலையம் பெரிய விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வந்து இறங்க வசதியாக தயார்படுத்தப்பட்டுவிட்டது.

மாநிலப் போலீஸôரும் அனந்தப்பூர் மாவட்டம் முழுக்க காவலையும் கண்காணிப்பையும் பலப்படுத்தியிருக்கின்றனர். பிரமுகர்களும் பக்தர்களும் பாதுகாப்பாக வந்து பாபாவைத் தரிசிக்கவும் நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்படுகின்றன.

பக்தர்களுக்காக போக்குவரத்து, உணவு, குடிநீர், முதலுதவிச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை சாய் சமாஜங்களே செய்துள்ளன.

சாய்பாபா தன்னுடைய வாழ்நாளில் தன்னுடைய பக்தர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஒழுங்கு, கட்டுப்பாடு, உணர்ச்சிகளுக்கு ஆள்படாமை, பிறருக்கு உதவுதல், அமைதி காத்தல் ஆகியவற்றை அவருடைய பக்தர்கள் கடைப்பிடிப்பார்கள் என்பதால் எத்தனை ஆயிரம்பேர் வந்தாலும் சமாளித்துவிட முடியும் என்று மாவட்ட நிர்வாகம் நம்பிக்கையுடன் இருக்கிறது.

1926-ல் அவதாரம்: புட்டபர்த்தியில் 1926-ம் ஆண்டு ஸ்ரீ சாய் பாபா அவதாரம் செய்தார். அப்போது அவருடைய பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் சத்ய நாராயண ராஜு. சத்யம், சிவம், சுந்தரம் என்ற தத்துவங்களுக்கு இலக்கணமாக வாழ்ந்த பாபா தன்னுடைய பக்தர்களுக்காக காற்றிலிருந்து விபூதி வரவழைப்பது, லிங்கங்களை வரவழைத்துத் தருவது போன்ற சித்து வேலைகளைச் செய்வார். அதைத்தான் அவருடைய விமர்சகர்கள் மிகப்பெரிய குறையாகச் சொன்னார்கள். ஆனால் பாபாவின் அருளாசியால் தங்களுக்கு நேர்ந்த சங்கடங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் மீண்டதால் அவரை அவதார புருஷனாகவே மக்கள் பார்த்தனர். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, பாரதவாசிகள் முதல் படித்த வெளிநாட்டவர் வரை அவருடைய சீட கோடிகளின் எண்ணிக்கையும் தரமும் அனேகம்.

பாபா மறையவில்லை. கோடிக்கணக்கான சீடர்களின் நெஞ்சங்களில் வாழ்கிறார். அடுத்து பிரேம சாயாக கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் அவதரிப்பேன் என்று கூறியிருக்கிறார். சாய் பக்தர்கள் நம்பிக்கையோடு காத்திருப்பார்கள் அவரைத் தரிசித்து ஆசி பெற.

:lol: சத்தியமாக இது எனது ஆக்கமல்ல, திணமணியில் இருந்து வெட்டி ஒட்டினது, அவ்வளவுதான்.

அடுத்து பிரேம சாயாக கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் அவதரிப்பேன் என்று கூறியிருக்கிறார். சாய் பக்தர்கள் நம்பிக்கையோடு காத்திருப்பார்கள் அவரைத் தரிசித்து ஆசி பெற.

இது வேறையா?? கிழிஞ்சுது போ !!!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து பிரேம சாயாக கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் அவதரிப்பேன் என்று கூறியிருக்கிறார். சாய் பக்தர்கள் நம்பிக்கையோடு காத்திருப்பார்கள் அவரைத் தரிசித்து ஆசி பெற.

மகிந்த சாயி ஆக சிறிலங்காவில் அவதரிப்பேன் என சொல்லாததையிட்டு மகிழச்சிஅடைவோம்

:oசாய் பாபா மரணம் ??

சாமியார் சாய் பாபா மரணமடைந்து விட்டதாக ஒரு நண்பர் கூறினார், உண்மையா??

சிட்னியில் பக்தர்கள் சொல்லுகிறார்கள் அவர் ஜப்பானுக்கு போயிட்டார் என்று....உடல்தான் சமாதி அடைந்ததாம்

  • கருத்துக்கள உறவுகள்

:D:lol: புத்தன்,

அதென்ன ஜப்பான் என்ன நரகத்திலா இருக்கிறது ??

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இவர் தான் 96 வயது வரைக்கும் உயிருடன் இருப்பேன் எண்டு சொன்னவராம் உண்மையோ?? பக்தர்களுக்கு ஒரே ஆத்திரமாம், உப்பிடி சொல்லாமக் கொள்ளாம படாரென்று டிக்கெட் எடுத்தது ?? அப்படியென்ன அவசரம், இன்னுமொரு 9 வருஷம் இருந்துபோட்டு ஆறுதலாய்ப் போயிருக்கலாம்தானே எண்டு கேக்கீனம் !!

அதுசரி உவற்றை சொத்தெல்லாம் இனி என்ன ஆகப் போவுது ?? சிலநேரம் புதுசாப் பிறக்கப்போகிற "..... பாபா" ஆளப்போகிறாரோ யாருக்குத் தெரியும் ??

ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுவன், ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண் கண்டியளோ??!! அவர் இன்னொருத்தரைக் காட்டிப்போட்டுத்தான் போயிருக்கிறார். இனிச்சனமெல்லாம் அங்க காவடியெடுக்கும். வருமானத்துக்குக் குறைவில்லை !!!

  • கருத்துக்கள உறவுகள்

நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.கடவுளுக்கே இந்தக் கதியா?அவரது பக்கர்கள் ஏழை குப்பன் சுப்பன் கிடையாது.பணக்கார மேட்டுக்குடி வர்க்கம்தான்.அதனால்தான் பாபாவுக்குப் பணம் கொட்டியது சித்து வேலை மூலம் தங்கச்சங்கிலி எடுத்துக்குடுத்துப் போட்டு கோடிக்கணக்கான பணத்தை ஆச்சிரம நன்கொடை என்ற பெயரில் வாங்கிக் கொள்ளுவார்.உலகின் பெரும்பாலான கறுப்புப் பணம் அவர் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.ஆச்சிரம சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டு மக்களுக்குச் சேர வேண்டும்.வேறு ஒரு வாரிசுச் சாமிக்குப் போகக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

.

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பூதவுடலுக்கு பக்தர்கள் அஞ்சலி.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.