Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன்..

நீங்கள் பயந்து பயந்து போகிறதை பார்க்க எதோ வில்லண்டமான ஆளைதான் இருந்திருப்பீன்கள் போல இருக்கு. நானும் போக வேண்டும், ஆனால் நேரம் காலம், காசிப்பிள்ளை எல்லாரும் சரி வர வேண்டும்.

என்ன உங்களுடையதிலும், சாத்திரியினதிலும், அடிக்கடி வர வசனம் சிகரட் வைத்த வைத்தேன், போத்தில் வாங்கினோம்.. சின்னப்பிள்ளைகளும், ஏன் வயது வந்தவர்களுக்கும், இது ஓகே என்கிறமாதிரி உணர்வு வராமால் விட்டால் சரி.- சில வேளை நான்தான் இதை கவனித்தேனோ தெரியவில்லை.

  • Replies 516
  • Views 65.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கோமகன்..

நீங்கள் பயந்து பயந்து போகிறதை பார்க்க எதோ வில்லண்டமான ஆளைதான் இருந்திருப்பீன்கள் போல இருக்கு. நானும் போக வேண்டும், ஆனால் நேரம் காலம், காசிப்பிள்ளை எல்லாரும் சரி வர வேண்டும்.

என்ன உங்களுடையதிலும், சாத்திரியினதிலும், அடிக்கடி வர வசனம் சிகரட் வைத்த வைத்தேன், போத்தில் வாங்கினோம்.. சின்னப்பிள்ளைகளும், ஏன் வயது வந்தவர்களுக்கும், இது ஓகே என்கிறமாதிரி உணர்வு வராமால் விட்டால் சரி.- சில வேளை நான்தான் இதை கவனித்தேனோ தெரியவில்லை.

உங்கள் பார்வை சரியானதே வொல்க்கனோ,.அதேநேரத்தில், ஒருவருடைய இயல்புகளை மறைத்து வாசிப்பவர்கள் மத்தியில் போலியான உயர்ந்த மனப்பான்மையை உருவாக்குவது பிழை என்பது எனது கருத்து. சாத்திரியாரும் அப்படி இருக்கலாம்.

  • தொடங்கியவர்

கோமகன் சும்மா இருக்கும் என்னை உசுப்பேத்துகிறீர்கள்.ஏனெனில் நான் வாழ்ந்த இடம் பள்ளி பருவம் எல்லாம் வவுனிக்குளம்.இதில் உள்ள ஒரு வசனம் என் இளமை பருவத்திற்கு அழைத்து சென்று விட்டது.இனி எத்தனை நாட்களுக்கு இந்த திரை ஓடுமோ தெரியாது.இருந்தாலும் பரவாயில்லை.உங்கள் மர்ம தேச பயணம் தொடரட்டும். என்னை பாதித்த வசனம்:-அதில் நாரைகளும் கூளைகடாக்களும் இரைந்து கொண்டே இரை தேடின.பக்கத்தே இருந்த ஒரு மரத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. அந்தக் கூட்டில் அதன் கலைவண்ணம் தெரிந்தது. நாங்களும் தானே இப்படி ஒரு கூடு கட்டினோம். பாத்து பாத்துத் தானே கட்டினோம். எத்தினை பிராந்துகள் எங்கள் கூட்டை சுத்திக் குதறின.

நன்றிகள் நீலப்பறவை. நான் வன்னியின் ஒரு மிகச்சிறிய துளியையே தொட்டுள்ளேன் என நினைக்கின்றேன். நீங்கள் பாலமனோகரனின் நிலக்கிளிகள் , வட்டப்பூ வாசித்தால் வன்னியின் முழுப்புழுதி வாசனையும் அதில் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூளைக்கடா என்றால் என்ன? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியாமாக உள்ளது, கோமகன்.தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

24T5233-20-australian-pelican.jpg

நன்றிகள் புங்கையூரன்..

இதை நாரை என்று நினைச்சுக்கொண்டிருந்தன்.. :unsure: அப்ப நாரையின் படத்தையும் ஒருக்கால் போட்டு விடுங்கோ..! :rolleyes:

அன்று பின்னரமே கிளியரன்ஸ் திரும்ப பக்ஸ் பண்ணியிருந்தனர். எனக்குத் தலைகால் புரியாத புழுகம். அக்கா இரவு நின்று விட்டு போ என்று அடம்பிடித்தா. என்னால் அவாவை மனம்நோக விட வரும்பவில்லை. அன்று இரவு அக்காவுடன் நிக்கத் தீர்மானித்தோம்.

எல்லோரும் பலகதைகளை கதைத்து படுக்க நேரமாகிவிட்டது. அத்தான் விடிய எழும்பி முதல் பஸ் எடுக்கவேணும் எண்டு சொல்லியிருந்தார். விடிய 4 மணிக்கே எழும்பி குளிக்கத்தோடங்கனேன். என்னுடைய அலப்பலில் எல்லோரும் எழும்பி விட்டனர். அக்கா இடியப்பமும் சம்பலும் சாப்பிட செய்து தந்தா. ஓட்டோ ஒன்றை அக்கா ஒழுங்கு செயதிருந்தா. ஓட்டோ எங்களை ஏற்றிக் கொண்டு வவுனியா பஸ் நிலயத்திற்குச் சென்றது. நேரம் காலை 6 மணியாகி இருந்தது. அத்தான் மோட்டச்சைக்கிளில் ஓட்டோக்குப் பின்னால் எங்களை வழியனுப்ப வந்தார். விடிய 6.30 இ.போ.சா பஸ் எங்களைச் சுமந்து பரித்தித்துறை நோக்கி பறப்படத் தயாரானது.

தொடரும்

இது தான் தமிழருக்கே உரிய உறவுகளின் அன்னியோன்யம்.

தொடருங்கள் கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் புங்கையூரன்..

இதை நாரை என்று நினைச்சுக்கொண்டிருந்தன்.. :unsure: அப்ப நாரையின் படத்தையும் ஒருக்கால் போட்டு விடுங்கோ..! :rolleyes:

Sarus_Cranes-2.jpg

நாராய்! நாராய்! செங்கால் நாராய்!

பனம்படு பனையின் கிழங்கு பிழந்தன்ன!

பவளக் கூர்வாய்! செங்கால் நாராய்!

மூலம்: சத்திமுத்திப் புலவர்!

இசை! இனிக் கொக்கைக் காட்டச்சொல்லிக் கேட்காமல் இருந்தால் சரி!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை! இனிக் கொக்கைக் காட்டச்சொல்லிக் கேட்காமல் இருந்தால் சரி!!! :D

இசை, இப்படித்தான் கொக்கு இருக்கும். :lol:

normal10.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இசை! இனிக் கொக்கைக் காட்டச்சொல்லிக் கேட்காமல் இருந்தால் சரி!!! :D

சரி.. சரி.. புங்கையூரான்.. எனக்கு கொக்குகளைத் தெரியும்..! :D

இசை, இப்படித்தான் கொக்கு இருக்கும். :lol:

normal10.jpg

சிறி,

இந்தக் கொக்கை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு..! :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசை, இப்படித்தான் கொக்கு இருக்கும். :lol:

normal10.jpg

கொக்குச்சுட்டு புசிப்பது என்பதன் அர்த்தம் தற்போதுதான் புரிந்தது :wub::D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. சரி.. புங்கையூரான்.. எனக்கு கொக்குகளைத் தெரியும்..! :D

சிறி,

இந்தக் கொக்கை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு..! :wub::lol:

இந்த கொக்கு மென் ............... sorry மீன் மட்டுமே சாப்பிடும்போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பற.பற,

கொக்கு,கோழி,மைனா,மயில் தெரியாத பி;ள்ளைகளுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்.... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி கொக்கின் படத்தை தேடியெடுக்க சரியாய் கஸ்ரப்பட்டிருப்பீங்கள் என நினைக்கிறன். இந்த கொக்கை சுட்டு சாப்பிட்டால் நல்லதா??சுடாமல் சாப்பிட்டால் நல்லதா?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசை, இப்படித்தான் கொக்கு இருக்கும். :lol:

normal10.jpg

என்ன தமிழ்சிறீ அண்ணா, கொக்கு எண்டிட்டு கோளியிண்ட படத்தை கொண்டுவந்து போட்டிருக்கிறீங்க? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ்சிறீ அண்ணா, கொக்கு எண்டிட்டு கோளியிண்ட படத்தை கொண்டுவந்து போட்டிருக்கிறீங்க? :rolleyes:

அது பார்க்கிற கண்களையும் நேரங்களையும் பொறுத்தது.............. நான்நினைகிறேன் நீங்கள் கூடுவிட்டு கூடுபாயும் நேரத்திலே பார்த்திருக்கிறீர்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி கொக்கின் படத்தை தேடியெடுக்க சரியாய் கஸ்ரப்பட்டிருப்பீங்கள் என நினைக்கிறன். இந்த கொக்கை சுட்டு சாப்பிட்டால் நல்லதா??சுடாமல் சாப்பிட்டால் நல்லதா?? :lol:

சாத்திரியார் நீங்கள்,

கொக்கு சுட்டுச் சாப்பிடுறது நல்லதா? ut-pulse-gun-smiley.gif

சுடாமல், சாப்பிடுறது நல்லதா? koch.gif

என்று ஔவையார் பாணியில் கேட்டுக் கொண்டிருக்கிறதுக்கு இடையில், வேறை ஆரும்.... ஆட்டையை போட்டுடப் போறாங்கள். சட்டுப் புட்டுன்னு வசத்திக் கேத்தமாதிரி செய்யுங்கப்பா... :D:lol:

  • தொடங்கியவர்

சாத்திரியார் நீங்கள்,

கொக்கு சுட்டுச் சாப்பிடுறது நல்லதா? ut-pulse-gun-smiley.gif

சுடாமல், சாப்பிடுறது நல்லதா? koch.gif

என்று ஔவையார் பாணியில் கேட்டுக் கொண்டிருக்கிறதுக்கு இடையில், வேறை ஆரும்.... ஆட்டையை போட்டுடப் போறாங்கள். சட்டுப் புட்டுன்னு வசத்திக் கேத்தமாதிரி செய்யுங்கப்பா... :D:lol:

ஐய்யோ ஐய்யோ முடியேலையே ? சந்துக்குள்ள சிந்து பாடுறாங்களே? கொக்குப்பிரச்சனை இதோட முடியட்டும் சொல்லிப்போட்டன். நானும் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். :o:o:o:o

  • தொடங்கியவர்

img0686xd.th.jpg

மிகவும் நீண்ட காலத்திற்குப் பின்பு இ.போ.சா பஸ்சில் பயணம செய்வதால் ஒரு இனம்புரியாத குறுகுறுப்புக்குள் உள்ளானேன். பஸ்சில் பெரிய மாற்றங்களை என்னால் காணமுடியவில்லை. வவுனியா பஸ்நிலையம் அந்தக்காலை வேளையிலும் பரபரப்புகுப் பஞ்சமில்லாமல் இருந்தது. டறைவர் பஸ்சின் ஹோர்னை அடித்துப் புறப்படுவதை அறிவித்துக் கொண்டிருந்தார். வெளியே ரீ குடிச்சுக் கொண்டு நிண்ட கொண்டக்டர் பஸ்சில் ஏறி விசில் அடிக்க பஸ் வவுனியா பஸ்நிலையத்தில் இருந்து வெளிக்கிட்டது. கொண்டக்ரறைப் பார்க்கும் பொழுது எனக்கு பரித்தித்துறை 750 லைனில் எட்வேர்ட் (செல்லப்பேர் மீசை) உடன் வேலை செய்தவரின் ஞாபகம் வந்தது (பெயர் ஞாபகம் இல்லை இங்கு சார்செயில் நகரில் அவரை ஒருமுறை சந்தித்தேன்). எண்ணை தோய்ந்த சுருட்டைத் தலைமயிர், நக்கல் நளினமான கதைகள் என்று பஸ்சைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார். தூரத்தே வவுனியா மெல்லமெல்ல மறைந்து கொண்டிருந்தது. பஸ் ஏ9 பாதையில் வேகமெடுத்தது. பஸ் டறைவர் அடிக்கடி காட்டு விலங்குகளைக் கலைக்கப் பாவிக்கும் ஹோர்னை அடித்து கொண்டு பஸ்சை ஓட்டியது எனக்கு ஒருவித எரிச்சலைக் கொண்டு வந்தது. இவர்கள் சுற்றுப்புறச் சூழல் கெடுவதைக் கவனிக்க மாட்டார்களோ? ஆனால் இ.போ.சா பஸ்சில் எனக்குப் பிடித்தது அவர்கள் போடும் பாடல்கள்தான். எப்பொழுதும் 80களில் வந்த பாடல்களைத்தான் போடுவார்கள். இதை முதன்முறையாக பரீட்ச்சார்தமாக 79களில் பரித்தித்துறை 750 லைனில் பஸ்சிற்கு " வசந்தமாளிகை " என்று பெயரிட்டு ஒடினார்கள். " வசந்தமாளிகை " பெயரைப்போல செமி லக்ஸசறி பஸ்சாக ஓடியது. இதைக் கூடுதலாக ஓட்டியவர் எட்வேர்ட் தான். இந்த பஸ்சுக்கென்றே அப்போது ரசிகர் பட்டாளம் இருந்தது. பகல்ப் பொழுதில் ஏ9 பாதையைப் பார்பதால் இரண்டு பக்கமும் தலயைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே வந்தேன். பஸ் தாண்டிக்குளத்தை நெருங்கிக்கண்டிருந்து. பஸ் டைறவர் வலு விண்ணன் தான். ஒற்றைவழிப் பாதையான ஏ9 இல் எதிரே வரும் வாகனங்களுக்கு வேகத்தைக் குறைக்காமலே விலத்திச் சென்றது எனக்கு வியப்பாகவும் பதற்றமாகவும் இருந்தது. சிங்கத்தின் கோரப்பற்களின் வடுக்கள் இருபக்கமும் ஆளப்பதிந்து நிலங்களை விகாரப்படுத்தியிருந்தன. பாதையின் இரண்டு பக்கமும் பல அகண்ட குழிகழும் கருகி மொட்டையான மரங்களும, அன்னியப் படைகள் எமது மண்ணைக் கற்பழித்ததிற்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன. பஸ் இடிக்கிடையே நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டது. அது உத்தியோகத்திற்கப் போவோர்களாலும் பள்ளி மாணவர்களலும் நிறைந்தது. பள்ளிமாணவர்களைப் பார்கும் பொழுது எனக்கு என்னையறியமலேயே எனது கல்லூரி காலம் ஞாபகம் வந்தது. அவர்களின் பாடப்புத்தகங்களை யூனிசெப் புத்தகப் பை நிறைத்திருந்தது. அவர்களின் தோற்றத்தில் பெரிதான மாற்றங்களை காணமுடியவில்லை. நான் கல்லூரிக்குப் போன மாதிரியே, படிய இழுத்த தலைமையிரும் இடையில் திருநீத்துக்குறியமாக இருந்தார்கள். ஒருசிலர் தமது புத்தகப்பைகளை இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகளிடம் கொடுத்து விட்டு "கெத்தாக" நின்றதையும் காணக்கூடியதாக இருந்தது . நாங்கள் விட்ட அதே விளையாட்டு, எனக்கு சிரிப்பாக இருந்தது. பஸ் கொண்டக்ரர் எங்களுக்கு அருகில் பயணச்சீட்டுப் போட வந்தார். எனது மனவி வாயெடுத்த என்னை சுரண்டிவிட்டு

" இரண்டு பரித்தித்துறை " என்றா.

எங்களை நிமிர்ந்து பாத்தவர்,

"கோவிக்க கூடாது எனக்கு தெரிஞ்சு ஒரு பரித்தித்தறை தான் இருக்கு ".

எனக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை. எவ்வளவுதான் சோகங்கள் ரணவலிகள் இருந்தாலும் இவர்களைப் போன்றவர்களால் தான் உலகம் உருளுகின்றது. சிரிப்பைத் தொலைத்த புலத்து மக்கள் நாங்கள் எங்கே? இவர்கள் எங்கே? பஸ் வேகத்தைக் குறைத்தது முன்னும் பின்னும் படைச் சிப்பாய்கள் ஏறிக்கொண்டார்கள். அவர்களும் காவல் பாத்துக் களைத்து படைமுகாமக்குத் திரும்புகின்றார்கள். இல்லாத புலிக்குக் காவல் காக்கும் மோடையர்கள். பாதையில் பல இடங்களில் திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. பஸ் பயணிக்க சிரமப்பட்டது. பாதையில் இருபக்கமும் ஒரு கி.மீ க்கு ஒன்றாக பங்கர் சென்றிகளைக் கண்டேன். முதல் முறையாக பங்கரைப் பார்த்த ஆள் நானாகத் தான் இருப்பேன். சதுரமாக தரையில் இருந்து 2 அடி உயரத்திற்கு மரக்குற்றிகளை வெட்டி அடக்கி , அதில் ஒரு சிறிய சதுர ஓட்டையின் மூலம் வெளிச்சுற்றாடல்களை அவதானித்துக் கொண்டிருந்தான் ஒரு படைவீரன். இந்த வெய்யிலிலும் சீருடையுடன் எப்படி இவர்களால் இந்தக் கிடங்கினுள் பொட்டல் வெளியில் இருக்கமுடிகின்றது? இவர்களும் மனிதர்கள் தானே ? யுத்தம் முடிந்தாலும் இயல்பு வாழ்க்கையை தொடரும் உரிமை மறுக்கப்பட்ட பிறவிகள். பாக்கப் பாவமாக இருந்தாலும் இவர்களது கோரமுகம் கண்டு என்மனம் இறுகியது. பஸ் ஓமந்தையை நெருங்கிக் கொண்டிருந்தது. தூரத்தே சோதனைச்சாவடி தெரிந்தது. பஸ் மெதுவாகச் சோதனைச் சாவடியில் போய் நின்றது. இந்தமுறை பயமில்லாமல் மனைவியுடன் இறங்கினேன். கொண்டக்ரரும் தன்னைப் பதிய இறங்கினார். நாங்கள் மூவரும் சோதனைச்சாவடி நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

தொடரும்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐய்யோ ஐய்யோ முடியேலையே ? சந்துக்குள்ள சிந்து பாடுறாங்களே? கொக்குப்பிரச்சனை இதோட முடியட்டும் சொல்லிப்போட்டன். நானும் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். :o:o:o:o

கோமகன் நீங்கள் தொடர்கதையை... தொடர்ந்து எழுதாவிடில் ஆரும் பூந்து, சிந்து பாடி விடுவார்கள். :wub:

சரி.. சரி... நாங்கள் உங்களை குழப்பவில்லை, தொடர்ந்து எழுதுங்கள். :)

சிந்து பாடுறதுக்கு வேறை திரி.... கிடைக்காமலா போகப்போகுது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெய்யிலிலும் சீருடையுடன் எப்படி இவர்களால் இந்தக் கிடங்கினுள் பொட்டல் வெளியில் இருக்கமுடிகின்றது? இவர்களும் மனிதர்கள் தானே ? யுத்தம் முடிந்தாலும் இயல்பு வாழ்க்கையை தொடரும் உரிமை மறுக்கப்பட்ட பிறவிகள். பாக்கப் பாவமாக இருந்தாலும் இவர்களது கோரமுகம் கண்டு என்மனம் இறுகியது.

:)

கதை நன்றாகச் செல்கிறது.

வன்னி மக்களின் வாழ்க்கையை அறிய ஆவலாய் உள்ளதால் பஸ்ஸை கொஞ்சம் மெதுவாக ஓட்டினால் நல்லது. :)

ஐய்யோ ஐய்யோ முடியேலையே ? சந்துக்குள்ள சிந்து பாடுறாங்களே? கொக்குப்பிரச்சனை இதோட முடியட்டும் சொல்லிப்போட்டன். நானும் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். :o:o:o:o

என்ன செய்வது கோமகன்? நீங்கள் நீண்டதாக 'கொமர்சியல் பிரேக்' விடுவதால், அந்த நேரத்தை விளம்பரதாரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். :lol:

Edited by thappili

  • தொடங்கியவர்

கதை நன்றாகச் செல்கிறது.

வன்னி மக்களின் வாழ்க்கையை அறிய ஆவலாய் உள்ளதால் பஸ்ஸை கொஞ்சம் மெதுவாக ஓட்டினால் நல்லது. :)

என்ன செய்வது கோமகன்? நீங்கள் நீண்டதாக 'கொமர்சியல் பிரேக்' விடுவதால், அந்த நேரத்தை விளம்பரதாரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். :lol:

முகமாலைவரை பஸ் மெதுவாய் தான் போகும் தப்பிலி. எனெண்டால் போற பாதை அப்படி. :D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

...தொடர்கதை நல்லாயிருக்கு. சற்று இடைவெளியை குறைத்து கொள்ளவும்.

புலம்பெயர்ந்தபின் பழைய ஞாபகங் களை மீட்டுகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.