Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணா உங்களின் புறாப் படம் அருமை. எனக்கும் ஊரில இருக்கும் என்ட அம்மா நினைப்பு வந்து போச்சுது. தாய்மைக்குத்தான் எவ்வளவு சக்தி. உங்களுக்கு புகைப்படத் துறையில் ஆர்வம் இருக்கும் போல இருக்கிறது, எவ்வளவு தூரத்தில இருந்து என்ன கமெரா/லென்ஸ் பாவிச்சு இந்தப் படத்தை சுட்டனீங்கள்?

  • Replies 516
  • Views 65.7k
  • Created
  • Last Reply

கோமகன் உங்கள் தொடர்கதையை ஆவலாக படிப்பவர்களில் நானும் ஒருவர். நெருடிய நெருஞ்சி அருமை! மனதில் வெறுமையும், ஏக்கமும் தான் மிஞ்சி இருக்கு.

அம்மாவையும், அப்பாவையும் போய் பார்ப்பமேண்டால் கிரிஸ் மனிதன், வெள்ளை வானை நினைக்க பயமாய் இருக்கு :(:( .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை தொடருங்கோ.................

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலிருந்து வெளியேறிய பின்னர் அந்த மண்ணை இன்னமும் மிதிக்கவில்லை. கோமகன் எழுதிய மாதிரி போகும்போது ஒருவரும் அடையாளம் காணமாட்டார்கள். அத்துடன் பிறந்து வளர்ந்து வீட்டில் தலைசாய்த்துப் படுக்கும் நிலை இல்லை என்பதால் இன்னும் பல வருடங்களுக்குப் போவதாயில்லை.

கதை பகுதி என்றாலே , அலர்ஜிக் எனக்கு...நீளமா வாசிக்கணுமே எங்கிறதால!

அதால இந்த பக்கம் வாறதே குறைவு! வந்தாலும் ...இந்த பகுதில எங்கே எப்போ பதில் எழுதின்னேன்னும் நினைவிருக்காது! நெருடிய நெருஞ்சிய முழுசா படிச்சிட்டேன்!

வாசிக்குற எல்லாருமே கிட்டத்தட்ட ...ஒருவிதமான மூச்சுத்திணறலோடதான் வாசிப்பாங்க!

கோமகன் ...எல்லாரும் ஊருக்கு போய் வர்றாங்கதான்...அதை உயிரோட்டமாக பதிவு செய்ய எல்லாருக்கும் வராது! `

  • தொடங்கியவர்

யாழ்களத்தில் பெரும்பாலான பகுதிகளில் எனது கருத்தை சொல்வதில்லை.காரணம் அருமைபெருமையான தொடர்களுக்கு கருத்துக்களும் பின்னோட்டங்களும் தேவையில்லை..அது போலதான் இந்த நெருடிய நெஞ்சியும்........இந்த புகைப்படத்தை பார்த்ததும் உண்மையில் அழுதுவிட்டேன்.நன்றி கோமகன்.

அப்ப குசா போட்ட கள்ளும் இறங்கீட்டுது எண்டிறியள் :lol: :lol: . நன்றிகள் குசா :) :) .

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் , சஜீவன் , சுண்டல் , தும்பளையான் , யார்க்கவி , புலிக்குரல் , கிருபன் அறிவிலி :) :) :) .

இன்று தான் உங்களுடைய பதிவை படித்தேன். ஏற்கனவே மற்றவர்கள் சொன்னது போல், உங்கள் எழுத்துத்திறன் மெச்சப்படவேண்டியது. உங்கள் வலிகள் இந்த எழுத்து மூலம் சற்றேனும் குறையும் என்று நம்புகிறேன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

18903018927825167421156.jpg

எனக்குச் சாப்பாடைப் பாத்ததும் நாக்கில் ஊறியது. நான் ரசித்துச்

சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் . எல்லோரும் ஏதேதோ மன ஓட்டத்தில்

இயங்கிக் கொண்டிருந்தார்கள் . தங்கைச்சி பக்கத்தில் இருந்து கொண்டு ,

" நீ இப்பவும் நல்லா உறைப்புத் தின்னுவியே?"

என்று வெகுளியாகக் கேட்டாள் நான் சிரித்தேன் . எல்லோரும் சாப்பிட்டு

விட்டு முற்றத்தில் இருந்தோம் . நான் குருமண்ணில் சப்பாணி

கட்டிக்கொண்டு இருந்தேன் . அண்ணைக்கு அண்ணி வெத்திலை

பாக்குக் கொண்டு வந்து தந்தா .அண்ணி எனக்கும் பாக்கு வெத்திலையை

நீட்டினா , நான் சிரிப்புடன் வேண்டாம் என்று சொன்னேன் . நான்

பொகற்ருக்குள் இருந்த சிகரட்டை எடுத்துப் பத்தினேன் . தங்கைச்சி

என்னையே பாத்தாள் . நான் என்ன என்று அவளைக் கண்ணால்

கேட்டேன் . அவள் அண்ணையைக் கண் காட்டினாள் . எனக்குச் சிரிப்பாக

இருந்தது , இவள் இப்பிடி அண்ணைக்குப் பயப்பிடுகின்றாளே என்று .

அண்ணை போட்ட வெத்திலையால் அவரின் வாய்

சிவந்திருந்தது . அவரின் வாயைப் பார்த்து எனக்கு ஏனோ அருவருப்பாக

இருந்தது . அண்ணை என்னைப் பாத்து ,

" எனக்கும் ஒண்டு தாடாப்பா " .

" இந்தா எடு . லைற்ரர் வைச்சிருக்கிறியோ" ?

" என்னட்டை நெருகுப்பெட்டி கிடக்கு ".

" அப்ப எப்ப போறாய் " ?

20629320005768915341156.jpg

" நான் நாளைக்கு பரித்தித்துறைக்குப் போறன் . ஆனா பேந்து இங்கை வருவன் ".*

" ஏன் கேட்டனி " ?

" இல்லையடாப்பா நீங்கள் ரெண்டுபேரும் ஒருக்கா ஏழாலைக்கு எங்கடை வீட்டை வரவேணும் ".

" நான் இங்கை ரெண்டு கிழமை நிப்பன் . அப்ப வாறன் . பேந்து நான் கொழும்புக்குப் போடுவன் ".

எனக்குத் தனிமை தேவைப்பட்டது . எனது மனதில் பாமினியின் நினைவு

நிழலாடவே கேணியடிக்கு போக வெளிக்கிட்டேன் .

வெளிக்கிடும்பொழுதே கொஞ்சக்காசு எடுத்து கால்ச்சட்டைப்

பொக்கற்ருக்குள் வைத்துக் கொண்டேன் . இந்தமுறை அண்ணையின்

பிள்ளைகளும் , மனைவியின் தங்கை பிள்ளைகழும் , என்னுடன்

கூட்டுச் சேர்ந்துக் கொண்டார்கள் . நேரம் 6 மணியை நெருங்கிக்

கொண்டிருந்தது . வெய்யிலின் கடுமை குறைந்து , இதமான காத்து

வீசியது . பிள்ளைகளின் கூச்சலால் ஒழுங்கை இரண்டுபட்டது . நான்

பலவிதமான யோசனைகழுடன் அவர்களுடன் கேணியடியை நோக்கி

நடந்தேன் . மனைவியின் தங்கையின் பிள்ளைகழுக்கு

என்னைப்போல் , மைனா , காகம் , புலுனி , பூரான் , கட்டெறும்பு ,

சித்தெறும்பு , சரக்கட்டை , நெருப்பெறும்பு , முசுறு , என்று எல்லாமே

புதுமையாக இருந்தது . அவர்கள் என்னைக் கேள்வியால்

துளைத்தெடுத்தார்கள் . நானும் விளக்கிக்கொண்டே வந்தேன் . எனது

மண்டையோ வேறு இடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது . இப்ப

எப்படியும் பாமினியைச் சந்திக்கவேணும் , கேணியடிக்கு கிட்டத்தான்

பாமினியின் வீடு இருந்தது . பிள்ளைகள் முசுப்பாத்தியுடன்

முன்னேறிக்கொண்டு இருந்தார்கள் . எனது கால்கள் பாமினியின் வீட்டு

வேலியடியில் தயங்கி நின்றன . நான் ஆவலுடன்

வேலியால் எட்டிப்பார்த்தேன் . பிள்ளைகளின் சத்தத்தால் , அவள் வீட்டு

நாயும் வேலிப்பொட்டுக்கால் தனது வீரத்தை காட்டிக்

கொண்டிருந்தது . நான் பாமினி என்று அவளைக் கூப்பிட்டேன் . அவள்

வீட்டுக்குப் பின்னாலிருந்து இப்பிலிப்பில் குழையுடன் வந்தாள் .

" ஆர் கண்ணனே"?

" உள்ழுக்கை வாங்கோ "

" இல்லை நான் கேணியடிக்குப்போறன் . உனக்கு நேரமிருந்தா அங்கை வாவென் . சும்மா கதைப்பம் ".

" நான் ஒரு ஐஞ்சு நிமிசத்தில அங்கை வாறன் ".

" சரி நான் போறன் நீவா ".

20629320005768915341156.jpg

என்றபடியே கேணியடியை நோக்கி நடந்தேன். கோயிலில் பின்னேரப்

பூசைக்கு ஆயத்தங்கள் நடைபெற்ரதைக் காட்ட , மடப்பள்ளியிலிருந்து

புகை வந்து கொண்டிருந்தது .

26194722116743792015410.jpg

மாடுகள் , ஆடுகள் , எல்லாம் தரவையில்

மேச்சல் முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தன . பூமிக்கும்

கதிரவனுக்கும் விடை கொடுத்த மோதலில் ஏற்பட்ட இரத்தச்சேதாரமாக

மேகங்கள் சிவந்திருந்தன . அதனூடே கூழைக்கடாக்கள் கருமமே

கண்ணாக யூ வடிவில் செம்மணி நோக்கி வல்லசை

போய்க்கொண்டிருந்த காட்சி மனதை அள்ளியது . பிள்ளைகள் கள்ளன்

பொலிஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள் . என்னால் எவ்வளவு

யூரோக்கள் கொடுத்தும் பிரான்ஸ்சில்க் கிடைக்காத மன

அமைதியையும் , நிறைவையும் , கேணியடியில் சிகரட்புகையினூடே

பெற்ருக்கொண்டேன் . கோயில் பூசைக்கு ஒவ்வொருவராக வந்து

கொண்டிருந்தார்கள் . பலருக்கு என்னைத் தெரியததால் , எனக்கு

வசதியாகப் போய்விட்டது எனது மோனத்தவத்தைத் தொடர . பாமினி

என்னை நோக்கி வருவது தெரிந்தது . அவளின் வடிவும் , கம்பீரமும்

காலதேவனின் கோரப்பிடியால் நன்றாகவே அவளைப் புரட்டிப்

போட்டிருந்து. அவளின் தலையில் நரைமுடிகள் எட்டிப்பாத்தன .

என்னைக் கண்ட சந்தோசம் அவளின் முகத்தில் நன்றாகவே தவழ்ந்தது .

20695920006266527781156.jpg

" வா பாமினி இப்பிடி இங்காலை வந்து இரு". " கனக்க நேரம் போட்டுதோ கண்ணன் " ?

"இல்லை , உன்னோடையும் கதைச்சு கனநாள் தானே".

"இரவு சாப்பாட்டையும் முடிச்சுப்போட்டன் , பிள்ளையள் இங்கை வந்து பசி பொறுக்குதுகள் இல்லை ".

நான் கெக்கட்டம் விட்டுச் சிரித்தேன் .

" உங்கடை சிரிப்பு என்னம் மாறேல கண்ணன் , உங்களைப்ற்ரிச் சொல்லுங்கோ ".

" என்ன பாமனி நீ வன்னில நல்லா கஸ்ரப்பட்டதா

சொன்னாய் . அதேயளவு நானும் அகதிவாழ்க்கையை அனுபவிச்சன் .

கொஞ்சம் வித்தியாசமா இருந்தாலும் உள்ளுடன் ஒண்டு தான் .

ஆனா , நான் அம்மாக்கு கடைசிவரை என்னைப்பற்ரி சொல்லேல .

அம்மா இதுகளையெல்லாம் அறியாமல் போட்டா அது எனக்குச் சந்தோசம் தான் ".

"ஓம் கண்ணன் அம்மா உங்களைப்பற்ரி கதைக்கேக்க ஆளைப்

பாக்கவேணும் , அப்பிடி ஒரு சந்தோசம் அவாக்கு " . நான் சிரித்துக்

கொண்டேன் . சரி பாமினி நீ உன்னைப்பற்ரி சொல்லன் . "

நாங்கள் எல்லாம் முதல் இடப்பெயர்வில தென்மராட்சிக்குப்

போனம் . அப்ப எனக்கு இருபத்தைஞ்சு வயசு இருக்கும் . அப்பாவை

தெரியும் தானே தவறணைக்கு போகாட்டிக்கு அவருக்குச் சரிவராது .

பேந்து வன்னிக்கு , போனம் பேந்து , உங்கடை கமத்துக்கு கிட்ட

கிளிநொச்சீல இருந்தம் . அப்ப எங்கடை சீவியம் ராச வாழ்கை

கண்ணன் . இங்கை இருக்கிறதை விட சந்தோசமாய் இருந்தம் .

அப்பதான் குமரனோட வேலை செய்தவரை சந்திச்சன் . அவர் எங்கடை

நிலமையப் பாத்து கலியாணம் கட்ட கேட்டார் . நானும் ஓம் சொல்லிப்

போட்டன் , அப்ப தலைவற்ர தலைமேல எங்கடை கலியாணம்

நடந்துது . அப்பதான் எனக்குத் தெரியும் அவற்ர பவர் . நாங்கள் நல்ல

சந்தோசமாய் இருந்தம் . பிள்ளையளும் பிறந்து வளரத்

தொடங்கீட்டுதுகள் . பேந்து சண்டை தொடங்க எங்களுக்கும் பிடிச்சுது

சனி . அதுகளை சொன்னால் நெஞ்சு வெடிக்கும் கண்ணன் . அதுவும்

உச்சக் கட்டமாய் , புதுகுடியிருப்பு இடப்பெயர்வு இருக்கே அதை என்ர

வாழ்க்கைல மறக்கேலாது .அவளின் கண்கள் சிவந்து கண்கள் கலங்கி

வெளிவரத் துடித்தது . எனக்கு வலியாக இருந்தது .

" ஏன் பாமினி உன்னை கஸ்ரப் படுத்திறேனோ "?

"இல்லை கண்ணன் , என்ர மனப்பாரம் இறங்கவேணும் .

"சரி சொல்லு பாமினி நான் சிகரட் பத்தலாமோ ? உனக்குப் பிரச்சனை இல்லையோ "?

" இல்லை கண்ணன் . ஏன் இந்தபழக்கம் "?

நான் வெறுமையாகச் சிரித்தேன் .

26406022116876458668810.jpg

" நான் இந்தியாவில படிக்கேக்கை நண்பர்களோட விளையாட்டா

தொடங்கனன் . ஆனா ,பேந்து பிரானசுக்குப் போய் தனிய மனம்

வலிக்கேக்கை இது ஆதரவாப்போச்சு . ஆனா , இதை சரி எண்டு சொல்ல மாட்டன் ".

நான் சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தேன் . பாமினி தொடர்ந்தாள் ,

" கடசீல பிரச்சனை முத்தி கிளிநொச்சீலையும் இருக்கேலாமல்

போட்டுது . ரெண்டு பக்கமும் சம்பல் அடி விழுது . என்ர அவரும்

பொயின்ருக்கு போட்டார் . சனம் எல்லாம் வெளிக்கிட்டுட்டுதுகள் .

நானும் என்ர பிள்ளையளும் அம்மாவோட ஒரு இரவு வெளிக்கிட்டம் .

அந்தநேரம் ஒரு இடத்திலையும் கறன்ற் இல்லை . எல்லாரும்

இடம்மாறமல் இருக்க , ஒவ்வொராளையும் கூப்பிட்டு கூப்பிட்டு

போனம் . முன்னால பெடியள் றோட்டை கிளியர் பண்ணிக்கொண்டு

போவினம் . அதேநேரம் பின்னாலையும் பாதுக்காப்புக்கு வருவினம் .

பேந்து நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியும் தானே

கண்ணன் . எத்தினை நாள் பங்கருக்குள்ள சாப்பாடில்லாமல்

கிடந்தம் . இதுக்குள்ளை மழையால பங்கருக்குள்ளை பாம்பு , பூரான்

எண்டு வந்துட்டுது . கன சனம் இதுகளின்ர கடியாலையே

பங்கருக்குள்ளை செத்துப்போச்சு . அதுவும் கடைசீல , பாதுகாப்பு

பிரதேசத்துக்குள்ளை நாங்கள் வெள்ளை கொடியோடை போகப்பட்ட

பாடு நாய்பாடாபாடு பட்டுப்போனம் . எனக்கு இப்பவும் கடக்கரையைக்

கண்டா அங்கத்தையான் ஞாபகம் தான் வரும் ".

என்று பாமினி அழத்தொடங்கி விட்டாள் . எனக்கு மனது

கனத்தது . கடவுளே நாங்கள் என்ன பாவம் செய்தோம் ? தமிழைப்

பேசியதிற்கு இவ்வளவு கொடுமையா ? எனது மனதில் ரத்தம்

வடிந்தது . நான் பாமினியை சிறிது அழவிட்டேன் .

" பாமினி அழுகையை நிப்பாட்டு . நாங்கள் வாழப் பறந்தனாங்கள்

இதெல்லாம் ஒரு தோல்வி இல்லை , கண்ணைதுடை ".

" ஆனா கண்ணன் அவர் இருக்கிறாரோ இல்லையோ எண்டே

தெரியாமல் கிடக்கு . கடைசீல சொன்னார் , என்னை பிள்ளையளை

புதுக்குடியிருப்புக்கு கூட்டிக்கொண்டு போகச்சொல்லி , தான் அங்கை

வாறன் எண்டு இண்டைவரைக்கும் ஒண்டும் தெரியேல கண்ணன் " .

எனக்கு அவளிற்கு என்ன சொல்வதென்று தடுமாறினேன். பின்பு ஒரு

முடிவிற்கு வந்தவனாக ,

" பாமினி சொன்னா கேள் அழாதை " .

இப்பொழுது அவள் சிறிது சமாதானமானள் . அவளது கண்கள்

சிவப்பேறியிருந்தன . "

நான் ஒண்டு சொன்னா குறைஇனைக்கமாட்டியே "?

" இல்லை . என்ன ? என்னால இப்போதைக்கு இது தான் என்னால

செய்யேலும் . நீ இதை வைச்சு உன்ரை பிள்ளையள படிப்பி , என்று

சொல்லி போக்கற்றுக்குள் இருந்த பத்து ஆயிரம் ரூபா நோட்டுக்களை

பாமினியின் கையில் திணித்தேன் " .

"என்ன இது கண்ணன் ? எனக்கு வேண்டாம் ".

" இல்ல , நீ எங்கடை குடும்பத்தில ஒராள் மாதரி உன்னை இப்பிடி

என்னால விடேலாது . இது என்ர ரெலிபோன் நம்பர் நான் போய் உன்ர

பிள்ளையளின்ர படிப்புகளுக்கு ஒரு ஒழுங்குசெய்யிறன் ".

பாமினி பிள்ளையாரை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள் . எனக்குச்

சிரிப்பாக வந்தது . உண்மையில இந்தக்காசை அண்ணை கோயில்

திருப்பணிக்கு என்று குடுக்கச் சொல்லியிருந்தார் . எனக்குப் பாமினிதான்

முக்கியாமாகப்பட்டாள் . பிள்ளைகள் விளையடி முடித்து விட்டு

என்னிடம் ஓடி வந்தார்கள் , வீட்டற்குப் போவதிற்கு . நான்

கோயிலுக்குப் போக மனம் பிடிக்காமல் வீட்டிற்குப் பிள்ளைகளுடன்

தளரந்தநடையுடன் திரும்பினேன் .

தொடரும்

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன், பாமினி மாதிரி கன பேர் இருக்கினம் யாழ்பாணத்தில், என்ன செய்ய இதுதான் தற்போதைய நிலைமை எங்கட.

உங்கட படங்கள் எல்லாம் நல்லா இருக்கு, அகத்தி வீட்டில் வளர்க்க கூடாது என்பார்கள் ஏன்,?

விரைவில் அடுத்த தொடரை இணையுங்க

Quote: "அதனூடே கூழைக்கடாக்கள் கருமமே, கண்ணாக யூ வடிவில் செம்மணி நோக்கி வல்லசை போய்க்கொண்டிருந்த காட்சி மனதை அள்ளியது "

இந்த வசனம் எனக்கு ரெம்ப பிடித்த ஒன்று, பறவைகளின் உதவும் மனப்பான்மை & அவற்றின் எமது அறிவுக்கு எட்டாதா பல செயல்கள்....

பறவைகள் V வடிவத்தில் பறப்பது ஏன்?

www.jothi-kannan.blogspot.com

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

மனது கனமான பகுதி, கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெருஞ்சியின் நெருடல் வலிக்கின்றது, கோமகன்!

விட்டு விட்ட பகுதிகளை வாசித்து முடித்துவிட்டேன்,இளமைக் கால உறவுகள், நாம் இறக்கும் வரை எமது நினைவுகளை விட்டு நீங்குவதில்லை. அவற்றை இரை மீட்டும்போது, ஏற்படும் வலியிலும் ஒரு சுகமிருக்கும்! நெருஞ்சியின் தனித்துவமே அதன் முட்கள் தானே. தொடருங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா இருக்கு அண்ணா பட் எங்களால தான் வெயிட் பன்னேலாம இருக்கு சோ அடுத்த பாகத்த விரைவில் போடவும்....

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்......என்னத்தை எழுதுறது என்று புரிய இல்லை..உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் கோமகன் அண்ணா..:(

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பகுதி கொஞ்சம் கூடுதலாகவே மனதை நெருடி விட்டது.

  • தொடங்கியவர்

கோமகன், பாமினி மாதிரி கன பேர் இருக்கினம் யாழ்பாணத்தில், என்ன செய்ய இதுதான் தற்போதைய நிலைமை எங்கட.

உங்கட படங்கள் எல்லாம் நல்லா இருக்கு, அகத்தி வீட்டில் வளர்க்க கூடாது என்பார்கள் ஏன்,?

விரைவில் அடுத்த தொடரை இணையுங்க

Quote: "அதனூடே கூழைக்கடாக்கள் கருமமே, கண்ணாக யூ வடிவில் செம்மணி நோக்கி வல்லசை போய்க்கொண்டிருந்த காட்சி மனதை அள்ளியது "

இந்த வசனம் எனக்கு ரெம்ப பிடித்த ஒன்று, பறவைகளின் உதவும் மனப்பான்மை & அவற்றின் எமது அறிவுக்கு எட்டாதா பல செயல்கள்....

பறவைகள் V வடிவத்தில் பறப்பது ஏன்?

www.jothi-kannan.blogspot.com

பறவைகள் வலசையின் சூத்திரத்தை அறியத்தந்த உடையாருக்கு பத்துக் கிலோ சீனி :D :D :D

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் உடையார் புங்கையூரான் தமிழ் சிறி சுண்டல் யாயினி சஜீவன் நீங்கள் தான் எனது ஊக்கிகள் :) :) :) .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

தாயக நினைவுகள் .......நெருஞ்சி முள்ளாய் குத்துகிறது . மேலும் தொடர்க.

நெஞ்சை நெருடுடிறது!

உண்மை சம்பவத்திற்கு உயிர் கொடுக்கும் விதம் மிகவும் அழகு...தொடருங்கள் கோமகன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்

அதிகம் இழு...........................க்க்வேண்டாம் :icon_mrgreen:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் நாங்கள் உங்கள் கதைக்கு ஊக்கிகள் இல்லையா?...நானும் உங்கட‌ கதையை ஒவ்வொரு வாரமும் வாசிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கோமகன் அண்ணாவிடம் கேட்டுக் கொள்வது இதைத் தான் நீண்ட இடைவெளி விடுகிறீர்கள் போல் தெரிகிறது...எழுத தொடங்கிட்டால் அதே வேகத்தோடு எழுதீட்டால் சுலபம் என்று நினைக்கிறன்..அத்தோடு சிலவேகைளில் இரண்டு தடவைகள் ஒரே பகுதி பதியப்பட்டுவிடுகிறது அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.நான் பிழையாக சொல்ல இல்லை மேலதிக கவனம் எடுத்தால் நன்று.

  • தொடங்கியவர்

கோமகன் நாங்கள் உங்கள் கதைக்கு ஊக்கிகள் இல்லையா?...நானும் உங்கட‌ கதையை ஒவ்வொரு வாரமும் வாசிக்கிறேன்

உங்களை மறக்கேலுமே அக்கை :) :) . நீங்கள் எனக்குப் பெரிய ஊக்கி . ஆனாலும் இப்பிடி பீல் பண்ணக்கூடாது :lol: :lol: .

  • தொடங்கியவர்

நானும் கோமகன் அண்ணாவிடம் கேட்டுக் கொள்வது இதைத் தான் நீண்ட இடைவெளி விடுகிறீர்கள் போல் தெரிகிறது...எழுத தொடங்கிட்டால் அதே வேகத்தோடு எழுதீட்டால் சுலபம் என்று நினைக்கிறன்..அத்தோடு சிலவேகைளில் இரண்டு தடவைகள் ஒரே பகுதி பதியப்பட்டுவிடுகிறது அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.நான் பிழையாக சொல்ல இல்லை மேலதிக கவனம் எடுத்தால் நன்று.

உங்கள் நிலைப்பாடும் சரியே யாயினி . நாளையிலிருந்து எனக்கு ஒரு பத்து நாட்களுக்கு விடுமுறையாகையால் , இதை இழுக்காது முடிவு வரை எழுதி முடித்து விட்டு , அவ்வப்போது இணைக்கின்றேன் . நன்றிகள் :) :) .

Edited by komagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.