Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவதைகளின் தீட்டுத்துணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் ...மக்கள் போராட்டம் என்டால் என்ன? வன்னியில் மக்கள் சாகையில் அதைக் கண்டு துடித்து இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் மக்களுமே கிளர்ச்சி செய்து இருக்க வேண்டும்[எகிப்தில் நடந்த மாதிரி] ஆனால் எல்லோரும் தங்களுக்கு என்ன என்ட மாதிரி இருந்தார்கள்...ஏன் புலம் பெயர் நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் தான் தொடர்ந்து பங்களிப்பு செய்தனர்...பிரபாகரனும் புலிகளும் போராட வேணும் வெண்டால் கொண்டாட வேணும் தோற்றால் தங்களுக்கு என்ன என்ட நிலை மாறி எல்லோரும் ஒருமித்து போராடினால் ஒழிய எங்களுக்கு என்டு ஒரு நாடு கிடைப்பது கஸ்டம் என்பது தான் என் கருத்து.

என்ட கேள்வி என்ன என்டால் ஏன் எங்களால் அல்லது புலிகளாலோ போராட்டத்தை மக்கள் மயப்படுத்த முடியவில்லை?

பெருமளவிலான மக்கள் உயிரைத்தவிர மற்றதெல்லாவற்றையும் கொடுக்க தயாராக இருந்தார்கள், வெளிநாடுகளில் மட்டும் 150000 பேர் கிட்டதட்ட இருக்கிறார்கள். அக்கா அக்கா என்றால் உடனே கிடைக்க சுதந்திரம் என்ன சுக்க மிளகா?

  • Replies 150
  • Views 17.8k
  • Created
  • Last Reply

புலிகள் மக்களை விட ஆயுதத்தையே நம்பினார்கள்.மக்களை வாயடக்க வைக்கவும் அதே ஆயுதம்தான் பயன் பட்டது.

சரியோ பிழையோ ஈ.பீயும்,புளொட்டும் தான் மக்கள் அமைப்புக.ளை ஆரம்பத்தில் கட்டதொடங்கியவை.காந்தியம் ஆரம்பத்தில் எவ்வளவோ நல்லவிடயங்களை செய்து வந்தது.ஆயுத மோகம் அனைத்தையும் கவிட்டுகொட்டிவிட்டது.இது ஆரம்பத்திற்கு மட்டுமே பொருந்தும்.ஜ்யரின் பதிவுகளையும், இப்போ நேசன் ரயாகரனின் தமிழரங்கதில் எழுதுவதையும் வாசித்தால் பல ஆரம்ப நிலைப்பாடுகள் விள்ங்கும்.

அப்பதிவுகள் எதுவும் பொய்யல்ல,பல கற்பனைகளுடன் தான் எமது ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது.நடைமுறையில் பல விடயங்கள் சாத்தியமில்லாமல் போய்விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாய இராணுவச்சேர்ப்பு என்பது எல்லா நாடுகளிற்கும் பொதுவானது என்றுதான் தமிழ் தேசிய இராணுவத்திற்கு ஆள்பிடிச்ச வரதராஜபெருமாளும் சொன்னவர். அவர் சொன்னதும் சரிதான் போலை.

உங்கடை வரதராஜப்பெருமாள் பெரிய போராட்ட செம்மல். மக்களை அரசபடைகளுக்கு சேர்த்தவர்.பிரபாகரனும் அப்படியோ செய்தவர்?

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கத்தைய நாடுகளின் கட்டாய இராணுசேவைக்கும் புலிகளின் பிள்ளை பிடித்தலுக்கும் முடிச்சு போடுபவனை எத்தனை தூசணத்தால் பேசினாலும் தகும்.

யோவ் கேள்வி கேட்டால் பதிலை எழுதுங்கள்.கோடிப்பக்கத்தில் மூ***ரம் அடித்துக்கொண்டு தண்ணி அடிக்கிறது. தூசணம் வராமல் செந்தமிழோ உந்த வாயுக்கு வரும். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சொன்னது மாதிhபி புலிகள் தங்களை இராணுவரீதியில் பலப்படுத்துவதில தான் அக்கறை காட்டீனார்களே தவிர அரசியல் ரீதியில் மக்களோடு மக்களாக இருப்பதில் இந்திய இராணுவகாலத்திற்கு பிறகு தள்ளியே நிண்டார்கள்....

இந்திய இராணுவ காலத்தில் எல்லாம் புலிகள் கேட்காமலே பல உதவிகளை மக்கள் வழங்கி இருந்தார்கள்...பல போரளிகளை தங்கள் உயிரிகளை விட நினைத்து பாதுகாத்தார்கள்....

விடுதலைப்புலிகளிடன் அரசியல் பிரிவு இருந்ததே தவிர அந்த பிரிவின் தலைவர்கள் யாருமே மக்களை கவர்ந்த தலைவர்களாக இருக்கவில்லை..தீலீபனை தவிர..........

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது புலிகள் இயக்கத்திற்கு ஏற்ப்பட்ட பின்னைடைவு தீடீரென அனைத்துலக செயலகத்திலே ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்....பல அணுபவம் மிக்கவர்கள் எல்லாம ஒதுக்கபட்டு புதியவர்கள் இளையர்கள் பலர் உள்வாங்கப்பட்டிருந்தார்கள் இங்கே இளையர்களுடன் அணுவாம் மிக்கவர்களையும் வைத்திருந்தால் வளங்கள்களில் இருந்து எல்லாமே ஒரளவுக்காவது நிறைவு செய்யபட்டிருக்கும் என்று பலர் சொல்லிகேள்விப்படிருக்கிறேன்...இதில் உண்மை எது பொய் எது என்று nதிரியவல்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கத்தைய நாடுகளின் கட்டாய இராணுசேவைக்கும் புலிகளின் பிள்ளை பிடித்தலுக்கும் முடிச்சு போடுபவனை எத்தனை தூசணத்தால் பேசினாலும் தகும்.

புலிகளின் பெயரால்.. போராட்டத்தின் பெயரால்.. அகதி என்று.. ஆட் கடத்தல் ஏஜென்சிக்கு காசு கொடுத்து உலகமெல்லாம் சட்ட விரோதமா குடியேறி அகதி என்று அந்தஸ்து வாங்க நாங்க பட்ட பாட்டை.. கொஞ்சம் போராட்டத்தின் பால் காட்டி இருந்தால்.. மேற்கத்தைய நாடுகள் கட்டாயப்படுத்திய அளவுக்கு கூட கட்டாயப்படுத்தல் தேவைப்பட்டிருக்காது பெரியவரே. தூசணத்தை நீங்களே உங்களோட ஒட்டி வைச்சுக் கொண்டு.. அடுத்தவனை நோக்கி அதை சொல்ல என்ன யோக்கியதை உங்களுக்கு இருக்குது.. என்பதையும் சிந்திச்சு பாருங்கோ பெரியவரே. :D

முள்ளிவாய்க்காலோட.. நிறைய போதி மர புத்தர்களையும் சிங்களம் உருவாக்கி இருக்கிறது. அந்த போதனைகள் யாழை கவிதை.. கதை.. கட்டுரை வடிவில் வந்து சேர்வது ஒன்றும் ஆச்சரியமில்லை. (இவர்களில் அநேகர்.. முள்ளிவாய்க்காலில் கடைசி வரை நின்றனான்.. என்கின்ற.... சிங்கள புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள்.)

சித்தார்த்தன் என்ற குடும்பஸ்தன்.. போகியாகி.. யோகியாகி.. ஞானியாக.. அவர் கண்ட ஒரு கிழவனின் மரணம் ஏற்படுத்திய பயமே காரணமானது. மரணத்துக்கு பயப்பிடுறவன் சிங்களவனிடம் எப்போதோ தோற்றுவிட்டான். அவனிடம் இப்படியான ஞானோதயமே பிறக்கும்.. அது புத்தனுக்கே (யாழ் புத்தனல்ல.. நிஜ புத்தன்) உதவாத ஞானோதயம்..! (புத்தர் எவ்வளவோ கஸ்டப்பட்டு ஞானம் பெற்றும் சிரஞ்சீவியாக வாழ முடியவில்லை. ஆனால் அவர் ஞானம் பெற்ற இடமான போதி மரம்.. சாதாரண மரமாக இருந்த போது பெற்ற சிறப்பு இன்றும் விளங்குகிறது.) போதி மரத்துக்கு மட்டுமே பெருமை சேர்க்கும்..! இனத்துக்கு எதனையும் பெற்றுத் தராது. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மக்களை விட ஆயுதத்தையே நம்பினார்கள்.மக்களை வாயடக்க வைக்கவும் அதே ஆயுதம்தான் பயன் பட்டது.

சரியோ பிழையோ ஈ.பீயும்,புளொட்டும் தான் மக்கள் அமைப்புக.ளை ஆரம்பத்தில் கட்டதொடங்கியவை.காந்தியம் ஆரம்பத்தில் எவ்வளவோ நல்லவிடயங்களை செய்து வந்தது.ஆயுத மோகம் அனைத்தையும் கவிட்டுகொட்டிவிட்டது.இது ஆரம்பத்திற்கு மட்டுமே பொருந்தும்.ஜ்யரின் பதிவுகளையும், இப்போ நேசன் ரயாகரனின் தமிழரங்கதில் எழுதுவதையும் வாசித்தால் பல ஆரம்ப நிலைப்பாடுகள் விள்ங்கும்.

அப்பதிவுகள் எதுவும் பொய்யல்ல,பல கற்பனைகளுடன் தான் எமது ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது.நடைமுறையில் பல விடயங்கள் சாத்தியமில்லாமல் போய்விட்டன.

ஈபி மக்கள் அமைப்பு. ஏனெனில் குடியிருக்கும் இடத்தில் இருக்கும் அங்கம் பக்க பெட்டையளுக்கு வாழ்வு கொடுத்ததால்.

புளொட் மக்கள் அமைப்பு. ஏனெனில்.. குடியிருக்கும் இடத்தில் சோத்துப் பாசலோடு பெட்டையளையும் அமுக்கிக் கொண்டு ஓடியதால்.

இந்த இரண்டு அமைப்புக்களும் தமிழீழம் என்ற இலக்கை எப்படி அடைய முற்பட்டன.. என்பதை தாங்கள் விபரித்தால் நன்றாக இருக்கும். இவை எல்லாம் ஆயுதத்தை நம்பாமல் தானாக்கும்.. ஒட்டுக் குழாயில மோட்டர் செய்து அது வெடிச்சு செத்தவை. மற்றவை.. பெரிய கப்பலில ஆயுதம் கொண்டு வந்து இந்திரா அம்மையாரட்டா பத்திரமா கையளிச்சவை. அதோட அவை தமிழீழம் கண்டிட்டினம்.

உங்கட காமடி.. வடிவேலின்ர காமடியை விட நல்லா இருக்கே. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ரதி சொன்னது மாதிhபி புலிகள் தங்களை இராணுவரீதியில் பலப்படுத்துவதில தான் அக்கறை காட்டீனார்களே தவிர அரசியல் ரீதியில் மக்களோடு மக்களாக இருப்பதில் இந்திய இராணுவகாலத்திற்கு பிறகு தள்ளியே நிண்டார்கள்....

இந்திய இராணுவ காலத்தில் எல்லாம் புலிகள் கேட்காமலே பல உதவிகளை மக்கள் வழங்கி இருந்தார்கள்...பல போரளிகளை தங்கள் உயிரிகளை விட நினைத்து பாதுகாத்தார்கள்....

விடுதலைப்புலிகளிடன் அரசியல் பிரிவு இருந்ததே தவிர அந்த பிரிவின் தலைவர்கள் யாருமே மக்களை கவர்ந்த தலைவர்களாக இருக்கவில்லை..தீலீபனை தவிர..........

மாடு ஒன்று நோயினால் செத்துப் போச்சாம்...

நபர் 1: நல்ல பங்கிறச்சி இருக்கு ஆளுக்கு கிலோ 5 ரூபா என்றாராம்.

நபர் 2: நல்ல தோல் இருக்கு காய வைச்சால் நல்லா சம்பாதிக்களாம் என்றாராம்.

நபர் 3: மாமரத்துக்கு பசளையா போட்டு வைச்சா நல்லா காய்க்கும் என்றாராம்.

நபர் 4: எரிச்சு விட்டால் போச்சு.. மற்ற மாடுகள் சாகாது என்றாராம்.

இப்படித்தான்... புலிகளின் இராணுவ ரீதியான தோல்விக்கு காரணம் எங்கோ இருக்க... நம்மவர்கள்.. அவரவர் தகுதிக்கு சிந்தனைக்கு காழ்ப்புணர்ச்சிக்கு ஏற்ப.. அதற்கு கற்பிதம் வழங்கிக் கொண்டிருக்கினம். இது ஒன்றும் புதிதல்ல. 1987 - 90 நடுப்பகுதி வரையும் இதை தான் செய்தவை. அப்புறம் புலி காட்டுக்குள்ளால வெளிக்கிட்ட போது.. அட இவங்கள் எப்படிடா வளர்ந்தாங்க.. பிரேமதாச வளர்த்துட்டாண்டா என்று துண்டைக் காணம் துணியக் காணம் என்று ஓடி ஒரிசா.. ராஜஸ்தானில தான் போய் நிண்டவை.. கண பேர். பிறகு.. புலி பிரேமதாசவோடும் சண்டை போட..வாயடைச்சுப் போனவை.. மாற்றுக் கருத்தென்று கத்திக் குளறிக் கொண்டு.. அப்படியே.. கனடா.. பிரான்ஸ்..டென்மார்க்க.. லண்டன்.. இத்தாலி என்று ஓடி வந்து செற்றிலும் ஆகி.. இப்ப பிள்ளை குட்டியோட சுகமா இருக்கினம். இவை கண்டதெல்லாம் கதைக்கிறதில மட்டும் இப்பவும் நல்ல தெளிவா இருக்கினம். நீங்களும் இவையை நம்பிக் கொண்டு கதை கேளுங்கோ..! :D

இவை தமிழ் மக்களுக்கு செய்தெல்லாம்.. மக்கள் மத்தியில் குழப்பம் விளைவித்து போராட்டத்தை எவ்வளவுக்கு பலவீனப்படுத்தி எதிரிக்கு சாதமான சூழலை ஏற்படுத்த முடியுமோ.. அதைத் தான். இப்பவும் அதையே செய்து கொண்டிருக்கினம்.

புலிகளின் இராணுவ ரீதியான தோல்விக்கான விடை.. சிறீலங்காவின் கொலைக்களம்.. சனல் 4 காணொளியில்.. தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு பக்க அதி உச்ச சர்வதேச பலப் பிரயோகத்தோடு நடத்தப்பட்ட இனப்படுகொலையின் பால்பட்ட இராணுவ நடவடிக்கை.. புலிகளின் சிறிய இராணுவ அமைப்பை.. சீரழிந்தது. அது ஒன்றும் பெரிய அதிசயம் கிடையாது.

விடுதலைப்புலிகளின் இராணுவ சம பலம் என்பது சிறீலங்காவினதோடு மட்டுமே இருந்தது.. சர்வதேசத்தினதோடு அல்ல..! மக்கள் இதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மிகப் பெரிய இராணுவ பலப் பிரயோகத்தின் முன்.. இறுதி வரை இலட்சியத்துக்காக போராடி உயிர் விட்ட அந்த மறவர்கள் மீது நம்பிக்கை இழந்த விதமாக கருத்துப் பகிர்வது கூட அபந்தமானது. உண்மைகள் எங்கோ இருக்க... நாம்.. இன்னும்.. காலடியில் குழி தோண்டி நமக்கு நாமே குழி பறிக்கும் வேலையையே வெகு கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறோம். இதனால் எமக்கு விளையப் போகும் நன்மை...???! எதுவுமே இல்லை. இன அழிவைத் தவிர. :unsure::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவை சொல்லுற விமர்சனங்களையும் கொன்ஞம் கேப்பமன் அண்ணா றொம்ப பீல் பன்னிறாங்கல்லா ஒன்டையும் கேட்காம தான் இப்பிடி நடந்திட்டிதுன்னு....இப்ப உதாரணத்தக்கு நம்மட அர்ஜீன் அண்ணா தேம்பி தேம்பி அழுறார்.....தாங்க சொன்னத மட்டும் கேட்டிருந்தா..கேட்டிருந்தா............................

மிச்சத்த அவரே சொல்லுவார்........

உவர் அர்ஜீன் அரசியல் காமடி. யாழ் வடிவேல். :lol::D

உவை தாங்களே தங்கட சொல் கேட்டதில்ல. புளொட்டுக்குள்ள இருந்த புடுங்குப்பாடுகளால தான் அது சிதைந்து போனது. ஈபி அப்படி. பத்மநாபா.. டக்கிளஸ் சண்டை. அப்புறம்.. வரதராஜப் பெருமாள்.. சுரேஸ் பிரேமச்சந்திரன் சண்டை.. இதைத் தவிர இவர்கள் இன விடிவுக்காக செய்தது என்ன. கோட்டைக்குள்ளால ஆமி வெளிக்கிட.. சக்கை அடிக்கக் கூட வக்கில்லாம.. ரீயூசனுக்கு போற பெட்டையளுக்கு துவக்கக் காட்டிக் கொண்டு.. லுக்கு விட்டது தான் மிச்சம். இவைக்கு என்ன தகுதி இருக்குது.. அனுபவம் இருக்குது.. அடுத்தவனுக்கு புத்திமதி சொல்ல.

புளொட் காரர்... இன்று யார் தலைமையில் என்ன அரசியல் இலட்சியத்தோட இருக்கினம்...???! என்ன இலட்சியத்தோட இருந்தவை...??! அதற்கு என்ன செய்தவை..??! ஏன் இலட்சியத்தின் பால் ஒரே இலக்கோடு இருந்த புலிகளை எதிர்த்தவை.. இதற்கு எந்தப் பதிலும் கிடையாது... உந்த அர்ஜீன்.. காமடியனிடம்.

வெறும் சப்பைக் கட்டுகள் தான் அவர்களிடம் குவியலாக கிடக்குது. இதைப் பற்றி எனிக் கதைச்சும் பிரயோசனமும் இல்ல. இவர்களின் இந்த அபந்தமான குற்றச்சாட்டுகளுக்காகவே.. தலைவர் 1990, 1997/8 மற்றும் 2001 இல் இவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து தமிழீழ இலட்சியத்தின் பால் உறுதியோட இருக்கிறவை ஒரே அமைப்பாக புலிகள் அமைப்போடு இணைந்து போராடுங்கோ என்று அழைச்சவர். அப்ப கூட.. ஒன்றிணைய வக்கில்லாத இந்த ஜென்மங்கள்.. இப்போ.. நீலிக் கண்ணீர் வடிப்பது.. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான். இவர்களே எமது அழிவுக்கான பிரதானிகள். மன்னிக்கப்பட முடியாத கொடியவர்கள். எதிரியை விட மோசமானவர்கள் இந்த மக்கள் விரோத துரோகிகள்.

விமர்சனம்... ஜனநாயக எதிர்க்கட்சி என்பது வேறு..! காழ்ப்புணர்ச்சியில்.. தனிப்பட்ட பாதிப்புக்களின் பால் உதிர்க்கும் வெறுப்பியல் கருத்துக்கள்.. சிந்தனையற்ற தான்றோன்றித் தனக் கருத்துக்கள் எல்லாம் இன்று மாற்றுக் கருத்து வேடம் போட்டுக் கொண்டு.. எம்மைச் சுற்றி எம்மையே பலவீனமாக்கும் நோக்கில்.. பரப்பி விடப்படுகின்றன.. காசு பார்க்கும் வாய்ப்போடும் உலா வருகின்றன. இவையும் நாம் முள்ளிவாய்க்காலில் வீழ ஒரு காரணம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அர்ஜீன் அண்ணா வந்து சொல்லுவார்...1980 களில் இப்பிடி தான் நாங்கள் தேனியில் தேனி குடிக்கேக்க புலிகள் இளநீர் குடிக்க கூட தென்னமரத்தில ஏறதெரியாமல் இருந்தவங்கள்...நாங்கள் தான் பிறகு புடுங்கி குடுத்தானங்கள்.....கம்பத்தில காக்கா சுடேக்க புலிகளிட்ட சுவக்கு கூட இருக்கேல்ல நாங்கள் தான் துவக்கு குடுத்து அத கையால பிடிக்கவே பழக்கினாங்கள் அப்பிடி இருக்கேக்க எப்பிடி புலிகள் எங்கள தடைசெய்யலாம் என்டு........

அவரிடம் உள்ளதே ஒரே ஒரு சி டி தான். அதை வைச்சு சுழற்றோ சுழற்றெண்டு சுழற்றி காமடி பண்ணிக்கிட்டு திரியுறார். அதுவும் இத்துப் போன 35 வருட கால பழைய சிடி. உதுகள் இன்னும் அந்தக் காலத்திலயே இருக்கிற ஜென்மங்கள். தாங்களும் சிந்திக்காதுகள்.. சிந்திக்கிறவனையும் விடாதுகள். உவையள் அப்பவும் அடிபட்டவை தான் யார் பெரிசு.. யார் முதலில தமிழீழம் எடுக்கிறதென்று. அப்புறம்.. எவன் எந்தப் பெட்டையை கவ்விறது.. என்று சண்டை பிடிச்சாங்கள். தமிழீழம் என்பது அவையைப் பொறுத்தவரை எல்லாம் வாயால தான்.. முடிஞ்சதே தவிர உளமார அவைக்கு அப்படி ஒன்றைப் பெற ஒரு தேவையும் இருக்கேல்ல. ஏன்னா.. சோத்துப் பாசலும் பெட்டையும் ஒழுங்கா கிடைக்க.. அண்ணமார் கொள்கையை மறந்திட்டு.. பெண்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கிறம் என்று சுருதி மாத்திக் கொண்டு.. கொழுப்பெடுத்து பெட்டையளோட மிணக்கட்டதுதான் மிச்சம். :lol::D

இப்ப கூட தங்கட தமிழீழ கழகங்கள்.. தமிழீழ விடுதலை முன்னணிகள்.. தமிழீழம் எடுக்கல்லையே என்ற கவலை இல்ல.. புலிகளால தமிழீழம் எடுக்க முடியாமல் செய்திட்டமே என்றது தான் அவைக்கு பெரிய பெருமை. இப்படியான சொந்தச் சரக்கில்லாத ஜென்மங்கள்.. எம் மத்தியிலும் போராட என்று வெளிக்கிட்டு காட்டிக் கொடுப்பாளர்களாக மாறினதுதான் அதை மக்கள் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாமல் விட்டு வைச்சது தான் இத்தனை துயருக்கும் காரணமும் கூட. இன்னும் தமிழீழம் அமையாததற்கும் காரணம். உதுகள் தோன்றி இராவிட்டால்.. புலிகள் மட்டுமே தோன்றி இருந்தால்.. இப்ப தென் சூடானை தமிழீழம் வாழ்த்திக் கொண்டிருக்கும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அர்ஜீன் அண்ணா வந்து சொல்லுவார்...1980 களில் இப்பிடி தான் நாங்கள் தேனியில் தேனி குடிக்கேக்க புலிகள் இளநீர் குடிக்க கூட தென்னமரத்தில ஏறதெரியாமல் இருந்தவங்கள்...நாங்கள் தான் பிறகு புடுங்கி குடுத்தானங்கள்.....கம்பத்தில காக்கா சுடேக்க புலிகளிட்ட சுவக்கு கூட இருக்கேல்ல நாங்கள் தான் துவக்கு குடுத்து அத கையால பிடிக்கவே பழக்கினாங்கள் அப்பிடி இருக்கேக்க எப்பிடி புலிகள் எங்கள தடைசெய்யலாம் என்டு........

போதாதற்கு தமிழரின் வரலாற்றை தேனி, தேசத்தில் வாசிக்கட்டாம்.என்னே மண்டுப்புத்தி இந்தாளுக்கு?.புளட் எனும் சாக்கடைக்குள் இருந்து உந்த ஆள் செத்தாலும் வெளியில் வராது.அது மட்டுமா தேனி என்ற பேர் எப்படி வந்தது என்பது ஒருவருக்கும் தெரியாதாம்.தனக்கு தெரியுமாம் என்று பெரிய சிதம்பர ரகசியத்தை போட்டுடைத்து போட்டாராம்.தேனி ஒரு தளம்.அதற்கு ஒரு கொள்கை விளக்கம். எத்தனை பேரய்யா கிளம்பி இருக்கிறீங்க??.

நுணா.. வரலாறு தெரியாமல் கதைக்க வேண்டாம்..! :D

புளொட் உன்னத கொள்கைகொண்ட ஒரு இயக்கம்..! வாழ்நாள் முழுக்க சோத்துப்பாசல்.. (கவனிக்க: மக்களுக்கு சோத்துச் செலவு மட்டும் தான்.. :rolleyes: ) பிறகு ஒரே அடி.. 24 மணித்தியாலத்தில தமிழீழம்.. (கவனிக்க: மக்கள் சேதம் அறவே இல்லை..) இடையில பெண்டு பிடித்தல், கல்யாணம் கச்சேரி எக்செட்ரா.. எக்செட்ரா.. :rolleyes:

இதைவிட நல்லதொரு கொள்கை கொண்ட இயக்கம் எங்கை இருக்கு..? :D

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களாக உணர்ந்து போராட்ட போக வேண்டும் அவர்கள் தான் உண்மையாக போராடுவார்கள்,எதிர்த்து நிற்பார்கள்,எதிர் நீச்சல் போடுவார்கள்...பலவந்தமாக பிடிக்கப்பட்டு கொண்டு போகப்படுவர்களில் அந்த உணர்வு இருக்காது...அவர்கள் எப்பவும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே முயல்வார்கள் அது அவர்களது பிழையும் அல்ல.

முள்ளிவாய்க்காலில் எல்லாம் சென்றிகளில் இப்படி பலவந்தமாக பிடித்தவர்களை விட்டதால் தான் ஆமி முன்னரங்குகளில் இலகுவாக முன்னேறி வந்து விட்டான்...புலிகளிலும் பிழை இல்லை அவர்களும் போராட ஆட்கள் இல்லா விட்டால் என்ன தான் செய்வார்கள்?...புலிகள் செய்த பிழை போராட்டத்தை மக்கள் மயப்படுத்தாதது தான் என்பது என் கருத்து.

எப்படி மக்கள் மய படுத்தியிருக்க வேண்டும்?

என்றும் எழுதினால் எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் நீக்கபடலாம் .............. குறைந்தபட்சம் சுட்டிகாட்டவாவது படலாம்.

புலிகள் மக்களை விட ஆயுதத்தையே நம்பினார்கள்.மக்களை வாயடக்க வைக்கவும் அதே ஆயுதம்தான் பயன் பட்டது.

சரியோ பிழையோ ஈ.பீயும்,புளொட்டும் தான் மக்கள் அமைப்புக.ளை ஆரம்பத்தில் கட்டதொடங்கியவை.காந்தியம் ஆரம்பத்தில் எவ்வளவோ நல்லவிடயங்களை செய்து வந்தது.ஆயுத மோகம் அனைத்தையும் கவிட்டுகொட்டிவிட்டது.இது ஆரம்பத்திற்கு மட்டுமே பொருந்தும்.ஜ்யரின் பதிவுகளையும், இப்போ நேசன் ரயாகரனின் தமிழரங்கதில் எழுதுவதையும் வாசித்தால் பல ஆரம்ப நிலைப்பாடுகள் விள்ங்கும்.

அப்பதிவுகள் எதுவும் பொய்யல்ல,பல கற்பனைகளுடன் தான் எமது ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது.நடைமுறையில் பல விடயங்கள் சாத்தியமில்லாமல் போய்விட்டன.

தமிழர்கழுக்காக போராட வெளிக்கிட்டால் இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல................

மக்களை நம்பினால் நடுரோட்டுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போராடியிருந்தாலும் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தேயிருக்கும்....1971 ஜெ.வி.பினரின் போராட்டமும் தோல்வியை தழுவியது .அதற்கும் இந்தியாதான் சிறிமாவுக்கு உதவிசெய்தது.

இலங்கை மற்றும் இந்தியாவில் யார் போராடினாலும் அது பயங்கரவாதம்தான்..மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் போராடியிருந்தால் என்ன,மக்கள் போராடியிருந்தால் என்ன முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தேயிருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட நல்லதொரு கொள்கை கொண்ட இயக்கம் எங்கை இருக்கு..? :D

"யாருக்கு" நல்ல இயக்கம் என்று கேட்டால் இது அர்த்தமுள்ள கேள்வி! <_<

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் காரர்... இன்று யார் தலைமையில் என்ன அரசியல் இலட்சியத்தோட இருக்கினம்...???! என்ன இலட்சியத்தோட இருந்தவை...??! அதற்கு என்ன செய்தவை..??! ஏன் இலட்சியத்தின் பால் ஒரே இலக்கோடு இருந்த புலிகளை எதிர்த்தவை.. இதற்கு எந்தப் பதிலும் கிடையாது... உந்த அர்ஜீன்.. காமடியனிடம்.

என்றாலும் இப்பிடி நீங்கள் வஞ்சகம் சொல்லக் கூடாது. அண்மையில லும்பன் ஆற்றிய ஒரு உரையில தங்கள் தலைவர்களுக்கு வெளிப்படையாக அஞ்சலி செய்யக் கூடிய பல இயக்கங்களில் ஒன்றாக புளொட் இருக்குதாம் என்று பெருமிதம் கொண்டாராம். புளொட் வவுனியாவில வீர மக்கள் தினம் கொண்டாடேக்க நானும் பார்த்தன். உமா மகேஸ்வரன் படத்துக்கு வைக்கிற பூச்சாடியக் கூட அவர்கள் மக்களிடம் இருந்து பலவந்தமாகப் பறித்துக் கொண்டு போய் தான் வைக்கிறார்கள். இது "மக்கள் மயம்" இல்லை என்றால் வேறெது மக்கள் மயம்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பதில் சொல்லமுடியாத கேள்விகளுக்கு தலைப்பின் திசையை மாற்றுவது வழமைதானே. கட்டாய ஆள்சேர்ப்பு நடந்த காலத்தில் ஊரில் நாம் இருக்கவில்லையே என்று சந்தோஷம்தான் இருந்தது.

யோ கர்ணனின் புத்தகைத்தை நானும் வாசித்தேன் , அங்கே நடந்தவற்றை ஆளமான பார்வை இன்றி ,மேலோட்டமான நக்கல் கலந்த நடையோடு எழுதி இருந்தார்.புலிகள் சர்வதேசம் வகுத்த திட்டத்துக்குள் ஏன் போனார்கள்? சர்வதேசம் போராட்டத்தை இல்லாது ஒழிப்பதற்கான இராணுவ நெருக்குதலைச் செய்கிறது என்று தெரிந்தும், அதே சர்வதேசத்திடம் கருணை காருண்யம் என்பவற்றை எவ்வாறு எதிர்பார்த்தனர்.அமெரிக்கா முதல் நோர்வே வரை சர்வதேசத்தை நெறிப்படுத்தியது இந்திய ஆளும் கும்ப்பல் என்பதை ஏன் அறியாது இருந்தனர்? இவை தான் ஆளமாகப் பார்க்கும் எவருக்கும் எழக்கூடிய கேள்விகள்? இறுதி வரை சுருங்கும் நிலப்பகுதிக்குள் செல்வதால் பெரும் இழப்புக்களைத் தவிர்க்கலாம் என்று ஏன் நினைத்தனர்? இவ்வளவு இழப்புக்களும் ஏற்படுவதை அறிந்தும் ஏன் சர்வதேசம் பார்த்துக் கொண்டு இருந்தது?

இவற்றிற்கெல்லாம் விடை ஒன்று தான் புலிகள் சர்வதேச புவிசார் அரசியலைப் புரிந்து கொள்ளமுடியாதபடி அவர்களை சிலர் தவறான தந்திரோபாயத்தில் வழி நடாத்தி உள்ளனர் என்பதே.புலிகளின் போராட்டம் சரியானது அவர்களின் அரசியல் சரியானது ஆனால் தந்திரோபாயம் அல்லது முலோபாயம் பிழையான கருதுகோள்களின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருந்தது.அதனைச் சரியாக வழி நாடாத்தி இருக்கக் கூடியவர்கள் புலிகளின் வழிகாட்டிகளாக இருக்கவைல்லை.இது சமாதான காலத்தில் நிகழ்ந்த ஒரு ஊடுருவலாக இருக்கலாம்.முழு உண்மைகளும் ஒரு நாள் வரத்தான் செய்யும்.ஆனால் இங்கு அர்ஜூன் சொல்லும் காரணங்களுக்காக புலிகள் தோற்க்கவில்லை என்பது இதுவரை வெளியாகிய தகவல்களில் இருந்து நாங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி மக்கள் மய படுத்தியிருக்க வேண்டும்?

என்றும் எழுதினால் எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் நீக்கபடலாம் .............. குறைந்தபட்சம் சுட்டிகாட்டவாவது படலாம்.

இ.கலைஞனும்,சித்தனும் அது பற்றி மேலே எழுதியுள்ளார்கள்...வன்னியில் உள்ள மக்களுக்கும் சரி,ஈழத்தில் உள்ள மக்களுக்கும் சரி ஏன் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு கூட நாடு வேண்டும் ஆனால் நாங்கள் நேரடியாய் களத்தில் இறங்க மாட்டோம் வேண்டுமானால் புலம் பெயர் மக்கள் காசை மட்டும் இங்கிருந்து அனுப்பி விட்டு[காசும் இங்கேயிருந்து கஸ்டப்பட்டு உழைத்து தான் அனுப்புகிறோம் இல்லை என சொல்லவில்லை.] ஆனால் இங்கேயிருந்து காசு அனுப்புவதும் அங்கே களத்தில் நேரடியாக சண்டை பிடித்து உயிரைக் கொடுப்பதும் ஒன்டா? இல்லைத் தானே!

புலிகள் போராட வெளிக்கிட்டதால் தானே அதைக் காரணம் காட்டி நான்,நீங்கள் உட்பட அநேகமானோர் புலம் பெயர்ந்தோம் 1)அப்படி புலம் பெயர விட்டு இருக்க கூடாது 2)அப்படி புலம் பெயருவோரது குடும்பத்தில் இருந்து கடைசி ஒருவராவது இயக்கத்திற்குப் போய் இருக்க வேண்டும்.

போராட்டமானாது நாங்களாகவே உணர்ந்து ஒரு உணர்வு ரீதியாக போராடி இருக்க வேண்டும்...எங்கள் மக்கள் நாளும் கொல்லப்படுகிறார்கள்,எங்கள் சொந்த நிலங்கள் பறி போகின்றது அதைத் தடுக்க ஈழத்தில் ஆர்ப்பாட்டங்கள்,எழுச்சிகள்,கண்டனப் பேரணிகள் என செய்திருக்கலாம் குறைந்த பட்சம் முள்ளி வாய்க்காலில் புலிகள் ஒரு பக்கத்தில் சண்டை பிடிக்க மற்ற பக்கத்தில் உள்ள மக்கள் இப்படி செய்திருந்தால் சர்வதேசத்தை ஈர்த்திருக்கும்[அதை முன் நின்று செய்கிற கொஞ்ச மக்கள் கொல்லப்படுவார்கள் தான் இல்லை என்று இல்லை ஆனால் முன் நின்று நடத்தி தங்கள் உயிரைக் கொடுக்க ஒருவருமே தயார் இல்லை என்பது தான் உண்மை]..போராட்டத்தில் புலிகள் மட்டும் தான் தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டும் என்ட நிலை மாற வேண்டும்.

துனிசியாவில்ஒரு தனி மனிதன் தற்கொலை செய்ததால் அந்த எப்படி ஒரு சடுதியான மாற்றத்திற்கு உள்ளானது?...அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் சாகவில்லையா? செத்தவர்கள் தானே ஏன் அவர்களுக்கு உள்ள உணர்வு,ஒற்றுமை எங்களுக்கு இல்லாமல் போனது?...எகிப்து,சூடான்,லிபியா போன்ற நாடுகளிலும் மக்கள் போராட்டம் நடந்தது தானே இல்லையா?...புலி அழிந்து விட்டது என்றும்,தலைவர் இறந்து விட்டார் என்றும் சொல்கிறார்கள் இவ்வளவு நாளும் எங்களுக்காக போராடியவர்கள் தற்போது இல்லை என்பது ஏன் எங்களை தாக்கவில்லை?...இதற்கு பிறகு தான் என்னும் ஆக்ரோசமாய் வீதியில் இறங்கி இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

என்ட கருத்து சரி என நான் வாதிடவில்லை அது தப்பாகவும் இருக்கலாம் ஆனால் என் மனதில் பட்டதை சொன்னேன்...என் கருத்து யார் மனதையாவது நோகடித்து இருந்தால் மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்

துனிசியாவில் யாரோ ஒரு வியாபாரம் செய்யும் இளைஞன் கொல்லப்பட்டதிலிருந்து தீப்பொறியாய் கிழம்பியது போராட்டம் துனிசியா அரசும் போலிஸ் இராணுவம் என இறக்கி மிரட்டியது சுட்டது விமானங்களால் மிரட்டியது பலர் உயிரை கொடுத்தார்கள்.பேஸ் புக்கும் ருவிற்ரும் மக்களை ஒன்றிணைத்தது. நாளிற்கு நாள் மக்கள் போராட்டம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.இறுதியில் அரசு பணிந்தது. ஆனால் ஒரு அரசையே நடாத்திய புலிகள் மொத்தமாய் அழிக்கப்பட்டபொழுதும். ஒரு எதிர்ப்பைககூட அரசிற்கு மக்கள் காட்டவில்லை மாறாக கோயில்களில் காவடியெடுத்தனர். அதனைத்தான் இலங்கையரசு சர்வதேசத்திற்;கு காட்டியது புலிகளின் இழப்பை மக்கள் வரவேற்கிறார்கள் என்றது. இயக்கம் பிடிச்சுடும் என்கிற பயத்தில் 12....13 வயது பிள்ளைகளிற்கு திருமணம் செய்து பால்ய திருமணம் செய்த கற்காலத்திற்கு போயிருந்தது எமது இனம். அதுமட்டுமல்ல இந்திய படை காலத்தில் போகிறவர்கள் போகலாம். என்னுடன் நிற்பவர்கள் நிக்கலாம் ஓடுறவனை வைத்து போராட்டத்தை நடத்த முடியாது என தீரக்கமான சொன்ன புலிகளின் தலைமை. புலிகளின் பயிற்சி என்றாலே கடினமானது அதற்கு தாக்கு பிடித்தவர்கள் எதற்கும் அஞசமாட்டாகள் என்கிற நிலைமையை தலைகீழாக்கி கடைசியில் 12...13 வயது காரர்களையும் கட்டாயமாக பிடித்து இரண்டு கிழைமை பயிற்சி மட்டும் கொடுத்து சுடபழக்கிவிட்டு களத்தில் விட்ட சம்பவங்கள்.என்னவென்று சொல்வது. எல்லாமே புலிகள் அமைப்பானது சர்வதேசம் பேச்சுவார்த்தை மேசையில் சமஉரிமை கொடுத்ததை தவறாக புரிந்து தமது அனைத்து செயற்பாடுகளிற்கும் சம உரிமை கிடைத்துவிட்டதாக நினைத்தது. அதனை பாலசிங்கம் அண்ணர் எடுத்து சொன்னதும் அவரையே பேச்சுவார்த்தை குழுவில் இருந்து நீக்கியது நிறுவனமயமாக்கல் என்று அனைத்து பழைய கட்டமைபுக்கள் அனைத்தையும் கலைத்து கஸ்ரோ தலைமையில் ஒன்றாக இணைத்தது. இன்னமும் சொல்லலாம்

சாத்திரி "தலைமைச் செயலகம்" ஆட்கள் மாதிரிக் கதைக்கின்றீர்கள் <_<

புலிகள் மீது வைக்கப்படும் விமர்சனம் நியாயமாக தமிழ் மக்கள் மீது தானே வைக்கப்பட வேண்டும்.இனிப் புலிகள் இல்லை இனி மக்கள் தாமாகவே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள்.மக்கள் போராட்டம் மக்கள் போராட்டம் என்று புலத்தில் இருந்து கூவியவர்கள் எல்லாம் ஏன் இன்னும் களம் இறங்கி மக்களுக்குத் தலமை தாங்கவில்லை? காரணம் இன்று முற்றிலும் இராணுவ முற்றுகைக்குள் போராட்டத்திற்கான எந்த வெளியும் இல்லை என்பதே உண்மை.மக்களின் போராட்டங்களை வெளிக் கொணர ஊடகங்கள் இல்லை.அப்படி இருந்தாலும் தமிழ் மக்கள் மட்டும் போராடி சிறிலங்கா அரசு முடக்கப்படப் போவதில்லை.சிங்களப் பேரினவாதம் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் வரை அங்கே சிங்கள அரசே ஆட்ச்சியில் இருக்க முடியும்.பாரிய பொருளாதரத் தாக்கம் இன்றி சிங்கள மக்கள் அரசுக்கு எதிராகத் திரும்பப் போவதில்லை.மேற்குலகு பொருளாதாரத் தடைகளை உண்டு பண்ணினால் ஏற்றுமதிகள் சுற்றுலாத் துறைகள் பாதிப்பு அடையலாம்.அதற்க்கு நாம் தான் வேலை செய்ய வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.