Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உமாவுடனான சில நினைவுப்பதிவுகள்(அரசியல் தாண்டிய)

Featured Replies

84 மே வடபழனி முதல் சந்திப்பு. வானொலியில் செய்திகள் கேட்டுக்கொண்டிருந்தவர் கலோ சொன்னதுடன் டெல்கியில் சில வேலைகள் இருக்கு போக முடியுமோ என கேட்டார்.இனி எதுவாயினும் உங்கள் விருப்பம் என் பதில்.ஒரு இரண்டு கிழமை இங்கு நின்று முகாம்களையும் பார்த்துவிட்டு போகலாம் என்றார்.

இரண்டாம் சந்திப்பு ஒரு 3 மாதங்கள் கடந்து- நானும்,உமாவும்,வெற்றியும் என்பதால் நெருங்கி பழக முடிந்தது.என்னை ஒரு சிறுவனைபோலே கருதித்தான் பழகினார்.எனது பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை பொன்னம்பலம்,சுப்பிரமணியம் இப்படி வாய்க்கு வந்த பெயரில் கூப்பிடுவார்.சில இடங்கள் தனிய ஆட்டோவில் செல்ல நேரிட்டதால் இடைவெளி நல்லாக குறைந்துவிட்டது.ஜேர்மனில் இருந்து பரமாவும் வந்திருந்ததால் இரவு 2,3 மணிக்கு தான் நித்திரைக்கு செல்வோம்.பழைய கதைகளை அப்பாவிடம் கேட்பதுபோல் ஆவலுடன் கேட்பேன்.முடிந்தவரை சொல்லுவார்.மற்றைய இயக்க தலைவர்கள் பற்றிய அபிப்பிராயத்தையும் கேட்டேன்.அதைவிட ஸ்போட்ஸ்பற்றியும் கதைப்போம்.பகலில் சில வேளை கரம் விளையாடுவோம்.தோற்பதை விரும்பாதவராக இருந்தார்.

3 ஆம் சந்திப்பு-உமா,சித்தர்,வாசுவும் வந்திருந்தார்கள் திம்பு போவதற்கு. எல்லோருமே கொஞ்சம் பிசியாக இருந்தோம்.மற்றைய இயக்கத்தவர்கள் கொட்டலில் நின்றார்கள்.புலிகள் தனித்து ஒரு கொட்டல்.புலிகளை சந்திக்க பல நிருபர்களால் முடியவுல்லை.எங்களது நம்பருக்கே பலர் அடித்து எங்கே எனக் கேட்டார்கள்.ஒரு நிருபர் தான் அடித்து ரன் ஜித்தில் நிற்பதாக சொன்னார்.உமா சொன்னார் உம்மை பார்க்க மலையாளி மாதிரி இருக்கு மலையாளமனோரமா பத்திரிகையாளர் என்று சொல்லி ஒருக்கா போய் பார்த்துவிட்டுவாரும் என்றார்

  • Replies 70
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே உமா மகேஸ்வரன்.. எந்தெந்த நடிகைகளோட உரசிக்கிட்டு திரிந்தார் என்பதையும் விலாவாரியா சொன்னா.. உங்கள் உமா புகழ்பாடும் கைங்கரியம் உலகில்... புகழின் உச்சிக்கு போயிடும். :lol::D

ஐயோ அர்ஜீன் அண்ணா.. என்ன இந்த அற்புதமான தங்கள் பதிவுக்கு 3 பச்சை புள்ளி விழுந்திருக்கனுமே. ஓ... 3 தான் ஒரு நாளைக்கு போடலாமில்ல. நாளைக்கு 3 விழும்..! அது நீங்களே உங்களுக்கு அளிக்கும் நல்ல அங்கீகாரம். மக்கள் அங்கீகாரம்.. எதற்கு உங்களுக்கு..! அது தான் நமக்கு சரிப்பட்டு வராத சமாச்சாரமாச்சே. மக்களை விட்டு எவ்வளவு விலத்தி இருக்கிறமோ.. அவ்வளவுக்கு அவ்வளவு அது நல்லது. அது போல.. புலிகளையும் மக்களை விட்டு விலத்தி வைக்கிறதே.. நாங்க எங்கட சிங்கள.. இந்திய எஜமானர்களுக்கு செய்யுற நன்றிக்கடன். இல்லையா பின்ன..! :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

4 ம் சந்திப்பு- சில வெளிநாடுகளுக்கு செல்ல வந்திருந்தார்.என்னை சென்னையில் ஒரு பாடசாலை தொடங்கி சமூக விஞ்ஞானம் படிப்பிக்கின்றோம்.நீரும் போமென்றார்.கொம்மினுயிஸ்ட் பாட்டிகளின் உதவியுடன் சிலரை ரஸ்யா,ருமேனியா,பல்கேரியா அனுப்பமுயற்சிப்பதாகவும்சொன்னார்.

சென்னையில் பல தடவை, நடை தூரத்தில் தான் இருந்தார்.சந்திக்காமல் விட்டதும் நடந்தது.

1- திலீபனின் அண்ணர் பழைய நண்பர் பார்க்க தேடிப்போனேன்.படம் பார்க்க போகலாம் வா என அழைத்தார்கள்.முதல் படம்.கீதாஞ்சலி.பார்த்துவிட்டு அவர்களுடனேயே படுத்துவிட்டேன்.உமா கிருஸ்ணனுடன் தேடிவந்திருக்கின்றார்.விடிய போன் செய்ய சொல்லி போய்விட்டார்.

2.இந்த முறையும் என்னுடன் லண்டனில் இருந்து வந்தவர் லான்டுக்கு போவதற்கு வழி அனுப்பபோனேன்.வந்தி திரும்பி போய் அடுத்த முறை சந்திக்கும் போது வீட்டிலேயே நிற்பதில்லை போலிருக்கு என்று கேட்டார்.நான் நடந்ததை சொன்னேன்.அப்படியென்றால் தான் ஒவ்வொரு நாளும் அல்லோ போகவேணும் என்று சொன்னார்.அடுத்த நாள் ஒரு கடிதம் வந்தது உடைத்தால்"எனது பெயரைப் போட்டு "நீர் எனது கட்டுப்பாட்டுக்குள் நேரடியாக வேலை செய்கின்றீர்.எவரும் என்னை கேள்வி கேட்க முடியாது"என கையொப்பம் முத்திரையுடன் இருந்தது.

தொடரும் இன்னமும் நிர்வாகம் அனுமதித்தால்.

  • தொடங்கியவர்

நெடுக்ஸின் கருத்து பற்றி-

இம்முறை ஜெயமோகன் கனடாவந்தபோது சொன்ன ஒரு கருத்து .தான் சந்திக்கும் இலங்கை தமிழர்களெல்லாம் தமிழ்நாடு என்றவுடன் சினிமா என்பதுபோலவும் சென்னை போய் இறங்கினால் நடிகர்,நடிகைகள் கால்களில் தட்டுப்படுவார்கள் என்ற எண்ணத்திலேயே இருக்கின்றார்கள்.

தமிழ்நாட்ட்டின் சிறப்பே அதன் அங்கு இருக்கும் கிராமங்களின் அழகும்,பாரம்பரியமும்,கோவில்களும்,இப்மட்டும் பற்றிபடி எத்தனையோ இருக்க ஒரு சிறிய பங்கு வகிக்கும் சினிமாவை பற்றி மட்டும் கனவு காணுகின்றார்கள் என்றார்.

இனி திங்கள் திரும்ப வந்துதான் மிகுதி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி

தொடர்ந்து எழுதுங்கள்

அத்துடன் தனிப்பட்ட சந்திப்புக்கள் தவிர்த்து பொது மக்களுக்கு தெரிந்தவைகளை எழுதினால்தான் நாம் எமக்கு தெரிந்ததை சரி பார்க்கமுடியும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பொது மக்களுக்கு தெரிந்தவைகளை எழுதினால்தான் நாம் எமக்கு தெரிந்ததை சரி பார்க்கமுடியும்.

சித்திர குப்தன் வேலையோ! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சித்திர குப்தன் வேலையோ! :rolleyes:

அவர் எழுதியதில் ஏதாவது தங்களுக்கு புரிந்ததா கிருபன்.....? :(:(:(:(

திரியை ஆரம்பித்தமைக்கு அர்ஜுனுக்கு ஒரு பச்சை...

கொஞ்சம் தெளிவாக எழுதினால் நல்லது...

Edited by நிழலி

ஓ... 3 தான் ஒரு நாளைக்கு போடலாமில்ல. நாளைக்கு 3 விழும்..! அது நீங்களே உங்களுக்கு அளிக்கும் நல்ல அங்கீகாரம். மக்கள் அங்கீகாரம்..

யாழ் கள செட்டிங் படி, ஒருவர் ஒரு திரிக்கு, ஒரே ஐடியில் ஒரு முறைதான் பச்சை குத்த முடியும். இன்று ஒரே ஐடியில் போட்டு விட்டு நாளை மீண்டும் அதே ஐடியில் வந்து போட முடியாது

அத்துடன் யாழ் கள புலனாய்வுப் பொறுப்பாளர் என்ற முறையில் (இது தயா ஒரு முறை எனக்கு சூட்டிய பெயர் :D ) அர்ஜுனுக்கு குருவி கிருவி என்று ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிகள் இல்லை என்பதே தட்போதைக்கான நிலைவரம்.

Edited by நிழலி

யாழ் கள செட்டிங் படி, ஒருவர் ஒரு திரிக்கு, ஒரே ஐடியில் ஒரு முறைதான் பச்சை குத்த முடியும். இன்று ஒரே ஐடியில் போட்டு விட்டு நாளை மீண்டும் அதே ஐடியில் வந்து போட முடியாது

அத்துடன் யாழ் கள புலனாய்வுப் பொறுப்பாளர் என்ற முறையில் (இது தயா ஒரு முறை எனக்கு சூட்டிய பெயர் :D ) அர்ஜுனுக்கு குருவி கிருவி என்று ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிகள் இல்லை என்பதே தட்போதைக்கான நிலைவரம்.

ஒரு கணனியில் இருந்து இரண்டு பெயர்களில் பதிவு செய்திருந்தால் தான் அது புலனாய்வுப் பொறுப்பாளருக்குத் தெரிய வாய்ப்புகள் உண்டு. அதே நபர் தனது மடிக் கணனியிலும் (அல்லது வேலையிடத்தில் இருக்கும் கணனியில்) வேறு ஒரு பெயரை பதிவி செய்து, அதாவது தான் எழுதும் கருத்துகளுக்கு பச்சைப் புள்ளி இடவே அந்த பெயரைப் பாவிக்கலாம் அல்லவா? செய்ய நினைத்தால் செய்யலாம்! :rolleyes: அது புலனாய்வுப் பொறுப்பாளருக்குத் தெரிய வாய்ப்பே இல்லை!! இந்த சந்தேகம் எனக்கும் தோன்றியது, அதை வேறு சில திரிகளில் 'தனக்குத் தானே முதுகில் தட்டிக் கொண்டு இருக்க வேண்டியது தான் என்று' சுட்டிக் காட்டியுமுள்ளேன். காரணம் அவர் பதியும் பெரும்பாலான பதிவுகளுக்கு உடனே இரண்டு, மூன்று பச்சைப் புள்ளிகள் விழுவதை அவதானித்தேன்.

ஒரு கணனியில் இருந்து இரண்டு பெயர்களில் பதிவு செய்திருந்தால் தான் அது புலனாய்வுப் பொறுப்பாளருக்குத் தெரிய வாய்ப்புகள் உண்டு. அதே நபர் தனது மடிக் கணனியிலும் (அல்லது வேலையிடத்தில் இருக்கும் கணனியில்) வேறு ஒரு பெயரை பதிவி செய்து, அதாவது தான் எழுதும் கருத்துகளுக்கு பச்சைப் புள்ளி இடவே அந்த பெயரைப் பாவிக்கலாம் அல்லவா? செய்ய நினைத்தால் செய்யலாம்! :rolleyes: அது புலனாய்வுப் பொறுப்பாளருக்குத் தெரிய வாய்ப்பே இல்லை!! இந்த சந்தேகம் எனக்கும் தோன்றியது, அதை வேறு சில திரிகளில் 'தனக்குத் தானே முதுகில் தட்டிக் கொண்டு இருக்க வேண்டியது தான் என்று' சுட்டிக் காட்டியுமுள்ளேன். காரணம் அவர் பதியும் பெரும்பாலான பதிவுகளுக்கு உடனே இரண்டு, மூன்று பச்சைப் புள்ளிகள் விழுவதை அவதானித்தேன்.

ஓக்கே... என் புலனாய்வு பிரிவில் உங்களை ஆலோசகராக நியமிக்க விரும்புகின்றேன் ...எப்படி வசந்தி...இல்லை வசதி?

ஓக்கே... என் புலனாய்வு பிரிவில் உங்களை ஆலோசகராக நியமிக்க விரும்புகின்றேன் ...எப்படி வசந்தி...இல்லை வசதி?

நான் எழுதியதில் ஏதும் பிழை இருந்தால் சொல்லுங்கோ... :) மற்றும் படி எனக்கு பதவியாசை எல்லாம் இல்லிங்.. :D:)

  • கருத்துக்கள உறவுகள்

----

அத்துடன் யாழ் கள புலனாய்வுப் பொறுப்பாளர் என்ற முறையில் (இது தயா ஒரு முறை எனக்கு சூட்டிய பெயர் :D ) அர்ஜுனுக்கு குருவி கிருவி என்று ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிகள் இல்லை என்பதே தட்போதைக்கான நிலைவரம்.

நிழலி, உங்கடை வெட்டுத் தாங்கேலாமால் தான்,,, தயா யாழ் களத்தை விட்டே... ஓடிப் போனவர் எண்டு கதை அடி படுகுது..

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை இயக்கங்களளின் தலைவர்களில் உமபமகேஸ்வரன் ஒரு தனிப்பெரும் தலைவர் அவரைபற்றிய உண்மைகளை தெரிந்தவர்கள இதுவரை எழுதியதில்லை. அவரைபற்றி முழுமையாக தெரிந்தவர்கள் ஏதோ ஒரு விதமாக அவருடைய செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாகவே அவர்கள் ஒரு குற்றஉணர்வுடன் அதை தவிhத்து வருகிறார்கள். இப்போது உண்மைக்காகவும் அரிச்சந்திரன் வாழ்ந்தான் என்ற வரிகளை பாட புத்தகங்களில் அகற்றி வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று அச்சிடுவது பற்றி கல்விதுறையையே கலந்தாலோசிக்க வைத்திருக்கும் அர்ஜீன் அவர்கள்தான் முதன் முதலில் எழுத தொடங்கியிருக்கிறார் வரேவேற்க வேண்டிய ஒரு விடயம் பாராட்டுக்கள்.

தனது சொந்த இயக்க போராளிகளையே சுட்டு புதைத்தவர் திருவாளர் உமாமகேஸ்வரன் அவர்கள் மலையகத்தில் தோன்டிய புதைகளிகளின் கதைகள் புளட்டை சார்ந்தவர்கள் மட்டிலுமே தங்கிநிற்கிறது தமது இயக்க இரகசியம் என்று திருவாளரை போட்டு தள்ளிவிட்டு இப்போதும் மௌனமாக இருக்கிறார்கள். புலிகளோடு இணைந்திருந்து ஊர்மிளாவோடு கசமுசா செய்து பல போராளிகளால் வெறுக்கபட்ட போதும் பிரபாகரன் அவர்கள் அவரை மன்னித்து போகும்படி பணித்தார். பிரபாகரனே அவரை பாதுகாப்பா ஈழத்திற்கும் அனுப்பி வைத்தார் அப்படியே வவுனியா வந்துசேர்ந்தவர் பிரபாகரனுக்கு ஒரு இயக்கம் என்றால் எனக்கும் ஒரு இயக்கம் என்று உருவாக்கியதே புளட் ஆகும். அதில் துர்ரதிஸ்டவசமாக சில நல்லவர்களும் சோந்துகொண்டு தமக்கு தாமே புதைகுழி கிண்டினார்கள். மற்றையபடி தண்ணியடிக்கலாம் ஓசியிலே சிகரட் பீடி அடிக்கலாம் என்று சேர்ந்தவர்கள்தான் பெரும்பாண்மை. இளைஞர்களை சேர்த்து தனியாக விடுவதா என்று நினைத்தார்களோ தெரியாது பெண்களையும் சேர்த்து இந்தியாவிற்கு அழைத்து சென்று எந்த முன் ஏற்பாடும் இல்லாது கொண்டு சென்ற பெண்களை அனாதைகளாக விட்டார்கள் அப்படி விட்டவர்களை பின்பு புலிகள் அழைத்துவந்து அடேல் அன்ரன் பாலசிங்கம் அவருடன் தங்கவைத்துவிட்டு என்ன செய்வது என்று சிந்தித்தே பின்பு மகளிர் படையணியையும் உருவாக்கலாம் என்று ஒரு கட்டமைப்பை உருவாக்கி சோதியாவின் தலமையில் ஒரு படையணியை சுதந்திர பறவைகள் எனும் பெயரில் உருவாக்கினார்கள். இதன் ஆரம்ப கால உறுப்பினர்கள் 80வீதமானவர்கள் ஈப்பி புளட் போன்ற இயக்கங்களால் சேர்க்கபட்டு இந்தியாவில் கைவிடபட்ட பெண்களே.

ஆரம்ப காலத்தில் புலிகள் ஒரு கலண்டர் அடித்துவிட்டார்கள் அதில் ஒரு படத்தில் முதன் முதலாக கண்ணிவெடி வைத்து பிரட்டிய செயின்புளக் இருக்கும் அதில் ஐந்து பெண்போராளிகள் துப்பாக்கிகளுடன் நிற்பார்கள் அதை எல்லோருமே பாhத்திருப்பீர்கள் அந்த படத்தில் இருக்கும் ஒருவர் இப்போது கனடாவில் இருக்கிறார் அவர் புளட் இயக்கத்திலே சேர்ந்து இந்தியாவிற்கு அழைத்து செல்லபட்டார் பயிற்சி முடிந்து வரும்போது சுதந்திர பறiவாயக வந்திருந்தார்.

அவருடைய தற்போதைய படமும் அந்த கலண்டர் படமும் என்னிடம் உள்ளது அவருடைய தனிபட்ட வாழ்வை ஏன் வெளிகொணர வேண்டும்?

இப்படி உமா பற்றி புழுக சொறி எழுத பல உண்டு பாலஸ்தீனத்திற்கு பயிற்சி என்று அனுப்பி பல போராளிகளை சிதைத்த கiயையும் சும்மா தொட்டும் தொடாமலும் எழுதினீர்கள் என்றால் நன்று. ஏன் எனெனில் அப்படி சிதைந்த ஒருவரும் இந்த யாழ்கள்தில் உறுப்பினராக இருக்கிறார் வாசித்து பாழைய ஞபகங்களை பெறுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கலகட்டத்தில்...

ஊர்மிளா என்னும் பெண்ணுடன் ஐந்து போராளிகளின் படத்தைஉம் போட்டு...

தமிழீழத்தின் முதல் முத்திரை என்று மார்க் கணக்கில் அள்ளினார்கள்.

அர்ஜுன், ... உம் முன்னால் தோழர் எப்பவும் சொல்வது போல் ... மூலையும், கருவியும் இணைந்தே இருந்திருந்தால் ... இன்று சுதந்திர காற்றை எம்மக்கள் சுவாசித்திருப்பார்கள்!!!!! ....

நிழலி, உங்கடை வெட்டுத் தாங்கேலாமால் தான்,,, தயா யாழ் களத்தை விட்டே... ஓடிப் போனவர் எண்டு கதை அடி படுகுது..

தயா கொசுக்கடிக்கெல்லாம் பயந்தவர் இல்லை....அஞ்சா நெஞ்சச் சிங்கம் அவர் :D

  • கருத்துக்கள உறவுகள்

தயா கொசுக்கடிக்கெல்லாம் பயந்தவர் இல்லை....அஞ்சா நெஞ்சச் சிங்கம் அவர் :D

ஆகா...

செய்யுறதையும்.... செய்து போட்டு.... :lol:

எவ்வளவு பெரிய தன்னடக்கம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்

இந்தியா சென்ற எமது உறுப்பினர்கள் முதலில் மதுரைக்குச் சென்று மதுரையில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர், செஞ்சி ராமச்சந்திரனின் உதவியுடன் எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு ஏனையோரும் தங்கியிருந்தனர். அங்கு (திராவிடர் கழகம்) தி.க விலிருந்த பலர் எமது இயக்கத்திற்கு அறிமுகமாகின்றனர். தமிழ்த் தேசியம் என்பது தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களுடன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. திராவிடக் கொள்கையின் மறு முகம் தமிழ்த் தேசியமாக அமைந்திருந்தது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இது திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியாகக் கூடச் செயற்பட்டது. திராவிடக் கொள்கையின் தலித்தியக் கூறுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த பொதுத் தளமும் இருந்ததில்லை. ஆனால் எம்மைப் பொதுவாக அவர்கள் சமூகப் போராளிகளாகவே கருதினர். பல திராவிட இயக்கத் தொண்டர்கள் எம்மோடு இணைந்துகொள்ள விரும்பினர்.

 

எமது உறுப்பினர்கள் தங்கியிருந்தது செஞ்சி ராமச்சந்திரனின் விடுதி என்பதால் அங்கு அனைவரும் தங்கியிருக்க வசதியீனம் காணப்பட்டதால் தண்டையார்பேட்டையில் ஒரு வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். பூபதி என்ற சேலத்தைச் சேர்ந்த எமது ஆதரவாளர் மூலம் அந்தவீடு வாடகைக்கு அமர்த்திக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் எம்.எல்.ஏ விடுதியிலும் வாடகை வீட்டிலும் மாறி மாறித் தங்கியிருக்க ஆரம்பித்தனர்.

1979 இன் ஆரம்பக் காலப்பகுதியில் நடந்த இச்சம்பவங்கள் குறித்த தகவல்களைப் பெரும்பாலும் இலங்கையிலிருந்த எனக்கு கடித மூலமும் நேரடிச்சந்திப்புகள் மூலமும் தெரிவித்துக்கொள்வார்கள். அப்போது தமிழ் மன்னன் என்ற சென்னைத் தமிழர் ஒருவர் எமக்கு நிறைய உதவிகள் செய்வார்.தவிர மேகநாதன் என்ற தமிழ் உணர்வாளரும், தி.கவின் உறுப்பினருமான ஒருவர் முழு நேர ஊழியராக எமது இயக்கத்தில் இணைந்து கொண்டார் சில காலங்களில் வீரமணி என்ற ஒருவரும் இந்தியாவிலிருந்து பகுதி நேரமாக எம்மோடு இணைந்துகொண்டார்.

உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கவும் ,தேடப்படுபவர்கள் இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி வரவும் இருப்பிடத்திற்கான தேவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தஞ்சாவூரிலும் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொள்கின்றனர். ஈழத்திற்கு தேவையான தளபாடங்களைச் சேர்த்து அனுப்பவும், அங்கிருந்து வருகின்றவர்களை தற்காலிகமாகத் தங்க வைப்பதற்காகவும் இந்த வீடு பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையிலிருந்து பிரபாகரனும் அவரோடு புறப்பட்ட மூவரும் சென்னையிலிருந்த தண்டையார்பேட்டை வீட்டிற்கே வந்து சேர்கின்றனர்.

அவ்வேளையில் இங்கிலாந்திலிருந்து அன்டன் பாலசிங்கம் தனது மனைவி அடேல் பாலசிங்கத்துடன் சென்னையில் எம்மைச் சந்திப்பதற்காக வந்து சேர்கிறார். அவர் வந்ததுமே புலிகளின் தலைவராகவிருந்த உமாமகேஸ்வரன் மற்றும் பிரபாகரன் உட்பட அனைவருடனும் பேசுகிறார். மார்க்சிய அரசியல் வகுப்புகளும், வெளியீடுகளும் அவசியமானவை என்று கூறுகிறார்.

பாலசிங்கம் தமிழ் நாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே துண்டுப்பிரசுரம் ஒன்றைப் புலிகளின் பேரில் நாடு முழுவதும் வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். ‘சோசலிசத் தமிழீழத்தை நோக்கி…’ என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது துண்டுப்பிரசுரம் பாலசிங்கத்தால் எழுதப்பட்டு இந்தியாவில் அச்சிடப்படுகிறது. அதன் பிரதிகள் இலங்கையில் வினியோகம் செய்யப்படுவதற்காக எனக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. துண்டுப் பிரசுரம் எமக்குக் கிடைத்ததும் நாம் வேறுபாடுகளை மறந்து புதிய உற்சாகத்துடன் செயற்பட ஆரம்பிக்கிறோம்.

இதே காலப் பகுதியில் இலங்கையில் இனவாதத்தை வெளிப்படையாகவே பேசிய சிங்கள அரசியல் வாதிகளில் இலங்கை அமைச்சர் சிறில் மத்தியூ மிகப்பிரதானமானவர்.

சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை மேலும் நஞ்சூட்டிய குறிப்பிடத்தக்க தலைவர்களில் சிறில் மத்தியூவும் ஒருவர். இவர் ‘சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுச்சி கொள்ளுங்கள்’ என்ற நூலை எழுதியவர். ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் அரசில் அரசவை அமைச்சராகப் பணிபுரிந்தவர். ‘யார் புலிகள்’ என்ற துண்டுப் பிரசுரம் 1979 இல் இவர் தபால் தலைப்புடன் அனைத்து பொது அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. ‘தமிழர்கள் இலங்கையை அழிக்க வந்தவர்கள்’ என்று வெளிப்படையாகவே பேசிவந்தவர். இவரது மகன் நத்தா மத்தியூவும் பல அமைச்சரவைப் பதவிகளை வகித்தவர் என்பதோடல்லாமல், மகிந்த ராஜபக்ச அரசில் ஊவா மாகாணத்தின் ஆளுனராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குமணன் மனோமாஸ்டர் போன்ற ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து நாமும் சிறில்மத்தியூவின் அதே தபால் தலைப்பைப் பயன்படுத்தி துண்டுப்பிரசுரத்தை அரச திணைக்களங்களுக்கும் அதன் மையங்களுக்கும் அனுப்பிவைப்பதாகத் தீர்மானித்து அவரின் இலச்சினை பொறிக்கப்பட்ட தபால் உறையை பிரசுரித்துக் கொள்கிறோம். இது அரச திணைக்களங்களுக்கு கிடைக்கும் அதே வேளை குறித்த நேரத்தின் அனைத்து வாசிக சாலைகள் பொது மையங்கள் பாடசாலைகள் போன்ற இடங்களுக்கு இருவர் கொண்ட அணிகளாகப் பிரிந்து தமிழ்ப் பகுதிகளில் வினியோகம் செய்வதற்காக பண்ணையிலிருந்தவர்களைத் தயார் செய்கிறோம்.

 

திட்டமிட்டபடி பிரசுரம் பெரியளவில் அனைத்து மட்டங்களையும் சென்றடைகிறது. ஒரு ‘அதிரடி’ நடவடிக்கை போன்று அமைந்த இந்த நிகழ்வின் பின்னர் புலிகள் குறித்து தமிழ் மக்கள் பரவலாகப் பேசிக் கொள்வதையும் அவர்களிடம் புதிய நம்பிக்கை துளிர்விட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

பிரசுரம் பரவலாகக்ச் சென்றடைந்த சில நாட்களில் அது குறித்து இலங்கை உளவுப் பிரிவு மிகுந்த அச்சம் கொள்கிறது. குறைந்தது ஆயிரம் பேர் இணைந்து திட்டமிட்டுத் தான் இப் பிரசுரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று கணிப்பிட்ட இலங்கை இரகசியப் பொலீசாரின் அறிக்கையை இலங்கையின் அனைத்து நாளிதழ்களும் பிரசுரிக்கின்றன.

சிறி லங்கா அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களும், இன அடக்கு முறையும் இராணுவ வடிவங்களாக உருவாகிக்கொண்டிருந்த வேளையில் பிரசுரம் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது.

அவ்வேளையில் முகுந்தன் (உமாமகேஸ்வரன்), நாகராஜா போன்றோர் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் உறங்குவதற்காக மட்டுமே தங்குமிடங்களுக்கு வருகின்ற அளவிற்கு மிகவும் தீவிர இயங்கு சக்திகளாகத் தொழிற்பட்டனர். உமாமகேஸ்வரன், நாகராஜா ஆகிய இருவருமே மிகுந்த அர்ப்பண உணர்வோடு செயலாற்றுபவர்கள். இவர்கள் சென்னையில் ஆரம்பித்து தமிழ் நாட்டின் பலபகுதிகளிலும் இயக்கத்தின் தேவைகளுக்கான பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அந்த வேளையில் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு உமாமகேஸ்வரனிடம் இருந்ததது.

பிரபாகரன் சென்னைக்கு வந்த பின்னர் தளத்தில் பண்ணைகளை நிர்வகிப்பதிலிருந்து அனைத்து இயக்க வேலைகளும் நான் மட்டுமே கவனிக்க வேண்டிய சுமை எனது தோளகளில் விழுகிறது. எனக்கு உதவியாக ஏனைய போராளிகளும், குறிப்பாக குமணன் மனோ மாஸ்டர் போன்றோர் ஒத்துழைக்கின்றனர். மத்திய குழு உறுப்பினர்களும் பிரபாகரனும் களத்தில் இருந்து வெளியேறியதன் சுமையை உணரக் கூடியதாக இருந்தது. தனியே முடிபுகளை மேற்கொண்டு வேலைகளைச் செய்வது இது முதல் தடவை அல்ல. ஆனால் முன்னைய சந்தர்ப்பங்களைப் போல இலகுவானதாக இருக்கவில்லை. போராளிகளதும் பண்ணைகளதும் தொகை அதிகரித்திருந்தது. அத்தோடு கூடவே புதிய பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வுகாணவேண்டிய பழுவும் அதிகமானது.

இலங்கையில் பிரபாகரன் பயிற்சி முகாமில் இருந்தவர்கள் மீது தன்மீதான அதிர்ப்தியை விட்டுச்சென்றிருந்தார். பிரபாகரனின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து பல உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புக் குரலெழுப்பினர். வீரவாகு ரகு தொடர்பான பிரசனைகளை தொடர்ந்தும் சலசலப்பிற்கு உள்ளாகியிருந்தது. இவற்றையெல்லாம் சமாதானப் படுத்தி உறுப்பினர்களை ஒழுங்கிற்குக் கொண்டுவரவேண்டிய நிலையில் நான் இருந்தேன்.

பிரபாகரன் தமிழகம் சென்றதும் இயக்கதினுள் புதிய பிரச்சனை ஒன்று தலை தூக்குகிறது. பொதுவாக அனைவரும் சென்னையில் தண்டையார் பேட்டை வீட்டில்தான் தங்கியிருப்பது வழமை. அங்கே போராளிகள் அனைவரும் இரவு நீண்ட நேரம் இயக்க நடவடிக்கைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கச் செல்வார்கள். அவ்வேளையில் ஊர்மிளாவும் அங்குதான் தங்கியிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்த பின்னர் மொட்டை மாடியில் சென்று உறங்குவார். முகுந்தனும் (உமாமகேஸ்வரன்) பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கும் வேளையில் அவரும் மொட்டைமாடிக்குச் சென்றுவிடுவார். உமாமகேஸ்வரனின் இந்த நடவடிக்கை குறித்து கலாபதிக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

பலருக்கும் உமாமகேஸ்வரன் – ஊர்மிளா குறித்த சந்தேகங்கள் நீண்டகாலமாகவே இருந்துவந்தது. உமாமகேஸ்வரன் பலஸ்தீன இராணுவப்பயிற்சிகுச் செல்கின்ற வேளையில் விமான நிலையத்தில் அவர்கள் காதலர்கள் போல நடந்துகொண்டதாக அவ்வேளையில் விமான நிலையத்திலிருந்த நாகராஜா பிரபாகரனிடம் கூறினார். நாகராஜா வழமையாகவே சந்தேகப்படும் சுபாவம் உடையவராதலால், பிரபாகரன் அவரைத் திட்டியிருக்கிறார். தவிர அவர்களுடைய உடல் மொழி குறித்து வேறு உறுப்பினர்களும் கூடப் பேசியிருக்கின்றனர். குறிப்பாக பிரபாகரனிடம் இவை குறித்து முறையிட்ட போதிலும் பிரபாகரன் முகுந்தன் மீது சந்தேகம் கொள்ளவில்லை.

இவ்வாறான சந்தேகங்கள் ஏற்கனவே பேசப்ப்ட்டதால் நாகராஜாவும் கலாபதியும் ஒரு நாள் அனைவரும் உறங்கச் சென்றபின்னர் மொட்டைமாடிக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே ஊர்மிளாவும் உமாமகேஸ்வரனும் ஒன்றாக உறங்குவதைக் கண்டிருக்கிறார்கள். மறு நாள் காலை இவர்களிருவரும் பிரபாகரனிடம் இது குறித்துக் முறையிட்டிருக்கிறார்கள்.

பின்னதாக நாகராஜாவும் பிரபாகரனும் உமாமகேஸ்வரனை அழைத்து இது தொடர்பாகக் கேட்டிருக்கிறார்கள். உமாமகேஸ்வரன் பெரிதாக எதுவும் உடனடியாகச் சொல்லவில்லையெனினும் இதுதவிர நான் வேறு ஏதாவது தவறிழைத்திருக்கிரேனா என அவர்களைக் கேட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.

உமாமகேஸ்வரனின் நடவடிக்கையும் அதற்கான பதிலும் உறுப்பினர்களிடையே பெரும் கொந்தளிப்பையும்,கோபத்தையும் ஏற்படுத்துகிறது. நாம் அனைவருமே அரசியலைத் தனிமனிதத் தூய்மைவாததிலிருந்து தன் புரிந்துகொண்டவர்கள். அதிலும் தலைமைப் பொறுப்பிலிருந்த உமாமகேஸ்வரனின் இந்தப் பதில் அவரின் உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த நடவடிக்கைகள் தூய்மையான, கட்டுக்கோப்பான இராணுவ அமைப்பை உருவாக்குவதற்கான கனவில் ஈடுபட்டிருந்த எம்மவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகுகிறது.

ஒழுக்கமான இரணுவ அமைப்பில் இவ்வாறான பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் என்பது அனுமதிக்கப்பட முடியாத குற்றமாகவே கருதினர். அதுவும் தலைமைப் பதவியிலிருக்கின்ற ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்களை மிகுந்த கோபம்கலந்த வெறுப்புடனேயே நோக்கினர்.

சில மணி நேரங்களில், ஊர்மிளாவுடன் பேசிவிட்டுத் திரும்பி வந்த உமாமகேஸ்வரன், அனைத்தையும் மறுக்கிறார்.இது தன்மீது திட்டமிட்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்று கூறுகிறார். உமாமகேஸ்வரன் சாட்சிகளுடன் கூடிய சம்பவம் ஒன்றை மறுத்த போது அது மேலும் அவர்மீதான வெறுப்புணர்விற்கு வித்திடுகிறது. பொதுவாக அங்கிருந்த அனைத்து உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனுக்கு எதிரானவர்களாக மாறுகின்றனர்.

இவ்வேளையில் முன்னர் கென்ட்பாமில் தங்கியிருந்த ரவி, இவர்களிடையேயான தொடர்பு முன்னமே அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான் என்று சொல்கிறார். தவிர, கொழும்பில் ஊர்மிளா – முகுந்தன் தொடர்பு என்பது ஓரளவு அறியப்பட்ட விடயம் தான் என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தையும் அறிந்துகொண்ட பிரபாகரனும் ஏனைய உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனைத் தலைமைப்பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கோருகின்றனர்.

சாதாரண உறுப்பினர்களுக்குப் பாலியல் தொடர்புகளிருப்பதைப் பலதடவைகள் நாங்கள் கண்டுகொள்வதில்லை. செல்லக்கிளிக்கு பெண்களுடன் தொடர்புகள் இருப்பதாக அவர் பண்ணைகளில் எம்மிடம் பல தடைவைகள் கூற முனைந்த வேளைகளில் நானும் ஏனையோரும் அதுபற்றியெல்லாம் இங்கு பேசவேண்டாம் என்று தடுத்திருக்கிறோம்.

பிரபாகரனுக்குக் கூட இது தொடர்பாகத் தெரியும். தவிர,செல்லக்கிளி மீது யாரும் கோபப்படுவதில்லை. அவரை துடிப்பான குறும்புக்கார இளைஞனாகவே அனைவரும் கருதினர். ஆக, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உமாமகேஸ்வரனை தலைமைப்பதவியிலிருந்து இறங்கி சாதாரண உறுப்பினராகச் செயற்படுமாறு கோருகின்றனர்.

அதே வேளை ஊர்மிளாவை பெருஞ்சித்தனார் வீட்டிற்கு மாற்றிவிடுகிறார்கள். உமாமகேஸ்வரன் தண்டையார்பேட்டை வீட்டிலிருந்து எம்.எல்.ஏ விடுதிக்கு மாறுகிறார். கூடவே ஏனைய உறுப்பினர்களுடனான தொடர்புகளை மட்டுப்படுத்திக் கொள்கிறார்.

இந்த வேளைகளில் அன்டன் பாலசிங்கமும் அவரது மனைவியும் சென்னையில்தான் இருக்கின்றனர். அவர் சென்னைக்கு வந்து சில நாட்களிலேயே இயக்கத்தின் தலைவராகவிருந்த உமாமகேஸ்வரனுக்கு எதிரான குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

பாலசிங்கமும் இந்தப்பிரச்சனை தொடர்பாக ஏனையோரிடம் பேசுகிறார். இந்தப் பிரச்சனையைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்பதுதான் பாலசிங்கத்தின் கருத்தாக அமைந்திருந்தது. . இவையெல்லாம் ஒரு புறத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க தமிழ் நாட்டில் உமாமகேஸ்வரனின் முரண்பாடு கூர்மையடைகிறது. தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு முன்வைத்த கோரிக்கையை அவர் நிராகரிக்கிறார்.

உமாமகேஸ்வரன் தொடர்ச்சியாக தான் அவ்வாறு எந்தத் தொடர்பையும் ஊர்மிளாவுடன் கொண்டிருக்கவில்லை என மறுக்கிறார். இறுதியில் மத்திய குழு கூட்டப்பட வேண்டும் என்றும், மத்திய குழுவின் முடிவிற்குத் தான் கட்டுப்படுவதாகவும் கூறுகிறார்.

மத்திய குழு உறுப்பினர்களில் நான் மட்டும்தான் இலங்கையில் இருந்தேன். உமாமகேஸ்வரன் என்னையும் இணைத்துத் தான் மத்தியகுழு முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக, என்னை இலங்கையிலிருந்து வரவழைத்து அதன் மத்திய குழு ஒன்று கூடலை நிகழ்த்திய பின்பே இறுதி முடிவிற்கு வருவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

http://inioru.com/?p=12680

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பிளட்டு ஈப்பீடீப்பீ நாய்ப்பீ காரங்களெல்லாம் என்னத்துக்கப்பா இப்பவும் வெளிநாடுகளிலையிருந்து புலிக்காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறியள்????

அங்கைதான் அவங்களும் இல்லை அவங்கடை மண்ணாங்கட்டியுமில்லை எண்டு உலகமே சொல்லுது......பேந்தும்...பேந்தும் இதுக்கையிருந்து உழுப்பி எடுத்துக்கொண்டிருக்கிறியள்......

முதல்லை அங்கை போய் நடக்கவேண்டிய அலுவலை பாருங்கோ?

உங்களுக்கெல்லாம் நினைவுபதிவுகள் தேவையேயில்லை.உங்கடை நினைவுகளை வவுனியாவிலை கொண்டுபோய் காட்டுங்கோ?

புலிப்படையையும் அழிச்சாச்சாம்....நாட்டுப்பிரச்சனையும் முடிஞ்சுதாம்....ஆனால் உங்கடை குண்டிமட்டும் வெளிநாட்டுதரையிலை ஒட்டிப்போச்சுதாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் நீங்கள் எழுதத்தொடங்கியது நல்ல விடயம். ஆனால் உங்கள் எழுத்துக்கள் துண்டுக் குறிப்புகள் போல இருப்பதால் படிப்பவர்களிற்கு புரிவது சிரமாக இருக்கும். முடிந்தால் விபரமாக எழுதவும்.அதே நேரம் புளொட்டில் எனக்கு நெருக்கமான நண்பர்களும் இருந்தனர். கண்ணன் வடலியடைப்பு. கண்ணன் சண்டிலிப்பாய். மென்டிஸ். சின்ன மெண்டிஸ். கொளரி ஆனந்தன சண்டிலிப்பாய்.பாபுஜி மாதகல் ..தாடிபாலா வவுனியா. நடேசன் வவுனியா.காந்தன் போன்றவர்கள். இன்னும்பலர் பெயர்கள் உடன் நினைவில் இல்லை.

அர்ஜுன்

பெரியவருடனான (நான் plote இயக்கமல்ல) சந்திப்புக்களை விபரமாக எழுதுங்கள்.

முக்கியமாக எல்லாவற்றையும் விபரமாக எழுதவும்.

எழுதுங்கள்.

முதலில் யார் இந்த உமா என்ற உமாமகேஸ்வரன் என்று ஒரு சுருக்கமான முகவுரையுடன் தொடங்கினால் எல்லா உறவுகளும் ஒரே புள்ளியில் இருந்து உள்வாங்க உதவியாய் இருக்கும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள செட்டிங் படி, ஒருவர் ஒரு திரிக்கு, ஒரே ஐடியில் ஒரு முறைதான் பச்சை குத்த முடியும். இன்று ஒரே ஐடியில் போட்டு விட்டு நாளை மீண்டும் அதே ஐடியில் வந்து போட முடியாது

அத்துடன் யாழ் கள புலனாய்வுப் பொறுப்பாளர் என்ற முறையில் (இது தயா ஒரு முறை எனக்கு சூட்டிய பெயர் :D ) அர்ஜுனுக்கு குருவி கிருவி என்று ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிகள் இல்லை என்பதே தட்போதைக்கான நிலைவரம்.

அர்ஜீனுக்கு 3 பச்சைப் புள்ளி கிரமமாக விழுகுதுன்னா.. நெடுக்காலபோவனுக்கும்.. கணணிக்கு ஒரு ஐடி என்று பல ஐடிக்கள் இருக்கலாம் தானே.. அதில் என்ன குற்றம். இதுவும் மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயமா..??! (நாங்க நண்பர்களாக.... ஒரே கணணியில் வேலை செய்பவர்களாகவும் இருக்கலாம்.. நிழலி அண்ணர்.) ஆகவே.. உங்கள் கணிப்பீடும் மீள்பார்வைக்குரியது..!! :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பிளட்டு ஈப்பீடீப்பீ நாய்ப்பீ காரங்களெல்லாம் என்னத்துக்கப்பா இப்பவும் வெளிநாடுகளிலையிருந்து புலிக்காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறியள்????

அங்கைதான் அவங்களும் இல்லை அவங்கடை மண்ணாங்கட்டியுமில்லை எண்டு உலகமே சொல்லுது......பேந்தும்...பேந்தும் இதுக்கையிருந்து உழுப்பி எடுத்துக்கொண்டிருக்கிறியள்......

முதல்லை அங்கை போய் நடக்கவேண்டிய அலுவலை பாருங்கோ?

உங்களுக்கெல்லாம் நினைவுபதிவுகள் தேவையேயில்லை.உங்கடை நினைவுகளை வவுனியாவிலை கொண்டுபோய் காட்டுங்கோ?

புலிப்படையையும் அழிச்சாச்சாம்....நாட்டுப்பிரச்சனையும் முடிஞ்சுதாம்....ஆனால் உங்கடை குண்டிமட்டும் வெளிநாட்டுதரையிலை ஒட்டிப்போச்சுதாக்கும்.

இதை மரியாதையாச் சொன்னாலும் கேக்கிறாங்களில்லை, உப்பிடிச் சொன்னாலும் கேக்கிறாங்களில்ல-தொழில மாத்த இயலாது தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.