Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்பாடுபட்டாவது புலிகளின் தலைமையை பாதுகாக்க இறுதி வரை கடுமையாக போராடினோம், மனம் திறக்கிறார் : கே.பி

Featured Replies

  • Replies 65
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உரை ஓக்கே ஆனால் நடுவில xp ஓப்பன் செய்வது கிளிக் செய்வது.. எல்லா ம் தெளிவாக தெரிகிறது போக பதில் அளிக்க கால அவகாசம் எடுத்து கொள்ளவ்து எல்லாம் டூமச்..

டிஸ்கி:

ஏனைய மற்ற சரணடைந்த போராளிகள் அனைவரையும் போட்டு தள்ளிய சிங்களம் இன்னும் இவரை உயிருடன் உலா விடுவதன் கேள்வியும் வருகிறது.. ^_^

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய மற்ற சரணடைந்த போராளிகள் அனைவரையும் போட்டு தள்ளிய சிங்களம் இன்னும் இவரை உயிருடன் உலா விடுவதன் கேள்வியும் வருகிறது..

சிறிய மீனைக் மெதுவாகக் கொ(ன்று)ண்டு பெரிய மீனை(ஈழம்) பிடித்து விழுங்கத்தான்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

துவக்கு என்றால் என்னவென்றே தெரியாத டாக்குத்தர் மூர்த்தியை ஏவுகணை வாங்குவதற்காக சி.ஜ.ஏ ஏஜெண்டுகளிடமே கஸ்ரோ அமெரிக்கா அனுப்பியதையும் விளக்கமா கே.பி யர் சொல்லியிருக்கலாம். பாவம் இப்ப மூர்தியர் அமெரிக்காவிலை கம்பி எண்ணுறார்.அதே நேரம் இந்திய அரசியல் தலைவர்களுடனான உரையாடல்களில் புலிகள் நம்பியிருந்த ஒரு தலைவர் 3 நாட்கள் தொலைபேசியை துண்டித்து வைத்திருந்தார். அவருடன் தொடர்பு முயற்சிகளை நானே மேற்கொண்டிருந்தேன்.2001 வரை நாங்கள் தேவைகளிற்கு அதிகமாகவே அனுப்பிக்கொண்டிருந்தோம். அதன் பின்னர் தேவையானதுகூட அனுப்பப்படவில்லை.

Edited by sathiri

... 10 வருடங்களாக ... புலிகளை காப்பாற்ற கேபியார் போராடிய போராட்டத்தில் ... இன்று ... தமிழ் மக்களும் ???? வந்து நிற்கின்றனர்!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி சொல்வதையும் கேட்டுக் கொள்வோம். அவர் யாரையும் இதனை நம்பச் சொல்லேல்லத் தானே..! பிறகேன்.. நாங்கள் பிடுங்குப் படுவான். நமக்கு செய்ய எவ்வளவோ இருக்குது. அதைச் செய்வம்...!

ஒன்றை அவர் தெளிவாக்கி இருக்கிறார்.. எங்களை எல்லா நாடுகளும் சேர்ந்து அடிச்சன என்பதை. பலர் குற்றம் சாட்டினவை.. தலைவர் ஒரு கிணற்றுத் தவளை.. அவருக்கு செப் 11 இற்குப் பிறகு உலகத்தில என்ன நடக்கென்றே தெரியாமல் இருந்தவர் என்று. ஆனால் வெளியில இருந்த கே பியை விட தலைவர் அதிகம் அதைப் பற்றி தெரிந்திருக்கிறார் என்பதையும்.. இப்படியே போனா உலகம் எங்களை அழிக்கும் என்பதையும் புலிகள் உணர்ந்தே இருக்கின்றனர். இதன் பின்னணியில் தான் வலிந்த தாக்குதலை புலிகள் மட்டுப்படுத்தியும் இருக்கலாம்.

எதுஎப்படியோ.. நாம் நம்பிய சர்வதேசமே தான் நம்மை அழித்தது. இவ்வளவு உயிர் அழிவுகளுக்கும் அவர்களே தான் காரணம். இன்று மீண்டும் நாம் அவர்களிடமே தான் எங்கள் மரணத்துக்கு நீதி கேட்டும் மன்றாடிக் கொண்டிருக்கிறோம். சர்வதேச அரசுகளிடம் நீதி கேட்பதை விட.. சர்வதேச மக்களின் மனச்சாட்சியை நாம் தொடும் வேளை வரும் போதே நமக்கு எனி விடிவு கிட்டும்...! அதை நோக்கியதாகவும் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.

Edited by nedukkalapoovan

இந்தநாடுகள் ஒருபோதும் நியாயமாக நடக்காது அவர்களின் சுயநல அரசியலில் நாம்தான் உலகமக்கள் மத்தியில் எமது நியாயத்தை எடுத்து ௬றி எமக்காக நாடு அடைவதற்கு வழிவகுக்கவேண்டும்.

துவக்கு என்றால் என்னவென்றே தெரியாத டாக்குத்தர் மூர்த்தியை ஏவுகணை வாங்குவதற்காக சி.ஜ.ஏ ஏஜெண்டுகளிடமே கஸ்ரோ அமெரிக்கா அனுப்பியதையும் விளக்கமா கே.பி யர் சொல்லியிருக்கலாம். பாவம் இப்ப மூர்தியர் அமெரிக்காவிலை கம்பி எண்ணுறார்.அதே நேரம் இந்திய அரசியல் தலைவர்களுடனான உரையாடல்களில் புலிகள் நம்பியிருந்த ஒரு தலைவர் 3 நாட்கள் தொலைபேசியை துண்டித்து வைத்திருந்தார். அவருடன் தொடர்பு முயற்சிகளை நானே மேற்கொண்டிருந்தேன்.2001 வரை நாங்கள் தேவைகளிற்கு அதிகமாகவே அனுப்பிக்கொண்டிருந்தோம். அதன் பின்னர் தேவையானதுகூட அனுப்பப்படவில்லை.

அந்த தலைவரின் தற்போதைய நிலைப்பாடு என்ன (முடியுமானால் மட்டும் பகிரங்கமாக அறியத்தரவும்)?

எதுஎப்படியோ.. நாம் நம்பிய சர்வதேசமே தான் நம்மை அழித்தது.

அட,

நாங்கள் எப்ப சர்வதேசத்தினை நம்பினம்? எவரும் தேவை இல்லை சொந்த காலில் நிற்போம் என்றுதானே மார் தட்டினோம்? எல்லாரும் சுயநலவாதிகள், தத்தம் சொந்த நலனுக்காகவே தலையிடுவர் ஆகவே நாம் எவருடனும் எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் எம் சொந்த காலில் நிட்பம் என்று திமிரில் நின்ற ஆட்கள் எல்லா நாங்கள்? கடைசியில் புலிகளின் இராணுவ பலத்தின் மீதான பிரமிப்பு புலிகளுக்கும் எமக்கும் தகர்ந்த பின் தானே தெரு தெருவாய் ஊர்வலம் போய் சர்வதேசமே தலையிடு என்று கூக்குரல் இட்டனாங்க!!. புலிகளை சர்வதேசம் எங்கும் தடை செய்த போது கூட பெடியளுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி என்று சும்மா இருந்து போட்டு இப்ப சர்வதேசத்தை நம்பினோம்...அவங்கள் கழுத்தறுத்து விட்டார்கள் என்று புலம்புவது சரியா

இன்று சுகன் எழுதிய கவிதைதான் நினைவில் வருது :)

எதுஎப்படியோ.. நாம் நம்பிய சர்வதேசமே தான் நம்மை அழித்தது. இவ்வளவு உயிர் அழிவுகளுக்கும் அவர்களே தான் காரணம். இன்று மீண்டும் நாம் அவர்களிடமே தான் எங்கள் மரணத்துக்கு நீதி கேட்டும் மன்றாடிக் கொண்டிருக்கிறோம். சர்வதேச அரசுகளிடம் நீதி கேட்பதை விட.. சர்வதேச மக்களின் மனச்சாட்சியை நாம் தொடும் வேளை வரும் போதே நமக்கு எனி விடிவு கிட்டும்...! அதை நோக்கியதாகவும் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.

இன்று சர்வதேசம், அதன் நலன்கள், அவர்கள் எதிர்பாரா திசையில் சென்றுகொண்டுள்ளது. இதை அண்மையில் வரும் கட்டுரைகள் காட்டி நிற்கின்றன.

மூத்த இந்தியா ஊடகவியலாளர் சாம் இராயப்பா அழகாக கூறியுள்ளார்: 'இந்தியாவின் சோனியாவின் தனிப்பட்ட யுத்தத்தை மகிந்த நடாத்தினார்' என்று. இதனால் கோட்டை விடப்பட்டது இந்தியாவின் இறைமை என்று. சீனாவுக்கு போட்டியாக தானும் 'அதை இதை கொடுக்கும் கொள்கையும்' தோற்றுள்ளதாக கூறியுள்ளார்.

இன்றி பிரபல்யம் வாய்ந்த வால் ஸ்ரீட் ஜேர்னல் கருத்து எழுதியவர் ஒரு படி மேலே போய், 'தனது அயல் வீட்டு பிரச்சனையிலே கோட்டை விட்ட ஒரு நாடு எவ்வாறு ஒரு உலக பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்டிருக்கும்?' என வினவியுள்ளார்.

ICG தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையில் 'இந்தியா இலங்கையில் செய்வது காணதது' என கூறியுள்ளது.

மாறிவரும் சூழ்நிலைகளை பயன்படுத்துவோம், எமது தார்மீக உரிமைகளை வெல்வோம்!

தன்னை நடுநிலையாளராகக் காட்டிக்கொள்ள முனையும் ஊடகவியலாளர் - அதற்கு மாறாக தனது அரைவேக்காட்டுத் தனத்தை நன்கு காட்டியுள்ளார். உதாரணமாக .....

"இப்பிடியாக வந்துகொண்டிருந்த போது 2003 ஆம் ஆண்டில் நீங்கள் வந்து இந்த வெளிநாட்டுப் பிரிவு, அல்லது வெளிநாட்டுக் கொள்வனவுப் பிரிவு, இந்த சர்வதேச தொடர்பாடல் என்பனவற்றிலிருந்து நீங்கள் புறந்தள்ளப்பட்டீர்கள் அல்லது ஒதுக்கப்பட்டீர்கள் அதுக்குக் காரணம் என்ன?" என்ற கேள்வி.

எந்தவொரு அமைப்பிலும் பல தேவைகள் கருதி மாற்றங்கள் செய்யப்படுவது இயல்பு. ஒரு சாதாரண மனிதனில் ஒரு உயர் பதவி மீது ஓட்டிகொண்டிருக்கும் மோகம், அதை இன்னொருவர் பொறுப்பெடுக்கும் போது அவர் மீது ஏற்படும் பொறாமை, மனக்கசப்பை போன்றவற்றைத் தூண்டி இருவர் இடையே பகையை வளர்க்கும் விதமாக உண்மைக்கு மாறாக (வதந்திகளை நம்பி பொறுப்பற்ற விதத்தில்) "புறந்தள்ளப்பட்டீர்கள்" போன்ற "ஒதுக்கப்பட்டீர்கள்" போன்ற பதங்களை ஒரு நடுநிலையாளர் பயன்படுத்தமாட்டார்.

இந்தமாதிரி இல்லாத ஒன்றை உருவாக்கிவிடும் அரைவேக்காட்டு ஊடகவியலாளர்களும், வதந்திகளை நம்பி பொருத்தமற்ற பதங்களை பயன்படுத்துவோரும் தமிழினத்தின் பின்னடைவுகளுக்கும், பிளவுகளுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று.

எமது பின்னடைவில் சர்வதேசமும், அதன் ஊடகவியலாளர்களும் நிறையவே பின்னிப்பிணைந்துள்ளது.

2002 ஆம் ஆண்டில் தமிழர் தரப்பு, அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னரான சர்வதேச அரசியலுக்கு முகம்கொடுத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட தொடங்கியது. இந்தியாவின் அழுத்தத்தால் மேற்குலகம் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலத்திற்கு வித்திட்டது. தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன, மக்கள் வேண்டுமென்றே ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இதை நிறுத்த புலம்பெயர் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள்.

ஆனால் எமது போராட்டம் ஒரு நியாயமான விடுதலைப்போராட்டம் எனத்தெரிந்தும் பல அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் இந்தியாவின் பாட்டுக்கு ஓப்போட்டார்கள்.

இன்று அதே ஊடகவியலாளர்கள் மெல்ல மெல்ல சிங்களத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். பார்ப்போம் எதுவரை சர்வதேசம் செல்லும் என்று.

உலகநாடுகள் தாம் என்ன செய்தன என்று அறியாமல் இதை செய்திருக்கின்றன.

1. இஸ்ரேலும் ஈரானும் இலங்கைக்கு உதவின. போரின் முடிவில் அவர்களுக்கு என்ன கிடைத்தது?

2. சோனிய தலைவர்களைக்கொல்ல பணம் கொடுத்தா. இலங்கை ஒரு பொய் உடம்பை காட்டி விட்டு மரணசான்றிதளைக் கொடுக்கவில்லை. இந்தியா என்னத்தை பெற்றது?

3. அமெரிக்கா உலகின் முதல் வல்லரசு, இலங்கை சம்பந்தமாய் ஒரு கொள்கை இன்றி அலையுது. ஏதோ பெரியதாகச் செய்வதாய் நினைதுக்கொண்டு, இலங்கையை முற்று முளுதாக சீனாவுக்கு தாரை வார்த்து கொடுத்திருக்கு. பிரிய விடிருந்தால் சீனா ஒரு பகுதியை இழக்கப்போகுது என்று கவலைப்பட்டு செய்த அலுவல் மாதிரி ஒரு அலுவல் செய்திருக்கு. இதில் அமெரிக்கவுக்கு என்ன நன்மை?

4. பாகிஸ்தானும் ரூசியாவும் கொஞ்ச பணம் சேர்தார்கள். அவர்கள் தெருவாலை போன ஒருவனை திருடன் என்று கூறி வெற்றி கண்டிருகிறார்கள்.

5. சீனா இப்போதைக்கு இலங்கையை தனது ஆளுமைக்குள் கொண்டுவந்து விட்டது. ஆனால் அதை தக்க வைத்துகொள்ள சீனா தொடர்ந்து பணம் இறைக்க வேண்டும். அதை திருப்பி கேட்டால் ஆபத்து இருக்கென்று அவர்களுக்கு நன்கு தெரியும்.

.... ஈஸ்ரேன் யூரோப்பில் இருந்து இரு கெலியை வாங்கி ... அதுவும் நண்பர்களின் கெலிகள் .... அங்கே மட்டும் ஒரே ஓட்டமாக ஓடிச் சென்று .... நீண்ட தூரம் போக வேண்டியதால், நடு வானில் பெற்றோல் அடிக்க இரு எயார் பவுசருகளையும் நிற்பாட்டி ... தலைவரையும் குடும்பத்தையும், தளபதிகளையும் காப்பாற்ற நான் பெரு முயற்சி எடுத்தேன், அதை உடனடியாக நடேசரின் சகோதரர் மூலம் நடேசருக்கும் தெரிவித்தேன் ... அங்கு சிங்கள/இந்திய/சீனத்து/மட்டுமல்லாது உலக நாட்டு விமான எதிர்ப்பு கூட்டம் நின்றிருந்தாலும் (வாங்க இருந்த கெலி, பின் லாடனை போட அமெரிக்கா பயன்படுத்திய அதி நவீனமாது) ... சுழித்து ஓட முடியும் என நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் ... கடைசி நேரத்தில் அங்கு போன் சுவிச் ஆப் ஆக இருந்ததால் நடை பெற முடியாமல் போயிட்டுது!!!!!!!!! .... இப்பவும் கேட்க கேணைகள் நம்மத்தியில் இருக்கின்றார்கள்??????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அட,

நாங்கள் எப்ப சர்வதேசத்தினை நம்பினம்? எவரும் தேவை இல்லை சொந்த காலில் நிற்போம் என்றுதானே மார் தட்டினோம்? எல்லாரும் சுயநலவாதிகள், தத்தம் சொந்த நலனுக்காகவே தலையிடுவர் ஆகவே நாம் எவருடனும் எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் எம் சொந்த காலில் நிட்பம் என்று திமிரில் நின்ற ஆட்கள் எல்லா நாங்கள்? கடைசியில் புலிகளின் இராணுவ பலத்தின் மீதான பிரமிப்பு புலிகளுக்கும் எமக்கும் தகர்ந்த பின் தானே தெரு தெருவாய் ஊர்வலம் போய் சர்வதேசமே தலையிடு என்று கூக்குரல் இட்டனாங்க!!. புலிகளை சர்வதேசம் எங்கும் தடை செய்த போது கூட பெடியளுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி என்று சும்மா இருந்து போட்டு இப்ப சர்வதேசத்தை நம்பினோம்...அவங்கள் கழுத்தறுத்து விட்டார்கள் என்று புலம்புவது சரியா

இன்று சுகன் எழுதிய கவிதைதான் நினைவில் வருது :)

சர்வதேசத்தை புலிகள் நம்பவில்லை என்றால்.. எதற்கு சர்வதேசத்தின் கண்காணிப்போடு.. போர் நிறுத்தம் செய்தனர். சர்வதேசத்தை புலிகள் நம்பவில்லை என்றால் எதற்கு சர்வதேசம் எல்லாம் ஓடி ஒரு இடைக்கால நிர்வாக சபைக்கான வரைபை உருவாக்கி சமர்ப்பித்தனர்.

விடுதலைப்புலிகள் சர்வதேசத்தை தங்களோடு நெருக்கமான நாடுகள்.. நெருக்கம் குறைந்த நாடுகள் என்று வரையறுத்துச் செயற்பட்டார்கள். புலிகள் நம்பிய நெருக்கமான நாடுகள் கூட இறுதில் அவர்களை ஏமாற்றியதையே இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.

புலிகள் அமெரிக்காவோடு நெருங்கி இருக்கவில்லை. ஆனால் நோர்வே போன்ற ஸ்கண்டிநேவியன் நாடுகளோடு.. ஐயர்லாந்து.. ஜப்பான்.. போன்ற தேசங்களோடு நெருக்கம் பாராட்டினர். அதேபோல் சில ஆபிரிக்க நாடுகளோடும்.. கிழக்குத் திமோர் போன்றவற்றோடும் நெருக்கம் இருந்தது.

புலிகள் சர்வதேசம் வேண்டாம் என்றிருக்கவில்லை. புலிகள்... சர்வதேசத்தின் அளவுக்கு மிஞ்சிய தலையீடு எமது உரிமைப் போராட்டத்தில் எமது விருப்புக்கு மாறாக அமையலாம் என்று கருதினரே தவிர சர்வதேசத்தின் பங்களிப்பை புலிகள் நிராகரிக்கவில்லை. எமது உரிமைகளை நாம் விரும்பும் வடிவில் பெற நமது பலமும் முக்கியம் என்பதையே புலிகள் சொல்லி வந்தனர்.

இன்று லிபியாவில் உள்ள போராளிகளும் சர்வதேச உதவிகளைக் கோரி உள்ள போதும்.. கடாபிக்கு எதிராக நிலத்தில் சர்வதேசப் படைகளின் பிரசன்னத்தை மறுதளித்து விட்டுள்ளார்கள். அப்படியான ஒரு நிலை விடுதலைப்புலிகளிடமும் இருந்தது. இறுதித் தீர்வில்.. சர்வதேசம் மத்தியஸ்தராக.. அழுத்தம் பிரயோகிக்கும் தரப்பாக.. பார்வையாளராக இருக்க வேண்டுமே தவிர திணிக்கும் தரப்பாக இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியா நடந்து கொண்டது போல இருக்கக் கூடாது என்பதில் புலிகள் அதிக கவனமாக இருந்தனர்.

இந்த வேறுபாட்டை உணர்ந்திருந்தால்.. இப்படியான சிறுபிள்ளைத் தனமான கருத்து பிறந்திருக்காது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:(

அட,

நாங்கள் எப்ப சர்வதேசத்தினை நம்பினம்? எவரும் தேவை இல்லை சொந்த காலில் நிற்போம் என்றுதானே மார் தட்டினோம்?

எல்லாரும் சுயநலவாதிகள், தத்தம் சொந்த நலனுக்காகவே தலையிடுவர் ஆகவே நாம் எவருடனும் எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் எம் சொந்த காலில் நிட்பம் என்று திமிரில் நின்ற ஆட்கள் எல்லா நாங்கள்? கடைசியில் புலிகளின் இராணுவ பலத்தின் மீதான பிரமிப்பு புலிகளுக்கும் எமக்கும் தகர்ந்த பின் தானே தெரு தெருவாய் ஊர்வலம் போய் சர்வதேசமே தலையிடு என்று கூக்குரல் இட்டனாங்க!!. புலிகளை சர்வதேசம் எங்கும் தடை செய்த போது கூட பெடியளுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி என்று சும்மா இருந்து போட்டு இப்ப சர்வதேசத்தை நம்பினோம்...அவங்கள் கழுத்தறுத்து விட்டார்கள் என்று புலம்புவது சரியா

இன்று சுகன் எழுதிய கவிதைதான் நினைவில் வருது :)

புலிகளையும் மக்களையும் பற்றி இப்படி ஒரு கணிப்பு தங்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

இருந்தாலும் இதுவும் திரியைப்பற்ற வைக்க என்று எடுத்துக்கொள்கின்றேன் நிழலி :(:(

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் நின்றபடி தப்ப வேண்டும் என்ற எண்ணம் தலைவருக்கு வரும் அளவு அவர் யுத்தம் பற்றிய புரிதல் கொண்டவரில்லை என்கின்றாரா கேபி?அவர் விடுதலைப் போராட்டத்தில் தியாகம் செய்திருப்pன், அதைக் கொச்சைப்படுத்தும் விதமாக வரையப்படும் கருத்தே, கேபியின் இந்த அறிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

ம்....................இதில ஒன்றை நான் சொல்லுகின்றேன் சிலநேரம் இது சிலரால் எள்ளிநகையாடலாம்.... அல்லது மறுதலிக்கலாம்..... அது அவர்ரவர் சம்பந்தப்பட்டது..... சிறிலங்கா இராணுவத்தினால் வன்னி போர் முற்றுகை இறுகிவரும் சந்தர்ப்பத்தில் குறிப்பாக மேற்க்கு பக்கம் தனது முற்றுகையை இறுக்கி வந்த வேளையில் கிழக்கு பக்கமாக இருந்த புலிகளின் சகல தளங்களுக்கும் புதியவர்கள் வந்து போகின்றனர் ( தலைவரின் புலனாய்வு பிரிவு) போராளிகளோடு பல நாட்கள் தங்குகின்றனர் பின்னர் அவர்கள் மறைந்து விட்டனர் (பின்னாளில் அவர்கள் முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் மாலை வேளைகளில் வருதும் பின்னர் மறைவதுமாக இருந்தனர்)

வந்த முக்கியவிடயம் தகவல் தலமைக்கு போகின்றது

சகலவற்றையும் அனுமானித்தே தலைவரின் அடுத்த கட்ட நடிவடிக்கைகள் இடம்பெற்றதாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் நின்றபடி தப்ப வேண்டும் என்ற எண்ணம் தலைவருக்கு வரும் அளவு அவர் யுத்தம் பற்றிய புரிதல் கொண்டவரில்லை என்கின்றாரா கேபி?அவர் விடுதலைப் போராட்டத்தில் தியாகம் செய்திருப்pன், அதைக் கொச்சைப்படுத்தும் விதமாக வரையப்படும் கருத்தே, கேபியின் இந்த அறிக்கை.

கே பி இருந்து பேசுமிடம் அப்படி. தலைவரோடு கூட இருந்த பொட்டம்மான் பற்றி எந்தக் கதையும் கே பி கேள்விப்படவில்லை என்பது ஆச்சரியம்..??! அது மட்டுமன்றி தலைவர் இறந்ததாக கே பி சொல்ல சி என் என் காட்டிய படங்கள் தான் அவருக்கு உறுதுணையாக இருந்தன என்று சொல்கிறார். இதே கே பி எதனடிப்படையில் தலைவர் இறக்கவில்லை என்று சிங்கள அரசின் பிடிக்குள் போகாத நிலையில் அறிவித்தார்... கே பியோடு முள்ளிவாய்க்காலின் பின் தொடர்பில் இருந்தவர்களுக்கு என்னாச்சு.. அவர்கள் இப்போ எங்கே..??! இதற்கும் பதில் இல்லை..!

கே பி பேச வைக்கப்பட்டுள்ளார்.. இருந்தாலும் அவரின் பேச்சில் கொஞ்சம் மனச்சாட்சியும் பேசுகிறது என்று எண்ணிக் கொள்ளலாம். அவ்வளவே...! எதுஎப்படிடோ ஆயுதங்களும் புலிகளும் மெளனிக்க வேண்டிய நேரம் இது. அதில் இப்படியான பேச்சுக்களுக்கு முதன்மை கொடுக்கவே செய்வார்கள்..! அதன்படி அமைபவையே இவை. எனவே இவை நாம் கேள்விப்பட மட்டுமே அன்றி நம்ப அல்ல..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம் இந்திய அரசியல் தலைவர்களுடனான உரையாடல்களில் புலிகள் நம்பியிருந்த ஒரு தலைவர் 3 நாட்கள் தொலைபேசியை துண்டித்து வைத்திருந்தார். அவருடன் தொடர்பு முயற்சிகளை நானே மேற்கொண்டிருந்தேன்.2001 வரை நாங்கள் தேவைகளிற்கு அதிகமாகவே அனுப்பிக்கொண்டிருந்தோம். அதன் பின்னர் தேவையானதுகூட அனுப்பப்படவில்லை.

யார் அந்தத் தலைவர். அவரின் உண்மை முகத்தை அறியலாமல்லவா?

துவக்கு என்றால் என்னவென்றே தெரியாத டாக்குத்தர் மூர்த்தியை ஏவுகணை வாங்குவதற்காக சி.ஜ.ஏ ஏஜெண்டுகளிடமே கஸ்ரோ அமெரிக்கா அனுப்பியதையும் விளக்கமா கே.பி யர் சொல்லியிருக்கலாம். பாவம் இப்ப மூர்தியர் அமெரிக்காவிலை கம்பி எண்ணுறார்.அதே நேரம் இந்திய அரசியல் தலைவர்களுடனான உரையாடல்களில் புலிகள் நம்பியிருந்த ஒரு தலைவர் 3 நாட்கள் தொலைபேசியை துண்டித்து வைத்திருந்தார். அவருடன் தொடர்பு முயற்சிகளை நானே மேற்கொண்டிருந்தேன்.2001 வரை நாங்கள் தேவைகளிற்கு அதிகமாகவே அனுப்பிக்கொண்டிருந்தோம். அதன் பின்னர் தேவையானதுகூட அனுப்பப்படவில்லை.

ஏனுங்கண்ணா ...துவக்கைபத்தி தெரிஞ்சாத்தான் ..ஒரு போராட்டத்தின் ஆயுததேவைக்கான கொள்வனவில் ஒருவர் தன் பங்கை வழங்கலாமா?.............அல்லது ஆயுதம் பற்றி தெரிஞ்சாதான் ஒருவர் ..அதற்கான வழங்கலில் ஈடூபடலாமா? ................ அப்பிடி பார்த்தா ..தலைவர் தொடங்கி...கே.பி...முள்ளிவாய்க்காலில் இறுதியாக போராடி மரணித்த போராளிவரை அதை பத்தி பேசவே தகுதி இல்லீங்கண்ணா!..................ஏன் தெரியுமா?........ ஆயுதபோராட்டத்தை அவர்கள் ஆரம்பித்தது ...உலகில் உள்ள அனைத்து ஆயுதங்களின் கற்லொக் ,அதன் செய்ற்பாடு பத்திய விபரங்களை கையில் வைத்துக்கொண்டல்ல!........... அவர்கள் எதிர்கொண்டது ,எப்படியாவது பலம்கொண்ட ஒரு எதிரியை கட்டுப்படுத்தணுமே..எங்கிற ஆவேசம்தானுங்க!..................அப்புறம் என்ன?பாவம் மூர்த்தியரா? ஏன் அவர் பாவம்? காஸ்ரோ பேச்சைக்கேட்டு உள்ளே போயிட்டார்னா? ...................கிராமத்தின் கடைகோடியில் இருக்கும் பாமரனுக்குகூட...ஒரு இனவெறி அரசுக்கு எதிராக ஆயுதமோதலில் ஈடுபடமுனையும்போது ...தன் நிலை என்னவாகும் என்று அறிந்தே வைத்திருப்பான்!..............இதை ஒரு வைத்தியரான மூர்த்தி அறிந்திருக்கமாட்டாரா? அது இருக்கட்டும் இப்போல்லாம்...அடிக்கடி........புலிகள்பத்தி என்ன எழுதினாலுமே..."நான்"நான்".........நானே தொடர்புகொண்டேன்.............நானே....பொறுப்புக்கள ஒப்படைச்சேன்...................தோசை சுட்டேன் என்னு போறீங்களே.........................என்னாச்சு?...............இவ்வளவு ஒரு பெரிய சகிப்புத்தன்மை கொண்டவர்கள் வகிக்கும் பொறுப்பில் இருந்த நீங்களா ....சாதாரண இணையதள மோதலுக்கு வழக்குபோடுற ரேஞ்சில போனீங்க?..........................ஒரே தமாசுதான் போங்க!...................இதை எல்லாம் வாசிக்கும்போது நம்ம அர்ஜுன் அண்ணா எவ்ளோ பரவாயில்லைன்னு தோணுது .........................மாமோய்ய்ய்!!

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டி எடுத்தவரை துரோகியாக்கி சிட்னி முழுவதும் படத்துடன் ஒட்டியிருக்கின்றார்களாம். செய்தது யாராக இருக்கும் என்பது சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இங்கே நான் கேட்க விரும்புவது என்னவெனில்- அப்படியானால், கே.பி. தெரிவித்த விடயங்கள் அனைத்தும் உண்மை என்றுதானே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

துரோகிப்பட்டம் கொடுத்தவர்கள் தமது வண்டவாளங்கள் வெளியே வருகின்றன என்று அச்சப்படத் தொடங்கிவிட்டார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

எது எப்படி இருப்பினும் வழமை போல நான் எழுதுவது போல "காலங்கள் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை" என்பது கே.பி.யின் பேட்டியினால் புலத்தில் புலிகளின் பணத்தினை சுருட்டியவர்கள் தற்போது அச்சமுறத் தொடங்கிவிட்டார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

"உண்மையின் பயணம் மிக நீண்டது; பொய்யின் பயணம் மிகக் குறுகியது" இதனை அனைவரும் நினைவில் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும்.

பேட்டி எடுத்தவரை துரோகியாக்கி சிட்னி முழுவதும் படத்துடன் ஒட்டியிருக்கின்றார்களாம். செய்தது யாராக இருக்கும் என்பது சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த விடயம்.

சிங்களம் பேட்டி கொடுத்தவரை 'விடுதலைப்புலிகளின் தலைவர்' எனவும் தேவையான இடத்தில் கூறிவருகின்றது. எனவே, ஒட்டியது சிங்கள அரசாகத்தான் இருக்கும் rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் பேட்டி கொடுத்தவரை 'விடுதலைப்புலிகளின் தலைவர்' எனவும் தேவையான இடத்தில் கூறிவருகின்றது. எனவே, ஒட்டியது சிங்கள அரசாகத்தான் இருக்கும் rolleyes:

இப்படித்தான் உங்களின் கருத்துக்கள் வெளிவர வேண்டும். ஏனெனில், நீங்கள் தொடர்ந்தும் 2009 மே 19 க்கு முன்னைய கால கட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பது உங்கள் எழுத்தின் மூலம் தெரிகிறது.

எப்போதுதான் அறிவுசார் தளத்திலிருந்து சிந்திக்கப் போகின்றீர்களோ தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.