Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்குறிப்பு..

என்னுடைய பயணத்தொடரில் அதிகமாக அரசியல் கலந்துவிட்டது என்றும் அதனாலேயே சுவாரசியமான விடயங்களிற்கும் கருத்துக்களை பகிர முடியவில்லையென பலரும் குறைப்பட்டிருந்தனர். எனவேதான் அரசியல் கொஞ்சமும் கலக்காத அனைவரும் கருத்துக்கள் பகிரக் கூடியதானதொரு குறுந்தொடரை எழுதியிருக்கிறேன். இக்கதையை எழுதிய பின்னர் எனக்கு இரண்டு பிரச்சனைகள் ஒன்று குறுங்கதையாகத்தான் எழுத முடிவெடுத்திருந்தேன்.எழுதி முடித்தபின்னர் பார்தால் அது நீண்டுகொண்டேயிருந்தது.அதனால் குறுந்தொடராக்கிவிட்டேன்.அடுத்தது கதையை எழுதி முடித்துவிட்டு திரும்பப் படிக்கும் போது இதனை கதைகதையாம் பகுதியில் இணைக்கலாமா அல்லது பேசாப்பொருள் பகுதியில் இணைக்கலாமா என்கிற சந்தேகம் வந்துவிட்டது.ஆனாலும் முடிந்தளவு விசரம் இல்லாதவாறு நகர்த்தியிருக்கிறேன்.நன்றி. இதோ மலரக்கா.

ujiladeviblogpostcom5.jpg

இந்தவருடம் கோடை விடுமுறையில் கட்டாயம் பாரிசிற்கு டிஸ்னிலாண்டிற்கு கூட்டிப்போவதாக மகளிற்கு ஊறதியளித்திருந்தேன். பயணத்திற்காண திட்டமிடலுடன் இரயில் தங்குமிட விடுதி பதிவுகள் எல்லாம் செய்தபின்னர் திடீரென கையில் ஒரு சிறிய சத்திர சிகிச்சை செய்யவேண்டிவந்திருந்தது . பாரிசிற்கு புறப்படுவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னரே சத்திர சிகிச்சையை முடித்துக்கொண்டு ஒற்றைக்கையை கழுத்தில் கட்டித் தொங்கவிட்டபடியே பாரிசிற்கு குடும்பமாக பயணமாயிருந்தேன். பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் நான் இருக்கும் நகரத்திற்கு அன்றுமாலை திரும்பவேண்டும்.அதற்கு முன்னர் அன்று பாரிசில் கொஞ்சம் கடைத்தெருவில் உலாவியபொழுதுதான் மனைவி என்னிடம். "என்னப்பா எங்கடை இடங்களிலை கோயில்கள் இல்லைத்தானே வந்தஇடத்திலை இஞ்சை ஏதாவது ஒரு கோயிலுக்கும் போயிட்டு போகலாம்" என்றாள்..

எனக்கு கோயில்களில் ஆர்வம் இல்லை. எண்டாலும் மந்திர சொல்லை தட்டமுடியாதுதானே. லாசப்பல் பக்கம் போனால் பழைய நண்பர்கள் சிலரையும் சந்திக்கலாமென நினைத்து லாசப்பலிற்கு அருகில் இருக்கும் ஒரு கோயிலுக்கு போகலாமென முடிவெடுத்தேன் . அங்கிருந்த ஒரு கோயிலிற்கு மதியமளவில் போயிருந்தோம். கோயிலில் மதியகாலத்து பூசை ஆரம்பமாகியிருந்தது. மனிசி பூசையில் கலந்துவிட கோயிலின் உள்ளே போய் ஒரு சுற்றி விட்டு நானும் மகளும் கோயில் வெளியே வந்துவிட்டோம்.மகளிற்கும் என்னைப்போலவே கோயில்களில் அதிக ஆர்வமில்லை. வெளியே வந்த நாங்கள் கோயில் வாசற்படியில் அமர்தபடி மகளும் நானும் தொலைபேசியில் கேம் விழையாடத் தொடங்கியிருந்தோம்.அப்பொழுது அவசரமாக வந்த வயதான பெண்ணெருத்தி எங்களை கடக்கும் பெழுது என்னைப்பார்த்து தம்பி பூசை தொடங்கிட்டுது வரேல்லையோ என்றார். ஒரு செக்கன் மட்டுமே அவரை நிமிர்ந்து பார்த்த நான் சிறிய வியாபார புன்னகை ஒன்றை எறிந்துவிட்டு மீண்டும் கேம் விழையாடத் தொடங்கினாலும் அந்த ஒரு செக்கனில் அவரது முகத்தை எனது மூளை ஸ்கான் செய்திருந்தது.மீண்டும் அவரை திரும்பிப்பார்த்தேன் வெள்ளைக்குதிரையின் வாலைப்போல நரைத்திருந்த நீண்ட தலைமுடி கோயிலிற்குள் நுளைந்துவிட்டார்.என் பின் மூளை சூடானது. இவரைத்தெரியும். ஜபோனில் இணைய தொடர்பை ஏற்படுத்தும் போதும் திரையில் சுற்றும் தேடல் வட்டத்தைப்போல எனது முளையிலும் வட்டம் ஓடிக்கொண்டிருந்தது. தெரியும் ..நன்றாகத் தெரியும்..யார்??யார்??..

ஒருநாள் பரிசிலிருந்த எனது சிறுவயது நண்பன் இருள்அழகன் தொலைபேயில் கதைக்கும் பொழுது

டேய் உனக்கு மலரக்காவை தெரியுமல்லோ

ஓ அவாவை மறக்கேலுமோ அவாவுக்கு என்ன

அவா இஞ்சைதான் இருக்கிறா.கோயில்லை கண்டனான் கோயில்லைதானாம் இருக்கிறாவாம்.

கோயில்லைஇருக்கிறாவோ??ஏன் அவாவின்ரை சகோரங்கள் இஞ்சை தானே இருக்கினம்.

ஓமடா அவவின்ரை சகோதரங்கள் மட்டுமில்லை பிள்ளையளும் இஞ்சைதான் ஆனால் அவையள் அண்டுறேல்லையாம்.கோயில்லைதானாம்.

இருக்கலாம்.அவவாயிருக்கலாம்.

வா உள்ளை போவம்...

அப்பா என்னை விழையாடவிடு..

பிறகு விழையாடலாம் வா..

மகளையும் இழுத்துக்கொண்டு கோயிலுக்குள் நுளைந்து பக்கவாட்டாக சுவரோடு நின்றபடி கண்களால் துளாவினேன்.

கேம் விழையாட்டை குழப்பிய கோபத்தில் மகள் முறைத்தபடி தரையை பார்த்தபடி நின்றிருந்தாள்.

ஜயர் ஒவ்வொரு தீபமாக சாமிக்கு காட்டிய இன்னமும் சமஸ்கிருதத்திலேயே ஏதோ சொல்லியபடியிருந்தார்.தமிழ்தான் நீச பாசையெண்டால் பிரெஞ்சிலையாவது பூசையை செய்திருக்கலாம்.

கைகூப்பி கண்களை மூடியபடி நின்றிருந்த எனது மனைவிக்கு பக்கத்திலேயே அவரும் நின்றிருந்தார். அவரை கீழிருந்து மேலாக ஆராச்சி செய்துகொண்டிருந்தபொழுது தற்செயலாக திரும்பி எங்களை கவனித்த மனைவி. வந்த இடத்திலும் தன்னை தன்னுடைய கணவன் பத்திரமாக கவனித்தபடி நிற்கிறான் என பரவசமடைந்திருக்கலாம்.சிறிய புன்னகையுடன் மீண்டும் கண்ணை மூடி தியானத்தில் இறங்கிவிட்டிருந்தாள்.

பூசை முடிந்து ஜயர் விபூதி குடுத்து முடிந்ததும் அவர் வேகமாக அங்கிருந்த அறை ஒன்றில் நுளைந்து அன்னதானம் வைத்திருந்த அண்டாக்களை திறந்து அதனை பரிமாறத்தயாராகிக்கொண்டிருந்தார்.அப்பொழுது அவரை முழுதாகப் பாரக்கமுடிந்தது. ஆனாலும் எனது மூளையில் சுற்றிய தேடும் வளையம் சுற்றி முடிந்திருக்கவில்லை.

பாரிசிற்கு வந்து பலநாளாய் பட்டினி கிடந்தவர்களைப்போல சிலர் முண்டியடித்துக்கொண்டு அங்கிருந்த கடதாசிக்கோப்பைகளை எடுத்தவாறே அன்னதானத்திற்கு ஓடிப்போய் வரிசையில் நின்றனர். வரிசை நகர்ந்துகொண்டிருந்தது.வரிசையில் நின் பெண்ணொருத்தர் என்ன மலர் எப்பிடியிருக்கிறாய்.என்றாதற்கு அவர் புன்னகைத்தபடி ஏதே கடவுள் புண்ணியத்திலை இருக்கிறம்.என்றார்.

அவரேதான்.மலரக்காதான். எனது தேடும் வளையம் நின்றது. கடைசியாய் அவரை பார்த்து எப்படியும் இருபத்தைந்து வருடங்களிற்கு மேல் இருக்கும் ஆனாலும் பழைய அவரது உருவங்கள் எனது மனத்திரையில் மாறி மாறி இறக்கிக்கொண்டிருந்தது. நானும் கையில் ஒரு பிளாஸ்ரிக்கோப்பையை எடுத்தபடி வரிசையில் நகர்ந்தேன்.

மனிசி மகளிடம் அப்பாக்கு ஞானம் கிடைச்சிட்டுதுபோலை என்றாள்.அப்பா இப்பதானே வரமுதல் டிஸ்னிகடையிலை பங்கு ஆட்டிறைச்சிக்கறியோடை சோறு சாப்பிட்டவர்.பிறகேன் கோப்பையோடை வரிசையிலை நிக்கிறார் என யோசித்து தலையை சொறிந்தாள்.

வரிசையில் எனது முறை வந்தது கோப்பையை நீட்டினேன். வெண்பொங்கலை கரண்டியால் அள்ளி அவர் கோப்பையில் வைக்கும்போது "மலரக்கா என்னை ஞாபகம் இருக்கோ" உற்றுப்பார்த்தவர் தெரியேல்லை என்பதற்கு அடையாளமாய் தலையாட்டினார். நான்தான் சிறி.சங்கக்கடை சாமான் துக்கிகொண்டு.........வசனத்தை முடிக்கவிலை.அவர் முகத்தில் சட்டென்று பல மாற்றங்கள்.மகிழ்ச்சியா அழுகையா என்று தெரியவில்லை கண்கள் கலங்கியது.படபடப்பாய்

ஓம்.. ஜயோ உன்னை எத்தினை வருசமாய் தேடினனான்.இரு வாறன் என்றவர் அங்கிருந்த ஒருவரிடம் கரண்டியை கொடுத்துவிட்டு ஒரு ஓரமாய் வந்தவர் சேலைத்தலைப்பால் கண்களை ஒற்றியபடி.எங்கையிருக்கிறாய்? எப்பிடியிருக்கிறாய்?.கலியணம் கட்டிட்டியா?பிள்ளையள் இருக்கா? கேள்விகள் மட்டுமே வந்து கொண்டிருந்தது.

ஓம் கட்டிட்டன் ஒரு மகள் அவையளும் வந்திருக்கினம்.நீங்கள் இஞ்சை இருக்கிறதாய் கேள்விப்பட்டனான் ஆனால் நான் இருக்கிறது வேறை சிற்றியிலை.ஆயிரம் கிலோ மீற்றர் தூரம்.நீங்கள் எப்பிடியிருக்கிறியள்.

என்னத்தை சொல்ல கடவுள் எல்லாத்தையும் தந்தவர் எனக்குத்தான் அதை சரியா பயனபடுத்தத் தெரியேல்லை.இப்ப அனுபவிக்கிறன். அதுதான் கடைசியாய் கடவுளே கதியெண்டு இஞ்சை வந்திட்டன்.வாழ்க்கை ஏதோ போகுது.

பிள்ளையள்??உங்கடை சகோதரங்கள்.?

சகோதரங்கள் முந்தியே கதைக்கிறேல்லை.எனக்கு மூண்டு பிள்ளையள்.இரண்டு பெடியங்கள் சுவிசிலை கட்டிட்டாங்கள். கடைசி மகள் இஞ்சைதான் தங்கச்சியோடை. அதுகளும் என்னோடை கதைக்கிறேல்லை.

நான் கோப்பையோடு வரிசையில் நின்றதன் காரணம் அப்பொழுதுதான் மனிசிக்கும் மகளிற்கும் புரிந்திருக்கவேண்டும். எங்களை நோக்கி வந்தார்கள்.அவர்களை மலரக்காவிற்கு அறிமுகப்படுத்தினேன். மகளை குனிந்து கொஞ்சியவர். உன்ரை கொப்பரின்ரை பூனைக்கண் அப்பிடியே மகளிட்டை இருக்கு என்றவர். உன்னோடை கனக்க கதைக்கவேணும் நேரமிருக்குமோ??

இல்லையக்கா.நாங்கள் இப்ப திரும்ப போறம் உங்கடை கான்போன் நம்பர் இருந்தால் தாங்கோ நான் பிறகு ஆறுதலாய் அடிக்கிறன்.

என்னட்டை கான்போன் இல்லை எனக்கெதுக்கு அதெல்லாம்.உன்ரை வீட்டு நம்பரைத்தா நான் இஞ்சை கோயில்லையிருந்து கதைக்கலாம்.பிறீதான்.

பொக்கற்றினுள் கையை வைத்து பாவித்த ரெயில் றிக்கற்றில் 04.93...என்று தொடங்கி இலக்கத்தை எழுதிக்கொடுத்து விட்டு விடைபெற்றோம்.

எங்கள் இரயிலுக்கான நேரமும் மட்டுமட்டாக இருந்ததனால் அவசரமாக ஓடிவந்து எங்கள் ஊரிற்கு செல்லவேண்டிய அதிவேக இரயிலை பிடித்து அமர்ந்துகொண்டோம்.இரயில் வேகமெடுக்கத்தொடங்கியது.பயணக்களைப்பு மனிசியும் மகளும் இருக்கையில் சரிந்துகொண்டனர்.நானும் கண்களை மூடியிருந்தேன் நித்திரை கொள்ளவில்லை.அதிவேக இரயிலின் வேகத்தை விட பலமடங்கு வேகமாக என்நினைவுகள் பின்நோக்கி நகரத்தொடங்கியது........

.சிறிய வயதிலிருந்து நான் அம்மம்மா வீட்டில்தான் தங்கியிருப்பது வழைமை அங்கிருந்துதான் பாடசாலைக்கும் போய்வருவேன்.எனக்கு பதின்நான்கு வயதேயான காலம் .மலரக்கா அம்மம்மா வீட்டிற்கருகில் பின்னால் இருந்த ஒரு ஒழுங்கையில்தான் திருமணமாகி நான்று வருடங்களாககுடியிருந்தார்.பாதி கட்டி முடிக்கப்பட்ட கல்வீடு மேலே கூரை க்கு தகரம் போட்டிருந்தார்கள்.அப்போ அவரிற்கு ஒரு மகனும் இருந்தார் மூன்று வயதிருக்கலாம்.கணவரை மொட்டை மூர்த்தி என்றுதான் எல்லாரும் கூப்பிடுவோம்.ஏன் அப்பிடி கூப்பிடுறனாங்கள் என்று உங்களிற்கு விளக்கமாய் எழுதத் தேவையில்லையெண்டு நினைக்கிறன். மலரக்காவுக்கும் அவருக்கும் குறைஞ்சது பதினைஞ்சு வருச வித்தியசமாவது இருக்கும் அவருக்கு வயசு அதிகம்..சங்கானை முதலாளி ஒருவரிடம் சம்பளத்திற்கு கொழும்பு லொறி ஓடுபவர்.சரியான குடிகாரர்.பெரிய வசதியற்ற குடும்பம்.மலரக்காவை பார்த்தால் அந்தக்காலத்து நடிகை மஞ்சுளாவை பார்த்தமாதிரியே இருக்கும்அவ்வளவு அழகானவர்..நல்ல நீண்ட தலைமுடி இடுப்பிற்கு கீழே ஆடும். பெரும்பாலும் நீண்ட பாவாடை சட்டைதான் போடுவார்.அவரிற்கு பின்னால் விசிலடிக்கும் இளைஞர் கூட்டமும் ஒன்று இருந்தது. என்னை எப்பொழுதாவது வீதியில் பார்த்தால் ஒருபுன்னகையை பரிமாறுவோம்.என்னை விட பத்து வயது மூத்தவர்.இவ்வளவுதான் பதின்நான்கு வயதுவரை எனக்கு தெரிந்த மலரக்கா.

as_manjula.jpg

நான் அம்மம்மா வீட்டிலையே அதிகம் வளந்ததாலை சின்ன வயதிலை சரியான சாமி பக்தி சுத்த சைவம். அது மட்டுமில்லை படுக்கப் போக முதல் ஒவ்வொருநாள் இரவும் அம்மம்மா கதையள் சொல்லுவா புராணக்கதையள் அரச கதையள் மட்டுமில்லை இடைக்கிடைபேய்க்கதையளும் சொல்லுவார். அம்மம்மா சொன்ன எல்லா பேய்கதையளிலையும் பேய்கள் புளியமரத்திலைதான் இருந்தது ஏணெண்டுதெரியாது. அதாலை சின்னவயசிலை எனக்கு இரவிலை புளியமரத்துக்கு கீழை போறதெண்டாலே பேய்ப்பயம். மலரக்கா வீட்டுக்கு போற ஒழுங்கையிலையும் பெரியதொரு புளியமரம் நிண்டது.பேய்க்கதை கேட்ட அண்டைக்கு நான் மூத்திரம் பெய்யப் போறதெண்டால் அம்மம்மாவையும் பக்கத்திலை கூட்டிக்கொண்டுதான் போவன்.

இப்படி ஒவ்வொரு நாளும் கதைசொல்லி முடிய இலவச இணைப்பாய் பொய் சொல்ககூடாது எண்டிற குட்டிகதையும் கட்டாயம் இருக்கும்.அதை உங்களிற்கும் சொல்லிவிடுறன். மேல்லோகத்திலை கடவுளிட்டை எங்கடை பெயர் எழுதின பல குடுவைகள் இருக்குமாம். எங்கடை சந்திக்கடை ரவியண்ணை கடையிலை வைச்சிருக்கிற இனிப்புப் போத்தில்கள் மாதிரி.நாங்கள் ஒவ்வொருக்காலும் பொய் சொல்லேக்குள்ளை கடவுள் ஒரு கூழாங்கல்லிலை எங்கடை பெயரை எழுதி அந்தக் குடுவைக்குள்ளை போட்டுவைப்பாராம். நாங்கள் எத்தினை பொய் சொல்லுறமோ அத்தனை கூழாங்கல் சேரந்திருக்குமாம்.கடைசியாய் நாங்கள் கடவுளிட்டை போகேக்குள்ளை அவ்வளவு கல்லையும் கட்டாயம் கடிச்சு தின்னவேணுமாம்.அதுக்கு பிறகுதான் சொர்க்கத்துக்குள்ளை விடுவாராம்.கதை எப்பிடியிருக்கு விசர்க்கதைமாதிரி இருக்கல்லோ? அதாலை கடைசியாய் இந்தக் கதை சொல்லத்தொடங்க நான் நித்திரையாயிடுவன். ஆனாலும் பொய் சொல்லப்பயம் சங்கக்கடை அரிசியிலை வாற சின்னகல்லு சோத்திலை அம்பிட்டாலே பல்லுப்பட்டால் உயிர் போற வலி வலிக்கும்.இதுக்குள்ளை கூழாங்கல்லை எப்பிடி கடிச்சுத்தின்னிறது எண்டபயத்திலையே பொய்சொல்ல வாயெடுக்கும்போதெல்லாம் கடவுள் கையிலை கூழாங்கல்லையெடுக்கிற நினைப்பு வந்திடும்.

நான் கடவுள் பக்தியெண்டதாலை ஒவ்வொருநாளும் பின்னேரப் பூசைக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறது வழக்கம். வயது வளர. நானும் வளர பூசை முடிய கோயிலடியிலை கொஞ்ச நேரம் பள்ளிக்கூட ஊர் சினேகிதங்களோடையும் நிண்டு அரட்டையடிச்சிட்டு போறது வழக்கமாகி போனது.வயதும் பதின்நாலாகிபோனதால் எங்கள் அரட்டைகளும் பள்ளிப்படிப்பை தாண்டி சினிமா அரசியல் ஊர்க்கதையள் ஊரில் உள்ள பெட்டையள் என்று விரிவடைந்தது.அப்பிடித்தான் ஒருநாள் ஒருத்தன் டேய் உங்களுக்கு மலரக்காவை தெரியுமல்லோ அவவுக்கும் எங்கடை சங்கக்கடை மனேச்சருக்கும் அதுவாம்.என்றுதொடங்கினான் ஆரம்பத்தில் எனக்கு அதில் பெரியளவு ஆர்வமில்லாமல் இருந்தாலும் அவன் கதை சொன்ன விதத்திலும் ஏற்கனவே எங்களிற்குள் புன்னகை பரிமாறும் அளவு பழக்கம் இருந்ததாலும் ஆர்வம் தூண்டியது.

அதே நேரம் பள்ளிக்கூட லீவும் வந்துவிட்டதால் மலரக்காவை கண்காணிக்கத்தொடங்கினேன்.அதே நேரம் சங்கக்கடை மனேச்சரை பற்றியும் சொல்ல மறந்திட்டன்.இவர் வேறை ஊர்காரன்.ஆளைப்பாத்தால் அன்றைய நடிகர் சுதாகர் மாதிரி இருப்பார்.முன்பக்கம் நெளிவைத்த தலையிழுப்பு உடுப்பும் அதேமாதிரி யானைக்கால் பெல்பொட்டம் கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டால் பட்டின் தெறிக்கிற மாதிரி இறுக்கமான சேட்டு. சங்கக்கடைக்கு பின்னாலையே ஒரு அறை இருக்கு அதுக்கு பின்பக்கமாய் கதவும் இருக்கு கிழைமைநாள் முழுக்க அங்கைதான் தங்குவார். வெள்ளிக்கிழமை பின்னேரம் சங்கத்தை பூட்டிப்போட்டு ஊருக்கு போயிடுவார்.சங்கக்கடை மத்தியானம்12 மணிக்கு பூட்டி 3 மணிக்குத்தான் திறக்கும்.இவருக்கு மத்தியானச்சாப்பாடு கொண்டுபோய் குடுக்கிறது மலரக்காதான்.நான் தொடர்ந்து துப்பறிஞ்சதிலை கண்டு பிடிச்ச விசயம். பிள்ளையை பக்கத்து வீட்டிலை விட்டிட்டு மனேச்சருக்கு தூக்குச்சட்டியிலை சாப்பாட்டோடை மத்தியானம் கடை பூட்டினால் பிறகு அக்கம் பக்கம் பாத்திட்டு பின்பக்க கதவாலை சங்கக் கடைக்குள்ளை புகுந்தால் ஒரு ஒண்டரை இரண்டு மணிக்கு அரிசி சாமானோடை வெளியிலை வருவா..

அப்பிடித்தான் ஒருநாள் சங்கக்கடையிலிருந்து வாங்கிய சாமான்களை தூக்க முடியாமல் வைத்து வைத்து தூக்கியபடி போய்க்கொண்டிருந்தார் வேகமாய் சைக்கிளில் போய் பக்கத்தில் பிறேக்அடித்த நான் .

மலரக்கா பாரமோ தாங்கோ நான் கொண்டுவந்துதாறன்.

வேண்டாம் எதுக்கு உனக்கு கரைச்சல்

சே ......இதிலையென்ன கரைச்சல் தாங்கோ ...நானே சைக்கிளின் பின் கறியரின் கிளிப்பை இழுத்து அதற்குள் சாமான்பையை திணித்தபடி வீட்டு படலயடியிலை வைச்சுவிடுறன்.என்றபடி சைக்கிளை மிதித்தேன்.

படலையை திறந்து உள்ளை வைச்சுவிடடா.கவனமாய் போ..

மலரக்காவுடன் கதைத்து விட்ட சந்தோசம்.எனக்குள்ளே ஒரு பிலாக்கொட்டைக்குருவி சிறகடித்தது. இண்டைக்குப் பின்னேரம் இதை கோயிலடி சினேதங்களிட்டை சொல்லவேணும்.மலரக்கா வீட்டு படலையை திறந்து சாமான் பையை வைத்துவிட்டு போய்விட்டேன்.

அன்று மாலை கோயிலடி மடத்தடியில் வழைமையான கூட்டம் நான் தான் கீரோ..சாதரணமாய் பள்ளிக்கூட பின்வாங்கில் படக்கதை சொல்லுறதெண்டாலேயே கதை. வசனத்தை இசையோடை சுவாரசியமாய் சொல்லுறனான். மலரக்காவின்ரை கதையை சொல்லறதுக்காக நடிப்பு டைரக்சன் எண்டு மேலும் இரண்டு வேலை கூடிப்போச்சுது. இவை அத்தனையையும் கலந்து கலர்ப்படக் கதையொண்டை எல்லாருக்கும் சொல்லிப்போட்டு படத்தின்ரை கடைசியிலை ஏதாவது மெசேச் சொல்லத்தானே வேணும் அதாலை .இண்டைக்கு மலரக்காவின்ரை சங்கக்கடை சாமானை சைக்கிள்ளை ஏத்தினனான்..நாளைக்கு மலரக்காவை ஏத்துவான் ..நாளையிண்டைக்கு..வசனத்தை முடிக்காமல் எல்லாரையும் பாத்து கண்ணடிச்சன்.

சிலர் தங்கள் வாயை துடைத்தார்கள்.சிலரின் எப்பிடிடா??? எண்டிற பெருமூச்சு என்னில் பட்டுத்தெறித்தது . ஆனால் இருள் அழகன் மட்டும் முகத்தை உம்ம்ம்....எண்டு வைச்சுக்கொண்டு டேய் நீ உன்ரை படத்துக்கு நீ ஒட்டின போஸ்ரர் என்னவோ கிளுகிளுப்பாத்தான் இருக்கிது. ஆனால் போஸ்ரறிலை இருக்கிற கிளுகிளுப்பு கன படங்களிலை இருக்கிறேல்லை.உன்ரை கதையும் அப்பிடித்தான்போகப்போகுது எண்டான். வந்த கோபத்திற்கு அவனை அப்பிடியே ......ஆனாலும் அடக்கிக்கொண்டு டேய் ஒரு நாளைக்கு நடக்கும் பாரடா அண்டைக்கு நீதாண்டா எனக்கு காவல். விரலை சுண்டி சவால் விட்டேன்.

இரண்டு மூண்டு தடைவை சங்கத்து சாமான்களை ஏத்தி இறக்கியாச்சு.சமான் ஏத்தி இறக்கினதையே எத்தனை தரம்தான் கோயிலடியிலை பெடியளிட்டை மாத்தி மாத்தி வித்தியாசமாய் சொல்லமுடியும் அவங்களுக்கும் அது அலுப்படித்தது.இண்டைக்கு மலரக்காவை எப்படியும் சைக்கிளிலை ஏத்திறதெண்டு சவாலேடை முடிவெடுத்தன். நண்பன் இருள் அழகனுக்கும் சொல்லி வைச்சட்டன். எதிர்பாத்தபடியே மலரக்கா சாமான்களோடை வந்துகொண்டிருந்தா அவவிட்டை சாமான் பையை வாங்கி கரியரிலை வைச்சிட்டு மெயின் றோட்டு கடந்து கொஞ்சத்தூரம் சைக்கிளை உருட்டினபடிஒழுங்கை வரை வந்ததும்.

மலரக்கா சரியான வெய்யில் எதுக்கு சும்மா நடந்துகொண்டு.நீங்களும் ஏறுங்கோ கொண்டு போய் விடுறன்.

டேய் என்னையும் வைச்சு உழக்குவியோ..

இதென்ன நீங்கள் பெரிய பாரமே ஏறுங்கோ..

மலரக்காவை ஏத்தியச்சு ஆனாலும் மனதுக்குள்ளை பிள்ளையாரே சினேகிதங்கள் மட்டும் யாராவது காணவேணும் ஆனால் வீட்டுகாரர் யாரும் காணக்கூடாது கண்டால் அவ்வளவுதான்.என்ரை நேத்திக்கடன் வீண்போகேல்லை நான் செற்றப் பண்ணினபடி இருள்அழகன் எதேச்சையாக வருவது போல எதிரே வந்துபோனான்.வீட்டுக்காரர் ஒருத்தரும் காணேல்லை.பெரிய ஒழுங்கை முடிஞ்சு மலரக்கா வீட்டை போற சின்ன கையொழுங்கைக்குள்ளை இறங்கிட்டன்.அது மணல் ஒழுங்கையெண்டபடியாலை சைக்கிளை மிதிக்க கஸ்ரமாயிருந்தது. கஸ்ரமெண்டால் இதிலை இறக்கிவிடடா என்றார்.சே இதென்ன கஸ்ரம் பேசாமல் இருங்கோ என்றபடி சைக்கிளை எழும்பி மிதிக்கத் தொடங்கினேன்.

முதன் முதலாக மலரக்காவுடன் உரசிக்கொண்டேன்.ஏன் முதன் முதலாக ஒரு பெண்ணுடனான உரசலும் அதுதான்.சைக்கிளை மேலும் வேகமாக மிதித்தேன்.என் முகம் அவரது முகத்திற்கு மிக அருகருகாக வந்து போனது.அவரது தலைமுடியின் சண்சில்க் சம்பூ வாசனை எனது நாசியில் இறங்கி உடல் முழுதும் பரவியது.இதயத்துடிப்பு அதிகரித்து வழைமையை விடஅதிகமாய் வியர்த்து என் காற்சட்டையும் விறைத்தது.மலரக்காவை படலையடியில் இறக்கிவிட்டு வேகமாக வயற்பக்கமாக சைக்கிளை மிதித்தேன் அங்கு உயரமாய் வளர்ந்து மஞ்சள் மயமாய் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்த சணல் வயலிற்குள் மறைந்துபோனேன்.

""ஆத்தா நான் வயசுக்கு வந்து விட்டேன்""...........................................தொடரும்.

Edited by sathiri

  • Replies 79
  • Views 13.5k
  • Created
  • Last Reply

அருமை சாத்திரி ஒரு போரியல் இலக்கியவதியால் சாதாரண கதையும் எழுத முடியும் என்று நிரூபித்துள்ளீர்கள் . இதே சுவை முடியும் வரை இருக்கவேண்டும். வாழ்த்துக்கள் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

சாத்து, அரசியல் வேண்டாமெண்டால் இப்படி "பலான" கதையளை இணைச்சு "எல்லாரும் பதில் பதியக் கூடிய பதிவு" எண்டு வேற சொன்னது உள்குத்தி மாதிரி இருக்குது! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமை சாத்திரி ஒரு போரியல் இலக்கியவதியால் சாதாரண கதையும் எழுத முடியும் என்று நிரூபித்துள்ளீர்கள் . இதே சுவை முடியும் வரை இருக்கவேண்டும். வாழ்த்துக்கள் :) :) :) .

முடிந்தளவு சுவை குறையமல்தர முயற்சிக்கிறேன்.

சாத்து, அரசியல் வேண்டாமெண்டால் இப்படி "பலான" கதையளை இணைச்சு "எல்லாரும் பதில் பதியக் கூடிய பதிவு" எண்டு வேற சொன்னது உள்குத்தி மாதிரி இருக்குது! :rolleyes:

எல்லாத்தையுமே வில்லங்கமாய்த்தான் யோசிப்பியளோ?? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கத்து சாமான்களை ஏத்தி இறக்கியாச்சு//

மற்றச் சாமான்களையும் ஏத்தியிறக்கிற பகுதிக்காக காத்திருக்கிறோம். நான் வேற ஏதாவது சந்தைச் சாமானும் இருக்கும் தானே அதைச் சொன்னனான்.

எளிய நடையில் சுவாரசியமாக எழுதுவது நன்றாக உள்ளது. தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எளிய நடையில் சுவாரசியமாக எழுதுவது நன்றாக உள்ளது. தொடருங்கள்.

நன்றிகள் தப்பிலி என்னுடைய கதைகள் பெரும்பாலும் எனது ஊர் வட்டார வழக்கிலேயே எழுதுவது வழைமை.சில சொல்லாடகள் யாரிற்காவது புரியாவிட்டால் எழுதவும். உதாரமாக எங்கள் ஊர் பக்கம் அண்டுதல் எண்டால் இரண்டு கருத்துக்களாக எடுக்கலாம். அண்டுதல் -அரவணைத்தல்..அல்லது .அண்டுதல்-கோள்மூட்டுதல்.சம்பவத்தை பொறுத்து இதன்அர்த்தம் வேறுபடும்.

நன்றிகள் தப்பிலி என்னுடைய கதைகள் பெரும்பாலும் எனது ஊர் வட்டார வழக்கிலேயே எழுதுவது வழைமை.சில சொல்லாடகள் யாரிற்காவது புரியாவிட்டால் எழுதவும். உதாரமாக எங்கள் ஊர் பக்கம் அண்டுதல் எண்டால் இரண்டு கருத்துக்களாக எடுக்கலாம். அண்டுதல் -அரவணைத்தல்..அல்லது .அண்டுதல்-கோள்மூட்டுதல்.சம்பவத்தை பொறுத்து இதன்அர்த்தம் வேறுபடும்.

வட்டார வழக்கில் எழுதப்படும் ஆக்கங்களுக்குத்தான் சுவையும் நளினமும் செழுமையும் அதிகம். அதில்தான் மண்ணோடு கலந்த உணர்வுகளை வெளிப்படுத்தலாம். எல்லோருக்கும் பொதுவாக எழுதுவதண்டா டிக்சனரிதான் எழுதலாம்.

வட்டார வழக்குகளுக்கு sub title போடாமல் கதையை தொடருங்கள்.

..

அப்பா இப்பதானே வரமுதல் டிஸ்னிகடையிலை பங்கு ஆட்டிறைச்சிக்கறியோடை சோறு சாப்பிட்டவர்.பிறகேன் கோப்பையோடை வரிசையிலை நிக்கிறார் என யோசித்து தலையை சொறிந்தாள்.

...

நசைக்சுவையாகவும் எழுதி இருக்கிறீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

15 வயதிலேயே உங்களுக்கு அப்படி இருந்திருக்குது என்டால் வாலிப வயதில் எப்படி இருந்திருப்பீங்கள் :( ...நினைச்சு பார்க்கவே தலை சுத்துது[அவவுடைய உண்மையான பெயர் கமலாவோ]

  • கருத்துக்கள உறவுகள்

சாத்ஸ் அண்ணா நேக்கு உஙகள நினைச்சா றொம்ப பெருமையா இருக்கு........14 வயசிலையே புலநாய்வு வேலையை செய்ய தொடங்கிட்டிங்கன்னு......

மிச்சம் எப்ப எப்ப....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நசைக்சுவையாகவும் எழுதி இருக்கிறீர்கள்...

உண்மையாவா??நன்றிகள் :lol:

15 வயதிலேயே உங்களுக்கு அப்படி இருந்திருக்குது என்டால் வாலிப வயதில் எப்படி இருந்திருப்பீங்கள் :( ...நினைச்சு பார்க்கவே தலை சுத்துது[அவவுடைய உண்மையான பெயர் கமலாவோ]

கி கி கி..திருத்திட்டன் :)

சங்கத்து சாமான்களை ஏத்தி இறக்கியாச்சு//

மற்றச் சாமான்களையும் ஏத்தியிறக்கிற பகுதிக்காக காத்திருக்கிறோம். நான் வேற ஏதாவது சந்தைச் சாமானும் இருக்கும் தானே அதைச் சொன்னனான்.

உங்கடை அவசரம் புரியிது.பொறுத்தார் பூமியாழ்வார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான கதை..! :rolleyes: இது பின் நவீனத்துவமா அல்லது முன் நவீனத்துவமா? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வட்டார வழக்கில் எழுதப்படும் ஆக்கங்களுக்குத்தான் சுவையும் நளினமும் செழுமையும் அதிகம். அதில்தான் மண்ணோடு கலந்த உணர்வுகளை வெளிப்படுத்தலாம். எல்லோருக்கும் பொதுவாக எழுதுவதண்டா டிக்சனரிதான் எழுதலாம்.

வட்டார வழக்குகளுக்கு sub title போடாமல் கதையை தொடருங்கள்.

எனது வாழ்வில் மட்டக்களப்பு, மன்னார் போன்ற... பெருமை மிகுந்த மண்ணை பார்க்கவில்லையே.... என்று கவலையாக உள்ளது.

அதனை, வட்டாரத்தமிழில் கேட்டாவது....சந்தோசப்படலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டுக்கு வீடு வாசற்படி எண்டு சொன்னது ஆரப்பா? ஓய் சாத்து!!!!!! எனக்கும் சீரியல் பாக்கிற பீலிங் வந்துட்டுது.....தொடரட்டும் :D

மலர் அக்காவும் அழகு கதையும் அழகு

மிக இயல்பாக இருக்கின்றது தொடரவும்.

எங்கே இணைப்பது என்ற குழப்பம் இப்படியான கதைகள் எழுதும்போது வரத்தான் பார்க்கும் அதை பட்டும் படாமலும் எழுதுவதிலேயே உங்கள் கெட்டித்தனம் உள்ளது.

பிரபல எழுத்தாளர்கள் எழுதாத விடயங்களா? அதில் மட்டும் கவனம் செலுத்துபவன் அடிபட்டு போவான்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா சாத்திரி அண்ணா நல்லாய் இருக்கு தொடருங்கள், குசா சொன்ன மாதிரி வீட்டுக்கு வீடு வாசல் படிதான், சொந்த அந்த அனுபவங்களை வெளிப்படையா (உங்கள் மனைவிக்கு தெரிந்து) எழுதுவது பெரிய விடயம்.

பனிபுலப் பக்கம் போனா இது எல்லாம் தேவை இல்லை, ஏன் சணல் வயலுக்குள் போனீங்க,காய்ந்து கிடந்த சணல் விதைகள் ...னிங்...னிங்...னிங்... என்று சத்தம் வந்திருக்குமே (சண்டிலிப்பாய் சணல் வயலா சங்கனை கோட்டைக்கு முன் உள்ள வயலா)

மனேச்சருக்கு தூக்குச்சட்டியிலை சாப்பாட்டோடை மத்தியானம் கடை பூட்டினால் பிறகு அக்கம் பக்கம் பாத்திட்டு பின்பக்க கதவாலை சங்கக் கடைக்குள்ளை புகுந்தால் ஒரு ஒண்டரை இரண்டு மணிக்கு அரிசி சாமானோடை வெளியிலை வருவா..

இப்பதான் கலாச்சார சீர்கேடு என்றால் :( , அப்போதுமா..................... :o

மனேச்சருக்கு தூக்குச்சட்டியிலை சாப்பாட்டோடை மத்தியானம் கடை பூட்டினால் பிறகு அக்கம் பக்கம் பாத்திட்டு பின்பக்க கதவாலை சங்கக் கடைக்குள்ளை புகுந்தால் ஒரு ஒண்டரை இரண்டு மணிக்கு அரிசி சாமானோடை வெளியிலை வருவா..

இப்பதான் கலாச்சார சீர்கேடு என்றால் :( , அப்போதுமா..................... :o

இவைகள் எல்லாம் காலம்காலமாக உள்ளவைகள் தான்,புலிகள் இல்லாததால் தான் எமது கலாச்சாரம் சீரழியுது என்பதுபோல் காட்ட சீரழிந்த புலம்பெயர்ந்தவன் பாடும் வழக்கமான பல்லவிகளில் இதுவும் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

மனேச்சருக்கு தூக்குச்சட்டியிலை சாப்பாட்டோடை மத்தியானம் கடை பூட்டினால் பிறகு அக்கம் பக்கம் பாத்திட்டு பின்பக்க கதவாலை சங்கக் கடைக்குள்ளை புகுந்தால் ஒரு ஒண்டரை இரண்டு மணிக்கு அரிசி சாமானோடை வெளியிலை வருவா..

இப்பதான் கலாச்சார சீர்கேடு என்றால் :( , அப்போதுமா..................... :o

ஏழைகளின் குடல் பசியை தங்களின் உணர்ச்சியை அடக்க பயன்படுத்திய யாரும் நன்றாக வாழ்ந்தாக இல்லை, அப்படிபட்ட ஒருவர், என் முன்னால் இந்தியன் ஆமியின் செல்லில் இறந்தவர்

இவைகள் எல்லாம் காலம்காலமாக உள்ளவைகள் தான்,புலிகள் இல்லாததால் தான் எமது கலாச்சாரம் சீரழியுது என்பதுபோல் காட்ட சீரழிந்த புலம்பெயர்ந்தவன் பாடும் வழக்கமான பல்லவிகளில் இதுவும் ஒன்று.

நான் நினைக்கின்றேன் இது 1970 களின் பிற்பகுதியில் நடந்தவைகளாக இருக்கலாம், விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழர் பிரதேசம்கள் இருக்கும் போது எப்படித் தூய்மையாக இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும் :) அந்தக் காலம் தமிழர் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை :)

ஏழைகளின் குடல் பசியை தங்களின் உணர்ச்சியை அடக்க பயன்படுத்திய யாரும் நன்றாக வாழ்ந்தாக இல்லை, அப்படிபட்ட ஒருவர், என் முன்னால் இந்தியன் ஆமியின் செல்லில் இறந்தவர்

உண்மை தான் உடையார், கடவுளின் தண்டனை!

நான் நினைக்கின்றேன் இது 1970 களின் பிற்பகுதியில் நடந்தவைகளாக இருக்கலாம், விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழர் பிரதேசம்கள் இருக்கும் போது எப்படித் தூய்மையாக இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும் :) அந்தக் காலம் தமிழர் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை :)

உண்மை தான் உடையார், கடவுளின் தண்டனை!

வெறும் விவாதத்திற்கு இதை நான் எழுதவில்லை.சுதந்திரம் கேட்டு போராடியவர்கள் பலருக்கு சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியவில்லை.சதாமும்,கடாபியும்,அசாத்தும் சொல்லலாம் நாமிருக்குமட்டும் ஒரு பிரச்சனையுமில்லை என்று.இதைத்தான் ரஷ்யாவும் முன்பு சொன்னது.வாயையே திறக்கவிடாதவர்கள் வேறெதையும் திறக்கவிடுவார்களா?வன்னி அந்த மாதிரி இருந்ததென்றால் ஏன் வன்னிக்கு முழுதமிழர்களும் போகவில்லை.அந்தமாதிரி இருந்ததை.அவர்கள் சொல்ல வேணும் நாங்கள் சொல்ல கூடாது.புலம்பெயர்வ்தவர்களே கனடாவிற்கும்,லண்டனுக்கும்,பிரான்சிற்கும்,ஜெர்மனிக்கும் வந்ததேன்.இதைவிளங்கிக்கொள்ளும் பக்குவம் முதல் வேண்டும்.புலிகளை விட சிங்களவன் திறம் அதை முதலில் விளங்கிக்கொள்ளுங்கள்.

மனேச்சருக்கு தூக்குச்சட்டியிலை சாப்பாட்டோடை மத்தியானம் கடை பூட்டினால் பிறகு அக்கம் பக்கம் பாத்திட்டு பின்பக்க கதவாலை சங்கக் கடைக்குள்ளை புகுந்தால் ஒரு ஒண்டரை இரண்டு மணிக்கு அரிசி சாமானோடை வெளியிலை வருவா..

இப்பதான் கலாச்சார சீர்கேடு என்றால் :( , அப்போதுமா....

................. :o

எல்லா காலமும் எல்லாமும் இருந்திருக்கு ...கொஞ்சம் மறைவாய் கொஞ்சம் தெரிய ..கொஞ்சம் துணைச்சலாய் கொஞ்சம் கோழைத்தனமாய் கொஞ்சம் முட்டாள் தனமாய் .கொஞ்சம் பெருமூச்சாய்..இந்த எழுத்தாளரைப் போல ஏ,பீ ,சி டி ஈ ..பதின்மங்களிலை எழுத பழகியவர்கள் அல்லது பழக்கபட்டவர்கள் போல நிறையவே கால வரிசையில் இருந்தே இருக்கிறார்கள்...எஸ் .பொன்னுத்துரையின் சடங்கு ,தீ போன்ற நாவல்களை வாசித்து இருந்தீங்கள் என்றால் உங்களுடைய அந்த உங்களுக்குள் இருக்கும் அந்த கலாச்சார மாயை தெளிவாகும்...... ஏங்க அந்த காலத்து பாகை மானியில் 90 பாகையை அளக்கவியலாதே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான கதை..! :rolleyes: இது பின் நவீனத்துவமா அல்லது முன் நவீனத்துவமா? :icon_mrgreen:

அந்தக் காலத்திலையெண்டால் எனக்கு தெரிஞ்சதெல்லாம் முன்நவீனத்துவம்தான். :( வெளிநாடு வந்து நிறைய அனுபவங்கள் கிடைத்ததிலை பின்நவீனத்துவமும் தெரிந்துகொண்டேன். :D எனவே இந்தக் கதையானது முன் பின் நவீனத்துவம் என்று எடுத்துக்கொள்ளலாம். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.