Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

நல்ல இருக்கு சாத்திரி. யாழில் விரும்பி வாசிக்கும் சில ஆக்கங்களில் உங்களுடையது முக்கியமனது....

இப்படியான கதைகளை வாசிக்க என்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டு ஒருவர் வருவார் ஆளைக் கானோம்.

கனடாவில் இருந்து ஹி ஹி.

  • Replies 79
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசல்படிதான் நீள அகலம்தான் வித்தியாசம். கு.சா வீடியோ கிளிப் போட்டு அசத்திட்டீர்.நானும் உதிலை வாறமாதிரி மலரக்காட்டை தண்ணி வாங்கி குடிச்சனான். அடுத்த பாகத்திலை :lol:

தமிழ்சிறி மட்டக்களப்பு வட்டார த்தமிழ் எனக்கு பிடித்தமானதொன்று

உடையார் நான் இறங்கினது சண்டிலிப்பாய் வயல்.அந்தப்பக்கம்தான் அம்மம்மா வீடு இருந்தது.பனிப்புலம் கொஞ்சம் தூரம். அண்டைக்கு ஓடுவானும் ஓடேல்லை மடுவானும் திறக்கேல்லை.புங்கை எப்பிடி போறதாம். :lol:

Edited by sathiri

"சிங்களவன் திறம் ........."

அப்ப ஏன் தாங்கள் கனடாவில் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில் எல்லைதாண்டிய பயங்கரவாதம் (வேலி தாண்டுதல் :wub: ) நிகழ்ந்தது தெரியவரும்போது சம்பந்தப்பட்டவர்களைப் பிடிச்சு பங்கருக்குள் விட்டுவிடுவார்கள்..! மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தெரிந்தவர்களுக்கு இவ்வாறு நடந்திருக்கிறது..! :rolleyes: வெறும் புலிக்காய்ச்சலில் கருத்தெழுதுவதானால் எதையும் எழுதலாம்..! <_<

"சிங்களவன் திறம் ........."

அப்ப ஏன் தாங்கள் கனடாவில் :icon_idea:

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

சாத்திரியாரே உங்கள் திருவிளையாடல்களைத் தொடரவும் :rolleyes: . வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தடுத்தநாட்களும் நான் மலவரக்காவை சைக்கிளில் ஏற்றிச்செல்வதும். பின்னர் சணலிற்குள் மறைந்து போவதும் கோயிலடியில் கதை சொல்வதுமாய் நன்றாய்தான் போய்க்கொண்டிருந்தது.அண்டைக்கும் அப்பிடித்தான் மலரக்காவை ஏத்திக்கொண்டு மணல் ஒழுங்கையில் எழும்பி எழும்பி சைக்கிளை மிதித்தபடிபோய்கொண்டிருந்போது எதிரே மரியம்மா வந்துகொண்டிருந்தா..மரியம்மா எங்கடை மாட்டிற்கு புல்லும் அம்மம்மாவிற்கு ஊர் கதையளையும் காவி வருபவர். அவரைக்கண்டதுமே எனக்கு வால்கட்டையை புடுங்கிவிட்டதுபோல இருந்தது.எங்களை கடந்த.. மரியம்மா நின்று நிதானித்து திரும்பிப் பார்த்துவிட்டு போய்கொண்டிருந்தார். மலரக்காவை இறக்கிவிட்டு வழைமைபோல் வயற்பக்கம் போகாமல் வேகமாய் அம்மம்மா வீட்டிற்கு சைக்கிளை மிதித்தேன்.நல்லவேளை மரியம்மா அப்பொழுதுதான் வந்துகொண்டிருந்தார்.அவர் வந்து மாட்டிற்கு புல்லுப்போட்டுவிட்டு அம்மம்மாவுடன் அரட்டை தொடங்கும்வரை அவருக்கு பக்திலேயே நிண்டேன்.

ஊர்க்கதைகள் கதைக்கும்போது என்னை அருகில் வைத்திருக்கமாட்டினம்.காரணம் நான் சின்னப்பெடியனாம்.அதாலை கோயில் பூசைக்கு நேரமாச்சு போடா என்று அம்மம்மா என்னை துரத்தினார்.அந்த நேரம் பாத்து கோயில் பூசை மணியும் அடிச்சது.பிள்ளையாரப்பா என்னை கைவிட்டிடாதை என்று நேர்ந்தபடி மரியம்மாவை ஒரு கெஞ்சல் பார்வை பார்த்துவிட்டு போய்விட்டேன்.நான் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. என்னைத்தேடி கோயிலடிக்கு வேகமாக வந்த அம்மம்மா என்னட்டை

டேய் அந்தத் தேவடியாள் மலரை சைக்கிள்ளை ஏத்தினனியா?

இல்லையெண்டு சொல்ல வாயெடுத்தாலும் கடவுளும் கூழாங்கல்லும் நினைவிற்கு வந்தது அதே நேரம் கோயிலடியில் நின்றே பொய் சொல்ல முடியவில்லை அதனால்

ஓம் அவா சாமான் பாரத்தோடை வந்தவா அதுதான் ......என்று இழுத்தேன்

அவளிற்கு சாமான் பாரமெண்டால் நீயோ கிடைச்சனி இரு அவளை என்ன செய்யிறன் பார்..

என்றபடி வேகமாக மலரக்கா வீட்டை நோக்கி போனார். கொஞ்சத்தூரம் இடைவெளி விட்டு அம்மமாவிற்கு பின்னாலையே நானும் போனன்.மலரக்காவின்ரை கஸ்ரகாலம் அவா அம்பிட்டிட்டா அவாவின்ரை நீண்ட தலைமுடியை பிடிச்சிழுத்த அம்மம்மா ஏண்டி தோறை உனக்கு சங்கக்கடை மனேச்சர் சந்திக்கடை ரவியர் காணாதெண்டு இப்ப சின்னபபெடியள் தேவைப்படுதோ என்று இரண்மூன்று அடி விழுந்தது.

சங்கக்கடை மனேச்சர் மட்டுமில்லை சந்திக்கடை ரவியரும் எண்டு எனக்கு அப்பதான் தெரிஞ்சது. ஆனாலும் மலரக்கா அடியாதேங்கோ எண்டு அம்மம்மாவிட்டை கெஞ்சினதும் அவாவின்ரை பிள்ளை வீரிட்டு அழுததும் எனக்கு என்னவோ மனசுக்கு கஸ்ரமாத்தான் இருந்தது அதுக்கிடையிலை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து ஆக்கள் வந்து விலக்கு பிடித்து விட்டனர்.?கோபமாய் வந்த அம்மம்மா எனக்கும் மண்டையில் ஓங்கி ஒரு குட்டுப்போட்டு விட்டு இனி அவளோடை கண்டதெண்டு கேள்விப்பட்டன் உன்னை கொம்மானிட்டை கொழும்புக்கு அனுப்பிப்போடுவன் என்று பேசிவிட்டு போய்விட்டார்.

அதன் பின்னர் நானும் மலரக்காவை கனநாளாய் பாக்கேல்லை அவாவின்ரை முகத்தை எப்பிடி பாக்கிறதெண்டும் அந்தரமாய் இருந்தது. பள்ளிக்கூடமும் தொடங்கிட்டதாலை பாக்கிற சந்தர்ப்பமும் கிடைக்கேல்லை.நான் கோயிலடியிலை கதை சொல்லுறதும் நிண்டுபோச்சுது. எண்டாலும் மனசு கேக்கேல்லை சைக்கிளிலை ஏத்தி உரசுறது சங்கக்கடை மனேச்சர் போலை நானும்.... என்கிற கற்பனைகளைத்தாண்டி மலரக்காவை பாக்கவேணும் போல மனது அந்தரித்தது."வேதாளம் திரும்பவும் முருங்கையை அண்ணாந்து பாத்தது."என்ரை சைக்கிள் மலரக்காவின்ரை ஒழுங்கைக்குள்ளை இறங்கியது. பொழுது சாயத்தொடங்கியிருந்ததால் ஒழுங்கையில் யாரும் இல்லை மெதுவாக மலரக்காவின் படலையை துறந்தேன். ஏழுகடல் தாண்டி ஏழுமலைதாண்டி பாதாள உலகத்தின் புதையல் குகையின் கதவைத் திறப்பது போல் மனசில் ஒரே படபடப்பு. என்னைக்கண்டதும் நல்ல பேச்சு விழலாம் இல்லாட்டி சில நேரம் புருசன் காரன் மொட்டை மூத்தி நிண்டால்?? சரி நடக்கிறது நடக்கட்டும் என்று உள்ளே போய் மலரக்கா என்று கூப்பிட்டேன் வாய் மட்டும்தான் அசைந்தது சந்தம் வரவில்லை அடுத்த தரம் தொண்டையை சரிசெய்தபடி

மலரக்கா .....

பிள்ளையை இடுப்பில் தூக்கியபடி வெளியில் வந்தவர்

ஓ நீயா?உனக்கு வீட்டிலை நல்ல அடிவிழுந்திருக்போலை இந்தப்பக்கம் காணேல்லை.

எனக்கொண்டும் பெரிசாய் விழேல்லை திட்டுத்தான் விழுந்தது அது பிரச்சனையில்லை. நீங்கள்தான் பாவம்.எல்லாம் என்னாலைதானே..அந்த லூசு மனிசி அப்பிடி உங்களை அடிக்குமெண்டு நான் நினைக்கேல்லை .என்னிலை கேவமில்லைதானே??

உன்னிலை பிழையில்லை சைக்கிள்ளை ஏறினது என்னிலைதான் பிழை.உன்னிலை ஒரு கோவமும் இல்லை உனக்கு அடிவிழுந்திருக்கும் எண்டு நினைச்சு கவைலைப்பட்னான்.

என்ன இருந்தாலும் சங்கக்கடை மனேச்சர் சந்திக்கடை ரவியரையெல்லாம் இழுத்து அவா உங்களை அப்பிடி திட்டியிருக்கக்கூடாது..

"அந்த மெல்லிய இருளிலும் மலர் வாடியது தெளிவாய் தெரிந்தது"

என்னத்தை சொல்ல என்ரை விதி . என்ரை அப்பரம்மா சரியாய் இருந்திருந்தா எனக்கு இந்த நிலை வந்திருக்காது.இப்பிடி திட்டு பேச்சு வாங்கவேண்டிய தேவையும் இருந்திருக்காது.எனக்கு அதெல்லாம் இப்ப பழகிட்டு.உன்ரை கொம்மம்மாவும் ஒண்டும் புதிசாய் திட்டேல்லை எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.

அப்ப அதெல்லாம் உண்மையோ..

உதெல்லாம் உனக்கெதுக்கு நீ சின்னப்பெடியன் ஏதாவது குடிக்கிறியா??

என்னை சின்னப்பெடியன் எண்டது எனக்கு கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கிய இலங்கை வேந்தனின் நிலைமையாய் இருந்தது.ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு

நான் இப்ப சின்னப்பெடியன் இல்லை வயது வந்த பெடியன்தான் எனக்கு சொல்லுங்கோ இல்லாட்டி நான் இந்த இடத்தை விட்டு போகமாட்டன். என்று அடம்பிடித்தாலும் மனதிற்குள் ஒரு பயத்துடன் மூத்தியண்ணை இன்னமும் வரேல்லையோ.எண்டு கேட்டன்.

அந்தாள் வர நாலைஞ்சு நாளாகும்.சில நேரம்தான் வீட்டை வரும் சிலநேரம் வராது.அது இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான்.

மூத்தியர் வரமாட்டார் எண்டது நிச்சயம் பண்ணிக்கொண்டு"?? கொஞ்ச தண்ணி தாங்கோ குடிப்பம்" தண்ணி குடிக்கிற சாட்டிலை சைக்கிளை விட்டு இறங்கி திண்ணையிலை இருந்து இண்டைக்கு எப்பிடியும் முழுக்கதையும் கேட்டிட்டுத்தான் போறது.

பிள்ளையை கீழே இறக்கிவிட்டு உள்ளே போய் தண்ணியெடுத்து வந்தார் இருட்டிவிட்டிருந்தது நல்ல நிலவு எறித்துக்கொண்டிருந்ததால் விளக்கு இன்னமும் ஏற்றவில்லை.செம்பில் கொண்டுவந்த தண்ணீரை வாங்கி சில முறடு குடித்துவிட்டு.திண்ணையில் அமர்ந்தபடி சரி கதையை சொல்லுங்கோ எண்டன்.

நீ கதை கேக்காமல் போகமாட்டாய் போலைத்தான் கிடக்கு எண்டவர் எனக்கு பக்கத்திலே திண்ணையில் வந்து அமர்ந்தார்.அந்தத் திண்ணைமட்டும் அலாவுதீனின் பறக்கும் கம்பளமாக இருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்.பிள்ளையை அங்கையே விட்டிட்டு நானும் மலரக்காவும் பறந்து போய்...... சே.. வேண்டாம் மனக்குரங்கை இழுத்து அடக்கிவைத்தேன்.

குடும்பத்திலை நான்தான் மூத்தது எனக்கு பின்னாலை மூண்டு பெட்டையள் எண்டபடியாலை நல்லா ஏ.எல் படிச்சுக்கொண்டிருந்த எனக்கு மச்சான் முறை காரன் .படிப்பும் இல்லை மண்டையிலை மயிரும் இல்லை. லொறி ஓடுறவனை அவரசமாய் கட்டி வைச்சிட்டினம்.அதோடை படிக்கிற கனவெல்லாம் போட்டுது.பிறகுதான் அவரின்ரை பொட்டுக்கேடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் தெரியவந்திச்சுது.அவருக்கு ஏற்கனவே ஆராச்சிக்கட்டைக்கு அங்காலை ஒரு சிங்களத்திக்கு பிள்ளையும் இருக்காம்.அது மட்டுமில்லை கண்ட கண்ட இடங்களிலையெல்லாம் படுத்தெழும்பி நசல் பிடிச்சு தயிர் மருந்து பூசிக்கொண்டு திரிஞ்சதிலை அவளும் கலைச்சு போட்டாளாம் .இதெல்லாம் தெரிஞ்சும் மச்சான் எண்டதுக்காக எங்கடை வீட்டுக்காரர் கட்டி வைச்சிட்டினம். கட்டின புதிசிலை அவரின்ரை வருத்தம் எனக்கும் பிடிச்சு நடராசா பரியாரியிட்டை நாட்டு வைத்தியம் செய்து நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.அதுக்கு பிறகு நானும் பக்கத்திலை அடுக்கிறேல்லை.அடுக்கினாலும் பிரயோசனமில்லை வெறும் புஸ்வாணம்.அதுவும் தண்ணியடிச்சிட்டு வந்து லேகியத்தை விழுங்கிட்டு படுத்திடும். காசும் தாறேல்லை..இப்ப வாறதும் குறைஞ்சிட்டுது.

அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர் கண்ணிலிருந்துமுத்து முத்தாய் விழுந்த துளிகள் மார்புகளிடையே வழிந்தோடி மறைந்து போனது இடையிடையே கையால் துடைத்தபடி தொடர்ந்தார்.நானும் எங்களிற்குள் இருந்த இடைவெளியை குறைத்துக்கொண்டேன்.அவர் தோள்களுடன் எனது தோள் தொட்டுக்கொண்டிருந்தது.

அப்ப மனேச்சரோடை........எ .. ப்.. பி .. டி.. மிண்டி விழுங்கினேன்.

குனிந்து பாவாடையால் முகத்தை துடைத்து மூக்கையும் சீறிவிட்டு தொடர்ந்தார். அந்த நேரத்திலைதான் கூப்பன் சாமான் வாங்கபோற நேரத்திலை மனேச்சரோடை பழக்கம். நான் கலியாணம் செய்ய மனசிலை கற்பனை பண்ணி வைச்சிருந்தவரை போலவே இருந்தார். நல்ல மனுசன் எல்லா உதவியளும் செய்யிறார்.என்ரை குடும்பம் ஓடுறது அவராலைதான்.அதுக்கு உபகாரமா கொடுக்கிறதுக்கு என்னட்டை என்னைத்தவிர வேறையொண்டும் கிடைக்கேல்லைஅவரும் என்னை கட்டச்சொல்லி கேக்கேல்லை நானும் அவர் என்னை கட்டுவாரெண்டு நினைக்கேல்லை ..ஏதோ காலம் ஓடுது..

சந்திக்கடை ரவியர் எண்டது........

அப்பிடியொண்டும் இல்லை அது நான் அவனின்ரை கடைக்கு காய்கறி வாங்க போன இடத்திலை காய் கறியை தந்திட்டு காசு வேண்டாம் கடைக்கு பின்னாலை வரச்சொல்லி கேட்டான் ..நான் கோவத்திலை எல்லாத்தையும் எறிஞ்சு போட்டு வந்திட்டன் .. அதாலை அவனே கதையை கட்டி விட்டிட்டான் ஊரும் நம்பிட்டுது.. என்று சொல்லும்போதே விம்மி வெடித்து கைகளால் கண்களை பொத்தியபடி அழத்தொடங்கிவிட்டார்.

அழாதேங்கோ மலரக்கா. அவர்தலையை நிமித்தி கண்ணீரை துடைத்தேன்.டக்கென்று என்னை கட்டிப்பிடித்தவர் என்ரை தலையை தன் மார்போட இறுக்கிப்பிடிச்சபடி அழுதுகொண்டிருந்தார் சூடான அவரது கண்ணீர் என்தலையில் பாரமாய் விழுந்து கொண்டிருந்தது. திரிசங்கு சொர்க்கம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்.அண்டைக்குத்தான் அது என்னவெண்டு தெரிஞ்சுது.விழையாடிக்கொண்டிருந்த குழந்தை அழத்தொடங்கியதால் என்னை விடுவித்தார்...சே .இன்னும் கொஞ்சம் கட்டிப்பிடித்தபடி இருந்திருக்கலாமேயென தோன்றியது.

சரியடா பிள்ளைக்கு சாப்பாடு குடுக்கவேணும்.உன்னையும் குழப்பிப் போட்டன் நீ போ இந்தப் பக்கம் இனி வராதை உனக்குத்தான் பிரச்சனை ..போட்டுவா..

அவரிடம் எதுவுமே சொல்லாமல் சைக்கிளை எடுத்து மிதித்தேன் கோயிலில் இரவு ஒன்பது மணி டாண் ..டாண்..என அடிக்கத்தொடங்கியிருந்தது. வழைமையாய் புளியமரத்திற்கு பயப்பிடும் நான் புளியமரம் கடந்ததே தெரியாமல் சைக்கிளில் வயற்கரை பக்கம் பேயிருந்தேன்.சணலாய் சலசலத்த வயல் மரவள்ளியாய் மாறியிருந்தது. மரவள்ளியின் உள்ளே நுளையவில்லை.வரம்பிலை சைக்கிளை போட்டு விட்டு அங்கேயே ஆகாயத்தை பாத்தபடி படுத்திருந்தேன்.என்னை ஒரு வெறும் தகர றம் ஒன்றில் போட்டு யாரே உருட்டிவிட்டது போல இருந்தது.சிந்தனைகள் குழம்பி குழம்பி எங்கொல்லாமோ ஓடியது. ஒரேயொரு தடைவையாவது மலரக்காவினுள் புதைந்து எழுந்தாலே போதுமென்று சுற்றித்திரிந்த என் மனதில் மாற்றங்கள் தொடங்கியிருந்தது. பாவம் மலரக்கா இனி மலரக்காவை பற்றி கோயிலடியிலை கதைக்கிறேல்லை யாராவது கதைச்சாலும் பல்லை உடைக்கவேணும். அதே நேரம் மலரக்காவின் மார்பிலேயே காலமெல்லாம் களிக்கவேணும் என்று சிந்தனைகள் சுற்றிக்கொண்டிருக்க.நேரம் போனதே தெரியவில்லை.அங்கிருந்த காவற்கொட்டில் ஒன்றிலிருந்த றேடியோவில் இரவின் மடியில் நிகழ்ச்சி தொடங்கி ""இது மாலை நேரத்து மயக்கம் இது கால தேவனின் கலக்கம்"என்கிற பாடல் காற்றில் கலந்து காதில் புகுந்து கொள்ளத்தான் நேரம் போனதையறிந்து சைக்கிளை எடுத்து வீட்டை நோக்கி மிதித்தேன்..

Edited by sathiri

சாத்திரி கதை சுவாரசியமாக உள்ளது.

பதின்ம வயதில் கனடா வந்தபோது எனக்கு ஏற்பட்ட முதல் கலாச்சார அதிர்ச்சிகளில் ஒன்று காதல். தமிழ் சினிமா காட்டின காதல், தமிழ் இலக்கியம் சப்பித் துப்பின காதல், ஊரிற்குள்ள பார்த்த காதல், யாழ்ப்பாண பஸ்சுக்குள்ள பாத்த காதல் என்றெல்லாம் எத்தனையோ பில்டப்புகளோட என்னுடைய பதின்ம வயது மனதிலும் அன்றைய மனவமைப்பிற்கு ஏற்றபடி துளிர்த்துக் கொண்டிருந்த காதல் என்ற சொல்லிற்கு அர்த்தமான ஒரு முகத்துடனும் வந்தும் கனடாவில இறங்கினபோது என்ர காதல் அத்திவாரம் ஆடிப்போனது.

ஒருவரில் இன்னுமொருவரிற்கு ஈர்ப்பு ஏற்படுகையில் அது தொடர்பான நேரடியான நடைமுறைகள், சரிவரும் பட்சத்தில் தம்மை ஒரு சோடியாக வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் தன்மை, பின் சரிவராத பட்சத்தில் பிரிவதில் தெரிந்த நேரடியான நடைமுறைகள், இதர சோடிசேரல் என காதல் என்ற விடயம் முற்றிலும் சுவாரசியமற்றுத் தெரிந்தது. இச்சுவாரசியமிழப்பிற்கான அடிப்படையாகத் தெரிந்தது வெளிப்படைத் தன்மையே.

ஊரில் முன்னர் கேட்ட ஒரு நகைச்சுவை: ஊரில் எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு பங்குக் கிணறு இருந்ததாதம். ஆந்தக் கிணற்றின் பாவனையாளர்களில் ஒருவரான ஒரு இளம் பெண்ணில் ஒரு இளைஞனிற்குக் காதலாம். இந்நிலையில் திடீரென அவ்விளைஞனிற்கு வெளிநாட்டுப் பயணம் சரிவர, ஒருநாள் தக்கித் தடுமாறி கிணற்றடியில் அப்பெண்ணிடம் சென்று பலத்த தயக்கத்துடன் எங்கட விசயம் உங்கட அம்மாப்பாக்குத் தெரியுமோ என்று அந்த இளைஞன் கேட்டானாம். அதுக்கு அந்தப் பெண் சொல்லிச்சாம் எங்கட விசயம் என்ன எண்டு எனக்கே தெரியாது பிறகெப்பிடி அம்மாக்குத் தெரியும் என்று.

ஓவ்வொரு சமூகம் ஒவ்வொரு விதத்தில் இன்பம் தேடல்கள் நோக்கி செயல்படுகிறது. எங்கட சமூகத்தின் மிகப்பெரிய கிழுகிழுப்பூட்டும் ரகசியம் பேசாப்பொருள். இதனால் தான் பல ஆண்களும் பெண்களும்; கலியாணத்திற்பின் உடற்பருமன் தொட்டுப் பல வகைகளில் உருமாறித் திரிகிறார்கள். கிடைக்காமல் இருக்கும் வரை தான் எங்களில் பலரிற்குக் கிழுகிழுகிழுப்பு. கிடைச்சபின் எவ்வித தேடலோ முயற்சியோ இன்றி சலிப்பு மட்டும் தான்.

சாத்திரி உங்கட கதை மிக சுவாரசியமாக இருக்கிறது. அதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. ஆனால் ஒரு வேளை அந்த சமூகத்தில் பொருளாதாரத் தெரிவுகள் பலதுபட்டு இருந்து, பேசாப்பொருட்கள் குறைவாக இருந்து, சரிவராத கலியாணங்கள் பிரிவது இலகுவாக இருந்து, கலியாணமானவர்கள் பிரிந்து இதரசோடி சேர்வது அல்லது, விவாகரத்தானவர்கள் டேற்றிங் செய்வது துணைதேடுவது போன்ற நடை முறை இருந்து, இந்த சங்கக் கடை மனேச்சர் நேரடியாக மலரக்கா வீட்டை போய் அவவைக் கூட்டிக்கொண்டு வெளியிலலையும் போய் வந்திருப்பின் உங்கடை கதைக்கான அடிப்படையே இல்லாமல் போயிருக்கும். மலரக்கா மறைவாய் பின்வாசலால் சங்கக்கடைக்குள்ள போனதில தான் கதைக்கான அடிப்படையே இருக்கிறது. பேசாப்பொருள் என்று சொல்லிச் சொல்லியே பேசாப்பொருளைப் பேர்த்தெடுக்கும் கில்லாடிச் சமூகம் எங்களுடையது.

இந்த அடிப்படையில் விரசம் கலக்காமல் எழுதவேண்டும் என்ற அவதானம் உங்களிற்குள் எழுவது, கதைகதையாம் பகுதியில் இணைக்கலாமா என்ற பயம் முதலியன உள்ளடக்கமாக பல விடயங்கள் எங்கட சமூகம் தனக்குத் தெரிஞ்ச கிளுகிளுப்பு மாத்திரையான பேசாப்பொருளைப் பாதுகாக்கும் அவதான உணர்வு மட்டுமே என்பது எனது அபிப்பிராயம். என்னைப் பொறுத்தவரையில் பேசாப்பொருள்களால் சீரழிஞ்சவர்களின் எண்ணிக்கை சீர்பட்டவர்களைக் காட்டிலும் அதிகம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. இதை நான் உங்கள் மீதான விமர்சனமாகக் கூறவில்லை என்னையும் உங்களையும் சேர்த்து எங்களது சமூகம் பற்றியதாகவே கூறுகின்றேன். அதே நேரம் எடுத்த எடுப்பில பேசாப்பொருள்களை பிய்த்தெறியவும் முடியாது. ஏனெனில் இந்த கிளுகிளுப்பு மாத்திரைக்கு அடிமையாகிக் கிடக்கும் ஒரு கூட்டம் அவதானமாய் இருக்கும். எப்போதாவது ஏதாவது பேசாப் பொருட்கள் வெளிப்படையாகும் அறிகுறி தெரிஞ்சால் இந்தக் கூட்டம் கொத்தித்து எழுந்து விடும். எனவே உங்களது எச்சரிக்கை உணர்வு சரியானது தான்.

தொடர்ந்து எழுதுங்கள். குறிப்பாக மலரக்காவின் வாழ்வு இன்றைய நிலைக்கு எவ்வாறு நகர்ந்தது என்பதை அறிவதில் ஆர்வமாய் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோ.பற்குணராசா வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

சமீப காலமாக யாழ்.நகரத்தில் விபச்சாரம் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்புகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சாத்திரியாற்றை கதையை அந்த அம்மாவும் வாசிக்கிறாவோ

:(

  • கருத்துக்கள உறவுகள்

கதை சுவாரசியமாகனப் போகின்றது. தொடருங்கள் சாத்ஸ்.

இன்னுமொருவன் சொன்னதுபோல் ஊரில் ஒளிவுமறைவுக் காதல்மேல் இருந்த சுவாரசியம், பதின்ம வயதில் புலம்பெயர்ந்த பின்னர் வெளிப்படையான காதல்களைப் பார்த்ததும் குறைந்துதான் விட்டிருந்தது. அதனால்தான் என்னவோ புலம்பெயர் களங்களை வைத்து ரம்மியமான காதல்கதைகளைப் படைக்க பலராலும் முடியவில்லை!

அம்மாவின் முலையும் மடியும் இடுப்பும் மூச்சுக் கதகதப்பும் கிடைத்து விலகியபின் அதன் தொடர்ச்சியாய் எட்டு வயதுவரை அடுத்த வீட்டுப் பெண் தோழமை கிடைக்கின்றது. ஒன்பது வயதுப் பெண் விலகிவிடுகின்றாள். பத்து வயதில் முற்றாகவே பிரிந்துவிடுகின்றாள். பன்னிரண்டு, பதின்மூன்று வயதில் அவள் முகதரிசனமே அபூர்வம். பதினெட்டு வயதில் அதேபெண் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் முகம் சுளிக்கின்றாள். பிறகு பாலைவன வெம்மை. கடும் உறவுப் புழுக்கம். பின்பு திருமணம் பேசி நடக்க, பல வருடங்களுக்குப் பிறகு பெண் ஸ்பரிஸம் கிடைக்கின்றது.

- பாலகுமாரன்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்ஸ அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்....நம்ம ரதி அக்காக்கு அடிக்கடி வாற மாதிரி.............

நீங்க அந்த ஆன்டி லா சாப்பலுக்கு பக்கத்தில இருக்கிற ஒரு கோயில்ல இருக்கிறா என்டு சொல்லிடிங்க இனி அங்க போற சனம் எல்லாம் சாமிய பாக்கிறதுக்கு பதிலா மலர் ஆன்டிய அல்லோ தேடபோயினம்......அவாக்கு ஒருத்தரும் இல்ல இருக்கிறதே அந்த கோயில் தான் பாவமல்லோ அவா

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

என்குறிப்பு..

.

முதன் முதலாக மலரக்காவுடன் உரசிக்கொண்டேன்.ஏன் முதன் முதலாக ஒரு பெண்ணுடனான உரசலும் அதுதான்.சைக்கிளை மேலும் வேகமாக மிதித்தேன்.என் முகம் அவரது முகத்திற்கு மிக அருகருகாக வந்து போனது.அவரது தலைமுடியின் சண்சில்க் சம்பூ வாசனை எனது நாசியில் இறங்கி உடல் முழுதும் பரவியது.இதயத்துடிப்பு அதிகரித்து வழைமையை விடஅதிகமாய் வியர்த்து என் காற்சட்டையும் விறைத்தது.மலரக்காவை படலையடியில் இறக்கிவிட்டு வேகமாக வயற்பக்கமாக சைக்கிளை மிதித்தேன் அங்கு உயரமாய் வளர்ந்து மஞ்சள் மயமாய் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்த சணல் வயலிற்குள் மறைந்துபோனேன்.

""ஆத்தா நான் வயசுக்கு வந்து விட்டேன்""...........................................தொடரும்.

வக்கிர புத்தி கொண்ட ஆண் வர்க்கத்தினால் இப்படிப் பல பெண்கள்

உருவாக்கப்பட்டிருக்கின்றார்கள் .

தன்னுடைய சுய இச்சைகளுக்காக ஒரு பெண்ணை அவள் மனம் அறியாமலே

பாவித்திருக்கின்றார்

இதுவும் ஒருவகையில் வன்புணர்ச்சியே

வாசிப்பவர்களுக்கு

மலரக்காவில் கோவமா? அனுதாபமா? கிளுகிளுப்பா ஏற்படுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி கதை சுவாரசியமாக உள்ளது.

பதின்ம வயதில் கனடா வந்தபோது எனக்கு ஏற்பட்ட முதல் கலாச்சார அதிர்ச்சிகளில் ஒன்று காதல். தமிழ் சினிமா காட்டின காதல், தமிழ் இலக்கியம் சப்பித் துப்பின காதல், ஊரிற்குள்ள பார்த்த காதல், யாழ்ப்பாண பஸ்சுக்குள்ள பாத்த காதல் என்றெல்லாம் எத்தனையோ பில்டப்புகளோட என்னுடைய பதின்ம வயது மனதிலும் அன்றைய மனவமைப்பிற்கு ஏற்றபடி துளிர்த்துக் கொண்டிருந்த காதல் என்ற சொல்லிற்கு அர்த்தமான ஒரு முகத்துடனும் வந்தும் கனடாவில இறங்கினபோது என்ர காதல் அத்திவாரம் ஆடிப்போனது.

ஒருவரில் இன்னுமொருவரிற்கு ஈர்ப்பு ஏற்படுகையில் அது தொடர்பான நேரடியான நடைமுறைகள், சரிவரும் பட்சத்தில் தம்மை ஒரு சோடியாக வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் தன்மை, பின் சரிவராத பட்சத்தில் பிரிவதில் தெரிந்த நேரடியான நடைமுறைகள், இதர சோடிசேரல் என காதல் என்ற விடயம் முற்றிலும் சுவாரசியமற்றுத் தெரிந்தது. இச்சுவாரசியமிழப்பிற்கான அடிப்படையாகத் தெரிந்தது வெளிப்படைத் தன்மையே.

ஊரில் முன்னர் கேட்ட ஒரு நகைச்சுவை: ஊரில் எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு பங்குக் கிணறு இருந்ததாதம். ஆந்தக் கிணற்றின் பாவனையாளர்களில் ஒருவரான ஒரு இளம் பெண்ணில் ஒரு இளைஞனிற்குக் காதலாம். இந்நிலையில் திடீரென அவ்விளைஞனிற்கு வெளிநாட்டுப் பயணம் சரிவர, ஒருநாள் தக்கித் தடுமாறி கிணற்றடியில் அப்பெண்ணிடம் சென்று பலத்த தயக்கத்துடன் எங்கட விசயம் உங்கட அம்மாப்பாக்குத் தெரியுமோ என்று அந்த இளைஞன் கேட்டானாம். அதுக்கு அந்தப் பெண் சொல்லிச்சாம் எங்கட விசயம் என்ன எண்டு எனக்கே தெரியாது பிறகெப்பிடி அம்மாக்குத் தெரியும் என்று.

ஓவ்வொரு சமூகம் ஒவ்வொரு விதத்தில் இன்பம் தேடல்கள் நோக்கி செயல்படுகிறது. எங்கட சமூகத்தின் மிகப்பெரிய கிழுகிழுப்பூட்டும் ரகசியம் பேசாப்பொருள். இதனால் தான் பல ஆண்களும் பெண்களும்; கலியாணத்திற்பின் உடற்பருமன் தொட்டுப் பல வகைகளில் உருமாறித் திரிகிறார்கள். கிடைக்காமல் இருக்கும் வரை தான் எங்களில் பலரிற்குக் கிழுகிழுகிழுப்பு. கிடைச்சபின் எவ்வித தேடலோ முயற்சியோ இன்றி சலிப்பு மட்டும் தான்.

சாத்திரி உங்கட கதை மிக சுவாரசியமாக இருக்கிறது. அதில் எனக்கு இரண்டாம் கருத்து இல்லை. ஆனால் ஒரு வேளை அந்த சமூகத்தில் பொருளாதாரத் தெரிவுகள் பலதுபட்டு இருந்து, பேசாப்பொருட்கள் குறைவாக இருந்து, சரிவராத கலியாணங்கள் பிரிவது இலகுவாக இருந்து, கலியாணமானவர்கள் பிரிந்து இதரசோடி சேர்வது அல்லது, விவாகரத்தானவர்கள் டேற்றிங் செய்வது துணைதேடுவது போன்ற நடை முறை இருந்து, இந்த சங்கக் கடை மனேச்சர் நேரடியாக மலரக்கா வீட்டை போய் அவவைக் கூட்டிக்கொண்டு வெளியிலலையும் போய் வந்திருப்பின் உங்கடை கதைக்கான அடிப்படையே இல்லாமல் போயிருக்கும். மலரக்கா மறைவாய் பின்வாசலால் சங்கக்கடைக்குள்ள போனதில தான் கதைக்கான அடிப்படையே இருக்கிறது. பேசாப்பொருள் என்று சொல்லிச் சொல்லியே பேசாப்பொருளைப் பேர்த்தெடுக்கும் கில்லாடிச் சமூகம் எங்களுடையது.

இந்த அடிப்படையில் விரசம் கலக்காமல் எழுதவேண்டும் என்ற அவதானம் உங்களிற்குள் எழுவது, கதைகதையாம் பகுதியில் இணைக்கலாமா என்ற பயம் முதலியன உள்ளடக்கமாக பல விடயங்கள் எங்கட சமூகம் தனக்குத் தெரிஞ்ச கிளுகிளுப்பு மாத்திரையான பேசாப்பொருளைப் பாதுகாக்கும் அவதான உணர்வு மட்டுமே என்பது எனது அபிப்பிராயம். என்னைப் பொறுத்தவரையில் பேசாப்பொருள்களால் சீரழிஞ்சவர்களின் எண்ணிக்கை சீர்பட்டவர்களைக் காட்டிலும் அதிகம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. இதை நான் உங்கள் மீதான விமர்சனமாகக் கூறவில்லை என்னையும் உங்களையும் சேர்த்து எங்களது சமூகம் பற்றியதாகவே கூறுகின்றேன். அதே நேரம் எடுத்த எடுப்பில பேசாப்பொருள்களை பிய்த்தெறியவும் முடியாது. ஏனெனில் இந்த கிளுகிளுப்பு மாத்திரைக்கு அடிமையாகிக் கிடக்கும் ஒரு கூட்டம் அவதானமாய் இருக்கும். எப்போதாவது ஏதாவது பேசாப் பொருட்கள் வெளிப்படையாகும் அறிகுறி தெரிஞ்சால் இந்தக் கூட்டம் கொத்தித்து எழுந்து விடும். எனவே உங்களது எச்சரிக்கை உணர்வு சரியானது தான்.

தொடர்ந்து எழுதுங்கள். குறிப்பாக மலரக்காவின் வாழ்வு இன்றைய நிலைக்கு எவ்வாறு நகர்ந்தது என்பதை அறிவதில் ஆர்வமாய் உள்ளது.

இன்னுமொருவன் உங்களின் பார்வை எப்பொழுதும் யதார்த்தமான தான் இருக்கின்றது. போசாப் பொருள் என்பது கணவன் மனைவி என்கிற முடிச்சினுள் எவ்வளவு மோசமாக . கேவலமாக அருவருப்பாக நடந்தாலும் புனித திரை போட்டு மறைக்கப்படும்.ஆனால் அதற்கு வெளியே முடிச்சு இல்லாமல் ஆன்மதிருப்தியாக இருந்தாலும். அது சமூக கட்டுப்பாட்டை மீறியதாக ஒதுக்கப்படும்.இதே கதையை நான் ஒரு பத்து வருடங்களிற்கு முன்னர் எழுயிருக்க முடியாது.என்னுடைய உறவுகள் நண்பர்கள் என்று பயப்பட்டிருக்க வேண்டும்.எழுதியிருந்தாலும் எனக்கும் மனைவிக்கும்.பெரிய பிரச்சனையே வந்திருக்கும்.இப்பொழுது அனுபவங்கள் ஊடாக பண்டிருக்கிறோம் என்று சொல்வதை விட பழைய கதைகளை கேட்கலாம் என்கிற ஆர்வம் சிலரில்.இனி இந்த மனுசன் எங்கைதான் போகப் போகுது என்கிற அலட்சியத்தில் மனிசி.வெறும் மானம் கெளரவம் எண்டு வாழ்ந்து அதை அடைவு வைச்சு ஒரு யுரோவாவது பெறமுடியுமா என்கிற எனது ஆதங்கம்.

வக்கிர புத்தி கொண்ட ஆண் வர்க்கத்தினால் இப்படிப் பல பெண்கள்

உருவாக்கப்பட்டிருக்கின்றார்கள் .

தன்னுடைய சுய இச்சைகளுக்காக ஒரு பெண்ணை அவள் மனம் அறியாமலே

பாவித்திருக்கின்றார்

இதுவும் ஒருவகையில் வன்புணர்ச்சியே

நாகேஸ் என்கிற உறவின் பதில் இதோ.

எல்லா காலமும் எல்லாமும் இருந்திருக்கு ...கொஞ்சம் மறைவாய் கொஞ்சம் தெரிய ..கொஞ்சம் துணைச்சலாய் கொஞ்சம் கோழைத்தனமாய் கொஞ்சம் முட்டாள் தனமாய் .கொஞ்சம் பெருமூச்சாய்..இந்த எழுத்தாளரைப் போல ஏ,பீ ,சி டி ஈ ..பதின்மங்களிலை எழுத பழகியவர்கள் அல்லது பழக்கபட்டவர்கள் போல நிறையவே கால வரிசையில் இருந்தே இருக்கிறார்கள்...எஸ் .பொன்னுத்துரையின் சடங்கு ,தீ போன்ற நாவல்களை வாசித்து இருந்தீங்கள் என்றால் உங்களுடைய அந்த உங்களுக்குள் இருக்கும் அந்த கலாச்சார மாயை தெளிவாகும்...... ஏங்க அந்த காலத்து பாகை மானியில் 90 பாகையை அளக்கவியலாதே?

யாழ்கள விருது பகுதியில் கலாச்சார காவலர்என்கிற பட்டத்திற்கு உங்களை முன்மொழிகிறேன்

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சிங்களவன் திறம் ........."

அப்ப ஏன் தாங்கள் கனடாவில் :icon_idea:

அலைமகள் இந்தக் கதையில் அரசியலே வேண்டாம்.எமது சமூகம் அதில் உறைந்து போயுள்ள பல பிற்போக்கு தனங்கள் இளவயது பாலியல் உணர்வுகள் எப்படி தவறான பாதைகளில் பயணம் செய்கின்றது என்பதை மட்டும் பேசுவோமே..இங்கும் புலிகள் வேண்டாமே..ஏனெனில் இவைகள் புலிகள் காலத்திலும் இருந்தவைகள்தான்.இயற்கையானது

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை சுவாரசியமாகனப் போகின்றது. தொடருங்கள் சாத்ஸ்.

இன்னுமொருவன் சொன்னதுபோல் ஊரில் ஒளிவுமறைவுக் காதல்மேல் இருந்த சுவாரசியம், பதின்ம வயதில் புலம்பெயர்ந்த பின்னர் வெளிப்படையான காதல்களைப் பார்த்ததும் குறைந்துதான் விட்டிருந்தது. அதனால்தான் என்னவோ புலம்பெயர் களங்களை வைத்து ரம்மியமான காதல்கதைகளைப் படைக்க பலராலும் முடியவில்லை!

அம்மாவின் முலையும் மடியும் இடுப்பும் மூச்சுக் கதகதப்பும் கிடைத்து விலகியபின் அதன் தொடர்ச்சியாய் எட்டு வயதுவரை அடுத்த வீட்டுப் பெண் தோழமை கிடைக்கின்றது. ஒன்பது வயதுப் பெண் விலகிவிடுகின்றாள். பத்து வயதில் முற்றாகவே பிரிந்துவிடுகின்றாள். பன்னிரண்டு, பதின்மூன்று வயதில் அவள் முகதரிசனமே அபூர்வம். பதினெட்டு வயதில் அதேபெண் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் முகம் சுளிக்கின்றாள். பிறகு பாலைவன வெம்மை. கடும் உறவுப் புழுக்கம். பின்பு திருமணம் பேசி நடக்க, பல வருடங்களுக்குப் பிறகு பெண் ஸ்பரிஸம் கிடைக்கின்றது.

- பாலகுமாரன்

கிருபன் ஊரில் காமத்தை காதல் கண்ணாடி போட்டு பார்த்தோம்.வெளிநாட்டில் காதலை காமக்கண்ணாடி போட்டு பார்க்கிறோம்.அவ்வளவுதான் இது என் கருத்து :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் ஊரில் காமத்தை காதல் கண்ணாடி போட்டு பார்த்தோம்.வெளிநாட்டில் காதலை காமக்கண்ணாடி போட்டு பார்க்கிறோம்.அவ்வளவுதான் இது என் கருத்து :wub:

வணக்கம்,

சாத்திரியார் கிராமங்களில் வளர்ந்தாலும் (நாங்கள் ஜப்பன டோவ்ன் டவுன் சுத்தி சுழன்டாக்கள் கண்டியளோ ) வளர்ந்த நாடுகளில் உள்ள வாழ்க்கை முறையை நன்றாக விளங்கி கொண்டுளீர்கள். இங்கே வந்து பலருக்கும் இருந்த முதல் தேவை இங்குள்ள வாழ்கை முறைக்கு அடிப்படையானவற்றை தேடுவதே. அதில் எங்களுக்கு இங்கேயுள்ள வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள கிடைத்த சந்தர்பங்கள் குறைவு, அல்லது அதற்காக நாங்கள் முயன்றது குறைவு. உதரனத்திற்க்கு, எனது மகள் (4 வயது ) இன்று வாங்கிய பொருள் ஒன்று, cotton candy , நான்தான் காசு கொடுத்தது. ஆனால் அது என்ன வென்று தெரியாது, அதைபற்றி அறிய முயலவும் இல்லை. மனைவி அதை எடுத்து உயரத்தில் வைத்து விட்டார், மகள் வந்து அப்பா காட்டன் கண்டி, காட்டன் கண்டி , அரி, அரி என்று அரித்தும் எனக்கு என்ன வென்று தெரியவில்லை. கடைசியில் என்ன வென்று பார்த்தால், அது எங்கட "பஞ்சு மிட்டாய்" "தும்பு மிட்டாஸ்" இப்படித்தான் எங்களுடைய தேடல்கள் இங்கே இருக்கிறது. இங்கே உள்ள வாழ்க்கை முறை இங்குள்ளவர்களுக்கு சரி எனப்படுகிறது, அவர்களும் நாங்கள் பயணித்த/ பயணிக்கும் அதே பயணங்களை தொடர்வார்கள், இதில் நாங்கள் எதையாவது காணவில்லை என்று தேடினால், அது எங்கள் தேடலில் குறைவே தவிர, அங்கே நாங்கள் தேடியது இல்லை என்று பொருளாகாது.

அர்ஜுன், இப்படி கேக்கப்படாது, மனிதம் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்..:)

கிட்டடியில், ஒரு பெண் வந்தார் தனது 63 / 65 வயதுடைய குடிகாரா கணவனை தள்ளிக்கொண்டு- அவரால் நடக்க முடியாது- எனக்கு வந்த உணர்வுகள், - என்னால் கட்டுபடுத்த முடியவில்லை- ஆனாலும், கூடியமட்டும், மிருகத்தை அடித்து துவைத்து, நான் செய்ய வேண்டியதை செய்தேன். என்னை உறுத்திய விடயம், இந்த ஆண் பெண் உறவு, எல்லா இடங்களிலும் எல்லா வகைகளிலும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான கதை..! :rolleyes: இது பின் நவீனத்துவமா அல்லது முன் நவீனத்துவமா? :icon_mrgreen:

சாத்து பின்பக்கம் உரசின படியால இது "பின்" நவீனத்துவம் தான். இனி முன்னால் ஏதும் செய்தால் தான் "முன்" நவீனத்துவம் ஆகும். சரியா?

இந்த கதை வாசிக்கும் போது எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு உடன்வந்தது.கொழும்பிற்கு குடும்பமாக போகின்றோம்.அப்பா,அம்மா,அக்காமார்,தம்பி,நான் உட்பட.கொட்டகேநாவில் தங்கியிருந்த நாங்கள் கொழும்பில் படிப்பிக்கும் ஒரு உறவினர் பெண்ணை சந்திக்க வெள்ளவத்தை போனோம்.அந்தநேரம் போன் இல்லைதானே.சொல்லாமல் கொள்ளாமல் போய் இறங்கினால் அவரின் சகோதரியின் கணவன் வெறும் மேலுடன் நிற்கின்றார்.கணவர் வெளிநாட்டிற்கு அண்மையில் தான் போய்விட்டிருந்தார். அத்தான் ஒரு நேர் முகபரீட்சைக்கு கொழும்பு வந்தாராம்.நாங்கள் இருந்து பிஸ்கட்டும் நேக்டோவும் குடித்துவிட்டு போனோம்.ஆனால் அந்த காட்சி என் மனதில் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தி விட்டிருந்தது.பின்னர் அவர்கள் பற்றி குடும்பத்திற்குள் கிசுகிசு வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல ஊர் பேச்சு வழக்கிலே நகைச்சுவை கலந்த அமைந்த கதை அருமை சாத்திரி அண்ணா. சின்னனிலேயே ஆள் சிங்கன் போல. சிறிய வயதுகளிலே வயது கூடியவர்களின் மீது ஏற்றப்படும் ஈர்ப்பு இயல்பானதே. எங்களது வீட்டிற்கு கிட்ட இருந்த ஒரு அக்காவும், எங்களது கல்லூரியில் இருந்த ஒரு சங்கீத ஆசிரியரும் நான் பதின்ம வயதுகளிலே "நனைக்கும்" போது "நினைக்கும்" நினைவுகளில் வந்து போவார்கள். அவர்களுக்கு அப்போது திருமணம் ஆகவில்லை அத்துடன் என்னை விட ஒரு குறைந்தது பத்துப் பன்னிரண்டு வயசாவது கூட இருக்கும். உங்களைப் போல சைக்கிளில் எத்துற அளவுக்கு எல்லாம் சந்தர்ப்பம் அமையாட்டிலும் மியூசிக் டீச்சருக்கு கன்டீனில் அடிபட்டு சேட் பட்டின் கிழிய சாப்பாடு வாங்கிக் குடுக்கிற சந்தர்ப்பம் மட்டும் கிடைச்சிச்சு. என்னதான் எங்களது வயசுப் பெட்டையள் இருந்தாலும் அவர்களை நினைக்கும் போது ஒரு "கிக்" இருந்தது எண்டது மட்டும் உண்மை அதோடை அவர்களின் முதிர்ச்சியான தன்மையிலும் ஒரு கவர்ச்சி இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தித்த உறவைப்பற்றிய கதை. அதை எளிய எழுத்துநடையில் கொண்டு சென்றவிதம் அழகு. உரையாடல்கள் இயற்கையாய் அமைந்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் கதை வலு சுவராஸ்யமாக போகின்றது. உண்மையில், மலரக்காவில் அனுதாபம் ஏற்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளிற்கு சாமான் பாரமெண்டால் நீயோ கிடைச்சனி//

உங்கடை அம்மம்மா லேசுப்பட்ட ஆளாத்தெரியேல்ல...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல ஊர் பேச்சு வழக்கிலே நகைச்சுவை கலந்த அமைந்த கதை அருமை சாத்திரி அண்ணா. சின்னனிலேயே ஆள் சிங்கன் போல. சிறிய வயதுகளிலே வயது கூடியவர்களின் மீது ஏற்றப்படும் ஈர்ப்பு இயல்பானதே. எங்களது வீட்டிற்கு கிட்ட இருந்த ஒரு அக்காவும், எங்களது கல்லூரியில் இருந்த ஒரு சங்கீத ஆசிரியரும் நான் பதின்ம வயதுகளிலே "நனைக்கும்" போது "நினைக்கும்" நினைவுகளில் வந்து போவார்கள். அவர்களுக்கு அப்போது திருமணம் ஆகவில்லை அத்துடன் என்னை விட ஒரு குறைந்தது பத்துப் பன்னிரண்டு வயசாவது கூட இருக்கும். உங்களைப் போல சைக்கிளில் எத்துற அளவுக்கு எல்லாம் சந்தர்ப்பம் அமையாட்டிலும் மியூசிக் டீச்சருக்கு கன்டீனில் அடிபட்டு சேட் பட்டின் கிழிய சாப்பாடு வாங்கிக் குடுக்கிற சந்தர்ப்பம் மட்டும் கிடைச்சிச்சு. என்னதான் எங்களது வயசுப் பெட்டையள் இருந்தாலும் அவர்களை நினைக்கும் போது ஒரு "கிக்" இருந்தது எண்டது மட்டும் உண்மை அதோடை அவர்களின் முதிர்ச்சியான தன்மையிலும் ஒரு கவர்ச்சி இருந்தது.

பொதுவாய் எல்லாரையும் போல நாங்கள் அப்பிடியில்லையெண்டு பொய் சொல்லாமல் யதார்த்தத்தை எழுதியிருக்கிறீங்கள். :icon_idea:

இந்த கதை வாசிக்கும் போது எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு உடன்வந்தது.கொழும்பிற்கு குடும்பமாக போகின்றோம்.அப்பா,அம்மா,அக்காமார்,தம்பி,நான் உட்பட.கொட்டகேநாவில் தங்கியிருந்த நாங்கள் கொழும்பில் படிப்பிக்கும் ஒரு உறவினர் பெண்ணை சந்திக்க வெள்ளவத்தை போனோம்.அந்தநேரம் போன் இல்லைதானே.சொல்லாமல் கொள்ளாமல் போய் இறங்கினால் அவரின் சகோதரியின் கணவன் வெறும் மேலுடன் நிற்கின்றார்.கணவர் வெளிநாட்டிற்கு அண்மையில் தான் போய்விட்டிருந்தார். அத்தான் ஒரு நேர் முகபரீட்சைக்கு கொழும்பு வந்தாராம்.நாங்கள் இருந்து பிஸ்கட்டும் நேக்டோவும் குடித்துவிட்டு போனோம்.ஆனால் அந்த காட்சி என் மனதில் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தி விட்டிருந்தது.பின்னர் அவர்கள் பற்றி குடும்பத்திற்குள் கிசுகிசு வந்தது.

அர்ஜுன் அந்த நேரம் கணவன்மார் வெளிநாடுகளிற்கு அல்லது கப்பல் வேலைகளிற்கு போன வீடுகளிலை இது சர்வ சாதாரணம். :wub:

இந்த கதை வாசிக்கும் போது எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு உடன்வந்தது.கொழும்பிற்கு குடும்பமாக போகின்றோம்.அப்பா,அம்மா,அக்காமார்,தம்பி,நான் உட்பட.கொட்டகேநாவில் தங்கியிருந்த நாங்கள் கொழும்பில் படிப்பிக்கும் ஒரு உறவினர் பெண்ணை சந்திக்க வெள்ளவத்தை போனோம்.அந்தநேரம் போன் இல்லைதானே.சொல்லாமல் கொள்ளாமல் போய் இறங்கினால் அவரின் சகோதரியின் கணவன் வெறும் மேலுடன் நிற்கின்றார்.கணவர் வெளிநாட்டிற்கு அண்மையில் தான் போய்விட்டிருந்தார். அத்தான் ஒரு நேர் முகபரீட்சைக்கு கொழும்பு வந்தாராம்.நாங்கள் இருந்து பிஸ்கட்டும் நேக்டோவும் குடித்துவிட்டு போனோம்.ஆனால் அந்த காட்சி என் மனதில் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தி விட்டிருந்தது.பின்னர் அவர்கள் பற்றி குடும்பத்திற்குள் கிசுகிசு வந்தது.

முன்னறிவித்தல் இல்லாமல் ஒரு படையே ஒரு வீட்டுக்குப் போனது ஒருபக்கம், அங்கே போய் விசுக்கோத்தும் தின்று, நேக்டோவும் குடிச்சுப் போட்டு இப்ப இங்கே வந்து அந்தக் குடும்பத்தைப் பற்றி கிசு கிசு என்று எழுத நினைக்கும் உங்களை என்ன சொல்ல... :rolleyes: உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணலாமோ இன்னோ? :o<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொட்டை மூர்த்தியரை மாதிரி ஊருக்கு மூண்டுபேர் இருந்தாலே காணும்.கட்டிளம்காளைகள் பித்துப்பிடித்து அங்குமிங்கும் அலைய மாட்டார்கள். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.