Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா வா ம் ...பி ற பா க ர ன்

Featured Replies

லண்டனில் இருக்கும் போது spitting image , கனடாவில் royal canadian air farce இப்படியான நிகழ்சிகள் பார்க்கும் போது நினைப்பேன் இந்த மனபாங்கிற்கு நாங்கள் எப்போ வரப்போகின்றோம் என்று.

தலைவர்களை கடவுளின் அவதாரமாக உருவாக்கி அழியும் முன்றாம் உலகம்.

  • Replies 113
  • Views 17.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களை கடவுளின் அவதாரமாக உருவாக்கி அழியும் முன்றாம் உலகம்.

உந்த நக்கல் விளங்குகிறது.

கனடாவில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்காத தலைவரின் பெயர் தருக??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்புடன் தொடர்கதை எழுத யாரால் மனம் வரும்.

இதனை ஒரு, சிங்களவன் செய்வானா?

கன்னடன் செய்வானா?

மலையாளத்தான்... செய்வானா?

இல்லை...

ஈனத் தமிழனால்... மட்டுமே... முடியும்.

தமிழ் சிறி உங்களிற்கு நானும் ஒரு பச்சை குத்தியுள்ளேன். காரணம் சிங்களவனே கன்னடத்தவனோ மலையாளயோ பிரபாகரனைப்பற்றி இப்படி தலைப்பு போட்டு எழுதமாட்டான் அவனிற்கு அந்தத் தேவையும் இல்லை. மீண்டும் கதையின் முடிவிலும் உங்கள் கருத்தை எதிர்பார்த்து நன்றி வணக்கம் :)

பி.கு..ஈனம் என்றால் தமிழில் கதிர் என்றும் பொருள்படும். உதாரணம் ஒளிக்கதிர் <_<

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில் எழுதியுள்ளதுபோல ஒரு இந்திய ராணுவத்தினனோ அல்லது ஒரு சிங்களவனோ ஒரு தமிழனைப்பார்த்து சொன்னதாக கதை முடியும் என நினைக்கிறேன்..! :unsure:

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும் ஈனத்தமிழர்கள்தான் காரணம். ஈனத்தமிழர்களை நம்பிய பிரபாகரன் உண்மையிலேயே பாவம்தான்.

பிரபாகரன் யாரையும் நம்பி இருந்ததில்லை!...

உதவிகள்தான் எதிர்பார்த்திருந்தார்!

நம்பித்தான் யாரையும் வாழணும் என்ற... அவசியம் அவருக்கு இருந்து இருந்தால்...

இலங்கையின் மிகப்பெரிய ஒட்டுக்குழுவாகவும்

ஆசியாவின் ஒரு கோடீஸ்வரனாகவும் இருந்திருப்பார்!

அதனாலேதான் சொன்னேன் அவர் பெயரைகூட களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை!

பரவாயில்லை போகட்டும்... யானை சரிந்து வீழ்ந்தாலும்... அது பன்னிகளைவிட உயரமாகதான் இருக்கும்..........

தலைவர்... ஒரு யானை!! :)

  • கருத்துக்கள உறவுகள்

கதை முடியும்வரை வாசகப்பெருமக்கள் கொஞ்சம் பொறுமையா இருக்கலாமே??? :mellow:

பி.கு - இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லுறது மானிப்பாய் சங்கானை பிரதான வீதியில் மானிப்பாய் இறவிக்கை சந்தைக்கு பக்கத்தில் உள்ள சிறிய வீதியால் இறங்கினால் நவாலி வட்டுக்கோட்டை வீதியில் ஏறலாம். அந்த றோட்டு வட்டு சம்பந்தர் வித்தியாலத்துக்கு பக்கமாக போகுது. இடையிலை ஒரு றோட்டு பிரிஞ்சு சங்கானை சந்திக்கு போகுது. அந்த வெளியைதான் சங்கரத்தை என்று நான் நினைக்கிறன்..மட் பாண்டங்கள் செய்பவர்கள் அதிகமாக வாழும் பகுதி அது. கூகிழ் மைப்பில் பாத்தன் அந்த றோட்டே இல்லை.

சாத்து நீங்கள் சொல்லுற இடமும் சங்கானை தான்.நவாலி தான்ட ஒரு வெளி வரும்.அதுக்கும் வட்டுக்கோட்டைக்கும் இடையில் இருக்கும் ஊர் தான் சங்கரத்தை. :)

இணையவன்

<p class="author_info" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 15px; padding-right: 10px; padding-bottom: 15px; padding-left: 10px; width: 155px; float: left; font-size: 10px; text-align: center; background-image: none; background-attachment: scroll; background-origin: initial; background-clip: initial; background-color: rgb(248, 248, 248); border-right-width: 1px; border-right-style: solid; border-right-color: rgb(204, 204, 204); background-position: 0px 0px; background-repeat: repeat repeat; ">

மட்டுறுத்துநர்

  • photo-thumb-4195.gif
  • கருத்துக்கள நிர்வாகம்
  • bullet_black.pngbullet_black.pngbullet_black.png
  • 2351 posts

  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted Today, 09:09 AM

'பா வா ம் பி ற பா க ற ன்.....' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

அது தப்புன்னு சொன்ன .........

என்னோட கருத்தில ஒண்ணை அவர் நீக்கிட்டாராம்!.......

மத்தும்படி ..அந்த தலைப்பு ஒண்ணும் பாவமில்லையாம்!
:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில் எழுதியுள்ளதுபோல ஒரு இந்திய ராணுவத்தினனோ அல்லது ஒரு சிங்களவனோ ஒரு தமிழனைப்பார்த்து சொன்னதாக கதை முடியும் என நினைக்கிறேன்..! :unsure:

உங்கள் ஊகம் ஓரளவிற்கு சரியானது. ஆனால் அதுவல்ல முடிவு ^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஆண்டு 15.03.1995 இடம் யாழ்குடாநாடு ஆறுகால்மடம் கிராமம். காலை 8 மணி."

இந்த காலப்பகுதியில் கொமினிகேசன் இருந்ததா?

நீண்ட நாளின் பின் மீண்டும் கழுதை. நல்வரவாகுக. கெட்ட வார்த்தைகளில் மின்னஞ்சல் அனுப்பாமல் விட்டாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியண்ணா நான் உங்களுக்கு வக்கலாத்து வாங்கிறேன், தயவு செய்து தலைப்பை நீக்கிவிடுங்கள் என்று சொன்னால் நீக்கிவிடுவீர்களா? நீங்கள் அனுப்பிய யூரோ கிடைத்தது உங்களுக்காக வக்காலத்து வாங்க, என்ன செய்ய திருப்பி அனுப்பிவிடுகறேன்,

பி.கு: எனக்கும் பிடிக்கவில்லை தலைப்பு, அறிவிலிக்கு பச்சை குத்தின ஆட்களில் நானும் ஒருவன்.

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியண்ணா நான் உங்களுக்கு வக்கலாத்து வாங்கிறேன், தயவு செய்து தலைப்பை நீக்கிவிடுங்கள் என்று சொன்னால் நீக்கிவிடுவீர்களா? நீங்கள் அனுப்பிய யூரோ கிடைத்தது உங்களுக்காக வக்காலத்து வாங்க, என்ன செய்ய திருப்பி அனுப்பிவிடுகறேன்,

பி.கு: எனக்கும் பிடிக்கவில்லை தலைப்பு, அறிவிலிக்கு பச்சை குத்தின ஆட்களில் நானும் ஒருவன்.

உடையார் இதெல்லாம் இரகசியமாய் பேசவேண்டிய விசயம் இப்பிடி பள்ளிக்கா சொல்லப்படாது ..சரி சரி யூரோவை திருப்பி அனுப்பி விடுங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

1995/1996 ஞாபகங்கள் அருமை சாத்திரி அண்ணா.  எங்கட வீட்டிலையும் 12 பேர் இருந்த நாங்கள். நானும் அப்ப சின்னப் பெடியன், 9/10 வயசிருக்கும.  (சபேஷிண்ட கணக்குப் படி இப்பவும்  சின்னப் பெடியன் தான்). விடியக் காலமை நாலு மணிக்கு பேக்கரிக்கு போய் பாணுக்கு கியூவில நிக்கிறது, பிறகு ஜாம் போத்தல் விளக்கு. அதிலயும் பஞ்சு போட்டது, எண்ணெய் விட்டது, தண்ணி விட்டது, உப்புக் கல்லு போட்டது எண்டு ஊறுப்பட்ட வகை.  பகல் பகலா பட்டம் ஏத்துறது, கடல்  குளிப்பு எண்டு பொழுது போகும். சங்கக் கடையில கியூவில போய் நிண்டு பம்பலடிக்கிறது. அதுவும் யாழ்பாணத்தில இருந்து எங்கட வீட்ட வந்து நிண்ட பெடியன் சென்ஜோன்ஸ்ல தான் படிச்சவர். அக்கா சுண்டுக்குளி, இதால எங்கட வீடு எப்பவுமே அமர்க்களமாய் இருக்கும். சண்டை பற்றி எதுவுமே எங்களுக்கு தெரியவில்லை. எப்பவுமே மீண்டு வராத நாட்கள் :(

நண்பேண்டா....:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளினதும் யாழ்கள நிருவாகத்தினதும் வேண்டுகோளிற்கிணங்க பா வா ம் பிறபாகரன் என்கிற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாருக்கு நன்றி

பிரபாகரனை விட்டு விடுவோம்

யழ்கள் உறவுகளினதும் யாழ்கள நிருவாகத்தினதும் வேண்டுகோளிற்கிணங்க பா வா ம் பிறபாகரன் என்கிற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு நீக்கியமைக்கு நன்றி....

மகிழ்ச்சி சாத்திரியார் :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

யழ்கள் உறவுகளினதும் யாழ்கள நிருவாகத்தினதும் வேண்டுகோளிற்கிணங்க பா வா ம் பிறபாகரன் என்கிற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

நன்றி சாத்திரியார்.smile.gif

யள்கள் உறவு என்று எழுதியதை வேண்டுமென்று எழுதவில்லை என நம்புகின்றேன்.biggrin.gif laugh.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20.06.1997 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம்.

விமான நிலையத்தினுள் புகுந்துவிட்டிருந்த ரகுவிற்கு கண்ணாடி தடுப்பின் பின்னால் நின்றபடி கையசைத்படி மீனாச்சி நின்றிருந்தாள். கண்கள் கலங்கியிருந்தது ரகு கைகாட்டியபடியே மறைந்து போனான். "போய் இறங்கி போன் வந்ததும் வெள்ளவத்தை பிள்ளையாருக்கு நேத்தி வைச்சபடியே தங்க எலி வாங்கிக் குடுங்கவேணும். " என்று மனதில் நினைத்தபடி வாகனத்தில் போய் மீனாச்சி ஏறினாள்.

மீனாச்சி வவுனியா தாண்டியதுமே தாண்டிக்குளத்துக்கு அங்காலை நினைக்கவே விரும்பவில்லை நடந்தெல்லாம் கெட்ட கனவாய் மறந்து போனாள். அதாலைதான் பிறந்து வளந்த ஊர்கோயில் தாமரை வைரவருக்கே நேத்தி வைக்காமல் வெள்ளவத்தை பிள்ளையாருக்கு நேர்த்தி வைத்திருந்தாள். ரகுவும் இத்தாலியிலை இறங்கி சுவிசுக்குள்ளை போய் சேந்திட்டானாம் எண்டு செய்தி கிடைச்சதும். இரண்டு பவுணில் ஒரு எலி செய்து பிள்ளையார் கோயில் ஜயரின் அரிச்சனைத்தட்டில் போட்டாள்.ஜயருக்கு வாயெல்லாம் பல்லு......அடுத்த ஒரு மாதத்திலேயே மீனாச்சிக்கும் கொலண்ட் ஸ்பொன்சர் கிடைத்து வந்து சேர்ந்துவிட்டாள்.

சுவிசில் அகதி விசா கேட்ட ரகு சுறிச்மானிலத்திற்கு அருகில் ஒரு இடத்திற்கு ஒரு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தான்.உதவிப்பணம் மட்டும் கிடைத்து வேலை ஏதும் செய்யமுடியாது என்பதால் பொழுது போக்குவதற்கு சுரிற் பாணெவ்(இரயில் நிலையம்)அங்கைதான் சில தமிழ் பெடியளோடை பழக்கம் கிடைச்சது அவர்கள்தான் பாம்பு குறூப் எண்டு பிறகு தெரியவந்தது.ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் சுறிச் பொது பூங்காதான் அவர்களது சந்திப்பிடமாக மாறியிருந்தது.இரவு நேரம் செல்லச் செல்ல பியர் . கட்டை.கஞ்சா.என்று அந்தப்பூங்கா அவர்களிற்கு ஒரு சொர்க்கமாக மாறிவிடும்.இடையிடை வேறு யாருடனாவது அல்லது வேறு தமிழ் குழுக்கழுடனும் மோதல்களும் நடக்கும்.சண்டைகளை பாத்தால் ஏதும் பெரிய விடயமாக இருக்காது பெரும்பாலும் பெட்டையளை அடிப்படையாக கொண்டு தொடங்கினதாய்தான் இருக்கும்.பெட்டையை நக்கலடிச்சது.வெவ்வேறை குறுப்பிலை இருந்த பெடியள் ஒரு பெட்டையை லவ் பண்ணினது. பெட்டையை பின் தொடர்ந்து போனது இப்பிடித்தான் சண்டையள்.. சூறிச் பொலிசும் ஆரம்பத்திலை தமிழ் குழு சண்டையளை ஏதோ பெரிய அளவிலை நினைச்சுத்தான் தனிப்படை அமைச்சு வேகமாய் விசாரணை எல்லாம் செய்தவங்கள். பிறகு விசாரிச்சு கொண்டு போனதிலை அவங்களுக்கே வெறுத்துப்போச்சு. இப்பவெல்லாம் தமிழ் பெடியள் சண்டை எண்டு தகவல் போனாலே ஆறுதலாய் ஆடி அசைஞ்சு எல்லாம் முடிஞ்சால் பிறகு வந்து அங்கை காயப்பட்டவையளை ஆஸ்பத்திரிக்கு அனுபிப்போட்டு விசாரணையை தொடங்குவாங்கள்.

பாம்பு குறூப்பிலை சேர்ந்த ரகு தானும் புலியள் இயக்கத்தின்ரை றெயினிங். தவளைப்பாச்சல் நடவடிக்கைக்கு தானும் தவளை மாதிரியே பாய்ஞ்சு பழகின்னனான்.முல்லைத்தீவு முகாமுக்கள்ளை முதலாவதா புகுந்ததுநான்தான் என்று கொழுத்தி விட்ட வாணங்களை பலரும் நம்பி அண்ணாந்து பாத்தனர். அதுகளுக்குள்ளை நடந்த சண்டை ஒண்டிலை ரகு ஒருத்தனை கத்தியாலை குத்திப்போட்டான் குத்து வாங்கினவன் தப்பிட்டான்..குத்துவாங்கின பெடியனுக்கு விசா இல்லை அதோடை அவனும் அடிபாட்டு குறூப் எண்டதாலை அவனும் பொலிஸ் கேஸ் எண்டு போகேல்லை. அதோடை ரகு கீரோவாகிட்டான். அதுக்குப்பிறகு எந்த சண்டையெண்டாலும் பாம்பு குழு அவனைத்தான் கூப்பிடுவினம்.

.............................................................................................................................................................................................

01.05 1998 ம் ஆண்டு

அன்று மேதினம்.தொழிலாளர் தினம்

இது ஒரு தனி வரலாறை உலகில் உருவாக்கிய நினைவு நாள். 1886 இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வெடித்த ஒரு வரலாற்று புரட்சி உலகில் அனைவரின் வாழ்விலும் மாற்றத்தை வழங்கியது! அப்படி என்ன நடந்தது?நீராவி எந்திரத்தின் கண்டுபிடிப்பு உலகில் புதிய எந்திரங்களையும், தொழிற்கூடங்களையும் உருவாக்கியது. தொழிற்புரட்சி இந்த உலகில் அதிரடி மாற்றங்களை வழங்கிய காலமது. ஆலைகள், சுரங்கங்கள் என எங்கும் புது உருவாக்கங்களால் உலகம் வேகமாக சுழன்றது. வேலை, உற்பத்தி பெருக்கம் என உலகம் வேகமாக சுழன்ற வேளை குடும்பங்களில் அதன் தாக்கம் இருந்தது. எல்லோரும் 16, 18 மணி நேரம் வரை சுரங்கங்களிலும், ஆலைகளிலும் கடுமையாக உழைத்தனர். அப்போதெல்லம் கழைப்புடன் வேலையை விட்டு வரும்வேளை குழந்தைகள் நித்திரையில் இருப்பார்கள். இப்படியே காலங்கள் ஓடியத்தால் பல குழந்தைகளுக்கு தனது வீட்டுக்கு வரும் அந்த மனிதர் (அப்பா) யார் என்றே தெரியவில்லை. பாசத்தை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லாமல் போனது. உறவுகளோடு கலந்து வாழவும், ஓய்வு எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாமல் இயந்திரம் போன்ற வாழ்க்கையானது. ஆலை நிர்வாகமும், முதலாளிகளும் உற்பத்தி, இலாபம் என்பதில் மட்டும் கவனமாக இருந்தனர்.வேலை நேரத்தை குறைக்கவேண்டும் என பல போராட்டங்கள் நடந்தும் அந்த குரலுக்கு செவிசாய்க்காமல் அடிமைத்தனமான அணுகுமுறைகள் தொடர்ந்தன.

வேலைநேரம் வரையறுக்க கேட்டு 1886 மே 1இல் அமெரிக்காவின் பல பகுதிகளிலுமாக சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதன் ஒரு கட்டமாக 8 மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து சிக்காகோ நகரில் "மெர்க்காமிக் ஹார்வெஸ்ட் ஒர்க்ஸ்" என்ற ஆலையின் தொழிலாளர்கள் போராடினார்கள். போராட்டம் தொடர்ந்ததால் ஆலை மூடப்பட்டது, துப்பாக்கி தோட்டாக்கள் தொழிலாளர்களை கொன்றுகுவித்தது. அந்த அடக்குமுறையில் பிறந்தது 8 மணி நேரம் என்ற உரிமை! வடிந்த குருதியுடன் உயிர் சாயும் வேளையில், உதிரத்தில் தோய்த்து கரம் உயர்த்தி முழக்கமிட்ட அந்த மாமனிதர்களால் நமது உரிமைகள் பிறந்தன. அதில் ஒரு உரிமை தான் 8 மணி நேரம் வேலை என்ற உரிமை கிடைத்தது. சிகப்பு சிந்தனையின் தொடக்கமும், சிகப்பு கொடி உருவான வரலாறும் இதுவே.

சிக்காகோ நகரில் கொன்று குவிக்கப்பட்ட தொழிலாளர்களின் நினைவாக அவர்களிற்கு மே மாதத்தில் மலர்கின்ற சிறிய வெள்ளைப்பூக்களால் அஞ்சலி செலுத்து முகவாகவும் தொழிலாளர்களின் உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்தவும் உலகம் முழுவதுமே தொழிலாளர்கள் மே முதலாம் திகதி ஒன்று கூடி ஊர்வலம் நடாத்தி ஆடிப்பாடி மகிழ்வார்கள். அப்படி நடக்கும் ஒரு நிகழ்வில் ஒரு நூற்றாண்டு கடந்தும் மே தினக்கூட்டத்தில் இரத்தக்களரி நடக்கும் இடமாக சுவிஸ் சூறிச் மானிலம் விளங்கியது. அதுவும் ஈழத் தமிழர்களால்.

பல வருடங்களாக சுவிஸ் மக்களாலும் சுவிஸ்வாழ் வேற்றின மக்களாலும் தொழிலாளர் கட்சியின் செங்கொடிகள் ஏந்தி ஆடிப்பாடி மகிழ்ச்சியாய் நடந்துகொண்டிருந்த ஊர்வலத்தில் எண்பதுகளின் இறுதியில் சிவப்பு கறுப்பு கலந்த கொடிகளுடன் இணைந்து கொண்டார்கள். டொச்சு .பிறெஞ்சு.இத்தாலி.துருக்கி ஆகிய மொழிகளுடன் "அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம் "என்று தமிழிலும் கோசங்கள் கிழம்பியது. இவர்கள் சிறீலங்காவை சேர்ந்தவர்கள் இனம் மொழி மதம் இவையனைத்தையும் கடந்து உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வுடன் மற்றைய இனத்தவர்களும் கைகொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

அடுத்தடுத்த வருடங்களில் வேறும் பலர் இணைந்து கொண்டார்கள் அவர்கள் கொடியிலும் சிவப்பு வர்ணம் இருந்தது ஆனால் கோசம் வேறாக இருந்தது ""எங்கள் தலைவன் பிரபாகரன் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்."" ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்து எறிவோம் என்கிற கோசங்களும். எங்கள் தலைவன் பிரபாகரன் என்கிற கோசமும் மாற்றமடைந்தது ..அடியடா அவனை உதையடா.வெட்டடா.. என்றும் வேறு சில கெட்ட வார்ததைகளாகவும் மாறிப்போனது. எங்கும் இரத்தக்களரி மற்றைய இனத்தவர் திகைத்து நின்றனர். வருடத்தில் ஒரேயொருநாள் நிம்மதியாக இருக்கலாமென நினைத்திருந்த சூறிச் காவல்த்துறையினரிற்கு வேலை வந்து விட்டது. பலரையும் கைது செய்து விசாரித்தனர். அடிபட்டது இலங்கைத்தமிழர்கள்தான் ஆனால் இரண்டு பிரிவு வாக இருக்கின்றனர்அப்பொழுதுதான் அவர்களிற்கு புரிந்தது நாங்கள் தான் முதல்லை ஊர்வலம் நடத்த தொடங்கினாங்கள் அதாலை . அவங்களை ஊர்வலம் நடக்க விடமாட்டம். எண்டனர் ஒரு குறூப். நாங்கள்தான் நாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கிறம் எங்கள் தலைவன்தான் உயர்ந்தவன் எனவே நாங்கள் அவங்களை ஊர்வலம் நடத்த விடமாட்டம் என்றனர் மற்றைய குறூப். இரண்டு குறூப்பையும் விசாரித்த அதிகாரிக்கு தலையை சுத்தியது. தங்கடை நாட்டிலை வாழ வழியில்லையெண்டு இஞ்சை வந்து தஞ்சம் கோரிப்போட்டு எங்கடை நாட்டிலை யாரார் ஊர்வலம் நடத்தலாம் நடத்தக்கூடாது எண்டு இவங்களே தீர்மானிப்பாங்களாம். என்று நினைத்தபடி கைதுகள் தண்டனைகள் தொடர்ந்தது.

ஆனாலும் வருடாவரும் மேதினக்கூட்டத்தில் சண்டையும் தொடர்ந்தது.எண்பதுகளில் சுவிஸ் நாட்டில் தமிழர்கள் குறிப்பாக சூறிச் நகரம் புளொட் அமைப்பு மற்றும் புளொட் ஆதரவாளர்களையே அதிகமாகக் கொண்டிருந்தது.புலிகளின் அமைப்பிற்கு முரளி பொறுப்பேற்றபின்னர் அவரின் போச்சாற்றல் மற்றும் நிருவாகத்திறமை என்பன சுவிஸ்தமிழர்களை புலிஆதரவாளர்களாக மாற்றியது.இவருடைய காலத்திலேயே மேதினக் கூட்டத்தில் புலிக்கொடிகளுடனும் பிரபாரனது படங்களுடனும் மக்கள் தொகை அதிகரித்திருந்தது. ஆனால் அவரது தனிப்பட்ட சில தகாத செயற்பாடுகளும் நிதி கேட்டு சிலரை நேரடியாக மிரட்டியதாலும் சுவிஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையவாசம் அனுபவிக்க வேண்டி வந்தது.

அன்று மேதினம் ரகு குழுவினர் ஒரு காரின் டிக்கியில் பேஸ்போல் மட்டைகள் பொலுகள் உடலில் மறைக்கப்பட்ட கத்திகளுடன் தயாரானார்கள். அந்தக் குழுவின் தவைர் குகன் மற்றவர்களிற்கு திட்டத்தை விளங்கப்படுத்தினான் .இதுதான் இவங்களுக்கு கடைசி ஊர்வலம் இண்டைக்கு எப்பிடியும் ரஞ்சனை போடுறது. எல்லாரும் ஒதுங்கிட்டாங்கள் அவன் மட்டும்தான் இப்ப தனியா ஆடுறான் அவனுமில்லாட்டி அடுத்தவருசம் அனைத்து அடக்கு முறையளையும் உடைப்பம் எண்டு கத்த ஒருத்தரும் வரமாட்டாங்கள். பஸ் ஸ்ரான் தாண்டி பார்க் வற இடத்திலை கரை நிப்பாட்டி வைப்பம். நாங்களும் சனத்தோடை ஊர்வலமாய் வந்து காருக்கு கிட்டை நிப்பம் அங்கள் வந்ததும் தொடங்குவம்.

இவர்கள் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் பொழுதே புளொட் ஆதரவாளர்களும் திட்டம் தீட்டினார்கள். அவங்கள் எப்பிடியும் வருவாங்கள் நாங்கள் எங்கடையாக்களோடை போகாமல் அவங்களுக்கு முதல் வெள்ளையளோடை கலந்தபடி வெள்ளையளுக்கு நடுவிலையே போவம். அடிவிழுந்தால் வெள்ளையளிற்கும் சேந்துதான் விழும் அப்பதான் பிரச்சனை பெரிசாகும். புலியள் எண்டால் இப்பிடித்தான் எண்டு எல்லாருக்கும் தெரியவரும். இவர்கள் திட்டம் இப்பிடியிருக்க சூறிச் நகர காவல்த்துறை எப்பிடியும் சிறிலங்கன் அடிபடுவாங்கள் என்று எதிர்பார்த்தபடி தங்களது திட்டத்துடன் ஊசார் நிலையில் நின்றிருந்தார்கள்.

ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது மேளதாளங்கள் பாண்ட வாத்திய இசைகள்.பலமொழிகளில் கோசங்கள்.இவற்றுடன் நட்டுவமேளம் நாதஸ்வர இசையுடன் எங்கள் தலைவன் பிரபாகரன் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசமும் உரத்து ஒலித்து .ரகு குழுவினர் கார்டிக்கியை திறந்து ஆளிற்கொன்றை கையில் எடுத்தனர்.கொக்கியே விழையாடத் தெரியாத ரகுவின் கையிலும் ஒரு கொக்கி மட்டை.புளொட் கொடி ஏந்தியிருந்தவர்களை நோக்கி நகரத் தொடங்கினார்கள் சனங்கள் சிதறி ஓடத் தொடங்க ஊசார் நிலையிலிருந்த காவல்த்துறை செயலில் இறங்கியது.

ரகு ஒரு மாதகாலம் கவலில் வைக்கப்பட்டு அவனிற்கான அகதி அந்தஸ்த்து கோரலும் நிராகரிக்கப்பட்டு பதினைந்து நாட்களில் சுவிஸ் நாட்டை விட்டு வெறியேறிவிடவேண்டும் அதன் பின்னரும் சுவிசில் இருந்தால் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவான் என்று காவல்த்துறை எச்சரித்து விடுவித்திருந்தது.

சுவிசில் ஜெனிவா ஊடாக பிரான்ஸ் நோக்கி போய்க்கொண்டிருந்த கார் ஒன்றில் ரகு அமர்ந்திருந்தான். தொடரும்....................

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரியார்.smile.gif

யள்கள் உறவு என்று எழுதியதை வேண்டுமென்று எழுதவில்லை என நம்புகின்றேன்.biggrin.gif laugh.gif

தமிழ் அகராதியை புரட்டவும். :lol:

சாத்திரியார்

இந்த நூற்றி மூன்று புள்ளிகளுக்கும் அர்த்தம் என்ன? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரியண்ணா, இப்பதான் நீங்க வைச்ச தலைப்பிற்கும் கதைக்கும் தொடர்பு விளங்குது, அடுத்த தொடரை வாசிக்க இன்னும் கூட விளங்கும், பல சம்பவங்களை ஊறுகாய் மாதிரி தொட்டு செல்கின்றீர்கள், பல அறியாத சம்பவங்களை இதனுடாக அறிய கூடியதாக இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரியார்.smile.gif

யள்கள் உறவு என்று எழுதியதை வேண்டுமென்று எழுதவில்லை என நம்புகின்றேன்.biggrin.gif laugh.gif

திருத்தியுள்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையி;ல் சுயநல தமிழர்களுக்காக போராட புரபட்ட அனைவருமே பாவங்கள் தான் சாத்திரி அண்ணா

இங்கு அவுஸ்ரேலியாவில் புலிகள் மீதான தடைக்கும் அது தான் காரணம்.....

அதாவது அசைலம் அடித்தவர்களி;ல் பலர் புலிகளை பற்றி தப்பு தப்பாக சொல்லி அசைலம் அடச்சிட்டு பிறகு பல ஆர்பாட்டங்களி;ல் புலி கொடியோட நிண்டவை சுண்டலுக்கு அவையள பாக்க சிரிப்பு தான் வரும்

சிலபேர பாத்து நக்கலும் அடிச்சு இருக்கிறன்...என்னடா இங்க புலி கொடியோட நிக்கிறிங்கள் ஒருக்கா கேஸ் பைல கொப்பி எடுத்து இங்க ஆக்களுக்கு கொடுக்கட்டோன்டு........அவையள் அடிக்க வர சுண்டல் ஒடிடும்................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டுவிரல் பிறரை சுட்ட, நான்கு விரல்கள் என்னை சுட்டும் :icon_idea: :icon_idea: :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.