Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mv-vejle.jpg

இந்தவார ஒரு பேப்பரிற்காக

சாத்திரி

கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27

இந்த வருட மாவீரர் நாள் பற்றிய கட்டுரை ஒன்றினை கடந்த பேப்பரிலும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.புலம் பெயர் தேசமெங்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து பேசி ஒரு ஒற்றுமையுடன் மாவீரர்களிற்கான அஞசலியை செலுத்துவதே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையும் ஆகும் என்றும். என்றொரு வேண்டு கோளும் விடுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்தது ஆனால் ஆக்கபூர்வமான எந்த முடிவுகளும் எடுக்கப்படால் இரு குழுக்கள்தனித்தனியே இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாட்டினை செய்யத் தொடங்கியதோடு மட்டுமல்லாது. ஆளாறிற்கு தாங்களே உண்மையானவர்கள் மற்றையவர்கள் விலை போனவர்கள் இலங்கை இந்திய உளவாளிகள் என மாறி மாறி அறிக்கைப் போரும் தொடங்கி விட்டனர்.

இதில் ஒரு பிரிவினர் புலிகள் அமைப்பில் இருந்து மே 2009 ம் ஆண்டிற்கு பின்னர் இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படைகளிடம் சரணடைந்தும் வேறு விதங்களில் தப்பியோடி ஜரேப்பாவிற்குள் நுளைந்தவர்கள். இவர்களின் வாதமென்னவென்றால் கடந்த காலங்களில் புலிகளின் வெளிநாட்டு பிரிவினர் பல தவறுகளை விட்டுவிட்டார்கள் அதுதான் புலிகளின் அழிவிற்கும் புலிகள் மீதான தடைக்கும் காரணம். பெருமளவான நிதியினையும் இவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள்

எனவே அந்த நிதி மற்றும் சொத்துக்களை தாங்கள் பொறுப்பெடுத்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தினை தாமே நகர்த்தப் போவதாகவும். இனி வருங்காலங்களில் தாமே புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப் போவதாக கூறுகிறார்கள்.. இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது கடந்த காலங்களில் புலிகளின் அனைத்துலகச்செயலகத்தினரில் பலர் நிதி மோசடி. தங்கள் பதவி நிலைகளை தக்கவைப்பதற்காக மற்றைய உறுப்பினரை காட்டிக்கொடுத்தல்.

மாவீரர் நாள் நிகழ்வுகளை வியாபாரமாக மாற்றியது என பலவிடையங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவை எல்லாவற்றிலும் மாற்றம் வரவேண்டும் மாவீரர் நாள் புலம் பெயர் தேசங்களில் புனிதமாக நடைபெற வேண்டுமென மாவீரர் குடும்பங்கள் அங்கலாய்க்கின்றார்கள். ஆனால் புதிதாய் வந்திறங்கியவர்கள். பழைய நிருவாக சீர் கேடுகளை மாற்றியமைப்பவர்களாகத் தெரியவில்லை.

அதற்கான காரணங்கள். புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்து விட்ட பிறகு இனி வரும் காலங்களில் அனைத்து போராட்டங்களும் ஆயுதமற்ற வன்முறையற்ற அரசியல் மற்றும் சனநாயக ரீதியிலான மென்முறைப்போராட்டங்களே. இதனை யாரும் ஒழித்திருந்து பலபெயர்களில் செய்ய வேண்டிய தேவையில்லை. பகிரங்கமாவே செய்யலாம் கைகளில் புலிக்கொடி ஏந்தி தலைக்கு மேலே தலைவர் பிரபாகரனின் படத்தை உயர்த்திப் பிடித்தபடியே செய்யலாம் எவ்வித தடையும் இல்லை.

ஆனால் புதிதாக வந்தவர்களோ ஒவ்வொரு நாடுகளில் வேறு வேறு பெயர்களில் அதுவும் புலிகளின் அமைப்பில் இருந்த தளபதிகள் அல்லது பழைய உறுப்பினர்களின் பெயர்களான வினாயகம்.சங்கீதன்.அல்லது தயாபரன். ஜேம்ஸ். தும்பன்.கரிகாலன். தமிழரசன்.சுரேஸ். சீர்மாறன். என்கிற பெயர்களில் நடமாடுவதோடு. பல இரகசியக் கூட்டங்களை மட்டுமே இதுவரை ஜரோப்பிய நாடுகளில் நடத்தியுள்ளனர். தாங்களே இறுதிவரை தலைவருடன் முள்ளி வாய்காலில் நின்றதாக கூறிக்கொண்டு புதியதொரு கட்மைப்பினை கட்டியமைத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப் போவதாக கூறும் இவர்கள்.முதலில் பொதுக்கூட்டங்களை கூட்டி மக்கள் முன் தோன்றியோ .அல்லது ஊடகங்களான வானொலி தொலைக்காட்சிகளில் பங்கு பற்றியோ இறுதி யுத்தத்தின் போது நடந்த சம்பவங்கள் பற்றி புலம்பெயர் தேசத்து தமிழர்களிள் மனங்களில் தத்தளிக்கு பலநூறு கேள்விகளிற்கு பதில் கொடுத்து முதலில் அவர்களிற்கு தெளிவைக் கொடுக்கவேண்டும். அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தினை எப்படி நகர்த்துவது அல்லது நகர்த்தலாம் எக்கிற ஆலோசனைகள் பகிரங்கமாக கலந்துரையாடப்படல் வேண்டும்.

அதே நேரம் ஜரோப்பிய நாடுகளில் இவர்களது அகதி தஞ்சக் கோரிக்கைகள் இன்னமும் அனுமதிக்படாமலேயே சரியான ஆவணங்கள் கடவுச்சீட்டு இன்றி இவர்களால் எப்படி எல்லைப் பாதுகாப்பு கூடிய இங்கிலாந்து சுவிஸ்.நோர்வே . டென்மார்க் போனற நாடுகளிற்கொல்லாம் சுதந்திரமாக போய் இரகசியக் கூட்டங்கள் நடாத்த முடிகின்றது என்பதனையும் மக்களிற்கு புரியவைக்கவேண்டும்.விடுதலைப் புலிகள் தடைசெய்யப் பட்டுள்ள ஜரோப்பிய நாடுகளில். தாங்கள் அந்த அமைப்பின் அசல் பிரதிநிதிகள் என சொல்லித் திரியும் பொழுது இவர்களை இயங்கவிட்டு பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நாட்டு உளவுத்துறையினர் இவர்கள் விடயத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள் என நாம் எடுத்துக்கொள்லாமா?? அல்லது தீவிரவாத எதிர்ப்பு அணுகு முறையின்(counter insurgency) அடிப்படையில் அவர்களது ஆதரவும் உள்ளது என எடுத்துக்கொள்லாமா??அல்லது எல்லாமே இந்த நாட்டு உளவமைப்புக்களிற்கு தெரியாமல் நடக்கின்றது என சொல்ல வருகின்றார்களா?? இது பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படும் வரை இவர்கள் மீதான சந்தேகங்கள் தொடரும்.

அடுத்து மாவீரர் நாளிற்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார எம்.பி ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.

எனவே மாவீரர் வணக்க நிகழ்வினை யார் ஒழுங்கு செய்தாலும். கொத்துறொட்டிக்கடை புடைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்றும் ஜரோப்பாவின் யாரோ ஒரு கடைசி வாங்கு பாராளுமன்ற உறுப்பினர் வரவழைக்கப் பட்டு அவர் வடைக்கதை சொல்லாமலும்..இந்தியாவிலிருந்து உணர்ச்சிகர மேடைப் பேச்சாளர்கள்சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு வீண் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்காமல் அனைத்தையும் தவிர்த்து .. பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பட்டெளி வீசிப்பறக்க மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் வரவேற்க ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே "என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல.....மக்களும் வரமாட்டார்கள்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரியண்ணா பகிர்வுக்கு, இப்படி இவர்கள் ஆடினால் வீட்டில் விளக்கேற்றி கும்பிட வேண்டியதுதான், இன்று அத்தியட்டிக்கு போன வேளை இதைப்பற்றி கதைத்தம், இங்கு எந்த பிரச்சனையும் இல்லை, யாரும் ஊடுருவமும் முடியாது, எல்லோரும் தெளிவாக இருக்கிறார்கள்

உண்மையின் குரல்!!!!!!!!!!!!!!!!!. எடுபடுமா?????????????????? :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பட்டெளி வீசிப்பறக்க மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் வரவேற்க ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே "என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல.....மக்களும் வரமாட்டார்கள்.

இதைத்தான் நான் பேசிய பலரும் சொன்னார்கள், இதுதான் எனது கருத்தும்.

அடுத்து மாவீரர் நாளிற்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார எம்.பி ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.

வரும் MP களின் சுயநல அரசியலுக்கு எமது மாவீரர்களின் தியாகங்களை தாரைவார்க்க முடியாது எமது தேசியத்தலைவர் பிரபாகரன் என்பதையும் எமது கொடி புலிக்கொடி என்பதையும் ஏற்று எவராவது பேசவந்தால் அவரை நாம் ஏற்ப்போமே தவிர வேறு எவரையும் அவர்களின் சுயநல அரசியலுக்கு அனுமதி தரோம் என்பதை உறுதி பட சொல்ல வேண்டும் ஏற்ப்பாட்டளர்களிடம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டு,மூன்று வருடங்களாக மாவீரர் தின விழாவிற்கு போவதில்லை அதற்கு பதிலாக கோயிலுக்கு போய் அனைவரது ஆத்மாவும் சாந்தி அடைய வேண்டி ஒரு விளக்கை எரித்து விட்டு வருவேன்.இந்த வருடமும் அதைத் தான் செய்வேன்

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தெளிவாக இருந்தால்......

எவரும் எம் மாவீரரை அவமதிக்கமுடியாது.

இவர்களையும் மாவீரர் நாள் செய்ய அனுமதிக்கவேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

நாம் தடைகளைப்போடுவதால்தான் இவர்கள் ஆ ஊ என்கிறார்கள். மக்கள்முன் முகங்களைக்காட்டட்டும். முடிவு மக்கள் கையில்தான்.

  • தொடங்கியவர்

விசுகு மாவீரர் நாளை யார் வேண்டுமானாலும் செய்யட்டும் அது ஒன்றும் தனிப்பட்டவரின் குடும்பச் சொத்து அல்ல..ஆனால் நாங்கள் செய்யிறதுதான் உண்மையானது. எங்கடைஅறிக்கைதான உண்மையானது. மற்றவன் எல்லாம் விலை போனவன் என்று தூற்றாமலும் கையை உடைப்பன் காலை உடைப்பன் என்று ஆளாளிற்கு அடிபடாமலும் செய்தாலே போதுமானது. அதே நேரம் றிக்கற் அடிச்சு காசு வாங்குவது மட்டும் குறிக்கோளாக இல்லாமல் சனம் கேக்கிற கேள்வியளிற்கும் பதிலை சொல்லட்டும்.

மாவீரர் படங்களுக்கு பூ போட்டு கும்படக் கூட பூவிற்கு காசு குடுக்கவேணும் மாவீரர் குடும்பங்கள் . ஆனால் , அவர்கள் கும்பிட்டு மறுகணமே அந்தப் பூக்கள் மீள் விற்பனைக்குப் போய்விடும் . சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால் திமிர்தனமான பதில் < இங்கு அப்படித்தான் > . இதைவிட ரதி சொன்னமாதிரி ஒரு கோயில்லை போய் அவர்களை நினைத்து ஒரு விளக்கு ஏத்தி வைத்து விட்டு வரலாமே??? மன உளைச்சல் மிச்சம் . சாத்திரி சொன்னது நூறு வீதம் சரி < பவாம் பிறபாகரன் > :( :( :( :( .

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தைப் பற்றி இப்படிப் புறுபுறுக்கிறதை எங்கடை ஆக்கள் அது தொடங்கிய காலம் தொட்டு செய்து வருகினம். முன்னர் ஊரில் மாவீரர் தினத்துக்கு வீதி வளைவுகள் கட்டுறதை கொஞ்சம் திட்டித் திரிஞ்சுது. கொஞ்சம் பொம்பர் அடிக்க அடையாளம் கட்டுறாங்கள் என்று பதறி அடிச்சு.. கொழும்புக் கூட ஓடிச்சுதுகள். அப்புறம் மாவீரர் குடும்பங்களுக்கு சலுகை அது என்று கொஞ்ச நாள் ஒரே புறுபுறுப்பு. இப்ப ஊர் முடிஞ்சுது.. புலம்பெயர் தேசம்..!

அங்கையும்.. உதுக்கு ஒரு வழிபண்ண வேணாமோ... மாவீரர் தினத்தை கொண்டாடுவதால்.. சிங்களப் படையினர் - தமிழ் மக்கள் உறவு பாதிப்புக்கு ஆளாகும் என்ற கணக்கா.. கடந்த வருடம் கூட்டமைப்பைச் சேர்ந்தவை அறிக்கை விட்டவை. அதை புலம்பெயர் தேசத்தில எப்படி அமுலாக்கலாம்.. இப்படித்தான்.

உலகப் போரில் உயிரிழந்த மேற்கு நாட்டு வீரர்களுக்கு எத்தனையோ விழாக்களை எடுக்கிறாங்கள். சனம் கொஞ்சம் ஆடம்பரமா போனாலும் தேச பக்தியோட நிகழ்வுகளைச் செய்யுதுகள்.

அந்த வகையில்.. உப்படிப் புறுபுறுக்கிறதை விட்டிட்டு.. சனத்திற்கு வழிகாட்டிற செயல் திட்டம் இருந்தா.. சம்பந்தப்பட்டவையோட பகிர்ந்து அதை மக்களட்ட கொண்டு போறதை விட்டிட்டு.. சும்மா வெட்டி விளம்பரத்துக்கு.. தலைவரில இருந்து போராளிகள் தொடங்கி.. மாவீரர் வரைக்கும்.. புறுபுறுப்புப் பொருளாவது.. அவசியமோ..???!

எல்லாம்.. விசிலடிச்சான்கள் இருக்கும் வரை.. உதுகள் வந்து கொண்டு தான் இருக்கும்..!

மாவீரர் தினத்தை ஆடம்பர நிகழ்வாக நடந்துவதை தவிர்ப்பது மட்டும் நோக்கமாக இருந்தால்.. அதற்கான முன் மொழிவுகளை சொல்லி செயற்படுத்திற வழியைப் பாருங்கோ. புறுபுறுப்பு வேண்டாம் எமக்கு.

ஊரில மாவீரர் தினத்தை புலிகள் அனுஷ்டிச்சதா சித்தரிக்கிற ஆக்கள் இப்பவும் இருகினம். உண்மையில புலிகளின் மாவீரர் தின பிரகடனத்தை அடுத்து மக்கள் தான் அதிகம் முன் வந்து அதை அனுஷ்டிச்சவை. புலிகள் மக்களுக்கு அனுஷ்டிக்கச் சொல்லி காசும் கொடுக்கல்ல.. இல்ல தாங்கள் சொல்லுற படிதான் அனுட்டிகனும் என்று சட்டமும் போடல்ல. மாவீரர் தினத்தை இப்படி அனுஷ்டிப்பது நல்லம் என்ற ஒரு மக்களுக்கான முன்மொழிவை வைச்சதோட அவர்கள் ஒதுங்கிட்டீனம்.

ஆனால்.. புலம்பெயர் நாடுகளில்.. அந்தச் சுதந்திரத்தைக் கூட கொடுக்கமாட்டினம் போல இருக்குது..! மாவீரர்களின் பெற்றோர்கள்.. குடும்பத்தினர்.. உறவினர்கள்.. நண்பர்கள் தமக்கு விரும்பிய வடிவில்.. மாவீரர்களிம் மகிமை மங்காமல்.. மாவீரர் தினத்தின் புனிதம் கெடாமல்.. அதை எப்படியும் அனுஷ்டிக்கலாம்.. என்பதே சிறந்ததாக இருக்க முடியும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரியண்ணா பகிர்வுக்கு, இப்படி இவர்கள் ஆடினால் வீட்டில் விளக்கேற்றி கும்பிட வேண்டியதுதான், இன்று அத்தியட்டிக்கு போன வேளை இதைப்பற்றி கதைத்தம், இங்கு எந்த பிரச்சனையும் இல்லை, யாரும் ஊடுருவமும் முடியாது, எல்லோரும் தெளிவாக இருக்கிறார்கள்

உடையார் ஒஸ் ரேலியா கனடா நிலைமை எனக்குத் தெரியாது ஆனால் ஜரோப்பில் நிலைமை இப்படித்தான் உள்ளது. பிரான்சில் மாவீரர் நாள் நடாத்தும் இரு குழுவும் மற்றவர்களை நடத்த விடமாட்டோம் என சவால் வேறை விட்டிருக்கினம். அனேகமாய் அடிதடியிலை தொடங்கி பொலிஸ் வந்து தான் நிகழ்வு முடியப் போகுதோ என்கிற ஒரு நிலையில் உள்ளது. ஆனாலும் பேச்சு வார்த்தை முயற்சிகளை சிலர் தொடந்து கொண்டுதான் இருக்கின்றனர் இன்றும் ஒரு கூட்டம் நடைபெற இருக்கிறதுபாக்கலாம்.

நான் இரண்டு,மூன்று வருடங்களாக மாவீரர் தின விழாவிற்கு போவதில்லை அதற்கு பதிலாக கோயிலுக்கு போய் அனைவரது ஆத்மாவும் சாந்தி அடைய வேண்டி ஒரு விளக்கை எரித்து விட்டு வருவேன்.இந்த வருடமும் அதைத் தான் செய்வேன்

நாங்கள் இல்லாதகாலத்திலும் இந்த புனித நிகழ்வு தொடரவேண்டும். எனவே கோயிலுக்கு செல்வதுடன், முடிந்தால் மக்கள் நிகழ்வுக்கும் சென்று இந்த இதயத்துடிப்பை தொடரவையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இல்லாதகாலத்திலும் இந்த புனித நிகழ்வு தொடரவேண்டும். எனவே கோயிலுக்கு செல்வதுடன், முடிந்தால் மக்கள் நிகழ்வுக்கும் சென்று இந்த இதயத்துடிப்பை தொடரவையுங்கள்.

அவர்கள் செய்த தியாகம்,அவர்கள் மீது உள்ள மரியாதை ஒவ்வொருவர் மனதில் முதலில் இருக்க வேண்டும்

Edited by ரதி

அவர்கள் செய்த தியாகம்,அவர்கள் மீது உள்ள மரியாதை ஒவ்வொருவர் மனதில் முதலில் இருக்க வேண்டும்

உண்மை. அது நீங்கள் மண்டபத்திற்கு செல்லும் பொழுது இன்னும் கூடுதல் சாத்தியமாகும்.

ஏனெனில் மண்டபத்தில் அவ்வாறனவர்களே அதிகம் வருவர். அடுத்த தடவை வரச்சொல்லி வராதவர்களுக்கு

அது ஊக்கம் தரும். எமது அடுத்த தலைமுறையும் இந்த கொள்கையை தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் அவுஸரேலியாவில மட்டும் உந்த பிரச்சனைகள் இல்லை.....வியாபராத்துக்கு கடைகள் போடவும் அணுமதிக்கிறேல்ல........வாழ்க அவுஸ்ரேலியா தமிழர்கள்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இரண்டு,மூன்று வருடங்களாக மாவீரர் தின விழாவிற்கு போவதில்லை அதற்கு பதிலாக கோயிலுக்கு போய் அனைவரது ஆத்மாவும் சாந்தி அடைய வேண்டி ஒரு விளக்கை எரித்து விட்டு வருவேன்.இந்த வருடமும் அதைத் தான் செய்வேன்

ஆத்மாக்களின் சாந்திக்கு விளக்கு எரிக்க வேண்டுமாயின் கோவில்குளங்களுக்கு செல்ல தேவையில்லை.அங்கும் பல பேதங்கள் இருக்கின்றன.நீ தூய்மையென்றால் உன் வீடும் கோவில்தான்.உன் வீட்டு மேசையில் ஒரு தீபத்தை ஏற்றிவிடு.....

:)

எவ்வளவு மக்கள் வந்தார்கள் என்பது ஒரு பிரச்சார ஆயுதமாக உள்ளது. எனவே, முடிந்தளவுக்கு, பொதுமண்டபங்களுக்கு செல்வது நன்று. மக்கள் வராவிட்டால், எதிரிகள் ' மக்கள் மாவீரர்களை மறந்துவிட்டார்கள்' என்ற பிரச்சாரம் செய்வர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மாக்களின் சாந்திக்கு விளக்கு எரிக்க வேண்டுமாயின் கோவில்குளங்களுக்கு செல்ல தேவையில்லை.அங்கும் பல பேதங்கள் இருக்கின்றன.நீ தூய்மையென்றால் உன் வீடும் கோவில்தான்.உன் வீட்டு மேசையில் ஒரு தீபத்தை ஏற்றிவிடு.....

:wub:

நல்லாத்தான் சொன்னீங்க நீங்க,, குமாரசுவாமியண்ணா..........

நான் தூய்மைன்னு யாரும் ,, சொல்லவே முடியாததாலதானே........வீட்ல வெளக்கேத்த முடியாம ...............

சாமிக்கு விளகேத்திட்டு தப்பிக்க , வழிபண்ணுறான்!

பைத-வே ,,நீங்க வீட்ல விளக்கேத்தினீங்களா கு.சா. அண்ணா!? :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை. அது நீங்கள் மண்டபத்திற்கு செல்லும் பொழுது இன்னும் கூடுதல் சாத்தியமாகும்.

ஏனெனில் மண்டபத்தில் அவ்வாறனவர்களே அதிகம் வருவர். அடுத்த தடவை வரச்சொல்லி வராதவர்களுக்கு

அது ஊக்கம் தரும். எமது அடுத்த தலைமுறையும் இந்த கொள்கையை தொடரும்.

போராளிகள் மீது மதிப்பும்,மரியாதை உள்ளவர்கள் தற்போது இப்படியான இட‌ங்களுக்குப் தற்போது போவது குறைவு...அங்கு என்ன நட‌க்குது என விடுப்பு பார்க்க போகின்றவர்களே அதிகம்...ஒரு நாள் பொழுதை ஊர் சனத்துட‌ன் கூடி கொத்து ரொட்டி சாப்பிட்டு,குடித்து மகிழப் போகின்றவர்களே அதிகம்...மொத்தத்தில் அவர்களுக்கு இது ஒரு விழா

ஆத்மாக்களின் சாந்திக்கு விளக்கு எரிக்க வேண்டுமாயின் கோவில்குளங்களுக்கு செல்ல தேவையில்லை.அங்கும் பல பேதங்கள் இருக்கின்றன.நீ தூய்மையென்றால் உன் வீடும் கோவில்தான்.உன் வீட்டு மேசையில் ஒரு தீபத்தை ஏற்றிவிடு.....

வீட்டில எரிக்கலாம் அண்ணா ஒரு பிர‌ச்சனையும் இல்லை ஆனால் கோயிலில் எரித்தால் ஒரு,சிலருக்காவது என்னத்திற்கு எரிக்கிறார் என

தெரிய வரும்

வீட்டில எரிக்கலாம் அண்ணா ஒரு பிர‌ச்சனையும் இல்லை ஆனால் கோயிலில் எரித்தால் ஒரு,சிலருக்காவது என்னத்திற்கு எரிக்கிறார் என தெரிய வரும்

கோயிலில் நடப்பதும் ஒரு விதத்தில் விழாத்தானே?

போராளிகள் மீது மதிப்பும்,மரியாதை உள்ளவர்கள் தற்போது இப்படியான இட‌ங்களுக்குப் தற்போது போவது குறைவு...அங்கு என்ன நட‌க்குது என விடுப்பு பார்க்க போகின்றவர்களே அதிகம்...ஒரு நாள் பொழுதை ஊர் சனத்துட‌ன் கூடி கொத்து ரொட்டி சாப்பிட்டு,குடித்து மகிழப் போகின்றவர்களே அதிகம்...மொத்தத்தில் அவர்களுக்கு இது ஒரு விழா

அப்படியே அவர்கள் அதிகம் என்பதால் அந்த தவறுக்கு நாம் செல்லாமல் தவிர்ப்பதால் உடந்தை ஆகிறோமா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே கோயில்லையும்....வீட்டிலையும் எரித்தால் அது எதிரிக்கு தான் வெற்றி..........

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலில் நடப்பதும் ஒரு விதத்தில் விழாத்தானே?

நான் கோயிலில் திருவிழா செய்து விளக்கு எரிக்கிறது இல்லை...ஆத்மா சாந்தி அர்ச்சனை சிவனுக்கு செய்து தான் விளக்கு எரிப்பது இது ஒரு பிரார்த்தனை <_<

  • கருத்துக்கள உறவுகள்

நான் கோயிலில் திருவிழா செய்து விளக்கு எரிக்கிறது இல்லை...ஆத்மா சாந்தி அர்ச்சனை சிவனுக்கு செய்து தான் விளக்கு எரிப்பது இது ஒரு பிரார்த்தனை <_<

கைவிட்ட கடவுளிடமா போய் மாவீரர்களுக்கு பிரார்த்தனை? Mar-May 2009 எத்தனை தரம் கோயிலில் பிரார்த்தனை செய்திருப்போம், அப்ப விளவில்லையா ஆண்டவனின் காதில்,

வேற்று மக்களும் கூடுகின்ற அமைதியான இடத்தில் (Park / Community Centre) ஒன்று கூடி அமைதியாக பிரார்த்தனை செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை, பெரிய மண்டபம் எடுத்துதான் மாவீரர்களின் தியாகத்தை விளம்பரப்படுத்தனும் என்றில்லை

  • 4 weeks later...

சாத்திரி அவர்களுக்கு!

தங்கள் கட்டுரை வாசித்தேன். அதில் உள்ள பல கருத்துக்களை நான் வரவேற்கிறேன். மாவீரரர்தினம் ஒரு இடத்திலேயே சிற்பாக நடக்க வேண்டுமென்பதில் எல்லோருக்கும் ஒரே கருத்துத்தான்.

"பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பட்டெளி வீசிப்பறக்க மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் வரவேற்க ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே "என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்"

மாவீரர்கள் எம்மக்களின் சொத்துக்கள். சீட்டுப்போடடுப் (பணத்துக்கல்ல..) உயிர்கொடுக்கச் சென்ற உத்தமர்கள். அந்த மாவீரரர் பெயரால் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் வாழவைக்க நினைப்பவர்கள் எப்போதும் நின்மதியாக வாழ முடியாது.

இப்போது தங்கள் இருப்புகளை தக்கவைக்க துடிக்கும் கூட்டத்திடம் ஆள் அணி, பணம், அதிகாரத் திமிர் நிறைந்துள்ளது, நான் கையசைத்தால் செயற்பட பல பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ஆதலால் நாங்கள்தான் செய்வோம். பொதுமக்களிடம் வேண்டிய காசுக்கு யாருக்கும் கணக்கு காட்ட வேண்டியதில்லை… என்பவர்கள் பற்றி என்ன செய்யலாம்?

"புதியதொரு கட்மைப்பினை கட்டியமைத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப் போவதாக கூறும் இவர்கள்.முதலில் பொதுக்கூட்டங்களை கூட்டி மக்கள் முன் தோன்றியோ .அல்லது ஊடகங்களான வானொலி தொலைக்காட்சிகளில் பங்கு பற்றியோ இறுதி யுத்தத்தின் போது நடந்த சம்பவங்கள் பற்றி புலம்பெயர் தேசத்து தமிழர்களிள் மனங்களில் தத்தளிக்கு பலநூறு கேள்விகளிற்கு பதில் கொடுத்து முதலில் அவர்களிற்கு தெளிவைக் கொடுக்கவேண்டும். அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தினை எப்படி நகர்த்துவது அல்லது நகர்த்தலாம் எக்கிற ஆலோசனைகள் பகிரங்கமாக கலந்துரையாடப்படல் வேண்டும்"

புதியவர்கள், சில கூட்டங்களைக் கூடியதாகவும், மேற்கண்ட தன்மையுள்ளவர்கள் அக் கூட்டத்திற்கு பெருந்தொகையாகச் சென்று, புதியவர்களை கீழ்த்தரமாகப் பேசி, அடிக்கச் சென்றதாகவும் ஒரு செய்தி. இதேவேளை நாடுகடந்த தமிழீழக் கூட்டம் நடைபெற்ற இடங்களுக்கே இவர்கள் சென்று அடாவடித்தனம் பண்ணியவர்கள். இந்த நிலையில் புதியவர்கள் என்ன செய்ய முடியும்? தப்பி வந்த பல போராளிகளின் முழுவிபரங்களும் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு வந்தது நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அங்கு உயிரைக் கொடுக்க முன்நின்றவர்கள் புலம்பெயர்ந்த வந்து வாழும் நாட்டில், தங்கள் வதிவிட உரிமையையாவது காப்பாற்ற வேண்டியது கட்டாயமல்லவா?

"எனவே மாவீரர் வணக்க நிகழ்வினை யார் ஒழுங்கு செய்தாலும். கொத்துறொட்டிக்கடை புடைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்று"

எல்லா மாவீரர்தினத்துக்கும் போக்கோ… வியாபார நோக்கமில்லாமல் நடைபெறும் இடத்தைப் பாராட்டுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.