Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் அமெரிக்க பிரயாணம்

கூட்டமைப்பின் அமெரிக்க பிரயாணம் 19 members have voted

  1. 1. அமெரிக்காவை சந்திக்கும் கூட்டமைப்பின் அதி முக்கிய முதன்மைகடமை என்ன?

    • தமிழரின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தல்
      16
    • தொடரும் குடியேற்றம், வாழ்வாதார மறுத்தலை வலியுறுத்தல்
      7
    • சிங்களம் மீதான போர்குற்றவிசாரணைகளை வலியுறுத்தல்
      10
  2. 2. கனடாவரும் கூட்டமைப்பினரை புலம்பெயர் தமிழர்கள் இராப்போசன விருந்து வைத்து சந்திப்பது:

    • தாயக மக்களுக்கு புலம்பெயர் மக்கள் ஆதரவாக உள்ளனர் என்பதை காட்டும்
      9
    • கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகளை கலந்துரையாடும் சந்தர்ப்பத்தை வழங்கும்
      9
    • புலி ஆதரவாளர்கள் கூட்டமைப்புக்கு ஆதரவாக உள்ளனர் என்ற சிங்கள பிரச்சாரத்திற்கு வழி சமைக்கும்
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

கூட்டமைப்பின் அமெரிக்க பிரயாணம்

முதல் முறையாக ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு உத்தியோகபூர்வமாக உலகின் தனிப்பெரும் வல்லரசான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் அழைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக கொழும்பின் விருப்பத்தை மீறியும் புது டெல்லியின் இணக்கத்துடனும் தான் நடக்கின்றது என்பதை ஊகிக்கமுடியும்.

அதேவேளை அமெரிக்கா வரும் கூட்டமைப்பின் குழுவில் மூவர் கனடாவுக்கு வருகின்றனர். இவர்களை கௌரவிக்குமுகமாக இராப்போசன விருந்து வழங்கப்படுகின்றது (கலந்துகொள்ள விரும்புவர் நூறு டாலர் ஒருவர் செலுத்தவேண்டும்).

இவை சம்பந்தமாக வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இவை பற்றி இரு கருத்துக்கேள்விகளை முன்வைக்கிறேன்.

நன்றி.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கலந்துகொள்ள விரும்புவர் நூறு டாலர் ஒருவர் செலுத்தவேண்டும்

தமிழ் மக்களின் ஏக பிரநிதிகளை சந்திக்க ,மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க, கூட்டமைப்பின் கருத்துக்களை அறிய ஏன் $100 செலுத்த வேண்டும்?

  • தொடங்கியவர்

தமிழ் மக்களின் ஏக பிரநிதிகளை சந்திக்க ,மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க, கூட்டமைப்பின் கருத்துக்களை அறிய ஏன் $100 செலுத்த வேண்டும்?

TNA leader R. Sampanthan, MP's Sumanthiran and Mavai Senathirajah will be travelling to North America next week on an official invitation from US State Department.

Dinner with Tamil National Alliance (TNA) leader and MP's has been orgnaized in Toronto.

Date: Sunday October 30th 2011

Time: 6:30 pm

Venue: Peter and Paul Banquet Hall

231 Milner Ave, Scarborough

(Markham & Milner)

Tickets : $100

For more information and tickets please contact CTC @ (416) 240-0078 or (647)-448-4322

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் ஏக பிரநிதிகளை சந்திக்க ,மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க, கூட்டமைப்பின் கருத்துக்களை அறிய ஏன் 100 டொலர் செலுத்த வேண்டும்?

கூட்டமைப்பின..ர் எமக்கு சாப்பாட்டை குழைத்து, தீத்தி விடுவார்கள் என்றால்... 100 டொலர் கொடுக்கலாம்.baby_smiley24.gif

  • தொடங்கியவர்

போர்க்குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையையும் தமிழ் தேசத்தின் தனித்துவமான இறைமையையும் ஆணித் தரமாக வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களும் இளைஞர்களும் செய்த உயிர்த்தியாகங்களை பேரம்பேசும் வகையில் போர்க் குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வுள்ள நிலையில் அவர்களது பயணம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளார் மகாநாடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர்களில் ஒருவரும் வெளிவி வகாரக்குழு தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம் பலத்தின் இல-15 இராணி வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் இன்று இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களால் தமது பிரதி நிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தியோக பூர்வ அழைப்பு விடுத்து அமெரிக்காவுக்கு அழைத்துள்ளமை தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரியதொரு அங்கீகாரமாகும். அவ்வாறு அழைக்கப்பட் டமையானது தமிழ்த் தரப்பை ஓர் தனித்தரப்பாக அங்கீகரிக்கும் செயற்பாடாகவும் அமைந்துள்ளது.

அவ்வாறு அழைக்கப்பட்டமையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மனப்பூர்வமாக வரவேற்பதுடன் கூட்டமைப்பின் பயணம் வெற்றிகரமாக அமைய எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்;. கிடைத்துள்ள இச்சந்தந்தர்ப்பத்தினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பதனையும் தமிழர்களது சுயநிர்ணய உரிமை சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் பேச்சுக்கள் இடம்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்;தி கூட்டமைப்பினர் அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் உயிர் கொடுத்த மக்களது இளைஞர்களது உயிர்த்தியாகங்களைப் பேரம்பேசும் விதமாக கூட்டமைப்பினர் போர்க்குற்றச் சாட்டு விடயங்களை கையாள முற்படக் கூடாது. பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதனை கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த செல்வராசா கஜேந்திரன் சர்வதேச சமூகம் தமிழ் மக்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து தமது நலன்களை அடைய முற்சி செய்யும் இந்த நேரத்தில் தமிழ்த்தரப்பு தமிழ் மக்களது இறைமை சுயநிர்ணய உரிமை ஆகிய விடயங்களில் உறுதியாக இருந்தால் நிச்சயம் அதற்கான அங்கீகாரங்களை தமிழ் மக்கள் பெற்று நிம்மதியாக வாழக் கூடிய சூழல் உருவாகும் என்றும் அதனை விளங்கிக் கொண்டு கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், உபபொருளாளர் கிருஸ்ணகுமார் கட்சியின் இளைஞர் அணியின் இணைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=85894

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தெரிவுக்கு உள்ள எதுமே ஆவதற்கு இல்லை.

திரை மறைவில் இந்தியா இருந்து ஆட்டுகின்றது கூத்தமைப்பு அதை அரங்கேற்றுகின்றது. சீனாவுடனான சிங்களத்தின் உறவு மீது கூடி கொலை செய்திருந்தாலும் இந்தியாவிற்கு சந்தேகமே. அமெரிக்காவும் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதால் இந்த கூடமைப்பால் ஓடித்திரிய முடிகின்றது. இன்னுமொரு ஆறு மாதத்தில் இந்தியாதான் ஈழத்தமிழரை பாதுகாத்து வாழ்வழிக்கிறது என்று ஒரு அறிக்கையை கூட்டமைப்பு விடும்.

அது சர்வதேச அரசியல் நகர்வு என்று புளித்து போன கட்டுகதைகளை கட்டுரையாளர்கள் எடுத்துவிடுவார். தனது கொடிய கொலை முகத்தை மறைக்க இந்தியா இந்த கூட்டமைப்பை ஆட்டுகிறது. கூடமைப்பு பெரியவர்களுக்கும் இப்படியான ஆட்டங்களே தேவையானது விடிவு உரிமை எல்லாம் தமது இருப்பை தக்க வைக்க கூறும் அற்ப வார்த்தைகள்.

இவர்கள் ஒருபோதும் குற்ற விசாரணையை முன்னெடுக்க யாருக்கும் தூண்டுதல் கொடுக்க போவதில்லை. நாளடைவில் முடிந்தவைகளை பேசி பலன் இல்லை அவற்றை மறந்துவிட்டு சாதுரிய அரசியலை புரிந்து நகர வேண்டும் என்று சொல்லுவார்கள். ( இந்தியா இந்த குற்றத்தின் பங்காளி புரியாதவர்கள் கை தட்டுவார்கள்). இப்படியே இனிவரும் அடுத்த பத்து வருடம் ஓடும் அதன் பின்பு சீன வல்லாதிக்கம் அமெரிக்க பொருளாதார நெருக்கடி உலக சனத்தொகை உணவு பஞ்சம் எல்லாமும் இந்தியாவிலும் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டுவரலாம்................... தொடர்ந்த சிங்கள அட்டுழியம் ஈழத்து இளைய தலைமுறையின் இரத்தத்தில் சூடேற்றும். சம்பந்தன் ஆனந்தசங்கரி சிங்காரி டக்குழசு கருணா பிள்ளையான் எல்லாம் ஆற்றிலே அடித்து செல்லபட்டிருப்பார்....... அந்த தருணத்தை எமது ஆனது ஆக்குவதேன்றால் ஒரு நல்ல இளைய தலைமுறையை புலத்தில் நாமும் கட்டி வைத்திருக்க வேண்டும். நிலமும் புலமும் ஒன்றாக இணைந்து அப்போது நடக்கும் இந்தியே மாற்றத்தையும் எமக்கு சாதகம் ஆக்கி ஒரு விடிவை தொடமுடியலாம் தவிர கூட்டமைப்பின் கூத்துக்களால் நாம் எந்த பலனையும் அடையபோவதில்லை இவர்கள் தமது இருப்புக்கு இனத்தையும் விற்று பிழைத்தவர்கள். அதை புதிதாக யாரும் இவர்களுக்கு சொல்லி கொடுக்க தேவை இல்லை

  • தொடங்கியவர்

ஒரு பிராந்திய வல்லரசாக கருதப்பட்ட இந்தியாவை மீறி அமெரிக்கா சில முடிவுகளை எடுத்திருக்கும் காரணமாகத்தான் அது கூட்டமைப்பை அழைத்துள்ளது. அமெரிக்கா கூட்டமைப்பை வைத்து தனது தேவையை அடைய நினைக்கின்றது. அது இந்த சந்திப்பின் போது கூட்டமைப்புக்கு தெரியப்படுத்தப்படும்.

கூட்டமைப்பு ஒரு பலமான நிலையில் இல்லை. இருந்தாலும், அமெரிக்காவின் தேவையை பொறுத்து நாளை கூட்டமைப்பு பலமான நிலையில் வைக்கப்படலாம்.

அப்படி ஒரு நிலை இந்த சந்திப்பில் ஏற்படும்பொழுது, கூட்டமைப்பும் சில தெரிவுகளை முன்வைக்க வேண்டும், அது தாயக மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் இலக்கை நோக்கியதாக நிச்சயம் அமையவேண்டும்.

இந்தியாவை மீறி அமெரிக்கா எடுக்கவுள்ள முடிவுகளை...............

இந்தியாவின் கைபோம்மையான கூட்டமைப்பை கூப்பிட்டு பேசுமா? போர் குற்றம் என்பது எண்ணமும் முழுவீச்சாக பிரச்சாரம் பண்ண படவில்லை அது பிரச்சார பண்ணப்படுமையின் அமெரிக்கா ஐ நா போன்றோரும் அதை தடுக்க வலுவிருந்தும் வேடிக்கை பார்த்ததும் குற்றமே. தவிர இந்திய கூடி கொலை செய்த கும்பல் எல்லோருடைய தேவையும் தற்போது தமிழர்கள் போர்குற்ற விடயத்தை மறந்து வேறு விடயம் ஒன்றில் ஈடுபடுவதே.

இதை நாம் தெளிவாக புரியவேண்டும் எந்த இடத்தும் போர்குற்ற பரப்புரையை கைவிடகூடாது அது ஒன்றுதான் தற்போது உள்ள ஒரே ஒரு துரும்பு.

மகிந்தவின் கடும்போக்கு எதாவது ஒரு மாற்றத்தை மேற்கில் உண்டுபண்ணலாம்.............. அவர்கள் நாட்டில்தான் கடும்போக்கை கடைபிடிக்கிரர்களே தவிரே வெளிநாடுகளுடன் நாங்களும் நீங்களும் ஒரே இனம்தான் வாருங்கள் ஒன்றாக கூடி கொள்ளை அடிப்போம் என்றுதான் சமரசம் செய்கிறார்கள். இவர்களுக்கு ஏன் மற்றவரும் வாறார் என்ற பிரச்சனையே தவிரே மகிந்த அல்ல.

கூட்டமைப்புடன் பேச வேண்டிய நிலைக்கு அமெரிக்கா வந்தமைக்கான காரணங்கள்:

- மகிந்தவின் கொள்கையும் இரணிலின் தலைமயிலான எதிர்க்கட்சிகளின் பலவீனமும்

- உலகின் பொருளாதார மையமாக ஆசியா மாறிவருவது

- சர்வதேச ஊடகங்களும் புலம்பெயர் மக்களின் ஒருபகுதியினரின் போர்குற்ற தொடர் முயற்சிகளும்

மத்தியகிழக்கில் ஒப்பீட்டளவில் சமாதானம் நிலவுவதும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மீதான தாக்குதல்கள் வெற்றிகள் பலத்தையும் பெற்றுள்ள நிலையில் மேற்குலக கவனம் அப்கானிஸ்தான் - பாகிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது. இதில் சீனாவும் இந்தியாவும் சம்பந்தப்பட்ட நிலையில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் மேற்குலகின் பார்வை திரும்பியுள்ளது. எனவே மகிந்தர் நீண்ட காலம் தலையையும் வாலையும் காட்ட முடியாது.

போர்க்குற்றம் என்ற துரும்பை நிச்சயம் கைவிடக்கூடாது, தீர்வு கிடைக்கும் வரையும் அதன் பின்னரும். ஆனால் அதை முனைப்புடன் முன்னெடுக்கக்கூடிய நிலையில் உள்ளவர்கள் தாயக மக்களோ அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளோ இல்லை, அவை அதே இராணுவத்தால் சூழப்பட்டுள்ளன. அதை செய்ய வேண்டிய கடமை புலம்பெயர் மக்களையே சாரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"புலி ஆதரவாளர்கள் கூட்டமைப்புக்கு ஆதரவாக உள்ளனர் என்ற சிங்கள பிரச்சாரத்திற்கு வழி சமைக்கும்"

இதெல்லாம் செல்லாத பதில். ஸ்ரீ லங்கா காரனுக்கு எவர் தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசினால் அவர்கள் புலிகள் தான்.

சனல் நான்கையே புலி ஆதரவாளர்கள் என்று தானே பிரச்சாரம் செய்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் ஏக பிரநிதிகளை சந்திக்க ,மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க, கூட்டமைப்பின் கருத்துக்களை அறிய ஏன் $100 செலுத்த வேண்டும்?

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில் சிவாஜிலிங்கத்தை எதிராக த தே கூ உறுப்பினருக்காக அப்பிரதேச மக்களுக்கு தேர்தலின் போது த தே கூ தலமையால் தலா ஒருவருக்கு 1000 ரூபாவரை வழங்கப்பட்டதாக கேள்விப்பட்டேன்.

  • தொடங்கியவர்

"புலி ஆதரவாளர்கள் கூட்டமைப்புக்கு ஆதரவாக உள்ளனர் என்ற சிங்கள பிரச்சாரத்திற்கு வழி சமைக்கும்"

இதெல்லாம் செல்லாத பதில். ஸ்ரீ லங்கா காரனுக்கு எவர் தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசினால் அவர்கள் புலிகள் தான்.

சனல் நான்கையே புலி ஆதரவாளர்கள் என்று தானே பிரச்சாரம் செய்கிறான்.

உண்மையில் இரு நண்பர்களுக்கு இடையில் இதை வைத்தே ஒரு கருத்தாடல் நடந்தது. ஒருவர் கூட்டமைப்பை புலம்பெயர் கனேடிய உறவுகள் சந்திக்காமல் விடுவதே நல்லது என்றார். சந்தித்தால் அது தேவையில்லாத விமர்சனங்களுக்கு இடம் வழிசமைத்து கொடுக்கும் என்றார்.

மற்றையவர், முள்ளிவாய்க்காலின் பின்னர் விடுதைலைப்புலிகள் எந்த தாக்குதலையும் செய்யவில்லை என இறுதியாக வந்த அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள அறிக்கை கூறி இருக்கின்ற நிலையில்; அமெரிக்காவே கூட்டமைப்பை அழைத்துள்ள நிலையில்; புலம்பெயர் தமிழர்களும் ஜனநாயக வழியிலான கூட்டமைப்பை பகிரங்கமாக ஆதரிப்பதே மகிந்த அரசை மேலும் பலவீனமாக்கும் என்றார்.

எமக்கு தேவை சர்வதேச அங்கீகாரம் ,இதை யார் தந்தாலும் அல்லது யார் தர உதவி செய்தாலும் அதற்கு ஒத்து போயே ஆக வேண்டும் .எவ்வளவு பலமான இயக்கமாக இருந்தும்

புலிகளுக்கு கடைசிவரை கிடைக்காதது அதுதான்

கட்டப்பொம்மன் வசனம் பேசமட்டும் வடிவு ,எமது விடிவிற்கு சரிப்பட்டு வராது .

கண் முன்னாலேயே சதாம் ,முபாரக் ,கடாபிக்கு நடந்ததை கண்டோம் ,முதல் இருவரும் அமேரிக்காவின் ஆசீர்வாதத்துடனேயே அவ்வளவு காலமும் ஆட்சியில் இருந்தார்கள் ,நியாயம் நீதி தர்மம் எல்லாம் காபெஜில் கட்டி வைத்து விட்டு எவரையாவது சுத்தி எமது மக்களுக்கு விடிவு கொண்டுவரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் ஏக பிரநிதிகளை சந்திக்க ,மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க, கூட்டமைப்பின் கருத்துக்களை அறிய ஏன் $100 செலுத்த வேண்டும்?

சும்மா வேடிக்கை பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் காசு கொடுத்து போய்ப் பார்க்க மாட்டார்கள். 100 வெள்ளி கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் எல்லாரையும் சந்திக்கம மாட்டார்கள் என நினைக்கிறேன். கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் முன் பதிவு செய்யப்படல் வேண்டும். இதில் கூட்டமைப்பு சந்திக்க விரும்பாதவர்கள்(கனடா வாழ் சிங்களவர்கள்...)100 வெள்ளி கொடுத்து பதியும் போது இரண்டு நாள் தாமதித்து அரங்கு நிறைந்து விட்டது. மண்டபத்தில் இடமில்லை. மன்னியுங்கள் என்று சொல்லி தவிர்க்கலாம். ஏன் நான் இப்படி சொல்கிறேன் என்றால் எனக்கு தெரிந்த ஒரு நிகழ்வில் இப்படித் தான் செய்தார்கள். அத்துடன் மண்டபச் செலவு அதிகமாக இருக்கலாம். இதற்கு கட்டணம் தேவை.

எமக்கு தேவை சர்வதேச அங்கீகாரம் ,இதை யார் தந்தாலும் அல்லது யார் தர உதவி செய்தாலும் அதற்கு ஒத்து போயே ஆக வேண்டும் .எவ்வளவு பலமான இயக்கமாக இருந்தும்

புலிகளுக்கு கடைசிவரை கிடைக்காதது அதுதான்

கட்டப்பொம்மன் வசனம் பேசமட்டும் வடிவு ,எமது விடிவிற்கு சரிப்பட்டு வராது .

கண் முன்னாலேயே சதாம் ,முபாரக் ,கடாபிக்கு நடந்ததை கண்டோம் ,முதல் இருவரும் அமேரிக்காவின் ஆசீர்வாதத்துடனேயே அவ்வளவு காலமும் ஆட்சியில் இருந்தார்கள் ,நியாயம் நீதி தர்மம் எல்லாம் காபெஜில் கட்டி வைத்து விட்டு எவரையாவது சுத்தி எமது மக்களுக்கு விடிவு கொண்டுவரவேண்டும்

அர்ஜுன் அண்ணா ,, நீங்க எவ்ளோ நல்லவர்!! நீங்க சொன்னது சரியேதான்..!

ஆனா ஒண்ணு கேக்கணும்...................

அப்புறம் யாராச்சும் உரிமை தந்தா..............

அவனுகளுக்கு,, ஏன் உரிமை கொடுத்தீங்க? என்னு குழப்ப மாட்டாங்களா யாராச்சும்?

நீங்க உட்பட!!

சதாம் , முபாரக், கடாபி நாய்ங்களுக்கும், எம் தாய போராட்டத்துக்கும், ஒரே ஒரு வித்யாசம்!

அவங்க அரச பதவியிலிருந்துகிட்டே , அடக்குமுறை செய்தவங்க!

இவங்க ,, அரச அடக்குமுறைக்கு எதிரா போராடினவங்க!

உண்மையாக கூட்டமைப்பினர் வருவது தனிப்பட்டவிடயமே,ஆனால் கிலாரியை சந்தித்து ஒரு இமேஜை உருவாக்க பார்கிறார்கள்.இதுதான் உண்மை.கனடா விஜயத்தின்போது இவர்களுக்காக 100 டொலர் செலவழித்து யாரும் கேள்வி கேட்க போகமாட்டார்கள் என்ற துணிவில் தான் 100 டொலரென்று தெரிவித்துள்ளார்கள்.பரவாயில்லை உண்மைகள் வெளிகொண்டுவரவேண்டுமாயின் 1000 கொடுக்கவும் மக்கள் தயாராகவிருக்கிறார்கள்

எல்லாமே பிரச்சினையாகத்தான் முடியப்போகுது;

செய்திகளால் குளப்பம்,

உண்மையில் கூட்டமைப்பினரை சந்திக்க உத்தியோக பூர்வமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் திகதி இன்றுவரை கொடுக்கவில்லை. ஏன் இன்னும் சிலருக்கு தற்போதைய (24/10/2011 மதியம் 1 மணி) நிலபரப்படி வீசாவும் கைக்கு வந்து சேரவில்லை. பத்திரிகைகளின் பிரச்சாரங்களால், ஆய்வுகளால் இந்த சந்திப்பு கேல்விக்குறியாகும் நிலை கூட உள்ளது. அதாவது ஹிலாரியை சந்திப்பது என்பது இரு நாட்டு அரசாங்கங்களில் டிப்ளோமற் புரொடொகோல் என்பதனை மீறும் செயல் என சிறிலங்கா இப்போது போர்க்கொடியினை தூக்கியுள்ளது. சந்திப்புக்கு முன்னர் பிரச்சாரங்கள் செய்வதனை அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளும் நல்ல விடயமாக பார்க்கவில்லை.புரொட்டொக்கோல் விசயத்தில் இந்தியாவும் கரிசனை கொண்டுள்ளது. இன்று மதியம் மாவை ஐயாவுடன் பேசினேன் அவர் பத்திரிகைகள் மற்றும் சில அமைப்புக்கள் பற்றி கவலை வெளியிட்டார். அதாவது அவர் சொன்ன விடயம் முதலில் இலங்கை, இந்திய அரசுகளின் எதிர்ப்பினையும் மீறி நாம் ஒரு சந்திப்பை செய்யவேண்டும். அதன் பின்னர் அடுத்தடுத்த கட்டங்களில் எங்கள் விடயங்களை சொலவேண்டும். வீசா கிடைக்க முன்னரே எம்மில் சிலர் அவசரப்பட்டுவிட்டார்கள் கூடவே பத்திரிகைகளும் அமைப்புக்களும்தான். என்றார்.

இந்த விடயம் உண்மை என்றால் அது முதலில் அமெரிக்காவுக்கும் அடுத்து சிங்களத்திற்கும் இறுதியாக கூட்டமைப்புக்கும் கூறப்பட்டிருக்கும்.

இந்த செய்தி தமிழ் ஊடகங்களில் மட்டும் வரவில்லை, சிங்கள, ஆங்கில, சில சர்வதேச ஊடகங்களில் கூட வந்துள்ளது. அமெரிக்கா இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே இது பற்றி ஊடகங்களுக்கு கசிய விட்டது கூட்டமைப்பு? சிங்களம்? - இவர்களில் ஒருவராக இல்லை இருவருமாக

இருக்கவேண்டும்.

  • தொடங்கியவர்

தமிழ் மக்களின் ஏக பிரநிதிகளை சந்திக்க ,மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க, கூட்டமைப்பின் கருத்துக்களை அறிய ஏன் $100 செலுத்த வேண்டும்?

விசாரித்ததில் தெரிந்தது:

கனடாவில் யார் இந்த சந்திப்புக்கு மூல ஒருங்கிணைப்பாளர்கள் : தமிழ் தேசிய கூட்டமைப்பு கனடா பிரிவு. இவர்களுக்கு உள்ளூர் அமைப்புக்கள் ஆதரவை, விளம்பரத்தை தருகின்றனர்.

எதற்கு இந்தப்பணம்: அரசியல், பிரச்சார செலவுகளுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் அமெரிக்க பிரயாணம் தமிழரின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தல் மற்றும் கனடா செல்லும்போது கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகளை கலந்துரையாடும் சந்தர்ப்பத்தை கனடா வாழ் தமிழர்களுக்கு வழங்குவதற்கும்.

இப்போது மேலே குறிப்பிட்ட விடயம் எல்லாம் சரியாக நடந்தாலும் இந்தியா ஒத்துழைக்காது ஒன்றுமே நடக்காது மொத்தத்தில் தமிழர் நிலை ....?

தனிப்பட்ட ரீதியில் அகதிகளாக பாரிய கடனுடன் புகலிடம் தேடி வந்தவர்கள் நாம்.

இன்று பல வெற்றிகளை ஈட்டி புலம்பெயர் நாடுகளில் வாழுகின்றோம். இது சாத்தியமா என நினைத்தோமா?

போர்குற்ற ஆவணங்களை சேர்த்தோம்; சர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள் மூலம் உலகின் கண்ணிற்கு முன்னால் கொண்டுவந்தோம்; இது சாத்தியமா என நினைத்தால் நடந்திருக்குமா?

ஐ.நா. அறிக்கை குழு நியமிக்கப்பட்டது; அறிக்கை வந்தது; பின்னர் அது வெளியில் வந்தது; அடுத்த ஐ.நா. மனித உரிமை தொடரில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உள்ளது. சாத்தியமாகாது என சொல்லி விடலாமா?

சிங்களத்தை விட பலமான யுகோசிலவியாவில் இருந்து இந்தியாவை விட பலமான உருசியாவின் துணை இருந்தும் கோசவா மேற்குலக ஆதரவுடன் பிரியலாம் என்றால், எம்மாலும் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் குற்றியோ அரிசி கிடைப்பதுதான் முக்கியம். எப்படியோ கூட்டமைப்புக்கு அமெரிக்காவுக்கு உத்தியோக முறையில் போவதுக்கு அழைப்புக் கிடைத்துள்ளது.ததேகூ புலிகளானால் உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணியாகும்.அதனை அமெரிக்கா அழைத்திருப்பது மிக முக்கியமான அரசியல் நகர்வாகும்.இதனைக் கூட்டமைப்பு அதி உச்ச பலனைக் கொடுக்குமளவுக்கு பயன் படுத்த வேண்டும்.இந்தியாவுக்கு விசுவாசமாக இந்தியாவின் செய்தியை அங்கே பேசி விட்டு வருவதால் ஒரு பயனும் விளையப் போவதில்லை.சிறிலங்காவின் மீதான போர்க்குற்ற விசாரணையை முன்னிலைப்படுத்தி பேச வேண்டும்.அமெரிக்காவுடன் பேரம் பேச வேண்டும்.திருகோணமலை துறைமுகத்தை பயன்படுத்தவதற்கு குறித்த காலத்துக்கு அனுமதி தருவோம்.மன்னார் கடற்படுககையில் எண்ணெய் எடுக்க அனுமதிப்போம் எங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள் என்று நேரடியாக வியாபாரம் பேச வேண்டும்.தமிழ் மக்கள் அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு சர்வசன வாக்கெடுப்பைக் கோரவேணடும்.இது வியாபார உலகம் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக இருக்கும் நாம் எமது வளங்களை அமெரிக்காவுக்கு தாரை வார்த்துக் கொடுத்து சுதந்திரத்தைப் பெறுவதில் நட்டமில்லை.எந்த பலனும் இல்லாமல் எங்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தி விட்டு எமது வளங்ககை; கொள்ளையடிக்கப் போகும் இந்தியா சீனாவை விட அமெரிக்கா எவ்வளவே மேல்.அதை விட மகிந்தருக்கும் (சிறிலங்காவுக்கும்)சீனாவுக்கும் ஈரானுக்கும் கடாபிக்கும் அரபு உலகத்துக்கும் உள்ள தொடர்புகளை விளக்கி மகிந்தவோ சிறிலங்காவோ மேற்குலகத்தின் நட்பு வட்டத்திற்குள் வரமாட்டா.தென்கிழக்காசியாவின் இஸ்ரேலாக அமெரிக்காவுக்கு ஆதரவாக தமிழர் தரப்பு இருக்கும் என்று பேரம் பேச வேண்டும்.

அமெரிக்கா மீது காதல் கொண்டால் ஆண்மையில்லாத கையாலாகாத ஒன்றுக்குமுதவாத உதவாக்கரை முறை மாப்பிள்ளை இந்தியாவால் ஒண்டும் புடுங்க முடியாது.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்குப் போவது (போய் என்ன செய்வார்கள்/கதைப்பார்கள் என்பதைத் தவிர்த்து) தமிழன் என்ற வகையில் எனக்கும் பெருமைதான். பல காலம் சந்திக்காதவர்களை சந்திப்பதற்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு இலகுவில் எல்லோருக்கும் கிட்டாது!

  • கருத்துக்கள உறவுகள்

சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தல்

போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தல்

அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகாமல் இருத்தல்

இது அவர்களது நிலைப்பாடாக இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34535

சிங்கள இனவாதத்தை முன்னெடுக்கும் பிரதான அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர, த.தே.கூட்டமைப்பு அமெரிக்காவுடன் அரசியல் தீர்வு குறித்துப் பேசுவது தேசத்துரோக செயலாகும் எனக் குற்றஞ்சாட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.

விடுதலைப் புலிகள் வலுவாக இருந்த காலத்தில் பிரபாகரன்தான் எம்மைக் காத்து நிற்கும் கடவுள், பிரபாகரன் மட்டும் இல்லாதிருந்தால் நாம் எப்போதோ சர்வதேச சதிக்குப் பலியாகியிருப்போம் என்று அவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார் என்பது வேறு கதை.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34535%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95 www.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.