Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சோ..சுத்தியுடனான நேர்காணல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Quote:"சர்கரை இல்லாத ஊரில் இலுப்பை இலை சர்கரை"

ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

  • Replies 99
  • Views 7.5k
  • Created
  • Last Reply

இங்கு சிலர்.. அவரை... தமிழ் அறிஞர் சோபா.சுத்தி என்று சொல்லீனம்.. பல தமிழ் அறிஞர்களின் நூல்கள் இருக்கின்ற.. இடத்தில் தானே தமிழ் உலகம் ஏற்றுக் கொண்டவற்ற நூலை தேட முடியும்.. நிழலியண்ணா.

மேலும்.. நான் லண்டனிலும்.. கொழும்பிலும்.. ரமணிசந்திரனின் நூல்கள் காணக்கிடைப்பதில்லை என்று கிருபண்ணா சொன்னதற்கு பதிலாக.. சொல்லி இருக்கிறேனே தவிர அவற்றைத் தேடி அங்கு போனேன் என்று எங்கு எழுதி இருக்கிறேன். ஒரு மட்டுறுத்தினரே இப்படி கருத்தை திரிக்கப்படாது.

பரவாயில்லையே.. ஒரு மட்டு எப்படி இப்படி எழுதலாம் என்றோ அல்லது உங்களை ஒருவர் விமர்சித்தால் அல்லது நீங்கள் எழுதியதை கேள்வி கேட்டால் " ஐயோ மட்டுக்களே இதைப் பாருங்க" என்றோ கோழைத்தனமாக அழுவாச்சி ஆட்டம் ஆடாமல் இந்தளவுக்கு எழுதியதுக்கு நன்றி

உங்களுக்கு இந்த திரியில் என்னால் சொல்லக் கூடியது ஒன்றுதான்: சோபாசக்தியின் எழுத்தை வாசித்து விட்டு அவரை நீக்கி அவரது எழுத்தை மட்டும் விமர்சித்து பதிவிடுங்கள்; எனக்கும் அவரது அரசியல் சிந்தனையுடன் முரண்பாடு பாரியளவில் இருக்கு; எனவே அவரை கேள்வி கேட்கலாம்

இலக்கியவாதிகள் எல்லா நாட்டிலும் எல்லா சமூகத்திலும் உள்ளார்கள். ஆனால் அவர்கள் தமது மக்களின் தேவைகளுடனும் அவர்களின் வாழ்வியலை முன்னகர்த்த கூடியனவாயும் முக்கியமாக அந்த மக்களை அடையக்கூயனவாயும் இருக்கவேண்டும்.

..அதே இலக்கியவாதிகள் தம் மக்களை விடுவிக்கின்றோம் என்று கூறியவர்கள் செய்த அடக்குமுறைகளையும் விமர்சித்துள்ளார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். இந்த விளக்கம் இல்லாமல் அடக்குமுறைக்குட்பட்ட ஒரு சமூகத்தின் விடுதலை எப்படி அமையும் என்பதுக்கு உலகின் முன்னொரு இறுதி சாட்சியாக முள்ளிவாய்க்கால் மட்டுமே அமைய வேண்டும் என்று விரும்புகின்றேன்

.... உங்கள சுத்தி ஒரு மேதாவித்தனமான........

ஒளிவட்டம் இருக்குன்னு நம்பிகிட்டே இருக்காம.........

வீட்டுக்கு வெளில வந்தா தானே,,,,,,,,,,,

சூரியன் ,,,,

எவ்ளோ எல்லாரையும்விட பிறைட்னு தெரியவரும்!!

சராசரி மனித வாழ்க்கையை அதன் சோகத்தை,,, எழுத /பதிவு செய்ய,,,,,,,,,,

அதை சுவாரிசமாய் படிக்க.....போதிக்க ........

யாரும் பொறந்துவரவேண்டியதே இல்ல.........

அதை பத்தி , அதன் அனுபவங்கள் பத்தி........

பொழந்துகட்ட ஒரு கிருபனும் தேவையும் இல்ல............

தூக்கம் முடிச்சு,, கார் ஸ்டார்ட் பண்ணி ...

தெருவில இறக்கிட்டாலே போதுமே..........

ஒவ்வொரு சிக்னலிலும் அனுபவம் ,,,

தானா , வருமா இல்லியா?

அப்போ ஒவ்வொருத்தனுமே ,, கருத்து,, கம்முனாட்டி ......

புத்தனுங்கதானே! :)

நியாயமான கருத்துக்கள் ,, என்னுமே பொறப்பதில்ல.............

நியாயமான கருத்துக்கள் பொறக்க ,, தடையாயிருப்பது ,, பெரும்பாலும் ...........

ஈகோ!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் ஆக்கபூர்வமான பதிவுக்கு நன்றி!

விமர்சனங்களைப் பற்றி ஜெயமோகன் (அவரும் தமிழின் முன்னணி எழுத்தாளர்தான்)..

இலக்கியத்தைப் பொறுத்தவரை பெரிய சிக்கல் என்னவென்றால், உண்மையிலேயே புத்தகங்களைப் படித்துத் தன்னுடைய கருத்துகளை சுயமாக உருவாக்கிக்கொண்டவர்கள் பத்துப் பேர் தான் இருப்பார்கள். நூறு பேர் எதையுமே படித்திருக்க மாட்டார்கள். ஒரு அரட்டையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கருத்து உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். நேரில் அவர்களிடம் போய் நீ என்ன படித்திருக்கிறாய் ? எந்தப் புத்தகத்தின் அடிப்படையில் நீ சொல்கிறாய் ? என்றால் அவர்களால் சொல்ல முடிவதில்லை. எல்லாரும் உங்களை அப்படிச் சொல்கிறார்கள் என்பார்கள்.

அரட்டையில் வரக் கூடிய கருத்துகளுக்கு எந்த மதிப்பீடும் கிடையாது. உண்மையான கருத்துகள், ஆர்வம் போன்றவை இல்லாதவர்களுடைய கூற்றுகளை நான் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.

நாங்கள் மந்தைகளாக ஏன் இருக்க வேண்டும்.

இந்த ஆக்கம்.. சோ.சுத்தியின் அடிப்படை எண்ண ஓட்டங்களின் பால்... எழுந்த ஒன்றாக உள்ளதே அன்றி.. அவரின் படைப்புக்களை.. இலக்கியமாக கருதியோ.. உணர்ந்தோ.. முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல.

நான் சோ.சுத்திய ஒரு இலக்கிய கர்த்தாவாகவோ.. ஒரு இலக்கியப் படைப்பாளியாகவோ பார்க்கவில்லை. அந்தளவுக்கு அவர் படைப்புக்களில் இலக்கியத்தன்மை இருப்பதாகவும் நான் உணரவில்லை. வலைப்பூவில் தீராநதியில் எழுதிறவன் எல்லாம் இலக்கியம் படைக்கிறான்னா... இலக்கியம் நாளுக்கு நாள் பொறந்துகிட்டே இருக்கு.. ஏன் நானும் கூட என்னை ஒரு இலக்கியப்படைப்பாளின்னு சொல்லிக்கலாமே..??! இது எனது சொந்த நிலைப்பாடு.. இதை மாற்றிக் கொள்ள.. நான் அந்தப் படைப்பாளியை அங்கீகரிக்கும் நிலைக்கு அவர் எழுத முனைய வேண்டும்.. நடந்து கொள்ள வேண்டும். அதுவரை மற்றவர்களுக்காக நான் ஏன் அவரை அங்கீகரிக்க வேண்டும். அந்த அவசியம் நமக்கில்லையே.

சோபா.சுத்தியை நான் ஒரு புலி எதிர்ப்பு.. அரசியல் சார்ந்த.. காமடியனாக பார்க்க.. கிருபண்ணா.. அவரை பெரிய.. இலக்கியவாதியாகப் பார்கிறார். அர்சுன் அண்ணா அவரை தமிழ் உலகமே அங்கீகரித்து நிற்கும் பேரறிஞராகப் பார்க்கிறார்.. நிழலி அண்ணாவோ.. வழமை போல.. புலிகள் மட்டுமே விமர்சனத்துக்குரியவர்கள்.. புலிகளை விமர்சிப்பவர்களும்.. புலி எதிர்ப்பாளர்களும் விமர்சனத்துக்கு அப்பாலான.. இலக்கியப் படைப்பாளிகள் என்ற தோறணையில் நிற்கிறார்.

இது தான் சரிநிகர் யாழ்ப்பாணத்தை அடையாததற்கு காரணமோவும் தெரியல்ல.

எனக்கு ஒன்று புரியல்ல.. மாற்றுக் கருத்தென்று புலிகளின் செயற்பாடுகளை அரசியல் மையக்கருத்துக்களை.. மட்டும் விமர்சிப்பதோடு எந்த மாற்றுக் கருத்து வெண்ணையும் நின்றதில்லை... பிரபாகரனின் குடும்பம்.. சாதி.. மண்ணாங்கட்டி என்று எழுதி.. ஈழப்போராட்டத்தில் இருந்த நியாயத்தைக் கூட குழிதோண்டிப் புதைக்கும் வரை.. இந்த சோ.சுத்தி இலக்கியப் பற்றாளர்கள் தூங்கிக் கிடக்கின்ற அதே நேரம்.. நான் ஒரே ஒரு பதிவை.. மட்டுமே.. சோ.சுத்தி வைச்சுப் போட்டன். அவ்வளவும் தான்.. யாழின் மிகப்பெரிய புத்தகப் படிப்பாளிகள்.. எல்லோரும்.. கங்கணக்கட்டி நின்று.. தம்கட்டி.. நமக்கு இலக்கியம்.. படைப்பு.. படைப்பாளி.. என்று பல பகுதிகளாக வகுப்பெடுக்கிறாங்க..!

இன்னுமொருவன் அண்ணா தங்களின் ஓரளவு நடுநிலையான கருத்தை உள்வாங்கிக்கிறன். ஆனால் அதை சோ.சுத்தி மேல போர்வையாகப் போர்த்திப் பார்க்க நான் விரும்பல்ல..!

சோ.சுத்தியின் கருத்தியல் ஓட்டமும்.. எமது போராட்டமும்.. பிரபாகரனும்.. யாழ்ப்பாண சாதியமும்.. தலித்தியமும்.. மாக்சியமும்.. இப்படி.. அவர் குண்டுச் சட்டிக்கில் குதிரை ஓட்டுவதை நான் அந்தளவு இலகுவாக புறக்கணிக்கப் போறதும் இல்லை.

சோ.சுத்தியை எவராவது பெரிய இலக்கியவாதின்னு சொல்லிட்டுப் போகட்டும்.. அப்படிச் சொல்லுற கிருபன் அண்ணாவோ.. நிழலி அண்ணாவோ.. அர்ஷுன் அண்ணாவோ இலக்கியவாதிகளா.. நான் அறிஞ்ச வரை இல்லை..??! ஜஸ்ட் வாசகர்கள்.அதே போல தான் நாங்களும் வாசகர்கள்.

துக்ளக் சோவை இலக்கியவாதியா போற்றிறவனும் இருக்கிறான்.. புதுவையை பயங்கரவாதி என்று சொல்லுறவனும் இருக்கிறான். அந்த வகையில் தான் சோபா.சுத்தியை.. கிருபண்ணா இலக்கியவாதி.. படைப்பாளி என்று காண்கிறார்.. நானோ.. அது ஒரு காமடிப் பீஸு என்கிறேன். அவ்வளவும் தான்.

ஒரு காமடிப் பீசை வைச்சு.. எழுதிய இந்தக் காமடியை.. ஒரு இலக்கியத் திறனாய்வுக்கோ.. அல்லது இலக்கிய விமர்சனம் என்ற நிலைக்கோ இட்டுப் போறதை நான் விரும்பல்ல. ஏன்னா என் பார்வையில்.. நான் படித்த வரையில்.. சோபா.சுத்தி மாற்றுக்கருத்து இலக்கியம் படைக்கின்ற.. பேரறிஞர் என்ற நிலையை நான் அவர் மீது உணர முடியவில்லை. சோபா.சுத்தியின் கருத்துருவாக்கத்தின் நோக்கம் பற்றி அவரோடு கூடப் பழகினவங்க.. சொல்லுறதையும் நான் அவரின் படைப்புக்கு வெளியில நின்றும் கேட்கிறன். இங்க சிலர் அதை மறைக்க நினைக்கினம். அந்தளவு தான் வேறுபாடு.

ஒரு இலக்கியம் விமர்சிக்கப்படலாம்.. இலக்கியவாதி விமர்ச்சிக்கப்படக் கூடாது என்றால்.. சோபா.சுத்தி என்ற பெயர் வெளிய வரக்கூடாது.. அவரின் படைப்பே யாழில் தலைப்புக்களில் இருக்க வேண்டும். கம்பன் என்ற பெயர் வராமல்.. அவன் படைத்த இலக்கியங்களின் பெயர் மட்டுமே வர வேண்டும்..ஏன் அப்படி இருப்பதில்லை. கண்ணாதாசன் என்ற பெயர் இல்லாமல்.. அவரின் சினிமா இலக்கியங்களை எவராவது விமர்ச்சிக்கட்டும் பார்க்கலாம்.. ஏன் கண்ணதாசனே தன் பெயர் இன்றி இலக்கியம் படைத்து விட்டிருக்கலாமே..??! ஆக விமர்சனம் என்று வரும் போது... இலக்கியம் மட்டும் விமர்ச்சிக்கப்படனும்.. அந்த இலக்கிய கர்த்தாவின் அரசியல்.. சமூக.. நிலைப்பாடுகள்.. விமர்ச்சிக்கப்படக் கூடாது என்ற நியாயப்படுத்தலும்.. அந்தளவுக்கு எனக்கு ஏற்புடைய ஒன்றாத் தெரியல்ல.

புலி எதிர்ப்பு பிரபாகரன் எதிர்ப்பு என்ற அடிப்படையில் மட்டுமே.. மாற்றுக்கருத்து எழுதி.. பிரபாகரனை அவரின் குடும்பத்தை திட்ட முடியுமுன்னா.. ஏன்.. அதேகருத்தை எழுதிறவனை நிராகரிச்சு.. அவன் சொல்லுறது தவறுன்னு உணர்த்த நாங்க எழுதப்படாது. பிரபாகரன்.. பயங்கரவாதி எண்ணா.. சோபா.சுத்தி ஒரு களுசறை என்று சொல்ல முடியாது.

எனிமேல்.. சோபா.சுத்தி என்று தலைப்புப் போடுறதை விட்டிட்டு.. அவரின் படைப்புகளின் பெயரால் அவரை அடையாளப்படுத்துங்க.. இந்த மாற்றத்தை முதலில கொண்டு வாங்க.. அப்புறம்.. மக்கள் தீர்மானிப்பார்கள்... சோபா.சுத்தியின் படைப்புக்களின் நோக்கத்தையும் போக்கையும் திசையையும். அதைவிட்டிட்டு நாங்க நாலு பேர்.. சுத்தி சுத்தி வந்து ஒருவரின் சில படைப்புக்களின் அடிப்படையில்.. அவரை தமிழ் அறிஞர்.. இலக்கியவாதி... புலிகள் அங்கீகரித்த படைப்பாளி என்ற தோறணையில் இனங்காட்டி.. அவருக்கு விளம்பரம் செய்வதிலும்.. அவரின் படைப்பை மக்கள் முன்னிறுத்துங்கள் பார்க்கலாம். அதை வைச்சு.. மக்கள் இதனை ஏற்கச் செய்யுங்கள் பார்க்கலாம். இதுதான் உங்கள் முன் நான் வைக்கிற சவால்..!

நான் பார்த்த அளவில்.. சோபா.சுத்தியின் படைப்புக்களில் ஒன்றை உதாரணம் காட்டி இங்கு யாரும் கருத்துப் பகரவில்லை. அதன் போக்குகள்.. பற்றி எவரும் சொல்லேல்ல. ஆனால்.. சோபா.சுத்தி விமர்சனத்துக்கு அப்பாலான ஒரு பெரிய புடுங்கி என்ற கணக்கா எழுதிக் கிட்டிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை ஒரு கதையோடு சமூகத்துக்குள் தன்னை இனங்காட்ட வாறவன்.. அந்தக் கதைக்கான விமர்சனத்தோடு.. அவனும் அங்கு நின்றாக வேண்டும் என்பதே நியாயம்.

கதை தானாகப் பிறப்பதில்லை. யாரோ ஒருவரின் சிந்தனையே கதை. அதை எழுதியவரும் அவரே. எவரும் கதைக்கான சிந்தனையை அப்படியே எழுத்தாக்குவதில்லை. அதற்குள் அந்த நபரின் குணம்.. இயல்பு.. என்று பல புகுந்திருக்கும். கதை விமர்சிக்கப்படும் போது.. அவையும் விமர்சிக்கப்படும். இதனை.. சோபா.சுத்தியின் விசிறிகளும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

மற்றும்படி.. நீங்கள் சிலர் உணர வைக்கப் பாடுபடுவது போல.. நான்.. சோபா.சுத்தியை.. ஒரு பெரிய படைப்பாளின்னு நினைகல்ல. இலக்கியவாதின்னு பார்க்கல்ல. தமிழ் உலகம் அங்கீகரித்து நிற்கும்.. எழுத்தாளர் என்று பார்க்கல்ல. 6000 வலைப்பூ தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்.. அதுவும் புலிகளை பிரபாகரனை சதா.. திட்டுவதில் இன்பம் காணும் ஒருவகை மனநோயாளி என்றே உணர்கிறேன். இதற்கு மேல சொல்லவோ.. அல்லது இங்கிருந்து உள்வாங்கிக் கொள்ளவோ எனக்கு பெரிசா விசயங்கள் இருப்பதாகத் தெரியல்ல.

கருத்துப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் சிநேகித பூர்வ நன்றி. இங்கு நான் சிலரோடு எதிர்நிலை நின்று கருத்துச் சொல்லி இருந்தாலும்.. அவங்களின் அந்த நிலைப்பாட்டை அவங்கள் அளவிலான எண்ண வெளிப்பாடாக ஏற்றுக் கொள்கிறேன். மற்றும்படி.. இந்த கருத்தாடல் தொடர்பாக.. யாரோடும் எந்த தனிப்பட்ட முரண்பாடும் கிடையா. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொது வாழ்கைக்கு வரும் போது மனிதர்கள் தூய்மையாக இருக்க வேண்டும், அல்லாவிடில் அவர்களது எழுத்துக்கள் மட்டும் அல்ல அவர்களும் விமர்சிக்கபடுவார்கள். இதை தவிர்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இது என்ன கதை? ஒருவருடைய எழுத்தை விமர்சிக்க அவர்களை விட சிறந்த எழுத்தளாராக இருக்க வேண்டுமானால் நாங்கள் எல்லாம் புத்தன்,சாஸ்திரி,ச‌காரா அக்கா எழுத்தை கூட‌ விமர்சிக்க தகுதி அற்றவர்களா?...கிருபன் சொன்ன மாதிரி முழுமையாக அவர்களுடைய எழுத்துக்களை படித்து விட்டு விமர்சிக்கலாம் ஆனால் நீங்கள் சொல்கிற படி பார்த்தால் சோ.சக்தி தானே எழுதிப் போட்டு தானே படிக்க வேண்டியது தான்

எழுத்தை யாரும் விமர்சிக்கலாம்.. அதே போல போராட்டத்தையும் யாரும் விமர்சிக்கலாம். ஆனால் எழுத்தளனை விமர்சிக்கும் போது விமர்சிப்பவன் அதே எழுத்தளனது தகுதியில் அல்லது அதை விட கூடியவனாக இருந்தாலே அது சரியானதாக இருக்கும். அதே உதாரணத்தைத்தான பிரபாகரனிற்கும் சொல்லியிருந்தேன். மற்றும்படி படைப்புக்களை தாராளமாக அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து மேயுங்கள் அதற்காகத்தானே எழுதுகிறார்கள்.

படைப்புக்களை விமர்சிக்க எழுத்தளனாக இருக்கவேண்டுமென்பதில்லை படிக்கத் தெரிந்தாலே போதுமானது. பரியவேண்டும் என்கிற அவசியம் கூட தேவையில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் தானே சொல்லிட்டார்.. தான் படிச்சதுகளை வைச்சுத்தான் இதனை எழுதியதாக.. அம்புட்டுத்தான்.. இதில இருந்து அவர் படிச்சது என்ன என்றும் இதை விட அவரிடமிருந்து பெரிய லெவலில் வெளிவர எதுவும் இல்லையென்றும் எல்லாருக்கும் தெரிந்துவிட்டதுதானே.. பிறகென்ன.. நடையைக் கட்டுங்கப்பா..

ஆனா நெடுக்ஸ்..

சோபா ஒரு மார்க்சிய ஆள் இல்லை. அப்ப என்ன என்று தேடி கண்டுபிடியுங்கோ.. நீங்கள் உங்களுக்கு வித்தியாசமா கதைக்கிறவர்கள் எல்லாரையும் மார்க்கிசிய ஆள் என்று நினைக்கிறியள். ஏனென்றா அதைவிட்டால் இன்னொன்றை உங்களுக்குத் தெரியாது.

சோபா தீராநதியில் எழுதுவதில்லை. அவரை ஒன்றிரு தடவைகள் செவ்வி கண்டிருக்கிறார்கள். நீங்க தீராநதி தீராநதி என்று துாக்கி பிடிக்கக் காரணம் - சிறுபத்திரிகைகளில் (அதனை சிறுபத்திரிகை என்றும் சொல்ல முடியாது. குமுதம் குடும்ப இதழ் அது) உங்களுக்கு தீராநதியைத் தவிர வேறு எதனையும் தெரியாது.

அண்மையில் ஆனந்தவிகடனில் கூட சோபாசக்தி ஒரு கதை எழுதியிருந்தார். சரணடைந்து தற்போது விடுதலை செய்யப்பட்ட போராளிகளை தமிழ் சமூகம் எந்தளவிற்கு புறக்கணிக்கிறது என்றும் போராளிகளின் மன அழுத்தம் குறித்துமான அந்தக்கதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா..

நீங்கள் சென்று கேட்ட புத்தகக் கடைகளில் சோபா சக்தியை தெரியாது என்று சொன்னார்களா.. அப்பாடியாயின் அவர்கள் நேற்றுவரை பழைய ஈயம் பித்தளை இரும்பு விற்று தொழில் நட்டம் ஏற்பட்டு இன்று புத்தகக் கடை வைத்தவர்களாக இருப்பார்கள்.

மொத்தத்தில் இங்கு நீங்கள் எழுதியிருக்கிற கருத்துக்களை முழுமையாக படித்தபிறகு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால்..

தம்பி... நீங்க இன்னும் வளரணும்.....

..அதே இலக்கியவாதிகள் தம் மக்களை விடுவிக்கின்றோம் என்று கூறியவர்கள் செய்த அடக்குமுறைகளையும் விமர்சித்துள்ளார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். இந்த விளக்கம் இல்லாமல் அடக்குமுறைக்குட்பட்ட ஒரு சமூகத்தின் விடுதலை எப்படி அமையும் என்பதுக்கு உலகின் முன்னொரு இறுதி சாட்சியாக முள்ளிவாய்க்கால் மட்டுமே அமைய வேண்டும் என்று விரும்புகின்றேன்

அதாவது தமிழ் போராட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக இலக்கியவாதிகள் சாதித்த / சாதிக்கும் அளவுக்கு சிங்கள அடக்குமுறைக்கு எதிராக ஏன் சாதிக்கமுடியவில்லை என்ற வினாவையும் வைத்தே நாம் அணுகவேண்டும்.

எமது அடக்குமுறை அறுபது வருட காலத்தை கொண்டது. அதில் இருபது வருடம் போராட்ட அடக்குமுறைகள் இருந்திருக்கலாம்? மொத்த அறுபது வருட காலத்தில் அரசின் அடக்குமுறைக்கு எதிராக எவ்வாறு தமிழ் இலக்கியவாதிகள் குரல் கொடுத்தனர் / கொடுக்கிறார்கள் என்ற கேள்வியும் அது எவ்வாறு எமது தாயக / புலம்பெயர் மக்களை அடைகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது.

இலக்கியமும் இலக்கியவாதிகளும் கூட போராட்டமும் போராளிகளும் போலவே - சமூகத்தை சீர்திருத்த, வளர்க்க, பாதுகாக்க. அடக்குமுறைக்குட்பட்ட எமது சமூகத்தின் விடுதலை எப்படி அமையும் என்பதுக்கு முள்ளிவாய்க்கால் மட்டுமே இறுதி சாட்சியாக அமையாமல் இறுதி விடுதலை அமைவதே சாலச்சிறப்பாகும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சுத்தியை விமர்சிக்க வேண்டுமானால் .................... அவருடைய குப்பைகள் கொப்பிகள் (அசலை படித்திருந்தாலும்) படிக்கவேண்டும்.

ஆனால் நெடுக்கலபோவனை விமரிச்ப்பது என்றால் ? எழுந்த மாத்திரத்தில் முடிகிறது.

அவர் இங்கே இணைத்தது ஒரு கற்பனை பேட்டி (அது நிஜம் இல்லை என்பது வேறு) இதற்கு நெடுக்கலபோவனின் படிப்பு தராதரம் எல்லாம் தேவை. சோபா சுத்திக்கு எதுவும் தேவை இல்லை சுத்தி பிழைப்பு நடத்த நன்றாக தெரிகிறது ................ பிறகு எதற்கு மற்றவைகள்?

தமிழ் இலக்கியம் வளர்கிறது என்று யாரவது சொல்லும்போதுதான் . தமிழருக்கு அச்சமாக இருக்கிறது>

கற்பனையை கற்பனை என்று படிக்க முடியவில்லை .................. எதோ ஒன்று இவர்களை அச்சுறுத்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் ஆக்கபூர்வமான பதிவுக்கு நன்றி!

விமர்சனங்களைப் பற்றி ஜெயமோகன் (அவரும் தமிழின் முன்னணி எழுத்தாளர்தான்)..

இலக்கியத்தைப் பொறுத்தவரை பெரிய சிக்கல் என்னவென்றால், உண்மையிலேயே புத்தகங்களைப் படித்துத் தன்னுடைய கருத்துகளை சுயமாக உருவாக்கிக்கொண்டவர்கள் பத்துப் பேர் தான் இருப்பார்கள். நூறு பேர் எதையுமே படித்திருக்க மாட்டார்கள். ஒரு அரட்டையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கருத்து உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். நேரில் அவர்களிடம் போய் நீ என்ன படித்திருக்கிறாய் ? எந்தப் புத்தகத்தின் அடிப்படையில் நீ சொல்கிறாய் ? என்றால் அவர்களால் சொல்ல முடிவதில்லை. எல்லாரும் உங்களை அப்படிச் சொல்கிறார்கள் என்பார்கள்.

அரட்டையில் வரக் கூடிய கருத்துகளுக்கு எந்த மதிப்பீடும் கிடையாது. உண்மையான கருத்துகள், ஆர்வம் போன்றவை இல்லாதவர்களுடைய கூற்றுகளை நான் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.

கிருபனின் இந்தக் கருத்துடன் கிட்டத்தட்ட உடன்படுகிறேன். :rolleyes:

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஞானங்கள் ஒப்பீட்டளவில் மற்றவர்களைவிட அதிகமாக இருக்கும். உங்களுக்கு ஞானமுள்ள விடயங்களில் மற்றவர்கள் சிறிது மேம்போக்காக எழுதினால் ஒன்றில் பொருட்படுத்தாமல் விடலாம். இல்லாவிடில் ஆக்கபூர்வமான எதிர் விமர்சனங்களை முன்வைக்கலாம். :unsure:

ஆனால் இங்கே நடப்பது என்னவென்றால் ஆக்கபூர்வமற்ற விமர்சனங்களாக வந்து குவிந்துகொண்டு இருக்கின்றன. நெடுக்கின் முதல் பதிவை எடுத்து பதிலுக்குப் பதில் விமர்சித்திருந்தால் அது ஆக்கபூர்வமானதாக இருந்திருக்கும். ஆனால் யாழ் இலக்கியவாதிகள் நீங்கள் எல்லோரும் உங்கள் நிலையைத் தக்கவைப்பதற்குப் பதில் நெடுக்கின் நிலைக்கு இறங்கி வந்துவிட்டீர்கள் என எண்ண வேண்டியிருக்கிறது. :rolleyes:

நிற்க.. யாழின் வாசகர்களில் ஒரு 20 வீதமானோர் சோபா சக்தியின் கதைகளைப் படித்திருக்கிறார்கள் என வைத்துக்கொண்டால் அதில ஒரு 10 வீதமானோருக்கு அவரின் எழுத்துக்கள் பிடித்திருக்கலாம். (20%, 10% என்பது சும்மா எனது அனுமானங்களே.. 99% பேர் படித்திருக்கலாம்.. யார்கண்டார்..?!) :unsure:

20% என்பது உண்மையானால் மிகுதி 80 வீதமானோரை நோக்கியே உங்கள் கருத்துக்கள் இருக்கவேண்டுமே ஒழிய அந்த 20 வீதத்துக்குள் சுற்றிச் சுழலக் கூடாது. அது குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுதல் எனப்படும்..! :lol:

இந்தத் திரியில் கருத்து எழுதியவர்களின் எண்ணிக்கையே ஒரு சாட்சி.. நானும், புங்கையூரனும் எழுதியிருந்தாலும் நாங்கள் வாசிப்புப் பழக்கமற்றவர்கள் என்பதை முதலிலேயே எழுதிவிட்டோம். மிகுதி எழுதியவர்களை வைத்து யாழில் எத்தனை வீதமானோர் இலக்கிய வாசனை உள்ளவர்கள் என்பதைக் கண்டறியலாம்..! :lol: அவர்களுக்கும் ஏற்றவாறு கருத்துக்கள் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நிற்க.. யாழின் வாசகர்களில் ஒரு 20 வீதமானோர் சோபா சக்தியின் கதைகளைப் படித்திருக்கிறார்கள் என வைத்துக்கொண்டால் அதில ஒரு 10 வீதமானோருக்கு அவரின் எழுத்துக்கள் பிடித்திருக்கலாம். (20%, 10% என்பது சும்மா எனது அனுமானங்களே.. 99% பேர் படித்திருக்கலாம்.. யார்கண்டார்..?!) :unsure:

20% என்பது உண்மையானால் மிகுதி 80 வீதமானோரை நோக்கியே உங்கள் கருத்துக்கள் இருக்கவேண்டுமே ஒழிய அந்த 20 வீதத்துக்குள் சுற்றிச் சுழலக் கூடாது. அது குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுதல் எனப்படும்..! :lol:

இந்தத் திரியில் கருத்து எழுதியவர்களின் எண்ணிக்கையே ஒரு சாட்சி.. நானும், புங்கையூரனும் எழுதியிருந்தாலும் நாங்கள் வாசிப்புப் பழக்கமற்றவர்கள் என்பதை முதலிலேயே எழுதிவிட்டோம். மிகுதி எழுதியவர்களை வைத்து யாழில் எத்தனை வீதமானோர் இலக்கிய வாசனை உள்ளவர்கள் என்பதைக் கண்டறியலாம்..! :lol:அவர்களுக்கும் ஏற்றவாறு கருத்துக்கள் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்..! :wub:

:::::::::::::::::::::து::::::::::::::::::::::::::::::::: :icon_idea: :icon_idea: :icon_idea: :icon_idea:

சிரிப்போம் சிறப்போம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... இன்னும் முடியேல்லையோ?..

மிகச் சுவாரசியமான இந்தத் தலைப்பு கண்ணில் பட்டது,’

இதில் சில ஆளமான கேள்விகள் உள்ளன.

படைப்பு இல்லகியங்கள் அரசியல் அற்றனவா?

எனது கருத்து எனது அனுபவத்தில் அப்படி அல்ல, படைப்பாளியின் அனுபவம் அரசியல் இவற்றில் இருந்தே அவரின் பார்வையும் அவர் உருவாக்கும் பாத்திரங்களின் குண இயல்புகளும் உருப்பெறுகின்றன.படைப்பாளி தான் உருவாக்கிய பாதிரங்களை வாசகன் மீது ஏற்றுகிறார்.

வாசகன் என்ன செய்கிறான், படைப்பாளி உருவாகிய பாத்திரங்களை தமது பார்வையில் அனுபவத்தில் இருந்து உருவாகிக்கிறார்கள்.படைப்பாளியின் உருவாக்கத்துக்கும் வாசகனின் அனுபவ உருவகிப்புக்கும் இடைவெளி இருக்கும் போது வாசகன் , படைப்பாளைன் `அரசியல்` நோக்கம் குறித்த சந்தேகத்தை உருவாக்கிக் கொள்கிறார்.

சோபாசக்தியின் கதைக் களம் என்பது ஈழ விடுதலைப் போராட்டமே.அந்தப் போராட்டம் எம்மில் பல சொந்த அனுபவங்களை பார்வைகளை ஏற்படுத்தி உள்ளது.எங்களது சொந்த அனுபவங்களினூடகவே நாங்கள் சோபாசக்தியின் கதைகளைப் பார்க்கிறோம்.

அங்கே எமது அனுபவங்களுக்கும் சோபாவின் உருவகிப்புக்களும் இடையே பாரிய இடைவெளி தெரிகிறது.சோபாவின் கதைகளை வாசிக்கும், கதைக் கள அனுபவம் அற்ற ஒருவருக்கு அது நல்ல கதையாகவே தெரியும்.அதனாலேயே சோபா சிறந்த ஒரு புனை கதை ஆசிரியராகக் கருதப்படுகிறார்.அது சோபாவுக்கு தனிப்பட்ட நன்மைகளை வழங்கலாம். அதனால் இவ்வாறு கதை எழுதுவது அவருக்கு நன்மை பயக்கும் விடயம்.

ஆனால் அவரின் கதைக் களத்தின் மக்களுக்கு இது நன்மை பயக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு இலக்கியம் படைப்பவன் தனது மக்கள் சார்ந்து இலக்கியம் படைக்க வேண்டுமா அல்லது தனது சுய நலன் சார்ந்து இலக்கியம் படைக்க வேண்டும என்பதே கேள்வி.கலை கலையஞன் சார்ந்ததா அல்லது மக்கள் சார்ந்ததா என்னும் சர்ச்சை பன் நெடுங்காலமாக இருக்கும் ஒரு கேள்வி.

ஆகவே சோபாசக்தியின் அரசியலையும் அவரின் மோசடியையும் அம்பலப்படுத்தும் அதே வேளை , அவரின் இலக்கியம் சார்ந்த்து ஆளமான பார்வைகளை வைப்போம். மற்றும் நெடுக்காலபோவான் எழுதியதை அவரின் பகிடியாக எடுத்துக் கொண்டு, பேச்சுச் சுதந்திரம் எவருக்கும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வோம்.

எவனும் எவனையும் விமர்சிக்கலாம் அந்த விமரிசனம் நியாயமானதா என்பதை மக்களே தீர்மனிக்கிறார்கள். அதே போல் ஒருவன் சமூகப் போராளியா அவனது இலக்கியம் மக்கள் இலக்கியமா என்பதையும் மக்கள் தீர்மானிப்பர்கள்.

அதை எப்படி நீங்கள் சொல்ல முடியும் ?

அவருடைய இலக்கிய புரட்டுக்கள் எல்லாம் நீங்கள் படித்தீர்களா?

இலக்கியம் என்பதே புரட்டுத்தான்.புனைவு என்றால் என்ன? அது நிஜம் அல்ல என்பதே.

சோபாசக்தி நல்ல புனைகதையாளர் என்றே வைத்துக் கொள்வோம், ஆனால் அவரின் புனைவு இலக்கியத்தால் அவர் யாருக்காக தான் பேசுவதாகக் கூறிக் கொள்ளும் மக்கள் பயன் பெறுகிறார்களா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதே.

அவரின் புனைவுகளை தமிழரின் போராட்டத்தை நசுக்க முயலும் அதிகாரம் சார்ந்த இந்திய அமைப்புக்களே முன் நிறுத்துகின்றன. அவருக்கு இந்தியா ஒரு தேசிய விருதை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஆனால் அப்படிச் செய்து அவரை அவர்கள் அம்பலப்படுத்த மாட்டார்கள்.

இந்திய இல்லக்கிய ஜனநாயக வம்சம் ஏன் அதை என்னும் செய்யவில்லை என்ற ஆச்சரியம்தான் எமக்கு!

அதையும் செய்தார்கள் என்றால் .............. சுத்தியின் உள்ளூர் ரசிகர்மன்ற தலைவர்களுக்கு கொண்டாட்டம்தான்!

ஆகவே சோபாசக்தியின் அரசியலையும் அவரின் மோசடியையும் அம்பலப்படுத்தும் அதே வேளை , அவரின் இலக்கியம் சார்ந்த்து ஆளமான பார்வைகளை வைப்போம். மற்றும் நெடுக்காலபோவான் எழுதியதை அவரின் பகிடியாக எடுத்துக் கொண்டு, பேச்சுச் சுதந்திரம் எவருக்கும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வோம்.

எவனும் எவனையும் விமர்சிக்கலாம் அந்த விமரிசனம் நியாயமானதா என்பதை மக்களே தீர்மனிக்கிறார்கள். அதே போல் ஒருவன் சமூகப் போராளியா அவனது இலக்கியம் மக்கள் இலக்கியமா என்பதையும் மக்கள் தீர்மானிப்பர்கள்.

உங்களின் பொதுக்கருத்துடன் உடன்படுகின்றேன்

உலகின் அனைத்து இலக்கியங்களும், கதைகளும், படைப்புகளும், கலைகளும் எப்பவும் ஏதாவது ஒரு அரசியலை பேசுகின்றனவாகவே அமைகின்றன. அரசியல் அற்ற இலக்கியமும் கலைகளும் உலகில் இல்லை. பாட்டி காலத்து கதைகளில் இருந்து இணைய வழி கதைகள் வரைக்கும் அரசியல் சார்ந்தவை தான். எல்லாக் கதை சொல்லிகளும் தமது அரசியலைத்தான் மக்கள் முன் வைக்கின்றனர். மக்கள் அதை ஏற்கின்றனரா இல்லையா என்பது கதை சொல்லியின் பிரச்சனை இல்லை. அத்துடன் இன்று ஏற்கப்படாத கதை சொல்லியின் அரசியல் நாளை ஏற்கப்படலாம் அல்லது இன்று ஏற்கப்படும் அதே அரசியல் நாளை நிராகரிக்கப்படலாம்.

ஒரு இலக்கியம் மக்களுக்கு நன்மை பயக்குதா இல்லையா என்பதை தீர்மானித்து அந்த இலக்கியத்தின் தரத்தை அணுகும் முறை நீங்கள் சொல்வது போன்று அன்றுதொட்டு இன்று வரைக்கும் இருக்கின்றது. உண்மையில் அது நன்மை பயக்குதா இல்லையா என்பதை வரலாறுதான் தீர்மானிக்கின்றது. அந்த தீர்மானிப்பு கூட ஒருபோதும் முடிந்த முடிபாக இருப்பது இல்லை. வரலாற்றின் போக்கில் மாறிக் கொண்டே இருக்கின்றது. கம்பரின் இலக்கிய போக்கில் இருக்கும் ஓட்டைகளையும் பாரதியாரின் இலக்கியத்தில் இருக்கும் குறைகளையும் கூட வரலாறுதான் எமக்கு சொல்லித் தருகின்றது

சோபா சக்தியின் படைப்புகள் எம்மில் அதிகப் பேருக்கு பிடிக்காத அரசியலை பேசுகின்றது. அவரது அரசியலை எமக்கு முன் முன்வைக்கின்றது. அவரது அரசியலும் அதன் மையமும் கடும் கேள்விகளுக்குரியவை, விமர்சனத்துக்குரியவை, விதாவத்துக்குரியவை. ஆனால் அந்த அரசியலை விவாதிப்பதை விட்டு விட்டு 'சோபா சக்தி' எனும் தனிநபரை குறிவைத்து வரும் விமர்சனங்கள் வெறுப்புக்குரியவை மட்டுமன்றி அரைவேக்காட்டுத் தனமானவை. இதைத்தான் அடிக்கடி யாழிலும் முக்கியமாக புலிகளை விமர்சனம் இன்றி ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்பவர்களிடமும் காணுகின்றேன். நெடுக்கின் பதிவிலும் இதுதான் அப்பட்டமாக இருக்கின்றது.

நிழலி,

இலக்கியம் ,படைப்பாளி சார்ந்த உங்கள் கருத்துக்கள் சரியானவையே ஆனால் சோபாசக்தி, யோ கர்ணன் போன்றோர் தங்களை புனைவாளர்களாக அன்றி `உண்மைகளைப் ` பேசும் சமூகப் போராளிகளாக தங்கள் கதைகள்,கட்டுரைகள், பேட்டிகள் மூலம் அடையாளப்படுத்துகிறார்கள்.இங்கே தான் அவர்களின் புனைவு என்பது அரசியலாக மாறுகின்றது.புனைவுகள் , உண்மைகளாகின்றன. அடக்கப்படும் மக்கள் சார்பாக என்று தமது அரசியலை முன் நகர்துகிறார்கள். அதனால் தான் பலர் இவர்களின் நோக்கம், அரசியல், வாழ்வியல் நோக்கிய `அறம்` சார் கேள்விகளை எழுப்புகிறார்கள். பெண் விடுதலை பற்றிப் பேசுபவர் எங்கனம் மட்டமான ஆணாக தன்னை நடைமுறையில் காட்டிக் கொள்ள முடியும் என்னும் அறம் சார் கேள்வி எழுகிறது.நீ செய்யாததை எவ்வாறு மற்றவனைச் செய்யச் சொல்வாய் என்னும் அறம் சார் கேள்வி எழுப்பப் படுகிறது.

தமது வாழ்வியலுக்காக பிரபலத்துக்காக சமரச அரசியலை இவர்கள் எங்கனம் தலித்துக்கள்,தமிழர் சார்பாக முன் வைக்க முடியும்? அம் மக்களுக்கும் அவர்களின் போராட்டம் சார்ந்தும் இவர்கள் முன் வைக்கும் அரசியல் சார்ந்த்தும் அறம் சார் கேள்விகள் இருக்கின்றன.

பொதுத் தளத்தில் சமூகப் போராளிகளாக தங்களை பிரபலப்படுத்தும் இவர்களை நோக்கி பொதுத் தளத்தில் அறம் சார் கேள்விகளை முன் வைப்பத்தில் எந்தத் தவறையும் நான் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒருதரும் [ நெடுக்ஸ்சுக்கு எதிராக எழுதின எல்லோரும்] அவரை சோபா சக்தியைப் பற்றி எழுத வேண்டாம் என எழுதவில்லை...சோ.ச எழுதினவற்றை வடிவாய் வாசித்து விட்டு எழுதி இருந்தால் என்னும் நன்றாக எழுதி இருக்கலாம் என்று தான் சொன்னோம்.

எழுத்தை யாரும் விமர்சிக்கலாம்.. அதே போல போராட்டத்தையும் யாரும் விமர்சிக்கலாம். ஆனால் எழுத்தளனை விமர்சிக்கும் போது விமர்சிப்பவன் அதே எழுத்தளனது தகுதியில் அல்லது அதை விட கூடியவனாக இருந்தாலே அது சரியானதாக இருக்கும். அதே உதாரணத்தைத்தான பிரபாகரனிற்கும் சொல்லியிருந்தேன். மற்றும்படி படைப்புக்களை தாராளமாக அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து மேயுங்கள் அதற்காகத்தானே எழுதுகிறார்கள்.

படைப்புக்களை விமர்சிக்க எழுத்தளனாக இருக்கவேண்டுமென்பதில்லை படிக்கத் தெரிந்தாலே போதுமானது. பரியவேண்டும் என்கிற அவசியம் கூட தேவையில்லை

சாஸ்திரி அண்ணா ஒருவரை தனிப்பட‌விமர்சிக்

அவர்களை விட‌ நாங்கள் தகுதியானவராக இருக்க வேண்டும் என்ட உங்கள் கூற்றை என்னால் ஏற்க முடியாமல் உள்ளது[தனிப்பட்ட ரீதியில் தனி மனித தாக்குதல் எனக்கு அறவே பிடிக்காது.]...முருகன் எங்கள் கடவுள் ஆனால் முருகனையே பல பேர் விமர்சிப்பார்கள் "வள்ளியைப் பார்த்து ஆசைப்பட்ட முருகன் தூக்கி கொண்டு போய் கட்டினார் என" கட‌வுளே இப்படி செய்யும் போது மனிதர்[காதலர்கள்] நாங்கள் செய்தால் என்ன? என சொல்லுவார்கள்.இது முருகன் மீதான விமர்சனம்...தலைவர் மீது பல பேர் விமர்சனங்கள் வைத்தார்கள் ஆர‌ம்ப காலத்தில் அந்த விமர்சனங்கள் நேர‌டியாக தலைவரை சென்றடைந்ததால் அதன் சாதக,பாதகங்களை தலைவர் ஏற்றுக் கொண்ட‌ததால் அவர் ஒரு திறமையான தலைவராக வளர்ந்தார் ஆனால் பின்னால் அவருக்கு சாதகமான விமர்சனங்கள் மட்டுமே அவரை சென்றடைந்தது அதனால் தான்?...எது எப்படி இருந்தாலும் இவரைப் போல ஒரு தலைவர் இனி மேலும் எங்கள் தமிழ் இனத்திற்கு கிடைக்காது என்பது தான் கருத்து...ஒரு மனிதன் முன்னேற அவர் மீதான விமர்சனம் அவசியம் என்பதோடு அவர்கள் மீது விமர்சனம் வைக்க நாங்கள் அவர்களிலும் தகுதியானவராக இருக்க வேண்டும் என்ட‌ உங்கள் கூற்றை நிராகரிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒருதரும் [ நெடுக்ஸ்சுக்கு எதிராக எழுதின எல்லோரும்] அவரை சோபா சக்தியைப் பற்றி எழுத வேண்டாம் என எழுதவில்லை...சோ.ச எழுதினவற்றை வடிவாய் வாசித்து விட்டு எழுதி இருந்தால் என்னும் நன்றாக எழுதி இருக்கலாம் என்று தான் சொன்னோம்.

சாஸ்திரி அண்ணா ஒருவரை தனிப்பட‌விமர்சிக்

அவர்களை விட‌ நாங்கள் தகுதியானவராக இருக்க வேண்டும் என்ட உங்கள் கூற்றை என்னால் ஏற்க முடியாமல் உள்ளது[தனிப்பட்ட ரீதியில் தனி மனித தாக்குதல் எனக்கு அறவே பிடிக்காது.]...முருகன் எங்கள் கடவுள் ஆனால் முருகனையே பல பேர் விமர்சிப்பார்கள் "வள்ளியைப் பார்த்து ஆசைப்பட்ட முருகன் தூக்கி கொண்டு போய் கட்டினார் என" கட‌வுளே இப்படி செய்யும் போது மனிதர்[காதலர்கள்] நாங்கள் செய்தால் என்ன? என சொல்லுவார்கள்.இது முருகன் மீதான விமர்சனம்...தலைவர் மீது பல பேர் விமர்சனங்கள் வைத்தார்கள் ஆர‌ம்ப காலத்தில் அந்த விமர்சனங்கள் நேர‌டியாக தலைவரை சென்றடைந்ததால் அதன் சாதக,பாதகங்களை தலைவர் ஏற்றுக் கொண்ட‌ததால் அவர் ஒரு திறமையான தலைவராக வளர்ந்தார் ஆனால் பின்னால் அவருக்கு சாதகமான விமர்சனங்கள் மட்டுமே அவரை சென்றடைந்தது அதனால் தான்?...எது எப்படி இருந்தாலும் இவரைப் போல ஒரு தலைவர் இனி மேலும் எங்கள் தமிழ் இனத்திற்கு கிடைக்காது என்பது தான் கருத்து...ஒரு மனிதன் முன்னேற அவர் மீதான விமர்சனம் அவசியம் என்பதோடு அவர்கள் மீது விமர்சனம் வைக்க நாங்கள் அவர்களிலும் தகுதியானவராக இருக்க வேண்டும் என்ட‌ உங்கள் கூற்றை நிராகரிக்கிறேன்

என்னை பின் தொடருங்கள் நான்தான் உங்கள் வழிகாட்டி உங்களிற்கான தேவைகளையும் நல்வாழ்வையும் பெற்றுத் தருகிறேன் என்பவர்கள் அரசியல் ..போராட்ட மற்றும் மதத் தலைவர்கள். இப்டிச் சொல்பவர்களின் தனிப்பட்ட வாழ்வு ஒழுங்காக இருக்கிறதா என்பதை கட்டாயம் விமர்சிக்கவேண்டும் காரணம் மற்றையவனிற்கு வழிகாட்டுவதாக சொல்பவன் ஒழுங்காக இருக்கவேண்டியது அவசியம் . ஆனால் படைப்பாளி என்பவன் மனதில் தோன்றுவதை அவனை பாதித்ததை படைப்பாக்கிறான் அங்கு அவன் ஒழுக்கமானவனா என்பது தேவையில்லாதது. காரணம் அவன் தன்பின்னால் வாரங்கள் என்று சொல்வதும் இல்லை சொன்னாலும் நாம் போகப் போவதும் இல்லை. உதாரணமாக கண்ணதாசனை எடுங்கள் அவரின் எழுத்தை யார்தான் ரசிக்கவில்லை ஆனால் அவர் தனிப்பட்டவாழ்வானது மேசமானது அவர் அரசியல் கட்சி தொடங்கி தோற்தும் அதுதான் காரணம். அவர் எதையும் எழுதலாம் ரசிப்போம் ஆனால் வாழ்க்கையின் வழிகாட்டியாக அவரையாரும் ஏற்கவில்லை

அதே போல இன்னொரு உதாரணம் இரண்டாம் உலக யுத்தத்தில் பிரான்சை மீட்டுஎடுக்க நிதந்தர பகையாளியான இங்கிலாந்துடனும் அமெரிக்காவுடனும் ஒப்பந்தம் எழுதி அவர்களுடன் சேர்ந்து பிரான்சு தேசத்தை மீட்டவர் சாள் டி கோல் என்கிற இராணுவ அதிகாரி. யுத்தத்தில் வெற்றி பின்னர் அவர் அரசியலில் இறங்கி தேர்தலில் நின்றார் பிரான்சு தேசத்தையே மீட்டவரிற்கு படு தோல்வி மக்கள் சொன்ன காரணம் நீ சிறந்த இராணுவ அதிகாரி எங்கள் நாட்டை மீட்டாய் ஆனால் உன்னிடம் அரசை தந்தால் இராணுவநாடகிவிடும். மீண்டும் ஒரு யுத்தம் வரும். எனவேதான் நிராகரித்தோம் என்றார்கள். அதே போல வழிகாட்டுகிறோம் என்பவனின் வாழ்க்கையை வரிக்குவரி விமர்சியுங்கள் வரிக்கு வரி எழுதுபவனின் வாழ்க்கையை விமர்சித்தால் அரிவரி கூட மிஞ்சாது

கடைசியாய் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இரத்த அழுத்தத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ன முரண்பாடு :lol: :lol: :lol:

Edited by sathiri

நெல்லுயர வரப்புயரும்

வரப்புயர குடி உயரும்

குடி உயர கோன் உயர்வான்

இது எனது பாட்டனார் அடிக்கடி கூறியது. இது பல விடயங்களுக்கு பொருந்தும் என எண்ணுகிறேன். எமது சமுதாயத்தில் நல்ல இலக்கியவாதிகள், படைப்புக்கள் இருக்கலாம். ஆனால் அவை வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட, அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் இனத்தில் பரந்த அளவில் மக்களை சென்றடையாது, பாராட்டை பெற முடியாது. காரணம் மக்கள் அவற்றை உள்வாங்கும் நிலையில் இல்லை.

மக்களைத் தொடர்ந்தும் அவலங்களில் வைத்திருக்கு சிங்கள அரசும், அதற்கு முண்டுகொடுப்பவர்களும் முயல்கின்றார்கள். அவர்களால் வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட மக்கள் மீண்டும் நல்ல நிலைக்கு வருவதையும் சில தமிழ்க் கடும்போக்காளர்களும் விரும்புகின்றார்கள் இல்லை!

பி.கு.

ஒளவையார் சோழ மன்னனின் அவையில் "வரப்புயர" என்று சொல்லிவிட்டு அமர்ந்தபோது, அதன் அர்த்தம் விளங்காமல் இருந்த அவைக்கு விளக்கிய பா:

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை பின் தொடருங்கள் நான்தான் உங்கள் வழிகாட்டி உங்களிற்கான தேவைகளையும் நல்வாழ்வையும் பெற்றுத் தருகிறேன் என்பவர்கள் அரசியல் ..போராட்ட மற்றும் மதத் தலைவர்கள். இப்டிச் சொல்பவர்களின் தனிப்பட்ட வாழ்வு ஒழுங்காக இருக்கிறதா என்பதை கட்டாயம் விமர்சிக்கவேண்டும் காரணம் மற்றையவனிற்கு வழிகாட்டுவதாக சொல்பவன் ஒழுங்காக இருக்கவேண்டியது அவசியம் . ஆனால் படைப்பாளி என்பவன் மனதில் தோன்றுவதை அவனை பாதித்ததை படைப்பாக்கிறான் அங்கு அவன் ஒழுக்கமானவனா என்பது தேவையில்லாதது. காரணம் அவன் தன்பின்னால் வாரங்கள் என்று சொல்வதும் இல்லை சொன்னாலும் நாம் போகப் போவதும் இல்லை. உதாரணமாக கண்ணதாசனை எடுங்கள் அவரின் எழுத்தை யார்தான் ரசிக்கவில்லை ஆனால் அவர் தனிப்பட்டவாழ்வானது மேசமானது அவர் அரசியல் கட்சி தொடங்கி தோற்தும் அதுதான் காரணம். அவர் எதையும் எழுதலாம் ரசிப்போம் ஆனால் வாழ்க்கையின் வழிகாட்டியாக அவரையாரும் ஏற்கவில்லை

அதே போல இன்னொரு உதாரணம் இரண்டாம் உலக யுத்தத்தில் பிரான்சை மீட்டுஎடுக்க நிதந்தர பகையாளியான இங்கிலாந்துடனும் அமெரிக்காவுடனும் ஒப்பந்தம் எழுதி அவர்களுடன் சேர்ந்து பிரான்சு தேசத்தை மீட்டவர் சாள் டி கோல் என்கிற இராணுவ அதிகாரி. யுத்தத்தில் வெற்றி பின்னர் அவர் அரசியலில் இறங்கி தேர்தலில் நின்றார் பிரான்சு தேசத்தையே மீட்டவரிற்கு படு தோல்வி மக்கள் சொன்ன காரணம் நீ சிறந்த இராணுவ அதிகாரி எங்கள் நாட்டை மீட்டாய் ஆனால் உன்னிடம் அரசை தந்தால் இராணுவநாடகிவிடும். மீண்டும் ஒரு யுத்தம் வரும். எனவேதான் நிராகரித்தோம் என்றார்கள். அதே போல வழிகாட்டுகிறோம் என்பவனின் வாழ்க்கையை வரிக்குவரி விமர்சியுங்கள் வரிக்கு வரி எழுதுபவனின் வாழ்க்கையை விமர்சித்தால் அரிவரி கூட மிஞ்சாது

கடைசியாய் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இரத்த அழுத்தத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ன முரண்பாடு :lol: :lol: :lol:

நீங்கள் சொன்ன மாதிரி ஒரு படைப்பாளியை தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பது தேவையற்றது என்பதே என் கருத்துமாகும்

  • கருத்துக்கள உறவுகள்

<p>

கோமகன் இது என்ன கதை? ஒருவருடைய எழுத்தை விமர்சிக்க அவர்களை விட சிறந்த எழுத்தளாராக இருக்க வேண்டுமானால் நாங்கள் எல்லாம் புத்தன்,சாஸ்திரி,ச‌காரா அக்கா எழுத்தை கூட‌ விமர்சிக்க தகுதி அற்றவர்களா?...கிருபன் சொன்ன மாதிரி முழுமையாக அவர்களுடைய எழுத்துக்களை படித்து விட்டு விமர்சிக்கலாம் ஆனால் நீங்கள் சொல்கிற படி பார்த்தால் சோ.சக்தி தானே எழுதிப் போட்டு தானே படிக்க வேண்டியது தான்

என்ட பெயரும் அடிபடுது ....அப்ப நானும் ஒரு சிறு எழுத்தாளன் போலகிடக்குது.....ஒரே புல்லரிப்பாயிருக்கு...கி...கி...கி....என்னையும் விமர்சனம் செய்யுங்கோ அப்பதான் நானும் சோபா மாதிரி முன்னுக்கு வரலாம்.....நேற்று பப்புக்கு போய்யிட்டு வரும்போழுது போடி மாசஜ்க்கும் போனனான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.