Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)அத்துடன் லெப்.கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – கரும்புலி மேஜர் வித்தி வீரவணக்கம் நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா

அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசீலனின் 23 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

0811_major-pasilan.jpg

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்ககாலத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பசீலன் தொடக்க பயிற்சியினை இந்தியாவில் பெற்று வன்னியில் ஒர் கெரில்லாபோராளியாக தன்னை மாற்றிக்கொண்டு வன்னியில் பல்வேறு தாக்குதல்களை எதிரிமீது தொடுத்து பலபோராளிகளை உருவாக்கி வன்னியில்சண்டைக்காறர்களில் சிறப்பானவன் எனபெயரெடுத்தான் மேஜர்பசீலனின் வன்னி தாக்குதல் அணியில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் ஒரு போராளியாக இருந்தகாலகட்டங்களில் எல்லாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அமைதிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை தொடுத்து பலதளபதிகளை வளர்த்த பெருமை மேஜர் பசீலனை சாரும் அந்தவகையில்தான்‘பசீலன் அண்ணைதான் தனக்கு சண்டைபழக்கியவர் என்று பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் அடிக்கடி தனது பேச்சுக்களில் சொல்வார்”அந்த அளவிற்கு சிறப்பான சண்டைவீரனாக அன்று பசீலன் காணப்பட்டான்.

ஒரு கெரில்லா போராளியாக செயற்பட்டுபின்னர் வன்னிமாவட்ட படைத்தளபதியாக திகழ்ந்த பசீலன் வன்னியில்படையினருக்கு எதிரான அனைத்து தாக்குதல்களிலும் சிறப்புற செயற்பட்டான். யாழ்ப்பாணத்தில் கோப்பாய்பகுதியில் இந்திய அமைதிப்படையினருக்கு திரான தாக்குதல் நடத்தி ராங்கிகளை சேதமடைய செய்தான் அதேபொல் ஒட்டிசுட்டான் முதன்மை வீதியில் கூளாமுறிப்பிற்கு அருகில் ஒர் இடத்தில் இந்திய அமைதிப்படையினரின் ராங்கிகள் மீதுதாக்கதல் நடத்தி இழப்பினை ஏற்படுத்தினான் இவ்வாறு பலதாக்கதல்களை தொடுத்தஇவன் தமிழீழ தேசியத்தலைவர்அவர்களை வன்னிக்கு அழைத்துவருவதாற்கான பொறுப்பினை ஏற்று மேஜர் பசீலன்.,பிரிகேடியர் பால்றாஜ்,லெப்ரினன் கேணல் நவம்,உள்ளிட்டவர்கள் வன்னியின் சிறந்த தாக்குதல் வீரர்களாக அன்று காணப்படுகின்றார்கள் அன்று பசீலனின் அணியின் பொறுப்பில்தான் தலைவர் அவர்கள் மணலாற்றுக்காட்டிற்கு கொண்டுசெல்லப்படுகின்றார் இதன்பின்பும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல தாக்குதல்களை தொடுத்த இவன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பசீலன் என்றால் பயம் வரும் அளவிற்கு இந்திய அமைதிப்படையினருக்கு கலக்கத்ததை ஏற்படுத்தினான் முல்லைத்தீவு பகுதியில் இந்தியப்படையினருடன் சண்டைநடத்திக்கொண்டிருந்த வேளை 08.11.1987 அன்று எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவைத்தளுவிக்கொண்டுள்ளார்.

பின்னர் பசீலனின் நினைவாக பசீலன் பயிற்சிபாசறை பசீலன்- 2000 என்று விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட பீரங்கி என்பன பசீலனின் வரலாற்றை சொல்லி நிக்கின்றன.

0811_pasilan_team001.jpg

0811_pasilan_team002.jpg

0811_pasilan001.jpg

மேஜர் பசீலன் தொடர்பாக எரிமலை பத்திரிக்கையில்,

துணிச்சலின் சிகரமாய் மேஜர் பசீலன்.

நல்லையா அமிர்தலிங்கம்

முல்லைத்தீவு

வீரமரணம் 11-8-1987

சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வாக்குகளை அள்ளி வழங்கினார்கள்.

சிங்களப் பேரினவாத அரசு மாநில சுயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம் ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள்.

ஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படுவதையும் சொந்தக்கிராமங்களிலிருந்து கட்டிய துணியுடன் அடித்து விரட்டப்பட்டு, உணவின்றி, தங்க இடமின்றி அநாதைகளாக்கப்டுவதையும் காரணமின்றி ࠯க்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தமிழ் இளைய சமுதாயம்.

சிறீலங்கா அரசு மக்களை இம்சிப்பதையும் வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் கைதிகளாக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழர்களைச் சிங்களக் கைதிகளும், சிங்கள இராணுவமும் இணைந்து, திட்டமிட்டு மிருகத்தனமான முறையில் கொலை செய்ததையும் கண்டு ஈழ விடுதலையே இறுதித் தீர்வு என்ற உறுதியான முடிவிற்கு வந்தான் முள்ளியவளையைச் சேர்ந்த ஓர் இளைஞன்.

உறுதியான கொள்கையையும், தளம்பாத தலைமையையும், தமிழீழ விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் கெரில்லாப் படையையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினாலேயே இது சாத்தியம் என்பதை உணர்ந்து அவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட அமிர்தலிங்கம் என்ற இளைஞன்தான் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பசிலன்.

தமிழர்க்கெதிரான இன அழிப்பில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் சிறீலங்கா கூலிப்படை மீது பசிலன் மேற்கொண்ட தாக்குதல்கள் எண்ணிலடங்காதவை. வன்னியின் சண்டைக்காரர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். பசீலன் அண்ணரின் சண்டைகள் வித்தியாசமானவை துணிகரமானவை. எதிரிகளின் கணிப்பீடுகளிற்கு அப்பாற்பட்டவை.

இராணுவ வழமைகளுக்கு மாறாகச் சண்டைகளைச் செய்து எதிரியின் உச்சந்தலையில் குட்டிவிடுவதில் வல்லவன். வன்னியில் பசீலன் அண்ணனின் தலைமையில் புலிவீரர்கள் எதிரியின் கண்களுக்குள் நீந்தி விளையாடினார்கள்.

மேஜர் பசீலன் அண்ணனின் அணியில் தளபதி பால்ராஜ் ஒரு போராளியாக இருந்த அக்காலம். முல்லைத்தீவில் நகர்ந்து வந்த இராணுவத்தினர் மீது ஒரு பதுங்கித்தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது.

இடம்பார்த்து வேவு பார்த்து தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டு அணி ஒழுங்கு படுத்தப்பட்டது. மேஜர் பசீலன் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்த விபரங்களை உள்வாங்கியபடி அணி உரிய இடத்திற்கு நகரத் தொடங்கியது.

எதிரி நகரும் வழிபார்த்து கிளைமோரைப் பொருத்தி விட்டு போராளிகள் நிலையெடுக்கும் வேளை பசீலன் அண்ணர் தாக்குதல் திட்டத்தை மாற்றினார்.

போராளிகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர் திருத்தம் செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தை பசீலண்ணை விளங்கப்படுத்தத் தொடங்கினார்.

எதிரி நகரும் பாதையை நோக்கி கிளைமோரைப் பொருத்தும் அதேவேளை வெடிக்கும் கிளைமோரின் குண்டுச் சிதறல்கள் எந்தத் திசை நோக்கி தாக்குமோ அதே நேர்த்திசையில் போராளிகள் நிலையெடுக்க வேண்டும். ஒரு திகிலூட்டும் திட்டத்தை மேஜர் பசீலன் விளங்கப்படுத்தினார்.

கிளைமோரின் பின்புறமாக் அல்லது அதன் இடது மற்றும் வலது புறங்களில்; போராளிகளை நிலையெடுக்கச் செய்வதே எப்போதும் கைக்கொள்ளும் இராணுவ வழமை.

ஆனால்; இந்த இராணுவ வழமையை மாற்றியமைத்து; எதிரிமீது ஒரு அச்சமூட்டும் தாக்குதலைத் தொடுக்க் பசீலன் அண்ணர் விரும்பினார்.

கிளைமோரின் தாக்குதலிருந்து தப்பும் எதிரிகள் கிளைமோர் வெடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் போராளிகள் இல்லாத் தமக்கான பாதுகாப்பான பகுதியென எண்ணி நிலையெடுப்பர் அந்தப் பகுதியை தாக்குதல் வலயமாக்குவதே மேஜர் பசீலனின் நோக்கமாக இருந்தது.

எதிரி எதை நினைப்பானோ அதற்குமாறான ஒரு தாக்குதல் திட்டம் தயாரானது. கரணம் தப்பினால் மரணம் என்கிற மரண திட்டம் அது. திட்டத்தில் ஏற்படும் சிறு சறுகல் கூட தாக்குதலுக்குள்ளாக வேண்டிய எதிரிகளுக்குப் பதிலாக தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகளே தாக்கப்படக்கூடிய ஆபத்து நிறைந்த திட்டம்.

துணிந்தவன் வெல்வான் என்பது பசீலன் அண்ணரின் கணிப்பு.அந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அசாத்திய துணிச்சலும் அதிக தன்னம்பிக்கையும்- பிசகாது செய்துமுடிக்கும் இராணுவ ஆற்றலும் வேண்டும். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? பசீலன் அண்ணர் அந்தத் தாக்குதலை நிறைவேற்றும் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தார் அது வேறுயாருமல்ல எங்கள் தளபதி பால்ராஜ்.

தாக்குதல் வலயத்திற்குள்ளிருந்த சிறுபள்ளத்தைத் தமக்குக் காப்பாகப் பயன்படுத்தி பசீலன் அண்ணர் நினைத்தது போலவே எதிரிகள் மீதான அந்தத் தாக்குதலை தளபதி பால்ராஜ் தலைமையிலான போராளிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்; அந்தக் கொலை வலயத்தில். அசாத்திய துணிச்சலுடன்.

இன்னொரு முறை , முந்திரிகைக்குளத்தில் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொண்டு பன்னிரு கூலிப்படையினரைக் கொன்றதுடன் தமிழினத்தை அழிக்க பயன்படும் 12 துப்பாக்கிகளை எடுத்ததன் மூலம் மக்களுக்கு ஓர் நம்பிக்கையை தோற்றுவித்தான் வவுனியா மாவட்ட தாக்குதற் பிரிவின் தலைவன் மேஜர் பசிலன்.

கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலின் போது காயமடைந்த பசிலன் கிளிநொச்சியைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இனப் படுகொலைகளை நிறுத்த விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கெரில்லாப் போரிலும் முக்கிய பங்கு வகித்தான்.

ஒரு கெரில்லா போராளியின் திறமைகளைத் தன்னகத்தே முழுமையாகக் கொண்டிருந்த பசிலன் ஒரு சிறந்த விகடகவியும், நடிகனுமாவான். தமிழீழத்தின் மரபு நாடகங்கள் இவன் நடிப்பினால் மெருகூட்டப்பட்டது என்பது மிகையாகாது. தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால் களைப்புற்ற சக தோழர்களைச் சிரிக்க வைத்துவிடுபவன் இவன். மக்களுக்குப் போராட்ட உத்வேகத்தைத் தூண்டிவிடும் நாடகங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையாக நடிக்கும் பசிலன் தன்னுடைய கலகலப்பான சுபாவத்தால் மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஓர் போராளியாவான்.

தமிழீழமெங்கும் சிறீலங்கா அரசானது தமிழீழ மக்கள் மீது ஓர் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தைக் கட்டவிழ்த்து இன வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கையில், அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ஆயுதப் போர் ஓர் புதிய சகாப்பத்தைப் படைத்துக் கொண்டிருந்தது. இந்நேரத்தில், தமது சொந்த நலன்களுக்காக, அந்நிய நாட்டிலிருந்து மனித விரோதிகளை அமைதிப்படை என்ற பெயரில் அழைத்து வந்து மக்களைப் பலி கொள்ளும் தேச விரோதிகளின் செயல் கண்டு குமுறினான் பசிலன்.

கோப்பாய்யில் இந்திய அழிவுப் படையை எதிர்த்து தரைப் படை டாங்கிகள் ஐந்தை நிர்மூலமாக்கி, விடுதலைப் புலி கெரில்லாக்கள் பற்றி இந்திய இராணுவத்திற்கு ஓர் பீதியைத் தோற்றுவித்த பசிலன் முல்லைத்தீவில் நேரடி மோதலின் போது இந்தியப்படையின் எறிகணைத் தாக்குதலால் 08.11.87 அன்று வீரமரணத்தைத் தழுவிக்கொண்டான்.

தமிழீழ மண்ணிலிருந்து மறைந்தாலும் ஈழ விடுதலை வரலாற்றில் ஒரு நிலையான இடத்தில்….. மேஜர் பசிலன் அண்ணன் .

pasilan2000.jpg

பசீலன் 2000 டாங்கி

08.11.1994 அன்று யாழ். வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான பபதா கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி(வேதமணி) அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாளும்,08.11.1999 அன்று மன்னார் பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் தூயவன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாளும், 08.11.2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் அறிவு அவர்களின் 4ம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்றாகும்.

0811_BT-Maj-Viththi.jpg

0811_Lt-Col-Thooyavan.jpg

0811_Lt-Col-Arivu.jpg

தமிழீழ தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

http://meenakam.com/...news/2011/11/08

வீரச்சாவை தழுவிய வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மண்ணுடனும், எங்கள் மனங்களுடனும் இரண்டறக் கலந்து விட்ட மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...!!!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்.

வீரவணக்கங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள் மாவீரர்களே...

தாயக விடுதலைக்கு பலமூட்டி தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!!

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு நினைவு வீரவணக்கங்கள்..!

தன்னினம் வாழ தம்மை ஆகுதியாக்கிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம்.

தனக்கென வாழாது தன் இனமானம் காக்க வீர வித்தாகி விழுந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

candles.gif

வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

மாவீரர்களுக்கு நினைவு வீரவணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கம்

முந்தி பாலாலி இராணுவ முகாமின் சுற்றளவு சிறிது அந்த நேரம் யாழ்டிப்போ பஸின் இயாங்களை எல்லாம் உருக்கி பசீலன் 2000 தயரித்து டிரக்டரில் வைச்சு ச்எம்ம குத்து குத்துவார்கள் அதன் விடிப்பின் பின் வரும் சிதறல்களை விட அதன் வெடிப்பின் சத்தம் பெரிது இந்த நெருக்கடிக்ககவே பலாலி முகாமை சுற்றிய காவல் அரன்களை பெரிதாக்கினார்கள்...

பெயர் பெற்ற போராளி..

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கனவு பலிக்க பாடுபடுவோம்.அதுவே உங்களுக்கான அஞ்சலி.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள் மாவீரர்களே

  • 9 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசிலன்.!

spacer.png

முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசிலன்.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்ககாலத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பசீலன் தொடக்க பயிற்சியினை இந்தியாவில் பெற்று வன்னியில் ஒர் கெரில்லா போராளியாக தன்னை மாற்றிக்கொண்டு வன்னியில் பல்வேறு தாக்குதல்களை எதிரிமீது தொடுத்து பலபோராளிகளை உருவாக்கி வன்னியில் சண்டைக்காறர்களில் சிறப்பானவன் என பெயரெடுத்தான் மேஜர் பசீலனின் வன்னி தாக்குதல் அணியில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் ஒரு போராளியாக இருந்த கால கட்டங்களில் எல்லாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அமைதிப் படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை தொடுத்து பல தளபதிகளை வளர்த்த பெருமை மேஜர் பசீலனை சாரும் அந்த வகையில் தான் ‘பசீலன் அண்ணை தான் தனக்கு சண்டை பழக்கியவர் என்று பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் அடிக்கடி தனது பேச்சுக்களில் சொல்வார்” அந்த அளவிற்கு சிறப்பான சண்டை வீரனாக அன்று பசீலன் காணப்பட்டான்.

asQvREby1Xoyqp7Fnnk0.jpg

ஒரு கெரில்லா போராளியாக செயற்பட்டு பின்னர் வன்னி மாவட்ட படைத் தளபதியாக திகழ்ந்த பசீலன் வன்னியில் படையினருக்கு எதிரான அனைத்து தாக்குதல்களிலும் சிறப்புற செயற்பட்டான். யாழ்ப்பாணத்தில் கோப்பாய்பகுதியில் இந்தியஅமைதிப் படையினருக்கு திரான தாக்குதல் நடத்தி ராங்கிகளை சேதமடைய செய்தான் அதேபோல் ஒட்டிசுட்டான் முதன்மை வீதியில் கூளாமுறிப்பிற்கு அருகில் ஒர் இடத்தில் இந்திய அமைதிப் படையினரின் ராங்கிகள் மீது தாக்கதல் நடத்தி இழப்பினை ஏற்படுத்தினான் இவ்வாறு பல தாக்கதல்களை தொடுத்த இவன் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களை வன்னிக்கு அழைத்து வருவதாற்கான பொறுப்பினை ஏற்று மேஜர் பசீலன், பிரிகேடியர் பால்ராஜ், லெப்ரினன் கேணல் நவம் உள்ளிட்டவர்கள் வன்னியின் சிறந்த தாக்குதல் வீரர்களாக அன்று காணப்படுகின்றார்கள் அன்று பசீலனின் அணியின் பொறுப்பில் தான் தலைவர் அவர்கள் மணலாற்றுக் காட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றார் இதன் பின்பும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல தாக்குதல்களை தொடுத்த இவன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பசீலன் என்றால் பயம் வரும் அளவிற்கு இந்திய அமைதிப்படையினருக்கு கலக்கத்ததை ஏற்படுத்தினான் முல்லைத்தீவு பகுதியில் இந்தியப் படையினருடன் சண்டை நடத்திக் கொண்டிருந்த வேளை 08.11.1987 அன்று எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார்.

பின்னர் பசீலனின் நினைவாக பசீலன் பயிற்சிபாசறை, பசீலன் – 2000 என்று விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட பீரங்கி என்பன பசீலனின் வரலாற்றை சொல்லி நிக்கின்றன.

சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வாக்குகளை அள்ளி வழங்கினார்கள்.

சிங்களப் பேரினவாத அரசு மாநில சுயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம் ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள்.

ஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படுவதையும் சொந்தக் கிராமங்களிலிருந்து கட்டிய துணியுடன் அடித்து விரட்டப்பட்டு, உணவின்றி, தங்க இடமின்றி அநாதைகளாக்கப்டுவதையும் காரணமின்றி எமக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தமிழ் இளைய சமுதாயம்.

சிறீலங்கா அரசு மக்களை இம்சிப்பதையும் வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் கைதிகளாக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழர்களைச் சிங்களக் கைதிகளும், சிங்கள இராணுவமும் இணைந்து, திட்டமிட்டு மிருகத்தனமான முறையில் கொலை செய்ததையும் கண்டு ஈழ விடுதலையே இறுதித் தீர்வு என்ற உறுதியான முடிவிற்கு வந்தான் முள்ளியவளையைச் சேர்ந்த ஓர் இளைஞன்.

உறுதியான கொள்கையையும், தளம்பாத தலைமையையும், தமிழீழ விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் கெரில்லாப் படையையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினாலேயே இது சாத்தியம் என்பதை உணர்ந்து அவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட அமிர்தலிங்கம் என்ற இளைஞன்தான் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பசிலன்.

தமிழர்க் கெதிரான இன அழிப்பில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் சிறீலங்கா கூலிப்படை மீது பசிலன் மேற்கொண்ட தாக்குதல்கள் எண்ணிலடங்காதவை. வன்னியின் சண்டைக்காரர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். பசீலன் அண்ணரின் சண்டைகள் வித்தியாசமானவை துணிகரமானவை. எதிரிகளின் கணிப்பீடுகளிற்கு அப்பாற்பட்டவை.

இராணுவ வழமைகளுக்கு மாறாகச் சண்டைகளைச் செய்து எதிரியின் உச்சந்தலையில் குட்டிவிடுவதில் வல்லவன். வன்னியில் பசீலன் அண்ணனின் தலைமையில் புலிவீரர்கள் எதிரியின் கண்களுக்குள் நீந்தி விளையாடினார்கள்.

மேஜர் பசீலன் அண்ணனின் அணியில் தளபதி பால்ராஜ் ஒரு போராளியாக இருந்த அக்காலம். முல்லைத்தீவில் நகர்ந்து வந்த இராணுவத்தினர் மீது ஒரு பதுங்கித் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது.

இடம்பார்த்து வேவு பார்த்து தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டு அணி ஒழுங்கு படுத்தப்பட்டது. மேஜர் பசீலன் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்த விபரங்களை உள்வாங்கியபடி அணி உரிய இடத்திற்கு நகரத் தொடங்கியது.

எதிரி நகரும் வழிபார்த்து கிளைமோரைப் பொருத்தி விட்டு போராளிகள் நிலையெடுக்கும் வேளை பசீலன் அண்ணர் தாக்குதல் திட்டத்தை மாற்றினார்.

போராளிகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர் திருத்தம் செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தை பசீலண்ணை விளங்கப்படுத்தத் தொடங்கினார்.

எதிரி நகரும் பாதையை நோக்கி கிளைமோரைப் பொருத்தும் அதேவேளை வெடிக்கும் கிளைமோரின் குண்டுச் சிதறல்கள் எந்தத் திசை நோக்கி தாக்குமோ அதே நேர்த்திசையில் போராளிகள் நிலையெடுக்க வேண்டும். ஒரு திகிலூட்டும் திட்டத்தை மேஜர் பசீலன் விளங்கப்படுத்தினார்.

கிளைமோரின் பின்புறமாக் அல்லது அதன் இடது மற்றும் வலது புறங்களில்; போராளிகளை நிலையெடுக்கச் செய்வதே எப்போதும் கைக்கொள்ளும் இராணுவ வழமை. ஆனால்; இந்த இராணுவ வழமையை மாற்றியமைத்து; எதிரிமீது ஒரு அச்சமூட்டும் தாக்குதலைத் தொடுக்க் பசீலன் அண்ணர் விரும்பினார்.

கிளைமோரின் தாக்குதலிருந்து தப்பும் எதிரிகள் கிளைமோர் வெடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் போராளிகள் இல்லாத் தமக்கான பாதுகாப்பான பகுதியென எண்ணி நிலையெடுப்பர் அந்தப் பகுதியை தாக்குதல் வலயமாக்குவதே மேஜர் பசீலனின் நோக்கமாக இருந்தது.

எதிரி எதை நினைப்பானோ அதற்குமாறான ஒரு தாக்குதல் திட்டம் தயாரானது. கரணம் தப்பினால் மரணம் என்கிற மரண திட்டம் அது. திட்டத்தில் ஏற்படும் சிறு சறுகல் கூட தாக்குதலுக்குள்ளாக வேண்டிய எதிரிகளுக்குப் பதிலாக தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகளே தாக்கப்படக்கூடிய ஆபத்து நிறைந்த திட்டம்.

துணிந்தவன் வெல்வான் என்பது பசீலன் அண்ணரின் கணிப்பு.அந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அசாத்திய துணிச்சலும் அதிக தன்னம்பிக்கையும்- பிசகாது செய்துமுடிக்கும் இராணுவ ஆற்றலும் வேண்டும். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? பசீலன் அண்ணர் அந்தத் தாக்குதலை நிறைவேற்றும் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தார் அது வேறுயாருமல்ல எங்கள் தளபதி பால்ராஜ்.

தாக்குதல் வலயத்திற்குள்ளிருந்த சிறுபள்ளத்தைத் தமக்குக் காப்பாகப் பயன்படுத்தி பசீலன் அண்ணர் நினைத்தது போலவே எதிரிகள் மீதான அந்தத் தாக்குதலை தளபதி பால்ராஜ் தலைமையிலான போராளிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்; அந்தக் கொலை வலயத்தில். அசாத்திய துணிச்சலுடன்.

இன்னொரு முறை , முந்திரிகைக்குளத்தில் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொண்டு பன்னிரு கூலிப்படையினரைக் கொன்றதுடன் தமிழினத்தை அழிக்க பயன்படும் 12 துப்பாக்கிகளை எடுத்ததன் மூலம் மக்களுக்கு ஓர் நம்பிக்கையை தோற்றுவித்தான் வவுனியா மாவட்ட தாக்குதற் பிரிவின் தலைவன் மேஜர் பசிலன்.

கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலின் போது காயமடைந்த பசிலன் கிளிநொச்சியைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இனப் படுகொலைகளை நிறுத்த விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கெரில்லாப் போரிலும் முக்கிய பங்கு வகித்தான்.

ஒரு கெரில்லா போராளியின் திறமைகளைத் தன்னகத்தே முழுமையாகக் கொண்டிருந்த பசிலன் ஒரு சிறந்த விகடகவியும், நடிகனுமாவான். தமிழீழத்தின் மரபு நாடகங்கள் இவன் நடிப்பினால் மெருகூட்டப்பட்டது என்பது மிகையாகாது. தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால் களைப்புற்ற சக தோழர்களைச் சிரிக்க வைத்துவிடுபவன் இவன். மக்களுக்குப் போராட்ட உத்வேகத்தைத் தூண்டிவிடும் நாடகங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையாக நடிக்கும் பசிலன் தன்னுடைய கலகலப்பான சுபாவத்தால் மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஓர் போராளியாவான்.

தமிழீழமெங்கும் சிறீலங்கா அரசானது தமிழீழ மக்கள் மீது ஓர் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தைக் கட்டவிழ்த்து இன வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கையில், அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ஆயுதப் போர் ஓர் புதிய சகாப்பத்தைப் படைத்துக் கொண்டிருந்தது. இந்நேரத்தில், தமது சொந்த நலன்களுக்காக, அந்நிய நாட்டிலிருந்து மனித விரோதிகளை அமைதிப்படை என்ற பெயரில் அழைத்து வந்து மக்களைப் பலி கொள்ளும் தேச விரோதிகளின் செயல் கண்டு குமுறினான் பசிலன்.

கோப்பாய்யில் இந்திய அழிவுப் படையை எதிர்த்து தரைப் படை டாங்கிகள் ஐந்தை நிர்மூலமாக்கி, விடுதலைப் புலி கெரில்லாக்கள் பற்றி இந்திய இராணுவத்திற்கு ஓர் பீதியைத் தோற்றுவித்த பசிலன் முல்லைத்தீவில் நேரடி மோதலின் போது இந்தியப்படையின் எறிகணைத் தாக்குதலால் 08.11.1987 அன்று வீரமரணத்தைத் தழுவிக்கொண்டான்.

தமிழீழ மண்ணிலிருந்து மறைந்தாலும் ஈழ விடுதலை வரலாற்றில் ஒரு நிலையான இடத்தில்….. மேஜர் பசிலன் அண்ணன் .

-போராட்டத்தில் நிழலில்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 
https://www.thaarakam.com/news/0e1439e4-1737-48ac-bafd-c0894bcbdec0

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.