Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே அறிக்கை- உருத்ரகுமாரன் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கருத்துத்தான் என்னுடையதும். யாழில் விவாதித்து இரத்த அழுத்தம் ஏத்துறதை விட்டிட்டு புத்தகமாய் எழுதினால் அது பலரையும் சென்றடையும்.அடுத்த காலத்தையும் தாண்டி நிற்கும்

  • Replies 85
  • Views 6.5k
  • Created
  • Last Reply

பொயட்டிற்கு ,

யாழில் மட்டுமல்ல வேறு இணையங்களிலும் நீங்கள் எழுதுவதும் பின்னர் சிலரது பின்னோடங்களால் உணர்சிவசப்பட்டு காணாமல் போவதும் தொடர்கதையாகிவிட்டது .

நீங்கள் உங்களது அனுபவங்களை புத்தகமாக வெளியிடுவதுதான் நல்லது என நினைக்கின்றேன் ,இணையங்களில் எழுதினாலும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு மட்டும் பதில் அழிப்பதன் மூலம் தான் அதை தொடரமுடியுமென நம்புகின்றேன் .

எனக்கு கூட உங்களது அரசியல் நிலைப்பாட்டில் விமர்சனம் உண்டு,அதற்காக நான் சரி என்று நினைப்பதைத்தான் மற்றவர்களும் செய்யவேண்டும் என நினைப்பது சரியானதல்ல.

பொட்டம்மானை பிடித்து விட்டது எப்ப? ,கண்ணனை கடத்தியது எப்ப ? இவற்றிற்கெல்லாம் பதில் எழுதாமல் விடுவதே ஆரோக்கியமான உங்கள் அரசியலை தொடர உதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதைத்தானே நாங்களும் சொல்லுறம்

நீங்கள் செய்த வேலைகளை,ஜெயசுக்குறுவுக்கு ஐடியோ போட்டடுக்குடுத்ததை

சமாதானப்பேச்சுகளின் போது அறிக்கைகளும் ஐடியாக்களும் குடுத்ததை

சூசையுடன் நான்கு மணித்தியாலங்கள் காத்து வாங்கி கொண்டு கதைத்ததை

எல்லாம் நாவலாக எழுதுங்கோ. :icon_idea:

அதுதான் நல்லது.

அதனை அப்போதும் விமர்சிக்க எமக்கு உரிமை இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராடும் எந்த அமைப்பின்மீதும் சும்மா எழுதிக்கொண்டே இருப்பவர்களாலும் சோத்துப்பார்சல் வாங்கி சாப்பிட்டு ஒருநாளில் புரட்சிசெய்ய வெளிக்கிட்டவர்களாலும்

முகங்களை மாற்றி விமர்சிக்கும் பச்சோந்தி தனம் இருக்கிறது.

விடுதலைப்புலிகள் ஒடுக்கப்படும் மக்களுடன் நிற்கவில்லை என்று சிவப்பு மை காரங்களுடன் நிற்கும்போது கூவுவார்கள்.

அதையே அந்தர்பல்டி அடித்து மாற்றி 'ஐயோ மேற்குலகுடனும் இந்தியாவுடனும் இணைந்து போகவில்லை என்பார்கள் பிறகு.

இதுக்கெல்லாம் பேர் விமர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்

தேன்மொழி உங்களுக்கு பதில்தருவது வீண். நீங்கள் கோணல் மனசுடன் திட்டிறீங்க.. பதில் எழுத விருப்பமில்லை. உங்களை எனக்கு யார் என்று தெரியாது. உங்கலைப்போல முகத்தை மறைத்து எழுதிகிற வர்கள் தனிப்பட்ட விமர்சனம் செய்வது கோழைத்தனமாகும். நேர்மை இருந்தால் நீங்களும் என்னைப்போல முகத்தை மறைக்காமல் யார் என்று சொல்லுங்கள்.ஆனாலும் பிரச்சினை வேண்டியதில்லை. ஒருவேளை என் இனத்தின் விடுதலைக்காக நாளைக்கு உங்களோடு சேர்ந்து வேலை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்க்கான வெளியை வீண் விவாதத்தால் கெடுக்கவும் விரும்பவில்லை.

அர்ஜுனும் சாஸ்திரியும் நிழலியும் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த பதிவுகலை வாசிக்கும் நண்பர்கள் போராளிகள் என் தொடர்பான உங்கள் நினைவுகளை எனக்கு நினைவு படுத்தினால் என் புத்தக முயற்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இத்துடன் என் விவாதத்தை முடித்துக் கொள்கிறேன்.

அன்பு நிழலி, ஆரம்பத்தில் இருந்தே நான் யாழில் எதிய கட்டுரைகள் பின்னூட்டங்களையும் வெட்டியும் ஒட்டியதும்தொகுத்துத் தருவீங்களா:

தொகுத்துத்

visjayapalan@gmail.com

Edited by poet

  • தொடங்கியவர்

கடந்த யுத்த கால சரித்திரத்தை எழுதுவது முக்கியம். அது அவரவருக்கு தெரிந்த உண்மைகளை, அறிந்த தகவல்களை சார்ந்திருக்கும். பலரின் புத்தகங்களையும் / தகவல்களையும் / கருத்தையும் உள்வாங்கும் பொழுது முழு உண்மையும் தெரிய வர வாய்ப்புள்ளது.

அதேவேளை வருங்காலத்தை, எமது தாயக மக்களின் அரசியல் தலைவிதியை அவர்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் மாற்றி எழுத வைப்பதிலும் கூடிய முயற்சியும் அக்கறையும் காட்டவேண்டியவர்களாக நாம் அனைவரும் உள்ளோம்.

அதுவே இன்றைய முக்கிய காலத்தின் தேவை.

ஜெயபாலன் புத்தகம் எழுத முதல் சில விடயங்களைத் தெளிவு படுத்துவீர்களா?

1)//வன்னியில் எனக்காக எதுவும் செய்ய தயாராக இருந்தனர். நான் ஒரு செப்பு சல்லிக்குக்கூட கை நீட்டியதில்லை. கைமாறாக நான் தொடர்ந்து // நீங்கள் வன்னியில் உள்ளவர்களுக்கு என்ன செய்தீர்கள் , உங்களுக்கு அவர்கள் காசு தர அவர்கள் என்ன சொந்த வியாபாரமா நடாத்தினார்கள்?

2) வன்னியில் நீங்கள் எந்த நோர்வேயின் அரசு சாரா அமைப்பிற்க்கு வேலை செய்தீர்கள்? அதற்க்கு உங்களுக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது.இதில் உங்களின் வேலை என்ன?

3) ஒரு பத்ரிகைப் பேட்டியில் நீங்களே , கூறி இருந்தீர்கள் நீங்கள் நோர்வேயின் சமாதானக் குழுவில் இருப்பதாக.இது என்ன குழு, இதில் உங்கள் பங்கு அல்லது வேலை என்ன?

4) புலிகளின் காவற்துறை உங்களை ஏன் விசாரிக்க வந்தது? உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன பிணக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் புலிகள் சர்வதேச பேச்சு வார்த்தைகளின் பின்னால் நீங்களும் பலருடன் தொடர்பில் இருந்தவர். பேச்சு வார்த்தைகளிலும் கலந்து nhக்ணடிருந்திருந்தீர்கள். அதே பேலவே நானும் அதன் பின்னணியில் இருந்திருக்கிறேன். உங்கள் முப்பது பக்க அறிக்:கையை போலவே நானும் எனது நண்பர்பர்களும் 45 பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தோம். எங்கள் அறிக்கை தமிழ்செல்வனின் குப்பைக்கூடைக்குள் போய்விட்டது அதை அவர் எறிந்த சில நாட்களில் அவரும் பலியாகிப்போனது சோகமானதுதான்.. இறுதி யுத்தத்தில் அவற்றை பயன்படுத்தியிருந்தால் இன்றுவரை போராட்டம் தாக்கு பிடித்திருக்கும் என்கிற ஆதங்கம் எனக்குண்டு உங்கள் புத்தகத்தில் நீங்கள் எழுதிய மற்றும் நாங்கள் எழுதிய அறிக்கைகளையும் இணையுங்கள். வருங்காலத்தில் எங்கள் புவியியல் அமைப்பை தெரிந்துகொண்டு அடுத்த சந்ததியாவது உருப்படியாய் எதையாவது செய்யட்டும்.

சாஸ்திரி அண்ணா கேட்கிறேன் என கோபிக்காதீங்கோ உங்கட அறிக்கையை த.செ தூக்கி குப்பைக்குள்ள போட்டுட்டார் என்டே அவரைக் காட்டிக் கொடுத்து போட்டுத் தள்ளீனிங்கள் ^_^

சாஸ்திரி அண்ணா கேட்கிறேன் என கோபிக்காதீங்கோ உங்கட அறிக்கையை த.செ தூக்கி குப்பைக்குள்ள போட்டுட்டார் என்டே அவரைக் காட்டிக் கொடுத்து போட்டுத் தள்ளீனிங்கள் ^_^

தமிழீழ வருங்கால கனவு அரசியல் ஆய்வாளர்களிடம் கேட்கப்பட்ட சரியான கேள்வி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய்யட், எனக்கும் ஆவலாக இருக்கிறது.

இப்படி ஒரு புத்தகம்தன்னும் வெளிவரவேணும் என்று.

இங்கு யாழில் எழுதின இதே விடயங்களை புத்தகத்திலும் தெரிவிப்பீர்களா??

கிழக்கிழல பிடித்தால் வடக்கு புலிகள் வந்து மீட்கிறதும்.

புலநாய்வு பிடித்தால் கலைபண்பாடு வந்து காப்பாத்துறதும்

தமிழீழகாவல்துறை அரஸ்ற் பண்ண வந்தால் கட்டளைப்பீடம் வந்து தடுக்கிறதும்.

உங்கள் ஒருவரின் உயிரை காப்பாத்த அவர்கள் தங்களுக்குள் எவ்வளவு அடிபட்டு இருக்கிறாங்கள்.

பொய்யட் நான் எங்கேயாவது ஒரு இட்த்தில்தன்னும் உங்களை தனிப்பட தாக்கி எழுதி இருக்கிறேனா?

அப்படி நான் எழுத விரும்பினால் அதற்கு யாழ் கருத்துகளம் தேவை இல்லை.

இதனை பார்ப்பவர்களைவிட அதிகமானவர்கள் பார்க்கும் ஊடகங்களும் அஞ்சல்களும் போதும்.

உங்களை இங்கு அதிகமானவர்களுக்கு தெரியாது.அப்படியான உங்களை ஏன் விளம்பர படுத்துவான்.

மேலும் எனக்கு தனிப்படயாரையும் தாக்கி எழுதுவதில் ஆர்வம் இல்லை.

ச்ச்சும்மா புளுகி எழுதுகிறவர்களையும்,திரும்பவந்து மறுவிளக்கம் தரவே மாட்டார்கள் என்று உறுதியாக

நம்பப்படும் செத்துபோனவர்கள் சம்பந்தமாகவும் புனைவுகளை எழுதும்போது உங்கள் கருத்துகளை மறுக்கவேண்டிய தேவை வருகிறது.

பொய்யட்,நாளைக்கே நீங்கள் செத்துப்போன பிறகு கூட யாராவது இந்த யாழில் வந்து பொய்யட் ஒரு 'டுபாகூர்' அது இது என்று எழுதினால் அப்போதும் நான் அதை எழுதுகிறவர்களுக்கு எதிராக உங்களுக்காக எழுதுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுல சாட்டு தூங்குகங்கப்பா... :icon_mrgreen: :icon_mrgreen:

302131_261720790547467_100001286453235_796374_2141435756_n.jpg

317856_261720260547520_100001286453235_796372_1695335697_n.jpg

நண்பர் ஒருவரின் முக நூற் குறிப்பில் இருந்து,

//2009க்கு பிறகு தமிழர்கள் தனித்தன...ி அமைப்புகளாக பிரிய நேரிட்டது. வட அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரிட்டனில் GTF என தமிழர்களின் பிளவு வெளிப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு நாட்டிலும் தங்களால் முடிந்த பணிகளை இந்த அமைப்புகள் செய்து வருவதை இந்தக் கூட்டத்தில் விளக்கினர். தனித்தனி அமைப்புகளாக இருந்தாலும் பொதுவான வேலைத்திட்டமான சிறீலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றங்கள், தமிழ் மக்களின் உரிமை போன்றவற்றை நோக்கியே இந்த அமைப்புகள் தங்களுடைய நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.

இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரிப்பதும், அவர்கள் முன்வைக்கும் பிரச்சனைகளை புலம்பெயர்ந்த நாடுகளில் கொண்டு செல்வதுமே தங்களுடைய முக்கிய நோக்கம் என இந்த அமைப்புகளின் தலைவர்கள் தெளிவுபடுத்தினர். புலம் பெயர்ந்த தமிழர்கள், ஈழத்து மக்களை முன்னெடுப்பதாக ”இடதுசாரிகள்” கட்டமைத்த பிம்பத்தை இவர்கள் நிராகரித்தனர். ஈழத்து மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் அவர்களின் உரிமைகளை உலகின் பல்வேறு நாடுகளில் எதிரொலிக்க புலம்பெயர்ந்த அமைப்புகளும் செயல்படும் என்பதை அனைவருமே உறுதியாக கூறினர்.

ஏன் ஒரே அமைப்பாக இருக்க கூடாது என்ற கேள்விகள் எழுப்பபட்டாலும், அது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று. ஒவ்வொரு நாட்டிலும் தங்களுடைய நாட்டின் சூழலுக்கு ஏற்றவாறு பணிகளை முன்னெடுக்க தனி அமைப்புகளே தேவைப்படுகின்றன. அமெரிக்காவில் கூட சில அமைப்புகள் இருந்தாலும் ஒவ்வொரு அமைப்பும் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தனித்தனி அமைப்புகளாக இருந்தாலும் பொது நோக்கமான “தமிழர்களின் உரிமை” என்பதில் அனைத்து அமைப்புகளுமே ஒன்று படுகின்றனர்.

2009ல் ஏற்பட்ட பாரிய இழப்பிற்கு பிறகான இந்த இரண்டு வருடங்களில் தமிழர்களுக்குள் பல பிளவுகள் ஏற்பட்டன. இவை அனைத்தும் இன்று முடிவுக்கு வந்துள்ளன. பிற அமைப்புகளை எதிரிகளாக பார்க்கும் மனப்பான்மை மாறி வருகிறது. ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்குள் இணைக்கமான செயல்பாடுகளை வளர்த்து வருகின்றன. பரஸ்பர புரிந்துணர்வும் அதிகரித்து வருகிறது. நியூஜெர்சி இலங்கை தமிழ்ச் சங்க நிகழ்வு இதனையே வெளிப்படுத்துகிறது. தமிழர்களின் அரசியலில் ஒரு மாற்றமும், முதிர்ச்சியும் தெரிகிறது என்பதே உண்மை. இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. ஈழத்தில்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு வலு சேர்க்கும் வகையிலேயே புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகள் நடத்தியது இராணுவ போர் என்றால் மாவை சேனாதிராஜா அவர்கள் கூறியது போல “தற்பொழுது நடைபெறுவது ஒரு Diplomatic war". இதில் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டும். பல்வேறு முனைகளில் இருந்தும் செயல்பட வேண்டும். அதனையே பல தமிழ் அமைப்புகள் செய்து வருகின்றன

இந்த நிகழ்வில் கனடா காங்கிரசை சேர்ந்த நண்பர் குறிப்பிட்டது போல தமிழர்களின் எதிரிகள் தான் தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை, பல்வேறு அமைப்புகளாக பிரிந்து கிடக்கிறார்கள் எனக்கூறி

கவலைப்படுகிறார்கள் (கவலைப்படுவது போல நடிக்கிறார்கள்). பல்வேறு அமைப்புகளில் இருப்பவர்கள் அதில் கவனம் செலுத்துவது இல்லை. தங்களுக்கான வேலைத்திட்டங்களை வகுத்துக் கொண்டு

அதில் செயல்பட்டு வருகிறார்கள்.//

உண்மை எது வென்பது செயற்படுபவர்களுக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி அண்ணா கேட்கிறேன் என கோபிக்காதீங்கோ உங்கட அறிக்கையை த.செ தூக்கி குப்பைக்குள்ள போட்டுட்டார் என்டே அவரைக் காட்டிக் கொடுத்து போட்டுத் தள்ளீனிங்கள் ^_^

ரதி தமிழ்செல்வனை நான் காட்டிக்கொடுக்கவேண்டியதில்லை காரணம் பேச்சு வார்ததை காலத்தில் அவரிற்கும் வேறு முக்கியமானவர்களிற்கும் நோர்வேதான் கைத்தொலைபேசிகளை அன்பளிப்பு செய்திருந்தது. அனால் நான் காட்டிக்கொடுத்தாவது அழித்துவிடவேண்டும் என நினைத்த ஒருத்தர் கஸ்ரோவை மட்டும்தான் அதை பலருடன் உரையாடும்பொழுதும் பகிரங்கமாகவே சொல்லியிருக்கிறேன். காரணம் அவனும் அவனது செயற்பாடுகளும் இயக்கத்தை அழிவிற்கு கொண்டுபோனதால்தான். கருணாவின் பிரிவுகூட அடிப்படை அவன்தான் காரணம்.

ஜெயபாலன் புலிகள் சர்வதேச பேச்சு வார்த்தைகளின் பின்னால் நீங்களும் பலருடன் தொடர்பில் இருந்தவர். பேச்சு வார்த்தைகளிலும் கலந்து nhக்ணடிருந்திருந்தீர்கள். அதே பேலவே நானும் அதன் பின்னணியில் இருந்திருக்கிறேன். உங்கள் முப்பது பக்க அறிக்:கையை போலவே நானும் எனது நண்பர்பர்களும் 45 பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தோம். எங்கள் அறிக்கை தமிழ்செல்வனின் குப்பைக்கூடைக்குள் போய்விட்டது அதை அவர் எறிந்த சில நாட்களில் அவரும் பலியாகிப்போனது சோகமானதுதான்.. இறுதி யுத்தத்தில் அவற்றை பயன்படுத்தியிருந்தால் இன்றுவரை போராட்டம் தாக்கு பிடித்திருக்கும் என்கிற ஆதங்கம் எனக்குண்டு உங்கள் புத்தகத்தில் நீங்கள் எழுதிய மற்றும் நாங்கள் எழுதிய அறிக்கைகளையும் இணையுங்கள். வருங்காலத்தில் எங்கள் புவியியல் அமைப்பை தெரிந்துகொண்டு அடுத்த சந்ததியாவது உருப்படியாய் எதையாவது செய்யட்டும்.

பேச்சுவார்த்தைக்கு பின்னணியில் தான் இருந்ததா அடுத்த வீட்டு சுப்பு அண்ணையும் சொன்னவர். அவர் 60 பக்க அறிக்கை தயாரித்துக் கொடுத்தவராம். அதை பயன்படுத்தியிருந்தால் இறுதி யுத்தத்தில் வென்று இப்ப தமிழ் ஈழம் அமைந்திருக்குமாம். அவரும் இப்ப ஒரு புத்தகம் எழுதி வெளிவிட எண்ணியுள்ளாராம். மொத்தத்திலே எதிர்கால சந்ததியினருக்கு நிறைய கதைப் புத்தகங்கள் கிடைக்கும் போல இருக்குது.

:) :) :D

ஓ மீண்டும் நீங்களா <_< நீண்டகாலத்தின் பின்னர் :lol: :lol: :lol:

ஓ மீண்டும் நீங்களா <_< நீண்டகாலத்தின் பின்னர் :lol: :lol: :lol:

ஓம் சாத்திரியண்ணை! எப்பிடி சுகம்? <_<

காட்டுமிராண்டி ஹிந்தியர்களின் கைக்கூலிகளான 'தமிழ்' இலக்கியவாதிகளின் நடமாட்டம் அதிகமானதாலே இந்தப்பக்கம் வந்தனான். :mellow:

அதுசரி கொலை வெறியோடை இருந்த உங்களால் ஏன் காஸ்ரோவை கொல்ல முடியாமல் போனது? உங்கள் பார்வையில் உரிய நேரத்தில் நீங்கள் அதைச் செய்திருந்தால் கருணாவின் பிரிவை தடுத்து நிறுத்தியிருக்குமெல்லோ? :Dஇப்ப எல்லாத்துக்கும் உங்கள் அசமந்தம் தான் காரணம் என்று சொல்லப் போகிறார்கள்! கவனம்!!! :lol: :lol: :lol:

அதேவேளை வருங்காலத்தை, எமது தாயக மக்களின் அரசியல் தலைவிதியை அவர்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் மாற்றி எழுத வைப்பதிலும் கூடிய முயற்சியும் அக்கறையும் காட்டவேண்டியவர்களாக நாம் அனைவரும் உள்ளோம்.

அதுவே இன்றைய முக்கிய காலத்தின் தேவை

காலத்தின் தேவையை சரியாக எழுத்தியதற்காக ஒரு பச்சை குத்தியுள்ளேன்.

எல்லோரும் எழுத்துவது கட்டாயமாக சமுதாயதாயற்திற்கு நன்மை பயக்கும். தோற்றபடும் இடைவெளிகளை நிரப்பி உண்மையை தெளிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் நாரதரின் கருத்தோடும் ஒத்துப்போகத்தான் வேண்டியிருக்கிறது. இறந்து போன தலைவர்களான தமிழ் செல்வன், நடேசன், புலித்தேவனாகியோருக்கும் ஒரு குரல் தேவை. இவர்களின் குரல்கள் அடக்கப்பட்டு விட்டதால் வெளிவரும் மூலகங்களில் கூட்டு மொத்த சமநிலையை எதிர்பார்க்க முடியாது. அதனால்த்தான் மேலைத்தேயங்களில் "சரித்திரம் என்பது வென்றோரின் கதை" என்று கூறுவர். எனவே தான் தோற்றோர் இந்த சரித்திரங்களை இப்போதைக்கு மறந்து "எமது அரசியல் தலைவிதியை எமக்கு நன்மை பயக்கும் விதத்தில் மாற்றி எழுத வைப்பதிலும் கூடிய முயற்சியும் அக்கறையும் காட்டவேண்டியவர்களாக நாம் அனைவரும் உள்ளோம்."

சிறு சிறு ஆலோசனைகளை(அவை சரியாக இருந்திருந்தால்) தமிழ் செல்வனோ, அல்லது தலைவரோ அல்லது பாலா அண்ணையோ செவிமடுக்காததால்த்தான் போர் தோற்றது என்ற வாதத்தில் ஒரு பொருளுமில்லை.

ஓட்டை குடிசையைச்சுற்றி சூறாவளி பலமாக ஊதுகிறது. குடிசைக்கு வெளியில் நின்ற சிறுமி வீட்டுக்குள் ஓடி வருகிறாள். குடிசையின் ஒரே ஒரு ஒளிர்வான விளக்கு அணைந்துது போகிறது. அலுவலாய் நின்ற தாய், ககையில் பிடிபட்ட சிறுமியை வைதுகொண்டு நையப் புடைக்கிறாள் விளக்கை அணைத்து விட்டதாக கூறி. உண்மைகளை காட்டி வைத்த விளக்கு அணைந்து விட்டதால் தன் ஒரே ஒரு பாதுகாப்பான குடிசையும் தன் தலைக்கு மேலே இப்பொழுது இல்லை என்பது அவளுக்கு தெரியாது.

வீசிய சூறாவளி நமக்கு வழிகாட்டிய தலைமைகளை அணைத்து விட்டது. நமக்காக போராடிய நம் அருமைகளுக்கு இப்போது போக இடமில்லை. நாம் அணைக்க வேண்டிய நேரம் இது. கை நீட்டி அடிக்க கூடிய நேரமல்ல.

மே 19ல் தோற்றிருக்காவிட்டால், மே 31 ல் அல்லது, சனவரி 25லிலொ தமிழனுக்கு தோல்வியவை கொண்டுவர பலர் கங்கணம் கட்டி கொண்டி நின்றார்கள்.

'வடக்கு கிழக்கு இராணுவ கட்டமைப்பு......

அரசியல் வடிவாக்கம்..........

தேசிய நிலவாக்கம்..........."

இப்படி ஆயிரம் சிறிய ஆய்வுகளில் நம்மவர்கள் ஈடுபட்டிருந்த போது பாரிய சூறாவளி உருவாகி வெளியில் வீசியதைக்கண்டு கொள்ளவில்லை.

இந்தியாவின் உயிரோடுவைத்து தமிழனை குடலையுருவி கொலைசெய்ய துடித்த பழிவாங்கல் கைகள் மில்லியன் கணக்கான போர்வீரர்களை இலங்கையில் இறக்கி இராசபக்சாவை வெல்ல வைக்கத்தான் ஆயத்தமாக இருந்தது. இந்தியாவுக்காக இலங்கையில் உழைத்தோர், இலங்கை அவர்களை பாதுகாப்பு வாகனம் இல்லாமல் தெரு டாக்சியில் போகவைத்தும், தமது உயிரையும் பணயம் வைத்துதான் ராசபக்சாவை வெல்ல வைக்க உழைத்தார்கள்.

ரிச்சாட் அமிர்தாச் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவின் சீனா பயக் கொள்கைகளை எதிர்த்தார். ஆனாலும் புஸ்சுக்கும் ஆதரவாளர்களுக்கும் போக பல வேறு பாதைகள் இருக்கவில்லை. முதளைக்குளத்தில் தண்ணி குடிக்க போன யானை மாதிரி வெகுவாக மத்திய கீழக்கில் மாட்டியிருந்தது அமெரிக்கா. பின்னாலே தாக்க வந்த சிங்கத்திற்கு தானாகவே வாலை நீட்டிகொடுத்துவிடுவதுதான் தற்பாதுகாப்பு என்று நினைத்தார்கள். இலங்கையில் தான் காலூன்றாமல் சீனாவுடன் பங்கு போடதுடித்தார்கள். எல்லோருக்கும் வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் ராசபக்சாவின் வார்த்தைகளை நம்பி பில்லியன் கணக்கான விண்வெளி, ஆகாய, கடல், தரை இராணுவதளபாடங்களை ராசபக்சாவின் காலடியில் வைத்து இலங்கையில் பங்கு கேட்க வந்தார்கள். ஆனால் இன்று தவறுகளை உணர்ந்து, சீனாவுடன் போட்டி கொள்கைகளை திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

சீனாவும் பாகிஸ்த்தானும் தங்கள் இலக்கு வேறு ஒருவர் கையில் விழுந்திடாமலிருக்க தேவையான உதவிகளை இலங்கைக்கு செய்தார்கள்.

இந்தபோர், 2007,2008,2009 களிருந்த உலகச் சூழ்நிலைகளில், எப்படியான ஆய்வுகளாலும் தமிழர்களால் வென்றிருக்க முடியாது.

அப்போ நமது பிரச்சனை இப்போது என்ன? மே 31 ல் தோற்றிருக்கலாம். ஆனால் மே 19ல் அன்று தோற்று விட்டார்கள் என்பதா?

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

நன்றி மல்லையூரான், நீண்ட கருத்திற்கு.

சுருக்கமாக சொன்னால், பழையதில் ஆயுதபலம் / நம்பிக்கையான தலைமை இருந்தது. ஆனால் சர்வதேச ஆதரவு இருக்கவில்லை. இன்று அது நமக்கு கிட்டியுள்ளது அந்த தியாகங்களால்.

எனவே அப்படி இல்லை இப்படி செய்திருக்கலாம் என அடுத்த தலைமுறை வாதாட அவர்கள் இருக்கவேண்டும், அதற்கு நாம் இன்று செயற்படவேண்டும்.

நான் பெரிது நீ பெரிது என கூறாமால் நாம் பெரிது என வாழுவோம்.

Edited by akootha

  • தொடங்கியவர்

இனி என்ன செய்ய வேண்டும்.. அதுதான் கேள்வி..

நோர்வே அறிக்கையின் முக்கியத்துவத்தை சரியாக கையில் தூக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது.. அது தமிழர் கூட்டமைப்பிற்கே இருக்கிறது.

காரணம்…போர்க்குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட யுகோசுலாவிய சொலபடான் மிலேசெவிச், ஈராக் சதாம் உசேன், லிபியக் கடாபி, எகிப்து கொஸ்னி முபாரக், சிரிய பஸார் அல் ஆஸாட் போன்றவர்கள் மீது போர்க்குற்றம் சாட்டிய மேலை நாடுகள் அந்தத் தேசத்தையோ அரசையோ முற்றாகக் குற்றவாளியாகக் காட்டவில்லை. தனி நபர்களையே குற்றம் சுமத்தியது..

ஆனால் முதல் தடவையாக ஒரு நாட்டின் முழுமையான இறைமையுள்ள அரசே குற்றவாளி என்ற கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சமாதானத்தில் ஈடுபட்ட ஒரு நாடு முன் வைத்திருக்கிறது, எவ்வளவு பெரிய விடயம்…!!!

இப்படியொரு குற்றச்சாட்டை முன்னரே வைக்கும்படி ஐ.நா செயலரோடு நோர்வே போராடியிருக்கிறது. பின் தகுதியற்ற ஒருவர் ஐ.நா. செயலராக வந்தது உலகிற்கே சாபக்கேடு என்றும் கூறியதும் தெரிந்ததே. என்றோ ஐ.நா வெளியிட்டிருக்க வேண்டிய அறிக்கையை இன்று காலதாமதமாக நோர்வே தன் பெயரில் வெளியிட்டிருக்கிறது.

இதைவிட தமிழர் கூட்டமைப்புக்கு வேறென்ன வாய்ப்பு வேண்டும்…?

இனியாவது தமிழர் கூட்டமைப்பு பயந்து பயந்து கருத்துக்களைக் கூறும் நிலையில் இருந்து வெளிப்பட்டு, இந்த அறிக்கையை கையில் எடுத்து தமிழ் மக்களின் தார்மீக உரிமையைப் பேச முன்வர வேண்டும்.

எந்தவொரு சக்திக்கும் பயந்து நடக்க வேண்டிய தேவை இல்லை என்ற முடிவுக்கு அவர்கள் வர இந்த அறிக்கை போதுமானது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=94456

மிகவும் நிதானமாக கருத்தெழுதும் புங்கையூரானுக்கு ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவையை சரியாக எழுத்தியதற்காக ஒரு பச்சை குத்தியுள்ளேன்.

எல்லோரும் எழுத்துவது கட்டாயமாக சமுதாயதாயற்திற்கு நன்மை பயக்கும். தோற்றபடும் இடைவெளிகளை நிரப்பி உண்மையை தெளிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் நாரதரின் கருத்தோடும் ஒத்துப்போகத்தான் வேண்டியிருக்கிறது. இறந்து போன தலைவர்களான தமிழ் செல்வன், நடேசன், புலித்தேவனாகியோருக்கும் ஒரு குரல் தேவை. இவர்களின் குரல்கள் அடக்கப்பட்டு விட்டதால் வெளிவரும் மூலகங்களில் கூட்டு மொத்த சமநிலையை எதிர்பார்க்க முடியாது. அதனால்த்தான் மேலைத்தேயங்களில் "சரித்திரம் என்பது வென்றோரின் கதை" என்று கூறுவர். எனவே தான் தோற்றோர் இந்த சரித்திரங்களை இப்போதைக்கு மறந்து "எமது அரசியல் தலைவிதியை எமக்கு நன்மை பயக்கும் விதத்தில் மாற்றி எழுத வைப்பதிலும் கூடிய முயற்சியும் அக்கறையும் காட்டவேண்டியவர்களாக நாம் அனைவரும் உள்ளோம்."

சிறு சிறு ஆலோசனைகளை(அவை சரியாக இருந்திருந்தால்) தமிழ் செல்வனோ, அல்லது தலைவரோ அல்லது பாலா அண்ணையோ செவிமடுக்காததால்த்தான் போர் தோற்றது என்ற வாதத்தில் ஒரு பொருளுமில்லை.

ஓட்டை குடிசையைச்சுற்றி சூறாவளி பலமாக ஊதுகிறது. குடிசைக்கு வெளியில் நின்ற சிறுமி வீட்டுக்குள் ஓடி வருகிறாள். குடிசையின் ஒரே ஒரு ஒளிர்வான விளக்கு அணைந்துது போகிறது. அலுவலாய் நின்ற தாய், ககையில் பிடிபட்ட சிறுமியை வைதுகொண்டு நையப் புடைக்கிறாள் விளக்கை அணைத்து விட்டதாக கூறி. உண்மைகளை காட்டி வைத்த விளக்கு அணைந்து விட்டதால் தன் ஒரே ஒரு பாதுகாப்பான குடிசையும் தன் தலைக்கு மேலே இப்பொழுது இல்லை என்பது அவளுக்கு தெரியாது.

வீசிய சூறாவளி நமக்கு வழிகாட்டிய தலைமைகளை அணைத்து விட்டது. நமக்காக போராடிய நம் அருமைகளுக்கு இப்போது போக இடமில்லை. நாம் அணைக்க வேண்டிய நேரம் இது. கை நீட்டி அடிக்க கூடிய நேரமல்ல.

மே 19ல் தோற்றிருக்காவிட்டால், மே 31 ல் அல்லது, சனவரி 25லிலொ தமிழனுக்கு தோல்வியவை கொண்டுவர பலர் கங்கணம் கட்டி கொண்டி நின்றார்கள்.

'வடக்கு கிழக்கு இராணுவ கட்டமைப்பு......

அரசியல் வடிவாக்கம்..........

தேசிய நிலவாக்கம்..........."

இப்படி ஆயிரம் சிறிய ஆய்வுகளில் நம்மவர்கள் ஈடுபட்டிருந்த போது பாரிய சூறாவளி உருவாகி வெளியில் வீசியதைக்கண்டு கொள்ளவில்லை.

இந்தியாவின் உயிரோடுவைத்து தமிழனை குடலையுருவி கொலைசெய்ய துடித்த பழிவாங்கல் கைகள் மில்லியன் கணக்கான போர்வீரர்களை இலங்கையில் இறக்கி இராசபக்சாவை வெல்ல வைக்கத்தான் ஆயத்தமாக இருந்தது. இந்தியாவுக்காக இலங்கையில் உழைத்தோர், இலங்கை அவர்களை பாதுகாப்பு வாகனம் இல்லாமல் தெரு டாக்சியில் போகவைத்தும், தமது உயிரையும் பணயம் வைத்துதான் ராசபக்சாவை வெல்ல வைக்க உழைத்தார்கள்.

ரிச்சாட் அமிர்தாச் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவின் சீனா பயக் கொள்கைகளை எதிர்த்தார். ஆனாலும் புஸ்சுக்கும் ஆதரவாளர்களுக்கும் போக பல வேறு பாதைகள் இருக்கவில்லை. முதளைக்குளத்தில் தண்ணி குடிக்க போன யானை மாதிரி வெகுவாக மத்திய கீழக்கில் மாட்டியிருந்தது அமெரிக்கா. பின்னாலே தாக்க வந்த சிங்கத்திற்கு தானாகவே வாலை நீட்டிகொடுத்துவிடுவதுதான் தற்பாதுகாப்பு என்று நினைத்தார்கள். இலங்கையில் தான் காலூன்றாமல் சீனாவுடன் பங்கு போடதுடித்தார்கள். எல்லோருக்கும் வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் ராசபக்சாவின் வார்த்தைகளை நம்பி பில்லியன் கணக்கான விண்வெளி, ஆகாய, கடல், தரை இராணுவதளபாடங்களை ராசபக்சாவின் காலடியில் வைத்து இலங்கையில் பங்கு கேட்க வந்தார்கள். ஆனால் இன்று தவறுகளை உணர்ந்து, சீனாவுடன் போட்டி கொள்கைகளை திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

சீனாவும் பாகிஸ்த்தானும் தங்கள் இலக்கு வேறு ஒருவர் கையில் விழுந்திடாமலிருக்க தேவையான உதவிகளை இலங்கைக்கு செய்தார்கள்.

இந்தபோர், 2007,2008,2009 களிருந்த உலகச் சூழ்நிலைகளில், எப்படியான ஆய்வுகளாலும் தமிழர்களால் வென்றிருக்க முடியாது.

அப்போ நமது பிரச்சனை இப்போது என்ன? மே 31 ல் தோற்றிருக்கலாம். ஆனால் மே 19ல் அன்று தோற்று விட்டார்கள் என்பதா?

பிள்ளை சிகரெட் பத்தேக்க சொல்லி ,தண்ணியடிக்கேக்க சொல்லி,பிறகு தூளும் அடிக்கேக்க சொல்லவும் என்ரை பிள்ளை பிழைவிடாது,பிழை விட்டாலும் என்ரை பிள்ளைதான் நீங்கள் யார் குற்றம் சொல்ல என கத்திய தாய், பிள்ளை செத்தபின் முழுப்பிள்ளைகளும் உதைதான் செய்து சாக இந்த உலகம் நினைக்குது என்று தன்னை தானே தேற்றுவது போல் இருக்கு .

எல்லாம் முடிந்து விட்டது .செய்தது பிழை என்று ஒத்துப்போக மனமில்லை ,எம்மை நாமே தேற்றுவதை தவிர வழியேயில்லை .

பிரேக்கில்லாத பஸ்சில் ஏறினால் இதுதான் நடக்கும்.நிண்டவன் போனவனையும் அடித்து பின் தானும் அடிபட்டு அனைத்து பயணிகளையும் முடித்துவிடும் .

ஏதோ சர்வதேச பிரச்சனையில் மாட்டுப்பட்டு அழிந்த மாதிரி கதையை முடிக்க கேட்பவன் கேணையன் அல்ல .76 இல் இருந்து 2009 வரை அனைத்தும் பதிவில் உள்ளது .

அதையும் வைச்சிருங்கோ. 2009 பிறகும் வந்ததையும் வைச்சிருங்கோ.

இலங்கை விசையத்தில் தாங்கள் பிழை விட்டதாக அல்லது ஏமாந்து போனதாக அறிக்கை விட்ட சர்வதேச அரசியல் வாதிகளின் பட்டியலையும் வைச்சிருங்கோ.

ஆறிக்கைக்கு மேல் அறிக்கை இருக்கு உலகத்து விடுதலை இயகங்களில்புலிகள் மிக நேர்த்தியான இயக்கமென்று. அதற்கு எடுத்த உதாரணத்திற்கு சிரிப்புத்தான் வருகிறது. "பிள்ளை சிகரெட் பத்தேக்க சொல்லி ,தண்ணியடிக்கேக்க சொல்லி,பிறகு தூளும் அடிக்கேக்க சொல்லவும் என்ரை பிள்ளை பிழைவிடாது,பிழை விட்டாலும் என்ரை பிள்ளைதான் நீங்கள் யார் குற்றம் சொல்ல என கத்திய தாய்," . உழைக்கிற சந்தர்பங்களைத் தவற விட்டதாக ஏங்கி கவலைப் படுபவர்கள் இப்போது புததகங்களை அடித்து விற்று பணத்தை பண்ணலாம்.(பணம் பண்ண கடைசி சந்தர்பம் போலிருக்கு) ஆனால் இந்த மாற்றாந்தாயின் போதனை வேண்டப்படாதது.

கேணைகள் இல்லாததால் தான் போலும் சுங்கான் இல்லாத வள்ளத்தை கொண்டுபோய் மாலைதீவில் மோதவிட்ட்வர்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை சிகரெட் பத்தேக்க சொல்லி ,தண்ணியடிக்கேக்க சொல்லி,பிறகு தூளும் அடிக்கேக்க சொல்லவும் என்ரை பிள்ளை பிழைவிடாது,பிழை விட்டாலும் என்ரை பிள்ளைதான் நீங்கள் யார் குற்றம் சொல்ல என கத்திய தாய், பிள்ளை செத்தபின் முழுப்பிள்ளைகளும் உதைதான் செய்து சாக இந்த உலகம் நினைக்குது என்று தன்னை தானே தேற்றுவது போல் இருக்கு .

எல்லாம் முடிந்து விட்டது .செய்தது பிழை என்று ஒத்துப்போக மனமில்லை ,எம்மை நாமே தேற்றுவதை தவிர வழியேயில்லை .

பிரேக்கில்லாத பஸ்சில் ஏறினால் இதுதான் நடக்கும்.நிண்டவன் போனவனையும் அடித்து பின் தானும் அடிபட்டு அனைத்து பயணிகளையும் முடித்துவிடும் .

ஏதோ சர்வதேச பிரச்சனையில் மாட்டுப்பட்டு அழிந்த மாதிரி கதையை முடிக்க கேட்பவன் கேணையன் அல்ல .76 இல் இருந்து 2009 வரை அனைத்தும் பதிவில் உள்ளது .

புலிகள் இராணுவத்துடன் அடிபட்டு வீரச்சாவு அடைந்து கொண்டு செல்ல கொஞ்ச கூட்டம் என்ன செய்தவர்கள் என்பதை முழு தமிழ் மக்களும் அறிவார்கள்.தங்களின் பிழைகளை மறைக்க ஆளுக்கொரு இணையத்துடன் விமர்சனம் செய்கின்ற கூட்டத்தையும் மக்கள் அறிவார்கள்.தனது இனத்துக்காக என்ன செய்தீர்கள் என்றால் அது பூச்சியம் தான்.அவர்களின் பேரை கேட்டால் தமிழீழ விடுதலை கழகம், இன்னும் பல பல. புலிகள் சுயவிமர்சனம் செய்ய வேண்டுமாம்.தாங்கள் செய்ய மாட்டார்களாம்.இன்றும் மக்கள் முன் உங்களின் இயக்க பெயருடன் சென்று பேசிப்பாருங்கள்.செருப்பால் தான் தருவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.