Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேர்களை இழந்து வரும் விழுமியங்கள் -(முடிவு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவகியும் வந்து சேர்ந்து விட்டாள். வாழ்க்கையில் ஏதோ அர்த்தம் பொதிந்து கிடப்பதாக அவனுக்குத் தோன்றியது. வெளி நாட்டு மருத்துவர்களுக்கான 'மொழிப் பரீட்சை'யிலும் சித்தியெய்தி விட்டாள். தேவகி வந்ததும் தனியாக ஒரு சிறிய வீடொன்று வாடகைக்கு எடுக்க வேண்டி ஏற்பட்டதால். செலவுகளும் அதிகரித்து விட்டது. தேவகியின் சில சொந்தங்களும், அடிக்கடி வந்து போகத் தொடங்கின. அவர்கள் கன காலத்திற்கு முன்பு இங்கு வந்தவர்கள்.அவர்களது 'சமூக அந்தஸ்து' மிகவும் உயர்ந்ததாக அவர்கள் காட்டிக் கொண்டார்கள். தேவகியின் காதில் அடிக்கடி குசு குசுப்பார்கள். இதனைப் பெரிதாகச் சந்திரன் கணக்கில் எடுக்கவில்லை.

சில வாரங்கள் கழிந்ததும், தேவகிக்கு 'பெர்மிங்கம்; என்னும் இடத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. அவளது வேலையின் நிமித்தம், அவள் அங்கேயே ஆஸ்பத்திரி விடுதியிலேய தங்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு ஒரு முறை வந்து போவாள். காலம் செல்லச் செல்ல, அவள் வருவது குறைந்து விட்டது. சந்திரனது வாழ்க்கையும், பழையபடி வேலை, பள்ளிக்கூடம் என்ற வட்டத்திற்குள் மீண்டும் சுற்றத் தொடங்கியது.

ஒருவாறு தங்கையின் திருமணத்துக்கெனக் கடன் வாங்கிக் கொஞ்சக் காசும் அனுப்பியாயிற்று. காசை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தவனை, அம்மாவின் கடிதம் தான் வரவேற்றது. காசனுப்பி விட்டபடியால், மனதில் இருந்த குற்ற உணர்வு முற்றாக அவனிடமிருந்து விடை பெற்றிருந்தது. அன்றைய வானம் கூட முகில்கள் இன்றி மிகவும் தெளிவாக இருந்தது. வழக்கமாக இறைவன் திருவருளை முன்னிறுத்தி, நலம் விசாரித்த படி தான் அம்மாவின் கடிதம் தொடங்குவது வழமை, இன்று வித்தியாசமாக, அன்புள்ள சந்திரனுக்கு என்று தொடங்கி, சீதனத்தை முன்னிறுத்தி, பெண்ணைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்ற மாப்பிள்ளைகளுக்குக் கழுத்தை நீட்டுவதிலும் பார்க்க, நாட்டுக்காகச் போராடுவது மிகவும் உயர்ந்தது எனக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, அவனது தங்கை இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும், அப்பா அவளையே நினைத்தபடி பித்துப் பிடித்த மனிதனைப் போல இருப்பதாகவும், தனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் எழுதியியிருந்தார். இயலுமானால் அவனை ஒரு முறை வந்து போகும்படியும் கேட்டிருந்தார்.

அவனது இதயத்தில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. யாராவது அப்போது, தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான், அவன் அது வரை அறிந்திராத ஒரு ;வெறுமை' அவனை ஆட்கொண்டது.

சில மாதங்களில், தேவகியின் போக்கில் மாற்றங்கள் தென்படத் தொடங்கின. அவளது வருகைகள், வெகுவாகக் குறையத் தொடங்கின. வரும்போதும் அவனோடு முகம் கொடுத்துப் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். தனது உறவினர்கள் வீடுகளிலேயே அதிக நேரத்தைச் செலவு செய்தாள். மச்சான், தேவகியினது போக்கு எனக்குச் சரியாகப் படவில்லை. எதற்கும் அவளோடு தனியாக இருக்கும்போது கதைத்துப் பார் . அவளுக்கு ஏதோ பிரச்னை இருக்கின்றது போலத் தெரிகின்றது என்று எனது நண்பன் கூடக் கூறினான். சந்திரனுக்கு நண்பன் மீது தான் கோபம் வந்தது.

வீட்டுக்கு வந்து கதவைத் திறந்தவனது பார்வையில் படக்கூடியதாக அந்தக் கடிதம் வைக்கப் பட்டிருந்தது. அவனுக்கு 'பில்' களையும், கடனட்டைக் கடிதங்களையும் தவிரக் கடிதங்கள் வருவது மிகவும் குறைவு. கலியாணக் காசு அனுப்பியபின்பு அம்மாவின் கடிதங்களுமவருவது குறைந்து விட்டது. தேவகி, டெலிபோனில் கதைத்துக் கொள்ளுவாள். எனவே ஆச்சரியத்துடன் கடிதத்தை எடுத்தவன், கடிதத்தின் மேலுறையில் தேவகியின், கையெழுத்தை அடையாளம் கண்டு கொண்டான்.

அன்புள்ள சந்திரனுக்கு,

சில நாட்களாக, என்னில் சில மாற்றங்களை அவதானித்திருப்பீர்கள். இங்கு வந்த பின்பு எனது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொடர்புகள் ஏற்பட்டது. நீண்ட காலமாகத் தொடர்புகள் விட்டுப் போனாலும். 'தானாடாவிட்டாலும் தன் சதையாடும்' என்பது என்னைப் பொறுத்த வரையில் உண்மையாகப் போய் விட்டது. எனது உறவினரது மகன் ஒருவரும், இங்கு 'பெர்மிங்கமில்' ஒரு ;நல்ல 'பதவியில்' வேலை செய்கின்றார். தூரத்து வழியில், அவர் எனக்கு மச்சான் முறையும் கூட. அவர் மிகவும் முற்போக்கானவர். இங்கு வளர்ந்த படியால், அவ்வாறு இருக்கலாம். நீங்களும் நல்லவர் தான். ஆனால் இருவருக்குமிடையே உள்ள 'இடைவெளி' மிகவும் அதிகம். இது எல்லாம் இங்கு சர்வ சாதரணமாக நடப்பவை தான் என்று எனது உறவினர்கள் கூறுகின்றார்கள். உங்களுக்கு வயசிருக்கின்றது. ஊருக்குப் போய், உங்கள் அப்பா, அம்மாவின் ஆசீர்வாதத்துடன் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்யுங்கள்......

கடிதத்தை அவன் மேலும் படிக்கவில்லை, கண்ணீர் அவனது கண்களை மறைத்தது. கடிதத்தை மடித்து, சாமிப் படங்களிருந்த தட்டில் வைத்தான். நல்லூர் முருகனின் படமொன்றும் அதில் இருந்தது. அவனைப் பார்த்து, அவர் சிரிப்பது போல் இருந்தது.

இப்போதெல்லாம் வேலைக்குப் போகின்றான். படிப்பு முடிந்து இரண்டாவது மட்டையும் கைக்கு வந்து விட்டது, அந்த மட்டைகளுக்கேற்ற ஒரு வேலை ஒன்றைத் தேடித் திரிகிறான். அது ஒரு வேளை அவனது 'அந்தஸ்தை' மாற்றக் கூடும். வேலை முடிந்தவுடன், நேரே இந்தத் தேம்ஸ் நதிக்கரைக்கு, இந்தக் கதிரைக்கு வந்து விடுகின்றான். இரவாகியதும் திரும்பவும், அந்த வேலைக்குப் போய் விடுகிறான். அந்தக் கலங்கிய நதியின் அசைவில், தனது மனதைக் காண்கிறானோ என நான் நினைப்பதுண்டு!

வெறும் பொருளாதாரத்தேடல்களில் மனித உணர்சிகள் மலினப்படுவதை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் . பொதுவாகக் காதலில் , ஆரம்பத்தில் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் , அக , புற சூழலில் மண்வீடுகட்டி பின்பு அத்திவாரம் சரியில்லாத்தால் அந்த மண்வீடுகள் இடிந்து கொட்டும்பொழுது , உணர்வை பிரதானப்படுத்தாமல் மீண்டும் உணர்சிகளுக்கு அடிமையாகி தமது வாழ்வைத் தொலைக்கின்றனர் . இதையும் இளயசமூகம் கவனத்தில் எடுக்கவேண்டும் . மனித உணர்சிகளை நளினமாக தந்த புங்கைக்கு என்னால் ஒரு சிறப்புப் பரிசு :):) :) 1

யதார்த்த வாழ்வை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய வாழ்வில் அன்பு பெரிதெனப்படுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டுக்கு வந்தவுடன் வேர்களை மறந்துவிடுகிறார்கள் பலர்..ஏணியாக நின்று ஏற்றிவிட்டவர்களை எட்டி உதைத்து விட்டு சுயநலங்களை உடுத்திக்கொள்கிறார்கள்..பாவம் உங்கள் கதாநாயகன் சந்திரன்..அவனைப்போல் பல வேர்கள் வெளித்தெரிவதில்லை..நல்ல கதை அண்ணா..பாராட்டுக்கள்..

  • தொடங்கியவர்

உண்மை தான் கோமகன்! வெறும் பொருளாதாரத் தேடல்களினால் தான் எமது ஈழக்கனவு கூடக் கானல்நீராய் மாறிப்போனது!

நன்றிகள்!!!

யதார்த்த வாழ்வை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய வாழ்வில் அன்பு பெரிதெனப்படுவதில்லை.

கருத்துக்கு நன்றிகள், கல்கி!!!

வெளி நாட்டுக்கு வந்தவுடன் வேர்களை மறந்துவிடுகிறார்கள் பலர்..ஏணியாக நின்று ஏற்றிவிட்டவர்களை எட்டி உதைத்து விட்டு சுயநலங்களை உடுத்திக்கொள்கிறார்கள்..பாவம் உங்கள் கதாநாயகன் சந்திரன்..அவனைப்போல் பல வேர்கள் வெளித்தெரிவதில்லை..நல்ல கதை அண்ணா..பாராட்டுக்கள்..

இது எங்கள் போராட்டத்திற்கும் மிகவும் பொருந்தும், சுபேஸ்!

போராட்டத்தை ஏணியாகப் பாவித்தவர்கள், பலர். இன்று மிகவும் பெரிய மனிதர்களாகப் ' புதிய அந்தஸ்துக்களுடன்' வாழுகின்றார்கள்!

ஏணிப்படிகள் மட்டும் அப்படியே இருக்கின்றன! எங்கள் ஊரிலுள்ள தமிழாசிரியர்கள் போல!

அண்ணாந்து பார்ப்பதே அவர்கள் வாழ்க்கையாகி விட்டது! நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டிய கதை இது

புங்கையூரன்.

திருமணத்திற்குப் பின்னர் இப்படியொரு நிகழ்வு நடந்திருந்தால்

இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரனின் தங்கை எங்கே தேவகி எங்கே?.இவ்வளவு படித்தும் மற்றவர் சொல்லித்தான் சந்திரனை வெறுத்தாரா அல்லது ஏற்கனவே தேவகியின் மனதில் உண்மையான காதல் இல்லையா அல்லது பணத்துக்கு முன் காதல் ஒரு தூசாக போய் விட்டதா போன்ற கேள்விகள் எழுகின்றன.எது எப்படி என்றாலும் சந்திரனின் வாழ்க்கை யாருக்கும் ஏற்படக்கூடாது.

புங்கையூரான் உங்கள் எழுத்து அருமை.

புங்கையூரன்........... இதற்கு என்ன எழுதுவதென்று எனக்கு தெரியவில்லை! காதலைப் பற்றி விமர்ச்சிக்க வைப்பதில் பெண்களும் பெரும்பங்கு வகிக்கின்றார்களோ? என எண்ணத் தோன்றுகின்றது.

இது எனது கருத்து....

அவர்கள் காதலிக்கும் ஆரம்பத்தில் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதேபோல ஆண்களும் அவர்கள் காதலிக்க ஆரம்பித்தபின் எதிர்பார்ப்பதனைப்போல நடக்க முயல்வதும் இல்லை! நடுவில்............. காதல் பாவம்!

யாதார்தமான தங்களின் வரிகளை உணர்ந்தவன்! 3

புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழ்மக்களின் உணர்வுகளும் உள்ளத்தைவிட்டு புலம்பெயர்கின்றன. இங்கு வந்தவர்களின் உணர்வு இதுதான்.. ஆண் என்றால் என்ன, பெண் என்றால் என்ன.. நிலை இதுதான்.. சுருக்கமாக தெளிவாக ஒருவரின் உணர்வை வெளிக்கொணர்ந்ததற்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏணிகள் ஏற்றி விடப் பயன்பட்டாலும் ஏணிகள் ஒருபோதும் ஏறுவதில்லை

.இதுதான் வாழ்க்கை .பகிர்வுக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டிய கதை இது

புங்கையூரன்.

திருமணத்திற்குப் பின்னர் இப்படியொரு நிகழ்வு நடந்திருந்தால்

இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருப்பர்

உண்மை தான் வாத்தியார், நன்றிகள்!!!

சந்திரனின் தங்கை எங்கே தேவகி எங்கே?.இவ்வளவு படித்தும் மற்றவர் சொல்லித்தான் சந்திரனை வெறுத்தாரா அல்லது ஏற்கனவே தேவகியின் மனதில் உண்மையான காதல் இல்லையா அல்லது பணத்துக்கு முன் காதல் ஒரு தூசாக போய் விட்டதா போன்ற கேள்விகள் எழுகின்றன.எது எப்படி என்றாலும் சந்திரனின் வாழ்க்கை யாருக்கும் ஏற்படக்கூடாது.

புங்கையூரான் உங்கள் எழுத்து அருமை.

இது ஒரு உண்மையான சம்பவத்தில் இருந்து பிறந்த கதை, நுணா!

ஆனால், அவர்கள் இடையே ஏற்பட்டது ஒரு உண்மையான காதலா என்பதில், எனக்கு இன்னும் சந்தேகமுள்ளது!

சந்திரனின் முகத்தில், ' இளிச்சவாயன்' என்று தெளிவாக எழுதப் பட்டிருக்கும் போல!!!

புங்கையூரன்........... இதற்கு என்ன எழுதுவதென்று எனக்கு தெரியவில்லை! காதலைப் பற்றி விமர்ச்சிக்க வைப்பதில் பெண்களும் பெரும்பங்கு வகிக்கின்றார்களோ? என எண்ணத் தோன்றுகின்றது.

இது எனது கருத்து....

அவர்கள் காதலிக்கும் ஆரம்பத்தில் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதேபோல ஆண்களும் அவர்கள் காதலிக்க ஆரம்பித்தபின் எதிர்பார்ப்பதனைப்போல நடக்க முயல்வதும் இல்லை! நடுவில்............. காதல் பாவம்!

யாதார்தமான தங்களின் வரிகளை உணர்ந்தவன்! 3

நன்றிகள், கவிதை!

தமிழனின் மரபணுக்கள், தேவகியிடமும் இருக்கின்றன!

தேவகி ஒரு தனிப்பட்ட பாத்திரமே!

பல தேவகிகள் சேர்ந்ததன் விளைவே 'முள்ளிவாய்க்கால்"

நன்றிகள், நண்பா!!!

புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழ்மக்களின் உணர்வுகளும் உள்ளத்தைவிட்டு புலம்பெயர்கின்றன. இங்கு வந்தவர்களின் உணர்வு இதுதான்.. ஆண் என்றால் என்ன, பெண் என்றால் என்ன.. நிலை இதுதான்.. சுருக்கமாக தெளிவாக ஒருவரின் உணர்வை வெளிக்கொணர்ந்ததற்கு பாராட்டுக்கள்.

நன்றிகள், செண்பகன்!!!

தனியொரு தமிழனின் ஆசைகள், ஒருவன் தனது வாழ்நாளில் சுமந்து விட முடியாத மூட்டைகள்!

அதனைச் சுமந்து விடப் பலர் குறுக்கு வழிகளை நாடுகின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் காதல் செய்யத்தூண்டும் விடலைப்பபருவத்தில் ஆண்கள் வெளிப்படுத்தும் காதல் என்பது பெரும் மாயை நிறைந்தது. அதே காதலன் குடும்பம் பாரம் பொறுப்புகள் என்று தன்னை திடப்படுத்தும் போது மாயையால் கவரப்பட்ட பெண் அந்த மாயத்தோற்றத்திற்கு அடிமையான பெண்ணால் அதனை ஜீரணிக்க முடிவதில்லை அதுதான் உண்மை. எப்போது ஒரு ஆண் தன்னுடைய உண்மைத் தோற்றத்தை மட்டுமே வெளிப்படுத்தி ஒரு பெண்ணிடம் இருந்து காதலைப் பெற்றுக் கொள்கிறானோ அப்போது அவன் அனைத்து விடயங்களிலும் வெற்றி பெறுகின்றான் இதுதான் அடிப்படை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏணிகள் ஏற்றி விடப் பயன்பட்டாலும் ஏணிகள் ஒருபோதும் ஏறுவதில்லை

.இதுதான் வாழ்க்கை .பகிர்வுக்கு நன்றி

நன்றிகள், நிலாமதி அக்கா!!!

ஏணிகள் ஏறுவதற்கு விரும்புவதில்லை!

அவை மற்றவர்களை ஏற்றிவிடுவதிலேயே, திருப்தி காணுகின்றன!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் காதல் செய்யத்தூண்டும் விடலைப்பபருவத்தில் ஆண்கள் வெளிப்படுத்தும் காதல் என்பது பெரும் மாயை நிறைந்தது. அதே காதலன் குடும்பம் பாரம் பொறுப்புகள் என்று தன்னை திடப்படுத்தும் போது மாயையால் கவரப்பட்ட பெண் அந்த மாயத்தோற்றத்திற்கு அடிமையான பெண்ணால் அதனை ஜீரணிக்க முடிவதில்லை அதுதான் உண்மை. எப்போது ஒரு ஆண் தன்னுடைய உண்மைத் தோற்றத்தை மட்டுமே வெளிப்படுத்தி ஒரு பெண்ணிடம் இருந்து காதலைப் பெற்றுக் கொள்கிறானோ அப்போது அவன் அனைத்து விடயங்களிலும் வெற்றி பெறுகின்றான் இதுதான் அடிப்படை.

உண்மை தான், வல்வை!

நீங்கள் கூறுவது போல, மாயத் தோற்றங்களை உருவாக்குவதே எமது, இனத்தின் சாபக்கேடு!

அந்த நாட்களில், புலம் பெயர் வாழ்வின், உண்மைத் தோற்றத்தை எவரும், வெளியில் கூற விரும்புவதில்லை. கூறுபவர்களை நம்புவதற்கும், எமது சமூகம் தயாராக இருந்ததில்லை!

ஆனாலும், தேவகி தன்னை வெளிப்படுத்தியதன் மூலம், சந்திரனை மாயைக்குள் வைத்திருக்காமல், அவனுக்கு ஒரு மீண்டும் வாழ ஒரு சந்தர்ப்பத்தை அளித்திருக்கின்றாள் என்றே நான் கருதுகின்றேன்!!!

தன்னை வெளிப்படுத்தாமல் அவள் தொடர்ந்தும், வாழ்ந்திருந்தால், மவுனமான ஒரு நரகமாக இருவரது வாழ்வும் இருந்திருக்கும்!!!

சில விடயங்கள் நடந்தது எதோ நல்லதிற்கே என்று எடுக்கவேண்டியதுதான்.

எனக்கு ஏதோ தேவகியின் கரெக்டரை ஆரம்பத்தில் இருந்தே புரிந்து கொள்ளமுடியாமல் தான் எழுதியிருந்தீர்கள்.

வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு வரைவிலக்கணம் புரியாமலே வாழ்க்கை முடிந்துவிடும் போலுள்ளது.வயது போக விளங்கிவிடும் என நினைத்தது வயது போக இன்னமும் புதிர் நிறைந்ததாக மாறி வருகின்றது.

கோடியில் ஒன்றாய் நாமும் எமது தனித்தஅடையாளத்துடன் முடிக்க வேண்டியதுதான்.

தேவகி என்ற பாத்திரம், தனது தேவைகளை மட்டும் முன்னிறுத்தும் ஒரு பெண்ணுடையது! பல்கலைக்கழக அனுமதியிலிருந்து, கோவிலில் கற்பூரச் சத்தியம் வாங்கும் வரை, தனது நலனையே முன்னிறுத்திச் செயல்படுகின்றாள். எந்த சந்தர்ப்பத்திலும், ஒரு நல்ல உறவு நீடிப்பதற்கான ஒருவிதமான விட்டுக்கொடுப்புக்களையும் அவள் செய்யவில்லை. இரு விடலைகளுக்குள் ஏற்படும் கவர்ச்சியைத் தனது வாழ்க்கைக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றாள். இவ்வாறு பலர் உள்ளனர்.தேவைகள் இவர்களுக்கு இருக்கும் வரை, இவர்கள் தேடுவார்கள். தேவைகள் முடிந்ததும், தூக்கி எறிந்து விடுவார்கள்! மனித உணர்வுகள், இவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான்!

வாழ்க்கையில் 'புதிர்' இல்லாமல் போய்விட்டால், வாழ்க்கை அர்த்தமிழந்து வெறுமையாகி விடும்!!!

நன்றிகள், அர்ஜுன்!

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரன் தாடி வளர்க்காமல் விட்டால் சரி...வாழ்க்கை வாழ்வதற்கே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரன் தாடி வளர்க்காமல் விட்டால் சரி...வாழ்க்கை வாழ்வதற்கே....

சின்ன வயது தானே புத்தன்!

கொஞ்ச நாள் போக எல்லாம் சரிவரும்!

கருத்துக்கு நன்றிகள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.