Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோபாசக்தியின் 'கப்டன்' சிறுகதை

Featured Replies

சோபாசக்தியின் 'கப்டன்' சிறுகதையினை இப்போது படித்துமுடித்தபோது, ஒரு சிறு குறிப்போடு பதிவிடத் தோன்றியதால் இப்பதிவு.

எனது பதிவைப் படிக்கு முன் கதையைப் படியுங்கள்: http://www.shobasakt...basakthi/?p=936

பிரபஞ்சம் எங்கிருந்து எவ்வாறு தோன்றியது என்பது தொடர்பில் 'எவ்வாறு' என்பதற்கான வியாக்கியானங்கள் இருப்பினும், எதிலிருந்து என்பது விடைகாணமுடியாத கேள்வியாகவே இருக்கின்றது. இது தான் பிரபஞ்சம் தோன்றிய மூலப்பொருள் என ஒன்றைக் குறிப்பிட்டால், அந்த மூலப்பொருளின் மூலம் என்ன என்ற கேள்வி உடனே பிறந்துவிடும். அந்த வகையில் எது தொடக்கம் என்பது வரையறுக்கப்படமுடியாதது. ஆனால் தொடங்கி விட்ட உலகில் ஒவ்வொரு கதைகள் தொடங்குவதுபோலவும் முடிவதுபோலவும் தோன்றி வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. என்ன தொழிலிற்கு என்ன ஊதியம், அழகு என்பது எது, நல்ல மனைவி அல்லது நல்ல கணவன் என்றால் என்ன, மகிழ்ச்சியான வாழ்வு என்பது எது, வெற்றி எவ்வாறு வரைவிலக்கணப்படும், என்ன பெறுமதிகள் எங்கிருந்து வந்தன, எமது பெறுமதிகள் ஏன் எமக்குப் பெறுமதிகள் ஆகின்றன என்பது போன்ற ஏறத்தாள வாழ்வின் அனைத்து அம்சங்களும் கேள்வி கேட்காது அணுகப்படால் மட்டுமே வாழமுடியும் என்பதாக வாழ்வு விரிகிறது. கண்ணுக்குத் தெரியாத காற்றின் விசையில் நகரும் பாய்மரக்கப்பல் போல நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு. கப்பல் எதனால் நகருகின்றது எப்படி நகரும் என்ற விசாரணைகளை விட்டுவிட்டு நகருகின்ற கப்பல்களிற்குள் எங்கள் கூத்துக்களை நிகழ்த்தியபடி, எங்கள் கூத்துக்களின் இயக்குனர்கள் நாங்கள் என நினைத்தபடி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

'கப்டன்' கதையும் போராட்ட கால ஈழ வாழ்வியலையும், அதிகாரங்களையும், சமூகக்கட்டமைப்புக்களையும், புலப்பெயர்வையும், காதலையும், பெறுமதிகளையும் தான் பேசுகிறது. எனினும் சோபாசக்தியின் அனைத்துக் கதைகளையும் போல இக்கதைக்குள்ளும் ஒரு இரண்டாம் தட்டு நகர்ந்து கொண்டிருக்கின்றது.

மனிதவாழ்வின் மிகப்பெரும்பான்மையான பிரச்சினைகள் எம் மனங்களின் விடயங்கள் தொடர்பான பெருப்பிப்பில் ஊhற்றெடுக்கின்றன என்பது பலரது அவதானம். ஒருவரை எமக்கு ஒரு சந்தர்ப்பத்தில் பிடிக்காது போய்விடுகின்றது என்றால், குறித்த நபரில் எமக்குப் பிடிக்காத அம்சம் என்னவோ அந்த அம்சமாக மட்டும் அந்த மனிதனைச் சுருக்கிக் கொள்வது எமது தன்மை. துரோகி, கள்ளன், முட்டாள், அறிவிலி முதலான பல சொல்லுகள் ஒரு மனிதனை ஒரு சொல்லிற்குள் சுருக்கிக் கொள்ளும் மனித இயல்பிற்கான ஆதாரங்கள். சுருக்கிக் கொள்வதைப் எவ்வாறு பெருப்பித்தல் என்பது என எவரிற்கேனும் கேட்கத் தோன்றின், இந்தச் சுருக்குதல் கூட ஒரு பெருப்பித்தலே. அதாவது, ஒரு மனிதனில் எமக்குப் பிடிக்காத தன்மைகளைப் பூதாகரமாகப் பெருப்பிப்பதால் மட்டுமே அம்மனிதனை ஒரு சொல்லிற்குள் சுருக்குவது எமக்குச் சாத்தியப்படுகிறது. வெறுத்தலில் மட்டுமல்ல விருப்பிலும் இப்பெருப்பித்தலே ஆதிக்கம் செலுத்துகிறது. ஒருவரின் அல்லது ஏதோ ஒன்றின் (உத்தியோகம், அந்தஸ்த்து, சொத்து, வாகனம், பட்டம், எதுவாகவேனும் இருக்கட்டும்) ஏதோ ஒரு அம்சம் எம்மைக்கவர்ந்து விட்டால் அவ்விடயத்தை எம்கைக் கவர்ந்த அதன் தன்மையாக மட்டுமே சுருக்கிக் கொள்வோம். பின், எம்மைக் கவர்;ந்த விடயமாக மட்டும் நாம் காணுகின்ற அந்த விடயத்தை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி உள்ளிற்குள் பிறந்து விடுகிறது. ஆனால், உண்மையில், எமது விருப்போ வெறுப்போ குவியப்படும் விடயங்கள் எம்மனங்களில் அவை தோன்றுவதைப் போன்று ஒருமைத் தன்மை உடையனவல்ல.

'அலுப்பன் பொன்ராசு' முரடனாக, மனைவியை அடிப்பவனாக, விடாப்பிடியாகச் சண்டை செய்பவனாக, திருடக்கூடியவனாக, குடிகாரனாக, துரோகியாக, ஆற்றல் மிக்க வரைபடக் கலைஞனாக, சமையற்காரனாக, பாமரனாக, அடிமட்ட முரட்டுக் காதலானாக, பயமற்றவனாக, உயிர்பயம் நிறைந்தவனாக, இரக்கமற்ற தகப்பனாக, தந்தைப் பாசம் நிறைந்தவனாக, மென்மையான உயர்மட்டக் காதலனாக, கப்டனாக, வீரனாக, கோளையாக ஏதேதோ வடிவங்களில் வெளிப்படுகிறான். ஆனால், அவனைக் கண்டவர்கள் அனைவருமே அவனது எண்ணற்ற பாத்திரங்களில் ஏதோ ஒன்றாக மட்டும் அவனைச் சுருக்கிக் கொண்டு, அந்தச் சுருக்கலால் பொன்ராசு பற்றிய தமது அபிப்பராயத்தை ஆணி;த்தரமான மாற்றமற்றதாய் பெருப்பித்துக்கொண்டு வாழ்கிறார்கள். ஆனால், 'அலுப்பன் பொன்ராசு' என்றால் இது தான் என்று ஒற்றைச் சொல்லிற்குள் சுருக்கிவிடுவதற்கு, அலுப்பன் ஒரு மூலகத்தில் உருவானவன் அல்ல. அவனது என்று ஒரு மூலக் குணம் எதுவும் இல்லை.

மேற்கத்தேய தத்துவவியல் எந்த ஒரு விடயத்தினதும் மூலக் குணத்தை எம்மால் கண்டறிய முடியாது என்கிறது. ஆனால் மேற்கின் தத்துவவியலிற்கு பல நூற்றாண்டுகள் மூத்த பௌத்த சிந்தனை, எந்த ஒரு விடயத்திற்கும் மூலக் குணம் என்று எதுவுமே இல்லை என்கிறது. மூலக் குணம் என்பது அத்தகைய குணமேதும் இல்லாத வெறுமை மட்டுமே, நாம் காணும் குணங்கள் எல்லாம் நமது மனம் விடயங்கள் குறித்துக் கற்பிதம் செய்துகொண்டவை மட்டுமே என்பது இச்சிந்தனை.

ஆமி வருகிறது என்ற உயிர்ப்பயத்தின் பதற்றத்திலும் கணவனிற்குப் பசிக்குமே என மறக்காமல் உணவைப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றவள் ஞானம்மா. அவ்வாறு அவள் உணவைப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றதில் கணவனிற்குப் பசிக்குமே என்ற பாசம் மட்டும் அன்றி, கணவன் நிச்சயம் தன்னைத் தேடி அன்றிரவே தன்னிடம் வந்தடைவான் என்ற அவளது புரிதலும் வெளிப்படுகிறது. அவள் நினனத்தது போலவே பொன்ராசு ஞானம்மாவைக் கண்டடைகிறான். ஞானம்மா கொடுத்த உணவுப் பொட்டலத்தை அவள் நினைத்ததுபோன்றதேயான பசியுடன் பொன்ராசு உண்டுகொண்டிருக்கிறான். திடீரெனக் கோபம் வர உண்ட கையாலே ஞானம்மாவின் காதாவடியில் அறைகிறான். சோற்றுப் பருக்கைகளும் கறியும் பதிந்த கன்னத்தின் மேலே ஞானம்மாவின் காதில் தெரிந்த நீலக் கல் தோடு கதைக்குள் முதற்தரம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த நீலக் கல்லுத் தோடு பாமரனின் அடிமட்டக் காதலை, முரட்டுக் காதலை, ஆதிக்கத்தின் அங்கீகாரச்சின்னத்;தை எனப் பல விடயங்களை ஆரம்பத்தில் குறியிடுகிறது. பின்னர், கதைமாந்தர்கள் எவ்வாறு வௌ;nவுறு சந்தர்ப்பங்களில் இந்த நீலக்கல்லுத் தோட்டை நோக்குகிறார்கள் என்பது வாசகர்களின் ஊhகங்களிற்குத் தேவையின்றிக் கதைசொல்லியால் சொல்லப்படுகின்றன. இறுதியில் திபோ ஆற்றில் அன்னியசின் காதுகளில் மின்னுவதில் நீலக்கல்லுத் தோட்டின் படைப்பு உச்சம் பெறுகிறது. அலுப்பன் பொன்ராசு பாத்திரத்தைப் போல நீலக்கல்லுத் தோட்டுக்கும் மூலக் குணம் என்று ஏதுமில்லை. சந்தர்ப்பத்தைப் பொறுத்து பார்வையைப் பொறுத்து நீலக்கல்லுத் தோடு எமது மனங்களில் வௌ;வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

ஆமிப் பதற்றத்திலும் கணவன் மீது தான் கொண்டபாசத்தால் உணவு கட்டிச் சென்று பரிமாறிய ஞானம்மாவை அறைந்த பொன்ராசு பாத்திரம் பிரான்சில் அன்னியசின் படுக்கை அறையில் பதினைந்தாம் லூயி காலத்துக் கட்டிலில் இடது கையால் அன்னியசை அன்பாக மென்மையாக அணைத்தபடி இறந்து முடிகிறது. காதலித்த குற்றத்திற்காய் முள்முடி வைத்துத் தண்டிக்கப்ட்டுச் சுத்திகரிக்கப்பட்டு ஆதிக்கம் தனது அங்கீகாரத்தை வளங்கியதன் சின்னமாகக் குரூரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நீலக்கல்லுத் தோடு திபோ ஆற்றில் வெள்ளைப் படகில் துடுப்பு வலித்துக்கொண்டிருக்கும் வெள்ளைப் பெண் அன்னியசின் காதுகளில் மென்மையின், காதலின், ஈரத்தின் உச்சமாக வெளிப்பட்டு முடிவடைகிறது.

பொன்ராசுவின் சவ அடகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில், பொன்ராசுவின் மகனின் வீட்டிற்கு வரும் அன்னியஸ் ஒரு பொதியினை பொன்ராசுவின் மகனிடம் கொடுத்து, இதனை அவரது கல்லறையில் நீங்கள் பதித்துவைத்தால் நான் அதிர்ஷ;டம் செய்தவளாவேன் எனக் கூறிச் செல்கிறாள். அவள் கொடுத்த பொதியில் கல்லறையின் முகப்பில் பதிக்கப்படும் ஒரு சலவைக் கல்லிருந்தது. அக்ல்லில் கப்பலை இயக்கப்படும் சக்கரம் பொன்னிறத்தில் பதிக்கப்பட்டு நடுவில் நங்கூரம் பொறிக்கப்பட்டிருந்தது. பிரஞ்சு மரபுப்படி கப்பல் தலைவர்களின் கல்லறைகளில் இத்தகைய சலவைக்கல் பதிப்பது மரபு என்று கதை சொல்லி வாசகர்களிற்கு அறியத் தந்த மாத்திரத்தில் பொன்ராசுவின் இளைய மகன் தனது சகோதரனின் கையில் இருந்த சலவைக்கல்லைப் பிடிங்கி எறிந்து உடைத்து உதைத்துத் தள்ளுகிறான்.

அன்னியஸ் குடுத்த சலவைக்கல்லின் தார்ப்பரியத்தைப் புரிந்து கொள்ளுவதற்கு கதைசொல்லி எமக்கு விளக்கம் தரவேண்டி இருந்தது. ஆனால் பொன்ராசுவின் மகனின் நடத்தை எமக்குத் தானாகப் புரிந்து கொள்கிறது. அதாவது அத்தகைய சலவைக்கல்லினைப் பதித்து வைத்தால் சனம் தம்மைக் 'கரையார்' என்றல்லவா நினைப்பார்;கள் என்ற வசனத்திற்கு எந்த மேலதி விளக்கத்தையும் வாசகர்கள் எதிர்பார்க்கப்போவதில்லை. எனினும், இந்தச் சலவைக் கல்லு விவகாரத்திலும் கூட, வெளிப்படைக்குத் தெரியும் இழுபறிக்குள்ளால் ஒரு இரண்டாம் தட்டு விவாதம் சாத்தியம். அதாவது, ஒரு சமூகம் பெருமையாகக் கருதும் இலச்சினை பதித்த சலவைக்கல்லை அன்னியஸ் பாத்திரம் கொடுக்கையில் ஈரலிக்கும் வாசகரது மனங்கள், அதே சலவைக்கல்லுச் சின்னம் இன்னுமொரு சமூகத்திற்குள் சிறுமையாகப்பார்க்கப்படும் என்ற கிறிஸ்ற்றியின் எதிர்ப்பினைக் குரூரமாக நோக்குகிறது. இதில் இரண்டு விடயங்களை அவதானிக்கலாம்: ஒன்று, ஓரே கல்லிற்கு இரு நேரெதிரான பெறுமதிகள் சாத்தியம். இரண்டாவது, கப்பல் தலைவர் என்ற பதவி கேட்டுக் கேள்வியின்றி பெருமையாக எந்த விவாதமுமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு கரையார் என்பது சிறுமை என்பதில் மட்டும் அது சிறுமை தானா என்ற விவாதம் வாசகருள் எழுகிறது. எது சிறுமை என்று சித்தரிக்கப்படுகின்றது என்பதில் மட்டும் கவனம் செலுத்துவதால் அடக்குமறைகளை வென்று நீக்கிவிடமுடியாது. பெருமைகள் தொடர்பிலும் அவதானம் அவசியம்.

இனினும் இக்கதையினைப் பொறுத்தவரை அன்னியஸ் கப்பல்தலைவர்களின் கல்லறையில் பதிக்கப்படும் சலவவைக்கல்லைக் கொடுத்தமை, சமூகத்தின் அளவீட்டில் கப்பல் தலைவர் உத்தியோகம் உயர்ந்தது என்ற அடிப்படையில் அல்ல. மாறாக, அவர்களது அறிமுக சந்திப்பில், அன்னியசின் வெள்ளை ஓடத்திற்குள் ஏறுவதிலேயே பலத்த சிரமத்தைக் காட்டி பொன்ராசுவிற்காக அன்னியஸ் சிலுவைக்குறி இட்டுக்கொள்ளும் அளவிற்கு ஓடம் பற்றி எதுவுமே தெரியாதவராக இருந்த பொன்ராசு தோணிக்குள் ஏறியதும் தன்னைக் 'கப்டன்' என அன்னியசிற்கு அறிமுகப்படுத்திக்கொண்டார். அன்னியசிற்கும் பொன்ராசுவிற்கும் இடையில் மொழிப்பிரச்சினை பலமாக இருந்தது. இருந்தும், முரடன் பொன்ராசுவால் தனது அகத்தின் மெல்லிய உணர்வுகளை அன்னியசிற்கு விளக்க முடிந்திருந்தது. முரடன் பொன்ராசுவின் கல்லறைக்காக அன்னியஸ் கொடுத்த பதிகல்லில் அவள் அவரை கப்டனாக ஏற்றுக்கொண்டமை வெளிப்படுவதே வாசகரின் ஈரலிப்பின் அடிப்படை.

சுருவிலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முரடனும் குரூரத்தின் சின்னமான தோடும் வெள்ளைக்காரியில் மென்மையாய் ஈரமாய் முடிவடைவது ஒருவேளை சுருக்கென்று ஆருக்கேனும் குத்தலாம். ஆனால், வெள்ளைக் கலாச்சாரத்தில் எங்களை மீளப் பிறந்தவர்களாக நாங்கள் பல சமயங்களில் உணர்வது தவிர்க்கமுடியாததே. சுயவிசாரணைகளிற்கான பாத்திகளாகப் பல சமயங்களில் வெள்ளைக் கலாச்சாரம் புலப்பெயர்வைத் தொடர்ந்து எமக்குள் ஒரு வகிபாகம் வகிக்கவே செய்கிறது. மூலக் குணம், பெரிது சிறிது என்று இல்லாவிடினும் மீள் வாசிப்புக்கள் புதிய சூழல்களில் தவிர்க்க முடியாதனவே.

'ஒரு தீயணபை;புப் படைவீரனினதும், ஒரு சீன வியாபாரியினதும் கல்லறைகளிற்கு நடுவே சிறு செடிகளும் புற்களும் முளைவிட்ட அந்தக்கல்லறை இருக்கின்றது. அது கல்லறை என்பதற்கான எந்தத் தடயங்களும் இல்லை' என்ற முடிவில், மேல்தட்டில், சிறுமை பெருமை சாதியம் வரட்டுக் கவுரவம் முதலிய வழுக்களால் ஒரு மனிதனின் கல்லறையே கல்லறை என்று அடையாளப்படுத்த முடியாதபடி கிடக்கிறது என்ற வெளிமனதின் ஆதங்கமும், உள்த்தட்டில், வாழ்வு சாவு பதவி அடையாளம் மூலக்குணம் என்பன பற்றிய உள்மனதின் வாசிப்புக்களும் பதிவாக்கப்பட்டிருப்பது சிறப்பு.

கதை பிடித்திருக்கிறது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

கதை பிடித்திருந்தது. ஆனால் ஏன் பிடித்தது என்பது இன்னுமொருவன் பதிவைப் படித்த பின்னர்தான் புரிந்தது! கதை வாசித்தபின்னர் எழும் சிந்தனையோட்டங்களை எழுத்தில் கொண்டுவந்த இன்னுமொருவனின் திறமை உண்மையிலேயே வியக்கவைக்கின்றது!

உங்கள் பார்வையூடாகவே கதைக்குள் சென்றேன். உங்கள் அவதானிப்புகளும் கதையில் இருந்து உங்கள் சிந்தனை பரந்து செல்வதும் ஆரோக்கியமாக இருக்கின்றது. தொடருங்கள்

/// அன்னியஸ் கொடுத்த அந்தப் பொதியை பொஸ்கோ அவதானமாகப் பிரித்தான். அது கல்லறையின் முகப்பில் பதிக்கும் சதுரவடிவிலான கறுப்பு நிறச் சலவைக் கல். அந்தக் கறுப்புக் கல்லில் கப்பலின் சுக்கானை இயக்கப் பயன்படும் சக்கரம் பொன்னிறத்தில் பொறிக்கப்பட்டு அதன் நடுவில் நங்கூரம் பொறிக்கப்பட்டிருந்தது. கப்பல் தலைவர்களது கல்லறைகளில் இந்தச் சின்னமிட்ட சலவைக்கல்லைப் பதித்து வைப்பது பிரஞ்சுக்காரர்களின் மரபு .

கிறிஸ்டி மெதுவாக எழுந்து வந்து பொஸ்கோவின் கையிலிருந்த அந்தச் சலவைக்கல்லை வாங்கித் தரையில் வீசியடித்தான். ” இதைக் கல்லறையில் பதித்தால் பார்க்கும் சனங்கள் எங்களைக் கரையார் என்றவல்லா நினைப்பார்கள்” என்று அவன் கத்தினான். இரண்டு துண்டாக உடைந்துகிடந்த அந்தச் சலவைக்கல்லை கால்களால் எத்திவிட்டான். கில்டா பதறிப்போய் ஓடிவந்து தம்பியாரின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். “வேண்டாமென்றால் விட்டுவிடு அதற்கு ஏன் இப்படிக் கோபப்படுகிறாய்” என்று அவள் பதற்றத்தடன் கேட்டாள். கில்டாவை உதறித்தள்ளிய கிறிஸ்டி ஒரே பாய்ச்சலில் அங்கிருந்து வெளியேறினான். அவன் கதவை அறைந்து மூடிய வேகத்தில் சன்னல்கள் சடசடத்தன.

ஒரு தீயணைப்புப் படைவீரனின் கல்லறைக்கும் ஒரு சீன வியாபாரியின் கல்லறைக்கும் நடுவாகச் சிறுசெடிகளும் புற்களும் முளைவிட்ட அந்தக் கல்லறை இருக்கிறது. அது யாருடைய கல்லறை என்பதற்கான தடயங்கள் ஏதுமில்லை.

அடுத்த வேனிற்காலத்தில் திபோ ஆற்றில் வெண்ணிறமான சிறிய படகில் தனியாகத் துடுப்பு வலித்துச் சென்றுகொண்டிருந்த அந்தப் பெண்மணியின் முகத்தில் வெயில் பட்டபோது அவளது காதுகளிலிருந்த நீலக் கற்கள் பதித்த தோடுகள் பளீரென மின்னின. ///

ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இந்த கதையின் இறுதிப்பகுதிகள் வாழ்ந்த தடயங்களற்றவர்களாக வாழ்வு முடிந்து போவதின் சுட்சுமத்தை சொல்ல முற்படுகின்றது. சிறுமையும் பெருமையும் எது என்ற புரிதல் அற்ற நிலையில் அவைகள் அர்த்தமற்றவைகள் பெறுமதியற்றவைகள் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் வலிகள் நிறைந்த பெருவாழ்வும் அற்தமற்றதாகவே அடயாளமற்றதாகவே மறைகின்றது. இது ஒரு நீண்ட பதிவுக்குரியது, இருந்தும்.

கதை பிடித்திருந்த அளவு இன்னுமொருவனின் விமர்சனமும் பிடித்திருக்கு.இவ்வளவு துல்லியமாக வரிக்கு வரி உணர்ந்து நான் கதை வாசிப்தில்லை.வாசிக்கும் போது அது என்னை உள்வாங்கி,அதை வைக்க மனமில்லாமல் மனுசி பேசப்பேச வாசிக்க வைக்க வேண்டும் .யாழிற்கு வரும் வரை வாசிப்பென்பது பெரும்பாலும் என்னுடனும் சில வேளைகளில் எனதுமனைவி ,பெற்றோர்,சகோதர்களுடன் முடிந்துவிடும் ஒன்றாக இருந்தது ,இப்போ பல தரபட்ட விமர்சனக்களையும் வாசிக்கும் போது மிக சந்தோசமாக இருக்கின்றது.

நாம் எழுத்தைவிட எழுத்தாளன் யாரென்று கூடுதல் அக்கறை செலுத்துவதால் நியாயமான ஒரு விமர்சனம் வைக்க எம்மவர் பலரால் முடியாமல் இருக்கின்றது .

ஆனந்தவிகடனில் "நானும் விகடனும் "என்றொரு பகுதி பிரபலங்களை வைத்து வரும் .அதில் பெரும்பான்மையோரின் ஆதர்ச எழுத்தாளர் ஜெயகாந்தன் தான் .அவரையே இவனெல்லாம் ஒரு எழுத்தாளனாஎன கேட்பவர்கள் தானே நாம் .

  • தொடங்கியவர்

கிருபன் சுகன் அர்யுன் உங்களது வருகைக்கும் கருத்துக்களிற்கும் மிக்க நன்றி. சில கதைகளைப் படித்தால் அதைப் பற்றிப் பேசவேண்டும் என ஒரு உந்துதல் தானக எழும். இக்கதையும் அப்படியே இருக்கிறது.

Edited by Innumoruvan

கப்ரன் வாசித்த பின் நிச்சயம் பதில் எழுதுகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது நண்பன் ஒருவர் சொல்லுவார், ஒருவரோடு 10 - 15 நிமிடம் , அவரது துறையை பற்றி கதைத்தால், அவர் அந்த துறையில் எந்தளவு பாண்டித்துவம் ஆனவர் என்று சொல்லமுடியும் என்று. ஆனாலும் எதோ இன்னுமொருவனின் பலபதிவுகளை பார்த்தும், பொதுப்படையில் ஆழமானவர் என்று தெரிந்தும், எதோ ஒன்று இல்லாதது போன்று எனக்கு தெரிந்து. உண்மையிலேயே நிறைவான அலசல். வேறு யாருக்கும் தோன்றியதோ தெரியாது, நான் யோசித்தது, இந்த தலையங்கத்தை பார்த்தபோது, முன்னர் இணைத்த கதையை மீள இணைக்கிறார் மச்சான் என்று. ஆனால் கதையின் விமர்சனத்தை கதையளவு எழுதியவர் பாராட்டுக்குரியவர். அதேநேரத்தில், உங்களையும் எங்கள் காதலர் கட்சியில் இணைய வருமாறு அழைக்கிறேன். என்ன இப்படியான ஒருவருக்கு சமூகம் கொடுக்கும் அந்தஸ்து அலம்பல், கப்டன், அல்லது காதலி கொடுக்கும் நினைவுக்கல். அதையும் தாண்டி, ஒவ்வொரு உயிரும் தனித்துவமானது, அந்த தனித்துவம் அது அது விரும்பிகிற வழியில் போனவேண்டும், அல்லது அப்படி பேணினால், உலகில் அரைவாசி பிரச்சனைகள் தீர்ந்துவிடும் . ஆனால் இன்னுமொரு அரைவாசி கூடும் என்கிற குரலும் கேட்கத்தான் செய்கிறது.

260623_727555640_1949029492_q.jpg

Shaseevan Ganeshananthan கொண்டோடியின் ஒரு குறிப்பு. இதுவும் மாமல்லனுக்கு உபயோகப்படலாம்.

/

//பொன்ராசா அதைவிட அலட்டலாகப் பதில் சொல்வார். மண்ணில் படம் வரைந்து யாழ்ப்பாணத்தில் எந்த எந்த இடத்தில் புலிகளின் முகாம் இருக்கிறது, எங்கே புலிகளின் தலைவர் இருக்கக் கூடும், குறிப்பாகக் கடற்புலித் தளபதி சூசை இப்போது எங்கேயிருக்கக் கூடும் என்று கடற்படையினருக்குப் பொன்ராசா விளக்கினார்.//

கதையில் இன்னொரு தகவற்பிழை. சம்பவம் நடந்த காலப்பகுதியில் கடற்புலிகள் பிரிவு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கவில்லை. ஆகாய கடல்வெளி சமரின் பின்னரே கடற்புலிகள் பிரிவு தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு கடற்புறா என்ற பெயரிலேயே ரு பிரிவு இருந்தது. ஆனாலும் அதற்கும் தளபதி சூசைக்கும் எத்தொடர்பும் இருக்கவில்லை. கதை நடக்கும் காலப்பகுதியில் தளபதி சூசை தீவகத்துக்கான பொறுப்பாளராக இருந்தார்.

/

Shaseevan GaneshananthanVimaladhitha Maamallan Rajan Kurai Krishnan ஒரு தவறைச் சுட்டிக் காட்டப் போய் கதையில் ஏராளமான தவறுகளை பலர் கூறியுள்ளார்கள்.

1. ஆட்லறி என்ற பெயர்க்குழப்பம்.

2. புவியியல் அமைவு தொடர்பான விடயம்

3. காலநிலை, காற்று தொடர்பான விடயங்கள்

4. கடலனுபவம் தொடர்பான விடயம்

5. கடற்புலித் தளபதி தொடர்பான விடயம்.

இவற்றை ஒரு எடிட்டரால் சரிசெய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நிச்சயமாக குறித்த காலப்பகுதியில் அப்பிரதேசத்தில் வாழ்ந்த ஒருவருக்கு இக்கதையின் உள்ளேயே புக முடியாது போலுள்ளது. ராஜன் குறை மற்றும் விமலாதித்த மாமல்லன் ஆகியோர் இவ்விடயங்களைத் தொடர்ச்சியாக அவதானித்துக் கொண்டிருப்பார்கள் என நம்புகின்றேன்.

Parani Krishnarajani இங்கு இது புனைவா அல்லது ஒருவரின் அரசியலா என்பதை தயவு செய்து என்னைமாதிரி அறிவு குறைந்தவர்களுக்கு யாராவது விளக்கினால் நல்லது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுகையில் "பாதுகாப்பு வலயம் என்று தாமே அறிவித்த பகுதிக்குள் அரச படையினர் மோசமான பீரங்கித்தாக்தல்களை நடத்தி பொதுமக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தினார்கள்" என்று தொடர்கிறது.. இந்த குறிப்பான கேள்வி தொடர்பாக ஒரு முறை ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போது பாலித கோகன்ன புலிகள் அந்த பகுதிக்குள் இருந்து முன்னணியில் நிலைகொண்டிருந்த படையினர் மீது ஆட்லறி தாக்குதல்களை நடத்தினார்கள் என்றும் அதனால் திருப்பி தாக்கும் போது பொது மக்களுக்கு இடையூறு சிறிதளவில் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். இதுவாவது பரவாயில்லை இதே கேள்விக்கு அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அந்த தாக்குதல்களை புலிகள்தான் நடத்தியதாக கூறினார். ஆட்லறி என்ற எறிகணைசெலுத்தியின் சுடுதிறன், சூட்டு வீசு;சு எல்லை குறித்த எந்த புரிதலும் இல்லாமல் 2 கிலோமீற்றருக்குள் பல இலட்சம் மக்களுடன் முடங்கியிருந்த புலிகள் மீது குற்றம் சுமத்தி சிறீலங்கா அமைச்சர்கள் இப்படி உளறினார்கள். நாளைக்கு சோபாசக்தியும் தான்தோன்றித்தனமாக இப்படி உளறிக் கொட்டும் போது (போற போக்கைப் பார்த்தா கொட்டுவார் போலதான் கிடக்கு) நாம் அவற்றை பார்த்து கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று கூறும் அறிவுரைகளை சகிக்க முடியவில்லை. ஏனெனில் அந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் மீது விழுந்த எறிகணைகள் எந்த ரகம் என்பதும் யார் அதைச் செலுத்தியது என்பதும்தான் நாளை ஒரு இனத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது.

எனவே ஒரு இனப்படுகொலை - இனச்சுத்திகரிப்பு தொடர்பான ஒரு விடயத்தை தனது எழுத்தின் வன்மையால் - அழகியலால் ஒருவர் திரிக்க முற்படுவதை அந்த படைப்பின் அழகியலை முன்னிட்டு சகித்துகொள்ள வேண்டும ;என்பது எந்தவகையான இலக்கிய மதிப்பீடு.? ( அதற்குள் அழகியல்ரீதியாகக் கூட புகழ்வதற்கு ஒன்றும் இல்லை எனபது வேறு ஒரு அம்சம். இங்கு அதை முதன்மைப்படுத்தவில்லை)

அவதுர்றுகளின் காழ்ப்புகளின் மையமாக இவரது படைப்புக்கள் இருக்கிறது என்பதை தமிழக மடடத்தில் ஏன் பலர் புரிய மறுக்கிறார்கள் என்பதை விளங்க முடியவில்லை. உதாரணத்திற்கு இதே கதையில் ஒரு அம்சம். நீண்டகாலமாக சோபாசக்தியின் குற்றச்சாட்டுக்ககளில் ஒன்று புலிகள் ஆதிக்கசாதிக்கு ஆதரவானவர்கள். சாதிவிடுதலையை புலிகளின் போராட்டம் நீர்த்துப்போக செய்கிறது என்று பல குற்றச்சாட்டுக்கள். பலர் ஆதராங்களுடன் இதை மறுத்தபோது மழுப்;பலான பதில்கள். புலிகளின் தலைவர் தலித் என்ற வாதம் முன்வைக்கப்பட்டபோது அவரின் சாதி ஈழத்தை பொருத்தவரையில் ஆதிக்கசாதி என்று கூறுபவர் இவர்.

ஆனால் இங்கு மனுவேல் பொன்ராசாவின் மகன் அந்த சாதியை சொல்ல வெட்கப்படுவதாக புனைந்துள்ளார். ஆதிக்கசாதியை அடையளப்படுத்துவதில் ஏன் அந்தச்சாதிக்காரன் வெட்கப்படவேண்டும். இப்போது பிரபாகரன் யாh? தலித் தலைவனா? இல்லை ஆதிக்க சாதிக்காரனா? படைப்பில் நுட்பமாக அவதூறு மையம் கொள்ளும் இடம் இது. இக்தையில் குழப்பமான ஒரு இடம் இது. உலகத்தரம், கிளாசிக் என்பவர்கள் விளக்கினால் தெரிந்து கொள்ளலாம:.

Shaseevan GaneshananthanThirumavalavan Kanagasingam கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் திருமாவளவனின் கருத்தொன்று இவ்விடயத்துடன் தொடர்புபடுவதால் இத்தொடுப்பில் இடுகின்றேன்.

/ கனடாவுக்கு புலம்பெயர்ந்து அகதிவிண்ணப்பம் கோரியவர்கள் முதல்சந்திகும் நபர் ‘இன்டப்பிரிட்டர்’. அதாகப்பட்டது பொழிபெயர்ப்பாளர். இவர்கள் வக்கீலுக்கும் அகதிவிண்ணப்பம் கோருபவர்களுக்கும் இடையில் செயல்படும் இடைத்தரகர்கள் கும் கதைசொல்லிகள். இவர்கள்தான் வழக்குக்கான கதையை சொல்வார்கள். இவர்கள் சொல்லும் கதையில் இரண்டு பத்திரங்கள் கட்டாயம் இருக்கும் ஒன்று புலி. முற்றது ஆமி இந்த இரண்டும் அவரது வில்லன்களாக இருப்பார்கள். அவ்வளவுதான் அதை விண்ணப்பதாரி மனப்பாடம் செய்வார். கதையை பிழையற ஒப்புவித்தால் வழக்கு வெற்றி.

ஷோபா சக்தியின் கப்டன் கதையைப் படித்தபோது இவர்கள்தான் நினைவுக்கு வந்தது. என்ன அருமையான கதைசொல்லிகள். வெறும் 200 டாலர் பணத்தோடு அவர்கள் சொன்ன ஆயிரமாயிரம் கதைகள் கிடப்பில் போய்விட்டது. புத்த்தகமாகப் போட்டிருந்தால் இப்போ யாரும் கப்டன் கதைபற்றி பேசமாட்டார்கள். “ஷோபாஜீ” யும் அதை எழுதியிருக்க மாட்டார். /

அசைலம் கோருபவருக்காக வழக்காடுபவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை பகிரங்கப்படுத்தினால் சிலவேளை பலருக்கு புதிதாக இருக்கக்கூடும்.

Friday at 20:14 · LikeUnlike

  • 260623_727555640_1949029492_q.jpg

    Shaseevan Ganeshananthan கொழுவி எனது வலைப்பதிவில் இட்ட கருத்தை இங்கே பதிவிடுகின்றேன்.

    / இந்தக் கதை சுவாரசியமான ஒரு "கதை". இதனை உலக இலக்கியம் என்று சொல்பவர்களைப் பார்த்தீர்களானால் புரியும். அவர்களுக்கு இந்தக் கதையின் களம் புதியது. கோட்டை, சண்டை, ஆட்லறி இவையெல்லாவற்றையும் படிக்கிறபோது புதிய அனுபவம் பீறிட்டுக் கிளம்பத்தான் செய்யும். உதாரணத்திற்கு முதலாம் இரண்டாம் உலகப்போர் சமயங்களில் நடந்த கதைகளைப் படிக்கிற போது இருக்குமே.. அப்படியாக.. சோளகர் தொட்டி படித்தபோது இருந்ததே.. அப்படியாக..

    இப்படியான இலங்கை போர்ச் சூழல் அனுபவங்களை சொல்லுகிற கதைசொல்லிகள் இலங்கைச் சூழலில் பெரிதாக யாருமில்லை என்பதுவும் அவரது எழுத்துக்கள் ஜொலித்துத் தெரிவதற்கு காரணமாயிருக்கின்றன.

    அண்ணன் கொண்டோடி சொன்னதுபோல - ஆனையிறவுச் சண்டையின் தோல்விக்குப் பிறகே கடற்புலிகளின் தேவை உணரப்பட்டு அப்படையணி கட்டப்பட்டது. அதற்கு முன்னர் கடற்புறாக்கள் - தனியே கடல்வழி விநியோக வழிகளை மட்டுமே பார்த்திருந்தார்கள்.

    சரி விடுங்கள்.. புலிகளின் மல்ரிபரல்கள் (பல்குழல் பீரங்கிகள் - செக்கனுக்கு 16 முதல் 32 வரையான குண்டுகளை வீசவல்லது) கோட்டைச் சுவரைச் சல்லடையாக்கிக் கொண்டிருந்தன என அவர் எழுதாதையிட்டு சந்தோசப்படுவோம்.

    முன்னர் அ.முத்துலிங்கம் ஒரு கதை எழுதியிருந்தார். அதுவும் கோட்டைச் சண்டையைப் பற்றியதுதான். அதில் பெண்போராளியொருத்தி கிரேனைட் கிளிப்பைக் கழட்டி 2 நிமிடங்கள் வைத்திருந்து எறிந்தாள் என்றேதோ வரும். பாவம் அவருக்கு இயக்கத்தையும் தெரியாது துவக்கையும் தெரியாது. கற்பனையில் எழுதிவிட்டார். இவருக்குமா../

முகனூற் குறிப்புக்களின் தொகுப்பு.

Shaseevan GaneshananthanMeenakshipuram Deivakumar Muthukumaraswamy இவ்வுரையாடல்களைத் தொடர்ச்சியாக அவதானித்து வருபவர் என்ற ரீதியில் தனது கருத்தை மிகத்தெளிவாக இட்டுள்ளார் எம்.டி.எம் அவர்கள். யதார்த்தவாதக் கதை சொல்லல் முறையில் ஏற்படும் தகவல் பிழைகள் இறுதியில் அவற்றை வெறும் அரசியல் பிரதிகளாக வரலாற்றில் விட்டுச் செல்லும் என்ற விடயத்திற்கு வந்தடைகின்றார்.

/ விமலாதித்த மாமல்லன் நீங்கள் இதைத்தொடர்ந்து எழுதிய மேலும் இரண்டு பதிவுகளையும் நான் படித்தேன். ‘கதை’யின் நம்பகத்தன்மையினை அறுதி செய்ய நீங்கள் இவ்வளவு மெனக்கிட்டுருக்க வேண்டியதில்லை. ஏனெனில் சசீவன் அந்தக் கதையில் வேறு பெரிய வரலாற்று ஊழல்கள் ஏதுமில்லையென்றே கூறிவிட்டடார். ‘கப்டன்’ கதை ராணுவ சிறை புலி சிறை ஆகியவைகளிடையே ஒரு ஒப்புமையை வைப்பதன் மூலம் ஆசிரியரின் புலி எதிர்ப்பு அரசியலை வெளிப்ப்டையாக முன் வைக்கிறது. இதை கட்டவிழ்த்து கதையினை அதன் ஆசிரிய குரல் முன்வைக்கும் அரசியலுக்கு எதிராக மீட்டெடுக்கலாம். ரானுவ சிறையிலிருக்கும்போது ‘கப்டன்’ அவர்களின் கேளிக்கை சமயத்தில் புலிகள் தாக்கினால் எளிதாக அவர்கலை வெற்றி கொள்ளலாம் என்று நினைக்கிறான். சிங்கள ராணுவத்திற்கு எதிரான ரகசிய வேட்கையாகக் கொள்ளலாம். இந்த ரகசிய வேட்கையும் அதனால் உருவாகிற நனவற்ற தன்னடையாளமும் மீண்டும் அவன் தன்னை கப்டன் என்ற புலிகள் வழங்கிய அடையாளத்தைக் கூறி அன்னியசின் படகில் ஏறும்போது நிச்சயமாகிறது. அந்த அடையாளதை அங்கீகரிப்பதன் மூலமாகவே அவர்கள் இருவருக்கிடையில் உறவு மலர்கிறது. அந்த அங்கீகாரத்திற்கான பரிசாகவே கப்டன் தான் பொக்கிஷமாக பாதுகாத்த நீலக்கல் தோடுகளை அன்னியசிற்குக் கொடுக்கிறான் என்று மேலும் வாசிக்கலாம். கப்டனின் மரணத்தில் அவன் தன்னை புலிகளோடு ரகசியமாக அடையாளம் கண்டதும் அழிகிறது, அவன் ரகசிய அடையாளம் அறிந்த அன்னியஸ் அதை அவனுக்கான கல்லறைக் கல்லில் எழுதி வர அந்த அடையாளத்தினை அடுத்த தலைமுறையினர் நிராகரிக்கின்றனர். கடைசியில் கப்டனின் உள்ளார்ந்த ஆசை நீலக்கல் தோடுகளாக ஒரு ஐரோப்பிய (இத்தாலிய?) விதவையின் காதுகளில் பிரகாசிக்கிறது. அதாவது இவ்வாறான தான் வெளிப்படையாக முன் வைக்கும் அரசியலுக்கு எதிரான வாசிப்பை சாத்தியப்படுத்துவதால்தான் ‘கப்டன்’ கதை இலக்கிய பிரதியாக மாறுகிறது. இலக்கியப்பிரதிகளின் மொழிச்செயல்பாடே இவ்வாறாக யதார்த்தவாதத்தின் மொழிக்கொள்கைக்கு எதிராக இருப்பதால் உண்மைக்கதையென்ற சான்றிதழ் இலக்கியப்பிரதியினை அனுமானிக்க தேவையில்லை. ஆனால் ஆர்டிலரி பற்றி சசீவனும் இதர நண்பர்களும் குறிப்பிட்டு எழுதியது போர்க்காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு முக்கியமான பயம், பீதி ஆகியவற்றின் குறியீடு. இரண்டே இரண்டு பீரங்கிகளை புலிகள் கைப்பற்றியது அதனால் மிகப்பெரிய நம்பிக்கையின் குறியீடாக எதிர் உருவம் பெற்றிருக்கிறது. புலிகளும் சிங்கள ராணுவத்தினரும் சம்பலத்தினர் அல்லர் என்பதும் புலிகளின் யுத்தம் அவர்களின் புத்திசாலித்தனத்தினையும் சமூகக்கட்டுக்கோப்பினையும் சார்ந்தே இருந்திருக்கிரது என்பதினையும் ஆர்டிலரி பற்றி சசீவனும் நண்பர்களும் எடுத்துரைத்ததிலிருந்து நான் அறிந்துகொண்டேன். போர்க்கால சமூக அனுபவத்திற்கும் வரலாற்றிற்கும் மையமான ஒரு விடயத்தில் ஷோபாசக்தியின் கதைப்பிரதி பிழையுள்ளதாக இருப்பதால் கதை வலுவிழந்து வெற்று அரசியல் பிரதியாகிறது என்ற வாதம் நியாயம்தான் என்று எனக்குப்படுகிறது. /

23 hours ago · LikeUnlike· drP8vlvSl_8.gif 1

  • 260623_727555640_1949029492_q.jpg

    Shaseevan Ganeshananthan கொண்டோடியின் இன்னொரு கருத்தையும் கீழே இணைக்கின்றேன். கொண்டோடி 1995 - 2004 வரை புலிகள் இயக்கத்தில் இருந்தவர். அதுமட்டுமல்லாது 'ஜெயசிக்குறு' சண்டையில் பங்குபற்றியுமுள்ளார்.

    / கொழுவி,
    அ.முத்துலிங்கம் எழுதிய கதை இப்போதும் நினைவிருக்கிறது. அதிலே, 'அவள் கிளிப்பைக் கழற்றி குண்டை மேலே எறிந்துவிட்டு அக்குண்டு கீழே வரும்போது பிடித்து மீளவும் கிளிப்பை மாட்டிவிடுவாள். அவ்வளவு துணிச்சற்காரி' எண்டு எழுதியிருந்தார். ஏதோ கலைஞ்ச முடியைப் பிடிச்சுக் கிளிப்பை மாட்டிற மாதிரி அந்தாள் கதை சொல்லிக் கொண்டு போகுது. எட கூகிளிலை தட்டிப்பாத்தாலே ஒரு கையெறிகுண்டு எப்பிடித் தொழிற்படுது எண்டு பார்க்கலாம். சும்மா நாலு செக்கனுக்குப்பிறகு வெடிக்கும் எண்ட தகவலை வைச்சுக்கொண்டு (அதுகூட தமிழ்ச்சினிமா பாத்துத்தான் அ.மு. அறிஞ்சு வைச்சிருப்பார்) ஒரு கதையையே கட்டமைக்கிற கயமைத்தனத்தை என்ன சொல்ல? ஆனால் சோ.ச. முந்தி குண்டு தூக்கி அடிபட்ட காயெண்டபடியால் உப்பிடி அ.மு. மாதிரி லூசுத்தனமா எழுதமாட்டார். ஆள் றிவோல்வர் காலத்திலயே புரட்சிசெய்யப் புலமேகியதால இயக்கத்தையும் போராட்டத்தையும் பற்றி சரியான அப்டேட் இல்லாமல் அல்லற்படுறார். அவ்வளவுதான் பிரச்சனை.

    ஆனா உந்த இந்திய இலக்கியவாதிகளுக்கும் வாசகனுகளுக்கும் உப்பிடியான கதையள் கிளுகிளுப்பாத்தான் இருக்கும். கிரனைற் எண்டா நாங்கள் கையெறிகுண்டு நினைப்பம், அவங்கள் கிரனைற் கல்லைத்தான் நினைப்பாங்கள்.

    சோபாசக்தி, அ.முத்து போன்றவர்களுக்கு கொண்டோடியின்ர ஒரு அட்வைஸ் என்னெண்டா, நீங்கள் ஈழத்தாருக்கு ஒரு வேர்சனும், இருபது வருசத்துக்கு முந்திய புலம்பெயர்ந்த புலத்தாருக்கு ஒரு வேர்சனும் இந்தியாக்களுக்கு ஒரு வேர்சனும் எண்டு மூண்டு வேர்சனா எழுதினா நல்லது, எங்கட கிருத்திகன் குமாரசாமி முந்திச் செய்தமாதிரி;-).
    உந்தக் கப்டன் கதையைக்கூட ஈழ வேர்சனில பசீலன் எண்டும், இந்திய வேர்சனில ஆட்லறி எண்டு எழுதியிருந்தா ஒரு பிரச்சினையுமில்லை.

    எங்க நாங்கள் சொல்லிறைக் கேக்கிறாங்கள்? /

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்னுமொருவனின் விளக்குமாற்றுக்கு குஞ்சங்கட்டி அழகு பார்க்கும்... செயல்..! விளக்குமாறு.. எப்படித்தான்... குஞ்சங்கட்டிக் கூட்டினாலும்... குப்பையை தான் அதிகம் கொண்டு வந்து சேர்க்கும்...! சோபாசுத்தி எதை எழுதித் தொலைத்தாலும்.. அதுக்குள்ள.. பொய்.. முரண்பாடு.. புலிக் காய்ச்சல்.. சாதிக் குலப்பன் இல்லாமல் இருக்காது. இவை அனைத்தும் ஒரு சமூக முன்னேற்றத்திற்கு தடையான காரணிகள்.

பிரபஞ்சத்தை கடவுள் படைச்சிட்டார் என்று அதை ஆராயாமல்.. கிடக்கிறதும் சரி.. சோபாசுத்தியை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு அவரே ஈழ எழுத்தாளர்களின் அவதார புருஷர் என்று சொல்லிக்கிட்டு திரியுறதும் ஒன்று தான்..!

ஏன் இன்னுமொருவன்.. உதுகள.. இவ்வளவு "நுணுக்கமாக" ஆராயுற நீங்க... உதுகளில மிணக்கடுற நேரத்துக்கு.... போராட்டம் பற்றிய நியாயங்களை சொல்லக் கூடிய.. ஒரு நுணுக்கமான படைப்பை தரலாமே..! உபயோகமா இருக்கும்..! :icon_idea:

இப்ப எல்லாம் சோபாசுத்தின்னு தலைப்பில போட்டாலே போதும்.. யாழில.. ஒரு குழுமம் ஆட்கள்.. எங்கிருந்தாலும் ஆஜர் ஆகிடுறாங்க. அதுக்காக எல்லாம் இன்னுமொருவன் எழுத வெளிக்கிடக் கூடாது..! (ஜோக்ஸ்) :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

முதற்கண் இக்கதை இங்கு ஏற்கனே இணைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருப்பது தெரியாது மீண்டும் இணைத்தமைக்கு வருந்துகிறேன்.

அனைவரது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

இன்று ஓரிடம் செல்லவேண்டி இருப்பதால் உடனடியாகப் பின்னூட்டங்கள் முன்வைத்துள்ள எதிர்வினைக்குப்; பதில் எழுதமுடியாமல் இருப்பதற்கு வருந்துகிறேன். இன்று மாலை பதிவிடுகிறேன்.

  • தொடங்கியவர்

மேற்கின் புனை கதை எழுத்தாளர்கள் பலர், தமது கதைகளின் பாத்திரங்களின் பெயர்கள் தற்செயலாகக் கூட நிஜ உலகின் பெயர்களோடு பொருந்திவிடக்கூடாது என்பதற்காகப் பலத்த சிரத்தை எடுத்து, நிஜத்தில் இருப்பதற்கு மிகவும் சாத்தியப்பாடு குறைந்த பெயர்களை தமது புனைவின் பாத்திரப் பெயர்களாக உருவாக்குவதைக் குறிப்பிட்டுள்ளார்கள். இது எழுத்துத் தர்மம் என்பதற்கு மேலால் வழக்குகளின் மூலம் பணத்தை இழக்காதிருப்பதற்கு அவசியம். தவறான ஈழக்கதைகளிற்கெதிராகக வழக்குத் தாக்கல் செய்பவர்கள் இல்லை என்பதற்காக, ஈழக்கதைகளை மட்டும் எப்படியும் எழுதலாம் என்று இருக்க முடியாது. அந்தவகையில் பதிவு செய்யப்ட்டுள்ள கோபங்கள் நியாமானவையே. 'கப்டன்' கதையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகள் வரவேற்கப்படவேண்டியன.

இனி எனது பதிவிற்கு வருகிறேன். இத்தனை தவறுகள் நிறைந்துள்ள ஒரு கதையின் குறைகளை உள்ளடக்காது நிறைகளைப் பற்றி மட்டுமே எனது பதிவு பேசியுள்ளது என்ற அடிப்படையில் பின்னூட்டங்களின் விமர்சனத்தைப் புரிந்து கொள்கிறேன். இது தொடர்பில், எனக்குத் தெரிந்தவரை பின்வருவனவற்றைக் கூற விரும்புகின்றேன்,

குறைகளாககப் பின்வருவன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

1) புலிகளிடம் 1991ம் ஆண்டு ஆட்டிலறி இருக்கவில்லை

2) புலிகளின் கடல் படை 1991ம் ஆண்டு கடற்புறா என அழைக்கப்பட்டது.

3) 1991ம் ஆண்டில் சூசை தீவுப் பகுதிப் பொறுப்பாளர். கடற்படைத் தளபதி அல்ல.

4) வேலணையில் இருந்து இந்தியா வெளிக்கிட்டு நயினாதீவு சென்றடைந்தமை தொடர்பிலான: காலநிலை மற்றும் கடல் சார் தரவுகள் தொடர்பில் தவறுகள்;

5) புவியியல் அமைவிடம் சார் தரவுகளில் தவறுகள்

மேற் கூறியவையும் இன்னும் எத்தனையோ தரவுகளின் தவறுகளும் இருக்கலாம். இத்தரவுகள் தொடர்பில் எது சரியான தரவு என்று அறிந்து கொள்வதற்குப் பல வழிகள் இருக்கலாம். இப்பிழைகள் திருத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதைப் பூரணமாக ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால், இத்தவறுகளை ஒரு எடிட்டரே இருந்திருப்பினும் அந்த எடிட்டராலும் சரிசெய்யமுடியாது என்ற கருத்தோடு முற்றாக முரண்படுகின்றேன். ஏனெனில்:

மேற்படி தவறுகளைச் சார்ந்து பேசின், இக்கதையைப் பொறுத்தவரை, இதற்கு அவசியமானது மூன்றே மூன்று விடயங்கள்: முதலாவது பொன்ராசு பாத்திரத்தை ஒரு குடும்பத்தலைவனாக அவரது குடும்பத்தின் மத்தியில் அறிமுகப்படுத்தவேண்டியதோடு தனது ஊரில் பொன்ராசு எப்பிடி வாழ்ந்தார் என்பதை வாசகர் மனங்களில் பதிவு செய்வது. அடுத்தது, ராணுவ நகர்வுகளின் பாதையில் இருக்கும் ஒரு வறிய தமிழ் குடும்பத்தின் மனநிலை பதிவுசெய்யப்படவேண்டும். அடுத்தது பொன்ராசா எதிரியிடமும், புலிகளிடமும் கைதியாக இருக்கவேண்டும். கதாசிரியர் பொன்ராசுவைச் சுருவிலில் படைத்து, கதையினை 1991ம் ஆண்டில் கோட்டைத் தாக்குதலோடு தொடர்பு படுத்தி நடத்தியதற்குப் பதில் எப்படி வேண்டுமாயினும் பொன்ராசுவை கதையின் போர்க்கால நகர்ச்சிக்குள் உள்ளிளுத்து எப்படி வேண்டுமாயினும் இராணுவத்திடமும் புலிகளிடமும் கைதியாக்கியிருக்கலாம். எவ்வாறு பொன்ராசு கைதியானார் என்பது கதையின் ஆன்மாவைப் பாதிக்கப்போவதில்லை. பொன்ராசு போன்ற ஒரு தமிழ் பாத்திரம் எதிரியின் பிடியிலும் இயக்கத்தின் பிடியிலும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதைப் பதிவு செய்வது மட்டுமே கதையின் கருவிற்கு அவசியம். எங்களது போராட்ட வரலாறிலும் பாமரர்களும் வறியவர்களும் சற்று அதிகமாகப் போரின் வடுக்களைச் சுமக்கிறார்கள் என்பது முற்றிலும் பொய்யானது அல்ல. எதிரியும் புலிகளும் அருகருகே இருக்கவேண்டும் என்பதற்காகவும், பொன்ராசு தீவுப்பகுதியினை விட்டு இதர இடங்களிற்குப் பயணிக்கும் சாத்தியம் குறைவு என்பதாலும், எதிரியும் நெடுங்காலம் மக்களோடு அண்மித்து வாழ்ந்த ஒரு தளமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் கதாசிரியர் ஒருவேளை நயினாதீவினைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் இத்தளம் கதையின் ஆன்மாவைப் பாதிக்காது இலகுவில் மாற்றப்படக்கூடியது.

இன்னும் சற்று இம்முனையில் பார்த்தால், சூசை அக்காலப்பகுதியில் தீவகப்பொறுப்பாளராக இருந்திருந்தாரென்றால், பொன்ராசு பாத்திரத்திற்கு இப்பெயர் பரிட்சயமாய் இருந்திருப்பதற்கான சாத்தியம் அதிகம். சூசையினை கடற்புறாத் தளபதி என்றோ இன்னும் என்ன பதவிகளிலோ பொன்ராசு இராணுவத்திடம் வர்ணிப்பது பொன்ராசு பாத்திரத்திற்குப் பொருத்தமானது. பொன்ராசு வரைபடங்களை தலைகரணமாய் வரைந்தார், தலைவரின் முகாம் ஒரு நாள் யாழில் இன்னுமொருநாள் சாவகச்சேரியில் என வரைந்தார் என்றெல்லாம் கதையில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியான பொன்ராசா யாரை என்ன படையணியின் தளபதி என்று சொன்னாலோ, இல்லாத என்ன படையணியை உருவாக்கினாலோ இந்தக் கதையின் பொன்ராசு பாத்திரத்திற்கு அது பொருத்தமாகவே இருக்கும். இதில் ஒரு நகைச்சுவை விளைவும் பார்க்கப்படவேண்டும். பொன்ராசு என்னசெய்தார் என்று கதாசிரியர் விபரிப்பது கதாசிரியரின் அறிவீனம் என்று மட்டும் தான் நோக்கப்படவேண்டும் என்பதில்லை.

அது போல ஆட்டிலறி விடயத்தைப் பார்த்தால், புலிகளிடம் 96ம் ஆண்டைத்தொடர்ந்துதான் ஆட்டிலறி வந்ததும், வந்த ஆட்டிலறியையும் பயன்படுத்துவதில் புரியாமைகள் இருந்ததும், ஒரு சிங்கள இராணுவ அதிகாரி மற்றும் சிப்பாய் உயிருடன் பிடிபட்டபோது கூட அவர்களிடம் ஆட்டிலறி எப்படி இயக்குவது என்று கூறுமாறு கேட்போது அவர்கள் மறுக்க, சொல்லாவிடின் வெடிவிழும் என்று கூறியும் அவர்கள் மறுக்க, அதிகாரி கொலைசெய்யப்பட, பயந்த சிப்பாய் பதில் கூறிய கதை கூட--அதனால் மட்டும் தான் ஆட்டிலறி இயக்கக் கற்றுக்கொண்டார்கள் என்று சொல்வதாக எடுத்துவிடாதீர்கள்--துவக்கே தூக்கியறியாத அந்தக் காலப்பகுதியில் அங்கே இருந்திராதவர்களும் அறிந்த ஒரு விடயம். இந்நிலையில் ஏதோ கொஞ்சமோ நஞ்சமோ பயிற்சி எடுத்த சோபாசக்த்திக்கு இதை ஊர்ஜிதப் படுத்துவது பெரிய பிரச்சினையாய் இருந்திராது. ஒன்று அறழை பேர்ந்த தனம், இரண்டு வாசகரை குறைத்து மதிப்பிட்டமை, மூன்று நக்கலில் கொஞ்சம் ஓவராய் போனமை, நாலு சற்றுக் கர்வம் தலைக்கேற விட்டமை என சிலவற்றை கோட்டையில் ஆட்டிலறி பாய்ந்த விடயத்தில் நான் விளங்கிக் கொள்கிறேன். ஆனால், கோட்டையில் ஆட்டிலறி அடித்தார்கள் என்பதற்குப் பதில் கல்லெறிந்து இராணுவத்தைப் பயப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று எழுதினாலும் கூட கதையின் கருவிற்கு எந்தக் கெடுதலும் வராது என்பதைப் பதிசெய்தேதீரவேண்டும். இங்கு கதைக்கு அவசியமானது இராணுவ நகர்ச்சிப் பாதையில் பொன்ராசு குடும்பம் இருக்கவேண்டியது மட்டுமே. எனவே மேற்படி தவறுகள் ஒரு எடிட்டரால் திருத்தப்பட முடியாதன என்பது என்னைப் பொறுத்தவரை அறவே ஏற்புடையதல்ல.

இந்த ஆட்டிலறி விடயத்தில் இன்னுமொன்றைப் பதிவு செய்யவேண்டும். எத்தனை பேர் வேண்டுமாயினும் தங்களிற்குப் புலிகளின் உள்விடயம் எல்லாம் அத்துப்படி என்று பீத்திக்கொள்ளலாம். ஆனால் ஒரு இராணுவ அமைப்பிற்குள் இருக்கும் இராணுவ தளபாடங்களின் விபரம் பொது மக்கள் அறிந்திருக்கவேண்டியதில்லை. எப்போ என்ன ஆயதம் தங்கள் இராணுவத்திடம் வந்தது என்பதை மக்கள் போராட்டச்சூழலில் அறிந்திருக்கத் தேவையில்லை. மேலும், யார் கதை எழுதினார் என்று பார்ப்பதை விட்டுவிட்டு கதையில் கவனம் செலுத்தின், குறித்த தாக்குதல் காலத்தில் இயக்கத்தில் இருந்திராத ஒரு சிவிலியன் கோட்டையில் ஏவப்பட்ட ஆயதங்களின் பெயரை எப்படியும் மாற்றிக் கூறலாம். ஏனெனில் தங்கள் மண்ணில் வெடித்த குண்டுகள் அனைத்தினதும் ஏவிகள் பெயரை மக்கள் அறிந்து வைத்திருக்கமுடியாது.

அடுத்து, சிங்கள இராணுவத்தைக் காட்டிலும் புலிகள் கெட்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஒரு குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகிறது. வெள்ளை வேட்டி சட்டையில் ஐயா நான் தமிழன் என்று கத்திய 50 வயதுக் கிழவனை தோலுரியும் வரை அடிப்பதும், உச்சி வெயிலிற்குள் அம்மணமாய் கட்டிப்போடுவதும், பல்லி பூரான் நிறைந்த அறைகளில் போடுவதும், கழுத்தில் கல்லைக் கட்டிக் கடலுக்குள் மூழ்கடித்துச் சித்திரவதை செய்வதும், நடமாட்டத்தைக் கட்டுப் படுத்துவதும், சமையல் காரனாக வேலை வாங்குவதும், மாலை சூழ்ந்தால் பொன்ராசுவை நரகம் சூழ்ந்தது என்று வர்ணிப்பதிலுமாகப் பதிவுசெய்யப்பட்ட சிங்களத்தின் சித்திரவதைகள் எல்லாம் அவர்கள் சாராயம் கொடுத்தார்கள் என்பதால் மட்டும் சரிசெய்யப்பட்டுவிடாது. இனி புலிகளின் பக்கம் பார்த்தால், அங்கு கைதிகள் எல்லோரும் ஏசி அறையில் தனித்தனி ரீவி போடப்பட்டுத் தான் பராமரிக்கப்பட்டார்கள் என்று கூறவேண்டிய அவசியம் இருப்பதாக நான் உணரவில்லை. குறைந்த சாப்பாடு, நிறைந்தவேலை என்ற நிலைப்பாடு சமாதான காலத்திலும் கூட வன்னியில் சிறைகளில் இருந்தமை மறைக்கத்தேவையற்றது. ஆனால், ஒரு எதிரியிடம் வக்கற்று ஏதிலியாக அடி வாங்கிய ஒரு தமிழ் வயோதிபர் எங்கள் இயக்கத்திடமும் தான் எதனால் எவ்வாறு எதிரியிடம் மாட்டிக்கொண்டார் என்பதனை விவரிக்க முடியாத கையறுநிலையில் சித்திரவதை அனுபவித்தார் என்பது துன்பகரமானதே. இவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனக் கூறத் தேவையில்லை (முக்கிய தளபதிகள் கூட சித்திரவதை நெருப்பாற்றைக் கடந்து தம்மீதிருந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டு, பின்னர் முள்ளிவாய்க்கால் வரை முக்கிய தளபதியாய் இயங்கியமை எங்கள் வரலாற்றில் உண்டு). இவ்வாறான விடயங்கள் நடந்ததைப் பதிவு செய்வது தற்போதைய போர்க்குற்ற வழக்கு சாத்தியங்களின் முன்னிலையில் மறைக்கப்படவேண்டும் என்பது ஏற்புடையதாகத் தெரியவில்லை. இல்லை அது தான் உண்மை எனின், எவரும் எதையும் எழுதுவது சரியல்ல. இந்தியாவை விமர்சிப்பது, மேற்கை விமர்சிப்பது, கூட்டமைப்பை விமர்சிப்பது, புலத்தின் கட்டமைப்புக்களை விமர்சிப்பது எதுவுமே செய்யப்படகூடாது. எது எப்படி மாறும் என்று தெரியாது என்று அனைவரும் மௌனமாய் இருப்பின் மட்டுமே எதையும் பகைக்காது இருக்கமுடியும். என்னைப் பொறுத்தவரை அத்தகைய உறங்குநிலை தேவை அற்றது.

மேலும், இயக்கநிலவரங்கள் பற்றி இனிமேல் சோபாசத்தி கதை எழுதினால்த்தான் உலகிற்கோ தமிழரிற்கோ தெரியவந்திரும் இதனால் தமிழ் எழுச்சியும் உலகின் தமிழ்சார்பு நிலையும் குலைந்து போய்விடும் என்று எவரும் கூறின் அதில் எனக்கு பல முனைகளில் உடன்பாடில்லை.

மேலே செல்லு முன்னர் இரு விடயங்களை ஆணித்தரமாகப் பதிவு செய்வது அவசியம் என்று கருதுகிறேன். முதலாவது, சோபாசக்திக்குப் புலிகளைப் பிடிக்காது என்பதில் எதையும் எவரும் நிறுவத்தேவையில்லை. அது முடிந்தமுடிபான ஒன்று. அதற்காக, புலிகளைப் பிடிக்காத தமிழன் எதைப் பேசினினும் கேட்கக்கூடாது என்றாகிவிடாது. இலக்கியத்தில் வரிகளிற்கு இடையில் சொல்லப்படாது தொக்குநிற்பவற்றையும் வாசித்து இரசிப்பது சாத்தியம் என்றால், வெட்டவெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ள ஒவ்வாமைகளை ஒதுக்குவது அத்தனை சிரமமில்லை. எடிட்டர் ஒருவர் ஊடாகக் கதை வரவில்லை என்பதற்காக, எங்களிற்கு நாங்கள் எடிட்டர்களாக இருந்து வாசிக்க முடியாது என்றாகிவிடாது. அடுத்தது, ஏற்கனவே பலதடவை பேசிப் புளித்துப்போன விடயம். ஒருவர் ஒரு படைப்பைப் புகழுவதால் படைப்பாளியின் வக்கீலாக அவர் ஆஜராவார் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

குறைகளைச் சுட்டிக் காட்டாது நிறைகளை மட்டும் பேசுவது தவறு என்பது ஒரு வகையில் சரியெனினும், நிறைகள் தெரியும் அனைவரிற்கும் குறைகள் முழுவதும் தெரியவேண்டும் என்றோ, அல்லது குறைகள் தெரியும் ஒருவரிற்கு நிறைகள் முழுவதும் தெரியவேண்டும் என்றோ இருக்கவேண்டியதில்லை. உதாரணமாக, கடலைப் பற்றியோ அல்லது ஊர்காவற்துறையில் இருந்து கோட்டைவரையிலான சுருவிலை எப்பிடியோ உள்ளடக்கிய புவியியல் அமைப்புப் பற்றியோ எனக்கு அறவே எதுவும் தெரியாது. இவை தெரியவில்லை என்பதால், நான் இரசித்த நிறைகளைப் பகிரமுடியாது என்று இருக்கமுடியாது. நிறைகள் தெரிவதால் குறைகளைத் தலைகீழாக நின்று மறைக்க வேண்டும் என்பதோ, குறைகள் தெரிவதால் நிறைகளை மறைக்கவேண்டும் என்பதோ எனது பார்வையில் ஆரோக்கியமற்றது.

ஆனால், ஒரு கதையினைப் படிப்பதும் அது பற்றி விவாதிப்பதும் குறை நிறைகளைப் பேசுவதும் மகிழ்ச்சிக்குரியதே.

அடுத்து எனது பதிவில், எனது பார்வையின் கோணம் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். கதைக்கு வெளிப்படையான ஒரு நகர்வும் உள்ளோட்டமான ஒரு நகர்வும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளேன். இதில் நான் அதிகபட்சம் இரசித்தது உள்ளோட்டமான நகர்வினையே. அதையே இங்கு பதிவு செய்துள்ளேன். சில பின்னூட்டங்களைப் பார்;க்கையில், மனதின் பெருப்பிப்புக்களால் ஒரு மனிதனை ஒரு சொல்லிற்குள் அடக்கிவிடும் தன்மைக்கு மேலும் உதாரணங்கள் கிடைக்கின்றன.

இதற்கு கூட நேரம் செலவழித்த இன்னுமொருவனுக்கு மேலும் ஒரு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னப்பா மொழி தெரியாத நிலையிலும் வெள்ளைக்காரியைக் காதலித்த தில்லான மனிதரை வயோதிபரைத் தாக்கினார்கள் என்று பரிதாபம் வரக்கூடிய இடங்களில் மட்டும் அந்த வயோதிபர் என்ற சொல்லை சற்று அழுத்தமாகப் பாவித்திருக்கிறீர்கள்??????????????

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தக் கதைக்கு வேறொரு இடத்தில் என்னால் எழுதப்பட்ட கருத்து.தேவை கருதி இங்கே மீண்டும் இணைக்கிறேன்.

கதையின் முன்பாதி இராணுவம் கோட்டையைப் பிடிக்க முன்னேறிய நிகழ்வு பற்றியது. கெலியில் செல் அடித்தார்கள் முன்னேறினார்கள் என்று மேலோட்டமாகச்சொல்லி விட்டு நயினாதீவில் பொன்ராசாவுக்கு சாராயப் போத்தல் கொடுக்கும் அளவுக்கு இராணுவத்தினர் நல்லவர்கள் என்ற பிம்பம் வாசகர் மனதில் பதிய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது.அது மட்டுமன்றி புலிகள் தமிழ்மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள் என்ற கருத்து வாசகர்களுக்கு எந்த இடத்திலும் கோடிட்டுக் காட்டப்படாமல் மாறாக அவர்கள் சித்திர வதை முகாம்களை வைத்துக் கைதிகளைக் கொடுமைப் படுத்தினார்கள் என்னும் கருத்து ஆழமாகப் பதிமயுமாறு கதை எழுதப்பட்டிருக்கிறது.இராணுவம் வடக்கு றோட்டால் முன்னேறிய பொழுது நடத்திய அதகளங்கள் கொடூரங்கள் பற்றி தொட்டும் பார்க்கவில்லை.எனது தாயாரும் இந்த நடவடிக்கையில் இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார்.எனது அப்பாவி நண்பர்கள் உறவினர்கள் பலர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப் பட்டு இருந்தனர்.எழுத்தாளர் கதை சொல்லிய விதத்தின்படி பார்த்தால் அவர் அந்தப் பிரதேசத்தை நன்கு அறிந்தவராக எல்லா இடங்களையும் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.சில வேளை எனக்குத் தெரிந்தவராகவும் இருக்கலாம் போல் இருக்கிறது.மற்றும்படி பொன்ராசா எப்படி ஒரு சுயநலவாதியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறாரோ எழுத்தளாரும் புலிகளின் மீதான வெறுப்பை தன் சுயநல மான எழுத்தால் கொட்டியிருக்கிறார்..கடைசியில் நினைவுக் கல்லை மகன் தூக்கி எறியும் பொழுது சொல்லிய வசனம் மூலம் மீண்டும் புலிகளின் தலைமை மீதான தனது வெறுப்புணர்வையும் காழ்ப்புணர்வையும் காட்டியிருக்கிறார்.யதார்த்தமாக எழுதுவதாக கொச்சை வசனங்கள் எழுதி மினக்கெட்டவர்.எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடியே யதார்த்ததை எழுதாமல் தமிழ்மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட புலிகளை விட தமிழர்களின் வெறுப்புக்கு ஆளான படையினரை நல்லவர்கள் என்ற கோணத்தில் எழுதியிருக்கிறார். என்னதான் புலிகள் தமிழ்மக்களுக்கு விரும்பமில்லாத சில நடவடிக்கைகளை எடுத்தாலும் அவர்கள் எங்கள் குழந்தைகள் என்பதை மறந்து விடுகிறார். மொத்ததில் வாய்யுப் கண்ட இடத்திலெல்லால் புலிகளை வசை பாடும் மாற்றுக் கருத்துப் பரப்புரையே இது.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கின் புனை கதை எழுத்தாளர்கள் பலர், தமது கதைகளின் பாத்திரங்களின் பெயர்கள் தற்செயலாகக் கூட நிஜ உலகின் பெயர்களோடு பொருந்திவிடக்கூடாது என்பதற்காகப் பலத்த சிரத்தை எடுத்து, நிஜத்தில் இருப்பதற்கு மிகவும் சாத்தியப்பாடு குறைந்த பெயர்களை தமது புனைவின் பாத்திரப் பெயர்களாக உருவாக்குவதைக் குறிப்பிட்டுள்ளார்கள். இது எழுத்துத் தர்மம் என்பதற்கு மேலால் வழக்குகளின் மூலம் பணத்தை இழக்காதிருப்பதற்கு அவசியம். தவறான ஈழக்கதைகளிற்கெதிராகக வழக்குத் தாக்கல் செய்பவர்கள் இல்லை என்பதற்காக, ஈழக்கதைகளை மட்டும் எப்படியும் எழுதலாம் என்று இருக்க முடியாது. அந்தவகையில் பதிவு செய்யப்ட்டுள்ள கோபங்கள் நியாமானவையே. 'கப்டன்' கதையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகள் வரவேற்கப்படவேண்டியன.

இனி எனது பதிவிற்கு வருகிறேன். இத்தனை தவறுகள் நிறைந்துள்ள ஒரு கதையின் குறைகளை உள்ளடக்காது நிறைகளைப் பற்றி மட்டுமே எனது பதிவு பேசியுள்ளது என்ற அடிப்படையில் பின்னூட்டங்களின் விமர்சனத்தைப் புரிந்து கொள்கிறேன். இது தொடர்பில், எனக்குத் தெரிந்தவரை பின்வருவனவற்றைக் கூற விரும்புகின்றேன்,

குறைகளாககப் பின்வருவன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

1) புலிகளிடம் 1991ம் ஆண்டு ஆட்டிலறி இருக்கவில்லை

2) புலிகளின் கடல் படை 1991ம் ஆண்டு கடற்புறா என அழைக்கப்பட்டது.

3) 1991ம் ஆண்டில் சூசை தீவுப் பகுதிப் பொறுப்பாளர். கடற்படைத் தளபதி அல்ல.

4) வேலணையில் இருந்து இந்தியா வெளிக்கிட்டு நயினாதீவு சென்றடைந்தமை தொடர்பிலான: காலநிலை மற்றும் கடல் சார் தரவுகள் தொடர்பில் தவறுகள்;

5) புவியியல் அமைவிடம் சார் தரவுகளில் தவறுகள்

மேற் கூறியவையும் இன்னும் எத்தனையோ தரவுகளின் தவறுகளும் இருக்கலாம். இத்தரவுகள் தொடர்பில் எது சரியான தரவு என்று அறிந்து கொள்வதற்குப் பல வழிகள் இருக்கலாம். இப்பிழைகள் திருத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதைப் பூரணமாக ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால், இத்தவறுகளை ஒரு எடிட்டரே இருந்திருப்பினும் அந்த எடிட்டராலும் சரிசெய்யமுடியாது என்ற கருத்தோடு முற்றாக முரண்படுகின்றேன். ஏனெனில்:

மேற்படி தவறுகளைச் சார்ந்து பேசின், இக்கதையைப் பொறுத்தவரை, இதற்கு அவசியமானது மூன்றே மூன்று விடயங்கள்: முதலாவது பொன்ராசு பாத்திரத்தை ஒரு குடும்பத்தலைவனாக அவரது குடும்பத்தின் மத்தியில் அறிமுகப்படுத்தவேண்டியதோடு தனது ஊரில் பொன்ராசு எப்பிடி வாழ்ந்தார் என்பதை வாசகர் மனங்களில் பதிவு செய்வது. அடுத்தது, ராணுவ நகர்வுகளின் பாதையில் இருக்கும் ஒரு வறிய தமிழ் குடும்பத்தின் மனநிலை பதிவுசெய்யப்படவேண்டும். அடுத்தது பொன்ராசா எதிரியிடமும், புலிகளிடமும் கைதியாக இருக்கவேண்டும். கதாசிரியர் பொன்ராசுவைச் சுருவிலில் படைத்து, கதையினை 1991ம் ஆண்டில் கோட்டைத் தாக்குதலோடு தொடர்பு படுத்தி நடத்தியதற்குப் பதில் எப்படி வேண்டுமாயினும் பொன்ராசுவை கதையின் போர்க்கால நகர்ச்சிக்குள் உள்ளிளுத்து எப்படி வேண்டுமாயினும் இராணுவத்திடமும் புலிகளிடமும் கைதியாக்கியிருக்கலாம். எவ்வாறு பொன்ராசு கைதியானார் என்பது கதையின் ஆன்மாவைப் பாதிக்கப்போவதில்லை. பொன்ராசு போன்ற ஒரு தமிழ் பாத்திரம் எதிரியின் பிடியிலும் இயக்கத்தின் பிடியிலும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதைப் பதிவு செய்வது மட்டுமே கதையின் கருவிற்கு அவசியம். எங்களது போராட்ட வரலாறிலும் பாமரர்களும் வறியவர்களும் சற்று அதிகமாகப் போரின் வடுக்களைச் சுமக்கிறார்கள் என்பது முற்றிலும் பொய்யானது அல்ல. எதிரியும் புலிகளும் அருகருகே இருக்கவேண்டும் என்பதற்காகவும், பொன்ராசு தீவுப்பகுதியினை விட்டு இதர இடங்களிற்குப் பயணிக்கும் சாத்தியம் குறைவு என்பதாலும், எதிரியும் நெடுங்காலம் மக்களோடு அண்மித்து வாழ்ந்த ஒரு தளமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் கதாசிரியர் ஒருவேளை நயினாதீவினைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் இத்தளம் கதையின் ஆன்மாவைப் பாதிக்காது இலகுவில் மாற்றப்படக்கூடியது.

இன்னும் சற்று இம்முனையில் பார்த்தால், சூசை அக்காலப்பகுதியில் தீவகப்பொறுப்பாளராக இருந்திருந்தாரென்றால், பொன்ராசு பாத்திரத்திற்கு இப்பெயர் பரிட்சயமாய் இருந்திருப்பதற்கான சாத்தியம் அதிகம். சூசையினை கடற்புறாத் தளபதி என்றோ இன்னும் என்ன பதவிகளிலோ பொன்ராசு இராணுவத்திடம் வர்ணிப்பது பொன்ராசு பாத்திரத்திற்குப் பொருத்தமானது. பொன்ராசு வரைபடங்களை தலைகரணமாய் வரைந்தார், தலைவரின் முகாம் ஒரு நாள் யாழில் இன்னுமொருநாள் சாவகச்சேரியில் என வரைந்தார் என்றெல்லாம் கதையில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியான பொன்ராசா யாரை என்ன படையணியின் தளபதி என்று சொன்னாலோ, இல்லாத என்ன படையணியை உருவாக்கினாலோ இந்தக் கதையின் பொன்ராசு பாத்திரத்திற்கு அது பொருத்தமாகவே இருக்கும். இதில் ஒரு நகைச்சுவை விளைவும் பார்க்கப்படவேண்டும். பொன்ராசு என்னசெய்தார் என்று கதாசிரியர் விபரிப்பது கதாசிரியரின் அறிவீனம் என்று மட்டும் தான் நோக்கப்படவேண்டும் என்பதில்லை.

அது போல ஆட்டிலறி விடயத்தைப் பார்த்தால், புலிகளிடம் 96ம் ஆண்டைத்தொடர்ந்துதான் ஆட்டிலறி வந்ததும், வந்த ஆட்டிலறியையும் பயன்படுத்துவதில் புரியாமைகள் இருந்ததும், ஒரு சிங்கள இராணுவ அதிகாரி மற்றும் சிப்பாய் உயிருடன் பிடிபட்டபோது கூட அவர்களிடம் ஆட்டிலறி எப்படி இயக்குவது என்று கூறுமாறு கேட்போது அவர்கள் மறுக்க, சொல்லாவிடின் வெடிவிழும் என்று கூறியும் அவர்கள் மறுக்க, அதிகாரி கொலைசெய்யப்பட, பயந்த சிப்பாய் பதில் கூறிய கதை கூட--அதனால் மட்டும் தான் ஆட்டிலறி இயக்கக் கற்றுக்கொண்டார்கள் என்று சொல்வதாக எடுத்துவிடாதீர்கள்--துவக்கே தூக்கியறியாத அந்தக் காலப்பகுதியில் அங்கே இருந்திராதவர்களும் அறிந்த ஒரு விடயம். இந்நிலையில் ஏதோ கொஞ்சமோ நஞ்சமோ பயிற்சி எடுத்த சோபாசக்த்திக்கு இதை ஊர்ஜிதப் படுத்துவது பெரிய பிரச்சினையாய் இருந்திராது. ஒன்று அறழை பேர்ந்த தனம், இரண்டு வாசகரை குறைத்து மதிப்பிட்டமை, மூன்று நக்கலில் கொஞ்சம் ஓவராய் போனமை, நாலு சற்றுக் கர்வம் தலைக்கேற விட்டமை என சிலவற்றை கோட்டையில் ஆட்டிலறி பாய்ந்த விடயத்தில் நான் விளங்கிக் கொள்கிறேன். ஆனால், கோட்டையில் ஆட்டிலறி அடித்தார்கள் என்பதற்குப் பதில் கல்லெறிந்து இராணுவத்தைப் பயப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று எழுதினாலும் கூட கதையின் கருவிற்கு எந்தக் கெடுதலும் வராது என்பதைப் பதிசெய்தேதீரவேண்டும். இங்கு கதைக்கு அவசியமானது இராணுவ நகர்ச்சிப் பாதையில் பொன்ராசு குடும்பம் இருக்கவேண்டியது மட்டுமே. எனவே மேற்படி தவறுகள் ஒரு எடிட்டரால் திருத்தப்பட முடியாதன என்பது என்னைப் பொறுத்தவரை அறவே ஏற்புடையதல்ல.

இந்த ஆட்டிலறி விடயத்தில் இன்னுமொன்றைப் பதிவு செய்யவேண்டும். எத்தனை பேர் வேண்டுமாயினும் தங்களிற்குப் புலிகளின் உள்விடயம் எல்லாம் அத்துப்படி என்று பீத்திக்கொள்ளலாம். ஆனால் ஒரு இராணுவ அமைப்பிற்குள் இருக்கும் இராணுவ தளபாடங்களின் விபரம் பொது மக்கள் அறிந்திருக்கவேண்டியதில்லை. எப்போ என்ன ஆயதம் தங்கள் இராணுவத்திடம் வந்தது என்பதை மக்கள் போராட்டச்சூழலில் அறிந்திருக்கத் தேவையில்லை. மேலும், யார் கதை எழுதினார் என்று பார்ப்பதை விட்டுவிட்டு கதையில் கவனம் செலுத்தின், குறித்த தாக்குதல் காலத்தில் இயக்கத்தில் இருந்திராத ஒரு சிவிலியன் கோட்டையில் ஏவப்பட்ட ஆயதங்களின் பெயரை எப்படியும் மாற்றிக் கூறலாம். ஏனெனில் தங்கள் மண்ணில் வெடித்த குண்டுகள் அனைத்தினதும் ஏவிகள் பெயரை மக்கள் அறிந்து வைத்திருக்கமுடியாது.

அடுத்து, சிங்கள இராணுவத்தைக் காட்டிலும் புலிகள் கெட்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஒரு குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகிறது. வெள்ளை வேட்டி சட்டையில் ஐயா நான் தமிழன் என்று கத்திய 50 வயதுக் கிழவனை தோலுரியும் வரை அடிப்பதும், உச்சி வெயிலிற்குள் அம்மணமாய் கட்டிப்போடுவதும், பல்லி பூரான் நிறைந்த அறைகளில் போடுவதும், கழுத்தில் கல்லைக் கட்டிக் கடலுக்குள் மூழ்கடித்துச் சித்திரவதை செய்வதும், நடமாட்டத்தைக் கட்டுப் படுத்துவதும், சமையல் காரனாக வேலை வாங்குவதும், மாலை சூழ்ந்தால் பொன்ராசுவை நரகம் சூழ்ந்தது என்று வர்ணிப்பதிலுமாகப் பதிவுசெய்யப்பட்ட சிங்களத்தின் சித்திரவதைகள் எல்லாம் அவர்கள் சாராயம் கொடுத்தார்கள் என்பதால் மட்டும் சரிசெய்யப்பட்டுவிடாது. இனி புலிகளின் பக்கம் பார்த்தால், அங்கு கைதிகள் எல்லோரும் ஏசி அறையில் தனித்தனி ரீவி போடப்பட்டுத் தான் பராமரிக்கப்பட்டார்கள் என்று கூறவேண்டிய அவசியம் இருப்பதாக நான் உணரவில்லை. குறைந்த சாப்பாடு, நிறைந்தவேலை என்ற நிலைப்பாடு சமாதான காலத்திலும் கூட வன்னியில் சிறைகளில் இருந்தமை மறைக்கத்தேவையற்றது. ஆனால், ஒரு எதிரியிடம் வக்கற்று ஏதிலியாக அடி வாங்கிய ஒரு தமிழ் வயோதிபர் எங்கள் இயக்கத்திடமும் தான் எதனால் எவ்வாறு எதிரியிடம் மாட்டிக்கொண்டார் என்பதனை விவரிக்க முடியாத கையறுநிலையில் சித்திரவதை அனுபவித்தார் என்பது துன்பகரமானதே. இவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனக் கூறத் தேவையில்லை (முக்கிய தளபதிகள் கூட சித்திரவதை நெருப்பாற்றைக் கடந்து தம்மீதிருந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டு, பின்னர் முள்ளிவாய்க்கால் வரை முக்கிய தளபதியாய் இயங்கியமை எங்கள் வரலாற்றில் உண்டு). இவ்வாறான விடயங்கள் நடந்ததைப் பதிவு செய்வது தற்போதைய போர்க்குற்ற வழக்கு சாத்தியங்களின் முன்னிலையில் மறைக்கப்படவேண்டும் என்பது ஏற்புடையதாகத் தெரியவில்லை. இல்லை அது தான் உண்மை எனின், எவரும் எதையும் எழுதுவது சரியல்ல. இந்தியாவை விமர்சிப்பது, மேற்கை விமர்சிப்பது, கூட்டமைப்பை விமர்சிப்பது, புலத்தின் கட்டமைப்புக்களை விமர்சிப்பது எதுவுமே செய்யப்படகூடாது. எது எப்படி மாறும் என்று தெரியாது என்று அனைவரும் மௌனமாய் இருப்பின் மட்டுமே எதையும் பகைக்காது இருக்கமுடியும். என்னைப் பொறுத்தவரை அத்தகைய உறங்குநிலை தேவை அற்றது.

மேலும், இயக்கநிலவரங்கள் பற்றி இனிமேல் சோபாசத்தி கதை எழுதினால்த்தான் உலகிற்கோ தமிழரிற்கோ தெரியவந்திரும் இதனால் தமிழ் எழுச்சியும் உலகின் தமிழ்சார்பு நிலையும் குலைந்து போய்விடும் என்று எவரும் கூறின் அதில் எனக்கு பல முனைகளில் உடன்பாடில்லை.

மேலே செல்லு முன்னர் இரு விடயங்களை ஆணித்தரமாகப் பதிவு செய்வது அவசியம் என்று கருதுகிறேன்.

முதலாவது, சோபாசக்திக்குப் புலிகளைப் பிடிக்காது என்பதில் எதையும் எவரும் நிறுவத்தேவையில்லை. அது முடிந்தமுடிபான ஒன்று. அதற்காக, புலிகளைப் பிடிக்காத தமிழன் எதைப் பேசினினும் கேட்கக்கூடாது என்றாகிவிடாது.

இலக்கியத்தில் வரிகளிற்கு இடையில் சொல்லப்படாது தொக்குநிற்பவற்றையும் வாசித்து இரசிப்பது சாத்தியம் என்றால், வெட்டவெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ள ஒவ்வாமைகளை ஒதுக்குவது அத்தனை சிரமமில்லை. எடிட்டர் ஒருவர் ஊடாகக் கதை வரவில்லை என்பதற்காக, எங்களிற்கு நாங்கள் எடிட்டர்களாக இருந்து வாசிக்க முடியாது என்றாகிவிடாது. அடுத்தது, ஏற்கனவே பலதடவை பேசிப் புளித்துப்போன விடயம். ஒருவர் ஒரு படைப்பைப் புகழுவதால் படைப்பாளியின் வக்கீலாக அவர் ஆஜராவார் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

குறைகளைச் சுட்டிக் காட்டாது நிறைகளை மட்டும் பேசுவது தவறு என்பது ஒரு வகையில் சரியெனினும், நிறைகள் தெரியும் அனைவரிற்கும் குறைகள் முழுவதும் தெரியவேண்டும் என்றோ, அல்லது குறைகள் தெரியும் ஒருவரிற்கு நிறைகள் முழுவதும் தெரியவேண்டும் என்றோ இருக்கவேண்டியதில்லை. உதாரணமாக, கடலைப் பற்றியோ அல்லது ஊர்காவற்துறையில் இருந்து கோட்டைவரையிலான சுருவிலை எப்பிடியோ உள்ளடக்கிய புவியியல் அமைப்புப் பற்றியோ எனக்கு அறவே எதுவும் தெரியாது. இவை தெரியவில்லை என்பதால், நான் இரசித்த நிறைகளைப் பகிரமுடியாது என்று இருக்கமுடியாது. நிறைகள் தெரிவதால் குறைகளைத் தலைகீழாக நின்று மறைக்க வேண்டும் என்பதோ, குறைகள் தெரிவதால் நிறைகளை மறைக்கவேண்டும் என்பதோ எனது பார்வையில் ஆரோக்கியமற்றது.

ஆனால், ஒரு கதையினைப் படிப்பதும் அது பற்றி விவாதிப்பதும் குறை நிறைகளைப் பேசுவதும் மகிழ்ச்சிக்குரியதே.

அடுத்து எனது பதிவில், எனது பார்வையின் கோணம் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். கதைக்கு வெளிப்படையான ஒரு நகர்வும் உள்ளோட்டமான ஒரு நகர்வும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளேன். இதில் நான் அதிகபட்சம் இரசித்தது உள்ளோட்டமான நகர்வினையே. அதையே இங்கு பதிவு செய்துள்ளேன். சில பின்னூட்டங்களைப் பார்;க்கையில், மனதின் பெருப்பிப்புக்களால் ஒரு மனிதனை ஒரு சொல்லிற்குள் அடக்கிவிடும் தன்மைக்கு மேலும் உதாரணங்கள் கிடைக்கின்றன.

இன்னுமொருருவன்

சோபாசக்தி என்கின்ற தனிமனிதனுக்காக நீங்கள் இவ்வளவு பாடுபட்டு நேரத்தை ஒதுக்கி எழுதுவதையும் நான் தமிழரின் தேசியச்சொத்தாம் புலிகள் பற்றி நேரமொதிக்கி எழுதுவதையுயும் ஓரே தராசிலா பார்க்கின்றீர்கள்???

சோபா சக்திக்கு புலிகளைப்பிடிக்கவில்லை என்பது அவரது தனிப்பட்டவிடயம் அவர் அத்துடன் நிறுத்தியிருந்தால்....ஆனால்

அவர் அந்த வரம்பைக்கடைப்பிடித்தாரா? கடைப்பிடிக்கிறாரா??? கடைப்பிடிப்பாரா??? என்பதையும் தங்கள் ஊடாக அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பக்கம் பக்கமாக எழுத எதுவும் இல்லை. சோ.ச வே தன் படைப்புகள் "சற்றே நீண்ட அரசியல் துண்டுப்பிரசுரங்கள்" என்று பல முறை கூறியிருக்கிறார். இதில் இரு பரிமாணம் இருந்தாலென்ன பல பரிமாணம் இருந்தாலென்ன புலிக்காய்ச்சல் இல்லாமல் சோ.ச வுக்கு எழுத்தும் வராது பிழைப்பும் ஓடாது. புலிகளை ஈழத்தின் "தலிபான்கள்" போலவும் இராணுவத்தை "நல்லவர்கள் பலரும் கெட்டவர்கள் சிலரும்" கொண்ட ஒரு மீட்புப் படை போலவும் காட்டத்தான் இந்தப் படைப்புகள். இணையம் மூலம் வரலாற்றை அறிந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் காலத்தில் சோ.ச மாதிரியான பேர்வழிகளை நாம் தலையில் தூக்கி வைத்தாடுவது எமது பிள்ளைகளுக்குப் பிழையான சமிக்ஞையைக் கொடுக்கும்.

பினம் போனாலும் மனம் போகாது என்பார்கள் அதே போல தான் சோபாசக்திக்கு புலி எதிர்ப்பு ஒன்றே அவரின் இருப்புக்கு தாழ்வாரம்....

சோபா சக்தியின் மனநிலை ஒரு பெண்னுக்குரியது அதாவது தனக்கு 2 3 குமர் பெண்களை பெற்று வைத்து இருந்தாலும் பக்கத்து விட்டு பெண்பிள்ளைகளை பற்றி ஏதவது வம்பு தும்பு பேசாமல் இருக்கமாட்டார்கள்.

இன்னுமொருவன் நீங்கள் எழுதியது எல்லாம் ஒரு புனை கதைக்குப் பொருந்தும்.ஆனால் ஒரு `நீண்ட அரசியற் பிரசுரத்துக்கும்` அதை எழுதிய அரசியற் செயற்பாட்டளருக்கும் உண்மை என்பதும் வரலாறு என்பதும் முக்கியம்.ஏனெனில் சோபாசக்தி சொல்வது தான் ஈழத்தைல் நடக்கிறது என்று நம்பும் பலர் தமிழ் நாட்டில் இருகிறார்கள். கதையின் மைய ஓட்டத்துக்கு சம்பந்தமில்லாதது என்று நீங்கள் நிராகரித்த தகவற் பிழைகளின் அடி யொற்றியே சோபாசக்தி தனது வன்சக அரசியலை தமிழ நாட்டில் நடாத்தி வருகிறார்.

இதில் முக்கியமான விடயங்கள் சிலவற்றை நீங்கள் கணக்கில் எடுக்கவில்லை.

தாயொழி என்னும் சொல் தமிழ்னாட்டில் பாவிக்கப்படுவது.ஈழத்தில் பாவிக்கப்படும் வட்டார வழக்கைத் தவிர்த்து சோபாசக்தி எழுதியது தமிழ் நாட்டு வாசகரை மனதில் வைத்து.அவர்கள் தான் அவரின் இலக்கு.

அடுத்ததாக சோபசக்தியும் இராகவுனும் , தமிழ்த் தேசியம் எதிர் தலித்தியம் என்னும் கோசத்தை முன் வைத்து ,பாரிசில் கட்டுரை வாசித்தவர்கள்.புலிகள் ஆதிகச் சாதியினர் என்றார்.பிரபாகரனின் சாதி ஆதிக்கச் சாதி என்றார்.ஆனால் இக் கதையில் அவர் இதற்க்கு முற்றிலும் முரணான ஒரு கருத்தை ஒரு பாத்திரத்தின் மூலம் கொண்டு வந்துள்ளார்.இதில் எது சரி? ஒருவரின் நீண்ட அரசியல் அறிக்கைக்கும் அவரின் அரசியலுக்கும் ஏன் இந்த முரண்பாடு?

சோபாசக்தியைக் கதை எழுத வேண்டாம் என்று எவரும் சொல்ல வில்லையே.கதை எழுத சோபாவுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை அவரின் பொய்களை உடைப்பதற்க்கு எமக்கும் இருக்கிறது .முக்கியமாக தமிழ் நாட்டில் ஒரு கூட்டம் சோபாசக்தியை முன் நிறுத்தி செயற்பட்டு வருகிறது.இவர்களையும் சோபாசக்தியையும் அவரின் செயற்பாடுகளையும் அம்பலப்படுதுவது எமது அரசியற் போராட்டத்தைப் பொறுத்தவரை முக்கியமானது.

அடுத்ததாக சோபசக்தியும் இராகவுனும் , தமிழ்த் தேசியம் எதிர் தலித்தியம் என்னும் கோசத்தை முன் வைத்து ,பாரிசில் கட்டுரை வாசித்தவர்கள்.புலிகள் ஆதிகச் சாதியினர் என்றார்.பிரபாகரனின் சாதி ஆதிக்கச் சாதி என்றார்.ஆனால் இக் கதையில் அவர் இதற்க்கு முற்றிலும் முரணான ஒரு கருத்தை ஒரு பாத்திரத்தின் மூலம் கொண்டு வந்துள்ளார்.இதில் எது சரி? ஒருவரின் நீண்ட அரசியல் அறிக்கைக்கும் அவரின் அரசியலுக்கும் ஏன் இந்த முரண்பாடு?

  • தொடங்கியவர்

கருத்துக்களிற்கு நன்றி.

வாத்தியார், மொழி தெரியாத நிலையிலும் வெள்ளைக்காரியைக் காதலிகக்கக் கூடிய தில் இருந்த நபர் என்றபடியால் அவர் தாக்கப்பட்டதை அடக்கிவாசிக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. அல்லது, மொழி தெரிஞ்ச வயது குறைந்தவர்களிற்கே சமயத்தில் சரிப்படாத விடயத்தை மொழியே தெரியாமல் செய்த கிழவன் என்ற ரீதியிலான வெப்பியாரங்களும் எழவில்லை.

உங்களது இரண்டாம் பதிவுக்கான எனது கருத்தை ஜஸ்ரினுக்கான பதிலுடன் இணைத்து இணைக்கிறேன்.

விசுகு,

உங்கள் சிவப்புக் கேள்விக்கு வந்தால், இவை சோபாசக்தியிடம் கேட்கப்படவேண்டிய கேள்வி என நினைக்கிறேன்.

ஜஸ்ரின்,

உங்கள் கருத்துத் தொடர்பில் இரு கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்புகின்றேன். முதலாவது, ரோல்ஸ்ரோய் வாழ்வில என்னென்ன கருத்துக் கூறினார் என்று எங்களிற்குத் தெரியாது. ரோல்ஸ் ரோயின் ஒரு கதையினை இரசித்தோம் என்றால் ரோல்ரோயின் வாழ்வை முதற்கண் முற்றாகத் தெரிந்து அதன் பின் அத்தனை நிலைப்பாடுகளையும ;ஆதரித்து அதன் பின் தான் கதையினை இரசித்தோம் என்பதில்லை. என்னைப் பொறுத்தவரை, ஒரு கதையினை படிக்கும் போது அந்தக் கதை மட்டுமே எனக்கு அவசியமானது. கதாசிரிரைப் பற்றிக் கூட கதை படிக்கும் போது நான் நினைப்பதில்லை, அது எனக்குத் தேவையுமற்றது. சோபாசக்தியின் கதை பிடிப்பதால் அவரது அத்தனை நடவடிக்கைகளையும் நான் ஆதரிக்கிறேன் என்றோ அறிந்திருக்கிறேன் என்றிருக்கத்தேவையில்லை. அவர் திறமை மிக் எழுத்தாளர் என்பதில் மட்டுமே என்கு உடன்பாடு. ஊரில் கோவிலில் கடலை சுற்றி வந்த கடதாசியில் கூட இரசிக்கும் படியான விடயங்களைப் பார்த்த ஞாபகம் உண்டு. எழுதியவர் யார் என்பது என்னைப் பொறுத்தவரை எனக்கு அவசியமற்றது.

இனி, இணையம் மூலம் வரலாற்றை அறிந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் காலத்தில் சோ.ச போன்றவர்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடுவதால் எமது பிள்ளைகளிற்குப் பிழையான சமிக்ஞை கொடுக்கிறோம் என்பது தொடர்பில் இரு கருத்துக்கள். நாங்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறோமோ இல்லையோ நாங்கள் விரும்புவன மட்டும் உலகி;ல் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கப்போவதில்லை. நாங்கள் விரும்பும் படி உலகு அமையவேண்டும் எனின், எங்களிற்குப் பிடிக்காததை எவரும் உருவாக்கக் கூடாது என்பதைக் காட்டிலும் எஙகளிற்கு விரும்பியதை நாங்கள் உருவாக்குவதே வினைத்திறன் மிக்கது. உலகில், ஏதேதோ அதிகாரங்கள் தங்களிற்குப் பிடித்த உலகை சட்டங்களாலும் பலத்தாலும் உருவாக்க முயன்றும் அவர்களிற்கு அது சாத்;தியப்படவில்லை. எங்களிற்குப் பிடித்தவற்றை எங்களிற்குப் பிடிக்காதனவை வென்று எம்மால் உருவாக்கமுடியவில்லை எனின், அங்கு தேவைப்படுவது சுயவிமரிசனம் என்பது எனது தாழ்மையான கருத்து.

நாரதரும் நீங்களும் முன்வைக்கும் ஆதங்கம் புரிகிறது. எங்களைப் பற்றிய தவறான செய்திகளையும் உள்ளடக்கிய படைப்புக்களை நாங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடின் அது அப்படைப்புக்களை நாங்களும் ஆதரிக்கிறோம் என்ற அங்கீகாரத்தை அப்படைப்புக்களிற்கு வழங்கி அதன் மூலம் எங்களைப் பற்றிய தவறான செய்திகளையும் நியாயப்படுத்துகிறது என்பது. இந்த ஆதங்கத்தைப் பூரணமாக ஏற்றுக்கொள்ளுகின்றேன்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விரும்புவன மட்டும் உலகில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கப்போவதில்லை. நாங்கள் விரும்பும்படி உலகு அமையவேண்டும் எனின், எங்களிற்குப் பிடிக்காததை எவரும் உருவாக்கக் கூடாது என்பதைக் காட்டிலும் எஙகளிற்கு விரும்பியதை நாங்கள் உருவாக்குவதே வினைத்திறன் மிக்கது. உலகில், ஏதேதோ அதிகாரங்கள் தங்களிற்குப் பிடித்த உலகை சட்டங்களாலும் பலத்தாலும் உருவாக்க முயன்றும் அவர்களிற்கு அது சாத்தியப்படவில்லை. எங்களிற்குப் பிடித்தவற்றை எங்களிற்குப் பிடிக்காதனவை வென்று எம்மால் உருவாக்கமுடியவில்லை எனின், அங்கு தேவைப்படுவது சுயவிமரிசனம் என்பது எனது தாழ்மையான கருத்து.

:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.