Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது தாலிக்கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக அன்பளிப்புச் செய்த தமிழ்த்தாய்

Featured Replies

ரதி, வீட்டிலை இருந்து கழட்டிக் கொடுத்தால்... ஆர் சாட்சி?

நாலு பேருக்கு, முன்னாலை... நடு மண்டபத்திலை கழட்டிக் கொடுத்தால் தானே... நாலு பேர் சாட்சியாக இருப்பார்கள்.

நாளைக்கு... இந்த தாலிப் பணம் எதுக்கு செலவழிக்கப் பட்டது என்ற, கேள்வி வரும் என்று...தாலியைப் பெற்றுக் கொண்டவர்களும் தகுந்த கவனமாக இருப்பார்கள்

தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சி எடார்

வாய் திறந்து சும்மா கிளியே.......

Edited by athiyan

  • Replies 54
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சி எடார்

வாய் திறந்து சும்மா கிளியே.......

உண்மைகளை திருக்குறள்போல் இப்படி இரண்டு வரியில் எழுதுவது..............

வள்ளுவனுக்கும் உங்களுக்கும் மட்டுமே சாத்தியமானது.

எனக்கு பட்டதையும் ,பட்டுத் தெளிந்தவற்றையும் தான் எனக்கு எழுதமுடியும்.தாலிக்கொடி சென்டிமென்ட் எல்லாம் ரொம்ப ஓவர்.காசை வாங்கினீர்களா? ரிசிட்கொடுகொடுத்தீர்களா? என்ன செய்யப்பபோகின்ரீர்கள் என்று சொன்னாலே காணும்.சீன் காட்டுவது நல்லதிக்கில்லை என்பது என் அபிப்பிராயம்.இங்கு இருப்பவர்கள் பலர் புலம் பெயர் புலியிலும் இருந்தவர்கள்.உவர் பொன்.பாலராஜனிடம் சேர்த்த காசுகள் பற்றி கதைக்க வாங்கியவர்களிடம் போய் கேளுங்கள் என்று பதில் சொன்னவர்.

இதுவரை வன்னியில் முகாம்களில் இருப்பவர்களுக்கு என்ன செய்தார்கள்.தமிழ் தேசியகூட்டமைப்புடன்அல்லது நாட்டில் உள்ள மக்களுடனான தொடர்புகள் எது பற்றியும் மூச்சு இல்லை.

தலைவரை பற்றிய கேள்விக்கே பதில் சொல்ல வக்கில்லாத ஒருவர் தமிழர்களுக்கு விடுதலை எடுத்து தரப்போகின்றார்.நீங்களும் தாலிக்கொடியை கழட்டிக்கொடுங்கள்.

கோவிலிலும்,குளத்திலும்,காண்டத்திலும்,சாத்திரத்திலும் காசை கொண்டுபோய் கொட்டுவது பொல தான் எனக்கு உதுவும்.உங்களை நான் தடுக்கவில்லை எனக்கு சிரிப்பாக இருக்கு.

மேற்குலக நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிதிகள் போன்று இவரும் மக்கள் முன்னால் நின்று தெரிவுசெய்யப்பட்டவர். அப்பொழுதும் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதையும் மீறு இவருக்கு இருந்த மக்கள் ஆதரவு காரணமாக தெரிவு செய்யப்பட்டவர்.

அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்ற குற்றங்கள் ஆதாரத்துடன் முன்வைக்கப்படல்வேண்டும். இல்லை இந்த குற்றச்சாட்டு அகற்றப்படல் வேண்டும், இந்த கருத்தும் அகற்றப்படல் வேண்டும்.

தெரியாமல் தான் கேட்கிறேன் தாலியை கழட்டி கொடுக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை?...அன்று ஒருவரும் காசு கொண்டு போகவில்லையா?...இப்படி உசுப்பேற்றி காசு,நகைகள் பறிக்கும் வேலைகள் இன்னும் மக்களிடம் எடுபடுதா என்ன?

இதே களத்தில் எனது மகனின் இல்லை மகளின் பிறந்தநாளை எளிமையாகி கொண்டாடி, 'நேசக்கரம்' ஊடாக பல நல்லுறவுகள் உதவிகளை செய்கிறோம், அதையும் அநேகமானோர் பாராட்டுகிறோம்.

அதுவும் உசுப்பேற்றும் அணுகுமுறை என்று சொல்லலாம், தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

83 இல் அர்ஜுன் வெளிநாட்டில் இருந்து இயக்கம் ஒன்றில் இணைய இந்தியா போகின்றார். விசுகு அண்ணா அதே காலத்தில் பிரான்ஸ் வருகின்றார்.. அப்படியானால் தகுதி என்பது புலிகளின் ஆதரவாளர் என்பது மட்டுமா? தமிழ் மக்களின் விடியலின் மீதான நம்பிக்கை தகுதியாக இருக்காதா?

தமிழ் மக்களின் விடியலை 25 - 30 வருடங்களாக பல வழிகளிலும் வீச்சுடன் முன்னெடுத்த புலிகளின் அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் துக்ககரமாக முடிந்துவிட்டது. எனினும் தமிழ் மக்களின் விடியலின் தேவை முன்னரை விட அதிமுக்கியமாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் மிகமுக்கியமான விடயங்களில் அக்கறை காட்டாமல், ஒப்பு சாப்புக்கு அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு தமக்குள் கூறுபட்டு அதிகாரத்திற்காகவும் பதவிக்காகவும் குடுமிபிடிச் சண்டைகளும், குழிபறிப்புக்களையும் மேற்கொள்வோரினது மீதான நம்பகத்தன்மை அறவே ஒழிந்துவிட்டது.

ஆனால் இந்த அவமானகரமான அமைப்புக்களை இன்னமும் நம்பி தமிழ் மக்கள் விடியலைக் காணலாம் என்று இங்கு வரும் கருத்துக்களைப் பார்க்கும்போது வரலாறுகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு கூட்டமாக மாறிவிட்டோம் என்றுதான் தோன்றுகின்றது.

விசுகு

1983இல் வெளியில் வந்தார்

நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்தார்

..............

இப்படியே வைத்துக்கொள்வோம். இதனால் நாட்டுக்கோ போராளிகளுக்கோ போராட்டத்துக்கோ

எந்த இழப்புமில்லை.

83 இல் அர்ஜுன் வெளிநாட்டில் இருந்து இயக்கம் ஒன்றில் இணைய இந்தியா போகின்றார்.

போனவர் புலிகளை எப்படி அழிப்பது என்பதற்கான பயிற்சியை மட்டுமே எடுத்து வெளிநாடு வந்தார்.

இலங்கை அரசு புலிகளுடன் பேசப்போகிறோம் என்று சொல்லும்போதெல்லாம் முதலில் வெளிக்கிடுமே சிங்கள அதிதீவிரவாதம் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாய் ஆயிரம் மடங்கு வேகமாய் புலிகளுக்கு எதிராக உழைத்தவர் இவர். உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் இவரும் இவர் ஆதரிக்கும் கூட்டமும் எழுதிய பேசிய கக்கிய கவுட்டுக்கொட்டிய கோடிரிக்கொம்புத்தனமான அத்தனையையும் நாம் அறிவோம்.

அவர் சாதாரண தமிழராக வாழ்ந்திருந்தால் தற்போதும் வாழ்ந்தால் எவருக்கும் எந்த சிக்கலுமில்லை.

செய்பவர்களைக்கை காட்டணுமாக இருந்தால் அதற்கு அவர்மீதான விமர்சனமும் வரும். அதற்கு அவர் பதில் சொல்லணும்.

தமிழ் மக்களின் விடியலை 25 - 30 வருடங்களாக பல வழிகளிலும் வீச்சுடன் முன்னெடுத்த புலிகளின் அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் துக்ககரமாக முடிந்துவிட்டது

இதில் அரைவாசியை இவர்களுக்கு பதில் சொல்வதிலும் இவர் பேபாட்ட ஓட்டைகளை ஒட்டுவதிலுமே போனது என்பது தான் தோற்றுப்போனதன் அடித்தளம்.

காசை வாங்கினீர்களா? ரிசிட்கொடுகொடுத்தீர்களா? என்ன செய்யப்பபோகின்ரீர்கள் என்று சொன்னாலே காணும்.

ரொம்ப நல்ல வசனம்

அது எடுபடணும். எமது ஆசையும் அதுதான்.

சரி

ஒரு கேள்வி வருமே

அப்படி ரிசீட் கொடுத்தபோது இவர் கொடுத்தாரா???

அப்போதும் இல்லை இப்போதும இல்லை என்றால் ........???

மற்றும்படி தாலிக்கொடியைக்கழட்டிக்கொடுப்பது அதிலும் தலைவர்களே கொடுப்பது நல்லதாக தெரியவில்லை.

அது மக்களிடமிருந்து வரவேண்டும். வந்தது வரும்.

அது காலவேளைகளையும் தலைவர்களையும் பொறுத்து மக்கள் எடுக்கும் தீர்மானங்கள் ஆகும்.

அது வரலாறுகளில் உள்ளது. வரலாறுகளை வழி நடாத்தியும் உள்ளது.

.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இருந்து கொடுப்பவன் எல்லாம் தான் இவ்வளவு கொடுத்தனான்,இப்படி உதவி செய்தனான் என எழுத வெளிக் கிட்டால் ஒரு யாழ் காணாது...நான் நாடு கட‌ந்த அர‌சின் எதிரி இல்லை சொல்லப் போனால் அதைப் பற்றி கணக்கெடுப்பதே இல்லை அதைப் பற்றி மட்டும் இல்லை புலம் பெயர் அமைப்புகள் ஒன்றையுமே நான் கணக்கெடுப்பதில்லை எல்லோருக்கும் புலி இல்லை என்றவுட‌ன் துளிர் விட்டுப் போச்சு...இதையே ஊரில் இருக்கும் ஒரு அம்மா செய்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்

<p>

இதே களத்தில் எனது மகனின் இல்லை மகளின் பிறந்தநாளை எளிமையாகி கொண்டாடி, 'நேசக்கரம்' ஊடாக பல நல்லுறவுகள் உதவிகளை செய்கிறோம், அதையும் அநேகமானோர் பாராட்டுகிறோம்.

அதுவும் உசுப்பேற்றும் அணுகுமுறை என்று சொல்லலாம், தவறில்லை.

உதவி செய்வதில் தவறில்லை அதை அப்பட்டமாக பகிர‌ங்கப்படுத்தி பீத்திக்கிறது தான் தப்பு...யாழில் நேச‌க்கர‌ மூலம் ஒருவர் உதவி செய்தால் அதை சாந்தி அக்கா வந்து கணக்கு காட்டும் போது இன்னார்,இன்ன உதவி செய்தார் என எழுதுவதில் தப்பில்லை ஆனால் அதையே நான் வந்து இவ்வளவு கொடுத்தனான் என எழுதுவது தான் தப்பு....உதவி செய்ய விருப்பம் உள்ளோர்,மனம் உள்ளோர் தாங்களாகவே வந்து செய்வார்கள் மற்றவர்கள் சொல்லி செய்ய மாட்டார்கள் என்பது என் கருத்து
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தான் !!

நான் மட்டும் விடுவேனா???? :lol: நானும் தான். :D

ஒருவன் என்ன இன்று செய்கிறான் என்பதை வைத்தே நாளை அவனின் இடம் நிர்ணயிக்கப்படும்.

374206_10151072111865008_856330007_22062575_958931168_n.jpg

நாடு கடந்த உறுப்பினர் பொன்.பாலராஜன்

யாரும் ஆயுத போராட்டத்தையோ இல்லை ஜனநாயாக ரீதியான போராட்டத்தையோ இலகுவானது என சொல்லவில்லை.

மீண்டும் தலைவர் வருவார் இல்லை ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்றால் - அதற்கும் நக்கல், ஏளனம். சரி, சர்வதேச அரசியல் ஊடாக எமது நியாயங்களை வென்றெடுப்போம் என்றால் - அதற்கும் நக்கல், குற்றச்சாட்டுக்கள். இவர்களை நம்பி என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்விகள்.

அப்ப என்ன தான் செய்யவேண்டும்?, எப்படி செய்யவேண்டும்? என்றால், மௌனம்.

Good for nothing!

  • கருத்துக்கள உறவுகள்

அகூதாவுக்கு ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவிசாரணையின் அடுத்த கட்டத்துக்கான நகர்வுவுகளுக்காக

கூட்டம் போடுகிறார்கள்

தொலைபேசியில் ஆராய்கிறார்கள்

திட்டமிடுகிறார்கள்

என்றால் கடதாசி விமானத்திலும் கடதாசியில் அடித்த பணத்திலுமா இதுவெல்லாம் நடக்கு

அதை தொடர்ந்து ஒருவரே செய்யமுடியுமா?

எத்தனை தரம் தான் அவர் தாங்குவார்?

வந்திட்டினம் நானும் குத்தினனான் என்றபடி..............

இப்படியே குத்திக்கிட்டு இருங்கோ

நாங்களும் வந்து குத்திட்டு சிரித்து போறம் அவைக்கு

ஒருத்தனும் வரப்போறதில்லை இனி எம்மைக்காப்பாற்ற

எவனும் பிறக்கப்போவதில்லை பிரபாகரனாய்...................

Edited by விசுகு

இதே களத்தில் எனது மகனின் இல்லை மகளின் பிறந்தநாளை எளிமையாகி கொண்டாடி, 'நேசக்கரம்' ஊடாக பல நல்லுறவுகள் உதவிகளை செய்கிறோம், அதையும் அநேகமானோர் பாராட்டுகிறோம்.

அதுவும் உசுப்பேற்றும் அணுகுமுறை என்று சொல்லலாம், தவறில்லை.

நேசக்கரத்திற்கும் தாலியெல்லாம் கழட்டிகுடுத்திருக்கிறாங்களா?? . அவர்களும் தாலி சங்கிலி.காப்பு. அறுணாக்கொடி எல்லாம் வாங்கி வைச்சிட்டு பம்மிக் கொண்டு இருக்கினமா?? தெரியாமல் போச்சுதே.அகூதா நீங்கள் எத்தனை பவுண் சங்கிலியை அவையளிட்டை இழந்தனீங்கள்.

அப்பிடியே அர்ஜீனுக்கும் ஒரு பச்சை

Edited by DAM

நீங்கள் முழுமையாக செய்தியை / திரியை வாசிக்கவில்லை என எண்ணுகிறேன்.

நடந்தது - நாடுகடந்த அரசின் அமர்வில் இறுதி நாளன்று தேவைகள் முன்வைக்கப்பட்டு அதற்குரிய நிதி உதவி கேட்கப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த வயோதிப தாயார் தன்னிடம் இருந்த தாலிக்கொடியை கழற்றி கொடுத்துள்ளார்.

நேசக்கரத்திற்கும் தாலியெல்லாம் கழட்டிகுடுத்திருக்கிறாங்களா?? . அவர்களும் தாலி சங்கிலி.காப்பு. அறுணாக்கொடி எல்லாம் வாங்கி வைச்சிட்டு பம்மிக் கொண்டு இருக்கினமா?? தெரியாமல் போச்சுதே.அகூதா நீங்கள் எத்தனை பவுண் சங்கிலியை அவையளிட்டை இழந்தனீங்கள்.

அவரிடம் இருந்த சொத்தை அவர் அந்த இடத்தில் தன்னால் முடிந்த அதியுயர் அன்பளிப்பை செய்துள்ளார். அது 'செண்டிமென்டலாக' இருக்கலாம். பாட்டிக்கு அதற்கு மேலே உதவி செய்ய பணம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனம் உண்டு. அதற்காகவே பலரும் பாராட்டியுள்ளனர்.

அகூதா நீங்கள் எத்தனை பவுண் சங்கிலியை அவையளிட்டை இழந்தனீங்கள்

பகிரங்கமாக கேட்டுள்ளீர்கள் என்பதால் கூறிவிடுகிறேன். ஒரு சதமும் கொடுப்பதில்லை, சும்மா கதை மட்டும் தான். ஒருத்தருக்கும் தயவு செய்து சொல்லிவிட வேண்டாம்!

Edited by akootha

இங்கு இருந்து கொடுப்பவன் எல்லாம் தான் இவ்வளவு கொடுத்தனான்,இப்படி உதவி செய்தனான் என எழுத வெளிக் கிட்டால் ஒரு யாழ் காணாது...நான் நாடு கட‌ந்த அர‌சின் எதிரி இல்லை சொல்லப் போனால் அதைப் பற்றி கணக்கெடுப்பதே இல்லை அதைப் பற்றி மட்டும் இல்லை புலம் பெயர் அமைப்புகள் ஒன்றையுமே நான் கணக்கெடுப்பதில்லை எல்லோருக்கும் புலி இல்லை என்றவுட‌ன் துளிர் விட்டுப் போச்சு...இதையே ஊரில் இருக்கும் ஒரு அம்மா செய்திருந்தால் அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்

<p>உதவி செய்வதில் தவறில்லை அதை அப்பட்டமாக பகிர‌ங்கப்படுத்தி பீத்திக்கிறது தான் தப்பு...யாழில் நேச‌க்கர‌ மூலம் ஒருவர் உதவி செய்தால் அதை சாந்தி அக்கா வந்து கணக்கு காட்டும் போது இன்னார்,இன்ன உதவி செய்தார் என எழுதுவதில் தப்பில்லை ஆனால் அதையே நான் வந்து இவ்வளவு கொடுத்தனான் என எழுதுவது தான் தப்பு....உதவி செய்ய விருப்பம் உள்ளோர்,மனம் உள்ளோர் தாங்களாகவே வந்து செய்வார்கள் மற்றவர்கள் சொல்லி செய்ய மாட்டார்கள் என்பது என் கருத்து

வேலையால் வந்து சாப்பிடாமல் நாலு மணிக்கு நாடு கடந்த அரசின் கூட்டத்திற்கு ஓடினால் கோவிலில் ஒரு குருவியையும் காணோம் யாழில் வந்து கொச்சை தமிழில் எழுதுபவர் குத்துவிளக்கை துடைச்சு கொண்டு நிற்கின்றார்.வந்தனான் நிற்பம் என்று பார்த்தால் ஒருவழியாக ஆறுமணியளவில் தொடங்கி வரவேற்புரை,டான்ஸ்,தலைவர் உரை என்று வீடியோ.லோகன் கணபதி தமிங்கில உரை.எனக்கோ பெரும் பசி.கோவிலில் போய் ஏதும் புக்கை தின்பமோ என யோசிக்க அடுத்த பேச்சாளார் என்று ஒரு இந்திய தமிழ் பெங்களூர் விரிவுரையாளர் அறிமுகமானார்..ஏதோ நுயுமன் என்ற ஞபகம்.தமிழ் விதவைகளின் கணக்கு துல்லியமாக சொல்லி (எண்பதினாயிரமாம்) ஒவ்வொரு நாளும் சிங்கள ஆமிக்காரன் போய் கதவை தட்டுகின்றானாம்.சீமான் திறம் போல இருந்தது.(பாபு வீட்டில நல்ல சாப்பாடு போல).

இனியும் இருந்தால் ஏதும் வாயை விட்டு தர்ம அடி வாங்குவதை விட ஓடிவந்து விட்டேன்.

வந்து யாழை பார்த்தால் ரதியின் பதிவு 'இவர்களையெல்லாம் நான் கணக்கில எடுக்கின்றதில்லை"என்று இருக்கு.இவ்வளவு தெளிவு எனக்கு இருந்திருந்தால் எப்பவோ நான் மொட்கேஜை கட்டி முடித்திருப்பேன்.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் ஆயுத போராட்டத்தையோ இல்லை ஜனநாயாக ரீதியான போராட்டத்தையோ இலகுவானது என சொல்லவில்லை.

மீண்டும் தலைவர் வருவார் இல்லை ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்றால் - அதற்கும் நக்கல், ஏளனம். சரி, சர்வதேச அரசியல் ஊடாக எமது நியாயங்களை வென்றெடுப்போம் என்றால் - அதற்கும் நக்கல், குற்றச்சாட்டுக்கள். இவர்களை நம்பி என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்விகள்.

அப்ப என்ன தான் செய்யவேண்டும்?, எப்படி செய்யவேண்டும்? என்றால், மௌனம்.

Good for nothing!

பிரத்தியேகமாக பாசறையில் பயிற்சி எடுத்து வந்த ஒருத்தர் தான் இப்படி எல்லாம் எழுதுகிறார் என்பது சொல்லாமல் புரியும்.அதாவது மண்டையை கழுவி அனுப்பி இருக்கிறாய்ங்க. :D :D

நாடுகடந்த அரசு இப்ப வர வர யாழ்கள பாராளமன்றம் போல வந்து விட்டது........

யாரும் ஆயுத போராட்டத்தையோ இல்லை ஜனநாயாக ரீதியான போராட்டத்தையோ இலகுவானது என சொல்லவில்லை.

மீண்டும் தலைவர் வருவார் இல்லை ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்றால் - அதற்கும் நக்கல், ஏளனம். சரி, சர்வதேச அரசியல் ஊடாக எமது நியாயங்களை வென்றெடுப்போம் என்றால் - அதற்கும் நக்கல், குற்றச்சாட்டுக்கள். இவர்களை நம்பி என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்விகள்.

அப்ப என்ன தான் செய்யவேண்டும்?, எப்படி செய்யவேண்டும்? என்றால், மௌனம்.

Good for nothing!

அவரவர் விரும்பியவற்றை அவர்கள் செய்யட்டும்,செய்யப்படும் செயல்கள் ஒரு சிலரை மாத்திரம் திருப்தி படுத்தமுனையும் செயல்கள் போல் இருந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.நீரே மனம் தொட்டு சொல்லும் நாடுகடந்த தமிழிழ அரசு எத்தனை வீதம் பேரை பிரதிநிதிப்படுத்துது,எவ்வளவு பேர்கள் உருத்திரகுமாரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எதோ புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் ஒரு பழைய மாணவர் சங்கம் ,ஊர்சங்கம் மாதிரி எங்களால் முடிந்ததை செய்கின்றோம் என்றால் ஏற்றுக்கொள்கின்றோம், அதைவிட்டு விட்டு பிரதம மந்திரி, அந்த மந்திரி,இந்த மந்திரி என்று அவரவர்க்கு பேருக்கு பதவி கொடுத்தால் காணுமா?

தொடங்கிய அமைப்பே ஒரு வருடத்திற்குள் இரண்டாக போய் விட்டது,அதைபற்றி ஒரு தெளிவான விளக்கம் இன்னமும் இல்லை.அதைவிட ஊரை சுற்றிய கள்ளவர்களை எல்லாம் உள்வாங்கி வைத்திருக்கின்றீர்கள்.என்ன நியாயத்தின் அடிப்படையில் உங்கள் பின்னால் வருவது?

இன்று சரவணபவனின் பெட்டி சீ.ரீ ஆர்.இல் கேட்டேன்.வவுனியா,அனுராதபுரம்,மகசீன் இந்த மூன்று சிறைகளிலும் இருப்பவர்கள் தாங்கொணா கஷ்டங்களை அனுபவிப்பதாகவும்,அங்கு பல பெண்களும் இருப்பதாகவும் முடிந்தால் புலம் பெயர்ந்தவர்களே ஏதாவது செய்யுங்கள் என்றார்.

இங்கு இருக்கும் அமைப்புக்கள் எல்லாரும் எல்லாத்தையும் செய்யாமல் ஆளுக்கொரு வேலைத்திட்டத்தில் இறங்கினால் யார் உண்மையில் சரியாக செயற்படுகின்றார்கள் என அறியமுடியும்.கடைசி ஒன்றிரண்டு வேலைத் திட்டங்களாவது உருப்படியாக முடியும்.

முதலில் நாடு கடந்த அரசை ஒன்றை உருப்படியாக தொடங்க சொல்லுங்கள் பலர் பின்னால் வருவார்கள்.

அர்ஜுன், உமக்கு முதல் பச்சை போட்டது நான்தான்! ... தெரியும் உம் கண்ணீர் எல்லாம், ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத நிலை கணக்காகத்தான் என்று! ... ஆனால் ஓநாய்களையும் அழுவதற்கு இடம் கொடுத்து விட்டார்கள் ... அதுக்குத்தான் பச்சை!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் விரும்பியவற்றை அவர்கள் செய்யட்டும்,செய்யப்படும் செயல்கள் ஒரு சிலரை மாத்திரம் திருப்தி படுத்தமுனையும் செயல்கள் போல் இருந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.நீரே மனம் தொட்டு சொல்லும் நாடுகடந்த தமிழிழ அரசு எத்தனை வீதம் பேரை பிரதிநிதிப்படுத்துது,எவ்வளவு பேர்கள் உருத்திரகுமாரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எதோ புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் ஒரு பழைய மாணவர் சங்கம் ,ஊர்சங்கம் மாதிரி எங்களால் முடிந்ததை செய்கின்றோம் என்றால் ஏற்றுக்கொள்கின்றோம், அதைவிட்டு விட்டு பிரதம மந்திரி, அந்த மந்திரி,இந்த மந்திரி என்று அவரவர்க்கு பேருக்கு பதவி கொடுத்தால் காணுமா?

தொடங்கிய அமைப்பே ஒரு வருடத்திற்குள் இரண்டாக போய் விட்டது,அதைபற்றி ஒரு தெளிவான விளக்கம் இன்னமும் இல்லை.அதைவிட ஊரை சுற்றிய கள்ளவர்களை எல்லாம் உள்வாங்கி வைத்திருக்கின்றீர்கள்.என்ன நியாயத்தின் அடிப்படையில் உங்கள் பின்னால் வருவது?

இன்று சரவணபவனின் பெட்டி சீ.ரீ ஆர்.இல் கேட்டேன்.வவுனியா,அனுராதபுரம்,மகசீன் இந்த மூன்று சிறைகளிலும் இருப்பவர்கள் தாங்கொணா கஷ்டங்களை அனுபவிப்பதாகவும்,அங்கு பல பெண்களும் இருப்பதாகவும் முடிந்தால் புலம் பெயர்ந்தவர்களே ஏதாவது செய்யுங்கள் என்றார்.

இங்கு இருக்கும் அமைப்புக்கள் எல்லாரும் எல்லாத்தையும் செய்யாமல் ஆளுக்கொரு வேலைத்திட்டத்தில் இறங்கினால் யார் உண்மையில் சரியாக செயற்படுகின்றார்கள் என அறியமுடியும்.கடைசி ஒன்றிரண்டு வேலைத் திட்டங்களாவது உருப்படியாக முடியும்.

முதலில் நாடு கடந்த அரசை ஒன்றை உருப்படியாக தொடங்க சொல்லுங்கள் பலர் பின்னால் வருவார்கள்.

சொல்லுங்கள்???

நாடு கடந்த அரசு தமிழருக்கு விடிவை தேடி கொடுத்தால் அதில் பாதி அகூதாவிட்கு கொடுப்பதாக ஏதும் சாத்திய பாடு உள்ளதா?

ஒழுங்காய் செயுமட்டும் காந்திருந்துவிட்டு தான் பின்னல் போய் ஓட்டவேண்டுமா?

ஒரு வேளை அதையும் அதிகாரவர்க்கமும் உலக சண்டியர்களும் இல்லாது ஒழித்தால்................ எனக்கு அப்பவே தெரியும் என்று கக்கிவிட வாய்ப்பிருக்கும்.

எல்லா கதவும் திறந்துதான் உள்ளது.................. விரும்பியவர்கள் உள்நுழையலாம்.

உண்மையானவர்கள் பின்னிட்பதனாலேயே கள்வர்களுக்கு அது வைப்பாக போகிறது. அதன்

பின்பு விட்ட பிழைகளை ஆராய்கிறோம் என்ற பெயரில் எடுக்க போகும் வாந்திகளும் எந்த புல்லையும் புடுங்க போவதில்லை.

சிறையிலே இருக்கும் கைதிகள்?

இதில் நாடு கடந்த அரசு நேரிடியாக தலை இட்டால் முடிவு என்னதாய் இருக்கும் என்று தெரியாதவர்களுக்கு அதை சொல்லியும் புரிய வைக்க முடியாது.

தவிர காசு போனால் வெளியிலே விடுவோம் எனும் நிலையை அல்லது பிடியை அரச இராணுவம் ஏன் வைத்திருக்கிறது? இது பால் குடிகளுக்கே தெரிந்திருக்க கூடியது.

முள்ளில் சேலை விழுந்துவிட்டால் ................. பொறுமையான நகர்வுகளே சேலையை முள்ளின் பிடியில் இருந்து மீட்கும்.

தமிழரை இந்த நிலையில் அரசு வைத்திருப்பதே புலம்பெயர் தமிழரின் பணத்தில் அரசாங்க கடனை அடைக்க................... அதற்காக எம்மால் அதை தடுக்கவும் முடியாது. மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத இந்த நிலையை கடப்பது என்றால்.............. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய ஏதும் இல்லை.

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழம் பெருமையடைகிறது (முகமூடி கிழிபடுது)

நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம்.

மா.ஜெயக்குமார்.

a_Kunaseelan.jpgஇத்தால் சகல புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேதாவிகளுக்கு இத்தால் அறியத்தருகின்றோம்.

தமது ஆட்படை பற்றியும், தமது செல்வாக்கு பற்றியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், புலம் பெயர் பரப்பெங்கும் பொங்கு புகழ் பாடிவரும் இந்த கூட்டம், இன்று அட்லீஸ் ஒரு எம் பி பதவிக்கு ஆள் இல்லாமல், ஈபிடிபி உறுப்பினராகவும், பின்னர் ஈபிடிபி மாற்றுக் கட்சி உறுப்பினராகவும், முழு நேர புலி யெதிர்ப்பு உணர்வாளராகவும், செயற்பாட்டாளராகவுமிருந்த குணசீலன் வன்னியசிங்கம் என்கின்றவரை நாடுகடந்த தமிழீழ எம்பியாக தெரிவு செய்துள்ளனர். இவர் ஈபிடிபியில் இருக்கும் போது, ஈபிடிபியின் சகல வழங்களையும் பயன் படுத்தி, புலம் பெயர் தேசத்தில் தன்னையும், தனது குடும்பத்தையும் வளம் படுத்திக் கொண்டவர்.

1990 முதல் 1996 வரை தீவுப் பகுதியில் புலிகளுக்கெதிராக நடந்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் பொறுப்பானவர் இவர் என்பதும், இவர் செய்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் வக்காலத்து வாங்கப் போய்த்தான் இன்று, இராமேஸ்வரன். முகவரியற்றுப் போய் இருக்கின்றார். ஆனால் முரட்டுத்தனம் உள்ள இவருக்கு தமிழீழ அரசு முகவரி வழங்கி மீண்டும் ஒரு தரம் அந்த மாவீரர்களின் முகத்தில் கரியை பூசிக் கொள்கின்றது. இவ்வாறான செயற்பாட்டாளர்களை அருகில் இணைத்து வைத்துக்கொண்டவர்களை நம்பியா தாய்க்குலம் நாடுகடந்த தமிழீழத்துக்கு தாலிக்கொடிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

30/7/1996 இல் இவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நவமணி பத்திரிகையில் பேட்டி அளித்ததுடன், அதே டக்ளஸ் தேவானந்தா கடந்த வருடம் இங்கிலாந்து வந்த போது அவருடன் இணைந்து வேலை செய்வதாக வாக்குறுதியும் அளித்திருந்தார். அது மட்டுமல்லாமல் டக்ளஸ் தேவானந்தாவின் தற்போதைய இங்கிலாந்து பிரதிநிதிகளுடன் இன்றும் நேரடி தொடர்பில் இருப்பதை, இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் நெப்போலியனை கேட்டால் தெரியும்.

தமிழா உனக்கேன் இந்த சாபக்கேடு. இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்களால்தான். வாழ்க நாடுகடந்த தமிழீழத்தின் பொதுப்பணி.

படம்: நாடு கடந்த தமிழீழத்திற்காக தாலி வழங்கும் நிகழ்வொன்றில் வி.உருத்திரகுமாருடன் குணசீலன் வன்னியசிங்கம் (நடுவில் நிற்பவ

http://aaivuu.wordpress.com/

நாப்பது லட்சம் சனத்துக்கு முப்பத்தஞ்சு இயக்கம் என்றளவில் பெரும்பாலான சனங்கள் ஏதொ ஒரு இயக்கம் சம்மந்தப்பட்டும் சம்மந்தப்பட்டவரின் உறவு வட்டத்தில் சம்மந்தப்பட்டும் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கின்றது. இது தவிர கருணாவின் பிரதேசவாதம் சார்ந்தவர்கள் மதம் சார்ந்தவர்கள் என்னும் நூறுவித கருத்துநிலை சார்ந்தவர்கள் ஊடுருவவும் நிறைய சந்தர்ப்பம் இருக்கின்றது. அது போக கேபி காஸ்ரோ நெடியவன் பிறகு இப்ப புதிதாக வினாயகம் மயூரன் என்று ஏகப்பட்ட பிரிவுகள் வருகின்றது.

ஆகவே இவற்றை எல்லாம் தவத்தி ஒரு அமைப்பை உருவாக்கினால் ஒரு நூறு நூற்றியம்பது பேர் தேறுவினம். அவர்களுக்கு எங்காவது ஒரு நிலப்பகுதியை வாங்கி புலிக்கொடியை குத்தி அரசை நிறுவ வேண்டியதுதான். நாடும் கிடைத்துவிடும் சிங்களவர்களுடனும் மல்லுக்கட்டத்தேவையில்லை.

இந்த நிகழ்வு 1991ம் ஆண்டை கண் முன் நிறுத்தியது.புஸ்பவனம் குஸ்புசாமி பாட பெரிய சாக்குபைகளில் நகைகளை சேர்த்தார்கள்.அப்போதும் தாலிக்கொடி தெரியவில்லை தனி ஈழம் தான் தெரிந்தது.இப்போதும் அதுதான் தெரிகிறது.

அது 1991ஆம் ஆண்டல்ல. 1998ஆம் ஆண்டு. சீ.என்.இல் மாவீரர் நாள் நிழ்வின்போது, 'அள்ளிக் கொடுங்கையா அள்ளிக் கொடுங்கையா' என மக்களுக்குள் பாடிக் கொண்டு வந்து கொண்டிருந்தபோது ஒரு அம்மா தன் தாலிக் கொடியைக் கழட்டிக் கொடுத்தார்.

நாடுகடந்த தமிழீழம் பெருமையடைகிறது (முகமூடி கிழிபடுது)

நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம்.

மா.ஜெயக்குமார்.

a_Kunaseelan.jpgஇத்தால் சகல புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேதாவிகளுக்கு இத்தால் அறியத்தருகின்றோம்.

தமது ஆட்படை பற்றியும், தமது செல்வாக்கு பற்றியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், புலம் பெயர் பரப்பெங்கும் பொங்கு புகழ் பாடிவரும் இந்த கூட்டம், இன்று அட்லீஸ் ஒரு எம் பி பதவிக்கு ஆள் இல்லாமல், ஈபிடிபி உறுப்பினராகவும், பின்னர் ஈபிடிபி மாற்றுக் கட்சி உறுப்பினராகவும், முழு நேர புலி யெதிர்ப்பு உணர்வாளராகவும், செயற்பாட்டாளராகவுமிருந்த குணசீலன் வன்னியசிங்கம் என்கின்றவரை நாடுகடந்த தமிழீழ எம்பியாக தெரிவு செய்துள்ளனர். இவர் ஈபிடிபியில் இருக்கும் போது, ஈபிடிபியின் சகல வழங்களையும் பயன் படுத்தி, புலம் பெயர் தேசத்தில் தன்னையும், தனது குடும்பத்தையும் வளம் படுத்திக் கொண்டவர்.

1990 முதல் 1996 வரை தீவுப் பகுதியில் புலிகளுக்கெதிராக நடந்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் பொறுப்பானவர் இவர் என்பதும், இவர் செய்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் வக்காலத்து வாங்கப் போய்த்தான் இன்று, இராமேஸ்வரன். முகவரியற்றுப் போய் இருக்கின்றார். ஆனால் முரட்டுத்தனம் உள்ள இவருக்கு தமிழீழ அரசு முகவரி வழங்கி மீண்டும் ஒரு தரம் அந்த மாவீரர்களின் முகத்தில் கரியை பூசிக் கொள்கின்றது. இவ்வாறான செயற்பாட்டாளர்களை அருகில் இணைத்து வைத்துக்கொண்டவர்களை நம்பியா தாய்க்குலம் நாடுகடந்த தமிழீழத்துக்கு தாலிக்கொடிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

30/7/1996 இல் இவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நவமணி பத்திரிகையில் பேட்டி அளித்ததுடன், அதே டக்ளஸ் தேவானந்தா கடந்த வருடம் இங்கிலாந்து வந்த போது அவருடன் இணைந்து வேலை செய்வதாக வாக்குறுதியும் அளித்திருந்தார். அது மட்டுமல்லாமல் டக்ளஸ் தேவானந்தாவின் தற்போதைய இங்கிலாந்து பிரதிநிதிகளுடன் இன்றும் நேரடி தொடர்பில் இருப்பதை, இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் நெப்போலியனை கேட்டால் தெரியும்.

தமிழா உனக்கேன் இந்த சாபக்கேடு. இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்களால்தான். வாழ்க நாடுகடந்த தமிழீழத்தின் பொதுப்பணி.

படம்: நாடு கடந்த தமிழீழத்திற்காக தாலி வழங்கும் நிகழ்வொன்றில் வி.உருத்திரகுமாருடன் குணசீலன் வன்னியசிங்கம் (நடுவில் நிற்பவ

http://aaivuu.wordpress.com/

நீங்கள் இவருக்கு வாக்களித்துத் தெரிவு செய்ததனால்தான் நாடு கடந்த அரசாங்கமும் அவரைத் தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இவருக்கு வாக்களித்த மக்களை நீங்கள் முதலே தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே....

  • கருத்துக்கள உறவுகள்

பங்களிப்பு என்று ஊரில் கேட்டு வரும் போது 30 வருடமாய் தமிழனை தலைநிமிர்த்தி வாழவைத்த தெய்வங்களின் மனைவிமார் கட்டியிருந்தது வெறும் மஞ்சள் கயிறு தாலி இங்கு பங்களிப்பு கேட்டு வருபவர்களின் மனைவிமார்களின் நகைகளை வித்தால் sri lankaவை வாங்கலாம்.படங்களை போட்டால் yarl server சூடு தாங்காது புகை விடும்.

அப்படியே மருதங்கேணிக்கும் ஒரு பச்சை. இங்கு கருத்தெழுதியவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசிற்குத் தெரியப்படுத்தி, அவர்கள் உதாசீனப் படுத்திய பிறகு எழுதியிருந்தால் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நீங்களும் செய்ய மாட்டீர்கள். செய்ய முனைபவர்களையும் ஆயிரம் குறை கூறுவீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் இதனை உரிய முறையில் உரிய வழியில் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். யாழில்கூட அவ்வரசிலிருந்து ஒருவர் பதிந்திருக்கிறார். குறைந்த பட்சம், அவருக்குத் தனிமடலிலாவது தெரிவியுங்கள்.....

பங்களிப்பு என்று ஊரில் கேட்டு வரும் போது 30 வருடமாய் தமிழனை தலைநிமிர்த்தி வாழவைத்த தெய்வங்களின் மனைவிமார் கட்டியிருந்தது வெறும் மஞ்சள் கயிறு தாலி இங்கு பங்களிப்பு கேட்டு வருபவர்களின் மனைவிமார்களின் நகைகளை வித்தால் sri lankaவை வாங்கலாம்.படங்களை போட்டால் yarl server சூடு தாங்காது புகை விடும்.

தனிப்பட்ட ரீதியில் ஒருசிலர் நீங்கள் கூறியது போல நடக்கலாம். ஆனால், எல்லோரையும் இவ்வாறு ஒரே போர்வையால் போர்த்துவது சரியல்ல.

இப்படியான கருத்துக்களால் பல நேர்மையானவர்கள் கூட பின்னடிப்பது கண்கூடு.

தமிழச்சி கூறுவது போல நாம், எமது அரசு, எமது ஜனநாயகம் - எனவே நாம் நேரடியாக தொடர்புகொண்டு பிழை விடுபவர்களை ஆதாரத்துடன் சர்ப்பிக்கவேண்டும். ஏனெனில் இது ' கத்தியோடு சேர்த்து புத்தியையும் பாவிக்கவேண்டிய காலம்', நீங்கள் கூறுவது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.