Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசர உதவி: ஆட்டுக் குடல் கறி எப்படி சமைப்பது

Featured Replies

நேற்று மார்க்கம் & டெனிசன் பகுதியில் இருக்கும் கடை ஒன்றில் ஆட்டுக்குடலை பார்த்தவுடன் ஆசையில் வாங்கி கொண்டு வந்து விட்டேன். இப்ப அதை எப்படி கழுவுவது, சமைப்பது என்று தெரியவில்லை. ஆருக்கும் தெரிந்தால் உடனடியாக சொல்லவும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி ஆட்டுக்குடலை பிறிஜ்சால எடுத்துவைச்சுட்டு இந்தத் திரியையே உத்து உத்துப் பாத்துக்கொண்டிருக்கிறார்...ஆட்டுக்குடல் பழுதாக முன்னம் ஆராவது உதவி செய்யுங்கோ.. :lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக் குடலை நான்சொல்வது போல் கழுவுங்கள். வெளி மேடையில் வைத்து குடலை அமத்திப் பிதுக்கி உள்ளிருக்கும் புழுக்கைகளை வெளியில் எடுத்து விட்டு பின் ஹோஸ் பைப்பால் தண்ணீரை அளவாகத் திறந்து குடல் குழலுக்குள் பிடித்துக் கழுவுங்கள். கொஞ்சம் மஞ்சளும் சேர்த்து கழுவுவது நல்லது.பின் அதை சிறு துண்டுகளாய் வெட்டி பாத்திரத்தில் சிறிது உப்பும் தூளும் போட்டு பிரட்டி வையுங்கள்.

நான் இவ்வளவும்தான் செய்து குடுப்பது. கொஞ்சம் காத்திருங்கள் . யாரும் வருவினம்.

ஆட்டுக் குடல் குழம்பு

ஆட்டுக்குடல் – 1

மல்லி – 2 தேக்கரண்டி

வெங்காயம் அறுத்தது – 1 கையளவு

உப்பு – தேவையான அளவு

மிளகாய் வற்றல் – 6

சீரகம் – 3 தேக்கரண்டி

இஞ்சி – 1 சிறு துண்டு

நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.

http://chettinadcook...AE%AA%E0%AF%81/

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா மஞ்சளுடன் தேசிப்புளியும்சேர்த்துக் கழுவவேண்டும் அப்போதுதான் குடலில் உள்ள வெடில் மணம் போகும் என்பார்கள் மிச்சம் சொல் யாராவது வரமாட்டார்களா என்ன?

இஸ்லாமியர்கள் சமைக்கும் ஆட்டுக் குடல் கறி சாப்பிட்டிருக்கிறேன். நன்றாக இருக்கும். இன்று கூட தமிழரசு இணைத்த ஈரல் வறுவலைப் பார்த்ததும் ஆட்டுக் குடல் கறிதான் ஞாபகம் வந்தது. அவசரத்திற்கு இந்த முறையில் செய்யலாம். குளிர் நீரில் கழுவிய பின் மஞ்சள் உப்புப் போட்டு அவிக்க வேண்டும். pressure cooker இல் அவித்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக்குடல் குழம்பு

  • குடல் - ஒன்று

  • வெங்காயம் - 100 கிராம்

  • தக்காளி - 3

  • பச்சைமிளகாய் - 4

  • பூண்டு - 8 பல்

  • இஞ்சி - அரை இன்ச் அளவு

  • சோம்பு - ஒரு தேக்கரண்டி

  • சீரகம் - ஒரு தேக்கரண்டி

  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

  • மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி

  • மல்லிப்பொடி - 4 தேக்கரண்டி

  • தேங்காய் - அரை மூடி

  • புளி - பாக்களவு

  • எண்ணெய் - 2 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

  • பட்டை - ஒன்று

  • கிராம்பு - ஒன்று

  • இலை - சிறிது

  • கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது

  • குடலை நன்கு கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் குடலைப்போட்டு வதக்கவும். தண்ணீர் விட்டு வரும்.

  • சுருள வதங்கியவுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு குக்கரிலும் வைக்கலாம்.

  • சோம்பு, சீரகம் அரைத்து அதனுடன் பூண்டு, இஞ்சி, 8 வெங்காயம் போட்டு அரைத்து குடலில் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

  • நன்கு வெந்தவுடன் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை தாளித்து 4 நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி குழம்பில் போட்டு, புளியை ஊற்றி கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி வற்றியவுடன் இறக்கவும்

சுவி அண்ணா மஞ்சளுடன் தேசிப்புளியும்சேர்த்துக் கழுவவேண்டும் அப்போதுதான் குடலில் உள்ள வெடில் மணம் போகும் என்பார்கள் மிச்சம் சொல் யாராவது வரமாட்டார்களா என்ன?

ஆ......... தேசிப் புளி, அத்துடன் கல் உப்பு பாவித்தால் நல்லது. அவிக்கும் பொழுதே ஒரு கருவாப்பட்டை, ஏலம், கராம்பு சேர்த்து அவித்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
009.JPG
  • தொடங்கியவர்

ஆஹா.... இது இவ்வளவு கஷ்டமான ஒரு கறியா.....

வெளியே எடுத்து வைத்த குடலை, மீண்டும் Fridge இற்குள் வைத்து விட்டேன்...அடுத்த சனிதான் இனி முயல்வது

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... நான் சாப்பிட வந்துவிடுவேனென்று எடுத்து ப்ரிஜில் வைத்து விட்டீர்களா?....

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக் குடலை நான்சொல்வது போல் கழுவுங்கள். வெளி மேடையில் வைத்து குடலை அமத்திப் பிதுக்கி உள்ளிருக்கும் புழுக்கைகளை வெளியில் எடுத்து விட்டு பின் ஹோஸ் பைப்பால் தண்ணீரை அளவாகத் திறந்து குடல் குழலுக்குள் பிடித்துக் கழுவுங்கள். கொஞ்சம் மஞ்சளும் சேர்த்து கழுவுவது நல்லது.பின் அதை சிறு துண்டுகளாய் வெட்டி பாத்திரத்தில் சிறிது உப்பும் தூளும் போட்டு பிரட்டி வையுங்கள்.

நான் இவ்வளவும்தான் செய்து குடுப்பது. கொஞ்சம் காத்திருங்கள் . யாரும் வருவினம்.

மன்னா..

பாதுகாப்பாக புழுக்கையை எடுத்துவிட்டீர்கள்.. சரி..! அதை எப்படிச் சமைப்பது? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.... இது இவ்வளவு கஷ்டமான ஒரு கறியா.....

வெளியே எடுத்து வைத்த குடலை, மீண்டும் Fridge இற்குள் வைத்து விட்டேன்...அடுத்த சனிதான் இனி முயல்வது

இருந்தாலும் நிழலி ஒரு அவசர உதவிஎண்டவுடன் நானும் தேடிப்பிடிச்சு இணைப்பைப்போட்டன் செய்து சாப்பிட்டு விட்டு நல்லது கேட்டது சொல்வார் அதன் பின் நானும் மனைவியிடம் சொல்லி குடல்கறி செய்து சாப்பிடலாம் என எண்ணி இருக்க நிழலி குடலை தூக்கி Fridge இற்குள் வைத்து விட்டார் என்ன இப்படி செய்துபோட்டிங்கள் இது ஞாயமா ? :D:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

Bizzare Cooking - Goat's Intestine & Stomach

boti+varuval+close.JPG

boti+varuval+2.JPG

boti+varuval.JPG

boti+raw.JPG

Boti Varuval:(Country Style)

Bizzare Cooking! Caution....beep...beep...beep!

Goat's Stomach and Intestine Fried Recipe. I have a way to tell goats spare parts actually...to make it little appealing!

Goat's Head - Crown

Goat's Stomach - Turkey Towel

Well....goat's stomach comes with intestine! Hmmmmmm pretty weird cooking, huh! Actually after Bakrid Qurbani....my next door aunty(Rasiya's Mother) cooks all these spare parts....everything in a unique way. So I learnt all about Goat's liver, Goat's Mann-Eeral(other type of liver), Goat's head, Goat's stomach, Goat's Blood....Goat's brain, Goat's Kidney! Practically never cooked 'Kidney recipe tho'! Oh my goodness....how many seminars, I would have given about kidney, nephrons and stuff!

But....since I never saw that aunty cleaning the stomach and intenstines, I was able to push them into my tummy! Thanks to Rasiya's Mom!

Okay...coming up to cleaning part! Try to make your butcher do most of the job!:) Add 1 spoonfull of baking soda, salt and turmeric to a crock pot full of water. Now immerse them and boil well! Then using a knife scrape down the turkey towel's(stomach)....dark ridges! Sqeeze if at all the intestines have any contents! Wash several times and make the running water go clear! Got it...yeah then all set for cooking!

Ingredients:

Goat's Stomach + intestines chopped 1 bowl

Ginger-garlic paste 1 spoon

Salt

Turmeric powder 1/4 spoon

Chili powder 1 spoon

Pepper powder 1/2 spoon

Grated coconut 1/4 cup

Mustard seeds 1/2 spoon

Cumin seeds 1 spoon

Chana dal 2 spoons

Urad dal 2 spoons

Curry leaves few

Sesame oil few spoons.

Method:

In a iron wok, heat oil. Add mustard and cumin....wait till it crackles up.

Add chana and urad dal. Then followed by curry leaves too.

Stir-in semi-cooked(already we boiled them, right)boti in it. Fry for few minutes. Maybe till it becomes opaque.

Addd salt, turmeric, chili and pepper powders. Stir-fry over high heat!

Whent hey are almost done, add coconut and stir-fry over high....for another 2 minutes.

Serve warm as a side didh to go with your Rasam Rice!

http://www.kitchentantra.com/2006/11/kova-jangiri.html

ஆஹா.... இது இவ்வளவு கஷ்டமான ஒரு கறியா.....

வெளியே எடுத்து வைத்த குடலை, மீண்டும் Fridge இற்குள் வைத்து விட்டேன்...அடுத்த சனிதான் இனி முயல்வது

என்னது அடுத்த சனி வரைக்கும் ஆட்டுக் குடல் fridge ல் வைத்து விட்டு நீங்கள் குடும்பத்துடன் வெளியில் நிற்கிற பிளானா? :blink::o:lol: (freezer-ல் வைத்து விடுங்கோ)

சில கடைகளில் அரைவாசி அவித்து விற்பார்கள், அவிக்கும் போது அதிக மணம் வராது. நீங்கள் வாங்கியது அவித்ததா? அவிக்காததா என்று பாருங்கள்..

முதலில் (குடலை washing up liquid போட்டுக் கழுவுங்கள்... :lol: :lol: :D)

1 கடுகு அரைத்து அல்லது mustard paste (மணத்தை அகற்றுவதற்கு), மஞ்சள் தூளுடன் சேர்த்துக் இரண்டு மூன்று தரம் கழுவியபின்பு பெரிய பாத்திரத்தில் போட்டு சுடு நீரில் 45 நிமிடங்களாவது அவியுங்கள். (நன்றாக அவிக்க வேண்டும், இல்லாவிட்டால் வயிறு வலிக்கும் என்பார்கள்) சிலர் பழப்புளி சேர்த்து அவிப்பார்கள் கெதியில் அவியும் என்பதற்காக...

2 சமையலறைக் கதவை காற்றுப் புகா வண்ணம் நன்கு பூட்டிய பிறகு, ஜன்னல்களை நன்கு திறந்து விடுங்கள் (நாம் பெற்ற மணம் அயலவரும் பெறுக! எல்லாம் ஒரு பிற சிநேகம்... ^_^:icon_mrgreen:)

3 நன்றாக அவிந்தபின்பு சிறு துண்டுகளாக வெட்டி, இறைச்சிக் கறி எப்படி சமைப்பீர்களோ அப்படியே சமையுங்கள்.

------

இணையத்தில் தேடியபோது கிடைத்தது...

http://solaiachiskit...-intestine.html

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் குடலை வடிவாக சுத்தம் செய்ய வேண்டும்,இரண்டாவது நன்றாக அவிக்க வேண்டும் இல்லா விட்டால் வருத்தம் வந்து விடும்...நான் சாப்பிடுவதில்லை சாப்பிட்டவர்கள் சொன்னது...கழுவும் போதே மஞ்சல் போட்டு கழுவவும்...கழுவிய பின் மஞ்சல்,உப்பு,தே.புளி சேர்த்து ஒரு மணித்தியாலமாவது ஊற வைத்தால் நல்லது அதன் பின் நாங்கள் சாதரணமாக இறைச்சி சமைப்பது மாதிரி சமைக்க வேண்டும்...எதற்கும் கு.சா அண்ணா போன்ற விற்பன்னரின் கருத்தையும் கேட்கவும்

இதைப் பார்க்க மனிசருக்குக் குடலே வெளியில் வந்திவிடும் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இனியும்.... குடல் சாப்பிடும் ஆசை நிழலிக்கு இருக்குதா? :D:lol:

முஸ்லிம்கள் வித்தியாசமான முறையில் சமைப்பார்கள். அந்த மாதிரியிருக்கும். இறைச்சிக் கறியை விட சுவையாக இருக்கும். சாப்பிட்டது மாத்திரம்தான் செய்முறை தெரியவில்லை. நானும் அந்த முறையை கன காலமாத் தேடித் திரிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் யாழ்ப்பாணத்தில் கள்ளுக் கொட்டில்களுக்கு அருகில் குடல் கறி விற்பார்கள். நல்ல உறைப்பாக இருக்கும். பூவரசம் இல்லை, முருக்கம் இலையில் வைத்துத் தருவார்கள். சும்மா சொல்லக் கூடாது நல்ல டேஸ்ட்டாக இருக்கும். அது சரி, டேஸ்டுக்கு தானே அது!! :)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

...கடைசியில் என் மனைவியின் மச்சாளிடம் சமைத்து தாருங்கள் என்று கேட்டு, அவவிடமே ஆட்டுக் குடலை கொடுத்து சமைக்கச் சொல்லி இன்று சாப்பிட்டேன்... புட்டும் ஆட்டுக் குடல் கறியும் மிகச் சிறந்த ஒரு கலவை.....ஏவ்வ்.. .

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரிரு முறை, நண்பர்களின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்ற போது.... குடல்கறி சாப்பிட்டுள்ளேன். நன்றாக இருந்தது.

ஆனால் இன்னும்.... ஆட்டு மூழைக் கறியும், இரத்த வறையும் சாப்பிடவில்லை.

இரத்த வறை சாப்பிடுவதில் அவ்வளவு ஆர்வம் இல்லாவிட்டாலும், ஆட்டு மூழை சாப்பிட்டுப் பார்க்க வேணும் என்று, ஆசை.... சாதுவாக எட்டிப்பார்க்கிறது. வழக்கமாக ஆட்டு இறைச்சியை.... வாங்கும் பண்ணையில், நத்தாருக்கு ஆட்டுத்துடை வாங்கிய போது, இறைச்சி வெட்டுபவர் ஆட்டுத்தலை வேணுமா ? என்று கேட்டார். வேண்டாம் என்று சொல்லி விட்டு, துடையுடன் வந்துவிட்டேன். அவர் ஆட்டின் தலையை இரண்டாகப் பிளந்து மற்றவர்களுக்கு, கொடுப்பதை பார்க்க ஒரு மாதிரி இருந்தது. ஆட்டு மூழையை அப்படியே... தலையுடன் போட்டு சமைக்க வேணுமா?

அதுக்கு... எவ்வளவு உப்புப், புளி போடுறது என்று ஆராவது சொன்னால்.... புண்ணியமாகப் போகும்.

இந்தத் திரியை வாசித்தபின், ஆட்டுக் குடல் சாப்படுவதில்லை என முடிவெடுத்துவிட்டேன். புழுவை ஞாபகப்படுத்திய சுவிக்கு நன்றி. :( :(

  • கருத்துக்கள உறவுகள்

மூளை வறுவல்

தேவை:

மூளை – 2

சின்ன வெங்காயம் – 50 கிராம்

சீரகம் – 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் – 1 தேக்கரண்டி

மல்லித்தூள் – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

2 மூளைகளை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். 50 கிராம் சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக்கிக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் 8 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் 1/2 தேக்கரண்டி சீரகம், நறுக்கிய வெங்காயம் இவற்றைப்போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பின் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, இத்துடன் 1 தேக்கரண்டி மிளகுத்தூள் 2 தேக்கரண்டி மல்லித்தூள், சிறிது மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்க்கவும். கொதித்த பின், மூளைத்துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் வைத்து, மூளை நன்கு வதங்கிய பின் இறக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

வரவர இந்தத்திரி வன்முறையாகப் போகிறது... :o:lol:

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.