Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2011 உங்களுக்கு எப்பிடி?

Featured Replies

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது? ஒரு நல்ல புதிய உறவு கிடைச்சது

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

நட்பின் துரோகம்

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு TNA க்கு கிடைச்சது சந்தோசம்

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

கருணாநிதியின் தோல்வி எங்களுக்கு செய்த துரோகத்துக்கு கிடைச்ச தண்டனை எண்டு நினைச்சன்

ஒசாமா பின்லேடன் கடாபி போன்றோரின் மரணம் (சந்தோசம் துயரம் என்று இல்லாத இரண்டும் கெட்டான் நிலை)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

மாற்றம் இல்லை 2010 உடன் ஒப்பிடும் போது வீழ்ச்சி எண்டு தான் சொல்லணும்

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

பெரிய திட்டம் இல்லை எனது பாடத்துடன் சம்பந்த பட்ட SOFTWARE பற்றி படிக்கணும் எண்டு கடந்த இரு வருடமாக பிளான் பண்ணி இருந்தன் 2012 தான் படிக்கிற எண்டும் இருந்தன் BUT எதிபாராத விதமாக கட்டணம் ஏதும் இன்றி படிக்க முடிஞ்சுது

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

ஏதும் இல்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

கோ,மயக்கம் என்ன , எங்கேயும் எப்போதும்,(alli &paul , rise of the planet of the apes ,A TEAM .)

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

பிறை தேடும் இரவிலே (ம.என்ன)

என்னவோ ஏதோ.(கோ)

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்..

உன் பேரே தெரியாது..

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

இன்னும் கொஞ்சம் முன் எச்சரிக்கையுடன் இருக்கணும் எல்லாவற்றிலும்

சிலதுகளுக்கான முடிவுகளை நானே எடுக்கணும் மற்றவர்களின் தலையீடுகள் இல்லாமல்

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

என்னை உங்களுக்குப் பிரசவித்த இந்த யாழ் கருத்துக்களம் .

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

சொல்லமுடியாத பல உண்டு . துயரத்தையும் , சந்தோசத்தையும் ஒரே தராசில் பார்பதால் மனதைப் பாதிக்கவில்லை .

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

இந்தவருடத்து மாவீரர் தின நிகழ்வுகள் துயரத்தைத் தந்தது .

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

டாஸ்கப்பிற்றாவுக்கு ஒப்பான பசுமைப் புரட்சியை தந்த ஒப்பற்ற விடுதலைப் போராளி மொகமட் கடாபியின் சூழ்சியிலான மரணம் துயரம் .

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

மாற்றம் இல்லை 2010 உடன் ஒப்பிடும் 2 வீதத்தால் விற்பனை வரி அதிகரிப்பு .

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

ஏறத்தாள 25 வருடங்களுக்குப் பிறகு அன்னிய தேசத்தவனாக பிறந்த மண்ணை மதித்தேன் . அதன் விளைவு நெருடிய நெருஞ்சி .

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

சுவாமி சுகபோதானந்தாவின் மனமே ரிலாக்ஸ் , அகமே ரிலாக்ஸ் .

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

எதுவும் இல்லை .

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

மன்னிக்கவும் , நான் கர்நாடக , ஹிந்துஸ்தானி இசைரசிகன் .

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

வேலீல போற ஓணாணை சேட்டுக்குள்ளை விடக்கூடாது .

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

அருமையான பிரையோசனமான பதிவுக்கு மிக்க நன்றிகள் வீணா . உங்கள் படிப்புக்கு இடையிலும் இப்படியான ஆக்கத்தை தந்ததிற்கு நாங்கள் குடுத்து வைத்தவர்களே :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

என் தம்பி நான் இருக்கும் நாட்டிற்கு வந்தது

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

அம்மாவின் மரணம்

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி

ஒன்றும் இல்லை

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

பின்லாடன்,கடாபியின் மரணம் [சோகத்தை தந்தது]

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

கொஞ்சம் முன்னேற்றம்[ஆனால் இனி மேல் தான் அட்டமத்து சனி பொறுத்திருந்து பார்ப்போம் :( ]

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

இல்லை

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

ஞாபகத்தில் இல்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

மைனா,அங்காடித் தெரு,ஆயிர‌த்தில் ஒருவன்

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

தாய் தின்ற நிலமே[ஆயிர‌த்தில் ஒருவன்]

நீ போகும் பாதை எங்கும் உன் முகமே தேடுகிறேன்[நான் சிவனாகிறேன்]

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை[அங்காடித் தெரு]

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

வாழ்க்கையில் ஒருத்தரையுமே உட‌னே நம்பி விட‌க் கூடாது என்ட‌ முடிவுக்கு வந்து உள்ளேன்

தற்போது செய்யும் வேலையை விட‌ இன்னும் நல்ல வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்

இனி வரும் வருட‌த்திலாவது ஒரு இளிச்சவாயன் என்ட‌ கையில மாட்டோணும் :lol:

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

எல்லோர‌து நல் எண்ணங்களும்,முயற்சிகளும் எதிர் வரும் வருட‌த்தில் நிறைவேற எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

எனது ஒரே மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது!

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

எனது "வழிகாட்டி; ஒன்றின் மரணம்!

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

இந்தியாகாரனுக்கு, அவுஸ்திரேலிய அரசியல் கோமாளிகள், யுரேனியம் விக்க முடிவு செய்தது!

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

சனல் நான்கின் ' கொலைக்களம்' வெளியீடு! (துக்கம் கலந்த மகிழ்ச்சி)

ராதிகா கனேடிய பாராளுமன்றத்தில், நிகழ்த்திய கன்னிப் பேச்சு! (பெருமை)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

கொஞ்சம் பறுவாயில்லை, என்று தான் சொல்ல வேணும்!

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

'தாய்நிலத்தை' நீண்ட நாட்களின் பின் பார்க்க முடிந்தது!

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

'HOLY COW' - அவுஸ்திரேலிய ஊடகவியலாளரின் இந்தியப் பயணம் பற்றியது!

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

'SLUM DOG'

'ஆடுகளம்'- ஜெயபாலனின் உருட்டுவிழிகளுக்காக!

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

'கொலை வெறி"???

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

'இனி மேல் ;ராசி பலன்; பார்ப்பதில்லை, என்று ஒரு திட்டம்!

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

'போர்க்குற்றவாளிகளை, இன்னும் வெளியே வைத்திருந்த ஆண்டு"

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

நன்றிகள் வீணா! உங்களைக் களத்தில் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி!!!

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

>நான் கேள்விப்பட்டிராத ஒரு தொற்று நோய்க்குள்ளான என் மகள் முழுமையாக மருத்துவமையில் இருந்து திரும்பி வந்தமை

> இணையவனையும் விசுகுவையும் நேரடியாக சந்திக்க முடிந்தமை

>பல புதிய Projectsச் கிடைத்து கணிணி தொழில் சம்பந்தமான அறிவை பெருக்க உதவியமை

> அலுவலகத்தில் என் பணிகளை பார்த்து Star விருது கிடைத்தமை

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

>ஜப்பானிய பூமியதிர்ச்சி

>அத்தானின் அண்ணாவின் திடீர் மரணம்

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

எதுவும் இல்லை

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

>கருணாநிதியின் படுதோல்வி சந்தோசம்; ஜெயாவின் பெரு வெற்றி கடும் துயரம்

> இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதி ஒசாமாவின் மரணம் (சந்தோசம்)

>அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றம் (சந்தோசம்)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

படு மோசம்

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

எந்தவித நீண்டகாலத் திட்டமும் எனக்கு இல்லை.

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

>தேவதைகளின் தீட்டுத் துணி (யோ.கர்ணன்)

>தமிழக எழுத்தாளரான தமிழ்செல்வனின் சிறுகதைத் தொகுப்பு

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

மயக்கம் என்ன (தமிழ்)

Sleeping beauty

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

>ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் (அவன் இவன்)

>காதல் என் காதல் (மயக்கம் என்ன)

>ஆரிரோ ஆராரிரோ (தெய்வத் திருமகன்)

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

> உயர் பதவியை அடையவேண்டும்

>விஸ்கி/ பிரண்டியை மிக மிக குறைத்து வைன்னை மட்டும் அருந்த வேண்டும்

>ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு, பொருள்முதல்வாதம் சார்ந்த ஒன்றே ஒழிய கலாச்சாரம் சார்ந்தது அல்ல என்று மனைவியை நம்ப வைக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

முதலில் இப்படி ஒரு எண்ண ஓட்டத்தை பதிவில் இட்டதற்கு வீணாக்கு பாராட்டும் நன்றியும் உரித்தாகட்டும். :)

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

ஓசோன் படலத்தில் ஓட்டையின் அளவு குறைந்துள்ளது என்ற செய்தி. :)

(ஒரு மனிசன் செத்தா... இன்னொருத்தன் பிறந்து அந்த மனிதனை பிரதியீடு செய்துடுவான். ஆனால் இந்தப் பூமி அழிஞ்சிட்டா.. அதை எவராலும் பிரதியீடு செய்ய முடியாது. தற்போதுள்ள அறிவுக்கு எட்டியவரை.. அதனால் தான் இந்த செய்தி மகிழ்ச்சிக்குரியது.)

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

செவ்வாயின் சந்திரன் ஒன்றுக்கு போய் மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு கொண்டு வர அனுப்பிய ரஷ்சிய விண்கலம்.. ஏவப்பட்ட முதல் கட்டத்திலேயே செயலிழந்து போய் இப்போ.. பூமியை நோக்கி விழ நொருங்கி வந்து கொண்டிருப்பது தான். :(

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

எந்த அரசியல்வாதி மேலையும் நம்பிக்கை இல்லை..! அதனால எதனையும் இப்ப சீரியஸா எடுக்கிறதில்ல. :lol:

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

பாவம்.. தானும் தன்பாடுமா.. இளம் பெண்களின் கட்டி அணைப்பும்.. ஆட்சிக் கட்டுமா இருந்த இத்தாலிய தலைவரை.. யூரோ வலய நெருக்கடி தூக்கி எறிஞ்சது தான். (சந்தோசம் துயரம் கலந்தது.) :lol:

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

நம்ம பொருளாதாரமும் உலகப் பொருளாதாரமும்.. ஒன்று தான். ஏறு இறங்கு முகத்தோட..! ஆனால் வங்கியிடமோ யாரிடமுமோ.. கடன் இல்லாத வாழ்க்கை. :)

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

நீண்ட கால திட்டமெல்லாம் நாங்கள் போடுறதில்ல. short term plan தான். அதுகள் நிறைவேறல்லைன்னா வாழ்க்கையை எப்படி வாழுறது.

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

முக நூல். :lol:

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

பிடிக்கக் கூடியதா விசேடமா இருந்த ஒரு படமும் பார்க்கல்ல. ஏழாம் அறிவு சில இன உணர்வுள்ள வசனங்கள் பிடிச்சிருந்திச்சு.

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

2. காதல் என் காதல் கண்ணீரில..! (பாவம் காதல் ரணங்களில் தவிக்கிற உள்ளங்களுக்கு ஜஸ்ட் ஒரு சூப் போல)

3. பப்பப்பா பப்பப்பா..! (பாடல் மொத்தமும் தமிழில் அமைந்து இசையும் ஒருங்காக இருப்பது தான்.)

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆக வேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

எதிர்பார்ப்பில்லா வாழ்க்கையே மட்டற்ற மகிழ்ச்சிக்கு சொந்தமானது என்பதால.. அப்படின்னு பெரிய திட்டங்கள் எல்லாம் நம்கிட்ட இல்ல.. ஆளை விடுங்கப்பா. :lol:

பெட்டிக்கு வெளில வந்து எழுதினா.. எல்லாருக்கும் எழுதக் கூடிய ஒன்றே ஒன்று தான் உள்ளது.. அது வந்து....

எல்லாருக்கும் இனிய மகிழ்ச்சி கர புத்தாண்டு அமைய வாழ்த்துகின்றேன்..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

கருத்துகள் சொன்ன கோமகன் அண்ணா ,ரதி அக்கா புங்கையூரன்அண்ணா நிழலி அண்ணா நெடுக்ஸ் அண்ணா ஆகியோருக்கு நன்றிகள் நிறைய பேர் கருத்து எழுதவில்லை அவர்களுக்கு நேரம் இல்லையோ கடந்த

காலத்தை மீட்டி பார்க்க விருப்பம் இல்லையோ தெரியவில்லை .. குறிப்பாக நான் கடந்த சில காலம்களாக வருஷ முடிவின் போது எனது டைரி இனை புரட்டி பார்ப்பது வழக்கம் அந்த வருஷம்

எனக்கு எதை தந்து விட்டு

செல்கிறது எப்பிடியான சம்பவங்கள் என் வாழ்வில் நடைபெற்று இருக்கின்றன என்ன அனுபவங்களை அது தந்து இருக்கிறது அவற்றினை வைச்சு என் எதிர்கால திட்டம்களை எப்பிடி செழுமை படுத்தலாம் என்று யோசிப்பன்

கூடுதலாக இன்னொருமுறை அப்பிடியான ஒரு சந்தர்ப்பம் வரும் போது அதனை எப்பிடி கையாளனும் சில மனுசர்களிடம் முன் எச்சரிக்கையாக இருக்கணும் போன்ற பாடங்களையும் சில விசயங்களில் நல்ல முடிவினை எடுக்க கூடிய அனுபவங்களையும் எனக்கு தந்து இருக்கிறது.. இப்பதிவினை நான் எழுத காரணம் YARL உள்ளோர் அனைவரும் என்னிலும் விட வயது கூடினோர் அவர்கள் எந்த விடயம்களில் அதிகம்

அக்கறை பட்டு இருக்கிறார்கள் எங்கள்

சமூகத்தை எப்பிடியான விடயங்கள் அதிகம் தொட்டு செல்கின்றன எதை அதிகம் ரசிக்கிறார்கள் போன்றவற்றை அறிவதற்கே கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பார்ப்போம் இன்னும் எத்தனை பேர் தங்களின் 2011 பற்றி பகிர்ந்து கொள்ளுறார்கள் எண்டு..

Edited by வீணா

நிறைய பேர் கருத்து எழுதவில்லை அவர்களுக்கு நேரம் இல்லையோ கடந்த

காலத்தை மீட்டி பார்க்க விருப்பம் இல்லையோ தெரியவில்லை

நல்ல பதிவு.

எழுதக் கூடாது என்று அல்ல. பல கேள்விகளுக்கு மனதின் ஆழத்திலிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஏன் மொக்கையாகப் பதிலிடுவான் என்று விட்டுவிட்டேன். இப்பத்தான் விளங்குது எனக்கு இந்த வருடமே வெறும் மொக்கையாகத்தான் கழிந்திருக்கிறது என்று.

இப்பதிவினை நான் எழுத காரணம் YARL உள்ளோர் அனைவரும் என்னிலும் விட வயது கூடினோர் அவர்கள் எந்த விடயம்களில் அதிகம்

அக்கறை பட்டு இருக்கிறார்கள் எங்கள்

சமூகத்தை எப்பிடியான விடயங்கள் அதிகம் தொட்டு செல்கின்றன எதை அதிகம் ரசிக்கிறார்கள் போன்றவற்றை அறிவதற்கே கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பார்ப்போம் இன்னும் எத்தனை பேர் தங்களின் 2011 பற்றி பகிர்ந்து கொள்ளுறார்கள் எண்டு..

வன்மையாகக் கண்டிக்கிறேன் வீணா அண்ணா. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

1) 2011 இல் உங்களின் மனசில் நிற்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

கருணாஸ் தோல்வி :wub:

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

என்னுடன் வேலை செய்த பிரையன் கார் (40 வயது) என்பவரின் திடீர் மரணம்..! வீட்டின் பின் வளவில் ஆறடி ஏணியில் ஏறி வேலை செய்துகொண்டிருந்தவர் பிறகு தரையில் கிடக்கக் கண்டுள்ளார்கள்..! மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று ஒன்றும் பலமாக இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்..! வீட்டுக்கு வந்தவர் வாந்தி எடுத்து மீண்டும் மயங்கிவிட்டார்..! மற்றொரு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றபோது மூளை செயலிழந்துவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள்..! இனிமேலும் உயிருடன் வைத்திருந்து பிரியோசனமில்லை என்று மனைவியின் சம்மதத்துடன் பிராணவாயுக் குழாயை நிறுத்திவிட்டார்கள்..! அவருக்கு இரு சிறு குழந்தைகள் உள்ளனர்..! :(

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

ராதிகாவின் வெற்றி. :rolleyes:

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி

ஈழம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிறு முன்னேற்றம். :unsure:

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

கடன் அதிகரித்துவிட்டது..! :lol:

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

நீண்டகாலத் திட்டம் என்றால், ஒரு வடிவமைப்பு பொறியியலாளராக ஓரளவுக்காவது முழுமை பெறவேண்டும் என்கிற வெறியுடன் கூடிய திட்டம் எப்போதுமே உண்டு..! இந்த வருடம் அறிவுக்கண் சிறிது திறந்ததாகத் தோன்றுகிறது..! :lol:

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

வேலை சம்பந்தமான புத்தகங்களை மட்டுமே படிப்பது..

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

ஒன்றும் பார்க்கவில்லை..

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

ஒன்றுமில்லை..

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

கடனை அடைக்க வேண்டும்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

ஒருவெளினாட்டுபயணம், சுப நிகழ்வுக்கான முன்னோட்டம்.வீடு மாற்றம்

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

நம்பிக்கை துரோகம்.......

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

பெணஉறுப்பினரின் பாராளுமன் பிரவேசம்

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

சனல் நான்கின் ' கொலைக்களம்' வெளியீடு! (துக்கம் கலந்த மகிழ்ச்சி)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

ஒரே மாதிரி

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

இல்லத்தின் சுப நிகழ்வு

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

எதுவமில்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

தமிழ்படங்களை பார்த்ததுண்டு

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

கொலை வெறி ..........தாள லயதுக்காக்

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

எடை குறைக்கக் திட்டம் ......... கஷ்டமாய் இருக்கிறது

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2012 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

சாதகமான ஆண்டு ........உறவுகளுக்கு உதவி செய்வதில்லை .............வீண் மனஸ்தாபம் .......

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

இப்படியான திரியை தொடங்கி முன்னெடுத்து செல்ல கள உறவுகளுக்கு வழி காடடும் உங்களுக்கு நன்றி.வீணா ......... வித்தியாசமான் சிந்தனை

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

வீணா குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பதில்கள் அதிகம் இல்லாதபடியால் இந்த ஆண்டினை மீட்பித்து பார்க்கமுடியவில்லை மன்னிக்கவும். :rolleyes:

என்ன இது துறவு மனப்பான்மைக்கு வந்துட்டமோ? :o

  • கருத்துக்கள உறவுகள்

2011ம் ஆண்டு, யாழ் களமாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியதைத் தவிர, குறிப்பிடும் படியாக ஒன்றும் நடக்கவில்லை வீணா. :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடங்கொய்யாலை .. கஸ்டப்பட்டு எழுதினது எல்லாம் பதிய முதல் அழிஞ்சு போட்டுதே.. :(:o

(keine lust mehr) :(

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

மேலதிகாரிகளால் வேலை சார்பாக படிப்பதற்கு அனுமதி கிடைத்து ஆர்வத்தோடு பயின்று சித்தி அடைந்து, நிர்வாகத் தலைமையின் கையால் விருது வாங்கியது.

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

நண்பர்களின் பிரிவு

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

மன்னிக்கவும்- அரசியல் நமக்கு ஒத்து வராது

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

சேமிப்பும், கடனும் குறைந்து விட்டது

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு செயல்படுத்தும் திறமை இல்லை. (சரிவராவிட்டால் அதனை ஒரு தாக்கமாகவே மனம் உணர்ந்து கொள்ளும், அந்த அளவுக்கு பாவம் எனது மனதை கஸ்டப்படுத்த விரும்புவதில்லை)

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

சொல்லும் படியாக எதுவும் இல்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

தமிழ் படங்கள் பார்ப்பது குறைவு

(ஆங்கிலப் படம் SENNA- 2011, A few good men-1992 ல் வெளியானது, இந்த வருடம் தான் பார்த்தேன்)

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

திமு திமு தீம் தீம் தினம் அல்லாடும் மனம்...

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

எந்த சூழ்நிலையிலும் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

நட்பின் பிரிவால் மனதில் பெரிய தாக்கங்களை உணர்ந்தேன், கைதூக்கி விட்ட முகம் தெரியாத யாழ் கள உறவுகளுக்கு நன்றி!

புத்தாண்டு என்பது நாட்காட்டியில் ஒரு தினமாகவே தெரிகிறது... எப்போது நாம் எமது நிதானத்தோடு செயல் செயல்பட்டு வாழ்கையில் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோமோ அப்போதெல்லாம் எம் மனம் அந்தத் தினத்தை புத்தாண்டாகக் கொண்டாடும். எனது பிரியமான யாழ் கள உறவுகளும் தினமும் புத்தாண்டு கொண்டாட வாழ்த்துக்கள்!

Edited by குட்டி

அடங்கொய்யாலை .. கஸ்டப்பட்டு எழுதினது எல்லாம் பதிய முதல் அழிஞ்சு போட்டுதே.. :(:o

(keine lust mehr) :(

அடங்கொண்ணீயா...... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

வேலையில் போனஸ் கிடைத்தது சந்தோசத்தை தந்தது.

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

அப்படி ஏதும் இல்லை.

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு TNA க்கு கிடைச்சது சந்தோசம்.அதே நேரம் விக்கிரமபாகு போன்றோரின் தோல்வி சிறு கவலையை தந்தது.

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு

கருணாநிதி,காங்கிரசின் படுதோல்வி சிறு சந்தோசத்தை தந்தது.ஜெயலலிதாவின் வெற்றி சந்தேகத்தை தந்து கொண்டே இருக்கிறது.(ஏதும் தமிழருக்கு செய்வார் என்று நம்பிக்கை இல்லை)

கனடாவின் அரசியல் வாதி ஜாக் லெய்ரனின்(jack layton) அபாரவெற்றி சந்தோசத்தை தந்த அதே நேரம் அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.இச்சம்பவம் கவலையை தந்தது.

சிறு மகிழ்ச்சியை தந்த சம்பவம் மகிந்தவை லண்டனில் இருந்து ஓட ஓட விரட்டியது.

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

வரவு எட்டணா செலவு பத்தணா. :) :)

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

ஏதும் இல்லை வேலை சம்பந்தமான புத்தகங்கள் தவிர.

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

மயக்கம் என்ன , எங்கேயும் எப்போதும்,தெய்வத்திருமகள்

28 months later, dark shadows

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

சர சர சாரக்காற்று(வாகை சூடவா)

அஞ்சனா அஞ்சனா

கேட்கிறாய் அன்பே(ஒஸ்தி)

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

படிப்புக்கு இடைவெளி விடாமல் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்க வேண்டும்.உடற்பயிற்சி,உணவு,பணம் ஆகியவற்றில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இந்த வருடம் கண பேர் நட்பின் பிரிவாலும்,துரோகத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் போல கிடக்குது...அது சரி குட்டி உண்மையிலேயே நட்பின் பிரிவா அல்லது காதலியின் பிரிவா?[கோபிக்கிறதில்லை சரியா?

பன்னிரண்டு வருடத்திற்கு முந்திய காதலின் பிரிவு இன்னும் பதனிடப்படாத காயமாக மனதில் ஒருபக்கமிருக்க, இந்த வருடம் நட்பின் பிரிவால் (இறப்பால்) மனம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

  • தொடங்கியவர்

கருத்து பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்...

வீணா எப்போதுமே தங்கை (தங்கச்சி) தான் தப்பிலி அண்ணா

Edited by வீணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.