Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலவெறிப்பாட்டைக் கேட்டதும் நடுவராக இருந்த ஜெயச்சந்திரன் வெளியேறுகிறார்

Featured Replies

கொலவெறிப்பாட்டைக் கேட்டதும் நடுவராக இருந்த ஜெயச்சந்திரன் வெளியேறுகிறார்

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் ஜெயச்சந்திரன் மலையாளப் பின்னணிப் பாடகர் என்றாலும் நல்ல தமிழ்ப் பாடல்களை வரிகளைச் சிதைக்காமல் பாடியவர். அதனால்தான் அவருக்கு இந்தக் கோபம்.

(மின்னஞ்சல் ஊடாக )

கொலவெறிப்பாட்டைக் கேட்டதும் நடுவராக இருந்த மலையாளி ழுந்து வெளியேறுகிறார். எதனால் அவர் வெளிப்போகிறார் என்று புரியவில்லை. பாடல் தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்தது என்பதால் எழுந்து போகிறாரா? அல்லது பாடலின் தரம் பற்றி எழுந்து போகிறாரா என்று தெரியவில்லை.

எதுவாக இருப்பினும், ஏன் தமிழ்க் கலைஞர்களுக்கோ, மொழித் துறையினர்க்கோ இப்படிப் புறக்கணிக்கும் சீற்றம் வருவதில்லை.

புழுவிற்குக் கூட சீற்றம் வரும் விதயங்களில் தமிழர்க்கு மட்டும் சீற்றம் வராதது ஏன்?

அன்புடன்

நாக.இளங்கோவன்

Edited by akootha

  • தொடங்கியவர்

பாடகர் ஜெயச்சந்திரன் தமிழில் பாடிய முதல் பாடலே, மணிப்பயல் என்ற படத்திலுள்ள, ‘ தங்கச் சிமிழ் போல் இதழோ! அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ! ‘ என்ற பாடலாகும் .

மேலும், தமிழின் இனிமை பற்றிய மற்றுமொரு பாடல் :

’தமிழில் இருந்து உலகம் முழுதும் இனிமை பிறந்தது; அதைத் தழுவத் தழுவப் புதிய புதிய கவிதை பிறந்தது - இது வாணிஜெயராமுடன் இணைந்து பாடியது - படம் :பருவத்தின் வாசலிலே

இப்படியாக இவர் தமிழின் சுவை அறிந்தவர். அதன் அருமை புரிந்தவர்.

அவருக்கு நமது ’தமிழுலகம் குழுமம்’ சார்பாக வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

அவர் பாடிய பாடல்களிலேயே என்னை அதிகம் கவர்ந்த பாடல்கள் சில:

சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் என் முத்தான முத்தம்மா

என் கண்ணான கண்ணம்மா – காற்றினிலே வரும் கீதம்

மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ ..வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோஇவள் ஆவாரம் பூதானோ ..நடை தேர்தானோ .. சலங்கைகள் தரும் இசை தேன்தானோ – கிழக்கே போகும் ரயில்

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் ..புதுமுகமான மலர்களே நீங்கள் நதிதனில் ஆடி .. கவி பல பாடி .. அசைந்து அசைந்து ஆடுங்கள் – ரயில் பயணங்களில்

தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ......

கவிதை அரங்கேறும் நேரம்;மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்;இனி நாளும் கல்யாண ராகம் .. இன்ப நினைவு சங்கீதமாகும் –

எஸ். ஜானகியுடன் இணைந்து - அந்த 7 நாட்கள்

ஆடிவெள்ளி … தேடி உன்னை … நான் அடைந்த நேரம்...கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் (அந்தாதி வடிவிலானது) வாணிஜெயராமுடன் இணைந்து– மூன்று முடிச்சு

அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமைப்புலவன் நீ....வாணிஜெயராமுடன் இணைந்து

– மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

இந்த வரிகளைக் கனவில் நினைத்தாலும் , உடனே மனதில், பாடல் ரீங்காரமிடத்தொடங்கிவிடும்.

அவ்வளவுக்கு அதன் பொருளுணர்ந்து பாடியிருக்கிறார்.

நானும், நீங்க குறிப்பிட்டிருக்கும் இந்தப் பொருள்படத்தான் எனது முந்தைய மடலிற் குறிப்பிட்டேன்.

அதாவது, ஒரு மலையாளிக்கே, தமிழ் மொழியின் சிதைவு, பொறுக்கமுடியவில்லை;

ஒரு கணம்கூடச் சகிக்கமுடியாமல் வெளியேறுகிறார்.

ஆனால்,தமிழர்கள்....? ஹா.. தூ..

இதைத்தவிர வேறென்ன சொல்லமுடியும்?

(மின்னஞ்சல் ஊடாக )

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில், கேரள அரசியல்வாதிகளும்... மக்களும் நடந்து கொள்ளும் விதத்தை கிண்டல் செய்வதாக... ஜெயச்சந்திரன் நினைத்து எழுந்து போயிருக்கலாம். ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு, அந்தக் கலைஞர்கள் பாடியபின், தனது கருத்தை நாசுக்காக அவர்களுக்கு தெரிவிப்பதை விடுத்து, முழு நிகழ்ச்சியை இடை நிறுத்தி விட்டுச் செல்வது அநாகரிகமான செயல். அந்தப் பாடலை, கலைஞர்கள் ஆயத்தப் படுத்த முன்பே... இந்தப் பாடல் பாடக் கூடாது, என்று குறிப்பிடாமல்.... ஆயத்தப் படுத்தி, பாடிய பின் வெளியேறுவது, ஏற்கக் கூடியதல்ல. இவர் நடுவராக இருக்கத் தகுதியில்லை.

அரசியலில் பொழுதுபோக்கை சேர்க்கலாமா? விளையாட்டில் சேர்க்கக்கூடாது என்கிறோம், மதத்தில் சேர்க்கக்கூடாது என்கிறோம். அப்படியானால், ஏன் பொழுது போக்கில்?

:D :D :D

இது இந்தியர்களுக்குள் நடக்கும் பிரச்சனை. அவர்களின் பாட்டுக்கு யப்னா வேர்சன் வெளியிடுவது யப்னா தான் செம்மொழிக்கு இலக்கணம் என்று தலைக்கனம் காட்டுவது எல்லாம் வீங்கின வேலை. நூறு பேருக்கு பிடிக்கவில்லை ஆயிரம்பேருக்கு பிடிச்சிருக்கு என்கின்ற நிலமையில் ஆயிரம்பேரின் அதிருப்தியை எதற்கு சம்மந்தம் இல்லாத நாங்கள் அனுபவிக்கவேண்டும்? நொந்த வெந்துபோய் கிடக்கும் எம்மவருக்கு வேற வேல வெட்டி இல்லையா? பாடியவன் ஒரு இந்தியன் என்ற நிலையில் இது ஒன்றும் தமிழ் மொழி என்ற தொடர்பாடல்க் கருவிக்கு எதிரான திட்டமிட்ட செயல் இல்லை. எமக்கு விருப்பம் என்றால் நாம் தமிழ்மொழியை வளர்க்கவேண்டியது தான் அதை விடுத்து அடுத்தவன் முதுகை சொறிவது அபத்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நாடகமே உலகம்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நா. இளங்கோவன் என்றபடியால் பிழைத்தார்.. மு .இளங்கோவன் என்றால் அறிவுமதி யிடன் சீடரீடம் நேராக சண்டை போட்டிருப்பேன்..

டிஸ்கி:

MA.MPHIL படிச்சா எங்கிட்டாது காண்வெண்டில் வண்டி ஓட்டுங்கப்பா.. புரொபசரா வண்டி ஓட்டுங்க.. உங்க சோத்தில் அவன் மண் அள்ளி போட்டானா இல்லையே? கேட்கிறவன் கேட்கட்டும் இல்லை காதை பொத்திகிட்டு போகட்டு இங்க.. இணையத்தில் விமர்சனம் எழுதுவதால் பெரிய ஆள் ஆகிடலாம் என நினைப்போ....

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி நாம் பெரிதாக அலட்டவேண்டியதில்லை, வை திஸ் கொலைவெறி தமிழை வளர்க்கபோவதும் இல்லை ஜெயச்சந்திரன் வெளியேறியது பெரிய விடயமாக்க வேண்டியதுமில்லை பொதுவில் ஈழத்தமிழர்களாகிய எமக்கு பல முக்கிய பணிகள் உண்டு அதைப்பற்றி பார்ப்பதக்கு எமக்கு நேரம் போதாது உள்ளது அப்படியிருக்கையில் நாம் இதைப்பற்றி அலட்டவேண்டியதில்லை

இப்போதைக்கு பாடல் கேட்பது இரசிப்பதும் மட்டும் போதும் என எண்ணுகின்றேன். :lol:

:D

...

ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு, அந்தக் கலைஞர்கள் பாடியபின், தனது கருத்தை நாசுக்காக அவர்களுக்கு தெரிவிப்பதை விடுத்து, முழு நிகழ்ச்சியை இடை நிறுத்தி விட்டுச் செல்வது அநாகரிகமான செயல். அந்தப் பாடலை, கலைஞர்கள் ஆயத்தப் படுத்த முன்பே... இந்தப் பாடல் பாடக் கூடாது, என்று குறிப்பிடாமல்.... ஆயத்தப் படுத்தி, பாடிய பின் வெளியேறுவது, ஏற்கக் கூடியதல்ல. இவர் நடுவராக இருக்கத் தகுதியில்லை.

நியாயமான கருத்து சிறி அண்ணா.

பாடகர் ஜெயச்சந்திரன் தமிழில் பாடிய முதல் பாடலே, மணிப்பயல் என்ற படத்திலுள்ள, ‘ தங்கச் சிமிழ் போல் இதழோ! அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ! ‘ என்ற பாடலாகும் .

சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் என் முத்தான முத்தம்மா

என் கண்ணான கண்ணம்மா – காற்றினிலே வரும் கீதம்

மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ ..வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோஇவள் ஆவாரம் பூதானோ ..நடை தேர்தானோ .. சலங்கைகள் தரும் இசை தேன்தானோ – கிழக்கே போகும் ரயில்

அதாவது, ஒரு மலையாளிக்கே, தமிழ் மொழியின் சிதைவு, பொறுக்கமுடியவில்லை;

ஒரு கணம்கூடச் சகிக்கமுடியாமல் வெளியேறுகிறார்.

ஆனால்,தமிழர்கள்....? ஹா.. தூ..

இதைத்தவிர வேறென்ன சொல்லமுடியும்?

(மின்னஞ்சல் ஊடாக )

தமிழ்மீது துவேசம் காட்டாதவரைக்கும் ஜெயசந்திரன் ஒரு கலைஞன் என்றமுறையில் பாட்டின் வசனநடை, மொழியாளுகை, பொருள், மெட்டு .....எதைபற்றி வேண்டுமானாலும் தனது கருத்தையும், எதிர்ப்புகளையும் வெளிக் காட்ட முடியும். இதில் அரசியல் இருக்க முடியாது.

ஜெயசந்திரனின் பாட்டுகள் எனக்கு பிடிக்கும். கொலைவெறியின் எதிரிகளில் நானும் ஒருவன்.

நேற்றைய தினம் நுணாவிலானின் திரி "மங்கையரில் மகாராணி" யில் எனக்கு பிடித்த ஜெயசந்திரனின் சில பாடல்களை இணைத்திருக்கிறேன்.

எனக்கு பிடித்தவையாயிருந்தும் "மான்சோலைகிளி" யையும் "சித்திர செவ்வான"த்தையும் நித்திரை தூக்கத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. மேலும் இணைப்பதெல்லாம் ஒரே கருத்தில் சென்றும் ஒதுங்கின. எனவே நிறுத்திவிட்டேன். யாராவது அதன் பின் இவற்றை இணைக்க முடியும். இல்லையேல் நான் இன்னும் சிலநாட்கள் கழித்து (அவை அந்த திரியில் வேறு எங்காவது இருக்கா என்பதை தேடிப்பார்த்தபின்) இணைத்துவிடுவேன்.

"மந்தார மலரே"யையும் இதில் இணைத்துள்ளேன். கண்ணதாசன், மலையாளம் மாதிரி தமிழ் இருக்கவும், பாஸ்கரன் தமிழ் மாதிரி மலையாளம் இருக்கவும் எழுதியுள்ளார்கள். இதில் வர்ண-ஜால "கெவி வெயுட்டுக்களான" கண்ணதாசனும் பாஸ்கரனும், கென் நோட்டனும் கசியஸ் கிளெயும் போல ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக்கொள்ளும் அழகே தனி. L.R. ஈஸ்வரியைப் பார்த்து "இந்திரமண்டல தேசத்தில் சுந்தரி நின் போல் பெண் இல்லை" என்றுபாடிய பாடகர் "கேளு பேசு பிளாக்கு" என்ற கன்றாவியை கேட்டு எழுந்து போனதில் எமகெந்த மனக்குறையுமில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மலையாளப் பின்னணிப்பாடகர் மலையாளத் தொலைக்காட்சியின்

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகின்றார்.

கொலைவெறி என்றதும் அவர் பயந்தும் வெளியேறி இருக்கலாம் :D

  • தொடங்கியவர்

ஒரு மலையாளப் பின்னணிப்பாடகர் மலையாளத் தொலைக்காட்சியின்

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகின்றார்.

கொலைவெறி என்றதும் அவர் பயந்தும் வெளியேறி இருக்கலாம் :D

அவரும் நம்பியார் சகோதரங்கள் இல்லை மேனன் கூட்டத்திற்கு உறவோ யார் கண்டது :wub:

கொலவெறிப்பாட்டைக் கேட்டதும் நடுவராக இருந்த மலையாளி ழுந்து வெளியேறுகிறார். எதனால் அவர் வெளிப்போகிறார் என்று புரியவில்லை. பாடல் தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்தது என்பதால் எழுந்து போகிறாரா? அல்லது பாடலின் தரம் பற்றி எழுந்து போகிறாரா என்று தெரியவில்லை.

எல்லாத்துக்கும் தெரியவில்லை தெரியவில்லை என்டு எழுதிட்டு...

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் ஜெயச்சந்திரன் மலையாளப் பின்னணிப் பாடகர் என்றாலும் நல்ல தமிழ்ப் பாடல்களை வரிகளைச் சிதைக்காமல் பாடியவர். அதனால்தான் அவருக்கு இந்தக் கோபம்.

இது மட்டும் எங்களுக்கு எப்படி ராசா தெரிய வந்தது??

சம்மந்தப்படவரே இது பற்றி வாய் திறக்கேலை உங்களுக்கு எதற்க்கு இந்த கற்பனை?

இதிலயுமா கிசு கிசு???

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவர் துரோகியா அவரின் பாடல்களை புறக்கனிக்க வேனனுமா.எதுவா .இருந்தாலும் விளக்கமாக சொன்னால் தானே புரியும். எனக்கு தெரிய 2 காரனம் தான் இருக்க முடியும்.1)தமிழன் மூலமாக வெளி வந்த பாடல் இப்படி பிரபல்யம் அடைந்ததில் உள்ள பொறாமை.2)அவர் தமிழ் பாட்டு பாடப்போறாங்கள் என்டு நினைக் ஆங்கிலப்பாடல் பாடியது அவரை குழப்பியிருக்கலாம்.எது எப்படியோ தமிழ் வெழியே வர சில விட்டுக்கொப்புகள் அவசியம்.இல்லாவிட்டால் தமிழ் இனி மெல்லசாகும்.(இப்ப மட்டும் என்ன வாழுது என்டு கேட்க கூடாது) :lol: :lol: :lol: .

ஒன்றுமில்லை,வயசுக் கோளாறு அண்ணைக்கு. முந்தி T.M.S இற்கும் வந்ததுதான்.மாற்றத்தை ஏற்க முடியாதவர்கள் மாயமாக போய்விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷுக்கு எப்படி கொலைவெறிப் பாடலை பாடி புகழீட்ட உரிமை உள்ளதோ.. அதேபோல் அதை நிராகரிக்கவும்.. ஏற்றுக் கொள்ளவும் மக்களுக்கு உரிமை உள்ளது. இதில் எவர் செய்வது சரி என்பதை சொல்ல நாம் யார்..???! அது அவரவர் விருப்பம்.! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

Amrita TV தனது விளம்பரத்துக்காக முன்பே திட்டமிடப்பட்டதை படப்பிடிப்பாளரின் படப்பிடிப்பு,மற்றையை நடுவரின் முகபாவனை என்பன மூலம் அறியலாம்.

பாடகர் ஜெயசந்திரன் ஒரு தமிழர்.. அவர் கேரளா சென்று மலயாலபாடல்களில் பிரபல்யம் அடைந்தார். ஜேசுதாஸ் எப்பிடி தமிழில் பிரபல்யமோ அது போன்றே ஜெயசந்திரன் மலையாளத்தில் பிரபல்யம்.. (நடிகர் ஜெயராம் ஒரு தமிழர் ) இவரின் இனிய தமிழ் பாடல்களில் ஒன்று மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே என்ற பாடல் மற்றும் நெஞ்ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் என்ற பாடலும் இவருக்கு உயர்வை கொடுத்த பாடல்கள் இளையராஜா ரகுமான் போன்றவர்கள் மிக விரும்பும் ஒரு பாடகர் ரஜனி மருமகன் என்ற காரனத்திற்காக எல்லோரையும் பகைத்தல் நல்லது அல்ல நண்பர்களே

பொதுவாக உண்மைகளை அறிய விக்கிபீடியாவை பார்ப்பதுண்டு. அதன்படி இவர் கேரளாவில் தான் பிறந்துள்ளார். : http://en.wikipedia....ki/Jayachandran

எனவே இவர் மலையாளி தான் என்று எண்ணுகிறேன்.

சி.கு. ஆனால் விக்கிபீடியா எல்லா இடத்தில் நூறு வீதம் சரி என்று ஒத்துக்கொள்ளவில்லை

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.