Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய தலைவர் ?!, அவரின் கடைசி மகன், மக்கள் சித்திரவதையின் பின் படுகொலை.

Featured Replies


[b]ஒருவேளை தலைவர் உயிரோடு வந்தாலும்.. என்னை சாகடிச்சிட்டீங்களே மக்கள் என்று வருத்தப்படமாட்டார். ஏனெனில் அவர் ஏற்கனவே பல தடவைகள் சாகடிக்கப்பட்டவர் தான். அதற்காக எல்லாம் அவர் மக்களை வெறுக்கவில்லை. மாறாக நேசிக்க ஆரம்பித்தார்..![/b] 


[/code]

[b]நன்றி நெடுக்ஸ் அண்ணா,

நன்றாக கூறினீர்கள்[/b].

தலைவர் அப்பிடி அனார் இப்பிடியானார் என்று யாரோ சொல்ல அதை விவாதிக்கும் உங்களை நினைக்க சிரிப்புத்தான் வருது.

அவருடைய வாழ்கையும் போராட்டமும் அதுக்குச்சான்று. அவர் வாழும்போது போராடினார் போராட்டத்தை வழிநடத்தினார்.

இன்று அவரில்லை எமக்காக அவர் போராட அதுதானே பிரச்னை?

இறுதி கட்டங்களின் என்ன நடந்ததென்று எவனுக்கும் தெரியாது.

அவரைப்பற்றி உலகமே கதைத்தாலும் உனக்கெங்கே போச்சு தமிழா?

எவர் என்ன சொல்லாலும் எழுதினாலும் அவரைப் பற்றி நான் கொண்டதை எவனாலும் மாற்ற முடியாது.

அப்படி இருப்பிர்களா? எங்கே போச்சு உங்கள் தேசபக்க்தி?

சும்மா கண்டதுக்கும் ஈடுபட்டுக்கொண்டு. அவங்கள் படத்தையே வெளில விடேல்ல அதுக்குள்ள கிளம்பிட்ட எப்படி?

[b]நன்றாக சொன்னீர்கள் அண்ணா இப்போதைக்கு இதைபற்றி எழுதுவதே தேவை இல்லாத ஒரு விடயம் [/b]

Edited by அலைஅரசி

  • Replies 86
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நிலை மற்றும் கருத்துத்தான் எனதும் சீமான்

நன்றிகள்

தயவு செய்து சில மணித்துளிகளை செலவிட்டு எழுதுங்கள்

இல்லையென்றால் பொய்களும் புரட்டுகளும் வேசங்களும் குழி பறிப்புக்களும் எம்மை ஆட்கொண்டுவிடும்.

தேசியத்தலைவர் எப்படியானவர் அவரின் வாழ்நாளை யாருக்காக அற்பனித்தார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கும் என்று நான் நம்பவில்லை அப்படி இருக்கும் போது எதற்கு எமக்குள் தோன்றும் கற்பனைகளை இங்கு எழுத வேண்டும்.

புதிய சிந்தனைகளை தூண்டி விட்டுள்ளீர்கள். இப்படியான சிந்தனைகளும் அவற்றிக்கு உருவம் கொடுக்கும் செயற்பாடுகளுமே எமது மக்களை மண்ணை வாழவைக்கும்.

இன்று இருக்கும் அரசியல் சூழலில் எமது தமிழ் மக்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து இயங்குவதே எமக்கான விடுதலைக்கு வழி வகுக்கும். இந்தியாவில் வேறு எந்த கட்சி பதவிக்கு வந்தாலும் ஒரு போதும் எமது தமிழ் ஈழ தனி அரசை ஆதரிக்கமாட்டார்கள்.

நரேந்திர மோடி வந்தால் எமக்கு பல நன்மைகள் வரலாம். நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் எமது ஈழ விடுதலை போராட்டத்தை மதிப்பவர். அனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் ஒருபோது எமது தனி அரசை ஆதரிக்கமாட்டார்கள்.

எனவே தற்போதுள்ள நிலையில் இந்தியாவைத் தவிர்த்து நாம் அமெரிக்காவுடன் சேர்ந்து இயங்குவதே எமக்கு எதிர்காலத்தில் விடுதலை பெற வழி சமைக்கும். போர் குற்ற விசாரணையை வைத்து ஐ நா அமைதிப்படையின் போர்வையில் இலங்கைக்குள் புகுந்து வடக்கு கிழக்கில் இருந்து சிங்கள ராணுவத்தை முற்றாக அகற்றி சர்வசன வாக்கெடுப்பை நிகழ்த்தி தமிழர்களின் விருப்பின் பேரில் தமிழ் ஈழ தனியரசை நிறுவி தமது பாதுகாப்புடன் அபிவிருத்தி கட்டுமான பணிகளை மேற்கொண்டு தமிழர்களின் நேச சக்தியாக இருந்து தமிழ் ஈழத்தில் தமது ராணுவ கடற்படை தளங்களை அமைத்து எவ்வாறு இஸ்ரேல் தமது செல்ல பிள்ளையாக இருக்கிறதோ அவ்வாறே தமிழ் ஈழமும் அவர்களது செல்ல பிள்ளையாக நேச சக்தியாக ஒரு மாநிலமாக வளருவதே அபெரிக்காவை பொறுத்தவரை இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவையும் இந்தியாவையும் ஓரம் காட்ட வழி சமைக்கும். அமெரிக்காவின் ஜெனீவா நகர்வு ஒரு நீண்ட கால திட்டத்தின் முதற் படி போலவே தோன்றுகிறது.

Edited by akootha

புதிய சிந்தனைகளை தூண்டி விட்டுள்ளீர்கள். இப்படியான சிந்தனைகளும் அவற்றிக்கு உருவம் கொடுக்கும் செயற்பாடுகளுமே எமது மக்களை மண்ணை வாழவைக்கும்.

அந்த புதிய சிந்தனைகளை மட்டும் நம்பி இருக்காது மாற்றுவழிகளையும் ஆராயவேண்டும்............

அந்த புதிய சிந்தனைகளை மட்டும் நம்பி இருக்காது மாற்றுவழிகளையும் ஆராயவேண்டும்............

மாற்றுவழிகள் தான் புதியசிந்தனைகள் :D

புதியசிந்தனைகள் தான் மாற்றுவழிகள் :D

பழைய சிந்தனைகளை மகிந்த சிந்தனை சிதைத்து விட்டது ஆகவே புதிய சிந்தனைகளை தேடவேண்டும்..........

மகிந்த சிந்தனை சிங்களவர்களாலேயே அடித்து துரத்தப்படும் நாட்கள் வெகுவிரைவில்.

தொடரும் குடும்ப ஆட்சி, ஊழல் விலைவாசி ஏற்றத்திற்கு வழிசமைத்து கொடுத்துள்ளது. கடைசி ஆயுதமாக 'நாட்டுப்பற்று' என்ற ஆயுதத்தை பாவித்து வருகின்றார். செவ்வாய்க்கிழமை எல்லா கோயில்கள், விகாரைகள், மஜ்லீசுகள், தேவாலயங்களில் நாட்டுக்கு நல்லாசி வேண்டி பிரார்த்திக்கும் நிலையில் உள்ளது மகிந்த சிந்தனை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி! சீமான் நீண்டதொரு விளக்கத்தோடு ஆழமான கருத்துக்களை பதித்துள்ளீர்கள். நான் பல நாட்கள் நினைப்பதுண்டு தலைவரு பற்றி கருத்துகளுக்கு ஒரு விரிவான கருத்துக்களை பதிவிட வேண்டும் என்று அதை இன்று தாங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடல் வரிகள் தான் ஆறுதல் தேடும் இடமாக....

http://youtu.be/HgnZWAdiN7I

  • கருத்துக்கள உறவுகள்

யானை பார்த்த குருடர் கதைதான் நினைவுக்கு வருகின்றது. வியாழக்கிழமை சனல்-4 நிகழ்ச்சியுடன் அதற்கும் துரோகப்பட்டம் கொடுத்து, ஜொன் ஸ்னோவையும் ஒன்றும் தெரியாத முட்டாள் என்று சொல்லவும் ஒரு கூட்டம் இருக்கும்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் உண்மையில் உயிருடன் பிடிபட்டிருந்தால் கூட நிச்சயமாக தன் உயிர் வாழ்வுக்கு ஆசைப்பட்டு நடந்திருக்காது என்பது அசைக்க முடியாத என் நம்பிக்கை. ஏனெனில் சிங்களவன் எப்படிப் பட்டவன் அவனிடம் பிடிபட்டால் என்ன நடக்கும் என்பதை நன்கே அறிந்து வைத்தவர் அவர். மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவரால் ஏமாற்றப் பட்டிருக்கலாம். அல்லது போர் களத்தில் காயம் பட்டு மயங்கிய நிலையில் எதிரிகளால் கைதாகியிருக்கலாம். எது எவ்வாறாயிருப்பினும் வீடியோ வரும் வரை பொறுமை காப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 காட்டப் போகும் காணொளி ஈழத்தமிழரின் விடிவுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கப் போகின்றது. என்பதில் ஐயமில்லை.தலைவர் பற்றி அவர்கள் காண்பிக்கும் படங்கள் ஏற்கனவே வெளியாகி பல வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியவைதான்.அருச்சுனனுக்கு மாம்பழம் மட்டுமே தெரிந்தது என்பது போல எங்களுக்கு எமது விடிவு மடடுமே தெரிய வேண்டும். தலைவர் அதற்காகவே போராடினார். இந்த நிலையில் சனல்4ஐ துரோகியாக்கி புனை கதைகளை அவுpழ்த்து விடும் தமிழ் ஊடகங்களின் அரசியல் வங்குரோத்துத் தன்மையை என்னவென்பது.காட்டப்படப்போகும் உடல் தலைவரது உண்மையான உடலா அல்லது டம்மியா என்பதற்கான விவாதத்தை தொடக்கி சர்வதேசம் சொல்லும் புலிகளின் மீதான போர்க்குற்றங்களை மீண்டும் கிளறுவதால் எந்த பயனும் விளையாது.மாறாக தீமையே கிடைக்கும்.சர்வதேசத்தைப் பொறுத்தவரை தலைவரும் புலிகளும் அழிந்து விட்டார்கள்.அவர்கள் அந்த வகையிலேயே தங்கள் செய்திகளை வெளியிடப் போகிறார்கள்.ஆகவே எந்தவித சலனத்துக்கும் ஆட்படாமல் தலைவர் பற்றி ஓவ்வொருவரும் எந்த நிலைப்பாட்டில் இதுவரை இருந்தீர்களோ அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இரக்கலாம் அல்லது உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் சனல் 4 இன் காணோளியை வைத்து போராடத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதுத தமிழர்கள் முன்னால் தற்போதுள்ள கடமையாகும்.

சனல் 4 காட்டப் போகும் காணொளி ஈழத்தமிழரின் விடிவுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கப் போகின்றது. என்பதில் ஐயமில்லை.தலைவர் பற்றி அவர்கள் காண்பிக்கும் படங்கள் ஏற்கனவே வெளியாகி பல வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியவைதான்.அருச்சுனனுக்கு மாம்பழம் மட்டுமே தெரிந்தது என்பது போல எங்களுக்கு எமது விடிவு மடடுமே தெரிய வேண்டும். தலைவர் அதற்காகவே போராடினார். இந்த நிலையில் சனல்4ஐ துரோகியாக்கி புனை கதைகளை அவுpழ்த்து விடும் தமிழ் ஊடகங்களின் அரசியல் வங்குரோத்துத் தன்மையை என்னவென்பது.காட்டப்படப்போகும் உடல் தலைவரது உண்மையான உடலா அல்லது டம்மியா என்பதற்கான விவாதத்தை தொடக்கி சர்வதேசம் சொல்லும் புலிகளின் மீதான போர்க்குற்றங்களை மீண்டும் கிளறுவதால் எந்த பயனும் விளையாது.மாறாக தீமையே கிடைக்கும்.சர்வதேசத்தைப் பொறுத்தவரை தலைவரும் புலிகளும் அழிந்து விட்டார்கள்.அவர்கள் அந்த வகையிலேயே தங்கள் செய்திகளை வெளியிடப் போகிறார்கள்.ஆகவே எந்தவித சலனத்துக்கும் ஆட்படாமல் தலைவர் பற்றி ஓவ்வொருவரும் எந்த நிலைப்பாட்டில் இதுவரை இருந்தீர்களோ அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கலாம் அல்லது உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் சனல் 4 இன் காணொளியை வைத்து போராடத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதுNத தமிழர்கள் முன்னால் தற்போதுள்ள கடமையாகும்.

மூன்று வருடங்கள் பின்னோக்கி இருக்கிறோம்.

சனல் 4 காட்டித்தான், சொந்த இனத்திற்காக போராடிய தலைவனின் அழிவுச் செய்தி தெரிய வேண்டிய கேவலம்.

இனியாவது மாயைகளில் வாழாமல் பரப்புரைகளில் ஈடுபடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது காந்தி செத்துட்டாரா?? :( :( :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானுக்கு ஒரு பச்சைப்புள்ளி.

புதிய இலங்கையின் கொலைக்களம் படத்திற்கு இலங்கை அரசு இன்னொரு "lies agreed upon" தாயாரிக்க மாட்டார்கள் போலிருக்கு. எங்களின் கூத்தாடிகளுக்கு கொஞ்சம் கிள்ளி தெளித்துவிட போதும். அவர்கள் எதிர்வாதம் வைத்து விடுவார்கள்.

ஜனநாயக முறையில் போவதானால் எல்லாம் இருக்கத்தானய்யா செய்யும். எதோ சேர்த்திழுத்துத்தான் முன்னால் போகவேண்டும்.

புதிய படத்தையும் கூடுமானவரை எல்லோரையும் பார்க்க வைக்க வேண்டும். இந்த "DVD" தாயாரிக்கும் போது இரண்டையும் ஒன்றில் போட்டு இரண்டு "PLAY" சொடுக்கிகளையும் உள்ளடிக்கியிருக்க வேண்டும். இது, முதலாவதை பாரக்காதவர்கள், இதை பெற்றார்களாயின், இரண்டையும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும். அதே நேரம், தேவையில்லாததை அவர்கள் விலக்கி விடலாம். பிரதியெடுக்கும் செலவு குறையும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னது காந்தி செத்துட்டாரா?? :( :( :(

இது 2012. இன்னும் தலைக்கேறிய ஏதோ போதையில்.. 1948 இல இருக்கு சில சனம்..! :lol::D

48gandhi_dead.jpg

நாங்கள் தான் கடந்த இரண்டு வருடமா.. மாவீரர் தினத்துக்கு வீட்டு வளவுக்க வளைவு கட்டிறமே.. காந்திக்கு..! அப்புறம் எதுக்கு. அதையும் மந்தைகள் போல மக்கள் தொடரனும்.. ஆகா.. நல்லா இருக்கின்னு.. சொல்லனுன்னு நினைக்கினமோ என்னமோ..!

செத்த பிறகு எல்லோரும் பிணம் தான். காந்தி உட்பட. காந்திக்கு வளைவு கட்டுறவையும் கூட..! :lol::D

Edited by nedukkalapoovan

தன் உயிர் இருக்கும் கடைசி நிமிடம் வரை தான் போராடுவேன் என்றும் தன் சாவு இம்மண்ணில் தான் என்றும் கூறியவர் நிச்சயம் தப்பிச்சென்றிருக்க மாட்டார். இறுதி நேரத்தில் தப்பி செல்லும் சூழ்நிலையும் இருக்கவில்லை.

தான் தப்ப வேண்டுமென்று நினைத்திருந்தால் அவர் தனது குடும்பத்தையும் நிச்சயம் தன்னுடன் அழைத்து சென்றிருப்பார். ஆனால் அவரது பிள்ளைகளின் இறப்பும் பெற்றோரின் கைதும் கூறுகிறது உண்மையை.

தனது பிள்ளைகளையும் போராளிகளையும் பொதுமக்களையும் பறிகொடுத்து தான் மட்டும் தப்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்காது.

முன்னைய காலங்களில் பிரபாகரன் இறந்து விட்டதாக கூறப்பட்ட பின் உயிருடன் வந்தார் தான். ஆனால் அன்றைய நிலை வேறு. இப்படி முற்றாக இயக்கம் அழிக்கப்படவில்லை. காட்டுக்குள் பதுங்கியிருந்தார்கள். இப்பொழுது நிலை வேறு. இயக்கம் அழிக்கப்பட்டு மிகுதி பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முழுப்பகுதியும் இராணுவ கட்டுப்பாட்டில். எனவே ஒரு இடமும் பதுங்கியிருக்க முடியாது. இறுதி நேரம் இந்தியாவுக்கு தப்பிச்செல்லவும் முடியாது. (விடுதலைப்புலிகளின் கடற்பிரதேசத்தை அமேரிக்கா செய்மதி மூலம் அவதானித்து அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியதாகவும் ஒரு தகவல்).

channel 4 நிச்சயம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தான் வழங்குவார்கள். காணொளியில் காட்டப்படுவது பிரபாகரன் அல்ல என்றால் அது போலியாக உருவாக்கப்பட்டதா என்பதையும் அவர்கள் காணொளியில் உள்ள முகத்தை பார்த்து கூற முடியும். அத்துடன் பிளாஸ்டிக் சேஜரி செயும் வசதி எம் நாட்டில் இல்லை. இருந்தாலும் இறுதிப்போரில் சாத்தியமில்லை. அல்லது பிரபாகரன் போன்ற தோற்றமுள்ளவர் ஒருவரை காட்டியிருப்பார்கள் என்றால் உடலமைப்பு ஒத்துப்போனாலும் முக அமைப்பு நிச்சயம் அவர் போலி என்று காட்டிக்கொடுக்கும்.

இக்காணொளியை பரிசொதிப்பவர்களுக்கும் இந்த சந்தேகம் இருந்திருக்கும். எனவே அது தெளிந்த பின் தான் உலகத்திற்கு போட்டுக்காட்டுவார்கள். இவர்கள் ஒன்றும் எம் நாட்டவர்களில்லை பிழை விடுவதற்கு.

பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருப்பார் என்று நான் நம்பவில்லை. அவர் இறந்த பின் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இலங்கை அரசாங்கத்திடம் பிடிபட்டால் தனக்கு என்ன நடக்கும் என்று அவர் தெரிந்தவர். சித்திரவதை செய்து மரண தண்டனை தான் கொடுப்பார்கள். எனவே தற்கொலை செய்திருக்கலாம். அதையும் மீறி அவர் பிடிபட்டிருந்தால் அது இறுதி நேரம் அவர் பக்கத்திலிருந்தவர்களின் சதி முயற்சியாக இருக்கலாம். ஏனென்றால் இபொழுது யாரை நம்புவது என்று தெரியவில்லை. (அப்படியில்லாவிட்டால் மன்னிக்க வேண்டும்).

இனியும் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறிக்கொண்டிருப்பவர்களையும் பிழை கூற முடியாது. ஏனென்றால் யாராலும் அவர் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவற்றை மீறி அவர் உயிருடன் இருந்தாலும் நிச்சயம் வெளியில் தலை காட்ட முடியாது. அத்துடன் அவர் தலைமையில் இன்னொரு ஈழபோராட்டம் சாத்தியமில்லை. அவர் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பார் என்றும் தெரியாது. அவர் மகனும் உயிருடன் இல்லை.

எனவே தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறிக்கொண்டிருக்காதீர்கள். அவர் இறக்கவில்லை என்று கூறும் நீங்கள் அவர் உயிருடன் இருப்பதற்கு ஏதாவது ஆதாரம் வைத்துள்ளீர்களா? அப்படி அவர் உயிருடன் இருக்கிறார் என்று பின்னொரு நாளில் செய்தி வந்தால் அதன் பின்னர் கதையுங்கள். அதுவரை தலைவரின் இறப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

channel 4 இந்நேரம் இதை வெளியிடுவது நல்லது. பலரின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். அத்துடன் தலைவர் இறந்த செய்தி தெரிந்தால் தான் இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவனாவது தலைவர் வழியில் வரவேண்டுமென நினைத்து எதிர்கால போராட்டம் பற்றி சிந்திக்க முடியும்.

பலரும் இடையிடையில் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்தாலும் எம் தலைவன் இறுதிவரை அக்கயவர்களுடன் கூட்டு சேராமல் இருந்தது எம் சரித்திரத்தில் இடம்பிடிக்கும்.

தலைவன் இறந்தாலும் எம் நெஞ்சத்தில் உயிர் வாழ்வான்.

பொட்டு அம்மானை பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை. அவர் உயிருடன் இருந்தால் அவர் வழிகாட்டலில் ஏதாவது நடக்கலாம். அதுவும் இப்போதைக்கு சாத்தியமில்லை.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இது 2012. இன்னும் தலைக்கேறிய ஏதோ போதையில்.. 1948 இல இருக்கு சில சனம்..! :lol::D

48gandhi_dead.jpg

நாங்கள் தான் கடந்த இரண்டு வருடமா.. மாவீரர் தினத்துக்கு வீட்டு வளவுக்க வளைவு கட்டிறமே.. காந்திக்கு..! அப்புறம் எதுக்கு. அதையும் மந்தைகள் போல மக்கள் தொடரனும்.. ஆகா.. நல்லா இருக்கின்னு.. சொல்லனுன்னு நினைக்கினமோ என்னமோ..!

செத்த பிறகு எல்லோரும் பிணம் தான். காந்தி உட்பட. காந்திக்கு வளைவு கட்டுறவையும் கூட..! :lol::D

அட ஆமால்ல இப்பதான் எனக்கு தெரியும். :mellow: :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே தயவு செய்து ரோ மீடியாக்களின் திரிக்கப்படும் தமிழ் செய்திகளை நம்பாதீர்கள். இங்கு வந்து கொட்டாதீர்கள். தலைவரை பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டது ஆக இவ்வளவு தான்.

The programme has also obtained unofficial footage, which suggests that his father Velupillai sustained a massive head wound – when his body was shown on television his head was covered by a rag. Separate stills see him first in uniform, then stripped naked and finally smeared in mud.

Again Professor Pounder believes he was executed. ‘This would be very typical of a high velocity gun shot wound to the head,’ he said.

‘A single gun shot wound to the head is a little unusual in terms of an armed conflict - it would suggest it is a targeted shot at a subject who wasn’t moving.’

அதாவது தலைவரின் தலையில் பட்ட காயம் மோதலில் கொல்லப்பட்டது போல் தெரியவில்லை. அசையாத ஒரு இலக்கு மேல் அதி வேகம் கொண்ட துப்பாகியால் சுடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து பேராசிரியர் ஊகிக்கிறார் இவர் பிடித்து கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று. ஆனால் நாம் இங்கு ஒன்றை சிந்திக்கவேண்டும் என்னவென்றால், தலைவரே தனக்கு வெடி வைத்திருந்தால் கூட அது அசையாத இலக்கு மேல் வைக்கப்பட்ட குறி தான். மேலும் தலைவர் சக போரளியிடம் கூட AK-47 போன்ற அதி வலு கூடிய துவக்கால் தன்னை சுட உத்தரவிட்டிருக்கலாம். எனவே பொறுமையாக இருப்போம். தலைவனை நம்புவோம். போர் குற்றத்திலிருந்து எமது மக்களை திசை திருப்ப றோ பல கதைகளை திரித்து எமது கவனத்தை குழப்பும். தெளிவாக இருப்போம்.

Edited by காட்டாறு

என்னமா செய்திகள் போடறாங்க...

உண்மையைக் கண்டவன் ஒருத்தனும் இல்லை. அப்படி இருக்க பக்கத்தில இருந்து பாத்தா மாதிரியில்லோ செய்திகள் வருது.

தலைவரோ, அவரது மகனோ கொல்லப்பட்டிருந்தால் அல்லது கொல்லப்படாமல் இருந்தால்?? - ஆனால் மே 17 க்கு பிறகு முள்ளிவாய்க்காலில் இருந்த பெரும்பாலோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வயது வேறு பாடின்றி கொத்துக்குண்டுகள், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் உபயோகித்து அழித்து இருக்கிறார்கள். மே 17க்கு முதல் தப்பியவர்கள் தப்பியிருக்கலாம். ஆனால் அதன் பிறகு பலரால் தப்ப முயற்சித்தும் தப்ப முடியவில்லை. தலைவர் முன்பே வெளியேறி இருந்தால் தப்பி இருக்கலாம். அங்கு இருந்தால்... 1) தலைவரோடு இருந்த (கருணா போல) ஒருவரால் சுடப்பட்டிருக்கலாம். 2) சிங்கள அரசின் கண்மூடித்தனமான தாக்குதல்களினால் எதிர்ப்பாராத விடயமாக காயப்பட்டிருக்கலாம். 3) நச்சுவாயு, மயக்க மருந்து அடித்து உயிருடன் பிடித்து சித்திரவாதை செய்து கொண்டிருக்கலாம்.

தலைவன் உயிரோடு இருந்தாலும் இல்லாது வீரமரணம் அடைந்தாலும் அவர் எனக்கு தலைவன் தான். தேவையில்லாமல் எங்களுக்குள் அடிபடாமாலும், சனல் 4 தொலைக்காட்சியை துரோகி என்று வீண்வதந்திகளைப் பரப்பாமலும், தலைவன் காட்டிய வழியில் விடுதலைக்கு ஒவ்வொருவரும் பங்களிப்பினை தொடந்து செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனதோ, இல்லை தனது குடும்பத்தினதோ சா-பயத்திற்கு தலைவன் பணிந்திருந்தால் எவளவோ காலம் அவரிடம் இருந்தது அதில் இருந்து இலகுவாகத் தப்ப. தேதி சொல்லி வர இருந்த சாவுக்கு அன்னாள் வரை காத்திருந்தவருக்கு சாப்பயம் தடுக்கி விழுவதுபோல் வரமுடியும் என்று நினைப்பது அறியாமை!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ஒன்று மட்டும் உண்மை - தலைவரோ அவரின் குடும்பமோ உயிருடன் பிடிபடக் கூடாது என்பதில் மிகவும் அவதானமாக நுணுக்கமாக பல முடிவுகள் இறுதி நேரத்தில் எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் இறுக்கமான கட்டத்திலும் நிறைவேற்றப்பட்டும் உள்ளது. தலைவர் ஒரு போதும் உயிருடன் பிடிபடவில்லை. அனால் தலைவரின் சடலம் கடல் ஏரியல் தன்னை தானே சுட்ட நிலையில்தான் கண்டெடுக்கப்பட்டது. அவரின் மகள் துவாராக 14ம் திகதி வீரமரணம் எய்தினார். அவரின் சடலத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் இன்றும் உயிருடன் வன்னியல் உள்ளனர். தலைவரின் மனைவி கடைசி மகன் பாலச்சந்திரன் மிக முக்கியமான நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரின் கண்காணிப்பில் இருந்தனர். இறுதியில் அவரும் தனக்கு கொடுக்கபட்ட கடமையை சரிவர செய்து தன்னை தானே பலிகொடுத்தார். இந்த உண்மைகள் பல முன்னாள் போராளிகளின் வாயில் இருந்து வந்த உண்மைகள்!

http://www.deccanchronicle.com/channels/nation/south/lttes-prabhakaran-was-shot-dead-after-surrender-679

LTTE's Prabhakaran was shot dead after 'surrender'

Reliable sources claim Prabhakaran was led to believe Western powers, the UN and India had brokered a surrender plan which would allow top Tiger leaders and families a safe passage out of the battle zone. Surrounded by the Lankan army, the Tiger chief had no option but to give up his fight.

Many believe Prabhakaran was expecting to be picked up by a foreign rescue vessel - perhaps UN sponsored - and live to fight another day.

But now, it has been revealed that the Prabhakaran family - wife Mathivathani, daughter Duvaraka and son Balachandran - were in government custody for days before being flown to Nanthikadal and executed. He was the last to die, sources said, adding that elder son Charles Antony was killed a couple of days earlier, while trying to break through a Lankan cordon. Many also believe Prabhakaran was made to watch the executions.

நம்பகமான ஆதாரங்கள்: பிரபாகரன் மேற்கத்திய சக்திகள், ஐ.நா. மற்றும் இந்திய உயர்மட்ட புலி தலைவர்கள் மற்றும் குடும்பங்கள் போரில் மண்டலத்தின் வெளியே பாதுகாப்பாக செல்வதற்கு அனுமதிக்கும் ஒரு சரணடைய திட்டம் இடைத்தரகர் வழிவகுத்ததாக கூறுகின்றனர். இராணுவ சூழப்பட்ட, தலைவர் வேறு வழியே இல்லை ஆனால் தனது போராட்டத்தை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளபட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.