Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவித்தல்

Featured Replies

.

ஒரு குறிப்பிட்ட தமிழ் இணையத்தளத்தில் வாசித்தவர் எண்ணிக்கைய எட்டால் அதிகரிக்கிறார்கள். (Hits)

இதனால் தமிழர் சம்பந்தப் பட்ட விசயம் என்றாலே சற்று நம்பிக்கை குறைவாக இருக்கிறது..

ஆனால் இங்கே ஒரு நம்பகத்தன்மைய கட்டி எழுப்பியிருக்கிறீர்கள் மோகன்.

இதை பொது நன்மைக்கும் உங்கள் தனிப்பட்ட நன்மைக்கும் லாபகரமாக மாற்றுவது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. ஏனோ நீங்கள் அந்தத் திசையில் முயற்சிக்க வில்லை.

தாயகத்தில் அரசியல் சூழ்நிலைகள் மாறப்போவதற்கான சில அறிகுறிகள் ஆங்காங்கே தென்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதனால்.. உங்கள் இத்தனை வருட உழைப்பை வீணாக்காமல், அதன் பயன் பெறும் வழியில் தொடருங்கள்.

  • Replies 79
  • Views 17.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2009க்குப் பிறகு மனரீதியான வெறுப்பும், எரிச்சலும் அனைவருக்கும் உண்டு. ஏன்டா இதைச் செய்கின்றோம்... செய்ய வேண்டும் என்ற ஒரு எரிச்சல்... அனுபவத்தில் சொல்கின்றேன். ஒரு காலத்தில் எம் போராட்டத்தைப் பற்றிக் கொச்சையாகக் கதைத்தவர்களை யாழ்களத்தில் வெளிறேற்றும்வரை நான் விட்டதில்லை. ஆனால் இன்று சாத்திரி வரைக்கும் எழுதும்போது, பேசாமல் தான் இருக்கின்றேன். இவர்களுக்கு பதில் எழுதி என்ன ஆகிவிடப் போகின்றது என்ற சோர்வு.

எமக்கே இப்படி இருக்கின்றபோது, இழப்புக்களைச் சந்தித்து, சுமைகளோடு வாழும் மோகன் அண்ணாவுக்கு, வேண்டுமென்றே எரிச்சல் ஊட்டும் விதத்தில் நடந்து கொள்வது, எதிரிகளின் இணையத்தளங்களை முடக்குதல் என்ற செயற்பாட்டிற்கே துணை நிற்பதாக அமையும்.

தங்களின் இந்த முடிவானது மனதிற்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது மோகன் அண்ணா. யாழை மூடிவிடும் இக்கட்டான நிலைமைக்கு நாம் அனைவரும் உங்களைக் கொண்டுவந்தமைக்காக... மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றோம்!

நான் தனிப்பட தங்களை தொடர்பு கொண்ட விடயங்கள் தொடர்பில்..... தங்களிற்கு புரிந்துணர்வு இருக்கும் என்று நினைக்கின்றேன்.

யாழின் நலனில் அக்கறை கொண்டவனாகத்தான் நான் எப்பொழுதுமே இருந்து வருகின்றேன். என்றும் இருப்பேன்! ஆனால் கருத்துக்கள உறவுகள் எனும் வகையில், நாம் எமக்குள் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும், விட்டுக் கொடுப்பையும் கடைப்பிடிக்காமல் விட்டது... நாம் செய்த மாபெரும் தவறு என்பதனை உணர்ந்து, தங்களிடம் அதற்காக மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன்.

யாழ் இணையத்தினை... நான் ஒரு மன ஆறுதலுக்காக உறவுகள் கூடி கருத்துக்களை பகிரும் இடமாகவும் , வாசிப்புக்கு உகந்த புதிய படைப்புக்கள் உருவாகும் ஒரு நூலகமாகவுமே பார்த்திருக்கின்றேன்...உணர்ந்திருக்கின்றேன்!

யாழை தொடர முடியாமல் இருப்பதற்கு... நான் ஒரு காரணம் என்று நீங்கள் உணர்ந்தால், தயவுசெய்து என்னை நீக்கிவிடுங்கள் அண்ணா! எனது தவறுகள் ஏதும் இருப்பின் ... அது மற்றையவர்களை பாதிக்கக் கூடாது!!!

தெரிந்தோ தெரியாமலோ... யாழில் நான் எவரையேனும் மனம் நோகடித்திருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்!

யாழுக்காக இதுவரை உழைத்த மோகன் அண்ணாவுக்கும், மட்டுறுத்துனர்களாக இருக்கும் நிழலி அண்ணா, இணையவன் அண்ணா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எதையும் மனதில் வைத்திருக்காமல் ... உறவுகள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே தற்பொழுது அவசியமானது. ஒற்றுமையும் அதற்கான விட்டுக்கொடுத்தலும்... மட்டுமே பல பிரச்சினைகளை தீர்த்துவைக்கும். "உண்மையான மனமாற்றங்கள்" என்பது எம் மனதுக்குள்தான் புதைந்து கிடக்கின்றது. தயவுசெய்து அதனை வெளியில் கொண்டு வாருங்கள்!

தமிழ் வாழும் வரை யாழ் இணையமும் வளர்ந்து வளர வேண்டும்! என்பதே, என் ஆசையும் எதிர்பார்ப்பும்.

நன்றி

என்றும் அன்புடன்...

ஒருவன்,

கவிதை

நன்றிகள் மோகன், தயவு செய்து மீள்பரிசீலனை செய்ய வேண்டாம்! ...

,,, எமக்கெல்லாம் மற்றயவர்களின் பணத்தில்/உழைப்பில் வாழ்ந்து பழகி விட்டோம் ... யாழில் உடபட ... மாற்றுவது கடினம்! எங்களுக்கு யாழை ஓட்ட வேண்டும், ஆனால் யாழ் ஓட என்னத்தை செய்தோம் என்பது தெரிய விருப்பமில்லை! .. வாழ்ந்ததை விட என்ன என்னவெல்லாம் யாழ் மூலம் செய்ய முடியுமோ அதனை எல்லாம் செய்தோம் ...

* தனிமடலில் மிரட்டுவது

* ஒருவரைப் பற்றி மற்றையோருக்கு தனிமடலிடுவது

* சில தேவைகளின் நிமிர்த்தம் கொடுக்கப்பட்ட பெயர், விபரங்கள், தொலைபேசி இலக்கம், விலாசங்களை பகிரங்கப்படுத்துவது

* தெரிந்த விபரங்களை மற்றையோருக்கு அறிவிப்பது

* இரவு நேரங்களில் கூட தொலைபேசியில் மிரட்ட முற்படுவது

* விளம்பரங்களுக்காக எதனையும் செய்ய முற்படுவது

* ..

... வேண்டாம் போதும்!

என்ன .. யாழில் மூலம் கிடைத்த உறவுகளை நிரந்தரமாக பிரியப்போகிறேன்! .. மோகன், சகாரா, நிழலி, கறுப்பி போன்றவர்களின் தொடர்புகள் ஏதோ ஒரு வகயில் இருக்கிறது .. ஆனால் ரகுநாதன், வினித், புங்கையூரான், தமிழ்சிறி, தப்பிலி, ரதி போன்றவர்களின் தொடர்புகள் இல்லாமல் போக போகிறது ..

... மூட முன் ... நானும், என் யாழும் .. ஏறக்குறைய 11 12 வருடகால பயணத்தை பதியப்போகிறேன்!

Edited by Nellaiyan

இந்த களம் ஒருவித தேசிய சொத்து. எனவே இதை மூடுவது என்பது ஏற்புடையது அல்ல.

- தெரிந்த,நம்பிக்கையான உறவுடம் அல்லது ஒரு குழுவிடம் ஒப்படைக்கவேண்டும்

- அவர்கள் புதிதாக மட்டுமே உறுப்பினர்களை இணைக்கலாம்

- புதிய மட்டுறத்தினர்கள், மேம்படுத்தப்பட்ட விதிகளுடன் நடத்தப்படல் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த வருத்தத்துடன் மோகன் அண்ணாவின் முடிவை ஏற்றுக்கொள்கின்றேன். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த களம் ஒருவித தேசிய சொத்து. எனவே இதை மூடுவது என்பது ஏற்புடையது அல்ல.

- தெரிந்த,நம்பிக்கையான உறவுடம் அல்லது ஒரு குழுவிடம் ஒப்படைக்கவேண்டும்

- அவர்கள் புதிதாக மட்டுமே உறுப்பினர்களை இணைக்கலாம்

- புதிய மட்டுறத்தினர்கள், மேம்படுத்தப்பட்ட விதிகளுடன் நடத்தப்படல் வேண்டும்

இது கொஞ்சம் சரியில்லாத யோசனை

-நடத்தினதும் வளர்த்ததும் மோகன்

- இருக்கும் மட்டுறுத்துனர்கள் சரியாகத் தான் நடக்கிறார்கள்-அவர்களை மாற்ற எந்த அவசியமும் இல்லை

- புதிதாக வரும் குழு எப்படி இருக்கும் என யார் நம்ப இயலும்? ஏதாவது ஜில்மால் பண்ணி விட்டால் கெட்ட பெயர் மோகனுக்குத் தான்.

புதிய விதிகள் அமுல் படுத்துவது மட்டும் நல்ல யோசனை

  • கருத்துக்கள உறவுகள்

களம் தெரியவில்லை என்றால் என்னுடைய பதிவு தெரியவில்லை என்றால் பல சமயம் நிர்வாகத்தோடு மோதி இருக்கேன் அதையெல்லாம் மனதில் கொள்ளாது தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இணைய வழி உறவு பாலமாக இருக்கம் யாழை மூடாது இருக்க வேண்டும்.. ஒரளவு அரசியல் சார்பு நிலை இங்கே உருவாகி வரும் போது மூடுவது சரியில்லை.. டச்சு இல்லாமல் போகும்.

:( :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இது கொஞ்சம் சரியில்லாத யோசனை

-நடத்தினதும் வளர்த்ததும் மோகன்

- இருக்கும் மட்டுறுத்துனர்கள் சரியாகத் தான் நடக்கிறார்கள்-அவர்களை மாற்ற எந்த அவசியமும் இல்லை

- புதிதாக வரும் குழு எப்படி இருக்கும் என யார் நம்ப இயலும்? ஏதாவது ஜில்மால் பண்ணி விட்டால் கெட்ட பெயர் மோகனுக்குத் தான்.

புதிய விதிகள் அமுல் படுத்துவது மட்டும் நல்ல யோசனை

உதாரணத்திற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனமான ஆப்பிளை ஆரம்பித்த ஸ்டீவ் ஜோப்சையே ஒரு காலத்தில் வெளியில் வைத்தார்கள் அது பெரிதாக வளர்ந்த பின்னர்.

நான் மோகனின் பங்களிப்பையோ இல்லை அவரின் அர்ப்பணிப்பையோ குறை கூறவில்லை அதற்கு தகுதியும் இல்லை. அவரின் பங்களிப்பை, அர்ப்பணிப்பை பற்றி அறிவேன். நான் பேச வந்த விடயம் யாழ் தொடக்கப்பட்ட நோக்கம் பற்றி. அது வாழவேண்டும்.

அனைத்து யாழ் இணைய உறவுகளுக்கும்,

யாழ் இணையம் தனது 10ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று 11ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் - பல மேடு பள்ளங்களைக் கடந்து - தடைகளைத் தாண்டி - இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாய் - தமிழர்களின் விடுதலை உணர்வையும், தேசிய எழுச்சியையும் வெளிப்படுத்தும் களமாய் - உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாய் - யாழ் இணையம் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=54942

  • கருத்துக்கள உறவுகள்

சோகமான செய்தி

ஆனாலும் எப்போதுமே நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துவந்தவன் (அது எனது நண்பர்களுக்கு எதிராக இருந்தபோதும்) என்ற அடிப்படையில் இதில் உடன்படமுடியவில்லை. ஏனெனில் குற்றம் செய்தவர்களை விலக்கி வைத்தபோதும் அவர்களுக்கு திண்ணையில் மற்றும் அறிவித்தல் விடப்பட்டபோதும் அவர்களுக்காக பேசாமல் நிர்வாகத்தின் முடிவுகளுக்கே மதிப்புக்கொடுத்து இங்கு யாழின் வளர்ச்சிக்காக எழுதியவன் நான். தற்போது என்னை நிர்க்கதியாக்கியது போல் உணர்கின்றேன். பலரின் கேலிக்கு நான் ஆளாகலாம். அந்தவகையில் என்னைப்போல் யாழின் வளர்ச்சி கருதி நிர்வாகத்தின் எல்லா முடிவுகளையுமம் ஆதரித்துவந்த பலர் சிரமங்களை அனுபவிக்கக்கூடும்.

இந்த முடிவை ஆதரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. காரணம் சொல்லாது பலமான ஆயுதங்களை தன்னிடம் வைத்துக்கொண்டு இது போல் முடிவெடுப்பதை ஆதரிக்கமுடியாது. நான் உட்பட யாழுக்கு சிக்கல்களைக்கொடுக்கும் உறுப்பினர்களை உடன் நிறுத்துங்கள். யாழைத்தொடருங்கள். அதை வருமானம் வரும் ஒரு இணையமாக மாத்துங்கள் என்பதே எனது வேண்டுகோள். அதற்கு என்னாலான பங்களிப்பைச்செய்ய காத்திருக்கின்றேன். முன்னரும் ஒரு விளம்பரம் அனுப்பியிருந்தேன். முகப்புத்தோற்றத்தில் மாற்றங்கள் செய்தபின்பே விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பதில் தந்த மோகன் அண்ணா அதை நடுவழியில் விட்டுச்செல்வது எந்த வகையில் நியாயம்.

யாழைப்புறக்கணிப்போம் என முயன்ற ஒருவர் எங்கள் இத்தனை பேரையும் பின்னால் சதி செய்து வென்றுவிட்டார் என்பதா?????

அகோதாவுடன் சேர்ந்து நாம்செய்த பெரும் வேலைத்திட்டங்கள் கூட இத்துடன் முடிவுக்கு வருகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(

வணக்கம்

தமிழ் இணையங்களின் மத்தியில் யாழின் சிறப்புக்கள்

1 முற்று முழுதாக தமிழ்பதிவுகள்

2 விளம்பரங்கள் (தொல்லை) இல்லை

3 பதிவுசெய்த உறுப்பினர்களின் மின் அஞ்சல்களுக்கு 'ஸபம்" மின்னஞ்சல்கள் வந்ததில்லை

4 உயர்ந்த தொழில்நுட்பம

தமிழ் யுனிக்கோட் மூலம் ஒரு மின் அஞ்சல் அனுப்ப தெரியாதோர் பலர் உள்ளனர்

ஆனால் முற்றுமுழுதாக தமிழ் யுனிகோட்டில் இணையத்தை உருவாக்க எவ்வளவு

தொழில்நுட்ப அறிவு வேண்டும். எத்தனை மணிநேர உழைப்பு வேண்டும்.

இத்தனை வருட உங்கள் உழைப்பிற்கு நிர்வாகிகளுக்கு நன்றி

உங்கள் முடிவினை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தினால் மீண்டும் சந்திப்போம்

:(

VERNON

நாம் தமிழராய் பிறந்தது தெய்வ சித்தம். யாழ்கள உறவுகளானது தேவலோகத்தில் நிச்சயத்த பந்தம். யாழ் மோகண்ணாவின் உடமை. ஆனால் அதில் எழுதும் ஒவ்வோருகணமும் அது எமது உரிமையாகத்தான் மதித்திருக்கிறோம். அகுதா சொலவது போல், அதற்கு தேவை இருக்கும் போது மோகண்ணா யாழை மூடுவது சரியல்ல எனபது எனதும் கருத்து. இந்த நிலையில் பொழுது போக்கு வேண்டுமானால் எங்கும் போகலாம் ஆனால் "யாழ்" இங்கே மட்டும் தான் உண்டு.

பிள்ளையை தாய் பெற்றுக்கொள்ளாம். ஆனால் பெற்றபின் சாக்கடையில் எறிந்துவிட்டு போவது சரியல்ல. பெற்றபிள்ளையின் பாரதை அவர் நிதனாமாக சிந்தித்துத்தான் செயல்ப்படவேண்டும். அவரை நம்பிதான் நாம் இங்கே வந்தோம்.

இது கொஞ்சம் சரியில்லாத யோசனை

-நடத்தினதும் வளர்த்ததும் மோகன்

- இருக்கும் மட்டுறுத்துனர்கள் சரியாகத் தான் நடக்கிறார்கள்-அவர்களை மாற்ற எந்த அவசியமும் இல்லை

- புதிதாக வரும் குழு எப்படி இருக்கும் என யார் நம்ப இயலும்? ஏதாவது ஜில்மால் பண்ணி விட்டால் கெட்ட பெயர் மோகனுக்குத் தான்.

புதிய விதிகள் அமுல் படுத்துவது மட்டும் நல்ல யோசனை

மட்டுறத்தினர்கள் யார் என்பது கள உறவுகளுக்கு தெரியக்கூடாது, அதாவது அவர்கள் ஒரு பொதுப்பெயரில் இயங்கவேண்டும் - மட்டுறத்தினர்.

நாம் நிழலி இல்லை இணையவன் என்பவர்களை தெரிந்துகொள்வதால் அதிக சிக்கல்கள் வருகின்றன. அதனால் தான் 'புதிய மட்டுறத்தினர்கள்' அறிமுகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

அகோதாவுடன் சேர்ந்து நாம்செய்த பெரும் வேலைத்திட்டங்கள் கூட இத்துடன் முடிவுக்கு வருகின்றன.

முள்ளிவாய்க்காலின் பின்னராக இந்த திரியை ஆரம்பித்து, http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203 , அதன் மூலம் பல உறவுகள் ஒருவித பரப்புரை யுத்தத்தை யாழ்கள உதவியுடன் கொண்டு நடாத்திவருகின்றோம்.

அதன் பலன்கள் ஒரு இராணுவ முக தாக்குதல் போன்று விளைவுகள் சடுதியாக தெரியமாட்டா. அதைவிட உயிர்த்தியாகங்களும் இல்லை.

அண்மையில் தான் ஒரு சிறு யதார்த்தமான வெற்றி கிடைத்து இருந்தது. அதை நாம் தொடர எமக்கு யாழ் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • அதை நாம் தொடர எமக்கு யாழ் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

........எனக்கு மிகவும் சோகமாக் இருகிறது ..எனக்கு அதிர்ச்சியாக இருந்தது உங்கள் சேதி இப்போ தான் வந்து பார்த்தேன்.( இன்று சனி கிழமை பிசி எனத்தெரியும் தானே) சில கறுப்பாடுகளால் வந்த வினை ... யாழ் பான த்தவர்கள் கூடும் இனிய ஒரு ஆலமர நிழல். வரும் ஆணி மாதத்தில் நான் இணைந்து நான்கு வருடமாகிறது . தினமும அதிக நேரம்செலவிடும் இடம்...........மிகுந்த சோகம்.....

சில கட்டுபாடுகளுடன் ...இந்த அறிவிப்பு மீள் பரிசோதனை செய்யப்படுமானால்

மிகுந்த மகிழ்ச்சி ...நிலாமதி .

Edited by நிலாமதி

முள்ளிவாய்க்காலின் பின்னராக இந்த திரியை ஆரம்பித்து, http://www.yarl.com/...showtopic=71203 , அதன் மூலம் பல உறவுகள் ஒருவித பரப்புரை யுத்தத்தை யாழ்கள உதவியுடன் கொண்டு நடாத்திவருகின்றோம்.

அதன் பலன்கள் ஒரு இராணுவ முக தாக்குதல் போன்று விளைவுகள் சடுதியாக தெரியமாட்டா. அதைவிட உயிர்த்தியாகங்களும் இல்லை.

அண்மையில் தான் ஒரு சிறு யதார்த்தமான வெற்றி கிடைத்து இருந்தது. அதை நாம் தொடர எமக்கு யாழ் வேண்டும்.

அகூதாவின் கருத்து தான் எனதும், மோகன் அண்ணா உங்கள் முடிவை மீள் ஆய்வு செய்யுங்கள்.

அகூதா ... இவரைப்பற்றி சிலவரிகளில் எழுத முடியாதவை ... ஒன்றைச்சொல்வேன் ... உன் போன்றோர் இருக்கும் மட்டும் எம் கனவு சாகாது!

  • கருத்துக்கள உறவுகள்

சரி நெல்லை யாழே இல்லையென்றால்;.....???

அகூதா ஒரு கையை மட்டும் தட்டி என்ன பலன்????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மோகன் அண்ணா, மற்றும் உறவுகள் அனைவருக்கும்,

ஒருவருடைய சொந்த விடையத்தில் தலையிடுவது நாகரீகம் இல்லை இருந்தும் அனைவருக்கும் தேவையான ஒரு விடையமாக இருப்பதால் மோகன் அண்ணா. நிறுத்துவது உங்கள் தனிப்பட்ட விடையமாக இருந்தாலும் தமிழருக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரையாவது ஆகக்குறைந்தது அடுத்த ஜெனீவா மாநாடுவரைக்குமாவது யாழை கொண்டுநடத்துமாறு தாழ்மையுடனும்,அன்போடும் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை ஆயினும் ஒரு அணில் போல் எம்மினத்திற்காய் ஏதேனும் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். யாழினூடு அகூதா அண்ணா போன்றவர்களின் உதவியோடு நடைபெறும் ஒவ்வொரு கவனயீர்ப்புக்கும் இங்கிருந்து எம்மால் முடிந்த மெயில் அனுப்புதல்,கருத்துக்கள் எழுதுவதை செய்துகொண்டிருக்கிறோம். நேசக்கரத்தின் மூலமும் பல உறவுகள் சிறுதுரும்பையேனும் செய்திருக்கிறோம், செய்வோம். இவை எல்லாம் யாழ் இல்லாமல் என்னை போன்றவர்களால் சாத்தியம் இல்லை.

யாழ் இல்லாமல் இவற்றை எல்லாம் நினைத்துப்பார்க்கவும், அனைவருடனும் ஒரு தொடர்புப்பாலமாய் இருப்பது யாழ் தான்.

யாழ் மூடுவதற்குரியகாரணம் தெரியாமல் குற்றச்சாட்டுக்களை,விமர்சனங்களை முன்வைப்பது நியாயம் இல்லை ஆனால்

பணம் சம்பந்தமாக நிறுத்துவதாக இருந்தால் பலவழிகள் இருக்கு மோகன் அண்ணா,அதை விட உங்களுக்கு உதவவும் தயார்தான் மோகன் அண்ணா. இணையம் சம்பந்தமாக பெரிதாக அறிவில்லை,வேறுவழிகளில் யாழுக்காக நேரம் ஒதுக்கவும் முடியும். எம்மை போன்ற இளையவர்கள் ஏதேனும் அறிந்துகொள்ள,செயற்பட உந்துசக்தியாய் இருப்பது யாழ் தான். இதற்கு மேல் மோகன் அண்ணாவின் விருப்பம்,முடிவு. அதேவேளை உங்கள் கஸ்டங்களையும் நினைத்து நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் வாசகனாய்,அபிமானியாய் எந்தன் ஆதரவைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பான உறவுகளே,

பலமேதைகள் இருக்கும் இடத்தில் நானும் வந்து போனேன்,கிறுக்கினேன்,மொக்கை போட்டேன் என்று பெருமைகொள்கிறேன்.

தெரிந்தோ,தெரியாமலோ நான் உங்களை காயப்படுத்தி இருந்தால் உங்கள் அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

யாழைப்பிரிவது என்பது காதலியைப்பிரிவது போன்ற உணர்வு தான் இருந்தும் அதுவும் கடந்து தானே போகும். :(

எனக்கு இழப்பு வந்தபோதெல்லாம் ஆறுதல் சொல்லி தேற்றி , வாழ்த்திவைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

யாழ்தொடர்ந்தால் மீண்டும் சந்திப்போம் இல்லையேல் யாரும் விரும்பினால் jeeva.au@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொட்ர்புகொள்ளுங்கள். கு.சா தாத்தா உடம்பை பார்த்துகொள்ளுங்கோ.

அனைவருக்கும் நன்றி, :)

அன்புடன்

ஜீவா/பிரியா

... நாம் எல்லோரும் எதிலும் அடித்து சத்தியம் செய்வோம் ... ஆனால் ... அடுத்த நிமிடம் துண்டை போட்டு தாண்ட தயங்க மாட்டோம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடம் இருந்த எல்லாவற்றையும், இழந்து விட்டோம் மோகன்! அண்ணா!

இருப்பவற்றையாவது தக்க வைத்துக் கொள்வோம்!

இழந்தவற்றை மீட்டெடுப்போம்!

என்னாலான உதவிகள் உங்களுக்கு என்றும் உண்டு!

மோகன் அண்ணா ,

பொதுவாக மக்களுக்காகவோ , மண்ணுக்காகவோ பொது வாழ்கை களத்தில் நிற்கும் போது , அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள்,மன உளைச்சல்கள் , மனஸ்தாபங்கள் எவ்வளவு தூரம் அவர்களது சொந்த வாழ்கையையும் பாதிக்கும் என்றும் நாங்கள் அறிவோம் அண்ணா . காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல விமர்சனங்கள் , விவாதங்களை கடந்து ஓளி உள்ள திசையை நோக்கி மக்களை நகர்த்த கூடிய ஒரே தளம் யாழ் இனணயம் தான் .

தயவு செய்து உங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்யுங்கள் அண்ணா! மனித விருப்பு , வெறுப்புகளுக்கு அப்பால் யாழ் இணையத்தை தொடர்ந்து நடத்தி செல்ல வேண்டிய தேவை உங்கள் கைகளிலே இப்போது தங்கியுள்ளது . பெரும்பான்மையான தமிழ் தளங்கள் இப்போது , யாரால் நடத்த படுகின்றன , அதன் பிண்ணனியில் இருப்பவர்கள் யார் என்று நாம் எல்லோரும் அறிவோம் . மாவீரர் படங்களை வைத்து பிழைப்பு நடத்தும் பல தளங்கள் , எப்படியான நச்சு தகவல்களை ஏன் மக்கள் மத்தியில் பரப்புகின்றன என்றும் எல்லோருக்கும் தெரியும் . இந்த நிலையில் யாழை மூடினால் அது புல்லுருவிகளுக்கும் , எதிரிகளுக்கும் கிடைத்த மிக பெரிய வெற்றி ஆகும் . ஆகையால் இந்த சூழ்நிலையிலும் யாழை நிறுத்தி பெரும் வரலாறு பிழையை தயவு செய்து செய்து விடாதிர்கள் .

எங்கும் இருள் சூழ்ந்து இருக்கும் இந்த நேரத்தில் , நம்பிக்கை ஓளி எங்கேயாவது தென்படுகிறதா என்று நாங்கள் ஏங்கி கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் , தங்களின் இந்த முடிவால் துடுப்பிழந்த படகை போல இப்போது இருக்கிறோம் . எதிரிகளினதும் , துரோகிகளினதும் , போய்யர்களினதும்,முகத்திரையை கிழித்து , எங்கள் கருத்துக்களை இடித்துரைக்க ஒரு சிறந்த களமாகவே யாழ் இந்தநாள் வரையில் இயங்கி வந்தது . சமகாலத்தில் ஏற்படும் சகல விமர்சனங்களையும் , விவாதங்களையும் , மனசங்கடங்களையும் தாண்டி , எதிர்கால எமது மக்களின் நலன் கருதி பல தடைகளையும் உடைத்துக்கொண்டு அதிக பலத்துடன் அது தன்னை வெளிபடுத்த வேண்டும் என்பதே எல்லோரினதும் அவா .

எல்லாவற்றுக்கும் மேலாக , எங்கள் உணர்சிகளையும் , உணர்வுகளையும் சங்கமிக்க செய்யும் இடமாகவும் , எங்கள் உணர்வுகளுக்கு வடிகாலாகவும் இருந்த ஒரே தளம் யாழ் தான் . மன அழுத்தினால் நடுஇரவில் நித்திரை வராமல் இருந்தாலும் சரி , அதிகாலை நாலு மணியானாலும் சரி , இடையிடையே கிடைக்கும் சிறிய ஒய்வு நேரங்களிலும் சரி , மந்தைவெளி நோக்கி ஓடும் மாடுகளை போல நாங்கள் யாழிலே தான் மகிழ்ந்து இருந்தனாங்கள் . பல சந்தர்பங்களில் அது விட்ட மூச்சை இழுப்பதற்கும் ஏதுவாக இருந்தது . பல சந்தர்பங்களில் தன்னம்பிக்கையை கொடுத்தது .

எனவே யாழ் தனது கள விதிமுறைகளை இன்னும் கடுமையாக மாற்றி அமைத்துக்கொண்டு , குழப்பத்தில் ஈடுபடுபவர்களை விடுத்து , முள்ளிவாக்கால் போல யாழ் எப்போதும் புதைந்து போகாமல் தனது பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிபார்ப்பு அண்ணா .

இந்த களம் ஒருவித தேசிய சொத்து. எனவே இதை மூடுவது என்பது ஏற்புடையது அல்ல.

- தெரிந்த,நம்பிக்கையான உறவுடம் அல்லது ஒரு குழுவிடம் ஒப்படைக்கவேண்டும்

- அவர்கள் புதிதாக மட்டுமே உறுப்பினர்களை இணைக்கலாம்

- புதிய மட்டுறத்தினர்கள், மேம்படுத்தப்பட்ட விதிகளுடன் நடத்தப்படல் வேண்டும்

மோகன் அண்ணாவிடம் இருக்கும்வரைதான் யாழ் ஒரு தேசிய சொத்தாக இருக்கும். வேறு யாரிடம் கொடுத்தாலும் யாழ் சீரழிந்து விடும். பொதுவான ஒரு குழுவிடம் ஒப்படைப்பதிலும் பார்க்க யாழை மூடுவதே சிறந்தது. ஆகவே, யாழ் மோகன் அண்ணாவிடம் மட்டுமே இருக்கவேண்டும். அவரே தொடர்ந்தும் மற்றவர்களின் உதவியோடு யாழை நடத்த வேண்டும். மேலே நீங்கள் கூறியதுபோல், மேம்படுத்தப்பட்ட களவதிகளோடும் கண்டிப்போடும் பாரபட்சமின்றி யாழை நடத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு விரைவாக யாழை மூட முடியுமோ அவ்வளவு கெதியாக யாழை மூடவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.