Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. ‘டளிடா…’-சிறுகதை-சாத்திரி நடு இணைய சஞ்சிகைக்காக .... வரிசை மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. வருச கடைசி வேற. நத்தாருக்கு பரிசு அனுப்புகிறவர்கள் பொதிகளோடு காத்து நின்றார்கள். நான் பணம் அனுபுவதுக்காக வெஸ்ரன் யூனியன் படிவத்தை நிரப்பி கையில் வைத்திருந்தபடி நின்றிருந்தேன். இந்த நாட்டில் எனக்கு போகப் பிடிக்காத இரண்டு இடங்கள்: முதலாவது வைத்திய சாலை,இரண்டாவது தபாலகம். இரண்டிடத்திலும் வரிசையில் காத்திருப்பதென்பது எனக்கு கொலைக்களத்தில் காத்திருப்பது போல. அவளுக்கு வழமைபோலக் கொடுத்த வாக்குறுதிக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர வேறுவழியில்லை. மெதுவாகநகர்ந்த வரிசையில் சுமார் அரை மணித்தியாலம் கழித்து எரிச்சலோடு அதைக் காட்டிக் கொள்ள…

    • 22 replies
    • 4.3k views
  2. Started by pri,

    சின்னவளுக்கும் பெரியவளுக்கும் பள்ளிக்கூடம் கிடையாது. எனக்கும் வேலை ஏதும் இல்லை. நீச்சலுக்கும் வேறெந்த வகுப்புக்கும் ஏத்தி இறக்கவேண்டிய தேவையும் கிடையாது. புலம்பெயர் வாழ்வில் வீட்டில் எல்லோரும் சும்மா இருக்க கிடைப்பது எப்போதாவது நடக்கிற குட்டி அதிசயம். கொரோனாவின் புண்ணியத்தில் அது இன்றைக்கு வாய்த்திருக்கிறது. குட்டி அதிசயங்கள் எப்படியும் நிகழலாம். வட்ஸ்அப்பின் புண்ணியத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னம் அது நடந்தது. சின்ன வயதில் பள்ளியில் கூடப் படித்து எண்பதுகளின் மத்தியில் தொலைந்துபோன நண்பர்கள் சிலர் கனடாவில் கிடைத்தார்கள். சின்ன வயது முகங்களும் ஒரு தொகை சம்பவங்களும் பத்திரமாகவே இருந்தது. பார்த்த மனிதர்களோடு பொருத்தி பார்த்தேன். சிலருக்கு சாயல் தெரிந்தது. …

    • 11 replies
    • 3.6k views
  3. தந்தையுமானவன்.....! அன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது. அன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு …

  4. Started by sathiri,

    நானும்அவனும் …................................. ஜீவநதிக்காக .எதோ ஒரு கதை.. சாத்திரி …. இரவு பன்னிரண்டை தாண்டிக்கொண்டிருந்தது வெளியே இடி மின்னலோடு பெரு மழை நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லாட்டி பட்டினியா படு ,என்று சொல்லிவிட்டு உணவை ஒரு தட்டில் போட்டு மைக்கிரோவானில் வைத்து விட்டு மனைவி படுக்கைக்கு போய்விட்டார் . இன்னொரு கிளாஸ் குடித்து விட்டு சாப்பிடலாமென நினைத்து படுக்கையறை கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் .மெதுவாக போத்தலை திறந்து கொஞ்சம் விஸ்கியை கிளாசில் ஊற்றி விட்டு காஸ் வெளியேறும் சத்தம் கேட்காமல் சோடாவை திறப்பதெப்படி என யோசித்துக்கொண்டிருக்கும் போதே இடி இடித்த சத்தத்தில்சட்டென்று சோடாவை திறந்து கிளாசில் ஊற…

    • 8 replies
    • 2.7k views
  5. Started by pri,

    வாழ்க்கை கனவுகள் நிறைந்தது. சிலசமயம் அது மெய்யாகிறது முன்னொரு காலத்தில் நடந்தது. கட்டிட திணைகளத்தில் வேலை கிடைத்த செய்தியோடு கடிதம் ஒன்று வீடு தேடி வந்தது. முதன்மை பொறியியளாரரை(chief engineer - ce) கண்டி அலுவலகத்தில் பார்த்தேன் . படிப்புக்கும் வேலைக்கும் பெரிய இடைவெளி இருப்பதை சொன்னார். வில்கமுவவில் புதிதாக முளைக்கிற கட்டிடத்துக்கு தள பொறியாளர்(site engineer)வேலை. பயணத்துக்கு அரசாங்க வாகனம் தரமுடியாது என்றார். தங்கியிருந்து வேலை செய்தாக வேண்டும். தங்குமிடம் தரமுடியாது என்றார். முதல் வேலையில் எல்லாவற்றுக்கும் தலையாட்ட வேண்டும் என்கிற எழுதப்படாத விதி தெரியும். அப்படியே செய்தேன். நியமன கடிதம் …

    • 11 replies
    • 3.4k views
  6. பச்சைப்பாவாடை கவி அருணாசலம் அப்போ எனக்கு பதினைந்து வயது. வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தத்திற்குப் போயிருந்தேன். வழமைபோல் என்னுடன் தொற்றிக் கொள்ளும் கலையரசனும் மகேந்திரனும் வந்திருந்தார்கள்.நாங்கள் மூவரும் சேர்ந்து கொண்டால் சேட்டைகளுக்கு அளவேயில்லை. வல்லிபுர ஆழ்வார் ஊர்வலமாய்ப் போய் கடலில் தீர்த்தம் ஆடி கோயிலுக்குத் திரும்பி வந்துவிட்டார். கோயில் கிழக்கு வாசலில் அவருக்குப் பெரிய பூசை நடந்து கொண்டிருந்தது. எங்கள் கண்கள் கலர்கள் தேடி சுழன்று கொண்டிருந்தன. முட்டி மோதும் சனங்களுக்குள் பட்டுப் பாவாடைகள் சரசரக்க பெற்றோர்களுடன் ஒட்டி நின்ற பாவையர்களில் பச்சையில் ஒருத்தி பளபளத்தாள். எங்களுக்குள் சுரண்டிக் கொண்டோம். மூவரது பார்வையும் ஒருங்கிணைந்து தாக்கியதால…

  7. Started by putthan,

    தொலை பேசி ,முகப்புத்தகம்,யுடுயுப்,வட்சப் இது இல்லாமல் நம்மட வாழ்க்கை இல்லை என்ற காலம் இப்ப பொழுது . ஒருகாலத்தில் முற்சந்தி ,படலையடி ,பொட்டுகள் வாசிகசாலை,விளையாட்டு மைதானங்கள் தான் எமது கருத்து பரிமாற்றங்கள் வீட்டு வேலை செய்ய கள்ளம் அடித்து எனது அறையில் அமைதியாக முகப்புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்,மெசெஞர் அலரியது பார்த்து கொண்டிருந்த நயன்ந்தாராவின் படத்திற்கு மேலே குகன் கொலிங் ஆன்சர் என்று வந்தது... இவனுக்கு ஆன்சர் ப‌ண்ண வெளிக்கிட்டால் இன்றைய பொழுது அதோ கதி என்று எண்ணியபடி மவுஸை வேறு இடத்திற்கு மாற்றினேன் ஆனால் எனது காலக‌ஸ்டம் மவுஸ் ஆன்சர் என்ற இடத்தில் போய் கிளிக் ப‌ண்ணிவிட்டது. "‍ஹலோ மச்சான் எப்படிடா இருக்கிறாய் ,என்ன சிட்னி எரியுதாம் புஷ் வயராம்"…

  8. புத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக .. பச்சை கம்பளி போன்று தேயிலை செடிகளால் தன்னை போர்த்தியிருந்த சிரிமல்வத்தை கிராமத்தில் அந்த கம்பளிக்கும் மேலால் அழகுக்காக போர்த்தியிருந்த பனி மேகங்கள் விலகிக் கொண்டிருந்தது காலைப்பொழுது. பெரும்பாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், ஒரு சில தமிழ் குடும்பங்களையும் கொண்டிருந்த அந்தக்கிரமத்தின் மலைச்சரிவில் பாதி கட்டி முடிக்கப்பட்டு முன்பக்கம் மட்டுமே பூசி பெயின்ட் அடிக்கப்பட்டு மேல் மாடி கட்டாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கம் சிறிய வீடுதான் சிங்களவரான குணதாச வீடு. பியசீலி தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கப் பல் தேய்க்கும் பிரஸ்ஸை வாயில் வைத்தபடியே தொட…

    • 14 replies
    • 5.6k views
  9. மப்பும் மந்தாரமான வானம் , மழை மேகங்கள் கருக்கட்டி கதிரவனை மறைக்க, பேறு கால தாய் போல் வீங்கிப்பெருத்திருக்கும் முகில்கள் எப்போதும் மீண்டும் மழை உடைத்துக் கொண்டு கொட்டலாம் என்கின்ற நிலைமை..... இடைக்கிடை மேகங்கள் மோதி காதைக்கிழிக்கும் இடியும் மின்னலுமான காலநிலை .... கடந்த கிழமை தொடக்கம் பெய்த மழையில் நிரம்பிய குளத்துக்குள் இருந்து தவளைகள் போடும் சத்தம் எரிச்சலை தந்து கொண்டிருந்தது....... வீதியால் செல்லும் மாட்டு வண்டியில் கொழுவியிருக்கும் அரிக்கன் விளக்கு வெளிச்சம் தவிர வேறோன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை.... A9 கண்டி வீதி ஆள் அரவாரமற்று அமைதியாய் கிடந்தது..... தனித்திருக்கும் யாரையும் பயம் கொள்ளச்செய்யும் கும்மிருட்டு மணி பின்னேரம் ஆறைத் தாண்டி இருக்காத…

    • 2 replies
    • 2.3k views
  10. Started by pri,

    வெளியில் பனி கொட்டுகிறது. பதினைந்து cm வரை வந்து சேரலாமென்று செய்தி சொல்கிறது. நாங்கள் பனி பார்காத தேசத்தில் இளமையை கடந்தவர்கள். கண்டியில் படிக்கிற காலத்தில் நூவரெலியாவை எட்டி பார்த்திருக்கிறேன். மிஞ்சி மிஞ்சி போனால் 10 பாகை குளிரை கண்டிருப்பேன். இங்கெல்லாம் அதை குளிரென்றால் ஒரு மாதிரி பார்ப்பார்கள். பனி பொழிய ரம்பாவும் ராதாவும் ஆடுவதை படத்தில் பார்த்திருக்கிறேன். சொர்க்கத்திலும் பனி கொட்டுமென்பது என் சின்ன வயது பிரமை. கனடாவில் கால் பதிக்கிறவரை அந்த பிம்பம் கலையாமல் இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னம். கொழும்பில் குண்டுகள் வெடித்துக்கொண்டிருந்த காலம். படிப்பு முடிந்து வேலை தேடும் படலம் ஆரம்பித…

    • 12 replies
    • 3.8k views
  11. Started by pri,

    ஒரு காலத்தில் ஊரெல்லாம் சண்டியர்கள் இருந்தார்கள். அவர்கள் அநியாயமாகவும் சிலசமயம் தப்பித்தவறி நியாயமாகவும் நடந்தார்கள். பருத்தித்துறையில் சம்மந்தன் பெயர்போன சண்டியன். சம்மந்தனை கண்டதோ பேசியதோ கிடையாது. அவரின் அடிதடிகள் பற்றிய கதைகளை எனக்கு முன்னம் பிறந்தவர் சொல்ல கேட்டிருக்கிறேன். சண்டியன் சம்மந்தனுக்கு வம்புக்கு ஆள் கிடைக்காத நேரத்தில் பொலிஸ்காரரை கண்டால் அவர்கள் தொப்பி பறிபோகும். இந்த கரைச்சலால் சம்மந்தன் உலாவுகிற தெருக்களில் பொலிஸ்காரர் தனியே நடமாடுவது கிடையாது. வயதான சம்மந்தன் இப்போது மொன்றியலில் இருப்பதாக கேள்வி. ஊருக்குள் இயக்கங்கள் தலை தூக்க சண்டியர்கள் காணாமல் போனார்கள். இரண்டு தாக்குதல்களுக்கு இடையில் வருகிற இடைவெளியில் சண்டியர…

    • 6 replies
    • 2.8k views
  12. பதினாறு வயது என்பது எல்லோருக்கும் ஒரு அழகைக் கொடுக்கும் வயதுதான். இளம் காளையர்கள் எல்லாம் நின்று திரும்பிப் பார்க்கும் வயது. நின்று திரும்பிப் பார்க்கத் துணிவற்றவர்கள் கூட பதினாறு வயது மங்கையைக் கண்டால் கடைக்கண்ணால் தன்னும் பார்த்துக்கொண்டு போகும் அழகு. இயற்கையான அழகு இல்லாதவர் கூட அந்த வயதுக்கான ஒரு தளதளப்பில் ஒரு மினுக்கத்தில் அழகாகத் தெரிவர். தூக்கக் கலக்கத்தில் அவர்களைப் பார்த்தாலும் கூட அழகாகத்தான் தோன்றும். நிலாவும் அப்படித்தான். பேரழகி என்று கூற முடியாவிட்டாலும் கடந்து போகும் ஆண்கள் எல்லாம் அவளைத் திரும்பிப் பார்க்காது செல்ல முடியாது. அவளூரில் மிதியுந்தில் செல்பவர்கள் மிகச் சிலரே. அதிலும் அவள் மிதியுந்தில் செல்லும் வேகம் பார்த்து ஆண்களே, டேய் தள்ளி நில்லுங்கடா என…

    • 55 replies
    • 26.2k views
  13. பிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு தெரிந்தது. சரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார். கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால் அவரை வெளி இடங்களில் காண்பது அரிது. “ எப்பிடி இருக்கிறீங்கள்?” “என்னத்தைச் சொல்ல....” சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலுப்பு தெரிந்தது. ஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார். “கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்” “carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்’ “அப்பிடித்தான் டொக்டரும் சொல்லுறார். …

  14. மதி.சுதா மீள்பதிவு- எல்லா இயக்குனர்களிடமும் தாம் ஆசைப்பட்டும் செய்ய முடியாத கதை ஒன்று இருக்கும். அப்படியான ஒரு குறுங்கதை தான் இது. இங்கு இதை படமாக எடுக்க முடியாவிட்டாலும் இந்தியாவில் யாராவது குறும்படமாக எடுத்தாலும் சந்தோசமே.... ஆர்வமுள்ள யாருக்காவது பகிர்ந்து விடுங்கள்.... எந்தளவு வன்மமுள்ள போராளிக்குள்ளும் ஒரு மென் உணர்வு இருக்கும் அதே காதலாக இருந்து விட்டால்.... படியுங்கள்... சில நினைவுகளை மீட்டிப் பார்த்த போது வந்த குறுங்கதை... மன மறைவில் ..... ”சேரா காலமை புலிகளின் குரல் கேட்டனியே” கேசவன் சற்று இழுத்தபடியே சொன்னான். ”இல்ல OPD க்கு வந்திட்டன் இழுக்காமல் சொல்லு” சற்றே தயங்கியவனாக.. ”திருமகள் வீரச்சாவாமடா” அரைவாசியை விழுங்கிக் க…

  15. மகளின் திருமணம் கூடி வந்ததில் வாணிக்கு மனதில் நின்மதி குடிகொண்டது. மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து மூத்த மகளும் இரண்டாவது மகளும் வேலையும் செய்யத் தொடங்கியாயிற்று. ஆனாலும் இன்னும் வாணியால் நின்மதியாக இருக்க முடியவில்லை. பிள்ளைகளைக் கலியாணம் கட்டிக்கொடுத்தால்த்தான் ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி. படிச்சு முடிக்கும் வரைக்கும் கூட பிள்ளைகள் இருவரும் யாரையாவது காதலிக்கிறேன் என்று கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் கூடவே ஓடிக்கொண்டே இருந்ததுதான். காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் வெள்ளையையோ அல்லது காப்பிலியையோ அல்லது வேற படிக்காமல் ஊர் சுத்துற எங்கட காவாலியள் யாரின் வலையில் பிள்ளைகள் விழாமல் இருக்கவேணும் எண்டு வேண்டாத தெய்வங்கள் இல்லை. பிள்ளை…

  16. பேச்சியம்மன்-சிறுகதை-சாத்திரி நடு இணைய சஞ்சிகைக்காக .. எங்கள் ஊரின் பண்டதரிப்பு போகும் வழியில் ஒரு சிறிய ஒழுங்கையில் இறங்கி நடந்து மீண்டும் ஒரு கையொழுங்கையால் நடந்தால் ஒதுக்குப்புறமாக ஒருபக்கம் தோட்ட காணிகளையும் மறுபக்கம் பனங்கூடலையும் கொண்ட அக்கம் பக்கம் வீடுகளற்ற பகுதியில் பனங்கூடலுக்கு நடுவில் ஒரு வேப்பமரத்தை பின்னிப்பிணைந்த பிரமாண்டமான ஆலமரம். அவற்றின் கிளைகள் பிரியுமிடத்தில் நடுவே ஒரு பனை மரம் வேறு வளர்ந்திருந்தது. அந்த மும்மரத்தின் அடியில்தான் பேச்சியம்மன் கோவில். அதை யார் எப்போ கட்டினார்கள் என்கிற விபரம் எதுவும் ஊரில் யாருக்கும் தெரியாது. ஒருவர் மட்டும் குனிந்துதான் உள்ளே போகலாம். அவ்வளவு சிறிய கோவில். ராசையா பூசாரி மட்டுமே…

    • 17 replies
    • 6.5k views
  17. பொட்டல் காட்டில் ஒரு கதை. அது ஒரு பொட்டல் காடு.ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.ஒரு ஒற்றையடிப் பாதை. தினசரி ஆட்கள் நடந்து நடந்து, மிதிவண்டிகளும் பிரயாணப்பட்டு ஒரு பாம்பின் முதுகுபோல் நீண்டு கிடந்தது.எப்போதும் அந்த காட்டு வெளி ஆளரவமற்றே இருக்கும். விதம் விதமான பறவைகள் மற்றும் பாம்பு, கீரி, ஓநாய்,நாரி, முயல் என்று சிறுசிறு விலங்கினங்களும் உண்டு. காவேரி தினமும் அந்தப் பாதையால்தான் பக்கத்து ஊருக்கு வேலைக்கு போய் வருவதுண்டு. அப்படி போய்வரும் நேரங்களில் ஒரு சிறு பையில் நொறுக்குத் தீனிகள் (பொரி ,கடலை,அரிசி இப்படி ஏதாவது)கொண்டு செல்வாள். அந்த பொட்டல் காடு வந்ததும் கொண்டுவரும் நொறுக்குத் தீனியை கொரிக்க தொடங்குவாள்.அவள் கையில் இருந்து சிந்துவதை சில குருவிகள் பொறு…

    • 7 replies
    • 4.5k views
  18. உறவுகளே இந்தத் திரியில் உங்கள் கருத்துக்களை வையுங்கள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&hl=

  19. கடந்த கிழமை நியூயோர்க்கிலிருந்து சன்பிரான்ஸ்சிஸ்கோ வரும் போது என்றைக்கும் இல்லாத மாதிரி முன்னால் போன மனைவி அவசரகால கதவு இருந்த இடம் ஆட்களும் இல்லை.இடமும் பெரிதாக இருந்ததால் அதிலேயே இடம் பிடித்துவிட்டா. மற்றைய விமானங்களில் இருக்கை இலக்கங்கள் தருவார்கள்.அதை தேடிப் பிடித்து இருந்திடலாம்.முன்னுக்குப் போனாலும் பின்னுக்குப் போனாலும் எமது இருக்கைகள் எமக்காக காத்திருக்கும்.ஒரேஒரு வில்லங்கம் பின் இருக்கைக்கு போகிறவர்கள் முன்னுக்கு ஏறினால் கொண்டு போற பொதிகளை முன்னுக்கு எங்கே இடம் கிடைக்குதே அங்கே தள்ளிவிட்டுட்டு போய்விடுவார்கள்.எமது இருக்கை முன்னுக்கு இருந்தாலும் கடைசியாக ஏறினால் பொதிகள் வைக்க முடியாது.தேடித் திரிந்து பின்னுக்கு எங்காவது தான…

    • 16 replies
    • 4.2k views
  20. சிட்னியில் இப்ப குளிர்காலம் தொடங்கிவிட்டது ,சனி,ஞாயிறுகளில் வீட்டுக்குள்ள‌ அடைபட்டு இருக்கவேண்டிகிடக்கு.அன்று கதிரவன் உசாராக சூட்டை பரப்பிக்கொண்டிருந்தான்.அவன் சூடாக இருப்பதை உணர்ந்த நான் எம்பெருமான் சிட்னி முருகனை சென்று தரிசிக்க வெளிக்கிட்டேன்.வழமையாக கோடைகாலங்களில் மாலைநேரங்களில் தான் சிட்னி முருகனை போய் சுகம் விசாரிக்கிறனான் மாலை நேரங்களில் அதிகமாக பிரசாதங்கள் கிடைக்கும் அதன் மூலம் பசிஅடங்காவிட்டால் முருக‌னின்ட ரெஸ்ரொரன்டில் எதாவது வாங்கி சாப்பிட்டு பசியை போக்க‌லாம். குளிர்காலத்தில அவனை போய் சந்திப்பது குறைவு எதாவது நொண்டி சாட்டை சொல்லி வீட்டுக்குள்ளே இருந்திடுவேன் .. அன்று காலநிலை ஒரள‌வு நன்றாக இருந்தது இன்றைக்கும் சாட்டு சொன்னால் எம்பெருமான் கோவித்துக்க…

  21. Started by pri,

    தொண்ணூறுகளின் மத்தியில் பேராதனை படிப்பு முடிந்து போனது. வேலை தேட வசதியாக கொழும்புக்கு நகர வேண்டியிருந்தது. வெள்ளவத்தையிலோ பம்பலப்பிட்டியிலோ தங்குவதற்கு வெளிநாட்டு காசோ அல்லது கொழுத்த சம்பளம் தருகிற தொழிலோ வாய்க்கவில்லை. கொஞ்சம் தள்ளி கல்கிசையில் மலிவாக அறையொன்று வாடகைக்கு கிடைத்தது. பெரிய வசதிகள் இல்லையென்றாலும் விரும்பிய நேரத்தில் 100 அல்லது 101 பஸ்சில் தொற்றி புறக்கோட்டை வரை பயனிக்கலாம் என்பதால் அதுவே சிலகாலம் இருப்பிடமானது. ஓடியன் தியேட்டருக்கு எதிராக காலி வீதியில் இருந்த அறையின் கீழ்தளத்தில் வீட்டு உரிமையாளரும் அதற்கு கீழே பழக்கடை ஒன்றும் இருந்தது. மாத்தறையை சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் பழக்கடையை நடத்தினார். அதற்கு பக்கத்தில் இரண்டு தமிழ்க்கடைகள் இருந்தது. ஒன்…

  22. ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்! எனது பிறந்தநாள் சம்மர் பாடசாலை விடுமுறைக் காலத்தில் வருகின்றது. நான் பிறந்தநாள் அன்று வேலைக்கு விடுப்பு எடுத்து ரிலாக்ஸாக ஓய்வில் இருப்பதை ஒரு கொள்கையாகவே வேலை செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்து விடாமல் வருடாவருடம் தொடர்வதால், பல மாதங்களுக்கு முன்னரே ஒருவார விடுமுறையை விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தேன். குளிர்காலம் எப்போதும் மப்பும் மழையும் காதுமடல்களை விறைக்கச் செய்யும் கடுங்குளிர்காற்றுமாக இருப்பதால், சம்மரில் பிரகாசிக்கும் வெயிலில் எங்காவது செல்ல மனம் ஏங்கும். பாடசாலை விடுமுறையில் வீட்டில் நிற்கும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிக்க எனது இணையும் இதே வாரத்தில் விடுமுறை எடுத்திருந்தார். விடுமுறையைக் கழிக்க எங்கே போவது என்பதில் ஒரு…

  23. பார்த்திபனின் வரவு - பாகம் 2 16. 07. 1996 காலை..., எனது அறையில் மேலும் இருவர் குழந்தைகளைப் பெற்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் அருகில் தொட்டில்களில் குழந்தைகளை வளர்த்தியிருந்தார்கள். எனக்கருகில் தொட்டில் இல்லை. ஒன்பது மணிக்கு பிறகு மருத்துவர்கள் பரிசோதனைக்கு வந்தார்கள். இரத்த அழுத்தம் உடல் வெப்பநிலை யாவும் எழுதினார்கள். வலிக்கிறதா? வயிற்றை அழுத்திய மருத்துவர் கேட்டார். இல்லை..., ஒற்றைக்கையைத் தந்து கட்டிலில் இருந்து நிலத்தில் நிற்கச் சொன்னார். எழுந்து நின்றது மட்டுமே நினைவில் தெரியும். அதன் பின்னர் 2மணிநேரம் கழித்து விழித்த போது வேறொரு அறையில் கிடந்தேன். துளித்துளியாய் மருந்து ஏறிக்கொண்டிருந்தது. அருகில் இரு…

    • 0 replies
    • 2.4k views
  24. 15.07.1996 பார்த்திபனின் வரவு. 15.07.1996 பார்த்திபனின் வரவு. 12.07.1996 வெள்ளிக்கிழமை. காலைச்சாப்பாடு செய்து கொண்டிருந்தேன். வளமையைவிட வித்தியாசமாக வயிறு வலித்தது. கொஞ்சநேரம் வலி பிறகு ஏதுமில்லை. மதியத்திற்கு பிறகு என்னால் நிற்க இருக்க முடியாது விட்டுவிட்டு வலித்துக் கொண்டிருந்தது. பின்னேரமாகியது. வலியில் மாற்றமில்லை. என்னை மருத்துவமனைக்கு கூட்டிப்போகும்படி அழுதேன். ஏற்கனவே பலதடவைகள் மருத்துவமனை போய் வந்த அனுபவங்களைச் சொல்லி தாமதித்து போகலாம் என சொல்லப்பட்டது. வெள்ளிக்கிழமை பின்னேரம் நண்பர்களோடு கூடி கிறிக்கெட் விளையாடும் அவசரம் மட்டுமே இருந்ததை அறிவேன். பின்னேரம் வெளிக்கிட்டால் இரவு டிஸ்கோ உலாத்தி வீடு வர விடியப்பறமாகும். அதவர…

    • 6 replies
    • 3.7k views
  25. **நாம் வாழ்க்கையில் உயர்வதை கண்டு மகிழ்ச்சியடையும் நண்பர்கள் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்** அது 2005ம் ஆண்டின் நடுப்பகுதி என நினைவு..வன்னி ரெக்கின் 3து batchல படிப்பதற்கு இடம் கிடைத்திருந்தது நாட்டின் வடகிழக்கு பகுதியின் பல்வேறு இடங்களைச்சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள்.ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத 4 பேரை ஒரே ரூமில் போட்டார்கள் வாழ்க்கையின் முதல் முதல் ஹொஸ்டல் வாசம். முதலில் பெரிதாக ஒருவரிற்கொருவர் எந்த ஈர்ப்பும் இல்லை ரூம் மேட் என்ற அளவில் மட்டுமாகவே தொடர்ந்தது .எனக்கு நண்பர் கூட்டம் அவ்வளவாக சேர்வது குறைவு . அவனோ நண்பர் கூட்டத்துடனே திரிவான்.. அத்துடன் அவனின் பாடப்பிரிவு நெட்வோர்கிங் ,நானோ எலக்ட்ரோனிக்ஸ் ஹொஸ்டல் வாழ்க்கையில் சண்டை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.