Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. உன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல் என்னைப் பின் தொடர்கிறாய். என்னை உனக்குப் பிடிக்குமா என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ம்ம்ம் சரி கொஞ்சமாகத் தெரிந்திருக்கலாம்...). ஆனாலும் நாமிருவரும் பிரிந்ததில்லை, அதில் எனக்கு எந்தவொரு வியப்புமில்லை – இது காலங்காலமாகத் தொடர்வதுதானே! அவளும் உன்னை வெறுக்கிறாள், உன் மீதுள்ள பொறாமையே அதற்குக் காரணம். நாம் நெருங்கியிருப்பதைச் சபிக்கிறாள், அதைப் பலமுறை என்னிடமே சொல்லிருக்கிறாள். அப்போதெல்லாம் சிரித்து மழுப்பிவிடுவேன். ஆனாலும் உன்னைச் சபிக்க என் மனம் முன் வருவதில்லை. நீ ஆடையின்றி நிர்வாணமாயிருப்பதை நான் ரசிக்கவில்லை, அதை என்னால் …

  2. சிட்னியில் இப்ப குளிர்காலம் தொடங்கிவிட்டது ,சனி,ஞாயிறுகளில் வீட்டுக்குள்ள‌ அடைபட்டு இருக்கவேண்டிகிடக்கு.அன்று கதிரவன் உசாராக சூட்டை பரப்பிக்கொண்டிருந்தான்.அவன் சூடாக இருப்பதை உணர்ந்த நான் எம்பெருமான் சிட்னி முருகனை சென்று தரிசிக்க வெளிக்கிட்டேன்.வழமையாக கோடைகாலங்களில் மாலைநேரங்களில் தான் சிட்னி முருகனை போய் சுகம் விசாரிக்கிறனான் மாலை நேரங்களில் அதிகமாக பிரசாதங்கள் கிடைக்கும் அதன் மூலம் பசிஅடங்காவிட்டால் முருக‌னின்ட ரெஸ்ரொரன்டில் எதாவது வாங்கி சாப்பிட்டு பசியை போக்க‌லாம். குளிர்காலத்தில அவனை போய் சந்திப்பது குறைவு எதாவது நொண்டி சாட்டை சொல்லி வீட்டுக்குள்ளே இருந்திடுவேன் .. அன்று காலநிலை ஒரள‌வு நன்றாக இருந்தது இன்றைக்கும் சாட்டு சொன்னால் எம்பெருமான் கோவித்துக்க…

  3. நானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும் மகளின் திருமணம் 2019 நவம்பரில் பதிவுத்திருமணம் நடைபெற்றது 2020 செப்ரெம்பரில் திருமணவிழா என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது மார்ச்சில் கொரோனா வந்திட்டுது என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த போது கொரோனாவின் முதல் அலை குறைந்து வருவதால் ஆனி ஆடியில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தது . திருமண விழாக்கள் செய்யலாம் ஆனால் 150 விருந்தினருடன் என்ற கட்டுப்பாட்டுத் தளர்வில் எல்லாமே சடுதியாக நடந்தேறியது இரண்டு வாரங்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்து மிகவும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக 80 விருந்தாளிகளை அழைக்க இரு வீட்டாரும் முடிவு செய்து அழைப்பும் விடுத்தாயிற்று . ஆவணி நடுவிற்குப்பின்னர் நல்ல நாள் இருக்கு எ…

  4. 2012 இல் எழுதப்பட்ட பயணக்கட்டுரைத் தொடர் 12 பகுதிகள் சிதறிய முத்துக்களாக இருந்த தொடரை ஒன்றாக இணைத்து இலகுவாக வாசிக்கவும் எழுதப்பட்ட கட்டுரை வடிவத்தை பாதுகாக்கவும் மீள்பதிவாக்கியுள்ளேன். வாசித்துப்பார்க்காத நண்பர்கள் இலகுவாக முழுவதையும் வாசிக்கக்கூடியவகையில்.......இந்த மீள்பதிவு...... பயணங்கள் முடிவதில்லை - 1 (Punta cana) காலமுகடுகளில் தடக்கி நிற்கும்போது திருப்புமுனைகள் அமைந்துவிடுவதுண்டு இன்று எழுத முற்பட்ட விடயமும் இதுவரை காலமும் எழுதிய எனக்கேயான பிரத்தியேக தன்மையில் இருந்து மாறுபட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. இது எனது எழுத்துப்பயணத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மையா..... தீமையா என்பதை தற்சமயம் தீர்மானமாக அறியமுடியாவிட்டாலும் எதிர்காலத்தில் தெரிந்து கொள்…

  5. அப்பா போன்” மகனிடம் இருந்து போனை வாங்குகின்றேன். “அண்ணை நான் இங்கு பீட்டர்” “பீட்டர் “ “அண்ணை கொம்பனியில இருந்த காரைநகர் பீட்டர் “ “டேய் எப்படி இருக்கின்றாய்? எங்க இருக்கின்றாய்?” “ அண்ணை நான் கனடா வந்து ஒட்டாவில் படித்துமுடித்துவிட்டு இப்ப டெக்ஸ்சசில் வேலை எடுத்து போய்விட்டன், நீங்கள் எப்படி இருக்கின்றீங்கள் அண்ணை ? ஒட்டாவாவில் இருக்கும் போது நீங்கள் அயன்சின் அக்காவை கலியாணம் கட்டி டொராண்டோவில் இருப்பதாக கேள்விப்பட்டனான் .பிள்ளைகள் இருக்கா அண்ணை?” “ இரண்டு பெடியங்கள்,வளர்ந்துவிட்டார்கள் .இப்ப என்ன இருந்தா போல என்ரை நினைவு” “போன மாதம் டொராண்டோவிற்கு ஒரு செத்த வீட்டிற்கு வந்தனான் ,அங்கு நந்தனை கண்டனான் ,அப்ப பழைய கொம்பனி கதைகள் கதைக்கும் போது உங்க…

      • Like
    • 43 replies
    • 5.7k views
  6. புத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக .. பச்சை கம்பளி போன்று தேயிலை செடிகளால் தன்னை போர்த்தியிருந்த சிரிமல்வத்தை கிராமத்தில் அந்த கம்பளிக்கும் மேலால் அழகுக்காக போர்த்தியிருந்த பனி மேகங்கள் விலகிக் கொண்டிருந்தது காலைப்பொழுது. பெரும்பாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், ஒரு சில தமிழ் குடும்பங்களையும் கொண்டிருந்த அந்தக்கிரமத்தின் மலைச்சரிவில் பாதி கட்டி முடிக்கப்பட்டு முன்பக்கம் மட்டுமே பூசி பெயின்ட் அடிக்கப்பட்டு மேல் மாடி கட்டாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கம் சிறிய வீடுதான் சிங்களவரான குணதாச வீடு. பியசீலி தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கப் பல் தேய்க்கும் பிரஸ்ஸை வாயில் வைத்தபடியே தொட…

    • 14 replies
    • 5.6k views
  7. Started by putthan,

    "என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்" " ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி" "வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்" "போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்" " அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்" "ஊ ஊ ஊ " "என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்" "அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு நின்றனாங்கள் ஊஊஊஊ" "சும்மா ஊளையிடாமல் விசயத்திற்கு வா" "எங்களை கண்ட மை…

  8. Started by Innumoruvan,

    கட்டாக்காலி காலம் ஆரம்பித்திருந்தால் வயலில் கால்நடைகள் நின்றன. மதகில் கனகாலம் கடந்து நாதன் உட்கார்ந்திருந்தான். நாதனிற்கு இளமைக்காலம் இலகுவாய் இருக்கவில்லை. பள்ளி புரியவில்லை. பெறுபேறுகள் கடிவாளம் இடவுமில்லை பாதைகாட்டவுமில்லை. பதின்மத்தில் நாதன் இயக்கத்தில் சேர்ந்தான். சிலகாலம் இயக்கத்தில் இருந்தான். இயக்கத்திலும் நாதன் உயரவில்லை. துண்டு குடுத்து முறைப்படி விலகி வெளிநாடு சென்றான். முப்பது வருடம் கடந்து இன்று மதகில் இருக்கிறான். திட்டமிட்ட செயற்பாடு எதுவும் எப்போதும் நாதனிடம் இருந்திராத போதும், எதேச்சையாய் ஒருமித்த காரணிகள் அனுகூலங்களை நாதனிற்கு உருவாக்கின. பணம் பெருக்குவது நாதனிற்கு மிக இலகுவாகத் தானாக நடந்தது. அது அதுவாகப் பெருகியது. ஊரில் நாதனின் வீடு பெருத்த காணி…

    • 10 replies
    • 5.6k views
  9. ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, April 6, 2013 அக்கா ஒருக்கா இந்த நம்பருக்கு எடுங்களன்....! 28.03.2013 முதல் ஒரு தொலைபேசியழைப்பு ஒருமுறை ஒலிப்பதும் பின்னர் தொடர்பு அறுபடுவதுமாக 03.04.2013 மதியம் வரை இந்த அழைப்பு வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. கடந்த ஏழுநாட்களில் அதிகாலையில் எழுப்பும் அழைப்பும் இதுவாகவே இருந்தது. இப்போதெல்லாம் ஒரு அழைப்பு வந்தால் முன்பு போல அடித்துப்பிடித்து உடனடியாக எடுப்பதில்லை. தொடர்ந்து துயர்களைக் கேட்கிற தாங்கு சக்தி இப்போது இல்லாது போய்க்கொண்டிருக்கிறது. அதுவோ என்னவோ புதிய அழைப்புகள் என்றால் பயம் தொற்றிவிடுகிறது. கையில் எதுவும் இல்லாமல் உதவிகள் என்று வருகிறவர்களுக்கான மாற்று வழியை…

    • 43 replies
    • 5.6k views
  10. கலியாணப்புரோக்கர்களும் அவர் பின்னே ஞானும் *இது எனது மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலரின் வாழ்க்கையில் நடந்த நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் பற்றிய பதிவு * யார் மனதையும் புண்படுத்த அல்ல* கலியாணப் புரோக்கர்கள் கேட்கும் கேள்விகளை விட interview ல கேட்கிற கேள்விகள் கொஞ்சமாவது easy ஆக இருக்கும் போல தோணுறது எனக்கு மட்டும் தானோ என்னவோ.. கலியாணப்புரோக்கர்களுடனான எனது சம்பந்தம் ? தொடங்கினது 2012 க்கு பிறகு தான்..என நினைவு எப்ப நான் வயசுக்கு வந்தனோ..இல்லை..இல்லை ... எப்ப வேலை கிடைச்சுதோ அப்போதிருந்தே புரோக்கர் களை தேடி அப்பாவும் அம்மாவும் ஓடத்தொடங்கி விட்டனர். என்னோட கதைத்த ப்ரோக்கர் முதல் முதல் சொன்ன விசயம் இப்போதும் என் நினைவில் உள்ளது தம்பி இப…

  11. ஒவ்வொரு வருடமும் நடக்கும் இராபோசண விருந்துக்கு நான் போவது வழமை இந்த இராபோசண விருந்தை ஒழுங்கு செய்வதில் எனது நண்பர் ஒருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றார்.இந்த தடவையும் சென்றிருந்தேன் இருபதைந்து டொலருக்கு ஒரு டிக்கட்டை எடுத்து போட்டு நானும் ஷரிட்டிற்க்கு காசு கொடுக்கிறனான் என்று சொல்லுவதில் எனக்கு ஒரு பெருமை. என்னை மாதிரி கொஞ்ச சனம் புலத்தில இருக்கினம்.இன்னும் சிலர் இருக்கிறார்கள் அமைப்புக்களின் பணத்தை பொருளாதரத்தில் பின்தங்கியவ‌ர்களுக்கு கொடுத்து அதை தாங்கள் வழங்குவது போன்று ஒரு புகைப்படுத்தை எடுத்து முகப்புத்தகத்திலும் வட்சப்பிலும் போட்டுவிடுவார்கள். அதை பார்ப்பவர்கள் நினைப்பார்கள் இவருடைய‌ பணத்தில் தான் உதவிகளை செய்கிறார்கள் என்று. எது எப்படியோ தேவையானோருக்கு பணம…

    • 25 replies
    • 5.5k views
  12. இன்றுடன் அவள் இங்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. எட்டு மாதப் பிள்ளை அங்கு என்ன செய்கின்றதோ என்பதே எந்நாளும் இவள் கவலையாக இருக்கிறது. எத்தனை கெஞ்சியும் பிள்ளையைக் கண்ணில்க் காட்டுகிறார்களே இல்லை. அதுவும் முதல் பிள்ளை. எனக்குத் தெரியாமல் அவனுக்குப் பிள்ளையைக் காட்டுவார்களோ என்று எண்ணும்போதோ மனம் பதட்டப்படத் தொடங்கிவிட்டது தாரணிக்கு. “நீ தேவையில்லாமல் எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாதை. இன்னும் கொஞ்ச நாள்த்தான். பொறுமையாய் இரு.” “நீ எண்டாலும் தருணை ஒருக்காய் போய்ப் பாரனடா. இரவிலை என்னால நித்திரையே கொள்ள ஏலாமல் இருக்கடா” “நான் இண்டைக்கே போய்க் கதைக்கிறன். நீ நின்மதியாய் இரு அக்கா” விடைபெற்றுச் செல்லும் தம்பியைக்கூட அவளால் முற்றிலுமாக நம்பமுடியாவிட…

  13. எனக்கு மனதில் பயத்துடன் கூடிய ஒரு பெருமிதமும் தோன்றியது. செய்வது திருட்டு. இதற்குள் என்ன பெருமிதம் என்று மனதில் எண்ணம் எழ மனதுக்குள்ளேயே சிரித்தும் கொண்டேன். என்றாலும் இது ஒரு அசட்டுத் துணிவு என்பதும் தெரிந்தே தான் இருந்தது. அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பா என்று ஒரு பயம் ஏற்பட்டாலும் இப்படி திருட்டுத்தனமாய் பள்ளிக்கூடத்தைக் கட் பண்ணிவிட்டு படம் பார்க்க வருவது ஒரு திரில்லான அனுபவமாகத்தான் இருக்கு என எண்ணிக் கொண்டது மனது. இருந்தாலும் அடிமனதில் யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சம் ஓடிக்கொண்டே இருந்தது. தனிய நான் வரவில்லைத்தான். இன்னும் மூன்றுபேர் மாலி, நந்தினி, ஹேமா, ரதி இத்தனை பேருடன் தான் வந்திருக்கிறேன். பாடசாலைக்குப் பக்கத்தில் இருக்கும் மாலியின்…

  14. முகத்தார் வீடு நாடகம் வாசித்ததில் இருந்து நானும் ஒன்று எழுத வேண்டும் என்று எண்ணினேன். அதுதான்........... சாத்தர் : முனியம்மா, முனியம்மா முனியம்மா : என்ன இழவுக்கு இப்பிடிக் கத்திறியள். எத்தின தரம் சொல்லிப் போட்டன் முனியம்மா எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு. நான் மினி எண்டு என்ர பேரை மாத்தி எவ்வளவு நாளாச்சு. சாத்தர் : நீ என்ன தான் மாத்தினாலும் எனக்கு நீ முனிதான். இன்னும் நீ வெளிக்கிடேல்லையே ? முனியம்மா : பொறுங்கோ வாறன் கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுக் கொண்டு வரவேண்டாமே. சாத்தர் : அதுசரி. என்ன கலியாணத்துக்கே போறம். கார் வாங்கப் போறமப்பா. முனியம்மா : கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுப் போனால் என்னைப் பாத்திட்டாவது காசைக் கொஞ்சம் குறைச்சுசொல்லுவான். சாத்தர்: நீ அடிச்சிருக்…

  15. “அப்பா சுபி போன் பண்ணினவா நாளைக்கு புது வீட்டில பாட்டியாம் ” வேலையில்இருக்கும் எனக்கு மத்தியான சாப்பாட்டு நேரம் ஒருக்கா போன் பண்ணாவிட்டால் மனுசிக்கு பொச்சம் தீராது.கடந்த இருபதுவருடங்களாக இதற்கு மாத்திரம் குறைச்சல் இல்லை.விஷயம் எதுவாகவும் இருக்கலாம்.மாமிக்கு சுகமில்லை ,சின்னவன் படிக்கிறானில்லை,சூப்பர் சிங்கர் இந்த முறை சரியில்லை ,சமைக்க பச்சை மிளகாய் இல்லை இப்படி ஏதாவது உப்பு சப்பில்லாத விடயத்துடன் போன் அடித்து இரண்டு வார்த்தை கதைத்துவிட்டு மனுசி போனை வைத்துவிடுவார். .”சரி என்னவாம்” என கேட்டேன். “பாட்டி என்ற பெயரில புது வீட்டை ஆட்களுக்கு காட்ட போறா போல” “அதில என்ன பிழை, இப்ப எல்லாரும் செய்கினம் தானே, இது அவர்கள் மிக ஸ்பெசலாக காணி வாங்கி கட்டிய வீடு அதை நாலு…

  16. அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவள் புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவள். அழகானவள். தாய் தந்தை சொல்லை தட்டாதவள். நவநாகரீக உடைகள் அணிவது அவளுக்கு பிடிக்காது. தமிழ் கலாச்சாரப்படி வாழ்பவள் என்று அவளைப் பற்றி மற்றவர்கள் பேசுவார்கள். இதில் அவளுக்கு பெருமையும் கூட. அவளுக்கு ஒரு நண்பி இருக்கிறாள். இல்லை, இருந்தாள். அந்த நண்பி 16 வயதில் இருந்தே வேற்று இனத்தவன் ஒருவனைக் காதலித்தாள். அவனுடன் நகரம் முழுவதும் சுற்றினாள். 18 வயது ஆனவுடன் அவனுடன் ஒன்றாக வாழவும் சென்று விட்டாள். கடந்த 5 வருடமாக திருமணம் செய்யாமல் அவனுடனேயே வாழ்ந்த வருகிறாள். அந்த நண்பியைப் பற்றி அந்த நகரத்தில் உள்ளவர்கள் பலவாறு பேசுவார்கள். அந்த நண்பி அணிகின்ற உடைகள் பற்றியும், துணைவனுடன் டிஸ்கோ செல்வது பற்றி…

  17. மறக்க முடியாத நினைவுகள்...  ஒரு காலத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடி முடிய பல மணிநேரம் இருந்து பல விடயங்களையும் கதைத்த இடம். இந்த மதில் ஓரத்தில் ஒரு சீமெந்திலான கட்டு இருந்தது (அது இப்ப அந்த இடத்தில இல்லை. அதையும் யாரோ தூக்கி கொண்டு போய் விட்டார்கள்) அதில்தான் நாங்கள் இருந்து கதைப்பது. இந்த மதிலுக்கு முன்பாக ஒரு 8 பரப்பு காணி. அதுக்குள் 2 புளியமரம், ஒரு வேம்பு, ஒரு மாமரம், ஒரு செரிபழ மரம்.. இதுக்கு நடுவில்தான் கிரிக்கெட். கண்னுக்கு பந்து தெரியும்வரை விளையாட்டுத்தான். யாழ் நகரில் உள்ள முன்னனி பாடசாலை மாணவர்கள் எல்லாம் பிற்பகலில் கூடும் இடம். கலகலப்புக்கும் நகைச்சுவை கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிலவேளைகளில் ஒரு அணியில் 15 பேர் கூட இருப்பார்கள்.. …

  18. பனி படர்ந்த ஊதல் காற்று ஒரு காது வழியே ஊசியாய்த் துளைத்து மற்றைய காது வழியே வெளியேறி அவனை ஒரு வழிப் பண்ணிக்கொண்டிருந்தது. பனித்துகள்கள் மெல்லிய மலர் இதழ்களாய் காற்றோடு இழைந்து பூமியெங்கும் வெண்மையான நிலவிரிப்பை படர விட்டிருந்தது. கிராமப்புறமாதலால் பனிக்காலத்தில் கூட பசுமை மாறாத பச்சை மரங்களும் இலை உதிர்ந்திருந்த சாலையோரத்து மரங்களும் பனி படர்ந்து வெள்ளை வெளேரென நத்தார்ப் பண்டிகை மடலில் காட்சியளிப்பது போன்ற தோற்றத்தை அவனுக்கு நினைவூட்டியது. இன்று போலத்தான் அன்றொரு நாள் கொட்டிய பனியும் நடந்த சம்பவமும் அவனுக்கு ஒரே சம்பவம் மீண்டும் அதே போல நடப்பது போன்றதொரு மாயையைத் தோற்றுவிக்கிறது. நினைவுகள் அசை போட்டன. கெலி அவனோடு வேலை பார்க்கும் வயோதிபத்தை நெருங்கும…

    • 38 replies
    • 5.2k views
  19. வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில் ! “லெப்.கேணல்.சிரித்திரன் (முருகுப்பிள்ளை சிவரூபன்) வீரனாய் – 07.09.1979 வித்தாய் – 20.04.2009 பிறந்த இடம் – இடைக்காடு கல்வி கற்றது – இடைக்காடு மகாவித்தியாலம்” ‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன். சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தின…

  20. Started by பகலவன்,

    1989 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஒரு நாள். கோப்பாய் இந்திய இராணுவத்தின் முகாமுக்கு அந்தோணி அழைக்கப்படிருந்தான். அந்தோணி: காக்கை தீவிலே அல்லது நாவாந்துரையிலே மீன்களை வாங்கி பெட்டியில் கட்டி கொண்டு கொக்குவில், கோண்டாவில், உரும்பிராய், கோப்பாய், இராசபாதை வழியாக நீர்வேலி, சிறுபிட்டி, ஈவினை நவக்கிரி வரை கையிலே ஒரு ஊது குழலியை வைத்து, பா.. பாய்...ப் பாய் என்று ஊதியபடி அன்றாடம் மீன் வியாபாரம் செய்யும் ஒரு குடும்பசுமை மிக்க உழைப்பாளி. அது அவனது பிரதான தொழில், உப தொழிலாக இந்திய இராணுவத்தின் வருகைகளையும், பதுங்கி இருத்தல்களையும், அக்காச்சி தலைமையிலான கெரில்லா போராளிகளுக்கு சங்கேத மொழி மூலம் வழங்கி கொண்டிருந்தான். சில நாட்களில் அரக்குளா, சில நாட்களில் செவ்விளை, சில நாட…

    • 34 replies
    • 5.1k views
  21. மூன்று வாரங்களுக்கு முன்பாக என் Mobile phone அதிகாலை 4 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்து விட்டது என்று அதிர்வை ஏற்படுத்தியது இந்த நேரத்தில் வரும் குறும்செய்திகள் எனக்கு எப்பவுமே சந்தோசத்தினை கொடுப்பதில்லை. மரணம் பற்றிய அறிக்கைகளையும், துயரம் அப்பிய செய்திகளையுமே தாங்கி வருவன அவை. கிலேசம் மிக்க தருணங்களை தருவன அவை. நித்திரையில் இருந்தாலும் பூனை நடந்தாலே அதன் சத்தத்தில் முழிச்சு எழுபவன் நான். பொதுவாக IT யில் தொழில் செய்பவர்களுக்கு ஆழமான நித்திரை என்பது ஒரு கனவு. எனக்கு அது அநேகமாக வாய்ப்பதில்லை. குறுஞ்செய்தியை வாசிக்கின்றேன். எனக்கு மிகவும் நெருக்கமான மாமா - அம்மாவின் தம்பி - யின் மரணச் செய்தியை தாங்கி அது வந்திருந்தது. அக்கா அனுப்பி இருந்தா. அவரை மா…

    • 22 replies
    • 5.1k views
  22. இந்தியாவுக்கு போனால் அதிகமாக கோவிலுக்கு போவது வழமை நான் ஒரு கோவிலுக்கு போவம் என்று நினைத்தால் என்ட பெட்டர்காவ் நாலு கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லுவார்.அது மட்டுமல்லாது இந்த மனித சாமிமார் அவர்களின் ஆச்சிரமம் அது இது என்று போவதும் வழக்கம். முதல் தடவையாக புட்டபத்திக்கு போனேன் .காரில் போகும் பொழுதே சாரதி இது சாய் பல்கலைகழகம் ,இது சாய் சங்கீதபாடசாலை,சாய் மருத்துவமனை,சாய் விமான நிலையம் என ஒரு பெரிய நகரத்திற்க்கு தேவையான சகல கட்டமைப்புக்களும் இருப்பதை காட்டிக்கொண்டே வந்தார் .ஒரு தனிநபரால் எப்படி இது சாத்தியம் என்று மனதில் கேள்வி எழுந்தது ,நான் அந்த கேள்வியை கேட்டிருந்தால் நிச்சமாக‌ சாரதியின் பதில் அவர் கடவுள் அவரால் இதுவும் செய்யமுடியும் இதற்கு மேலும் செய்ய…

    • 17 replies
    • 5k views
  23. அம்மாளாச்சி என்றவுடனை யாரோ என்ரை குஞ்சியம்மா இல்லாட்டி பாட்டி, பூட்டி என்று நினைச்சிட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை. அகிலமெல்லாம் ஆழும் அகிலாண்டேஸ்வரி சிறீ முத்துமாரி அம்மன் தாங்கோ அவா. எனக்கு நினைவு தெரிந்த நாளிலை இருந்து ஆத்தா காலடிச் சந்நிதானம் படாத நாளே இருக்காது, அந்தளவுக்கு லிங் எமக்குள்ளை. கோயிலுக்குக் கிட்டத்தான் வீடு என்பதால் கோயில் மணிதான் எங்களுக்கு நேரம் காட்டும் கடிகாரம், ஏன் அலாரமும் கூட. எந்த மணி எத்தனை மணிக்கு அடிக்கும், எப்ப பூஜை தொடங்கும்,எப்ப முடியும், எப்ப பிரசாதம் குடுப்பங்கள் என்ற வரைக்கும் அத்துப்படி. நான் படிச்ச ஆரம்ப பாடசாலை,வீடு,கடை என்று எல்லாமே கோவிலை அண்டி இருந்ததால் மற்றவர்களை விட எமக்கு நெருக்கம் அதிகம். பத்து வயசிலையே அந்த …

  24. Started by sathiri,

    அருகில் உள்ள உணவகமொன்றில் வேலை செய்யும் என்னுடைய பிரெஞ்சு கார நண்பனொருவன் இன்று என் வேலையிடத்துக்கு காலையிலேயே சோகத்தோடு வந்தவன் பாரில் நின்ற என்னிடம் ஒரு கிளாஸ் விஸ்க்கி வேணுமென்றான் . காலங்காதாலையேவா என்ன பிரச்னை என்றேன் ..குடிக்கிறதுக்கு நேரம் காலம் என்று ஏதாவது சட்டமிருக்கா என்றான் ..இல்லைதான் உனக்கு வேலை இல்லையா என்றதும் அதெல்லாம் தன்பாட்டில் நடக்கும் என்றவனுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்தபடி மேலே சொல்லு என்றேன் .. எனக்கும் மனிசிக்கும் பிரச்னை ... இதை தானே ஆறு மாதமாய் சொல்கிறாய் புதிதா வேறை ஏதாவது சொல் .. இப்போ பெரிய பிரச்னை ... என்ன உன்னை போட்டு அடிச்சாளா .... அதெல்லாம் அப்பப்போ நடக்கிற சின்ன பிரச்னை ... அப்போ நீயே சொல்லு .... …

  25. வாடா மல்லிகை கார்த்திகை திங்கள் 2013 ஒரு நாள் மதிய வேளையில் அலுத்துக் களைத்து வீடு திரும்பும் பொழுது எனது மனம் வழமைக்கு மாறாக ஊரைச் சுற்றியே ஊசலாடிக் கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை .கடந்த மூன்று வருடங்களாக அரிதார முகங்களையும் , அவற்றால் வரும் ஓட்டில்லாத சிரிப்புகளையும் பார்த்துச் சலித்த எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்ற ஓர் எண்ணம் சடுதியாக என் மனதில் சடுகுடு விளையாடியதில் வியப்பு ஏதும் இல்லை . மனதில் எழுந்த எண்ணத்தை செயலாக்கும் முடிவில் வீடு வந்த நான் ,என் எண்ணத்தை பள்ளியறையில் மஞ்சத்தில் ஆற அமர இருக்கும்பொழுது எனது மனைவியிடம் பகிர்ந்தேன் . அவளும் எனது மன ஓட்டத்தில் இருந்தாளோ என்னவோ எனது எண்ணத்துக்கு பச்சைக்கொடி காட்டினாள் . இருவரும் ஒன்றிணைந்து …

    • 42 replies
    • 4.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.