நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
https://youtu.be/s_mRBmwFsNg
-
- 47 replies
- 3.7k views
-
-
சனிக்கிழமை சமையல்: ருசியியல் சில குறிப்புகள் 20-ம் நூற்றாண்டின் விரோதி கிருது வருஷத்தில் நான் பிறந்தபோது ‘ஆநிரைகளும் தாவரங்களும் உன்னைப் பசியாதிருக்கச் செய்யக் கடவன’ என்று எம்பெருமான் என் காதில் மட்டும் விழும்படியாக ஹெட்ஃபோனுக் குள் சொன்னான். அன்று முதல் இன்று வரை நான் மற்றொன்றினைப் பாராதவன். பாரத தேசத்தில் தாவர உணவாளி களின் சதவீதம் முப்பதுக்கும் குறைவு. அதுவும், இந்த ஒரு கழுதை ஆயுட்கால வருஷங்களில் மேலும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிட்டதைப் பார்க் கிறேன். மீன் ஜல புஷ்பமாகி, முட்டை, முட்டைக்கோஸை முந்தி, காளான் தாவரமாகவே ஆகிவிட்டது. இன்னமும் சாணி போட்டு எச்சில் பிரட்டும் ஆசா…
-
- 46 replies
- 14.1k views
-
-
நான் உங்களுக்கு சொல்லட்டுமா? பழைய புதிய சமையல் முறைகள் என் சமையல் அனுபவமும் நான் பல வருடங்களாக சேமித்த தகவல்களும். 1. இட்லி மாவுடன் சிறிது நல்லெண்ணை கலந்து வார்க்கவும். இட்லி கட்டியாக இருக்காது பஞ்சு மாதிரி வருமுங்க. 2.தக்காளி ரசம் செய்யும் போது தக்காளியை அப்படியே சேர்க்காமல் தக்காளி, கொஞ்சம் சீரகம், கொத்தமல்லி இலை யாவற்றையும் அரைத்துச் செய்தால் சுப்பராய் இருக்கும். விரதம் இல்லாத நாட்களில் இதனுடன் 2, 3 பற்கள் பூண்டும் சேர்த்து அரத்துச் செய்தால் மிக ருசியாகவும், மணமாகவும் இருக்கும். சொல்லி வேலையில்லீங்க.
-
- 46 replies
- 7.6k views
-
-
மாங்காய் சம்பல் எங்கள் வாழ்வில் சின்ன வயசில் அம்மா சமைத்த சாப்பாட்டை விட இதை தானே அதிகம் சாப்பிட்டு இருக்கிறம்... தேவையானது: மாங்காய் மிளகாய் தூள் உப்பு வெங்காயம் (நான் யாரையும் திட்டவில்லை) மிளகாய் (நிறைய போட்டு போட்டு பிறகு....என்னை குறை சொல்ல வேண்டாம்) 1. மாங்காயை சின்னனா வெட்டுங்க. 2. வெங்காயம், மிளகாயை சின்னதா வெட்டுங்க 3. மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக போட்டு கலக்கவும். 4. மற்றவர்களுக்கும் குடுத்து சாப்பிடவும். பி.கு - களவெடுத்த மாங்காய்க்கு ருசி அதிகமாம்..ஆனால் காவல்துறையில் இருந்து உங்களை வெளியே எடுக்க நாங்கள் வரமாட்டோம். நன்றி சரி சரி உங்கட மாங்காய் சம்பல் கதைகளை எழுதுங்கோ..
-
- 45 replies
- 9k views
-
-
-
- 45 replies
- 5.6k views
-
-
கடை இடியப்பம் பற்றி, ஒரு அதிர்ச்சி தகவல். இடியப்பம் ஒரு நல்ல உணவு என்பதில் சந்தேகமே இல்லை. அதில் கொழுப்பும் இல்லை, அதிலும் அரிசிமாவு இடியப்பம் சக்கரை வியாதி உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்று கூறுவார்கள். ஆனால் இடியப்பத்தை விற்பனை செய்யும் . பெரும்பாலான கடைக்காரர்கள் இடியப்பத்தை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால், இனிமேல் இடியப்பத்தை சாப்பிடவே மாட்டீர்கள் ! இடியப்ப மாவை குழைக்கும்போது, பிழிவதற்கு இலகுவாக இருக்கட்டும் என்று அதில் அதிகளவு எண்ணெயை கலக்கிறார்கள். அது சரி நல்ல எண்ணெய்தானே அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா ? அதுதான் இல்லை. சமையல் செய்து, அல்லது பொரித்த பின்னர் மிஞ்சும் எண்ணெயை அல்லவா அந்த இடியப்ப மாவில் கலக்கிறார்கள். இதில் 2 விஷயங்கள் உள்ள…
-
- 45 replies
- 5.6k views
-
-
செய்ய தேவையான பொருட்கள்; 1)அவித்த கோதுமை மா[அரிசி மா விரும்புவர்கள் அரிசி மா சேர்க்கலாம்] நான் வெள்ளை மாவில் தான் செய்யுறனான் அப்பத் தான் சுவை அதிகமாய் இருக்கும் 2)தண்ணீர் 3)ஸ்பினாச் கீரை[லண்டனில் கழுவி பைக்கற்றினுள் இருக்கும்] இந்த கீரை தான் சுவையாக இருக்கும் என்பது என் கருத்து. 4)சின்ன வெங்காயம் அல்லது காரமான சிவப்பு வெங்காயம் 5)பச்சைமிளகாய் செய்முறை; வெங்காயம்,ப.மிளகாய்,கீரை ஆகியவற்றை சிறிதாக வெட்டிக் கொள்ளவும். புட்டுக்கு மாவை குழைக்கவும்[தண்ணீர் அளவாக விட்டுக் குழைக்கவும் தண்ணீர் கூடினால் களியாகப் போய் விடும் ஏனென்டால் கீரையிலும் தண்ணீர் உண்டு] புட்டு மா பதமாக குழைத்த பின் வெங்காயம்,ப.மிளகாய்,கீரை போன்றவற்றை போட்டு குழைக்…
-
- 44 replies
- 11.8k views
-
-
செ.தே.பொருட்கள் :- கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு அவித்த வெள்ளை மா – 1 சுண்டு அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு வெந்தயம் – 1 தே. கரண்டி சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி மிளகு – 1/2 தே. கரண்டி உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி தாளிப்பதற்கு :- சின்ன வெங்காயம் – 8 (வெட்டி) செத்தல் மிளகாய் – 3 கடுகு – 1/2 தே. கரண்டி பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி கறிவேப்பிலை – 1 நெட்டு செய்முறை :- * உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும். * சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும். * உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும். * அரைத்த மா…
-
- 44 replies
- 4.7k views
-
-
வெண்டைக்காய், மீன் கறி - "பன்டக்க தெல் தல" தேவையானவை: 250 கிராம் வெண்டிக்காய் 1 மேசைக்கரண்டி மிளகாய்தூள் 1 மேசைக்கரண்டி மாலைதீவுமீன் 2 வெங்காயம் 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி சீனி தேவையான அளவு உப்பு செய்முறை: 1. வெண்டிக்காயை வட்டம் வட்டமாக சின்னதாக வெட்டுங்கள். 2. வெட்டின வெண்டிக்காய்க்கு மிளாகாய்தூளும், உப்பும் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும். 3. ஒரு சட்டியில் எண்ணெயை சூடாக்கி வெங்காயத்தையும், மீனையும் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும். 4. வெண்டிக்காயை சேர்த்து அவை வேகும் வரை நன்றாக வேக வைக்கவும். 5. இறுதியாக சீனி சேர்த்து சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும். குறிப்பு: இது இலங்கையில் சிங்களவர்…
-
- 44 replies
- 8.2k views
-
-
http://tamiltaste.co...mg/kanavaai.JPG
-
- 44 replies
- 17.6k views
-
-
நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்து வீட்டில் கறி வைப்பது வழமை.பலருக்கும் மரவள்ளி கறி பிடிக்கும்.ஆனால் நிறைய பேருக்கு பூசணிக்காய் கறி பிடிக்கவே பிடிக்காது.ஆனால் இந்த இரண்டையுமே சேர்த்து செய்தால் விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. அத்துடன் மிகவும் இலகுவான முறையிலான சுவையான சமையல். மரவள்ளி வாங்கும் போது அடி வேர்ப்பகுதி மெல்லிதாக இருப்பதை வாங்குங்கள்.மேலிருந்து கீழ்வரை நகத்தால் இடைஇடையே சுரண்டிப் பாருங்கள்.(கடைக்காரரும் உங்களை பார்க்கிறார்களா என்பதையும் பாருங்கள்)ஏதாவது கறுப்பாக தெரிந்தால் வாங்காதீர்கள்.பால் போல வெள்ளையாக இருந்தால் மட்டும் வாங்குங்கள்.நுனி கொஞ்சம் கறுத்து பழுதாகி இருந்தால் பரவாயில்லை.சிறிய துண்டு தானே வெட்டி எறியலாம். …
-
- 44 replies
- 3.7k views
- 1 follower
-
-
நேற்று எனது அம்மா எனக்கு புதுசா ஒரு சமையல் சொல்லித் தந்தா. இன்று நான் அதை உங்களுக்கு சொல்லித் தரலாம் என்று நினைக்குறன். என்ன எல்லோரும் ரெடியா? சரி குறுக்க பேசாமல் கவனமாக கேட்டு செய்யுங்கோ :wink: எள்ளுச்சம்பல் செய்முறை தேவையான பொருட்கள் எள் - 2 சுண்டு உள்ளி - 4 முழு உள்ளி நற்சீரகத்தூள் - 2 கரண்டி மிளகுதூள் - 1 கரண்டி உப்பு - சுவைக்கேற்ப புளி- ஒரு பெரிய தேசிக்காய் அளவு செத்தல் மிளகாய் - காரம் குறைவாக என்றால் 50 காரம் கூட என்றால் 75 கருவேப்பிலை செய்முறை முதலில் எள்ளை பொன்னிறமாக வரும் வரையும் வறுக்க வேண்டும். அதன் பின் கருவேப்பிலை, மிளகாய், உள்ளையை தனித்தனியாக பொரிக்க வேண்டும். பொரித சட்டியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு பு…
-
- 44 replies
- 9.3k views
-
-
சுவையான குழைச் சாதம் செய்வது எப்படி என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் செய்முறை தந்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி
-
- 43 replies
- 14.1k views
-
-
தேவையான பொருட்கள்: இறால் (பெரியது) - 500 கிராம் மைதா மாவு - 250 கிராம் சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி கேசரி பவுடர் - சிறிது நசுக்கிய பூண்டு - 8 பற்கள் மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். மைதா மாவுடன் சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து 2 மணி நேரம் புளிக்கவிடவும். இறாலின் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் பூண்டை நசுக்கிப் போடவும் (…
-
- 42 replies
- 3.4k views
- 1 follower
-
-
Please like and share this video also subscribe to my channel to support. Thanks
-
- 42 replies
- 4.3k views
-
-
பருத்தித்துறை வடை . இந்தப் பக்குவத்துக்குச் சொந்தக்காறி என்ரை மாமி தான் . நான் போனவருடம் பருத்தித்துறையில் நின்றபோது மாமியுடன் கதைத்து சுட்ட பக்குவம் . தேவையான பொருட்கள்: கோதுமை மா 1 கிலோ . *****உளுத்தம்பருப்பு 500 கிறாம் . உப்பு 2 மேசைக்கறண்டி . பெருஞ்சீரகம் 2 மேசைக்கறண்டி . மிளகாய்தூள் ( தேவைக்கு ஏற்ப ) . கறிவேப்பமிலை 30 - 35 இலை . எண்ணை ஒரு போத்தில் . பக்குவம் : உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ளுங்கோ. கோதுமை மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேருங்கோ. கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கோ. கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன…
-
- 42 replies
- 5.2k views
-
-
-
இந்த திரியில் சமையல் தொடர்பான சந்தேகங்கள் தீர்வுகள் பற்றிய தகவல்களை இணைக்க உள்ளேன். மேலதிக சந்தேகங்கள் இருந்தால் சுவி அண்ணா.. (சமையல் கலை விற்பன்னர்) இடம் கேளுங்கோ அவர் விளக்கம் தருவார் என நம்புகிறேன். இப்ப கடியன் இல்லை என்ற துணிவில் ரென்சன் ஆகிற கேள்விகள் கேட்க கூடாது. இனியெல்லாம் ருசியே! - 1 புத்தம் புதிதாக சமையலில் இறங்குபவர்கள் மட்டுமல்ல... கரை கண்டவர்களும்கூட, 'சமையல், நன்றாக வர வேண்டுமே... சாப்பிடுபவர்கள் திருப்தியடைந்து, பாராட்ட வேண்டுமே...’ என்கிற அக்கறையுடன்தான் ஒவ்வொரு தடவையும் பார்த்துப் பார்த்து சமைப்போம். ஆனால், சில சமயங்களில் இது காலை வாரிவிடுவது உண்டு. 'அடடா... காரம் தூக்கலா இருக்கே?' என்பது போன்ற ச…
-
- 41 replies
- 24.3k views
-
-
யாழ்ப்பாணத்து முறையில் நண்டுக்கறி நண்டுக்கறி சமைப்பதற்கு தேவையான பொருட்கள்: நண்டு 1kg பெரிய வெங்காயம் 1 தக்காளி 1(பேஸ்ட்) வெள்ளைப்பூடு 1 இஞ்சி 25g கடுகு 1தே.க சின்னசீரகம் 1தே.க வெந்தயம் 1தே.க கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு
-
- 41 replies
- 6.2k views
-
-
பற்றீஸ் தேவையான பொருள்கள். கோதுமை மா..250கிராம் அவித்த கோதுமைமா..150 கிராம் உப்பு தேவையான அளவு மஞ்சல் தூள் ஒரு சிட்டிகை உருழைக்கிழங்கு 500 கிராம் வெங்காயம் 2 பெரியது பச்சை மிளகாய் 4 தனி மிளகாய் தூள் 1 மேசைக்கறண்டி கறிவேப்பிலை தேவையான அளவு கடுகு பெருஞ்சீரகம் தாளிப்பதற்கு தேவையான அளவு பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் செய் முறை. இருவகை மாவுடன் மஞ்சல் உப்பு ஒரு மேசைக்கறண்டி எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதன் பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசைந்து வைக்கவும். அடுத்தபடியாக. உருழைக்கிழங்கை அவித்து தோள் அகற்றி அதை நல்ல சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம் பச்சமிளகாயை சிறிய துண்டாக வெட…
-
- 41 replies
- 12.1k views
-
-
காரக் கறி... ஒயில் என்று தமிழக ஸ்டைலில் சொல்லி இருந்தாலும்.... இது நம்மஊரு.... பருத்தித்துறை ஓடக்கரை ஐட்டம்.. இப்பவே சொல்லியாச்சு... பிறகு கண்ணை கசக்கிக் கொண்டு.... நாக்கை நீட்டிக் கொண்டு வந்து நிக்கிறேல்ல.... ?
-
- 41 replies
- 3.7k views
-
-
இந்த நெத்தலி கருவாட்டை மிகவும் ருசியாகவும் சுலபமாகவும் செய்யலாம். நான் செய்த முறை. அரை இறாத்தல் நெத்தலி (நான் வாங்கியது தலையில்லாதது) பெரிய வெண்காயம் 3. தக்காளி 1 தேவையான உப்பு கொஞ்சம் இஞ்சி சிறிது உள்ளி. தேசிக்காய் 1 3 கரண்டி மிளகாய்த் தூள். செய்முறை:- ஓரளவு சுடுநீரில் நெத்தலியை 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.அந்த இடைவெளியில் 3 பெரிய வெண்காயத்தையும் அரிந்து இரும்பு சட்டி அல்லது ஒட்டாத சட்டியில் போட்டு அரைவாசி வேகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளி சிறிதாக வெட்டி உள்ளி இஞ்சி கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வதக்கவும். ஊறப்போட்ட நெத்தலியை 3-4 தடவை கழுவி எடுத்து அதையும் சட்டியில் போட்டு வதக்கவும்.இதற்கு தண்ணீர் இல்லாதபடியால் கொஞ்சம் கூடுதல…
-
- 40 replies
- 5.7k views
-
-
-
போன்டா என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்றுண்டி. இந்த வசனத்தை எப்படி இத்தனை உறுதியாக சொல்கின்றேன் என கேட்பவர்களுக்காக: 1. சின்ன வயதில் பள்ளியில் போன்டா சாப்பிடாதவர்கள் உண்டோ (குறிப்பாக ஆண்கள்). அதிலும் வகுப்பு வேளையில் போய் வாங்க, அதை ஒரு ஆசிரியர் பார்க்க. அப்புறம் என்ன, கன்னத்துக்கு வெளியிலும் போன்டா, உள்ளும் போன்டா. 2. ஏன் சொல்கின்றார்கள் என்றே புரியவில்லை. ஆனால் வலைப்பூ மக்கள் ஒன்றுகூடலில் இவ்வுணவு பற்றி பேசுகின்றார்களாமே! 3. லக்கிண்ணா கூட போன்டா செய்முறை எழுதியிருக்கின்றார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!! (இதை விட ஒரு காரணம் வேண்டுமா) 4. யம்மு அடிக்கடி துங்காபியில் போன்டாவுடன் காணப்படுவார். 5. நான் போன்டா செய்முறை எழுதுவது (சோதனை மேல் சோதனை) …
-
- 40 replies
- 9.2k views
-
-
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா சமையல் பகுதிக்கும் வந்தாச்சு இங்கதான் சமையல் வல்லுனர்கள்/சமையல் கலைஞர்கள் இருக்கிறீங்களே . எனக்கும் கொஞ்சம் சுவையா சமைக்க உதவி செய்யுங்கோ. என்ர நிறுவனத்தில எங்கட குழுவில 5 பேர் இருக்கிறம். ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஒராள் சமைக்கவேணும். வாற வியாழன் திரும்ப என்ர முறை. ஏற்கனவே இரண்டு தரம் ஏதோ தட்டுத் தடுமாறி எனக்கு தெரிஞ்சத வைச்சு சமைச்சுக் குடுத்திட்டன். இரண்டு தரமும் கோழியை வைச்சு விளையாடியாச்சு. இனி வேற ஏதாவது புதுசா செய்ய வேணும் . சுலபமா - கனநேரம் செலவளிக்காமல் (30 - 50 நிமிடங்களுக்குள்) செய்யக் கூடிய ஒரு உணவுக்கு செய்முறை சொல்லுங்கோ. புண்ணியமாப் போகும்
-
- 40 replies
- 11.4k views
-