Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர்ந்தவனின் ஏக்கங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sinhalese_fishing_01%2B%25281%2529.jpg

[size=5]மண்ணின் வாசனை,[/size]

[size=5]மனதை நெருடுகின்றது![/size]

[size=5]நினைவுகள் பின்னிப் பிணைந்து,[/size]

[size=5]கண்ணாமூச்சி விளையாடுகின்றன![/size]

[size=5]உப்புக் கலந்த காற்றின் நினைவில்,[/size]

[size=5]நாசித் துவாரங்களின் அடைப்புக்களும்,[/size]

[size=5]விலகி வழி விடுகின்றன![/size]

[size=5]ஏனிந்தப் பிணைப்பு என்பதை,[/size]

[size=5]அறிய மனது துடிக்கிறது?[/size]

[size=5]அந்த மண்ணின் நினைவில்,[/size]

[size=5]உடம்பின் உழைவுகள் கூட,[/size]

[size=5]ஒவ்வொன்றாய் விடை பெறுகின்றன![/size]

[size=5]காலைப் பொழுதின் புதுமையில்,,[/size]

[size=5]கெக்கலித்துச் சிரிக்கும் பறவைகளே![/size]

[size=5]உங்கள் கீதங்களில் உயிர்ப்பு இல்லை![/size]

[size=5]எங்கள் குயில்கள் கூவுவதை,[/size]

[size=5]ஒரு முறை கேட்டுப் பாருங்கள்![/size]

[size=5]காலைக்கும் மாலைக்கும்.[/size]

[size=5]வணக்கம் சொல்லிச் சொல்லிக்,[/size]

[size=5]களைத்துப் போய் விட்டது,மனசு![/size]

[size=5]வெள்ளை மணலாய்,[/size]

[size=5]விரிந்த கடற்பரப்பில்,[/size]

[size=5]உருண்டோடித் திரியும்,[/size]

[size=5]இராவணன் மீசையாக நான்![/size]

[size=5]புலம் பெயரும் புள்ளினங்களே![/size]

[size=5]போன காரியம் முடிந்ததும்,[/size]

[size=5]திரும்பி வருகின்றீர்கள்![/size]

[size=5]போதைகளில் நீங்கள்,[/size]

[size=5]புத்தியை இழப்பதில்லை![/size]

[size=5]ஏனென்று சிந்தித்ததுண்டு![/size]

[size=5]இன்று எனக்குப் புரிகின்றது![/size]

[size=5]இத்தனை வருடங்களாய்,[/size]

[size=5]ஏக்கங்களின் வருடல்களில்,[/size]

[size=5]தூக்கமிழந்து போகிறேன்![/size]

[size=5]ஆயிரம் மீன்களுக்கிடையில்,[/size]

[size=5]ஒட்டியையும், ஒராவையும்,,[/size]

[size=5]தேடி அலைகின்றன கண்கள்![/size]

[size=5]வெட்டியெறியும் வாழைப் பொத்தியை,[/size]

[size=5]விலைக்குக் கேட்கையில்,[/size]

[size=5]கண்களை அகல விரித்துக்,[/size]

[size=5]கடைக்காரன் சிரிக்கிறான்![/size]

[size=5]சுறா மீனைத் தேடியலைகையில்,[/size]

[size=5]என் மீதே கோபம் வருகிறது![/size]

[size=5]முத்திப் போன முருங்கைக் காய் கூடத்,[/size]

[size=5]தித்திக்கிறது, எனக்கு![/size]

[size=5]பிட்டும், இடியப்பமும்,[/size]

[size=5]மட்டக் கிளப்பின்,கெட்டித் தயிரும்,[/size]

[size=5]கேட்கிறது நாக்கு![/size]

[size=5]கனவுகளில் கூடக் கேட்கிறது,,[/size]

[size=5]காவோலைகளின் சலசலப்பு![/size]

[size=5]சாரத்தை மடித்துக் கட்டிச்,,[/size]

[size=5]சந்திக் கல்லில் குந்தியிருக்க,[/size]

[size=5]ஆசை வருகின்றது![/size]

[size=5]வேப்ப மரத்தடியில், [/size]

[size=5]சாக்குக் கட்டில் மீது,[/size]

[size=5]சாய்ந்திருக்கும், நினைவு வருகின்றது![/size]

[size=5]கோவில் மணியோசை,[/size]

[size=5]கேட்கும் காலையில்,[/size]

[size=5]குளிர் காற்றின் கூதலில்,[/size]

[size=5]கொஞ்சம் சுருண்டு படுக்க ஆசை![/size]

[size=5]கடற்கரைத் தொடுவானில்,[/size]

[size=5]கதிரவன் மறைவதைக்,[/size]

[size=5]கண்குளிரக் காண ஆசை![/size]

[size=1],[/size]

Edited by புங்கையூரன்

[size=5]காலைக்கும் மாலைக்கும்.[/size]

[size=5]வணக்கம் சொல்லிச் சொல்லிக்,[/size]

[size=5]களைத்துப் போய் விட்டது,மனசு![/size]

[size=5]வெள்ளை மணலாய்,[/size]

[size=5]விரிந்த கடற்பரப்பில்,[/size]

[size=5]உருண்டோடித் திரியும்,[/size]

[size=5]இராவணன் மீசையாக நான்![/size]

[size=5]புலம் பெயரும் புள்ளினங்களே![/size]

[size=5]போன காரியம் முடிந்ததும்,[/size]

[size=5]திரும்பி வருகின்றீர்கள்![/size]

[size=5]போதைகளில் நீங்கள்,[/size]

[size=5]புத்தியை இழப்பதில்லை![/size]

[size=5]ஏனென்று சிந்தித்ததுண்டு![/size]

[size=5]இன்று எனக்குப் புரிகின்றது![/size]

புள்ளினங்கள் வலசைபோவதில் தப்பில்லை . ஆனால் கூடுதிரும்பும்பொழுது வில்லங்கங்களுடன் அல்லவா வருகின்றது ? தரமான கவிதைக்கு எனது மனந்திறந்த பாராட்டுக்கள் புங்கையூரான் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு கனக்கிறது...ஏக்கம்களை வரவைக்கும் கவிதை ஒன்று...இரண்டு மூன்றுதரம் திரும்ப திரும்ப படித்தேன்..நன்றி அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை ஆசைகள் இருந்தும்.......... நிறைவேற்ற மனசுதான் துடிக்கிறது.

கவிதை அழகு

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

-------

[size=5]மண்ணின் வாசனை,[/size]

[size=5]மனதை நெருடுகின்றது![/size]

[size=5]நினைவுகள் பின்னிப் பிணைந்து,[/size]

[size=5]கண்ணாமூச்சி விளையாடுகின்றன![/size]

[size=5]உப்புக் கலந்த காற்றின் நினைவில்,[/size]

[size=5]நாசித் துவாரங்களின் அடைப்புக்களும்,[/size]

[size=5]விலகி வழி விடுகின்றன![/size]

[size=5]ஏனிந்தப் பிணைப்பு என்பதை,[/size]

[size=5]அறிய மனது துடிக்கிறது?[/size]

--------

நல்லதொரு கவிதை புங்கையூரான்.

மனதை... நெருடின உங்கள், வரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி

இதற்கு நான் எழுதினால் வியாபாரி ஆகிவிடுவேன்.

அதனால் மௌனம்.........

புங்கையூரழகு ............புங்கையூரில் பிறந்த புங்கையூரானழகு ............புங்கையூரானிடம்பிறந்த இந்த கவிதையழகு ....... :)

அற்புதமான கவிதை

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரழகு ............புங்கையூரில் பிறந்த புங்கையூரானழகு ............புங்கையூரானிடம்பிறந்த இந்த கவிதையழகு ....... :)

அற்புதமான கவிதை

நன்றி

என்னையும் அழகு என்று சொன்னதற்கு. :D :D

(புங்கை வரமுதல் நான் இதை தட்டிப்பறித்திடணும் :lol: )

Edited by விசுகு

நன்றி

என்னையும் அழகு என்று சொன்னதற்கு. :D :D

(புங்கை வரமுதல் நான் இதை தட்டிப்பறித்திடணும் :lol: )

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் ............முகத்தின் அழகு அவன் எழுத்தில் தெரியும் ....அந்த வகையில் தாங்களும் அழகே அண்ணா .................. :D :D

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுபூர்வமான கவிதை. எல்லோருக்கும் இருக்கும் ஆசைகள்தான். இழந்தவைகள்தான் எத்தனை!

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் மூச்சு தான் வருதண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் புங்கையூரன்! ஏக்கங்களில் கூட ஏழையாகிவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]தாய் நிலம் பிரிந்த சோகம் உயிர் உள்ளவரை போகாது ..........அருமையான் ஏக்க உணர்வுள்ள் வரிகள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அழகான உவமிப்பு ரோமியோ

"[size=5]வெள்ளை மணலாய்,[/size]

[size=5]விரிந்த கடற்பரப்பில்,[/size]

[size=5]உருண்டோடித் திரியும்,[/size]

[size=5]இராவணன் மீசையாக"[/size]

உப்புக்காற்றுரசும் நித்தியப் பொழுதுகளையெல்லாம் இழந்து எப்போதென்ற ஏக்கம் மட்டுமே எமக்கான சொத்தாக... உலக வெளியில் சிறகுகள் விரிக்கமுடியாத புலுனிக்குஞ்சுகளாக மீண்டும் மீண்டும் வளர்ந்த வாழ்ந்த இடங்களோடு மட்டுமே மனம் லயித்து நிற்கிறது. விடுபடமுடியாத நினைவுசிமிழ்களுக்குள் அடைபட்டுக் கொள்வதில் இருக்கும் சுகம் வேறெங்கும் கிடைக்காது. வாழுமிடங்கள் ஆளாளுக்கு மாறுபட்டாலும் எண்ணங்களும் ஏக்கங்களும் எங்கள் தலைமுறை சாயும்வரைக்கும் நீடித்துக் கொண்டிருக்கும். ஒன்று மிக முதியோராக இருந்திருக்கவேண்டும்...இல்லையென்றால் மிக இளையவர்களாக இருந்திருக்கவேண்டும். மிக முதியவர்கள் என்றால் ஓரளவுக்காகினும் ஏக்கமின்றி அனுபவித்திருப்பார்..இளையவராகில் இந்த ஏக்கமே அற்றவராக இருந்திருப்பார்..ஆனால் நாங்கள் இரண்டும் கெட்டான்கள் எல்லா விடயத்திலுமே இரண்டும் கெட்டான்கள். ஒண்ட வந்த புலத்திலும் இணைய முடியாத திண்டாட்டம். இருந்த நிலத்தையும் இழந்த பரிதாபம். இன்னும் கொஞ்சம் மிஞ்சியிருக்கிறது என்று வாழ வலிந்து பழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படியான நிலையில் வாழும் எமக்கு மனதிற்குள் சிம்மாசனம் இட்டிருக்கும் நினைவுகளை மீள மீள பார்த்துக்கொள்வதைத் தவிர ஏது மிஞ்சி இருக்கிறது? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை, அழகாக வந்துள்ளது..வாழ்த்துக்கள்...:)

இதே போல, இங்கே உள்ள வாழ்வையும் எழுதுங்கோவன்...

50 வருட வாழ்வில் 25 - 30 வருடத்தை ஓங்கி உயர்ந்த கட்டிடங்களிலும், நவீன தொடர்படல்களிலும், வருமுன் காப்பு மருத்துவத்திலும்..இன்னும் என்னும் என்னும் துறைகளிலும், நினைத்துபார்கவே முடியாத வருவாய் உடனும் உள்ளதையும் சொல்ல வேண்டும்...இன்று காலை, அமெரிக்காவின் dallas என்னும் இடத்தில் இருந்து வேலைக்கு கேட்டிருந்தார்கள், அதற்காக அந்த நகரத்தை விகேபெடிவில் எடுத்து பார்த்தால்...அதனுடைய பெரும் தெருவை பாருங்கள்...5 அடுக்கில் விரைவு பாதைகள்...(ஜப்பான் இல் 7 அல்லது 8 அடுக்கில் உள்ளதாக யாரோ சொன்ன ஞாபகம்-)

அண்மையில் வீட்டுக்கு அருகில் உள்ள பார்க் க்கு போனேன், பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை..நான் எவ்வாறு ஊஞ்சலில் ஆடினெனோ அதே போலத்தான், எனது பெண்ணும் ஆடினாள்...இங்கே கொஞ்சம் குளிர் தொடங்கிவிட்டது அதையும் ரசித்தேன்... இங்கே உள்ள 100 க்கு 99 வீதம் ஆனா ஆக்கள் வாழும் வாழ்வையும்- அதில் நீங்கள் ரசித்த பகுதியையும் எழுதுங்கோ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]காலைக்கும் மாலைக்கும்.[/size]

[size=5]வணக்கம் சொல்லிச் சொல்லிக்,[/size]

[size=5]களைத்துப் போய் விட்டது,மனசு![/size]

[size=5]வெள்ளை மணலாய்,[/size]

[size=5]விரிந்த கடற்பரப்பில்,[/size]

[size=5]உருண்டோடித் திரியும்,[/size]

[size=5]இராவணன் மீசையாக நான்![/size]

[size=5]புலம் பெயரும் புள்ளினங்களே![/size]

[size=5]போன காரியம் முடிந்ததும்,[/size]

[size=5]திரும்பி வருகின்றீர்கள்![/size]

[size=5]போதைகளில் நீங்கள்,[/size]

[size=5]புத்தியை இழப்பதில்லை![/size]

[size=5]ஏனென்று சிந்தித்ததுண்டு![/size]

[size=5]இன்று எனக்குப் புரிகின்றது![/size]

புள்ளினங்கள் வலசைபோவதில் தப்பில்லை . ஆனால் கூடுதிரும்பும்பொழுது வில்லங்கங்களுடன் அல்லவா வருகின்றது ? தரமான கவிதைக்கு எனது மனந்திறந்த பாராட்டுக்கள் புங்கையூரான் .

உண்மை தான் கோமகன்!

தங்கள் பாராட்டுக்களுக்கும், கருத்துக்கும் எனது பணிவான நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு கனக்கிறது...ஏக்கம்களை வரவைக்கும் கவிதை ஒன்று...இரண்டு மூன்றுதரம் திரும்ப திரும்ப படித்தேன்..நன்றி அண்ணா...

என்ன செய்வது, சுபேஸ்?

எங்கள் வாழ்வும், எங்கள் வளங்களும் கேள்விக்குறிகளாக மாறும் காலகட்டத்தில் வாழ்கிறோம்!

நினைவுகளை, மீட்டிப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும், மரத்தின் கீழ் படுத்திருந்து, இறை மீட்கும் ஒரு பசுவாக மாறி விடுகின்றோம்!

இந்தக் கவிதையில் உள்ள படத்திற்குப் பின்னால், ஒரு கதையிருக்கின்றது!

கிடுகால், அமைக்கப் பட்டிருப்பவை எமது உள்ளூர் மீனவர்களால் அமைக்கப் படும், குடிசைகள்!

நீல நிறத்தில் இருப்பது, சிங்கள மீனவர்களால் அமைக்கப் படும், கூடார வீடுகள்!

இடம் பெயர்ந்தவர்களுக்காக, சர்வதேச அமைப்புக்களினால், உதவியாக வழங்கப்படும்

இந்தக் கூடாரங்களும், எங்கள் வளங்களை, எவ்வாறு சுரண்டுகின்றன என்பதைப் பாருங்கள்!,

தங்கள் கருத்துக்கு நன்றிகள், சுபேஸ்!

இத்தனை ஆசைகள் இருந்தும்.......... நிறைவேற்ற மனசுதான் துடிக்கிறது.

கவிதை அழகு

நன்றிகள், கறுப்பி!

நிஜங்களின் வடிகால்கள் தானே நினைவுகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை புங்கையூரான்.

மனதை... நெருடின உங்கள், வரிகள்.

நன்றிகள், தமிழ் சிறி!

!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆக்கம் புங்கையூரன்..! :)

இத்தனை ஆசைகள் இருந்தும்.......... நிறைவேற்ற மனசுதான் துடிக்கிறது.

கவிதை அழகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]அருமையான கவிதை [/size]

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானின் மனதைத் தொடும் வரிகள் எம்மை பிறந்தமண்ணிற்கு அழைத்துச்சென்றது. ஆழமான வார்த்தைகள். அழகான கவிதை. நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதை, நன்றிகள் புங்கையூரன்

[size=5]சாரத்தை மடித்துக் கட்டிச்,,[/size]

[size=5]சந்திக் கல்லில் குந்தியிருக்க,[/size]

[size=5]ஆசை வருகின்றது![/size]

[size=5]வேப்ப மரத்தடியில், [/size]

[size=5]சாக்குக் கட்டில் மீது,[/size]

[size=5]சாய்ந்திருக்கும், நினைவு வருகின்றது![/size]

உங்களின் வரிகள் இளமைக்காலத்துக்கு கண்ணிர் முட்ட இழுத்துச் சென்றுள்ளது. வாழ்த்துக்கள்.

நாங்கள் அங்கு அனுபவித்த சுதந்திரம். மீண்டும் வருமா? கண்ணகை அம்மன் கடற்கரை அருகு மடத்தில் கிடந்து காற்று வேண்டிய நிலை மீண்டும் முடியுமா? இப்போது எல்லாம் இராணுவப்பிடியுக்குள். எமது சுதந்திர பறிக்கப்பட்டுவிட்டது.

மண்ணின் நினைவுகள் அழகு... தொடர்ந்து எழுதுங்கள். :)

[size=5]புலம் பெயரும் புள்ளினங்களே![/size]

[size=5]போன காரியம் முடிந்ததும்,[/size]

[size=5]திரும்பி வருகின்றீர்கள்![/size]

[size=5]போதைகளில் நீங்கள்,[/size]

[size=5]புத்தியை இழப்பதில்லை![/size]

[size=5]ஏனென்று சிந்தித்ததுண்டு![/size]

[size=5]இன்று எனக்குப் புரிகின்றது![/size]

மண் வாசனை வீசும் அழகான கவிதைக்குள் இதனை செருகாமல் விட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.