Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

"டேய் தம்பி ... உன்ர பிறண்ட்ஸ் யாரோ வந்திருக்குறாங்கள். போய்ப் பார்! " என வீட்டுக் கேற் பக்கமாக கையைக் காட்டினார் அம்மா. ராணிக் காமிக்ஸ் மாயாவிக் கதைகளுக்குள் ஆழமாய்ப்போய்.... தங்கக் கடற்கரை ஓரத்தில் உலாவந்து கொண்டிருந்த எனக்கு, அது காதில விழவே இல்லை. ஆனால், பாழாய்ப்போன என்ட பாசக்கார நண்பர்களின் சைக்கிள் பெல்லடிச் சத்தம்..... பாலாலியில இருந்து அடிக்குற ஆட்லறி வெடிக்கிற சத்தத்தைவிட அதிகமாக இருந்ததால்..... கேற்றடிக்குப் போய், என்னடா.... ?! என்ன விசயம்?! என , கேட்டுக்கொண்டே... கேற்றைத் திறந்தேன்.

ரவியும், கார்த்தியும் வந்திருந்தார்கள். என் பள்ளி நண்பர்கள்.

நான் வர பிந்தினதால அவங்களுக்கு கொஞ்சம் கடுப்பு என்பது அவர்களது முகத்திலயே விளங்கிச்சு .

"ஏன்டா...! பள்ளிக்கூடம் லீவு எண்டாலும் .... விழுந்து விழுந்து படிக்கிறியோ?" என நக்கலாகக் கேட்டார்கள். ஆனால் நான் ராணிக்காமிக்ஸ் புத்தகக் கதைகளை கரைச்சுக் குடிக்கிற விசயம் இந்தப் பொடியளுக்குத் தெரியாது.

பள்ளிக்கூடம் லீவு எண்டாலே, நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஏதாவது புதுசாப் பிளான் பண்ணுறதுதான் வழமை. இந்த முறை என்ன பிளான் என்று இன்னும் கதைக்கவில்லை என்ற குறையைத் தீர்க்கத்தான்... இந்த ராகுவும் கேதுவும் வந்திருக்கு என்று... எனக்கு அப்ப விளங்கேல. அவர்கள் ஆரம்பிக்கும்போதுதான் ...... எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கிச்சு.

என்ர வீட்டுக்குப் பக்கத்து வீடு ..... கவிதா வீடு. இந்தக் கவிதா வேறு யாருமில்லை. எங்கள் வகுப்புப் பிள்ளைதான். எங்கள் சகோதர பாடசாலையில்தான் படிக்கின்றாள். ஆனால் ரியூசனில ஒன்றாகத்தான். அந்த வயதுக் காலகட்டத்தில் எங்கள் வயதுப் பிள்ளையள... அதாவது, எங்கட வகுப்புப் பெட்டையள எதிரியை விட மோசமாகத்தான் பார்க்கிறது. பக்கத்து வீடாக இருந்தாலும் கொலர்சிப் முடிஞ்சு ஆண்டு-6 க்கு போனாப் பிறகு.... இந்தக் கவிதாக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை எதுவுமே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! நான் முறைக்கிறனோ... இல்லையோ... அவள் என்னைப் பார்த்து சிரிக்கிறதே இல்ல! என்ற கடுப்பு எனக்குள்.

இப்பிடித்தான் எங்கட பெடி பெட்டையளின்ர கதை ஓடிக்கொண்டிருந்தது அப்போது.

இப்பிடியான வில்லங்கமெல்லாம் இருக்க... ரவியும் கார்த்தியும், அதுக்குள்ளையும் ஒரு வில்லங்கத்தை கொண்டுவாற மாதிரி புதுப் பிளான் ஒண்டை அவிட்டு விட்டாங்கள்.

"மச்சான் !அந்தக் கோழி எங்கையடா..?" என தொடங்கினான் கார்த்தி. "நானும் அதைத்தான்டா தேடுறன். இண்டைக்கெண்டு கண்ணில பட மாட்டன் எண்டுறார் மைனர்" என சொல்லிக்கொண்டே அங்குமிங்கும் சுத்தி தன் பார்வையை சுழலவிட்டான் ரவி.

எனக்கு ஒண்டுமா விளங்கேல. "என்னடா எந்தக் கோழியத் தேடுறீங்கள்? கவிதாவையோ? இது எப்பயில இருந்து மச்சான்?" என சிரித்துக்கொண்டே கேட்டேன்.

உனக்கு விசரோடா? அந்தக் கவிதாவை வச்சு கவிதையோ எழுதுறது? எனக் கார்த்தி சொல்ல,

அடேய்! உன்ர பக்கத்து வீட்டுக்காரியை... ஒருக்கா எங்களைப் பார்த்து சிரிக்கச் சொல்லன்டா! அதுக்குப் பிறகாவது கவிதாவை வச்சு கவிதை எழுதுறதப் பற்றி நான் யோசிச்சு முடிவெடுக்கிறன்.... என நக்கலடித்தான் ரவி.

நாங்கள் தேடினது, அண்டைக்கு உன்ர வீட்டு மதிலில நிண்டிச்சடா... அந்த செங்கலர்ச் சாவல்! அந்த சேவல் கோழியை உனக்கு ஞாபகம் இருக்கே...? எனக் கேட்டான் கார்த்தி, என்னைப் பார்த்து.

அடேய்....! அது கவிதா வீட்டுச் சாவலடா.... !!! என அதிர்ச்சியோடு பதறிக்கொண்டே சொன்னேன்.

ஒரு நாளைக்கு பத்துத் தடவை "பா பா... பே பே..." என பாட்டுப் பாடி அந்தக் கோழிக்கு அரிசி போடுறதுதான் கவிதாக்கும் அவளின்ர அம்மாவுக்கும் பொழுதுபோக்கு.

கவிதா வீட்டுக் பேட்டுக்கோழி அஞ்சு ... எங்கட வீட்டோட நாலு, அக்கம் பக்க வீடுகளென உள்ள அத்தனை வீட்டு ஊர் சுற்றும் பெண் கோழிகளுக்கும் இந்த செங்கலர்ச் சாவல்தான் மன்மதன். அந்த திமிரிலயும், அத்தனை வீட்டு புடையல் அரிசியிலயும் திண்டு கொழுத்து அவர் மூண்டு கிலோக்கு மேல உடம்பேத்தி வச்சிருந்தார். அதுக்கு கவிதா வைச்ச செல்லப் பெயர் "பிரசாந்த்" என்பது வேறொரு கதை.

இந்த ராகு,கேது எனக்கு ஒரு பெரிய பிரச்சினையைக் கிளப்பப் போகுதுகள் என்பது மட்டும் அப்ப விளங்கிச்சு.

கார்த்தியே தொடர்ந்தான்....

"அது கவிதா வீட்டுச் சாவலோ..? நல்லதாப் போச்சு மச்சான் ...! ஒரு அஞ்சு போடுடா!!" என ரவியும் அவனும் ஆளுக்கால் உள்ளங்கைகளை அடித்துக் கொண்டார்கள்.

எனக்கு எட்டில சனியைக் குடுத்துட்டு உவங்களுக்கு அஞ்சு வேற தேவையாக் கிடக்கு என மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டேன். ஆனால், இண்டைக்கு ஒரு முடிவோடுதான் இவங்கள் வந்திருக்கானுகள்.... என்று மட்டும் நல்லா விளங்கிச்சு .

"சரி உங்கட பிளானை முதலில சொல்லுங்கோடா...!" என நான் கேட்க,

ரவி, தன்ர மாஸ்ரர் பிளானை விலாவாரியா விளக்க... மண்ணில் படம் வரைந்து ஒரு குச்சித் தடியோட நின்று... அவன் ஆரம்பித்த விதத்தினைப் பார்த்தால்.... பால்ராஜ் அண்ணை கூட கொஞ்சம் யோசிப்பார். அப்பிடி இருந்திச்சு!!!

"நாங்கள் இப்ப இந்த இடத்தில ... அதாவது கவிதா வீட்டுச் சுவர்ப்பக்கமா உள்ள இந்த இடத்தில நிக்கிறம். இன்னும் சரியா ஏழு மணித்தியாலத்தில... சரியா பின்னேரம் ஆறரை மணிக்கு அந்தச் சாவல் இந்த கிழக்குப்பக்க சுவரோட இருக்குற நெல்லி மரத்தில படுக்குறதுக்கு வரும். நாங்கள் வழமையா வாற பின்னேர றோட்டு ரோந்தினை முடிச்ச கையோட... இதே இடத்தில சரியா ஏழு மணிக்கு சந்திக்கிறம். அதுக்குப் பிறகு தயாராக வைக்கப்பட்ட எங்கட சைலன்ட் ஆயுதம் ஈரச் சாக்கினை எடுத்து... இந்தச் சுவரில் ஏறி அந்த செங்கலர் மைனரை 'லபக் லபக்' என்று மடக்குறம்; சுடச் சுட விருந்து போடுறம் . புலனாய்வு தலைவர் கார்த்தியின் தகவல்களுக்கு நன்றிகள்...! " என ஒரே மூச்சில் ரவி சொல்லி முடிக்க, எனக்கோ இதயம் 'பக் பக்' என்று அடித்து... பதற ஆரம்பித்தது.

அடப்பாவிகளா... கள்ளக்கோழி பிளானல்லோ போட்டிருக்கிறியள்! அதுவும் எங்கட கவிதா வீட்டில. மாட்டுப்பட்டா செத்தம்! ஏனடாப்பா இந்த குப்பி அடிக்கிற விளையாட்டு...?

வேணாம் மச்சான்!! வேற ஏதாவது பிளான் போடுங்கடா!!.... என்றேன். ஆனால், கவிதா வீட்டுக் கோழிதான் வேணும்.... எண்டு அடம்பிடிச்சாங்கள், அந்த பாசக்கார கிரகங்கள்.

சரி... கள்ள மாங்காயில ஆரம்பித்து கள்ளக்கோழி வரைக்கும் இதுதான் ருசிக்கும்! என்று வந்து நிக்குது .... பிரச்சினையைப் பிறகு பார்ப்பம். இப்ப உவங்கள் சொல்லுறதுக்கு தலையாட்டினால்தான் எனக்குரிய கோழித் தொடைப் பங்காவது கிடைக்கும்... என முடிவெடுத்தவனாய், "சரி செய்வம்" என்று சொன்னன்.

இரவு ஏழு மணி... அப்பா அப்ப கொழும்பில இருந்தபடியால், எனக்கு கொஞ்சம் பயம் குறைவு. கவிதாவின்ர அப்பா பலவருடங்களாக சுவிஸில. அடி வாங்குறதுக்கு சான்ஸ் குறைவு என்ற தைரியத்தில .... எங்கட கள்ளக்கோழி ஒபரேசன் வெற்றிகரமா அமைஞ்சுது. நெல்லி மரத்தில் சயனத்தில் இருந்த மைனர் செங்கலர் சாவல் மாட்டுப்பட்டார்!

சத்தமில்லாமல்... யாருமில்லாத என் அம்மம்மா வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நளபாகம் நடந்தேறி.... சுபாஸ் பேக்கரி பாணும், கோழிக்கறியும் என.... தடயமே இல்லாமல் வழித்துத் துடைக்கப்பட்ட விருந்து முடித்த திருப்தி இந்த மூவேந்தரிற்கு. பல நாள் பிளானை வெற்றிகரமா முடிச்ச திருப்தியோடு, வெற்றிச் சிரிப்போடு விடைபெற்றனர் கார்த்தியும் ரவியும்.

இந்தக் கள்ளக்கோழி விருந்து நடந்து, சில நாட்களின் பின்னர்....

எனக்கு மத்தியானச் சாப்பாட்டில அவிச்சோ.. பொரிச்சோ... எப்பிடியோ... ஒரு முட்டை இருந்தே ஆகோணும்!!

அண்டைக்கு மத்தியானம் என்ர சாப்பாடு... நிலவில்லாத அமாவாசை நாள்போல... முட்டையில்லாத தட்டோடு வர........

எனக்கு செமக் கோபம்!!!

அம்மா! முட்டை எங்க? எனக் கோபமாக் கேக்க....

அதுக்கு...........அப்ப அம்மா சொன்ன பதில்..... எனக்கு தூக்கிவாரிப் போட்டுது!

"தம்பி... உனக்குத் தெரியாதே... கவிதா வீட்டுச் சேவலை யாரோ நாசமாப்போன கோழிக்கள்ளர் பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம். அந்தப் பெட்டை செல்லமா வளர்த்த சாவலாம் அது. அது வேற அழுதுகொண்டு கிடக்காம். அந்தச் சாவல் ஒண்டுதான் இருந்திச்சு. இப்ப அதுவும் இல்லாததால எங்கட வீட்டுக் கோழியும் முட்டை போடுதில்ல. கவிதான்ர அம்மா அந்தோனியார் கோயிலில இழைக்கட்டியிருக்காவாம். எடுத்தவங்களுக்கு கையழுகப் போகுது!!!" எண்டா அம்மா.

அய்யய்யோ....... என் கையை ஒருதடவைக்கு பலதடவை பார்த்துக் கொண்டேன். நல்லாத்தான் இருந்திச்சு.

ஆனால் ஒருநாள் விருந்துக்கு ஆசைப்பட்டு பல நாள் முட்டை போச்சே.

அப்புறம் என்ன,

அந்தோனியாருக்குப் பயந்து... பாவ மன்னிப்புக்காக,

மூவேந்தர்களின் அன்பளிப்பாக...

ஒரு மைனர் மாப்பிள்ளையை இறக்கினம்.

அதுக்குப் பிறகுதான்... கவிதாவின்ர முகத்திலயும் கொஞ்சம் சிரிப்பைப் பார்க்க முடிஞ்சுது.

அப்பதான் எனக்கு விளங்கிச்சு...

எனக்கும் அவளுக்கும்.... ஒரே ரேஸ்ட் எண்டு.

அவளுக்கும் முட்டை இல்லாமல் சோறு இறங்காதாம். :)

இதுக்குத்தான் சொல்லுறது........ எதையுமே ஒழுங்காப் பிளான் பண்ணிச் செய்யோணும் எண்ணு...! :lol:

***********************************************************************************************

(முற்றும்)

***********************************************************************************************

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதை, உங்களை மீண்டும் களத்தில் கண்டது, மிகவும் மகிழ்ச்சி!

பேட்டுக் கோழிகள், முட்டையிடுவாதற்கு, சேவல்கள் அவசியமில்லை!

அவை சாம்பலில் குளித்தும் முட்டைகளிடும் வல்லமை உடையன! ஆனால், அந்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொரிக்காது!

கவிதா - கவிதை

பொருத்தம் நன்றாகத் தான் இருக்கின்றது! :icon_idea:

பச்சை நாளை போடுகின்றேன்!

Posted

அம்மம்மா வீட்டுப் பக்கத்தால் கோழிக்கறி வாசனை வெளி வந்திருக்குமே... அக்கம் பக்கம் யாரும் இல்லையோ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதை நல்ல கதை, நன்றாக இருக்கிறது,கள்ளகோழி2 பிடிக்கிறது பிடிக்கிறது ஒரு திரில்லா இருக்கும்........., ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கள்ளக் கோழி கறிக்கு ருசி கூடவாம்.... :lol: .......மூன்றாவது எனது பச்சை .

Posted

உங்கள் கதை நன்றாக இருக்கிறது. கதையின் சாரத்தில் நகைச்சுவையும் இழையோடுவது அருமை. பள்ளிக்கால பருவங்களிற்கு அமைவான குறும்புகள் எல்லோர் மனதிலும் பள்ளிக்கால வசந்தங்களை அள்ளித்தெளிக்கும் என்பது நிஜம். பாராட்டுக்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சுபாஸ் பேக்கரியோ???? அப்ப நீங்களும் நெல்லியடிப்பக்கமோ???? :rolleyes:

7

Posted

கள்ளக்கோழிக்கு +8 :lol:

நல்லகாலம் கை அழுகேல்ல. இல்லாட்டி இப்ப ஒரு கவிஞன் எங்களுக்குக் குறைஞ்சிருப்பான். கவிதைத்தம்பி கதையில் இப்ப முதிர்ச்சியும் கதைக்கோர்ப்பும் அசத்தலாக வருகிறது. பாராட்டுக்கள். நம்மட பள்ளிக்காலம் கள்ளமாங்காய் , நெல்லிக்காய்தான் உங்கள் காலம் பொற்காலம். :lol:

சுபாஸ் பேக்கரியோ???? அப்ப நீங்களும் நெல்லியடிப்பக்கமோ???? :rolleyes:

7

போச்சடா சாமி ரெண்டு பேரும் சேந்துதான் கோழி புடிச்சியளோ ஜீவா ? :lol:

farm_5.gif

Posted

வாசிக்கும் போது சில கதைகளே எமக்கு ஒரே மூச்சில் வாசிக்கத்தோன்றும் அந்த வகையில் உங்கள் கதைகள் அமைவது சிறப்பு. கள்ளக்கோழி் கதை வாசிக்கும் போது மிகவும் சுவார்சியமாக இருந்தது. வாழ்த்துக்கள் கவிதை....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதை உங்களால் இவ்வளவு நகைச்சுவையாக எழுத முடியும் என்கிறதைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது...பாராட்டுகள் கடவுள் எல்லா வித எழுத்துத் திறமையை உங்களுக்கு தந்துள்ளார்...தொடர்ந்தும் விதம்,விதமாக எழுதுங்கள்

ராணி காமிக்ஸ் படிக்கிற வயதில் கள்ளக் கோழியா? :blink:

Posted

"டேய் தம்பி ... உன்ர பிறண்ட்ஸ் யாரோ வந்திருக்குறாங்கள். போய்ப் பார்! " என வீட்டுக் கேற் பக்கமாக கையைக் காட்டினார் அம்மா. ராணிக் காமிக்ஸ் மாயாவிக் கதைகளுக்குள் ஆழமாய்ப்போய்.... தங்கக் கடற்கரை ஓரத்தில் உலாவந்து கொண்டிருந்த எனக்கு, அது காதில விழவே இல்லை. ஆனால், பாழாய்ப்போன என்ட பாசக்கார நண்பர்களின் சைக்கிள் பெல்லடிச் சத்தம்..... பாலாலியில இருந்து அடிக்குற ஆட்லறி வெடிக்கிற சத்தத்தைவிட அதிகமாக இருந்ததால்..... கேற்றடிக்குப் போய், என்னடா.... ?! என்ன விசயம்?! என , கேட்டுக்கொண்டே... கேற்றைத் திறந்தேன்.

ரவியும், கார்த்தியும் வந்திருந்தார்கள். என் பள்ளி நண்பர்கள்.

நான் வர பிந்தினதால அவங்களுக்கு கொஞ்சம் கடுப்பு என்பது அவர்களது முகத்திலயே விளங்கிச்சு .

"ஏன்டா...! பள்ளிக்கூடம் லீவு எண்டாலும் .... விழுந்து விழுந்து படிக்கிறியோ?" என நக்கலாகக் கேட்டார்கள். ஆனால் நான் ராணிக்காமிக்ஸ் புத்தகக் கதைகளை கரைச்சுக் குடிக்கிற விசயம் இந்தப் பொடியளுக்குத் தெரியாது.

பள்ளிக்கூடம் லீவு எண்டாலே, நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஏதாவது புதுசாப் பிளான் பண்ணுறதுதான் வழமை. இந்த முறை என்ன பிளான் என்று இன்னும் கதைக்கவில்லை என்ற குறையைத் தீர்க்கத்தான்... இந்த ராகுவும் கேதுவும் வந்திருக்கு என்று... எனக்கு அப்ப விளங்கேல. அவர்கள் ஆரம்பிக்கும்போதுதான் ...... எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கிச்சு.

என்ர வீட்டுக்குப் பக்கத்து வீடு ..... கவிதா வீடு. இந்தக் கவிதா வேறு யாருமில்லை. எங்கள் வகுப்புப் பிள்ளைதான். எங்கள் சகோதர பாடசாலையில்தான் படிக்கின்றாள். ஆனால் ரியூசனில ஒன்றாகத்தான். அந்த வயதுக் காலகட்டத்தில் எங்கள் வயதுப் பிள்ளையள... அதாவது, எங்கட வகுப்புப் பெட்டையள எதிரியை விட மோசமாகத்தான் பார்க்கிறது. பக்கத்து வீடாக இருந்தாலும் கொலர்சிப் முடிஞ்சு ஆண்டு-6 க்கு போனாப் பிறகு.... இந்தக் கவிதாக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை எதுவுமே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! நான் முறைக்கிறனோ... இல்லையோ... அவள் என்னைப் பார்த்து சிரிக்கிறதே இல்ல! என்ற கடுப்பு எனக்குள்.

இப்பிடித்தான் எங்கட பெடி பெட்டையளின்ர கதை ஓடிக்கொண்டிருந்தது அப்போது.

இப்பிடியான வில்லங்கமெல்லாம் இருக்க... ரவியும் கார்த்தியும், அதுக்குள்ளையும் ஒரு வில்லங்கத்தை கொண்டுவாற மாதிரி புதுப் பிளான் ஒண்டை அவிட்டு விட்டாங்கள்.

"மச்சான் !அந்தக் கோழி எங்கையடா..?" என தொடங்கினான் கார்த்தி. "நானும் அதைத்தான்டா தேடுறன். இண்டைக்கெண்டு கண்ணில பட மாட்டன் எண்டுறார் மைனர்" என சொல்லிக்கொண்டே அங்குமிங்கும் சுத்தி தன் பார்வையை சுழலவிட்டான் ரவி.

எனக்கு ஒண்டுமா விளங்கேல. "என்னடா எந்தக் கோழியத் தேடுறீங்கள்? கவிதாவையோ? இது எப்பயில இருந்து மச்சான்?" என சிரித்துக்கொண்டே கேட்டேன்.

உனக்கு விசரோடா? அந்தக் கவிதாவை வச்சு கவிதையோ எழுதுறது? எனக் கார்த்தி சொல்ல,

அடேய்! உன்ர பக்கத்து வீட்டுக்காரியை... ஒருக்கா எங்களைப் பார்த்து சிரிக்கச் சொல்லன்டா! அதுக்குப் பிறகாவது கவிதாவை வச்சு கவிதை எழுதுறதப் பற்றி நான் யோசிச்சு முடிவெடுக்கிறன்.... என நக்கலடித்தான் ரவி.

நாங்கள் தேடினது, அண்டைக்கு உன்ர வீட்டு மதிலில நிண்டிச்சடா... அந்த செங்கலர்ச் சாவல்! அந்த சேவல் கோழியை உனக்கு ஞாபகம் இருக்கே...? எனக் கேட்டான் கார்த்தி, என்னைப் பார்த்து.

அடேய்....! அது கவிதா வீட்டுச் சாவலடா.... !!! என அதிர்ச்சியோடு பதறிக்கொண்டே சொன்னேன்.

ஒரு நாளைக்கு பத்துத் தடவை "பா பா... பே பே..." என பாட்டுப் பாடி அந்தக் கோழிக்கு அரிசி போடுறதுதான் கவிதாக்கும் அவளின்ர அம்மாவுக்கும் பொழுதுபோக்கு.

கவிதா வீட்டுக் பேட்டுக்கோழி அஞ்சு ... எங்கட வீட்டோட நாலு, அக்கம் பக்க வீடுகளென உள்ள அத்தனை வீட்டு ஊர் சுற்றும் பெண் கோழிகளுக்கும் இந்த செங்கலர்ச் சாவல்தான் மன்மதன். அந்த திமிரிலயும், அத்தனை வீட்டு புடையல் அரிசியிலயும் திண்டு கொழுத்து அவர் மூண்டு கிலோக்கு மேல உடம்பேத்தி வச்சிருந்தார். அதுக்கு கவிதா வைச்ச செல்லப் பெயர் "பிரசாந்த்" என்பது வேறொரு கதை.

இந்த ராகு,கேது எனக்கு ஒரு பெரிய பிரச்சினையைக் கிளப்பப் போகுதுகள் என்பது மட்டும் அப்ப விளங்கிச்சு.

கார்த்தியே தொடர்ந்தான்....

"அது கவிதா வீட்டுச் சாவலோ..? நல்லதாப் போச்சு மச்சான் ...! ஒரு அஞ்சு போடுடா!!" என ரவியும் அவனும் ஆளுக்கால் உள்ளங்கைகளை அடித்துக் கொண்டார்கள்.

எனக்கு எட்டில சனியைக் குடுத்துட்டு உவங்களுக்கு அஞ்சு வேற தேவையாக் கிடக்கு என மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டேன். ஆனால், இண்டைக்கு ஒரு முடிவோடுதான் இவங்கள் வந்திருக்கானுகள்.... என்று மட்டும் நல்லா விளங்கிச்சு .

"சரி உங்கட பிளானை முதலில சொல்லுங்கோடா...!" என நான் கேட்க,

ரவி, தன்ர மாஸ்ரர் பிளானை விலாவாரியா விளக்க... மண்ணில் படம் வரைந்து ஒரு குச்சித் தடியோட நின்று... அவன் ஆரம்பித்த விதத்தினைப் பார்த்தால்.... பால்ராஜ் அண்ணை கூட கொஞ்சம் யோசிப்பார். அப்பிடி இருந்திச்சு!!!

"நாங்கள் இப்ப இந்த இடத்தில ... அதாவது கவிதா வீட்டுச் சுவர்ப்பக்கமா உள்ள இந்த இடத்தில நிக்கிறம். இன்னும் சரியா ஏழு மணித்தியாலத்தில... சரியா பின்னேரம் ஆறரை மணிக்கு அந்தச் சாவல் இந்த கிழக்குப்பக்க சுவரோட இருக்குற நெல்லி மரத்தில படுக்குறதுக்கு வரும். நாங்கள் வழமையா வாற பின்னேர றோட்டு ரோந்தினை முடிச்ச கையோட... இதே இடத்தில சரியா ஏழு மணிக்கு சந்திக்கிறம். அதுக்குப் பிறகு தயாராக வைக்கப்பட்ட எங்கட சைலன்ட் ஆயுதம் ஈரச் சாக்கினை எடுத்து... இந்தச் சுவரில் ஏறி அந்த செங்கலர் மைனரை 'லபக் லபக்' என்று மடக்குறம்; சுடச் சுட விருந்து போடுறம் . புலனாய்வு தலைவர் கார்த்தியின் தகவல்களுக்கு நன்றிகள்...! " என ஒரே மூச்சில் ரவி சொல்லி முடிக்க, எனக்கோ இதயம் 'பக் பக்' என்று அடித்து... பதற ஆரம்பித்தது.

அடப்பாவிகளா... கள்ளக்கோழி பிளானல்லோ போட்டிருக்கிறியள்! அதுவும் எங்கட கவிதா வீட்டில. மாட்டுப்பட்டா செத்தம்! ஏனடாப்பா இந்த குப்பி அடிக்கிற விளையாட்டு...?

வேணாம் மச்சான்!! வேற ஏதாவது பிளான் போடுங்கடா!!.... என்றேன். ஆனால், கவிதா வீட்டுக் கோழிதான் வேணும்.... எண்டு அடம்பிடிச்சாங்கள், அந்த பாசக்கார கிரகங்கள்.

சரி... கள்ள மாங்காயில ஆரம்பித்து கள்ளக்கோழி வரைக்கும் இதுதான் ருசிக்கும்! என்று வந்து நிக்குது .... பிரச்சினையைப் பிறகு பார்ப்பம். இப்ப உவங்கள் சொல்லுறதுக்கு தலையாட்டினால்தான் எனக்குரிய கோழித் தொடைப் பங்காவது கிடைக்கும்... என முடிவெடுத்தவனாய், "சரி செய்வம்" என்று சொன்னன்.

இரவு ஏழு மணி... அப்பா அப்ப கொழும்பில இருந்தபடியால், எனக்கு கொஞ்சம் பயம் குறைவு. கவிதாவின்ர அப்பா பலவருடங்களாக சுவிஸில. அடி வாங்குறதுக்கு சான்ஸ் குறைவு என்ற தைரியத்தில .... எங்கட கள்ளக்கோழி ஒபரேசன் வெற்றிகரமா அமைஞ்சுது. நெல்லி மரத்தில் சயனத்தில் இருந்த மைனர் செங்கலர் சாவல் மாட்டுப்பட்டார்!

சத்தமில்லாமல்... யாருமில்லாத என் அம்மம்மா வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நளபாகம் நடந்தேறி.... சுபாஸ் பேக்கரி பாணும், கோழிக்கறியும் என.... தடயமே இல்லாமல் வழித்துத் துடைக்கப்பட்ட விருந்து முடித்த திருப்தி இந்த மூவேந்தரிற்கு. பல நாள் பிளானை வெற்றிகரமா முடிச்ச திருப்தியோடு, வெற்றிச் சிரிப்போடு விடைபெற்றனர் கார்த்தியும் ரவியும்.

இந்தக் கள்ளக்கோழி விருந்து நடந்து, சில நாட்களின் பின்னர்....

எனக்கு மத்தியானச் சாப்பாட்டில அவிச்சோ.. பொரிச்சோ... எப்பிடியோ... ஒரு முட்டை இருந்தே ஆகோணும்!!

அண்டைக்கு மத்தியானம் என்ர சாப்பாடு... நிலவில்லாத அமாவாசை நாள்போல... முட்டையில்லாத தட்டோடு வர........

எனக்கு செமக் கோபம்!!!

அம்மா! முட்டை எங்க? எனக் கோபமாக் கேக்க....

அதுக்கு...........அப்ப அம்மா சொன்ன பதில்..... எனக்கு தூக்கிவாரிப் போட்டுது!

"தம்பி... உனக்குத் தெரியாதே... கவிதா வீட்டுச் சேவலை யாரோ நாசமாப்போன கோழிக்கள்ளர் பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம். அந்தப் பெட்டை செல்லமா வளர்த்த சாவலாம் அது. அது வேற அழுதுகொண்டு கிடக்காம். அந்தச் சாவல் ஒண்டுதான் இருந்திச்சு. இப்ப அதுவும் இல்லாததால எங்கட வீட்டுக் கோழியும் முட்டை போடுதில்ல. கவிதான்ர அம்மா அந்தோனியார் கோயிலில இழைக்கட்டியிருக்காவாம். எடுத்தவங்களுக்கு கையழுகப் போகுது!!!" எண்டா அம்மா.

அய்யய்யோ....... என் கையை ஒருதடவைக்கு பலதடவை பார்த்துக் கொண்டேன். நல்லாத்தான் இருந்திச்சு.

ஆனால் ஒருநாள் விருந்துக்கு ஆசைப்பட்டு பல நாள் முட்டை போச்சே.

அப்புறம் என்ன,

அந்தோனியாருக்குப் பயந்து... பாவ மன்னிப்புக்காக,

மூவேந்தர்களின் அன்பளிப்பாக...

ஒரு மைனர் மாப்பிள்ளையை இறக்கினம்.

அதுக்குப் பிறகுதான்... கவிதாவின்ர முகத்திலயும் கொஞ்சம் சிரிப்பைப் பார்க்க முடிஞ்சுது.

அப்பதான் எனக்கு விளங்கிச்சு...

எனக்கும் அவளுக்கும்.... ஒரே ரேஸ்ட் எண்டு.

அவளுக்கும் முட்டை இல்லாமல் சோறு இறங்காதாம்.

இதுக்குத்தான் சொல்லுறது........ எதையுமே ஒழுங்காப் பிளான் பண்ணிச் செய்யோணும் எண்ணு...!

***********************************************************************************************

(முற்றும்)

***********************************************************************************************

க (வி ) தைக்க ஏன் இவ்வளவு காலம் ? பட்டைக் கிணறை கலக்கி இறைக்க , இறைக்கத் தான் நல்ல தண்ணி வரும் . உங்கடை எழுத்தில நல்ல முன்னேற்றம் தெரியுது . எங்கை கோத்து , எங்கை பிரிக்கிற விளையாட்டு இப்ப உங்களுக்குத் தெரியுது (அது தான் நீல நிறப்பகுதி ). மேலும் பல படைப்புகளைப் உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன் :) :) :) 9 .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பதினொராவது பச்சை என்னுடையது.

கவிதை

எழுதும்

கவியும் அழகு

கதையும் அதைவிட அழகு

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

Posted

கவிதை, உங்களை மீண்டும் களத்தில் கண்டது, மிகவும் மகிழ்ச்சி!

பேட்டுக் கோழிகள், முட்டையிடுவாதற்கு, சேவல்கள் அவசியமில்லை!

அவை சாம்பலில் குளித்தும் முட்டைகளிடும் வல்லமை உடையன! ஆனால், அந்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொரிக்காது!

கவிதா - கவிதை

பொருத்தம் நன்றாகத் தான் இருக்கின்றது! :icon_idea:

பச்சை நாளை போடுகின்றேன்!

புங்கையூரன்!

கவிதையை சேவலாவும் கவிதாவை பேடாவும் நினைச்சுப் போடாதையுங்கோ...! :oஒரு றைமிங்குக்காக வைச்ச பெயர்தான் அது. :wub: :lol:

கொஞ்சநாளா சாம்பற் கோழிகளின் முட்டைகளை அடைகாக்குற மாதிரி ஒரு வேலை வந்ததில் நேரம் கிடைக்கவில்லை. விட்டகுறை, தொட்டகுறை என நிறைய வேலை இருக்கு. தொடரவேணும்! :)

மிக்க நன்றி நண்பரே...! :)

Posted

அம்மம்மா வீட்டுப் பக்கத்தால் கோழிக்கறி வாசனை வெளி வந்திருக்குமே... அக்கம் பக்கம் யாரும் இல்லையோ....

ஊர்க்கோழி வாசனை பத்து வீடுதாண்டியும் மணக்கும். :wub: ஆனால் எங்கட நல்ல காலத்துக்கு அப்ப அடிச்ச சோளகக் காத்தில ... அக்கம் பக்கம் மணந்து மோப்பம் பிடிக்க முன்னம், வேகமா ஓடிப்போச்சு. அதனால தப்பினம். :lol: :lol:

Posted

நல்ல கதை கவிதை. ஒரு பச்சை!

மிக்க நன்றி அலைமகள் அக்கா! :)

Posted

கவிதை நல்ல கதை, நன்றாக இருக்கிறது,கள்ளகோழி2 பிடிக்கிறது பிடிக்கிறது ஒரு திரில்லா இருக்கும்........., ஒரு பச்சை

உடையார்..! கள்ளக்கோழி பிடிக்கைக்குள்ள உண்மையில திரில்லாத்தான் இருக்கும்!? ஆனா, கோழி மட்டும் சத்தம் போட்டிச்சுது... எண்டு வைச்சுக்கொள்ளுங்கோவன், :o அதுக்குப் பிறகு நடக்குறது.... அதைவிடத் திரில்லா இருக்கும். :lol:

Posted

நாங்கள் ஊரிலை தொழிலாய் செய்ததை நீங்கள் பொழுது போக்காய் செய்திருக்கிறீங்கள் அவ்வளவுதான். :lol: :lol:

Posted

கள்ளக் கோழி கறிக்கு ருசி கூடவாம்.... :lol: .......மூன்றாவது எனது பச்சை .

மிக்க நன்றி நிலா அக்கா! :)

கோழியில மட்டும் இல்ல... எல்லாத்திலயும் இந்தக் "கள்ள" என்பது கொஞ்சம் ருசி கூடத்தானாம். :wub: :lol:

"களவும் கற்று மற" :)

Posted

கவிதையின் கதை சுப்பர்!

தங்களின் பாராட்டுக்கள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. மிகவும் நன்றி யாழ்கவி...! :)

Posted

உங்கள் கதை நன்றாக இருக்கிறது. கதையின் சாரத்தில் நகைச்சுவையும் இழையோடுவது அருமை. பள்ளிக்கால பருவங்களிற்கு அமைவான குறும்புகள் எல்லோர் மனதிலும் பள்ளிக்கால வசந்தங்களை அள்ளித்தெளிக்கும் என்பது நிஜம். பாராட்டுக்கள்...

மிக்க நன்றி கல்கி! :) பள்ளிக்கால குறும்புகள்,ஞாபகங்கள் இன்னும் பசுமையாய் நெஞ்சில் பதிந்திருக்கின்றன. அது ஒரு அழகிய காலம்.

ஆனால், இன்று... மனதளவில் எல்லாமே மாறுபட்டு நிற்கும்பொழுது, அதை நினைத்து ஏங்குகின்றோம்.

பள்ளிக்கால கதைகள் நிறைய இருக்கு. அதிலிருந்து சுவாரசியமான இன்னொரு கதையை நேரம் கிடைக்கும் போது கொண்டுவருகின்றேன். :)

Posted

சுபாஸ் பேக்கரியோ???? அப்ப நீங்களும் நெல்லியடிப்பக்கமோ???? :rolleyes:

7

ஜீவா...! அந்த சுபாஸ் பேக்கரிப் பாண் பருத்தித்துறைக்கும் சைக்கிளில வரும் தெரியுமோ?! :)

நன்றி ஜீவா! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
    • 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன.  அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே.  ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.          
    • யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலார் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.   யாழ்ப்பாணம் - சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது,  அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்திருக்கிறது.   சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலார் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.   எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் சிறிதும் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலார் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார். அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர். இதேநேரம் -  இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் 11 ஆம் திகதி நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=197232
    • நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்  மொஹமட் ரிஸ்வி சாலிஹ்இ தலைமைத்துவத்தில் நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திஇ தனது தொழில்முறை தகுதிகள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் அவர்இ சான்றிதழ்கள் மூலம்இ தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரியில் 1986இல் பெற்ற ஆடீடீளு பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் லாரிங்கோ ஓட்டோரினோலஜி டிப்ளோமா (னுடுழு) உட்பட தனது தகுதிகளை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். https://tamilwin.com/article/deputy-speaker-of-parliament-s-qualifications-1734102374
    • 1. ஊழியர் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கினால் - அதை வழக்கு போட்டு விலக்க வேண்டும். 2. பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் எங்கேயும் திறந்த வீட்டில் குதிரை நுழைவது போல் நுழைய முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்க்கு பொலிஸ் அதிகாரம் இல்லை. பொலிஸ் கூட சில நடைமுறைகளை பின்பற்றியே உள்ளே நுழையலாம். 3. இவர் ஒட்டு மொத்த யாழ் மாவட்டத்தின் பிரதிநிதி. சாவகச்சேரி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றார். அவ்வளவே.  நாளைக்கு அருச்சுனா உங்கள் வீட்டு குளியறைக்குள் நுழைந்தால் - அவரை தடுப்பது மக்களை தடுப்பது போல் என நினைத்து அனுமதிப்பீர்களா? எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.