Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரோஹரா சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரோஹரா அரோஹரா எண்டு சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை

ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோயில்த் தேர் கட்டாயம் போக வேணும்

மனைவியும் பிள்ளைகளும் ஒரே நச்சரிப்பு. தாங்கேலாமல் சரி போவம் என்டாச்சுது.

பிள்ளைகளுக்குக் கோயிலில் ஈடுபாடு இல்லை . ஆனால் அங்கே வழங்கப்படும் அன்னதானம்

மற்றும் மோர் என்பன பிடிக்கும். எனக்கு இப்படியான சன நெரிசலில் அவதிப்பட விருப்பமில்லை.சிலவேளைகளில் பக்தி தானாக வரும்போது ஒரு திங்களோ செவ்வாயோ

சனக்கூட்டம் இல்லாத நாளாகப் பார்த்துச் செல்வது வழக்கம்.

விடிய வேளைக்கு நித்திரையால எழும்பினால் அம்மன் கோயிலுக்குப் போகலாம்

என முடிவெடுத்தாகி விட்டது. காலமை முழிச்சுப்பார்த்தால் ஒரே மழையும் குளிரும்.இந்த மழைக்குள்ள ஆர் கோயிலுக்குப் போறது எண்டு நான் புறு புறுக்க

கோயிலடியில மழை இருக்காது வாங்கோ போவம் எண்டு விட்டுக்காரர் முடிவெடுத்துவிட்டினம். இரண்டு குடையைக்கையில எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டாச்சுது.

காரை வேக வீதியில் ஏத்தினால் கெதியாகப் போகலாம்.ஊருக்குள்ளால போனால்

நேரம் அதிகம் எடுக்கும். மனைவியின் ஆலோசனைப்படி கோயில் இருக்கும் ஹம்

என்ற நகரத்திற்கு வேகமாக வந்து செர்ந்தாச்சுது.

கோயில் கிட்ட நெருங்க நெருங்க வாகன நெரிசலும் கூடிவிட்டது.

ஆமை வேகம்.ஒரு மாதிரித் தவண்டு உருண்டு வாகன நேரிசலுக்காலை தப்பி வந்துட்டோம் .

இனி வாகனம் நிப்பாட்ட கோயிலுக்கு கிட்டவாக ஒரு இடம் வேணும்.

ஐந்து வருடங்களின் முன்னர் கோயிலுக்கு மிக அண்மையாக வாகனங்களை நிப்பாட்ட அனுமதி இருந்தது. எங்கடை சனங்கள் பக்கத்தில் இருந்த தனியார் காணிகளிலும் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகளிலும்

கார்களை நிப்பாட்டி விட்டுக் கோயில் திருவிழா முடிய அந்த இடங்களை அசிங்கமாக்கி விடுவார்கள்.

உணவு எச்சங்களும் தண்ணீர்ப் போத்தல்களும் வாகனத் தரிப்பிடத்தை நிரப்பிவிடும்.

குழந்தைகளின் அவசரத்திற்கும் வாகனத் தரிப்பிடமே கழிப்பிடமானது.

மாம்பழப் பெட்டிகளும் மரக்கறி வாங்கிய பைகளும் காற்றில் பறக்கும் பட்டமாகின. உரிமையாளர்களின் கொந்தளிப்பால் கோயிலுக்கு அண்மையில் வாகனம் நிப்பாட்டுவதற்கு அனுமதிமறுக்கப்பட்டது.

கோயிலுக்கு மிக அண்மையில் இருக்கும் வீதிகள் எல்லாம் தேர்த் திருவிழா அன்று முடக்கப்பட்டு காவற்துறையினரின் கண்காணிப்பின் கீழ் வந்தது.

தற்சமயம் கோயிலின் இரண்டு மைல் சுற்றளவில் வாகனங்கள் நிறுத்துவது கடினம்.

ஒரு மாதிரி காவற்துறையின் கட்டளைப்படி ஒரு தரிப்பிடத்தில் வாகனத்தை

நிறுத்திவிட்டு கோயிலுக்கு நடந்தோம். மழை விட்டபாடாக இல்லை.குடை கொண்டு வந்ததால் தப்பினோம். ஆனாலும் குளிர் கைகள் விறைக்கும் அளவிற்கு இருந்தது. :)

ஊரிலை மார்கழித் திருவிழா எண்டால் மழை குளிர் எல்லாம் பார்ப்பதில்லை.

ஊரெல்லாம் வெள்ளம் பாய்ந்தோடினாலும் அந்த வெள்ளத்தில் நீந்தியே கோயிலடி

வரைக்கும் செல்லுவோம் :lol: .பின்னர் கோயில்க் கேணியில் ஒரு குளியல்.நனைந்த வேட்டிகளை

வடலியில் காயப்போட்டால் ஐந்து நிமிடத்தில் வேட்டி காய்ந்துவிடும். அது ஒரு கனாக்காலம். :rolleyes:

ஒரு மாதிரிக் கோயிலை அண்மித்ததும் ஒலிபெருக்கிச் சத்தம் காதைப் பிழந்தது.

" தயவு செய்து கோவிலுக்குள் ஒருவரும் தங்கி நிற்க வேண்டாம். உள்ளே இருப்பவர்கள் தயவு செய்து வெளியே வரவும்.

வெளியிலிருந்து ஒருவரும் உள்ளே செல்ல வேண்டாம்."

இப்படி ஐயரும் அறிவிப்பாளரும் மாறி மாறி அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன நடந்தது எண்டு எங்களுக்கு முதல்ல விளங்கவில்லை.

யாராவது குண்டுப் புரளியைக் கிளப்பி விட்டார்களோ என நான் விசாரிக்க

எதிரில் வந்தவர் சொன்னார்

" மழைக்குச்சனங்கள் எல்லாம் கோயிலுக்குள் ஒதுங்கி விட்டுதுகள்." :lol::D

விடுப்புப் பாக்க வந்தவர்களும் விரதம் இருந்து வந்தவர்களும்

காவடி எடுக்க வந்தவர்களும் கல்யாணப் பெண்ணைத் தேடி வந்தவர்களும்

கோயிலை விட்டு வெளி வராமல் அடம்பிடித்துக் கொண்டிருக்க மழையும் விடாமல்

தன் வேலையைச் செய்து கொண்டிருந்தது. இவ்வளவு சனத்தையும் தாண்டி அம்பாள்

எப்படி வெளியில் வந்து தேரில் ஏறி பக்த கோடிகளுக்குத் தரிசனம்

கொடுத்தாவோ தெரியவில்லை. :wub:

கோயிலுக்குள்ளபோற விசப்பரீட்சையில் பங்கெடுக்காமல் விறுக்கு விறுக்கெண்டு நேரடியாக

கடைப்பகுதிக்குள்ள போயாச்சு. வழமைபோல் எல்லாத் தொலைக்காட்சிக்காரரும்

உடுப்புக்கடைகளும் மரக்கறிக் கடைகளும் சாப்பாட்டுக்கடைகளும்

தொலைபேசி அட்டைகள் விற்பனை நிலையங்களும் என சுன்னாகச் சந்தை போலக்

காட்சியளித்தது. ஓயாது பெய்த மழைக்கும் அஞ்சாமல் பக்தகோடிகள் குடைகளின் கீழ் தஞ்சம் புகுந்து

கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இலவசத் தொலைக்காட்சியினர் வெறுமையாக இருந்தது கவலைக்குரிய விடயம்.

இன்னொரு தொலைக்காட்சியினர் கடை திறந்தும் காட்டுகள் வரவில்லையாம்.

நீயா நானா என அவர்களிடம் பக்த கோடிகள் நிறைந்திருந்தும் காட்டு வந்து சேராதது பரிதாபம்.

பகல் பதினோரு மணிவரை நான் அங்கு நின்றேன் அதுவரை கடை மட்டும் தான் திறந்து இருந்தது.

கல்லா வெறுமையாக இருந்தது.

அப்போது சற்றுத் தள்ளி ஒருவர் லேபாரா விளம்பரக் குடையின் கீழ் தன்னை மறைத்துக் கொண்டு

யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார். குனிந்து நிமிர்ந்து பார்த்து

அவரை நான் அடையாளம் கண்டு விட்டேன். இதுவரை அவரை நேரில் கண்டதில்லை.

யாழில் உள்ள படத்தின் மூலம் தான் அவரை அடையாள படுத்திக் கொண்டேன்.

அதே மெல்லிய தாடி அதே கிருதா அவர்தான்.முதன் நாள் இணையத் தளங்கள்

செய்திகளின் தலைப்புகளை இனவாதம் துண்டும் வகையில் இடக்கூடாது என வாதிட்டவர்.

நல்ல எழுத்தாளர். இப்படியொரு எழுத்தாளரை நேரில் காண வைத்த அம்மனுக்கு ஒரு வணக்கம்.

எனக்கு அவரைக் கண்டதும் ஏதாவது கதைக்கலாம் எனத் தோன்றியது . நாலு தடவை அவரைச் சுற்றிச் சுற்றி

அடுத்த அடுத்த கடைகளைக் கவனிப்பது போல உலா வந்தேன். அவரோ இன்னும் ஆரம்பத்தில் கதைத்தவருடன்

கதைத்துக் கொண்டிருந்தார். சரி ஏன் குழப்புவான் சில வேளை அது அவர் இல்லாமல் வேறு யாரோ கூட அவரமாதிரி இருக்கலாம் என நினைத்துக் கொண்டு அப்பால் நகர்ந்தேன்.

வந்தனாங்கள் கொஞ்ச மரக்கறியையாவது வாங்குவம் எண்டு மனுசி கடைக்குள்ளை போனவ

திரும்பி வந்தவுடன் வாகனத் தரிப்பிடத்தை நோக்கி நடந்தோம். எதிரே அப்போதும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

ஊரில் வயலில் வேலை செய்யும் பெண்களைப் போலவே இங்கும் மழையில் புடைவை நனைந்துவிடாமல் முழங்கால் வரை தூக்கியபடி பெண்கள் நடந்து வந்தது மீண்டும் ஊரை நினைவிற்குக் கொண்டு வந்தது. அதிகமானவர்கள் எங்களைப் போலவே அதிக துரத்தில் வாகனத்தை நிறுத்தியவர்கள்.ஆலயம் எப்போது கண்ணில் படும் என அவர்கள் நினைத்தது என் மனதில் பட்டது. ஒரு இருபது முப்பது நிமிடங்கள் நடந்ததும் வாகனத் தரிப்பிடம் வந்தது.

அப்போது சற்று வயதானவர் எங்களுக்குப் பின்னால் வந்த ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டார்

" தம்பி கோயிலுக்கு இன்னும் கன தூரம் நடக்க வேண்டுமா?"

அதற்கு மற்றவர் சொன்னார்

"" அரோஹரா அரோஹரா எண்டு சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை""

"" அலுத்துச் சலித்து நடந்தால் அரை மணித்தியால நடை"" :lol: :lol: :lol:

அதற்கு வயதானவர் புன்னகையுடன் ஆளை விட்டால் காணும் என அந்தப் பக்கம் சென்று விட்டார்.

நாங்களும் மழையைத் திட்டிக் கொண்டு வீட்டுப்பக்கம் வாகனத்தைச் செலுத்தினோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் கட்டுரையை, வாசித்ததன் மூலம்.... ஹம் அம்மன் கோவில் தேருக்கு நேரே... போன உணர்வு ஏற்பட்டது. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணனைக்கு நன்றிகள் வாத்தியார்.. :D அடிக்கடி இப்பிடி எழுதுங்கோ.. :wub:

அதுபோக, ஆட்டுத்தாடிக்காரர் பக்க பகுத்தறிவுவாதியாச்சே??!! :unsure: கோயிலுக்கு எதுக்கு வந்தவர்? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாத்தியார்! நீங்கள் சங்கிலிகள் அறுபட்டவிசயத்தை சொல்ல மறந்து போனியள் :D

வர்ணனைக்கு நன்றிகள் வாத்தியார்.. :D அடிக்கடி இப்பிடி எழுதுங்கோ.. :wub:

அதுபோக, ஆட்டுத்தாடிக்காரர் பக்க பகுத்தறிவுவாதியாச்சே??!! :unsure: கோயிலுக்கு எதுக்கு வந்தவர்? :rolleyes:

13ம் திகதி புதன்கிழமை வரைக்கும் அடக்கி வாசிப்பம். :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது வாத்தியார்!

தும்பு முட்டாசும், சோனகர் விக்கிற காப்பும் தான், இல்லைப் போல!

மற்றும்படிக்கு, நம்ம சனம் அந்த மாதிரியே இருக்கினம் போல கிடக்கு!

குளிர் என்ட படியால, புலிப்பல்லும், ஓம் போட்ட சங்கிலியளும், வெளியே தலை காட்டேல்லைப் போல கிடக்கு!

.

வர்ணனை அபாரம் வாத்தியார். :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுபோக, ஆட்டுத்தாடிக்காரர் பக்க பகுத்தறிவுவாதியாச்சே??!! :unsure: கோயிலுக்கு எதுக்கு வந்தவர்? :rolleyes:

"ஊருக்குத் தான்... உபதேசம், உனக்கில்லையடி கண்ணே...." என்ற பழமொழியை நீங்க கேட்டதில்லையா இசை. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா....அம்மனுக்கு அரோகரா

  • கருத்துக்கள உறவுகள்

விவரணம் அற்புதம். வாத்தியார் ஏதாவது வானொலிக்கு நேரஞ்சல் செய்திருக்கலாம்..

ஆட்டுத்தாடிக்காரர் கறுப்புச் சட்டை போட்டுவரவில்லையா!

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் உங்கள் எழுத்தைப் பார்க்கும் போது ஊர்க் கோயிலுக்கு போக வேண்டும் என ஆசையாக இருக்குது :) ...சபேசன் மனைவி,மாமியாருக்காக கோயிலுக்கு வந்திருப்பார் இதை எல்லாம் நாங்கள் பெரிசாய் எடுக்கக் கூடாது :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அழகாய் இருக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் தம்பி

அருமையான எழுத்து

எனக்கும் இதுகள் சரிவராது

இதுவரை இந்தக்கோயிலுக்கும் போனதில்லை.

ஏன் வருடமாவருடம் இங்கு லா சப்பல் பிள்ளையார் உலாவருவார் .

ஒரு தரம் கூட போய்ப்பார்த்தில்லை.

வாத்தியார் தம்பி

நேரம் கிடைக்கும்போது இடைக்கிடை இப்படி எதையாவது கிறுக்கலாம் தானே......

தொடரட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி அண்ணா

உங்களை என் எழுத்தின் மூலம் ஹம் அம்மன் கோயிலுக்குக் கூட்டிச் சென்றிருந்தால்

அது எனக்கு மகிழ்ச்சியே :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வர்ணனைக்கு நன்றிகள் வாத்தியார்.. :D அடிக்கடி இப்பிடி எழுதுங்கோ.. :wub:

அதுபோக, ஆட்டுத்தாடிக்காரர் பக்க பகுத்தறிவுவாதியாச்சே??!! :unsure: கோயிலுக்கு எதுக்கு வந்தவர்? :rolleyes:

இசை உங்கள் உற்சாகத்திற்கு எனது நன்றிகள்.நேரம் உலகத்தின் மிகப்பெரிய சக்தி.அதை மீறி யாராலும் எதையும் செய்ய முடியாது.பகுத்தறிவாளனுக்கும் கோயில் குளத்தடியில் தான் ஞானம் பிறக்கும் :D

வாத்தியாரின் விபரிப்பு நன்றாக இருக்கிறது. இடம் மாறினாலும் சனம் மாறவில்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர்.

சின்ன வயதில் கண்ணகி அம்மன் கோயில் போய் வந்த மாதிரி ஒரு உணர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி அண்ணா

உங்களை என் எழுத்தின் மூலம் ஹம் அம்மன் கோயிலுக்குக் கூட்டிச் சென்றிருந்தால்

அது எனக்கு மகிழ்ச்சியே :D

ஹம் நகரம், எனது சிறிய தாய் மாதிரி வாத்தியார்.

நான் அந்த, நகரத்துக்கு வந்த போது... 27 தமிழ் ஆட்கள் மட்டும் இருந்தார்கள்.

இப்போது... ஒவ்வொரு வருடமும், அந்த ஊரைப் பார்க்க வேண்டும் ஆசை... இருந்தாலும்,

அம்மாளாச்சியின், அனுக்கிரஹம் கிடைக்குதில்லையே....

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! நீங்கள் சங்கிலிகள் அறுபட்டவிசயத்தை சொல்ல மறந்து போனியள் :D

13ம் திகதி புதன்கிழமை வரைக்கும் அடக்கி வாசிப்பம். :D

சங்கிலி அறுபடாத எங்கள் கோயில்த் திருவிழாக்கள் அங்கே அண்ணா இருக்கின்றது.நான் அதுவரையும் அங்கே நிற்கவில்லை. அம்மன் தேரில் ஏறமுதலே நான் வெளிக்கிட்டாச்சு.கு சா அண்ணை 13 ம் திகதிவரை ஏன் ? என்ன விசயம்? :D

நன்றாக இருக்கின்றது வாத்தியார்!

தும்பு முட்டாசும், சோனகர் விக்கிற காப்பும் தான், இல்லைப் போல!

மற்றும்படிக்கு, நம்ம சனம் அந்த மாதிரியே இருக்கினம் போல கிடக்கு!

குளிர் என்ட படியால, புலிப்பல்லும், ஓம் போட்ட சங்கிலியளும், வெளியே தலை காட்டேல்லைப் போல கிடக்கு!

குளிர் இல்லாவிட்டால் தெரிந்திருக்கும் தங்கம் ஏன் இந்த விலை விக்குது என்று :D

.

வர்ணனை அபாரம் வாத்தியார். :D

ஈசனுக்கு நன்றிகள்

அரோகரா....அம்மனுக்கு அரோகரா

புத்தனுக்கு எனது சரணங்கள்

விவரணம் அற்புதம். வாத்தியார் ஏதாவது வானொலிக்கு நேரஞ்சல் செய்திருக்கலாம்..

ஆட்டுத்தாடிக்காரர் கறுப்புச் சட்டை போட்டுவரவில்லையா!

உங்கள் கருத்திற்கு நன்றிகள் கிருபன் அண்ணா கருப்பு வெள்ளை கலக்கல்

வாத்தியார் உங்கள் எழுத்தைப் பார்க்கும் போது ஊர்க் கோயிலுக்கு போக வேண்டும் என ஆசையாக இருக்குது :) ...சபேசன் மனைவி,மாமியாருக்காக கோயிலுக்கு வந்திருப்பார் இதை எல்லாம் நாங்கள் பெரிசாய் எடுக்கக் கூடாது :lol::icon_idea:

அதையெல்லாம் பெரிசாக எடுக்கவில்லை கள உறவுகளை நேரில் காண்பதில் மகிழ்ச்சியே.நானாக அறிமுகம் செய்யவில்லை அது என் தவறாக இருக்கலாம் :)அவருக்கு என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகாய் இருக்கு....

நன்றி சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் தம்பி

அருமையான எழுத்து

எனக்கும் இதுகள் சரிவராது

இதுவரை இந்தக்கோயிலுக்கும் போனதில்லை.

ஏன் வருடமாவருடம் இங்கு லா சப்பல் பிள்ளையார் உலாவருவார் .

ஒரு தரம் கூட போய்ப்பார்த்தில்லை.

வாத்தியார் தம்பி

நேரம் கிடைக்கும்போது இடைக்கிடை இப்படி எதையாவது கிறுக்கலாம் தானே......

தொடரட்டும்

பிள்ளையார் கோயில் மட்டுமா ?

அம்மன் கோயிலும் உண்டல்லவா?

உங்கள் கருத்திற்கும் உற்சாகத்திற்கும் நன்றி அண்ணா :D

வர்ணனை அமர்க்களம் வாத்தியார். பின்னூட்டங்களும் அட்டகாசம் தான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் விபரிப்பு நன்றாக இருக்கிறது. இடம் மாறினாலும் சனம் மாறவில்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர்.

சின்ன வயதில் கண்ணகி அம்மன் கோயில் போய் வந்த மாதிரி ஒரு உணர்வு.

எங்கள் மக்கள் ஒருபோதும் மாறமாட்டார்கள்.ஒரு கணம் மாற நினைத்தாலே.....நாம் எல்லோரும் ஈழத்தில்...நன்றி தப்பிலி உங்கள் கருத்திற்கு :D

இன்று தான் வாசித்தன் வர்ணனை நன்றாக இருக்கு வாத்தியார்..

வாத்தியார்,

என்னுடன் வந்து பேசியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு உங்களைத் தெரியாது. அடுத்த முறை எங்காவது சந்தித்தால் அறிமுகப்படுத்திப் பேசுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,

என்னுடன் வந்து பேசியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு உங்களைத் தெரியாது. அடுத்த முறை எங்காவது சந்தித்தால் அறிமுகப்படுத்திப் பேசுங்கள்.

நான் உங்களைக் கண்ட நேரத்தில் நீங்கள்இன்னொருவருடன் நீண்ட நேரமாகக் கதைத்துக் கொண்டிருந்தீர்கள்.அடுத்தது நான் அங்கு அதிக நேரம் நிற்கவில்லை.வேலை காரணமாக 11 மணிக்கே வீடு திரும்பிவிட்டேன்.கட்டாயம் அடுத்தமுறை எங்காவது சந்தித்தால் உங்களுடன் அறிமுகம் செய்துகொள்கின்றேன் சபேசன் :D

இன்று தான் வாசித்தன் வர்ணனை நன்றாக இருக்கு வாத்தியார்..

உங்கள் கருத்திற்கு நன்றி அபராஜிதன் :D

ஹம் நகரம், எனது சிறிய தாய் மாதிரி வாத்தியார்.

நான் அந்த, நகரத்துக்கு வந்த போது... 27 தமிழ் ஆட்கள் மட்டும் இருந்தார்கள்.

இப்போது... ஒவ்வொரு வருடமும், அந்த ஊரைப் பார்க்க வேண்டும் ஆசை... இருந்தாலும்,

அம்மாளாச்சியின், அனுக்கிரஹம் கிடைக்குதில்லையே....

27 பேர் இருக்கும்போது நீங்கள் அங்கு இருந்தால் அம்மன் கோயில் ஆரம்பித்த காலத்தில் அங்கு இல்லையா? :D

வாத்தியாரின் இந்தக் கட்டுரையை வாசித்த பின் அவர் மேல் மிக மோசமாக கோபம் வருகின்றது. கெட்ட வார்த்தைகள் கூடாது என்பதால் பேச முடியவில்லை அவரை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.