Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை என்னெண்டால்...

Featured Replies

அவனது மாசறாட்டி நிறுத்தப்படுவதற்கு முன்னரே ஓடிவந்து காத்து நின்ற வலே சாவிகளைப் பற்றிக்கொள்ள, மகசீன் ஒன்றின் அட்டைப் படத்தில் இருந்து விழுந்தவர்களாக அவனும் அவளும் அந்த ஆடம்பர உணவகத்துள் நுழைகிறார்கள். மேற்றடீ ஓடிவந்து அவனது பெயரைக்கூறி அதியுச்ச மரியாதையினை உடல்மொழியில் காட்டி வரவேற்று, அவளையும் குழைந்து, அவர்களது இருப்பிடம் அழைத்துச் செல்கின்றான். உணவகத்தில் அமர்ந்திருந்த அவனை ஒத்த தரத்தினர் உடல்மொழியில் அவன் தங்கள் தரத்தவன் என்பதை காட்டிக்கொள்கின்றனர். பலர் அவனின் தம்மை நோக்கிய பார்வையினைத் தமக்கான அங்கீகாரமாகக் கருதுவது வெளிப்படையாய்த் தெரிகிறது. அவனும் அவளும் அமர்ந்து கொள்கின்றனர். ஆர்மானி சூட்டின் பொத்தானைக் கழட்டியபின் ஒரு கையின் கவ்ளிங்ஸ்சை மறுகரத்தால் உறுட்டியபடி அவளைப் பாhக்கிறான். கவ்ளிங்சை மறைத்துப் போட நினைத்து பத்தாயிரம் டொலர் மணிக்கூடு எட்டிப்பார்கிறது. மேற்றடீ மாறாத குழைவுடன்,

'உங்கள் செலரில் இருந்து வைனினை எடுத்து வரவா? அல்லது எங்களதைப் பார்கிறீர்களா?' என்று அவனைக் கேட்கிறான்.

அலட்சியமாய் வேறொரு வைனின் பெயரைக்கூறி அதைக் கொண்டுவருமாறு கூறிவிட்டு அவளை நோக்கித் தனது ஆடம்பரப் புன்னகையினைச் சிந்துகிறான். ஏதேதோ பரிமாற்றங்கள், என்ன உணவென்று பெயரை வைத்துக் கண்டுபிடிக்க முடியாத பெயர்கள் என ஆடம்பரத்தின் சிகரத்தில் அவர்கள் பொழுது கரைகிறது. சம்பாசனைகள், உடல்மொழிகள் கடந்து வாசலிற்கு வர, மாசறாட்டி அவர்களிற்காய்க் காத்துநிற்கிறது. பல பத்தாண்டுகளைக் கடந்தும் சுவை குன்றாது மிளிரும் மேற்கத்தேய கிளாசிக் இசை காரிற்குள் அளவான ஒலியில் பரவுகிறது.

நகரின் மையத்தின் விலையுயர் கொண்டோவின் பென்ற்கவுஸ் ஒன்றில், மாசறாட்டி இடைநிறுத்திய கிளாசிக் இசை தொடர்கிறது. இரு றோபோட்டுக்களைப் போல் அவர்களது தேகங்கள் உடற்பயிற்சியினால் இறுகியவையாய்த் தெரிகின்றன. பல்வேறு சுதிகளில் அமைந்த பல்வேறு ஒலிகளைத் தொடர்ந்து றிமோட்டினால் இசையும் ஒளியும் நிறுத்தப்பட்டு, இருள் அவர்களின் உறக்கத்தை அறிவிக்கிறது.

ஏறத்தாள கிழமையின் ஒவ்வொருநாளும் இவ்வாறு தான் அவனிற்கு நிறைவிற்கு வரும். இருமாதங்களிற்கொருமுறை அவனுடன் பயணிக்கும் பெண் மாறியிருப்பாள். உணவகங்கள் உடைகள் மாறிக்கொண்டிருக்கும். சில நாட்களில் தனது மாசறாட்டியைத் தான் ஓட்டிச்செல்வான், சில நாட்களில் லிமோவில் செல்வான். சில நாட்கள் உணவின் பின் கழியாட்டம், ஓப்றா, திரைப்படம் என்று செல்வான் மற்றையபடி அவனது வழமை ஒரேவாறானதாயே இருக்கும்.

***

நகரின் வறுமை மையம். வெள்ளிக்கிழமை இரவொன்று. ஒரு சீன உணவகம். அதன் சுவர்களில் பழைய சுவர்த்தாள் அங்கங்கே உரியப் பார்க்கின்றது. கதிரை மேசைகள் போடப்பட்டிருக்கின்றன. சியேர்சில் விற்பதைப்போன்ற சாதாரண உடைகளுடன் அவன் உள் நுழைந்து ஒரு கதிரையில் அமர்கிறான். ஐந்து நிமிடம் கழித்து ஒரு சீனச் சிப்பந்தி வந்து மங்கிப்போன ஒரு உணவுத்தாளை அவன் முன் வைத்து விட்டு சென்று ஒரு நிமிடம் கழித்து மீண்டும் வந்து நீரினை குவளைக்குள் ஊற்றியபடி என்ன உண்கிறாய் என்கிறான். எவ்வித வரவேற்போ, சிறு சம்பாசனையயோ அறவே அங்கு காணப்படவில்லை. விருந்தாளி, தாளைப் பார்க்காது தனக்கு உறைப்புப்புளிப்பு சூப்பும் கன்ரனீஸ் ச்சௌமினும் வேண்டும் என்கிறான். சிப்பந்தி எதையும் கூறாது சமையலறை நோக்கிச் செல்கிறான்.

வெள்ளிக்கிழமையிரவாய் இருந்தும் இவன் மட்டுமே அந்த உணவகத்தில் இருக்கிறான். ஒளி மங்கலாய் இருக்கிறது. சிப்பந்தி சூப்பைக்கொண்டுவந்து வைத்துச் செல்கிறான். ஒரு கரண்டி சூப் வாயில் வைத்ததும் ஒரு புன்முறவல் இவனது முகத்தில் படர்கிறது. அவன் மனதுள் கரியோக்கித் திரைபோல வசனங்கள் ஓடுகின்றன:

'சூப் குடிக்கிறேன். இதைச் சூப் என்று தான் விற்கிறார்கள்.

சீன உணவு விற்கப் பிரஞ்சுப் பெயர் தேவைப்படவில்ல!

இங்கு சூப் குடிப்போர் சூப் குடிக்க வருவதனால், விலை மலைப்பாயில்லை.

ஒரு வாழ்நாளின் தேட்டங்கள் முழுவதும் சேரினும், அக்குவியல் தேடியவனை விஞ்சுமா?

வங்கிக்கணக்கா அக்கணக்கினை வைத்திருப்பவனா பெரியவன்?'

***

இரண்டு பிள்ளைகளும் கணவன் மனைவியும் வாழும், இரண்டு கறாச் நாலு அறை வீடுகளின் பகுதி ஒன்று. பனி நன்றாகத் தூவி ஓய்ந்திருந்தது. தெருவின் பனி வழிக்கும் வாகனம் சற்று முன் தான் கடந்து போயிருந்த நிலையில், வீடுகளின் முன் பனிவரம்புகளோடு மக்கள் போராடிக்கொண்டிருந்தார்கள். அப்போது தான் பனிவரம்பும்பை அப்புறப்படுத்திய திருப்த்தியோடு ஒருவன் வெற்றிக்கழிப்பில் கறாச் திரும்புகிறான். கறாச் அவனை விழுங்கிக் கதவு சாத்திக் கொள்கிறது.

சமையலறையின் அருகிருந்த ஒரு சிறியமேசையில் அவனும் அவளும் அமர்ந்திருந்து தேனீர் பருகுகிறார்கள். பிள்ளைகள் உறங்குகிறார்கள் போலும். அவளைப் புதிதாய்ப் பார்ப்பதுபோல் நிலைக்குத்தி ஒருகணம் பார்க்கிறான். கரியோக்கித்திரைபோல் வசனங்கள் அவன் மதுள் ஓடுகின்றன:

'இவளிற்கு ஆர்மானிக்கும் 99 டொலர் சூட்டிற்கும் வித்தியாசம் தெரியாதென்பதல்ல. அந்த வித்தியாசம் இவளிற்கு அர்த்தமற்றது. கவ்ளிங்ஸ் இருக்கிறதா அல்லது பொத்தான் சட்டைக்கையை இறுக்கியிருக்கிறதா என்பதெல்லாம் இவளிற்குள் என்றும் கவனம் பெறுவதில்லை. மாசறாட்டியா ரொயோட்டா கமறியா என்பது இவளின் அகராதியில் கேள்வியே இல்லை. பயணிக்கும் இடத்திற்குப் பேருந்தில் செல்வதில் கூட அனுகூலங்ககளைக் காட்டுபவள் இவள். இவளைத் தெரிந்தவர்களிற்கு இவளைத் தெரியும் ஏனெனில் இவள் இவளாய்த் தான் எப்போதும் இருப்பவள். பேத்றோவனையும் இரசிப்பாள் இளையறாயாவையும் இரசிப்பாள். சுஜித்ஜீ , குருவிப்பாட்டு பாடும் லண்டன் பொடியள் வரை ரசிப்பாள். றோஸ்பாண் றவி சம்பல் சிவாவின் நகைச்சுவை தொட்டு, டஸ்ற்றாஎவ்ஸ்க்கியின் இலக்கியம் வரை றசிக்கவும் விவாதிக்கவும் தெரியும். ஆனால் அறிவினை அந்தஸ்த்தாக்குவதிலோ பந்தாவிலோ உடன்பாடற்றவள். எங்கிருந்தோ வந்தாள்...'

***

மேற்றடீ குனிந்து கவனிக்கும் உணவகங்களில் இப்போதெல்லாம் அவனைக் காணமுடிவதில்லை. எப்போதும் ஒருத்தியே உடனிருக்கிறாள். உடைகளில் பிரபுத்துவம் இல்லை. முகத்தில் எப்போதும் இருந்திரா அமைதி.

ஒரு வாழ்நாளின் தேட்டங்கள் முழுவதும் சேரினும், அக்குவியல் தேடியவனை விஞ்சுமா?

வங்கிக்கணக்கா அக்கணக்கினை வைத்திருப்பவனா பெரியவன்?'

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒரு வாழ்நாளின் தேட்டங்கள் முழுவதும் சேரினும், அக்குவியல் தேடியவனை விஞ்சுமா?[/size]

[size=4]வங்கிக்கணக்கா அக்கணக்கினை வைத்திருப்பவனா பெரியவன்?' [/size]

அருமை...நிறைவும் நிம்மதியும் நிழலாகக் கூடவரும் அவளைப்போல் ஒருத்தியுடன் வாழ்வதற்க்கு வங்கிக்கணக்கென்ன,பென்ஸ்காறென்ன வாழ்வில் சுகம்தரும் அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டு செல்லலாம்...வாழ்நாள்முழுவதும் தேடிய தேட்டங்கள் எல்லாமும் சேர்த்தாலும் அவளிடம் கிடைக்கும் நின்மதியின் ஒருதுளிக்கு ஈடாகுமா...?

  • தொடங்கியவர்

நன்றி சுபேஸ், சாத்திரி, சஜீவன்

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் கதை இன்னுமொருவன் யாரையாவது காதலிக்கிறீங்களா :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இன்னுமொருவன்

  • கருத்துக்கள உறவுகள்

இது வேற்று மொழிக் கதையின் மொழிபெயர்ப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் கதை இன்னுமொருவன் யாரையாவது காதலிக்கிறீங்களா :D

ம் .............. ஆனா யாழ்ல வேணாம் :(

  • தொடங்கியவர்

நன்றி ரதி, நந்தன்26, புங்கையூரான் மற்றும் மெசொப்பொத்தேமியா சுமேரியர்.

ம்..ஒரு தசாப்த்தத்திற்கு மேலாக ஒரே காதலிதான் :D

மெ.சுமேரியர், இது மொழி பெயர்ப்பில்லை. ஒரு வசனம் ஏற்படுத்திய பாதிப்பில் எழுதியது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை மிகவும் சிந்திக்க வைக்கிறது, இன்னுமொருவன்!!!

ஏதாவது ஒன்றை, அடையும் வரை, ஒரு ஓர்மம் அல்லது வெறி ஒன்று மனதில் இருக்கும்!

அதை அடைந்த பிறகு, அது பெரிதாகத் தோன்றுவதில்லை!

உதாரணமாக மாணவ விசாவில் இருக்கும் வரை, 'சிட்டிசன் ஷிப்' ஏதோ ஒரு பெரிய கனவு மாதிரி இருக்கும்!

அது கிடைத்ததும், அது வெகு சாதாரணமாகப் போய் விடுகின்றது!

அது போல அழகிய மனைவியைத் தேடித் திரிவதும், என நினைக்கிறேன்!!!

ஆராவது, வடிவான பெட்டையளைக் கட்டின ஆக்கள் வந்து சொல்லுங்கோப்பா!

நன்றிகள், இன்னுமொருவன்!!!

  • தொடங்கியவர்

நன்றி புங்கையூரான்,

ஒரு பில்லியன் வைத்திருப்பவர் அதை இரு பில்லியன் ஆக்கியே தீரவேண்டும் என்று வெறியோடு இயங்குகிறார். சூப் குடிக்க விரும்புகிறவர்கள் சூப்பினைச் சூப் என்று கூறி சூப்பிற்காக மட்டும் விற்கின்ற கடைக்களிற்கு மட்டும் சென்று சூப் குடிப்பார்களேயாயின், முடிவின்றிச் செல்வத்தைப் பெருக்குவதற்கு பொருளாதாரம் இடமளிக்காது. ஏனெனில் மக்கள் தொகையும் அத்தியாவசிய தேவைகளும் எல்லையுடையவை. ஆதலால் முதலாளித்துவ நாடுகளில், புகைப்படங்கள், திரைப்படங்கள், பாடல்கள் என்று எங்கும் ஒரு முடிவற்ற ஏக்கத்தை விதைப்பதற்கான உத்திகள் முடிவின்றிக் காணப்படுகின்றன. இதனால், உண்மையில் சூப் தான் விருப்பம் என்பவர்கள் கூட சூப்பினைச் சூப்பிற்காகக் குடிக்கமுடியாதவர்களாக அவர்களிற்கே தெரியாதவகையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

சூப் என்பது ஒரு குறியீடு மட்டுமே. குறிப்பாக உறவுகளில் நாளாந்தம் உணரப்படும் போதாமைகள் கூட இவ்வகையினவே. தம்மிடம் கைவசம் உள்ளவற்றை மதிக்கவோ அனுபவிக்கவோ தெரியாத, இல்லாதவற்றை, அதாவது இருக்கவேண்டியவையாக ஊடகங்கள் சொல்பவற்றை நினைத்து ஏங்குபவர்களாக எத்தனையோ வாழ்வுகள் உழல்கின்றன. தாம் யார் என்பதை வரைவிலக்கணப்படுத்தும் பொறுப்பினை ஊடகங்களிடமும் வியாபாரங்களிடமும் கொடுத்துவிட்டு மந்திரிக்கப்பட்டவர்களாகப் பலர் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

வெற்றியின் உச்சத்தில் இருப்பவர்களாக வெளியிற்குத் தெரியும் எத்தனையோ பேர்களின் வாழ்வுகள், உள்ளுர ஓட்டையானவையாக இருப்பதை வெறும் ஐந்து நிமிட உரையாடடிலில் உணரக்கூடிய நிலை பரவலாக இருக்கிறது. சதா சர்வகாலமும் மற்றையவரின் கண்களில் தாம் எவ்வாறு தெரிகிறோம் என்பதே குறியாக வாழ்வுகள் நகர்கின்றது. இத்தகைய ஒரு வாழ்வின் சுழற்சியில் உருண்டுகொண்டிருக்கும் ஒருவனிற்கு, குறிப்பிடப்பட்ட குணாம்சமுடைய பெண்துணை கிடைக்கையில் அவன் தன்னை மீளப் பிறந்தவனாக உணர்வது தவிர்க்கமுடியாதது.

அதைத் கதையில் இயன்றவரை, ஆர்மானி சூட்டில் ஆரம்பித்து, சைனீஸ் உணவககம் வழியாக ற்றான்சிசனாகி சப்பேர்ப் வீடொன்றில் கொண்டுவந்து முடித்தேன். சும்மா ஒரு முயற்சிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியின் உச்சத்தில் இருப்பவர்களாக வெளியிற்குத் தெரியும் எத்தனையோ பேர்களின் வாழ்வுகள், உள்ளுர ஓட்டையானவையாக இருப்பதை வெறும் ஐந்து நிமிட உரையாடடிலில் உணரக்கூடிய நிலை பரவலாக இருக்கிறது. சதா சர்வகாலமும் மற்றையவரின் கண்களில் தாம் எவ்வாறு தெரிகிறோம் என்பதே குறியாக வாழ்வுகள் நகர்கின்றது. இத்தகைய ஒரு வாழ்வின் சுழற்சியில் உருண்டுகொண்டிருக்கும் ஒருவனிற்கு, குறிப்பிடப்பட்ட குணாம்சமுடைய பெண்துணை கிடைக்கையில் அவன் தன்னை மீளப் பிறந்தவனாக உணர்வது தவிர்க்கமுடியாதது

இந்து மதத்தில் வருகின்ற, 'மாயை' என்ற வார்த்தையின் முழுமையான விளக்கம் , உங்கள் மேற்கண்ட கருத்தில், 'உள்ளங்கை நெல்லிக்கனி' யாகித் தெரிகின்றது!

நன்றிகள், இன்னுமொருவன்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்வை இவ்வளவு எழிமையாக விளங்கப்படுத்த உங்களால் தான் முடிகிறது அண்ணா.

மூன்று சம்பவங்களில் என்ன பெரிய ஒரு தத்துவம். வாழ்த்துக்கள் அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை மிகவும் சிந்திக்க வைக்கிறது, இன்னுமொருவன்!!!

ஏதாவது ஒன்றை, அடையும் வரை, ஒரு ஓர்மம் அல்லது வெறி ஒன்று மனதில் இருக்கும்!

அதை அடைந்த பிறகு, அது பெரிதாகத் தோன்றுவதில்லை!

உதாரணமாக மாணவ விசாவில் இருக்கும் வரை, 'சிட்டிசன் ஷிப்' ஏதோ ஒரு பெரிய கனவு மாதிரி இருக்கும்!

அது கிடைத்ததும், அது வெகு சாதாரணமாகப் போய் விடுகின்றது!

அது போல அழகிய மனைவியைத் தேடித் திரிவதும், என நினைக்கிறேன்!!!

ஆராவது, வடிவான பெட்டையளைக் கட்டின ஆக்கள் வந்து சொல்லுங்கோப்பா!

நன்றிகள், இன்னுமொருவன்!!!

ஏன் பாஸ் ஊரிலையா பொண்ணு எடுத்தீங்க :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைக்கு நன்றிகள் இன்னுமொருவன்.. மேலும் பந்தி பிரித்து எழுதுங்கள்..! வாசிக்க இலகுவாக இருக்கும்..!!

  • தொடங்கியவர்

நன்றி கிருபன், ஜீவா, இசைக்கலைஞன் உங்கள் ஊக்குவிப்பிற்கும் கருத்துக்கும்.

இசைச்கலைஞன் நீங்கள் கூறிய வாசிப்பை இலகுவாக்குதைக் கருத்தில் எடுத்துக்கொள்கிறேன். நன்றி

திரிகோணத்தில் நடனமாடிய இன்னுமொருவன் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர் . அடிக்கடி இப்பிடி சஞ்சாரம் செய்தால் நல்லது .

ஒரு வித மயக்கம் இந்த கதையை வாசிக்க .

வாழ்க்கை என்பது பொருள் சார்ந்ததுதான் வேட்டையாடியகாலமும் முதல் பில் கேட்ஸ் காலம் வரை .ஆனால் அதை அனுபவிப்பவனின் ரசனையும் தன்மையும் தான் வித்தியாசம் .

  • தொடங்கியவர்

ஒரு வித மயக்கம் இந்த கதையை வாசிக்க .

நன்றி கோமகன், அர்யுன், அபராஜிதன் உங்கள் கருத்துக்களிற்கு.

அர்யுன் மயக்கம் தொடர்பான உங்கள் கருத்தையும் உள்வாங்கிக்கொள்கிறேன். ஏறத்தாள சொல்ல வந்த கருத்தின் சாரத்தினைப் பத்தாவது இலக்கப்பின்னூட்டத்தில் கூறியுள்ளேன். மற்றபடி சூப், பனி வழிக்கும் வாகனம் கட்டிய பனிவரம்போடான போராட்டம் போன்றன எல்லாம் குறியீடுகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பலதடவை வாசித்துப் பின்னர் இன்னும் யோசித்த பின்னரும் இன்னுமொருவனின் விளக்கத்துடன்

எப்படியான சூழல் எமக்கு நிரந்தரமான நாங்கள் எதிர்பார்த்த இயல்பான சுமையற்ற

வாழ்க்கையை ஏற்படுத்தித் தருகின்றன என்பது விளங்குகின்றது.

எதிர்பார்ப்புகள் எங்களிடமிருந்து வரும்போதோ எதிர்மாறாக மற்றவர்களால் எங்கள் மீது

திணிக்கப்ப்படும்போதோ வாழ்க்கை சுமையாகின்றது.

நன்றி இன்னுமொருவன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை, வாழ்த்துகள்

  • தொடங்கியவர்

நன்றி வாத்தியார் மற்றும் உடையார் உங்கள் கருத்துக்களிற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த கதை இன்னுமொருவன்.முப்பரிமாணத் (3D) தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அதிகம் ஆங்கிலப் புத்தகங்களை வாசிப்பதன் தாக்கமாக இருக்கலாம். ஆர்வக் கோளாறிலே கேட்கிறேன் குறை நினைக்க வேண்டாம், நீங்கள் தத்துவவியல் படித்தீர்களா?

கதையை மூன்று முறை படித்து விட்டேன். ஆயினும் எனக்கு இந்தக் கதை தாக்கம் எதையும் கொடுக்கவில்லை. ஜேர்மனியில் இருப்பதனாலும் சீன உணவகத்தில் மட்டும் சூப் குடிப்பதனாலும், எனக்கு இந்தக் கதையின் சொற்கள் அந்நியமாகப் போய்விட்டனவா?

மீண்டும் நல்லதொரு கதை கருவும் கதையும். நன்றி இன்னுமொருவன்.

  • தொடங்கியவர்

நன்றி தும்பளையான், சபேசன் மற்றும் பகலவன்.

தும்பளையான் குறிப்பாக் கேட்டபடியால் எழுதுகிறேன்:

ஏறத்தாள 2005 அல்லது 2006ம் ஆண்டளவில் பரணி கிருஸ்ணறஜனி என்ற ஒரு ஈழத்தமிழ் வலைப்பதிவரின் (இவர் பிரான்சில் இருந்ததாய் நினைவு) ஒரு பதிவில் தத்துவவியலாளர் மிnஷல் பூக்கோ பற்றி எழுதியிருந்தார். அந்தப் பதிவின் ஏதோ ஒரு அம்சம் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாய், பூக்கோ பற்றி ஒரு தேடல் தோன்றியது. அந்த வார இறுதியில் நூல்நிலையத்தில் இருந்து பூக்கோவின் அதிகாரம் பற்றிய நூலினை எடுத்து, தத்துவம் பற்றி அடியோ முடியோ தெரியாது எவ்வித முறையான கற்றலோ முன்னனுபவமோ வழிநடத்தலோ இன்றி, வாசிக்கத் தொடங்கினேன். எவ்வாறு அதனை வாசித்து முடித்தேன் என்று தெரியாமல் கட்டிப்போட்டது போல நூல் நகர்ந்தது. அதன் பின்னர் உலகை முன்னர் பார்த்தது போல் பார்க்கமுடியவில்லை. அவ்வாறு ஏற்பட்ட ஆர்வக்கோளாறு, சாத்தர், நீற்Nஷ, Nஷhப்பன்ஹாவர், கான்ற், கைடெக்கர் என்று விரியத் தொடங்கியது. தத்துவவியல், உளவியல், சமூகவியல் என்று பலமுனைகள் ஒரே தளத்தில் இணைவதாய்த் தோன்றியதால் அப்பிடியே வாசிப்புத் தேர்வுகள் இம்முனைகளில் விரியத் தொடங்கியதால் வந்த வினை தான் இது.

எலெக்ற்றோனிக் வாசிப்புக் கருவிக்கு முன்னர் இம்முனைகளில் வாங்கிய நூல்கள் மாத்திரம் எனது புத்தக அலுமாரியின் மூன்று தட்டுக்கள் வரை உள்ளன. இதைவிட ஏராளம் நூல்களை நூல்நிலையத்தில் எடுத்து வாசித்துள்ளேன். பேராசிரியர் முகம் சுளிக்காமல் நல்ல புள்ளி போடவேண்டும் என்பதற்காகக் கட்டுரை எழுதுவதற்காகப், பதிப்பகத்தின் பேரும், புத்தகத்தின் பக்கமும் என்று பாடமாக்கவேண்டியன போன்ற இம்சைகள் இருக்காமையினால், ஆர் எத்தினையாம் பக்கத்தில் என்ன சொன்னார் என்று மண்டைய நோகப் பண்ணாது, சொல்லப்பட் விடயங்களை மட்டும் விரும்பிபப் படிச்சு, படிச்சவை மனதில என்ன தாக்கங்களை உருவாக்குகின்றன என்று அவதானித்ததால், சொந்தத் துறையினைக் காட்டிலும் இந்தத் துறைகளில் ஆர்வம் அதிகம் இருப்பது என்னமோ உண்மை தான்.

சபேசன்:

முதலில் மூன்று தடவைகள் ஏதோ ஒரு நம்பிக்கையில் படித்தமைக்கு நன்றியையும், அதேநேரம் உங்களை ஏமாற்றியதற்காய் வருத்தத்தையும் கூறிக்கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.