Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0080_zpsee1f9b3d.jpg

 

 

P1000039_zps6a643dd0.jpg

என் வீட்டுக் குளத்தில் பத்தொன்பது மீன்கள் நேற்றுவரை இருந்தன. மீன்கள் ஓடி விளையாடும் அழகைப் பார்த்துக்கொண்டே எத்தனை நேரமானாலும் இருக்கலாம். கடந்த குளிர் காலத்தில் யாழ் இணையமே கதியென்று கிடந்ததால், குளத்தைக் கொஞ்சம் கவனியாது விட்டுவிட்டேன்.
தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரமும் பழுதடைந்து, புதிது வாங்க நேரமின்மையும், போய் வாங்கப் பஞ்சியாயும் இருந்ததால், நரி மீன்களை உண்ணாமலிருக்க மேலே போட்டிருந்த வலையிலும் சேர்த்துப்  பாசி பிடித்துவிட்டது. ஒழுமுறை கழுவிப் பார்த்தும்  பாசி அப்படியே இருந்ததால், வலையைச் சுருட்டி குப்பை வாளியுள் போட்டாயிற்று. தொட்டியுள் மேலதிகமாக இருந்த தாவரங்களையும் அகற்றி மீன்தொட்டி இப்ப சுத்தமாகிவிட்டது. வலை வாங்கி மேலே போடவேண்டியது ஒன்றுதான் குறை.

எனக்கு வலையைப் பாக்கப் பாக்க எரிச்சல் தான் வரும். அது குளத்தின் அழகைக் கெடுப்பது போலும் இருக்கும். அதனால் ஒரு வாரமாவது வலையைப் போடாமல் வைத்திருப்போம் என எண்ணி இருந்தேன். நல்ல வெயில் என்பதால் மீன்கள் எல்லாம் மேலேயே நின்று விளையாடும். பத்து செம்மஞ்சள் மீன்கள், ஆறு வெள்ளை மீன்கள், இரண்டு கருப்பு வெள்ளை  செம்மஞ்சள் கலந்த நிறமுடைய மீன்கள், ஒரு பெரிய கருப்பும் பழுப்பும் கலந்த நிற மீன். இவ்வளவும் இருந்தன.

எனக்கு இப்ப கன நாட்களாக கனவுகளே வருவதில்லை. முந்தநாள் நரி என் மீன்களை  பிடிப்பதுபோல் கனவு வந்தது. காலை எழுந்ததும் ஓடிப்போய் முதல் வேலையாகக் குளத்தைப் பார்த்தேன். அப்பாடா எல்லா மீன்களும் இருந்தன. கனவில் எப்பவும் எதிர் மறையாகத தானே நடப்பது என்று சிறிது ஆறுதல். சரி இன்னும் ஒரு நாள் போகட்டும் வலையைப் போடலாம் என்று இருந்துவிட்டேன்.
 
இன்று காலை தேநீர் தயாரித்துக் கொண்டு இருந்தபோது மகளின் ஐயோ அம்மா என்னும் சத்தத்தில் என்னவோ எதோ என்று பதறியபடி வெளியே ஓடினால், எல்லாம் உங்களால் தான் என்னும் குற்றச்சாட்டுடன் மகள் குளத்தைக் கைகாட்டியபடி. எட்டிப் பார்த்ததால் ஒரே ஒரு மீனைத் தவிர ஒன்றும் இல்லை. அந்த ஒரு மீன் கறுப்பும் பழுப்பும் சேர்ந்த அந்தப் பெரிய மீன்.

அழகழகாய் இருந்த மீன்களை எல்லாம் உண்ட நரி, நிறத்தைப் பார்த்து அந்த மீனை மட்டும் உண்ணவில்லையா??? அல்லது அதன் நிறமே நரியிடமிருந்து அதனைக்  காப்பாற்றியதா??? நரிக்கு மட்டும் தான் வெளிச்சம்.
 
 
 
P1000083_zpsb7b28eb4.jpg

 

இப்படி ஒரு விலங்கும் தண்ணீரில் நிற்கிறது. பெயர் ஊர் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் கூறுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி படத்தில் இருப்ப துதான். டைனோசர். இதுகூடதெரியாமல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி, நான் அதைப் பல்லி என்று நினைத்தேன். சரியான பெயரைக் கூறியதற்கு நன்றி. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

கொலைக்கேசில உள்ள போடப்போறாங்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.இது தான் கடல் வாழ் காட்டுப் பல்லி.

 

காட்டுப்பல்லி காட்டில எல்லோ இருக்கும் நிழலி. இது இருப்பது என் வீட்டு குளத்தில்.

 

 

கொலைக்கேசில உள்ள போடப்போறாங்கள் 

 

யாரை நந்தன் உங்களையோ??

 

 

காட்டுப்பல்லி காட்டில எல்லோ இருக்கும் நிழலி. இது இருப்பது என் வீட்டு குளத்தில்.

 

 

 

 

அப்ப, இது தான் அந்த நரி ஆக இருக்கும். நிறைய மீன்களை ஒரே நாளில் சாப்பிட்டதால நரி மீனாக மாறிவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, இது தான் அந்த நரி ஆக இருக்கும். நிறைய மீன்களை ஒரே நாளில் சாப்பிட்டதால நரி மீனாக மாறிவிட்டது.

 

கண்ட விலங்குகளையும் உண்டு  நீங்கள் அவற்றைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்துள்ளீர்கள் நிழலி. ஆதலால் நீங்கள் கூறுவதுபோல் தான் நடந்திருக்கும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் அழகுக்காக அடிப்படையை கோட்டடை விடுவது என்பது இது தான் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நரிக்கு வயிறு நிறைஞ்சு போயிருக்கும்!
நாளைக்கு மற்ற மீனுக்கு வரும், சுமே! :D

மீன்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்! :o

 

 

நல்ல அடி அடித்திருக்கிறீர்கள். உங்களின் தேடுதலை மெச்ச வேண்டும். நான் இன்றுதான் யேசுப்பல்லியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் A/L ல்  பௌதிகம் படித்த போது நீர்ப்பூச்சிகள் எப்படி நடக்கிறது என்பதை மட்டும்தான் படித்த ஞாபகம். பல்லியை பற்றி சொன்ன ஞாபகம் இல்லை.

 

இந்த உயிரினம் சரியாகப் பல்லி  அல்ல என்று நினைக்கிறேன். இது உண்மையில் தண்ணிக்கு மேல் நடக்கவில்லை. தண்ணிக்கு அடியில் நிற்கிறது.

 

இந்த இணைப்பையும் படித்துப் பாருங்கள்.  சுமெ அக்கா தேடும் பதில் இதுவாக இருக்கலாம்.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D

 

 

P1000083_zpsb7b28eb4.jpg

 

இப்படி ஒரு விலங்கும் தண்ணீரில் நிற்கிறது. பெயர் ஊர் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் கூறுங்கள்.

 

Edited by மல்லையூரான்

"கனவில் எப்பவும் எதிர் மறையாகத தானே நடப்பது என்று சிறிது ஆறுதல். சரி இன்னும் ஒரு நாள் போகட்டும் வலையைப் போடலாம் என்று இருந்துவிட்டேன்."

 

 மகள் நரி மீன்களைத் தின்றதை கண்டாவா?  கனவில் செத்த வீடு கண்டால் கலியாண வீடு நடக்கும் என்பார்கள். மீன்கள் எல்லாம் கலியாணம் கட்டிக்கொண்டு தனிக்குடித்தனம் போய்விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுது. :D  

 

 

Edited by மல்லையூரான்

இவை நியூட் (newt) என்று அழைக்கப்பெறும்

 

  • கருத்துக்கள உறவுகள்

Fox_cooks.gif

 

 

வலையை... எப்ப, எடுப்பார்கள் என்று... நரி எத்தினை நாளாய் பாத்துக் கொண்டிருந்துதோ..... :o .

நரி ஒரு நாள்ளை... எல்லா மீனையும், சாப்பிடக் கூடாது என்று... அந்தப் பெரிய மீனை விட்டு வைத்திருக்கும். எப்படியும்... அதையும் சாப்பிட நரிப்பிள்ளை வருவார், அப்ப.... ஒரே.. போடு, போட்டு விடுங்கோ... சுமோ. :D fox.gif

 

 

 

Edited by தமிழ் சிறி

உங்களுக்கு வாழ்க்கைப்பட்ட அந்த மீன்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

நீர் இறைக்கும் இயந்திரங்கள் நீண்ட நாள் பாவனைக்கென தயாரிக்கப்பட்டவை. பழுதாவது குறைவு. முதலில் electrical plug இல் உள்ள fuse ஐ சரி பாருங்கள். வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது தானாக நின்றதா அல்லது நீங்கள் அணைத்த பின் வேலை செய்யவில்லையா? பாசிகள், குப்பைகள் போய் இயந்திரத்தில் உள்ள விசிறியில் அடைத்திருக்கும். அதனால் வேலை செய்யவில்லை என நினைக்கிறேன். இது வழமையாக நடப்பதுதான். இலகுவாகச் சரிப்படுத்தலாம்.  அல்லது ஒவ்வொரு முறையும் புது இயந்திரம் வாங்க வேண்டி வரும்.

 

இலகுவான செய்முறை

 

 - இயந்திரத்திற்கான மின் விநியோகத்தை நிறுத்தவும்.

 

-  இயந்திரத்தின் கோதை (cascade) மூடியுள்ள திருகாணியை (screw)  கழட்டவும்.

 அதில் உள்ளே விசிறியும் அதோடு சேர்த்து ஒரு கம்பியும் இருக்கும். இழுக்க இலகுவாக வரும். அவற்றை நன்றாக அழுக்குப் போகத் துடைத்து விசிறி / கம்பி இருந்த துளையையும் ஒரு துணியால் துடைத்து மீண்டும் பாகங்களைப் பழைய நிலைக்குப் பொருத்தி (கோதைப் பூட்டாமல்) ஒரு தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் வைத்து, இயந்திரத்தை ஆரம்பிக்க அது வேலை செய்யத் தொடங்கும்.

இயந்திரத்தை நிறுத்தி பழையபடி கோதிற்குள் வைத்துப் பூட்டி குளத்திற்குள் வைக்கலாம்.  

 

என்ன நீர் இறைக்கும் இயந்திரம் பொருத்தி உள்ளீர்கள் என்று கூறினால், youtube இல் கிடைத்தால் கழட்டிப் பூட்டுவதற்கான இணைப்பை இணைத்து விடுகிறேன்.

 

கோடை காலத்தில் பாசி அதிகம் வரும். பாசி வராமல் இருக்க குறைந்த மின் சக்தி கொண்ட UV filter பொருத்தவும். தெளிந்த பளிங்கு போன்ற குளமாக மாறும்.  என்ன வகையான வடி பொருத்தியுள்ளீர்கள். உங்கள் குளத்தின் அளவைப் பார்க்கும் பொழுது 11v போதுமானதாக இருக்குமென நினைக்கிறேன். குளத்தின் அளவு தெரியாமல் சொல்ல முடியாது.  

 

நீங்கள் போட்டுள்ள நூல் வலையை நரி சாதுரியமாக அகற்றும். உலோக வலை பாவிக்க வேண்டும்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் அழகுக்காக அடிப்படையை கோட்டடை விடுவது என்பது இது தான் :rolleyes:

 

எல்லாப் பெண்களும் என்னைப்போல் இல்லைத் தானே சுவை. :D

 

 

 

நன்றி யாயினி. கிட்டத்தட்ட நீங்கள் அனுப்பியது சரிபோல் உள்ளது. ஆனால் அந்தப் பெயர் தான்.............ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

 

நரிக்கு வயிறு நிறைஞ்சு போயிருக்கும்!

நாளைக்கு மற்ற மீனுக்கு வரும், சுமே! :D

மீன்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்! :o

 

அதுதான் உடன வலை போட்டு மூடிட்டமெல்லே. :D :D

 

 

"கனவில் எப்பவும் எதிர் மறையாகத தானே நடப்பது என்று சிறிது ஆறுதல். சரி இன்னும் ஒரு நாள் போகட்டும் வலையைப் போடலாம் என்று இருந்துவிட்டேன்."

 

 மகள் நரி மீன்களைத் தின்றதை கண்டாவா?  கனவில் செத்த வீடு கண்டால் கலியாண வீடு நடக்கும் என்பார்கள். மீன்கள் எல்லாம் கலியாணம் கட்டிக்கொண்டு தனிக்குடித்தனம் போய்விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுது. :D  

 

 

விக்கிபீடியாவில் நீங்கள் காட்டிய பகுதியில் உள்ள தரவுகள் சரியாகவே உள்ளன. அனால் படம் பொருந்தவில்லை. அந்த இனக்கூட்டமாக இருக்கலாம். குளத்தை விட்டு வெளியே புல்லிலும் நிற்பதைக் கண்டுள்ளேன். கல்லிலும் இலகுவாக ஓடுகிறது. முன்பு இரண்டு நின்றது. இப்ப ஒன்றைக் காணவில்லை.

மனிசர் செத்ததாக் கனவு கண்டால்த்தான் கலியாணம். மீன் செய்ததால் வேறு ஏதும் இருக்கும். தேடித் பாருங்கோ மல்லை. :lol:

 

இவை நியூட் (newt) என்று அழைக்கப்பெறும்

 

நன்றி. உங்கள் பெயர் ஆதிபனா? தமிழில் எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமே.

 

 

 

Fox_cooks.gif

 

 

வலையை... எப்ப, எடுப்பார்கள் என்று... நரி எத்தினை நாளாய் பாத்துக் கொண்டிருந்துதோ..... :o .

நரி ஒரு நாள்ளை... எல்லா மீனையும், சாப்பிடக் கூடாது என்று... அந்தப் பெரிய மீனை விட்டு வைத்திருக்கும். எப்படியும்... அதையும் சாப்பிட நரிப்பிள்ளை வருவார், அப்ப.... ஒரே.. போடு, போட்டு விடுங்கோ... சுமோ. :D fox.gif

 

 

நரி எனக்குப் பயத்தில வரிசக் கணக்கா என்ர காணிக்குள்ள இறங்கிறதில்லை. என்ன துணிவில இறங்கினார் என்று தெரியாது. இனி வரட்டும் பாபிகியூ தான்.

 

 

உங்களுக்கு வாழ்க்கைப்பட்ட அந்த மீன்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

நீங்கள் போட்டுள்ள நூல் வலையை நரி சாதுரியமாக அகற்றும். உலோக வலை பாவிக்க வேண்டும்.

 

இது என் கணவர் வடிவமைத்த இயந்திரம். கணவருக்கு நேரம் இல்லாததால் தான் இத்தனையும். இப்ப தொட்டி சுத்தமாக இருக்கு. நானும் இனிப் பிரச்சனை இல்லை என்று நினைக்க நீங்கள் வலை பற்றிச் சொல்லிப் பீதியைக் கிளப்புகிறீர்கள். உலோகவலை எங்கு வாங்குவது தப்பிலி. லிங்க் இருந்தால் போட்டு விடுங்கோ. நேற்றுத்தான் ஐந்து பெரிய மீன்களாக வாங்கி விட்டேன்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ப்பு உயிரினங்கள் மண்டையைப் போட்டால் உங்களுக்கு வர இருந்த கேடு நீங்கியதாக அர்த்தமாம்.. :D புது மீன்கள் வாங்கி விடுங்கோ.. நரி குப்பையைக் கிண்டிறதாவது குறையும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நரி ஊருக்க வந்து ஊளையிட்டதும் இல்லாம முதலுக்கே மோசம் பண்ணிறது.. ரெம்ப கொடுமையாப் போச்சுது. என்னென்னத்துக்கோ எல்லாம் பில் பாஸ் பண்ணுற குயீன்.. இந்த நரித் தொல்லைக்கு எதுவும் பண்ணமாட்டேன்னு அடம்பிடிக்கிறது தான் ஏனுன்னும் புரியல்ல..! :)

 

பின்னைய படத்தைப் பார்த்தால் முதலைக் குட்டி போல எல்லோ இருக்குது..! ஆனால் பிரிட்டனில் முதலைகள் இயற்கையாக பரம்பி வாழ்வதில்லை என்பதால்.. இது பிரிட்டனுக்குரிய நீர்ப்பல்லியாக (Newt) இருக்கவே வாய்ப்புள்ளது.

 

மீன்கள் அல்லாத சூழலைப் பயன்படுத்தி.. பல்லியார் கசமுசா பண்ண வந்திருக்கிறார். :lol:

 

Habitat preference

 

All of our newts leave hibernation in February or March, returning to ponds for breeding. Weedy ponds without fish are favoured. Weeds provide refuge for newts as well as providing egg-laying locations - on the undersides of leaves. The distribution of palmate newts seems to be influenced by a preference for shallow, soft water pools on acid soils. For palmate newts and great crested newts it is also important to have undisturbed terrestrial habitat around the ponds, providing refuge and good feeding sites. Common newts seem less concerned by the quality of the surrounding habitat.

 

http://www.wildaboutgardens.org.uk/wildlife/amphibians/newts.aspx

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதாவது பறவை பிடித்திருக்கும் போலகிடக்கு :rolleyes: , உந்த கழுகுகள் பொல்லாத சாமான்

 

 

P1000083_zpsb7b28eb4.jpg

 

 

 

நீங்கள் வேண்டி வைத்திருந்த மண்சட்டிக்கை பக்கத்து வீட்டுக்காரன் மீன்களைப் பொரித்துச் சாப்பிட்டிட்டாரோ தெரியாலை. எதுக்கும் அவதானமாக இருங்கோ சுமே. புது மீன்களை வாங்குங்கோ. உதென்ன  பார்க்கவே ஒரு மாதிரிக் கிடக்கு உந்தப் பல்லியைத் தூக்கி பக்கத்து வீட்டை போடுவிடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

138577-stock-photo-wasser-sommer-orange-

 

 

 

சுமோ... உங்கள் குளத்தில் உள்ளது லூர்ஷெ (Lurche) எனப்படும் தவளை இனத்தைச் சேர்ந்தது.
இதனை... எனது நண்பரொருவர் வீட்டு கண்ணாடித் தொட்டியில் வளர்க்கிறார்.
இது நீரில் கூடுதலாகவும், ஈரலிப்பான மண்தரையிலும், குறைந்த‌ நேர‌ம்  வாழும்.
பல நிறங்களைக் கொண்ட ஐந்து இது,
மஞ்சள் நிறத்தை கொண்ட, இதன் விலை கொஞ்சம் அதிகம்.
மண் புழுவை, விரும்பிச் சாப்பிடும். ஒரு நேரத்தில்... 70 மேற்பட்ட குட்டிகளைப் போடும்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மீனாவது மிஞ்சியது எனச் சந்தோசப்படவேண்டியது தான்  :)  

 

 

லண்டனில் நரிகளினால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு காப்புறுதி செய்யமுடியாதா?? :D

 

 

மனிசர் செத்ததாக் கனவு கண்டால்த்தான் கலியாணம். மீன் செய்ததால் வேறு ஏதும் இருக்கும். தேடித் பாருங்கோ மல்லை. :lol:

 

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :rolleyes:

 

மீன் செத்தால் .........  Birthday Party ஒன்று நடக்குமோ :unsure:

 

மாமி எப்போ பிறந்தா என்று ஞாபகமா? :D  எதுக்கும் கோவில் ஐயரை ஒரு கோல் போட்டு  அரிசனைக் காசு எவ்வளவு என்று கேட்டுப்பாருங்கோ. அவர் கூடக்குறைய சொன்னால் வீட்டிலைதான் வைக்க வேண்டி வரப்போகுது. :(

 

:lol: :lol: :lol: :lol: :lol:

எல்லோரும் நரி நரி என்று சொல்கிறீர்கள். :rolleyes:

 

பெரிய மீன் சிறிய மீன்களை விழுங்குவதும் நடப்பது தானே? அவ்வாறு  நடந்திருக்காதா? :unsure: பெரிய மீன் மட்டும் தான் மிஞ்சி நிற்பதாக வேறு மெசோ அக்கா கூறியுள்ளார். :rolleyes:

 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.