Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் சூடனில் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் யூலை 2011 திறப்பு – நாடு கடந்த அரசின் பிரதமர்

Featured Replies

Visvanathan-Rudrakumar.jpg

மலரப்போகும் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் தென் சூடானில் எதிர்வரும் யூலை மாதம் அமையவுள்ளதாக நாடு கடந்த அரசின் பிரதமர் தொலைபேசிப் பரிவர்த்தனையூடாக நேற்று கோலம்பூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது இச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

கோலம்பூரில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சபாநாயகர் பொன் பாலராஜன், உதவிப் பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் மற்றும் துணை வெளிவிவகார அமைச்சர் க.மாணிக்கவாசகர் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டனர். இவர்கள் அவுஸ்திரேலிய, மலேசிய விஜயங்களை நாடு கடந்த அரசு தொடர்பாக மேற்கொண்ட போதே இந்த நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் பிரதமர் பேசுகையில், நாடு கடந்த அரசின் உடணடியான பணிகளாக மூன்று முக்கிய பணிகளைக் குறிப்பிட்டார்.

1. இன அழிப்பு, மனித இனத்திற்கெதிரானக் குற்றங்கள்இ தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் போன்றவற்றை புரிந்தவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கு கணிசமான பங்களிப்பு செய்வது.

2. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பறித்து மக்களை இடமாற்றம் செய்ய சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டுள்ள தீவிரமான செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்வது.

3. இன அழிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி சுதந்திர தமிழீழ நாடு அமைக்கப்படுவதுதான் என்ற அனைத்துலக உடன்பாட்டை உருவாக்குவதில் வெற்றி பெறுவது.

நாடு கடந்த தமிழீழ அரசின் இலட்சியத்தில் வெற்றி பெறுவதற்கு “இந்தியாவின் நிலை” முக்கியமானது என்று வலியுறுத்தப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவின் முக்கியத்துவம் பற்றிய நிலையை ஒப்புக்கொண்டார். அவ்விசயம் தீவிரமாக கவனிக்கப்படுவதாக கூறினார்.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் சுதந்திர நாடாக மலரும் தென் சூடான் நாடு, கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்த முதல் நாடாகும். அப்புதிய நாட்டில் தமிழீழ அரசு அதன் தூதரகத்தை அமைக்க தென் சூடான் அழைப்பு விடுத்துள்ளது. மேலும்இ அந்நாட்டின் மேம்பாட்டு செயல்திட்டங்களில் பங்கேற்று தென் சூடானின் மேம்பாட்டிற்கு உதவுமாறு தமிழீழ அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

“இது எங்களுக்கு ஒரு பெரிய திருப்பு முனையாகும்” என்றாரவர்.

http://www.sankathi.com/news/index.php?option=com_k2&view=item&id=440:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2011-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E2%80%93-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D&Itemid=54

" தென் சூடனில் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் யூலை 2011 திறப்பு " - மகிழ்ச்சியான செய்தி.

மேலும் பல நாடுகளிலும், ஐ. நா. விலும் எமது பிரதிநிதித்துவம் இடம்பெற போராடுவோம், வாழ்த்துவோம்.

சிங்களம் தனது கடுப்பையும் கபடத்தனத்தையும் கட்டவிழ்த்துவிடும் இதை தடுக்க, நாம் தொடர்ந்து அவதானமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லசெய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள், தங்களிடம் தேங்கிக்கிடக்கின்ற பெரும்செல்வத்தை தகுந்தமுறையில் முதலீடுசெய்வதற்கான பாதுகாப்பான தற்போதைய ஒரேயொரு தெரிவு தென்சூடான் மட்டுமே. அபரிமிதமான பெற்றோலியம் அங்கு கிடைக்கின்றது. அது தொடர்பான முதலீடுகளிலும் அதையொற்றி வளரக்கூடிய ஏனைய துறைகளிலும் நாம் முதலீடு செய்வோமாகவிருந்தால் நம்மை நாம் வளர்த்துக்கொள்வது மட்டுமல்லாது தென்சூடானது வளர்ச்சிக்கும் உறுதுணைபுரிந்தோமெனும் சரித்திரத்திலும் இடம்பெறுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

LTTE4_copy.jpguruthirakumar001.jpg

மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.

நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரனுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பதுடன், மேலும் எமக்குச் சாதகமான இடங்களில் தூதரகம் அமைக்க, ஆவன செய்யும் படி வேண்டுகின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.நா.க.அரசு முக்கியமான ஒரு முதல் காலடியை எடுத்து வைத்திருக்கிறது.

தமீழ அரசு ஒரு தமிழர் களுக்கான வங்கி ஒன்றை உருவாக்க வேண்டும் .ஜரோப்பாவில் இருக்கும் வங்கிகளுடன் பேசி ஒரு நிதி நிறுவனம் உருவானால் மிகவும் நல்லது.

இங்கிலாந்தில் lyods bank il முஸ்லீம்களின் மத நம்பிக்கைக்கு ஏற்றது போல் நிதி பிரிவு உள்ளது.

இம்முறையை நாமும் பரிசீலீக்கலாம். பணம் போடுபவர்கள் நம்பிக்கை பெறுவார்கள்.

எங்களால் தான் தாயகத்தில் உள்ள மக்களுக்கான அரசியல் தீர்வு கொன்டு வர பலம் உண்டு. அதை செய்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

Congrats-1.gif

அடுத்தது தீவு எதாவது தற்காலிகமா வாங்கி ஒரு அரசுக்குரிய் அத்தனை வங்கி கிங்கி பாரளுமனறம் என அமைத்து ஐநா சபையில் நுழையவேண்டும்.

அடுத்து ஆப்பிரிக்க நாடுகளையும் முஸ்லீம்களின் இரண்டு பிரிவினரின் எதாவது ஒரு பிரிவை வைத்து முஸ்லீம் நாடுகளை கவர் செய்யவேண்டும்.

அடுத்து தேசிய ஊடகம் தொலைக்காட்சி சேனல் தொடங்கபட்டு பாராளுமனற நிகழ்வுகளைஒளிபரப்புவதோடு கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் காட்டபடவேண்டும்

அதை உலகம் முழுவதும் தெரியும் வண்ணம் பார்த்து கொள்ளவேன்டும்.

சிங்களதினை துகில் உரிந்து காட்ட தனி ப்ரொகிராம் செய்யவேண்டும் அது முக்கிய நேரமான மாலை 7.30- 10.30 இந்த நேரத்தில் வைத்து கொள்ளலாம்.

நல்ல செய்தி என எல்லோரும் பூரித்து எழுதுகின்றீர்கள். நான் இந்த கருத்தை எழுதுவதற்கு மன்னிக்கவும். மீண்டும் மீண்டும் ஊடகக்ங்கள் இப்படியான உசுப்பேற்றும் செய்திகளை போட்டு நம்பிக்கைகளை ஏற்படுத்துவது தவறு.

உண்மையில் தென் சூடான் விடயம் தொடர்பில் இப்படியான முடிவுகள் இன்னமும் ஓர் செயல் நிலையிலேயே உள்ளது. எதையும் செய்த பின்னரே உறுதியாக சொல்ல முடியும். நாம் கேட்டிருக்கின்றோம் என சென்ர வாரம் திரு. உருத்திரா அண்ணர் அவர்கள் நேரடியாக இலண்டனில் ஒரு கலந்துரையாடலில் கூறினார். அதுதான் உண்மையும் கூட.

அதே வேளை சில நாடுகள் தென்னாபிரிக்கா உட்பட நாடு கடந்த அரசாங்கத்திற்கு உத்தியோக பூர்வ அழைப்பினை கொடுக்கவும் மெளனித்தும் வருகின்றன. இது ஒரு நீண்ட பணி. சில கூட்டங்களில் வழுவல் நழுவலாகவோ அன்றி தேவை கருதியோ சிலவற்றை சொன்னால் அதனை பெரிதுபடுத்தி இலங்கை அரசு வரைக்கும் கொண்டுபோய் விட்டு திட்டங்கலை தவிடு பொடியாக்குவததில் நாம் வல்லவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழீழ அங்காரத்துக்கான தேடல் தென் சூடானையும் கடந்து தொடர வேண்டும் என்பதோடு உள்வீட்டு கலகக்காரர்களையும் கொஞ்சம் கவனித்துக் கொண்டு பயணிப்பது நன்று.

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நா.க.தமிழீழ அரசிற்கு கிடைத்த உலக அங்கீகாரத்தின் துவக்க புள்ளியாக தென்சூடான் ஆனதை யிட்டு, மன மகிழ்வோடு வாத்துகின்றேன் தென்சூடானின் மனித நேயத்தை!

மனிதாபிமானத்தின் புதைகுழிகள், உலகத்திற்கு வெளிநாட்டுக் கொள்கைகள். இந்த வகைக்குள் தன்னைச் சேர்க்காத தென்சூடானின் உயரிய இலட்சியத்தைப் போற்றுவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

அதேநேரம் உமை சொன்னதுபோல் நாமே எமது நடவடிக்கைகளை காட்டிக்கொடுக்காது அமைதியாக சாதனைகள் செய்வோம்.

எனக்கு இரட்டிப்பு சந்தோசம்.

இங்கு எழுதும் தேசியவாதிகள் பலரும் நாடுகடந்த அரசை ஆதரித்து வாழ்த்துவதை பார்க்கும்போது...

அதேநேரம் வருத்தம் எம்மவர்களை இணைந்து செயலாற்ற செய்யமுடியவில்லையே என்று.

செயலே எம்மை பிரபாகரனின் பின்னால் செல்ல வைத்தது. அடுத்தது யார்...?

செய்யட்டும் பார்க்கலாம்.

அதே வேளை சில நாடுகள் தென்னாபிரிக்கா உட்பட நாடு கடந்த அரசாங்கத்திற்கு உத்தியோக பூர்வ அழைப்பினை கொடுக்கவும் மெளனித்தும் வருகின்றன. இது ஒரு நீண்ட பணி. சில கூட்டங்களில் வழுவல் நழுவலாகவோ அன்றி தேவை கருதியோ சிலவற்றை சொன்னால் அதனை பெரிதுபடுத்தி இலங்கை அரசு வரைக்கும் கொண்டுபோய் விட்டு திட்டங்கலை தவிடு பொடியாக்குவததில் நாம் வல்லவர்கள்.

உங்களுக்கு பச்சை குத்தினது நான் தான்.... ஆனாலும் சில விடயங்களை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்...

நாடுகடந்த அரசுக்கு தேவை இப்போது ஆழுமை தான்... அது புலிகள் அளவுக்கான ஆழுமையாக இல்லாவிட்டாலும் அதுதான் மிக முக்கியமாக தேவைப்படுகிறது...

இங்கை பார்த்தீர்கள் எண்டால் முன்னாள் மாற்றியக்கங்கள்( PLOT, TELO, EPRLF, TEA, EROS) 80 களில் பலமாக இயங்கிய காலங்களில் காணப்பட்டது போல மிகப்பலவீனமாக நாடுகடந்த அரசும் காணப்படுகிறது... பலவீனமான ஒரு கட்டமைப்பை நம்பி யாரும் ஆதரிக்க முன்வர மாட்டார்கள்.... உதாரணத்துக்கு இந்தியாவை எடுத்தீர்கள் எண்டால் 1987 ல் கொஞ்சம் பலமாக இருந்த EPRLF ஐ பலப்படுத்த முயண்றது மற்றவர்களை ஒதுக்கியது...! அது போல தான் இதுவும் கூட...

இப்ப நீங்கள் சொல்லும் எந்த நாட்டுக்கும் இலங்கை அரசாங்கத்தை பகைத்து ஒரு அமைப்பை வளர்க்க வேண்டிய தேவை இல்லை... அப்படி எண்றால் தவிர்க முடியாத பலமான அமைப்பாக நீங்கள் உருப்பெறும் போது உங்களை ஆதரிக்க கூடிய நிலை தோண்றலாம்( விடுதலைப்புலிகள் காலங்கள் போல )....

வாழ்த்துக்கள்

அதேநேரம் உமை சொன்னதுபோல் நாமே எமது நடவடிக்கைகளை காட்டிக்கொடுக்காது அமைதியாக சாதனைகள் செய்வோம்.

.

இப்ப நடக்கும் பிரச்சினைகளை போல பல மடங்கு பிரச்சினைகளை சந்தித்து தான் எங்களின் தலைவர் விடுதலை புலிகள் எனும் அமைப்பை கட்டிக்காத்தார் எண்டதையும் நினைவில் கொள்ளுங்கள்.... ! இப்படியான பிரச்சினைகள்தான் அவரை விட்டுக்கொடுப்பு அற்ற ஒரு உறுதியான மனிதராக்கியது...

எல்லாராலும் பிரபாகரன் ஆகிவிட முடியாது... ஆனால் அண்மைக்கு போக முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி..! :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்! :)

சொல்லுப் பல்லக்கு

தம்பி கால் நடை

அறிக்கைகள் வெளியிட்டு

அடுத்தவர்களை அமத்த நினைக்காமல்

சொல்லுக்கு முன் செயல் வேண்டும்.

  • தொடங்கியவர்

:lol:

சொல்லுப் பல்லக்கு

தம்பி கால் நடை

அறிக்கைகள் வெளியிட்டு

அடுத்தவர்களை அமத்த நினைக்காமல்

சொல்லுக்கு முன் செயல் வேண்டும்.

... சொல்லுக்கு முன் செயல் உள்ள ... கும்பலில் உள்ள ... ஆதிரை ... கூறுகிறார் ... கேளுங்கள்!!!!!!!!! :lol: ....... இப்படியான செய்திகள் ... ஆதிரைகளின் ... நிரந்தர நிம்மதி/நித்திரைகளை இல்லாது செய்து விடப்போகிறது!! :lol: !

நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழீழ அங்காரத்துக்கான தேடல் தென் சூடானையும் கடந்து தொடர வேண்டும் என்பதோடு உள்வீட்டு கலகக்காரர்களையும் கொஞ்சம் கவனித்துக் கொண்டு பயணிப்பது நன்று.

  • தொடங்கியவர்

தமீழ அரசு ஒரு தமிழர் களுக்கான வங்கி ஒன்றை உருவாக்க வேண்டும் .

:wub:... நல்லது!!! ... இங்கு புலமெங்கும் தனிநபர்கள்/பினாமிகளிடம் ஒதுங்கியுள்ள ... எம் மக்களின் பணங்கள்/சொத்துக்கள் ... இதன் மூலம் தனிநபர்கள் ஏப்பம் விடுவதை தவிர்க்கலாம்!!!

வாழ்த்துக்கள்!!

தமீழ அரசு ஒரு தமிழர் களுக்கான வங்கி ஒன்றை உருவாக்க வேண்டும் .ஜரோப்பாவில் இருக்கும் வங்கிகளுடன் பேசி ஒரு நிதி நிறுவனம் உருவானால் மிகவும் நல்லது.

இங்கிலாந்தில் lyods bank il முஸ்லீம்களின் மத நம்பிக்கைக்கு ஏற்றது போல் நிதி பிரிவு உள்ளது.

இம்முறையை நாமும் பரிசீலீக்கலாம். பணம் போடுபவர்கள் நம்பிக்கை பெறுவார்கள்.

எங்களால் தான் தாயகத்தில் உள்ள மக்களுக்கான அரசியல் தீர்வு கொன்டு வர பலம் உண்டு. அதை செய்வோம்

1. இந்த விடயம் பற்றி கூடுதலாக, ஆழமாக பரிசீலிக்கப்படல் வேண்டும்

2. உரியவர்கள் கவனத்திற்கு ஒரு திட்டமிடல் அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்

3. உலக நாட்டு சட்ட அமைப்புக்களுக்கு அமைய நிறுவப்படல் வேண்டும்

4. மக்களை பங்காளிகளாக மாற்ற வேண்டும்

5. தாயக / புலம்பெயர் மக்ககளுக்கு உதவ வேண்டும்

6. நாடுகடந்த அரசு உட்பட விடுதலை நோக்கிய சட்டரீதியாக உதவ வேண்டும்

இஸ்ரேல் இவ்வாறான திட்டங்கள் மூலம் உலகளாவிய புலம்பெயர் மக்களிடம் ஆழமான உறவை வைத்துள்ளது

http://www.israelbonds.com/

60 Years of Achievement

A plaque in the King David Hotel commemorates the historic conference that led to the founding of Israel Bonds. President Shimon Peres has hailed the founding of Israel Bonds as “a vital chapter in Israel’s history.” Since the birth of Israel Bonds in a cramped conference room in Jerusalem’s King David Hotel, the organization’s ensuing success has been remarkable –securing

In the beginning: David Ben-Gurion inaugurates a Bonds-supported highway in the Negev. worldwide sales exceeding $32.4 billion; perpetuating the rapid development of Israel’s economy; and building a global partnership with Israel. Now celebrating its 60th anniversary, Israel Bonds has been widely praised for its extraordinary legacy of achievement. In the words of Finance Minister Yuval Steinitz: “The country has been transformed, a source of pride not only for Israelis but for friends and supporters the world over.”

Today: The Bonds organization has helped fuel Israel’s high-tech revolution, exemplified by Intel’s nanotechnology center in Kiryat Gat. Proceeds realized through the sale of Israel bonds have helped cultivate the desert, build transportation networks, create new industries, resettle immigrants, and increase export capability, maximizing the nation’s high-tech potential.

http://www.israelbonds.com/israelbonds/history.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள்.மேலும் நண்பர்களை உருவாக்குவோம்.

நல் வாழ்த்துக்கள்.

தூதரகத்தில் கும்மாளமடித்து, விதண்டாவாதம் பேசி, உறவுகளை புலத்துக்கு கடத்தி, உண்டு-களித்து நித்திரை கொள்ளாமல் இருந்தால் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.