Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியாவை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம் – அதுவே இந்தியாவின் முடிவை மாற்றியதாம்

Featured Replies

After the vote, India’s PM Manmohan Singh wrote to Rajapaksa to tell his him that India had tried, at least, to introduce “an element of balance in the language of (a) resolution.” Nevertheless, India now finds itself in untested territory, both in regards to its relationship with its southern neighbor and its role as a regional power. “India has made a serious diplomatic blunder,” says Shanaka Jayasekara a lecturer at the Center for Policing, Intelligence and Counter Terrorism at Macquarie University. Before the vote, both ruling and opposition politicians in the southern state of Tamil Nadu, which have close ties to Sri Lanka’s Tamil minority, exerted pressure on the Singh government to support the resolution. Against the backdrop of recent election losses for the Congress Party, New Delhi did not want to risk antagonizing a vital ally, says Jayasekera.

Others see India’s distancing itself from its long-term ally in a more strategic light. R. Hariharan, a former intelligence head of the India Peace Keeping Force stationed in northern Sri Lanka in the early 1990s, says the Singh government wanted to send out a signal to Colombo that has been dragging its feet on one of New Delhi’s key requests: to give more power to minority Tamils. “I feel Indian government got cheesed off with Rajapaksa’s prevarication. This was probably an opportunity to remind him that he can’t get away with it,” he says.

Read more: http://globalspin.blogs.time.com/2012/03/30/u-n-sri-lanka-vote-redefines-indias-regional-role/#ixzz1qcndhbj9

  • Replies 57
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சோனியாவை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம் – அதுவே இந்தியாவின் முடிவை மாற்றியதாம்

மார்சுவரி கோஸ்டிகள்.. பிணத்தை அங்கதான் உறைய வைப்பார்கள்.. இந்த பிணம் (சோனியா மைனா) அந்த பிணத்திடம்(மானங்கெட்ட சிங்) சொன்னதாம். அதால அந்த பிணம் நடவடிக்கை எடுத்ததாம்..

டிஸ்கி:

கேக்குறவன் கேணை என்றால் கேரளாக்காரிக்கு ஏழு கைகளாம்..

** சுய தணிக்கை செய்யப்பட்டது **

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் தமிழர்களை ஏமாற்ற ஒரு பகிரங்க நாடகம். சுத்து மாத்து

  • கருத்துக்கள உறவுகள்

அப்பட்டமான ஏமாற்று நாடகம். தமிழரைப் பொறுத்தவரை மத்தியில் தனி ஈழத்திற்கு ஆதரவான நிலை தோன்றுவது கடினமே.

  • கருத்துக்கள உறவுகள்

இத தமிழக மக்களின் வாக்குகளைக் குறி வைத்துச் சொல்லப்படும் கருத்தாகும்.தமிழகம் இன்னும் பழைய நிலையில் இருக்கும் என்று கணிப்பிடுவது தவறு.எராளமான புதிய வாக்காளர்கள் கல்வியறிவும் உலகஅரசியல் அறிவும் பெற்றவர்களாக இப்போது இருக்கிறார்கள்.முன்ப போல் தலைவன் சொன்னதை வேதவாக்காக எடுக்கும் மனோநிலை மாறி வருகின்றது.எதையும் பகத்தறியும் ஆற்றல் உள்ளவரர்களாக இருக்கிறார்கள்.வயதானவர்கள் இன்னும் பழைய மனோநிலையில் இருந்'தாலும் இளையவர்கள் அவர்களை மாற்றுவார்கள்.ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி என்றால் அது தமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த கட்சி என்று நம்பிக்கை வைத்து ஆதரித்தார்கள்.இப்போது அதே காங்கிரசைத் தூக்கி வீசிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் மீது மட்டுமல்ல.. முழு ஈழத்தமிழ் மக்கள் மீது காண்டோடு இருந்து பெரும் அழிவுக்கு வித்திட்ட சோனியா காந்தி இந்த வீடியோவை பார்த்தாரோ இல்லையோ.. (ஒருவேளை வீடியோவை பார்த்து சோனியா மனம் இழகி இருந்தால்.. ஈழத்தமிழர்களுக்கு செய்த அநியாயத்திற்கு அவர் செய்ய வேண்டிய பிரதி உபகாரம் என்பது நிறைய இருக்குது.. ஆனால் செய்தது.. மீண்டும் தந்திரமே...???!)

தமிழகத்தில் காங்கிரஸின் இருப்புக்கு எழுச்சிக்காக எழுதப்பட்டுள்ள ஒரு போலிக் கட்டுரை இது..! காசிற்காகவும்.. அரசியல் செல்வாக்கிற்காகவும்.. இந்திய ஊடகங்கள்.. நிர்வாணமாக நிற்கக் கூடத் தயங்கா..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Naysayers ஆக இருப்பது ஒரு நல்ல வழி..! :rolleyes: சொன்னது பிழைத்தால் உள்ளுக்குள் சந்தோசம்..! சொன்னமாதிரியே நடந்தால் உள்ளத்தில் பெருமை..! :D

இந்தியா மாறியிருக்கிறது. அந்த மாற்றத்தைச் சொல்வதற்கு ஒரு காரணம் தேவை. அதுதான் இது. இந்தியாவின் மாற்றங்களுக்குக் கூறப்படாத காரணிகள் ஏராளம். விடுதலைப்புலிகள் இருந்தபோது அவற்றைச் செயற்படுத்த முடியாமற்போயிற்று. காரணம் உலக ஒழுங்கு அவ்வாறுதானிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

குகன்,

சிலவேளைகளில் உங்கள் கருத்துக்களில் மிகுந்த அப்பாவித்தன்ம் தெரிகிறதென்றுதான் நான் நினைக்கிறேன். சரி, அதைப்பற்றி நான் கதைக்க வரவில்லை.

கிருபனின் கருத்து மிகவும் சரியானது.

இந்தியாவும் தமிழகமும் வேறு வேறு நாடுகள். தமிழகத்தானை இந்தியன் என்று எப்போதுமே மத்திய அரசோ அல்லது வட இந்திய தேசமோ நினைத்தது கிடையாது. 40 பாராளுமன்ற உறுப்பினர்களிருந்துமே கருநாநிதியால் ஒன்றையும் அங்கு புடுங்க முடியாமல்ப் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள். ஊழல் என்று நீங்கள் சொன்னாலும் கூட அதை விடவும், தமிழகத்தானுக்கே உரித்தான அடிமைச் சேவக உணர்வும் போலி இந்தியத் தேசியவாதக் கற்பனைக்குள் அவர்கள் இன்னும் உழன்று கொண்டிருப்பதுதான்.

தமிழகத்தானை இந்திய தேசம் எப்படிக் கவுரவப் படுத்துகிறதென்பதற்கு 500 ம் மேற்பட்ட தமிழக மீனவர் கொல்லப்பட்டதையும் 2 கேரள மீனவர் இத்தாலிக் கப்பல் குழுவால் கொல்லப்பட்டதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் இன உணர்வாளர்கள் ஆங்காங்கே புரட்சி செய்துவருகிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அவை இந்திய அரசை அசைக்கப் போதுமானவை அல்ல. அதேவேளை இந்தப் புரட்சிகளை அடக்குவதற்கு இந்திய மத்திய அரசு எந்த வேளை வேன்டுமானாலும் தனது அடக்குமுறை இராணூவத்தை ஏவிவிடலாம் என்பதையும், தமிழகமும் கூட இன்னொரு காஷ்மீராகவோ அல்லது இன்னொரு மணிப்பூர் - நாகலாந்தாகவோ மாறும்.

இந்தியா ஒருபோதும் தமிழருக்கு உதவப் போவதில்லை. ஏனென்றால் அது உதவக்கூடிய எல்லையைத் தாண்டி நெடுதூரம் சென்றுவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை சிறிலங்காவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்காக தமிழரை காவு கொடுக்க அது இனியும் பின்னிற்கப்போவதில்லை.

ஜெனீவாவில் இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததற்கு இரு காரணங்கள் உண்டு. முதலாவது தீர்மானம் இந்தியாவால் இலங்கைக்குச் சாதகமானதாக மாற்றியமைக்கப்பட்டே முன்வைக்கப்பட்டது. அதாவது இலங்கை மீது வேறு தீர்மானங்கள் இனி கொண்டுவர முடியாதவாறான திருத்தம் அது. இரண்டாவதாக தான் எதிராக வாக்களித்தும் தோற்றுவிட்டால் என்னசெய்வது என்கிற பிராந்திய வல்லரச திமிரும், அமெரிக்காவுடன் ஒத்துப்போவதாகக் காட்டும் பாசாங்கும் தான்.

இந்தியாவை நம்புவதை விட்டுத்தள்ளுங்கள். முதலில் உங்களில் நம்பிக்கை வைய்யுங்கள், எவ்வளவோ சாதிக்கலாம்.

Edited by ragunathan

இந்தியா மாறியிருக்கிறது. அந்த மாற்றத்தைச் சொல்வதற்கு ஒரு காரணம் தேவை. அதுதான் இது. இந்தியாவின் மாற்றங்களுக்குக் கூறப்படாத காரணிகள் ஏராளம். விடுதலைப்புலிகள் இருந்தபோது அவற்றைச் செயற்படுத்த முடியாமற்போயிற்று. காரணம் உலக ஒழுங்கு அவ்வாறுதானிருந்தது.

இறைவன் இந்தியா ஒன்றும் பெரிதாக மாறவில்லை. அதுக்கான அறிகுறிகள் என்னும் தென்படவில்லை, மாறுவதற்கான சூழல் என்னும் வரவில்லை என்றே நினைக்கிறன்.

அமேரிக்கா கொண்டுவந்த பிரேரினையை ஆதரித்தது ஒன்றும் விருப்பத்தினால் அல்லது மாற்றத்தினால் அல்ல, அது அவர்களுக்கான நிர்ப்பந்தம். தங்களின் முடிவு இலங்கைக்கு கோபமூட்டாமல் இருக்க பல சந்திப்புக்களையும் வெறும் சிலரை வைத்து அறிக்கைகளையும் இந்தியா வெளியிட்டது.

கடைசி நேரம் வரை தமது முடியை மவ்னமாக வைத்திருந்து பல காரியங்களை சாதித்தும் இருந்தது. இது மாற்றம் இல்லை சந்தர்ப்பம் மட்டுமே.

மாற்றம் வந்தால்தாலே அன்றி இந்தியாவுக்கு பிராந்திய வல்லரசாகும் தகமை கைவிட்டுப் போகும். இப்போதுள்ள நிலைமையில் இந்தியாவையும் தாண்டி சினாவின் ஆதிக்கம் அந்தப் பிராந்தியத்தில் வலுக்கிறது. இதை இந்தியா உணர்ந்தாலும் பழசுகள் எல்லாம் போய் புதுசுகள் வந்தால் தான் அங்கே மாற்றம் நிகழ வாப்பிருக்கும்.

நிச்சயமாக காங்கிரஸ் இருக்கும்போது மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை.

இந்தியா தமிழர் தேவைக்காக மாறவில்லை. அவர்களுக்குத் தேவை சிறிலங்கா முழுமையும் தங்களின் ஆதிக்கத்துள் இருக்க வேண்டும் என்ற விருப்பமே. போருக்கு முந்திய, போர்க்காலங்களில் எப்படி சிறிலங்காவைக் கையாள்வது என்பது இன்று கடந்துபோயிற்று.

தற்போது சிறிலங்கா இந்தியாவைக் கடந்து போய்விடும் என்ற நிலையில்தான் அதனை மீண்டும் தனக்குள் கொண்டுவருவதற்கு இந்தியாவின் இந்த மாற்றம்.

இந்தியாவும் தமிழகமும் வேறு நாடுகளா!

இந்தியாவும் ,, தமிழகமும் வேறுநாடுகள்தான்...

ஈழத்தமிழர் விஷயத்தில்!

அதுதான் சொன்னீங்களே ,,, இயர் 91” சம்பவம் அவங்களுக்கு புடிகல்லைனாலும்...

அப்புறம் மனச மாத்திகிட்டாங்கன்னு!

சட்டசபை தீர்மானம்,,, மத்திய அரசுக்கு நெருக்கடி...தீகுளிப்பு...

சாலைமறியல்,, இத எல்லாத்தையும் செய்வது,,, அதே இந்தியகுடியரசு டீல்ல வாழுற,,

ஈழதமிழ் ஆதரவு தமிழன்! வேறுதான்!

பாலச்சந்திரனின் படங்களைக் கண்டு மனம் கலங்கிய சோனியா உடனேயே இலங்கைக்கு ஒரு கோல்போட்டு, (அமெரிக்கா பலதடவை செய்திருப்பதுபோல்) பாலச்சந்திரனதும் மற்றயவர்களினதும், மரணத்தை விசாரிக்க சொல்லியிருக்கலாம். ஐ.நாவால் சுட்டிக்காட்டடிய நல்லிணக்க ஆணைகுழுவின் குறையாகிய பொறுப்பு கூறலை நிவிர்த்தி செய்யக் கூறியிருக்கலாம். இந்தியா வெளிப்படையாக, பலதடவைகள், தான் இலங்கைக்கு போரில் வெல்ல உதவியிருப்பதாக கூறி இருப்பதால், இந்திய தரப்பினால் தமிழ் மக்களுக்கு ஒரு தீங்கும் விளைவிக்க படவில்லை என்பதை தீர்மானிக்க ஒரு கமிசன் அமைக்க சொல்லி பிரதமரை பணித்திருக்கலாம். இங்கிலாந்திலும் இவரை சந்தித்த தமிழ் அமைப்புக்களிடம் முன்னர் ஒருதடவை தமிழருக்கு, இலங்கை தீங்கிளைத்திருப்பதை ஒத்துகொண்டிருந்தவராகையால் சனெல்-4 வீடியோக்களை பார்க்க ஆர்வம் காட்டியிருக்கலாம்.

இந்த செய்தி வெளியில் வந்த காரணம், சோனியாவை வெளியில் காட்டி, பிரேரணை விடையத்தில் இந்தியாவின் தோல்வியை இந்தியர்களுக்கு தெரியாமல் கோழிகரப்புக்குள் மூடி மறைக்க முயல்வதாகத்தான் கொள்ள வேண்டும்.உண்மையில் அரசியல் விளங்காத வட இந்தியர்கள். சரியான தென்னிலங்கை மோடைய அரசியலை பின்பற்றுபவர்களென்பதால்த்தான், காங்கிரசு, சோனியாவைக்காட்டி, கொள்கை ஒன்றும் இல்லாமல் தேர்தல் வென்றுகொண்டுவருகிறது.

இந்த செய்தியால், ஈழத்தமிழர்களின் போக்கிலோ அல்லது அமெரிக்காவின் போக்கிலோ எந்த மற்றமும் வராது. இது நன்றாகவே காங்கிரசுக்கு தெரியும். இந்தியா ஈழத்தமிழர்களை நாயாகத்தன்னும் மதிக்க தயாரில்லை. என்வே அவர்கள் இதை நம்பாவிட்டால் காங்கிரஸ், அது ஈழத்தவரின் பிரச்சனை என்று விட்டுவிடும். ஆனால் பிரேரணை நேரம் அவர்கள் இரண்டு மாங்களைத்தான் இலக்கு வைத்தார்கள். அதில் ஒன்றான இலங்கையை இனி கனகாலம் சர்வதேசத்திலிருந்து பாதுகாக்க முடியாது என்பதால் வெகுவிரைவில் இலங்கையிடம் அவர்கள் தமது இயலாமையை ஒத்து கொள்ளவேண்டும். அப்போது பணத்திற்க்காக தன்னைக்க காப்பாற்றும் "மேசினறியாக" இந்தியாவை பாவிக்கும் இலங்கை, இந்தியவை தூக்கியெறிந்துவிடும். வட இந்திய தேர்தல்களில் சோனியாதான காங்கிரசின் இராம பாணம். சோனியாவை பொய்யாக ஆக்கிவிடால் காங்கிரஸ் வேரோடுதான் விழவேண்டி வரும். இருந்தாலும் காங்கிரசின் ஈடாடிப்போயிருக்கும் நிலை, இலங்கை போனாலும், தமிழ்நாட்டை தன்னும் மீளப்பெற இவ்வளவு ஆபத்தான ஒரு முயற்சியில் இறங்குகிறது.

தமிழ் நாட்டில் கங்கிரஸ் கருணாநிதி மீதான வழக்கை இழக்கியிருக்கிறது. ஜெயலலிதாவை குறிவைத்தும் இதுவரையில் பெரிய முன்னேற்றமேதும் காணவில்லை. ஆனால் இத்துடன் காங்கிரஸ் வாலைசுருட்டிக்கொண்டு கொண்டுவிட்டதாக எடுக்க முடியாது. இறுதிநேரத்தில் ஒருவர் மீது தாக்குதலை நடத்திக்கொண்டு மற்றவை வளைத்தெடுத்து தமிழ்நாட்டில் திரும்பவும் கால் ஊண்ற செய்யும் முயற்சியே இது. ஆனால் தமிழ்நாட்டில் விழிப்பான தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கடந்த தேர்தலின் பின்னும் கண்டுகொள்ளவில்லை போலும்.

இந்தியா புகுத்திய திருத்தங்களால் பிரேரணையின் நிலைமையில் எந்த மற்றமும் ஏற்படவில்லை. ஐ.நா.வால் தான் பகவதியும், புறுகொடவும் இலங்கை வந்தார்கள். ஆனால் பின்னர் எங்கே போனார்கள் என்பது யாருக்கும் தெரியாது. போர்க்காலத்தில் இருந்த எத்தனையோ ஐ.நா, மற்றும் தன்னார்வ அமைப்புக்களை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பதை மகிந்தா தெரிந்துதான் வைத்திருந்தார். இவர்கள் எல்லோரும் இலங்கையின் அனுமதியுடன் தான் உள்ளே வந்திருந்தார்கள். இலங்கையை வலுக்கட்டாயப்படுத்தி ஒருவரும் உள்ளே வந்து வெள்ளை வானைத்தப்பி அலுவல்கள் செய்ய முடியாது. ஐ.நா ஒருகாரியாலத்தை வைத்திருக்க தடுமாறுகிறது என்பது பலதடவைகள் அந்த ஊழியர்கள் தமது பாதுகாப்பை ஐ.நாவின் மேலிடத்திற்கு செய்தி அனுப்பி பலப்படுத்துவதிலிருந்து எல்லோருக்கும் தெரியும். தன்னைக்காப்பாற்ற மாட்டாத இன்னொரு ஐ.நா.மேற்பார்வை குழுவை நம்பி இலங்கையில் யாரும் எதிலும் இறங்க மாட்டார்கள். .

ஒப்பு விளையாட்டில் திறைமையான தாய்கன்னை தொட வருபவர்கள் நன்றாக வட்டத்திற்குள் வந்து மாட்டும் வரை விளையாடில் தன் திறமைகளை வெளிக்காட்டுவதில்லை அது மட்டுமல்ல தனது உதவிகளையும் மிகவனமாக தனக்கு பின்னாலேயே வைத்துக்கொள்வதுண்டு. எதிரி வகையாக வந்து மாட்டிய பின்னர்தான் தனது கன்னையை பரப்புவதும், தானும் தன் திறமைகளைக்காட்டி விளையாடத்தொடங்குவதும். 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா ஒத்துக்கொள்ளாத போது தட்டு தடுமாறிய மன்மோகன் சிங், திருத்தங்கள் எற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் தாங்கள் பிரேரணையை ஆதரிக்க போவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். (இதை படித்த இலங்கையைர் மன்மோகன் சிங்கின் மன்னிப்பு கடித்தத்தை கணக்கிலும் எடுக்கவில்லை.)இதையெல்லாம் தெரிந்துதான் அமெரிக்கா இரண்டாவது திருத்தத்தை எற்றுக்கொண்டது. இலங்கை, ஆரம்பத்தில் விடயம் தெரியாமல் நல்லிணக்க விசாரணைக்குள் மாட்டிவிட்டது. இப்போ ஆப்பிழுத்த குரங்காக அவதிப்படுகிறது. அது போக இப்போ இந்தியா பிரேரணைக்குள் மாட்டியிருக்கிறது. இந்தியா இனி அதை மறுக்க முடியாது. ஒவ்வொருதடவையும் அமெரிக்கா பிரேரணைச் சரத்துகளை நினைவு படுத்தும் போது இலங்கைக்கு இருக்கும் பாதை "எய்தவனிருக்க அம்பை நோவது" மட்டும்தான். காங்கிரஸ் தேர்தல் நேரம் இலங்கையால் நன்றாகத்தான் சட்டியில் போட்டு வறுக்கப்பட போகிறது.

Edited by மல்லையூரான்

தனியாய் சோனியா மட்டும் எடுக்கும் முடிவல்ல இது.

இரண்டாவது நாங்கள் சிங்களவனிடம் இரண்டாம் தர பிரஜையாக இருக்கவிருப்பமில்லாமல் போராட தொடங்கினோம்,ஆனால் தமிழ் நாட்டு தமிழன் அப்படியில்லை அவன் இந்தியனாக இருக்கத்தான் விரும்புகின்றான்.

வைகோ ,சீமான் ,நெடுமாறன் கட்டுகாசே எடுக்க முடியாத கோஷ்டிகள் .இவர்களை கணக்கிலேடுப்பது நாங்கள் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழர் தேவைக்காக மாறவில்லை. அவர்களுக்குத் தேவை சிறிலங்கா முழுமையும் தங்களின் ஆதிக்கத்துள் இருக்க வேண்டும் என்ற விருப்பமே. போருக்கு முந்திய, போர்க்காலங்களில் எப்படி சிறிலங்காவைக் கையாள்வது என்பது இன்று கடந்துபோயிற்று.

தற்போது சிறிலங்கா இந்தியாவைக் கடந்து போய்விடும் என்ற நிலையில்தான் அதனை மீண்டும் தனக்குள் கொண்டுவருவதற்கு இந்தியாவின் இந்த மாற்றம்.

தெளிவான கருத்து இறைவன்.

உண்மையாகவே இந்தியா கவலை கொள்வது தமிழனுக்காக அல்ல, மாறாக இலங்கை தனது கட்டுப்பாட்டிற்குள்ளிருந்து மெல்ல மெல்ல வெளியே போகிறதென்பதற்காகவே.

தனியாய் சோனியா மட்டும் எடுக்கும் முடிவல்ல இது.

இரண்டாவது நாங்கள் சிங்களவனிடம் இரண்டாம் தர பிரஜையாக இருக்கவிருப்பமில்லாமல் போராட தொடங்கினோம்,ஆனால் தமிழ் நாட்டு தமிழன் அப்படியில்லை அவன் இந்தியனாக இருக்கத்தான் விரும்புகின்றான்.

வைகோ ,சீமான் ,நெடுமாறன் கட்டுகாசே எடுக்க முடியாத கோஷ்டிகள் .இவர்களை கணக்கிலேடுப்பது நாங்கள் மட்டுமே.

ஆக, இந்தியா தமிழகத்துத் தமிழனை இரண்டாம்தரப் பிரஜைகளாகத்தான் பார்க்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்??

தனியாய் சோனியா மட்டும் எடுக்கும் முடிவல்ல இது.

இரண்டாவது நாங்கள் சிங்களவனிடம் இரண்டாம் தர பிரஜையாக இருக்கவிருப்பமில்லாமல் போராட தொடங்கினோம்,ஆனால் தமிழ் நாட்டு தமிழன் அப்படியில்லை அவன் இந்தியனாக இருக்கத்தான் விரும்புகின்றான்.

வைகோ ,சீமான் ,நெடுமாறன் கட்டுகாசே எடுக்க முடியாத கோஷ்டிகள் .இவர்களை கணக்கிலேடுப்பது நாங்கள் மட்டுமே.

ஏன் அர்ஜுன் அண்ணா ,,,இரண்டாம்தர பிரஜையாக இருந்து போராட்டம் ஆரம்பிச்ச நாங்களே........

சொந்த கோவத்துக்கா ,,எங்க மானம் மரியாதையை,,, பங்கர் தலைவன்னு பேரம்பேசி..

சிங்களவன் தர்ற “கட்டு காசுக்கா” விக்குறப்போ..........

எங்கயோ பொறந்தாலும்/இருந்தாலும் ,, இனமானத்துக்காக ...

தங்களோட குரலை முடியுமானவரை ,, கொடுத்தவங்க,,

அவங்க கட்டுகாசை இழந்தாலும்.... அவங்க மனசாட்சிக்கு வெற்றிதான்!

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா, தனது மகன் ராகுலை பார்த்து.... ஏன் கலியாணம் கட்டவில்லை என்று, கண்ணீர்விட வேண்டும்.

தனக்கு, புற்று நோய் வந்துள்ளதே... அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும்... இத்தாலிக்கும் பறந்து, பறந்து திரிய.. வேண்டி உள்ளதே... என்றும் கவலைப் படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பற்றிய இந்தியாவின் வெளிவிவகார கொள்கை என்றும் மாறவில்லை

1970களின் பிற்பகுதியில் இலங்கையில் தமிழருக்கு இருந்த குறைபாடுகளை பயன்படுத்தி இந்தியா இலங்கையின் வெளிவிவகார கொள்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்தது. இதற்காக பெருமளவு தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்தது. இந்த ஆயுதப்பயிற்சி பெற்ற இளைஞர்கள் தனி ஒரு இயக்கமாக செயற்பட்டால் தமது நோக்கம் நிறைவேறாது என்று எண்ணிய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் 30 முதல் 50 வரையான ஆயுதமேந்திய அமைப்புகளை உருவாக்கினர்.

இலங்கையின் வெளிநாட்டு கொள்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் தமிழ் இளைஞர்களுக்கு இந்தியா ஆயுதப்பயிற்சி வழங்கிய போதும் இளைஞர்களின் நோக்கம் இந்தியாவிற்கு உதவுவதாக அமையவில்லை. தமது மக்களுக்கு ஒரு நிம்மதியான எதிர்காலத்துக்காக தனியான நாடான தமிழீழத்துக்காக அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். இந்தியாவின் திட்டப்படி பல ஆயுதமேந்திய அமைப்புகள் உருவாகி மக்களை பல்வேறு திசைகளிலும் வழிநடத்தி குழப்பம் உருவாக அதை தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார்கள். தனியொரு விடுதலை இயக்கமாக விடுதலைப்புலிகள் அமைப்பு உருவானது.

தனது திட்டம் தோற்றுப்போன நிலையில் இந்தியா உடனடியாகவே நடவடிக்கையில் இறங்கியது. ஈழத்தமிழ் மக்களுக்கு தான் பகிரங்கமாக வழங்கிய இராஜதந்திர ஆதரவையும் பரப்புரை ஆதரவையும் விலக்கி கொண்டது. இதனால் துணிவு கொண்ட சிறிலங்கா அரசு பெரும்படையெடுப்பில் வடமாராட்சியை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் தமிழ் மக்களை காப்பாற்ற வருவதாக பாசாங்கு செய்து கொண்டு இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளை அழிக்க இலங்கையில் நுழைந்தது. விடுதலைப்புலிகள் பிரேமதாச அரசுடன் இணைந்து மீண்டும் இந்தியாவை வெளியேற்றினார்கள். இரண்டாம் முறையும் தோல்வி கண்ட இந்தியா நீண்டகாலம் எடுத்து இலங்கை நிலையை ஆய்வுசெய்து ஆயத்தங்களை செய்தது. மூன்றாம் முறையும் தோற்றுப்போக இந்தியா விரும்பவில்லை. இலங்கையின் வெளிநாட்டு கொள்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முதலில் என்ன விலை கொடுத்தும் விடுதலைப்புலிகளை அழிப்பது அவசியமானது என இந்திய கொள்கைவகுப்பாளர்கள் கருதினார்கள். அது மே 19 2009 ல் வெற்றி பெற்றிருப்பதாக இந்தியா கருதுகிறது.

முதல் படி முற்றுப்பெற்ற நிலையில் இந்தியா இரண்டாவது படிக்கு ஜெனிவாவில் நகர்ந்துள்ளது. இந்த இரண்டாவது படி இலங்கையின் வெளியுறவு கொள்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாகும். 2009ல் ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவுடன் சிறிலங்கா வெற்றி பெற்றது. ஆனால் தனக்கு சீன ஆதரவு உள்ள நிலையில் இந்தியா முக்கியமல்ல என சிறிலங்கா தொடர்ந்து நம்பி வருகிறது. சிறிலங்காவின் வெளியுறவு கொள்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய தேவையை இந்தியா புரிந்து கொண்டதற்கு காரணம் 1970 களில் இருந்து சிறிலங்கா சீனாவுடன் கொண்டுள்ள அசாதாரணமான உறவு. ஆகவே அந்த உறவை அடிப்படையாக வைத்து இந்தியா தனது இரண்டாவது படியை ஆரம்பித்துள்ளது. 2012 மார்ச் மாத ஜெனிவாவில் சிறிலங்காவை கைவிட இந்திய நீண்டகாலத்துக்கு முதலே தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால் கடந்த முறை வெற்றி பெற்ற அகங்கதரத்தில் சிறிலங்கா அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் நன்றாக பகைத்துக் கொள்ள இந்தியா விரும்பியே அனுமதித்தது. உச்சியில் ஏத்தி விழுத்தி பாடம்புகட்ட இந்தியா திட்டமிட்டு செயற்பட்டுள்ளது.

இந்த முறை தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை பயன்படுத்தாமல் இந்தியா சிறிலங்காவின் வெளியுறவு கொள்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக தெரிகிறது. இந்த முயற்சி சிங்கள அரசியல் தலைவர்களுக்கு கடுமையான பாடங்களை புகட்டும் சாத்தியம் நிறையவே உள்ளது. தமிழகத்தின் பலம்வாய்ந்த அரசியல் மற்றும் பொருளாதார சக்திகளுடன் ஈழத்தமிழ் மக்கள் இணைந்து சாதுரியமாக செயற்பட்டால் இந்திய சிறிலங்கா அரசியற் சதுரங்கத்தின் பக்கவிளைவுகள் ஈழத்தமிழ் மக்களுக்கு நன்மையாக முடியலாம். இந்த நன்மை தமிழ் மக்களுக்கான தனியான நாடாக அமையும் சாத்தியம் இல்லை என்பதையும் நாம் விளங்கி கொள்ள வேண்டும்.

சோனியா

இந்தியாவின் கொள்கையை திட்டமிடுவதில் பெருமளவில் அனுபவம் மிக்க உயரதிகாரிகளே ஈடுபடுவதாக தெரிகிறது. அரசியல் தலைவர்களின் பங்களிப்பு கணிசமானதாக தெரியிவில்லை. ஆயினும் அரசியற்கட்சிகளின் கொள்கை வகுப்பாளர்களும் குறிப்பிட்ட அளவில் பங்களிக்கிறார்கள். அந்த வகையில் சோனியாவின் பங்கு கணிசமானதாக இருக்க வாய்ப்பில்லை.

சோனியாவின் பெயர் அவரது அரசியல் எதிரிகளாலும் ஆதரவாளர்களாலும் தமது அரசியல் போட்டியில் தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது போல தெரிகிறது. சோனியாவே முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு காரணம் என அவரது அரசியல் எதிரிகளும் ஜெனிவாவில் இந்தியாவின் மாற்றத்துக்கு சோனியாவே காரணம் என அவரது அரசியல் ஆதரவாளர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

சில சம்பவங்கள் பற்றிய உண்மை தன்மை அறியப்பட்டதாக இருக்கிறது. சோனியா நளினியின் கருணை மனுவிற்கு ஆதரவளித்ததும், உலகத்தமிழர் பேரவை பிரதிநிதிகளை சந்திக்க அனுமதித்து தான் முள்ளிவாயக்காலில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி அறிந்திருப்பதாக தெரிவித்ததும் ஒரளவுக்கு நம்பகமானதாக தெரிகிறது.

Edited by Jude

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் இந்தியாவை விட கேவலமாக சிறுபான்மையினரை நடாத்துகின்றார்கள் ,போராடவும் முடியாது வெல்லவும் முடியாது என்றால் இருப்பதாய் கொண்டு திருப்திபட்டு வாழ பழகிவிடுகின்றார்கள்.

நீங்கள் சொன்னா மூவரும் குரல் கொடுப்பது தமது சுய அடையாளத்திற்காக ,இனமானதிற்காக அல்ல ,அதனால் தான் கட்டுக்காசு எடுக்கும் நிலையில் கூ ட அவர்களில்லை.

எனக்கு என்ன சொந்த கோவம் மாமனா ?மச்சானா? பங்கருக்க இருந்து இரண்டி அடியில் எதிரி இருப்பதே தெரியாமல் போராட்டம் நடாத்தியதை பற்றித்தான் கோவம்.மக்களையும் மன்னாரில் இருந்து இழுத்து இழுத்து கொண்டுபோய் கடைசியில் முள்ளிவாய்க்காலில் காவு கொடுத்த கோவம் ஆயுளுக்கும் போகாது.

  • கருத்துக்கள உறவுகள்

கடல் படை, வான் படை, அரசியல் நிர்வாகம், சமூக அக்கறை கொண்ட,

மிக, உன்னத போராட்டத்தை காட்டிக் கொடுத்த, காக்கை வன்னியன் பரம்பரையில் வந்த ஒட்டுக் குழுக்களே... காரணம்.

தானும்... படான், தள்ளியும் படான் தமிழன்.

நீங்கள் சொன்னா மூவரும் குரல் கொடுப்பது தமது சுய அடையாளத்திற்காக ,இனமானதிற்காக அல்ல ,அதனால் தான் கட்டுக்காசு எடுக்கும் நிலையில் கூ ட அவர்களில்லை.

சுய அடையாளத்தை ,, நிலை நாட்ட ,,எதுக்கு .......

இந்தியாவில இருக்குற ,, ஒருத்தன் ,,

இலங்கை தமிழனுக்கா குரல் கொடுக்கணும் அர்ஜுன் அண்ணா?

அதால வரும் ... லாபம்... முன்னேற்றம் அவங்களூக்கு ,என்ன அர்ஜுன் அண்ணா?

உள்ளூர் சாராய வியாபாரிகளுடன் கூட்டு சேர்ந்தாலே ,,

அவங்க அடையாளம் சொந்த ஊரிலயே கொடிகட்டி பறக்குமே...

ஏன் அத அவங்க பண்ணல அர்ஜுன் அண்ணா?

ஈழத்தமிழர் பற்றிய இந்தியாவின் வெளிவிவகார கொள்கை என்றும் மாறவில்லை

முதல் படி முற்றுப்பெற்ற நிலையில் இந்தியா இரண்டாவது படிக்கு ஜெனிவாவில் நகர்ந்துள்ளது. இந்த இரண்டாவது படி இலங்கையின் வெளியுறவு கொள்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாகும். 2009ல் ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவுடன் சிறிலங்கா வெற்றி பெற்றது. ஆனால் தனக்கு சீன ஆதரவு உள்ள நிலையில் இந்தியா முக்கியமல்ல என சிறிலங்கா தொடர்ந்து நம்பி வருகிறது. சிறிலங்காவின் வெளியுறவு கொள்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய தேவையை இந்தியா புரிந்து கொண்டதற்கு காரணம் 1970 களில் இருந்து சிறிலங்கா சீனாவுடன் கொண்டுள்ள அசாதாரணமான உறவு. ஆகவே அந்த உறவை அடிப்படையாக வைத்து இந்தியா தனது இரண்டாவது படியை ஆரம்பித்துள்ளது. 2012 மார்ச் மாத ஜெனிவாவில் சிறிலங்காவை கைவிட இந்திய நீண்டகாலத்துக்கு முதலே தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால் கடந்த முறை வெற்றி பெற்ற அகங்கதரத்தில் சிறிலங்கா அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் நன்றாக பகைத்துக் கொள்ள இந்தியா விரும்பியே அனுமதித்தது. உச்சியில் ஏத்தி விழுத்தி பாடம்புகட்ட இந்தியா திட்டமிட்டு செயற்பட்டுள்ளது.

இந்தியா சிங்கள தசத்தை மேற்குலத்தை பகைக்க அனுமதித்தாலும் சிங்களம் இன்று இந்தியாவுக்கு பாடம் புகட்டவும் எண்ணுகிறது. இது சாத்தியமா தெரியவில்லை. ஆனால், சீனா ஆபிரிக்காவில் (லிபியா) விட்டுக்கொடுத்தமாதிரி ஆசியாவில் இலகுவில் விட்டுக்கொடுக்காது என நம்புகிறேன். அதுவே சிங்களத்திற்கு ஆரம்பத்தில் பலமாக இருக்கும்.

இந்த முறை தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை பயன்படுத்தாமல் இந்தியா சிறிலங்காவின் வெளியுறவு கொள்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக தெரிகிறது. இந்த முயற்சி சிங்கள அரசியல் தலைவர்களுக்கு கடுமையான பாடங்களை புகட்டும் சாத்தியம் நிறையவே உள்ளது. தமிழகத்தின் பலம்வாய்ந்த அரசியல் மற்றும் பொருளாதார சக்திகளுடன் ஈழத்தமிழ் மக்கள் இணைந்து சாதுரியமாக செயற்பட்டால் இந்திய சிறிலங்கா அரசியற் சதுரங்கத்தின் பக்கவிளைவுகள் ஈழத்தமிழ் மக்களுக்கு நன்மையாக முடியலாம். இந்த நன்மை தமிழ் மக்களுக்கான தனியான நாடாக அமையும் சாத்தியம் இல்லை என்பதையும் நாம் விளங்கி கொள்ள வேண்டும்.

ஆம், முதலில் நமக்கு ஒரு காணி, காவல்துறை சார்ந்த சுயாட்சி கிடைக்கவேண்டும்.

இலங்கை, ஆரம்பத்தில் விடயம் தெரியாமல் நல்லிணக்க விசாரணைக்குள் மாட்டிவிட்டது. இப்போ ஆப்பிழுத்த குரங்காக அவதிப்படுகிறது. அது போக இப்போ இந்தியா பிரேரணைக்குள் மாட்டியிருக்கிறது. இந்தியா இனி அதை மறுக்க முடியாது. ஒவ்வொருதடவையும் அமெரிக்கா பிரேரணைச் சரத்துகளை நினைவு படுத்தும் போது இலங்கைக்கு இருக்கும் பாதை "எய்தவனிருக்க அம்பை " நோவதுமட்டும்தான். இந்தியா தேரதல் நேரம் இலங்கையால் நன்றாகத்தான் சட்டியில் போட்டு வறுக்கப்பட போகிறது.

சிங்களவன் இதை மறக்கமாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் இந்தியாவை விட கேவலமாக சிறுபான்மையினரை நடாத்துகின்றார்கள் ,போராடவும் முடியாது வெல்லவும் முடியாது என்றால் இருப்பதாய் கொண்டு திருப்திபட்டு வாழ பழகிவிடுகின்றார்கள்.

சிறுபான்மை இனங்கள் மட்டும் உரிமைகளுக்காக போராடுவதில்லை. சீனாவிலும் பிரான்சிலும் ரசியாவிலும் பெரும்பான்மை இனங்களே போராட்டம் நடத்தி உரிமைகளை பெற்றிருந்தன.

போராட முடியாத நிலையில் அடங்கிப்போகும் மக்கள் நிறைய இருப்பது உண்மைதான். தந்தை செல்வாவும் தலைவர் பிரபாகரனும் இருந்திருக்காவிட்டால் ஈழத்தமிழரும் மலைநாட்டு தமிழர் போல அடங்கி போயிருப்பார்கள். சிங்கள பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் தமது அரசியல் தலைவர்களை ஆதரிப்பதில்லை ஆனால் அவர்களுக்கு அடங்கி போகிறார்கள். 1990களில் என்னுடன் வேலை செய்த சிங்களவர் ஒருவர் சொன்னார் நீ உணது தலைவருக்கு ஆதரவளிக்க வேண்டும். அவர் பற்றி பெருமைப்பட வேண்டும் எங்கள் தலைவன் (ரோகண விஜேவீர) எங்களை ஏமாற்றி விட்டான். உனது தலைவன் காட்டுக்குள் உனக்காக போராடுகிறான் என்று.

நீங்கள் சொன்னா மூவரும் குரல் கொடுப்பது தமது சுய அடையாளத்திற்காக ,இனமானதிற்காக அல்ல ,அதனால் தான் கட்டுக்காசு எடுக்கும் நிலையில் கூ ட அவர்களில்லை.

ஆக மறுவளமாக அமோக வெற்றிபெற்ற ஜெயலலிதாவும் கருணாநிதியும் இனமானத்தின் உச்சியில் இருப்பதாக சொல்கிறீர்களா?

CNN-IBN which is part of the Global CNN television network will be airing the Channel 4 Sri Lanka's Killing Fields - War Crimes Unpunished documentary tonight in India at 9pm. This is very important as a campaign of awareness all over India.

Please also note that Channel 4 may (I say may because, news priorities may change) be reporting on a short news piece on an initiative that the Global Tamil Forum has started here in the UK, tonight at 7pm.

Global Tamil Forum

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.