Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்விக்கூடங்கள்.. வேலைத்தளங்கள்.. நேர்முகத்தேர்வு இல்லாமல் உள்ளே நுழைவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று. :blink: நானும் சிலபல இடங்களுக்கு நேர்முகத்தேர்வுகளுக்குப் போயிருக்கிறேன். unsure.gif அவற்றில் இருந்து நான் பெற்றுக்கொண்ட படிப்பினைகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம். unsure.gif

ஒண்டியாக டீ ஆத்த விடாமல் :D அவ்வப்போது உங்களது மேலான கருத்துக்களையும், உங்கள் நினைவுகளையும் பகிந்து கொள்ளவும். :lol:

பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி

எனது முதல் நேர்முகத்தேர்வு அனுபவம் பலகலைக்கழக அனுமதியின்போது நடந்தது. திருச்சியில் மண்டலப் பொறியியல் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைத்து நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்திருந்தார்கள். நானும் அம்மாவும் போனோம்.

நேர்முகத்தேர்வில் என்ன கேட்பார்கள் என்று ஓரிருவரிடம் விசாரித்துப் பார்த்திருந்தேன். யாரிடமும் சரியான பதில் இருக்கவில்லை. (படிப்பினை 1: சரியான ஆட்களிடம் சகவாசம் வைத்திருக்க வேணும். :lol: )

ஒரு தயார்ப்படுத்தலும் இல்லாமலே நேர்முகத் தேவுக்குப் போனேன். எனதுமுறை வந்தது. உள்ளே சென்றால் அந்த அறையைப் பார்க்கவே எனக்குப் பிரமிப்பாக இருந்தது. ஏற்கனவே ஒரு தயார்ப்படுத்தலும் இல்லை. பிரமிப்பு வேறு.

கல்லூரியின் முதல்வர் சுருக்கமாக ஆங்கிலத்தில் ஆரம்பிக்கிறார். :(

முதல்வர்: கணக்கில் நூறு வாங்கியிருக்கிறீர்கள்.. ஆனால் பௌதீகவியலில் 75 வீதம் தான். உங்களுக்கு இரண்டு பாடத்தில் வாய்ப்புக்கள் தரலாம்.. ஒன்று இலத்திரனியல்/தொடர்பாடல் பொறியியல் கல்வி (Electronics & Communications Engineering). அல்லது பொதுவியல் பொறியியல் கல்வி (Civil Engineering). எது வேணும்?

எனக்கு சிவில் விருப்பமில்லை. காரணம் வேலை கிடைக்காது என்று நான் ஆலோசனை கேட்டவர்கள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். இலத்திரனியல் / தொடர்பாடல் என்கிற பாடம் இருப்பதே எனக்கு அப்போதுதான் தெரியும். :lol: குழப்பம் அதிகமாகியது.

நான்: unsure.gifunsure.gifunsure.gif

முதல்வர்: mellow.gif

நான்: நீங்களே ஒன்றை தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கோ..! unsure.gif

முதல்வர்: சரி. சிவில் செய்யுங்கோ. நன்றி வணக்கம்..

வெளியே வருகிறேன். வேண்டாத பாடத்தைக் குடுத்துவிட்டார்களே என்று ஒரே கவலை. (படிப்பினை 2: வாயுள்ள பிள்ளையே பிழைக்கும். :wub: )

(தொடரும்.)

  • Replies 346
  • Views 27.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு

தொடருங்கள்

பலருக்கு உதவும் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு

தொடருங்கள்

பலருக்கு உதவும் :icon_idea:

நன்றிகள் விசுகு அண்ணா.. முதல் போணியே நீங்கள்தான்..! :lol: தொடர்கிறேன்..! :D

நல்ல முயற்சி. தொடருங்கள். ஏனையவர்களும் தங்கள் பயனுள்ள அனுபவங்களை பகிர்வார்கள்.

சிலர் நேர்முக தேர்வு வைப்பவர்களாக இருப்பார்கள். அவர்களும் எழுதட்டும் எவற்றை எதிர்பார்கிறார்கள் என்று.

நன்றி உங்கள் பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போன வாரம் ஒரு நேர்முகத் தேர்வு நடந்தது. இன்னும் பல நடக்கவுள்ளது!

அதிகம் தயார்படுத்தல் இல்லாமல் போவதுதான் எனது பாணி (முடிந்தால் 1/2 கிளாஸ் சம்பையின் குடித்துவிட்டும் போகலாம்! :icon_mrgreen: )

கேட்கப்பட்ட கேள்வியில் ஒன்று!

பல ஆயிரக்கணக்கானவர்களிடம் தலா ஒருவருக்கு ஒரு நாணயம் வீதம் கொடுக்கப்பட்டு எல்லோரையும் தலை விழும்வரை நாணயத்தை சுழற்றுமாறு கேட்கப்பட்டது. அதாவது ஒருவர் எத்தனை தரம் வேண்டுமென்றாலும் தலை வரும் வரை முயற்சிக்கலாம். எல்லோரும் தலைகளைப் பெற்றபின்னர் சுழற்சிகளின் எண்ணிக்கையில் எத்தனை வீதம் தலை விழுந்திருக்கும்?

பதிலை விளக்கத்துடன் சொல்லவேண்டி வந்தது.

சிவில் தானா நீங்களும் தொடருங்கள் எனக்கு நிறைய பிரயோசனமாய் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பதிலை விளக்கத்துடன் சொல்லவேண்டி வந்தது.

பதில் சரி?

வேலை கிடைத்ததா???

  • கருத்துக்கள உறவுகள்

பதில் சரி?

வேலை கிடைத்ததா???

இன்னும் தெரியாது. கிடைத்தாலும் தூரப் பிரச்சினை காரணமாக ஏற்பதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 2: தடைக்கல்லும் உனக்கொரு படிக்கட்டு

கல்லூரியில் சேர்ந்தபின் மன உளைச்சல் ஒருபுறம். நான் அந்தக் கல்லூரியில் சேர்ந்தது பலருக்கு நியூசாக இருந்தாலும் சிவில் படிப்பதால் கவலையடைந்த ஊரார் மறுபக்கம். laugh.gif ஒரே குழப்பமாக இருந்தது. இயந்திரவியல் பொறியியல் துறைக்கு (Mechanical Engineering) மாறும்படி எனக்கு ஊராரால் அறிவுறுத்தப்பட்டது. :D

சரி.. அதுக்கு மாறுவோம் என்று ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தேன். அதற்குப் பதில்கூட வரவில்லை. :D

முதலாம் ஆண்டு. சோதனைகளின் உச்சம். உயர்பள்ளியில் இருந்து பல்கலைக்கழகக் கல்வி எவ்வளவு மாறுபட்டது என்று விளங்க ஆரம்பித்தது. நான் கேள்விப்படாத விடயங்களையெல்லாம் படிப்பித்துக் கொண்டிருந்தார்கள். நான் அங்கு சேர்ந்ததே மிகவும் தாமதமாகத்தான். சேர்ந்து ஒரு வார இடைவெளியில் ஒரு பரீட்சை. :huh:

நான் தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வருவேன். ஆனால் கிட்டத்தட்ட 90 வீதமான மாணவர்கள் அங்கே விடுதியில் தங்கிப் படிப்பவர்கள். எந்தப் புத்தகத்தை வாங்கவேண்டும்; சீனியர் மாணர்வர் ஆலோசனை போன்றவை அவர்களுக்குக் கிடைத்தது. நான் வீட்டுக்குப் போவதும் வருவதும், புட்டுச் சாப்பிடுவதும்தான்..! laugh.gif இதற்குள் பகிடிவதை (Ragging) வேறு..! unsure.gif

ஒரு செமஸ்ரரில் இடைவெளிவிட்டு 3 பரீட்சைகள் வைப்பார்கள். முதலாவதில் 25%; இரண்டாவதில் 25%; மூன்றாவதில் 50% இறுதிப் புள்ளிக்கு எடுப்பார்கள். ஏதாவது ஒன்றில் சொதப்பினாலும் இறுதிப் புள்ளிகள் அடிவாங்கிவிடும். unsure.gif

போய் ஒருகிழமையிலேயே தேர்வுகள் வந்ததால் பல ஒற்றை இலக்கப் புள்ளிகள் வாங்கி சாதனை படைத்தேன். :D இதற்குள் சிவில் படிக்கிறோமே என்கிற கவலையும். ஊரார் புராணங்கள் வேறு.

இறுதியாக அந்த செமஸ்ரரில் மூன்று பாடங்களில் தொப்பி.. unsure.gif வாழ்க்கையிலேயே அன்றுதான் படிப்பில் தோல்வியைச் சந்தித்தேன். unsure.gif

இரண்டாவது செமஸ்ரரில் சுதாரித்துக்கொண்டு எல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்தேன். பழைய மூன்றில் இரண்டை கிளியர் செய்தேன்.. :D ஆனால் மூன்றாவதை கிளியர் செய்ய முடியவில்லை. unsure.gif அந்தத் தேர்வு நடந்த அன்று பேரூந்து வேலைநிறுத்தம் நடந்ததால் போகமுடியவில்லை. :blink: மூன்றாவது செமஸ்ரரில் அதை கிளியர் செய்தேன்..! இன்னொருமுறை தொப்பி வாங்கியிருந்தேன் என்றால் அந்த வருடத்தை இன்னுமொருமுறை படிக்க விட்டிருப்பார்கள். laugh.gif

இரண்டாம் வருடத்தில் இருந்து சிவில் படிப்பு. செங்கல்லு, கருங்கல்லு என்று ஆரம்பித்தார்கள். :D இருக்கிற மன உளைச்சலும் கூடுற மாதிரி இருந்தது. laugh.gif அதற்கடுத்து வந்த பாடங்கள் சிவில் என்றால் என்ன என்கிற விளக்கத்தைத் தந்தது. ஓரளவு ஆர்வமும் வளர்ந்தது.

முதல் வருடப் படிப்பு என்பது பொதுப் பாடப் பரப்பு. எல்லோரும் ஒரே பாடங்களையே கற்பார்கள். அந்தப் புள்ளிகள் படிப்பை முடிக்கும்போது சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது..! ஆகையால் இறுதி வருடத்தை முடிக்கும்போது First Class Honours இல் முடித்தேன்..! :rolleyes: இனிமேல் வேலை தேட வேண்டும். :huh:

(தொடரும்.)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது இசைக்கலைஞன்,

தொடருங்கள் ...........

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் எப்போதும் பிரியோசனமான பகுதி...தொடருங்கோ..:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகலவன், கிருபன், அபராஜிதன், தமிழரசு, யாயினி.. நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கும், உற்சாகத்திற்கும்..! :D

நல்ல தொடர்...தொடருங்கள்....இடைக்கிடை என் நேர்முகத்தேர்வுகள் தொடர்பான சோகக் கதைகளையும் அவுத்து விடுறன்

நன்றிகள், தொடரை ஆரம்பித்தமைக்கு. மிக்க நன்றிகள் புரியக்கூடிய எளிமையான விதத்தில் நாசூக்காக எழுதுவதற்கு.

பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி

வெளியே வருகிறேன். வேண்டாத பாடத்தைக் குடுத்துவிட்டார்களே என்று ஒரே கவலை. (படிப்பினை 2: வாயுள்ள பிள்ளையே பிழைக்கும். :wub: )(தொடரும்.)

தோல்விகளைக்கண்டு துவழக்கூடாது என்பதையும் கிடைத்த சந்தர்ப்பங்களை வைத்து சாதனைகள் படைக்கலாம் என்பதையும் கூறியுள்ளீர்கள்.

சனங்களுக்குப் பிரயோசனமான் தொடர். நன்றாக உள்ளது.

தொடருங்கள். :)

தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பல நேர் முகத்தேர்வு அனுபவங்கள் இருக்கு ஆனால் எழுதமுடியாது நீங்கள் தொடருங்கள். :lol: :lol:

மிகவும் பயனுள்ள தொடர் இசை. தொடருங்கள்.

பாகம் 2: தடைக்கல்லும் உனக்கொரு படிக்கட்டு

கல்லூரியில் சேர்ந்தபின் மன உளைச்சல் ஒருபுறம். நான் அந்தக் கல்லூரியில் சேர்ந்தது பலருக்கு நியூசாக இருந்தாலும் சிவில் படிப்பதால் கவலையடைந்த ஊரார் மறுபக்கம். laugh.gif ஒரே குழப்பமாக இருந்தது. இயந்திரவியல் பொறியியல் துறைக்கு (Mechanical Engineering) மாறும்படி எனக்கு ஊராரால் அறிவுறுத்தப்பட்டது. :D

சரி.. அதுக்கு மாறுவோம் என்று ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வைத்தேன். அதற்குப் பதில்கூட வரவில்லை. :D

எமக்கு என்று ஒரு நாடு இல்லாமை, சிங்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் தராதரப்படுத்தல் என்பன இவ்வாறான நெருக்கடிகளை எமக்கு தந்தவை. ஆனால் அவையே எமக்கு புதிய கதவுகளை திறந்தும் விட்டன.

இன்றும் பல மேற்குலக நாடுகளில் இரண்டாம் தலைமுறையினர் எதை என்னத்திற்காக உயர்கல்வி படிக்கின்றோம் என்பதில் தேவையான தெளிவில்லாமல் உள்ளனர். பலரும் பெற்றோரின் விருப்பத்திற்காக படிக்க செல்லுகிறார்கள்.

பகுதி பகுதியாக புள்ளிகள் சேர்க்கப்படும் முறை (25%, 25%, 50%) எம்மில் பலருக்கும் உயர்கல்வியிலேயே கிடைத்தது. ஆனால் புலம்பெயர் பிள்ளைகள் இவ்வாறான அணுகுமுறையை பள்ளிக்கூடத்திலேயே பார்க்கின்றபடியால் அவர்களுக்கு அது இலகுவானதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இசை பிடிக்கவில்லை என்றாலும் ஒரு வருட இறுதியில் ஆர்வம் ஏற்படக்கூடிய அளவுக்கு இசைவாக்கம் பெற்றுவிட்டீர்கள்..

இதைத்தான் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்களோ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 3: முதல் வேலை எனும் தடுப்புச் சுவர்

பலகலைக்கழகப் படிப்பு முடியும் நேரத்தில் எங்கள் கல்லூரிக்கு பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள் வருவார்கள்..! அங்கே பல நேர்முகத் தேர்வுகள் நடக்கும். அவற்றுக்கு விண்ணப்பங்கள் போடத் தேவையில்லை. நன்றாகப் படிக்கும் மாணவர்களை அவர்களே அழைத்து நேர்முகத் தேர்வு வைப்பார்கள்.

சிவில் துறையில் அப்போது யாருக்கும் வேலையே கிடைக்காது. இதை சீதனம் அதிகம் வாங்குவதற்கு (டிகிரி மாப்பிளை) உபயோகிப்பார்கள். :D அல்லது படிப்புக்கு சம்பந்தமில்லாத வேறு துறைகளுக்குப் போவார்கள்.

L&T கட்டுமான நிறுவனம் மற்றும் வேறொரு நிறுவனம் சிவில் மாணவர் நேர்முகத் தேர்வுக்கு வந்தார்கள்..! எங்கள் வகுப்பில் முதல் இரண்டு நிலையில் இருந்த மாணவர்களுக்கு வேலை கிடைத்தது. எங்களுக்கெல்லாம் அழைப்பே இல்லை..! laugh.gif

வேலை கிடைத்தவர்களுக்கு ஆரம்பச் சம்பளமே 6000 ரூபாயாம்.. எல்லோரும் வாரைப் பிளந்தார்கள். :D

பல மாணவர்கள் இறுதி வருடத்தில் TOEFL, GRE போன்ற பரீட்சைகளை எழுதி வெற்றிபெற்று அமெரிக்கா செல்லக் காத்திருந்தார்கள். இதில் ஒரு வேலையை வாங்கிய நாதாரியும் காத்திருந்தது. :rolleyes: அதாவது வேலையை வாங்கி ஒரு ஆறு மாதம் செய்துவிட்டு அமெரிக்கா போய்விடுவாராம். இதனால் இன்னும் ஒரு மாணவனுக்கு வாய்ப்பு பறிபோனது. unsure.gif

சரி.. முதல் வேலைக்கு என்ன செய்வது? எனக்கு கட்டட வடிவமைப்பில் நல்ல விருப்பம். வடிவமைப்பு என்றால் Architecture அல்ல. Structural Design.. :rolleyes:

பல்கலைக் கழகப் படிப்பை முடித்துவிட்டு சிலமாதங்கள் TOEFL, GRE படித்தேன்..! :huh: இதற்குள் ஒரு டாவு வேறு. :wub:

TOEFL, GRE இல் சித்தியடைந்திருந்தாலும் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அப்போது ரொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு மனு போட்டிருந்தேன். விசாவுக்கு சொத்துக் கணக்கு காட்ட வேண்டும் என்று ஏதோ ஒரு பிரச்சினை முளைத்தது. நாங்கள்தான் வெத்துவேட்டாச்சே.. :D இதற்குள் டாவுப் பிரச்சினை பலமடங்காகி வாழ்க்கை பெரும்பாடாகிவிட்டது.. unsure.gif

வெளிநாட்டு முயற்சியை விட்டுவிட்டு, உள்ளூரில் வேலை தேடலாம் என்று யோசித்தேன். எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ஒரு பொறியியலாளர் அலுவலகம் வைத்திருந்தார். அவரிடம் போனேன். என்னை அவர் ஏற்கனவே பார்த்திருக்கிறார். மண்டலப் பொறியியல் கல்லூரியில் படித்தவன் என்கிற ஒரு தகுதியை வைத்து எனக்கு வேலை தரச் சம்மதித்தார். :rolleyes:

அவரிடம் இன்னொருவரும் வேலை செய்தார். நாங்கள் மூன்றுபேர்தான் கம்பனி.. :D எனக்கு சம்பளம் 1000 ரூபாய்..! laugh.gif

வேலை அனுபவம் முக்கியம் என்பதை அரசல் புரசலாக அறிந்து வைத்திருந்ததால் சம்பளம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. திருச்சியில் இருந்து கரூருக்கு ஒவ்வொரு நாளும் போய்வர வேண்டும். unsure.gif ஆறுமணித்தியாலங்கள் பயணத்திலேயே கழியும்.

பள்ளிக்கூடமும், கடைத்தொகுதியும் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. வரைபடங்களுக்கேற்ப, கொங்கிரீட் வடிவமைப்பு செய்வது, அத்திவாரங்கள் வடிவமைப்பது எனது வேலை. :D

அந்த வேலையின் முழுப் பொறுப்பும் என்னுடையது. வடிவமைப்பது, பொருட்கள் கொள்வனவு செய்வது, வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது, கட்டிய கட்டடங்களைப் பரிசோதனை செய்வது என்று பல வேலைகள். இருந்தாலும் பல அனுபவங்களைப் பெற்றுத்தந்தது.

ஒரு ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்திருப்பேன். ஒரு நாள் நிறுவனத்தின் முதலாளி மெதுவாக ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். unsure.gif

(தொடரும்.)

நினைவு இருந்தால் நேர்முக தேர்வில் கேட்க பட்ட கேள்விகளையும் எழுதுங்க இசைகலைஞன்....

இன்னும் இரண்டொரு மாதங்களில் நானும் நேர்முக தேர்வுக்கு போகணும் என்ன கேள்வி கேட்பாங்க எதுமே தெரியா.. :wub: :wub:

.

அருமை இசை. தொடருங்கள்.. :)

இசையின் எழுத்தை நன்றாக ரசிக்கலாம். ( நம்மட கழுத்தில பிளேடை வைக்காதவரை ) :) :) :)

என்னோடு பல்கலையில் படித்த சகமாணவன் ஒருவன் கணனி மென்பொருள் எழுதும் வேலைக்கு நேர்முகப்பரீட்சைக்குப் போனான்.(பல்கலை முடிந்த கையோடு)

அவர்: கணனி மூலம் என்னென்ன செயலாம் ?

இவன்: கூட்டல் கழித்தல் பெருக்கல் போன்ற கணக்குகளைச் செய்யலாம்.

அவர்: அதை ஒரு கல்குலேட்டர் மூலமே செய்யலாம். கணனி எதற்கு ?

இவன்: :huh: :huh: :huh:

(இவன் நம்ம ஃபிரெண்டு எண்டா யோசிங்க நம்மள பற்றி..)

இவனைப் பகிடிவதையின் போது சீனியர்கள் ஆங்கிலப் பாடல் ஒன்றை பாடும் படி கேட்டார்கள். இவன் பாடிய பாடல்..

ஹூ இஸ் தட் பிளக் ஷீப்.. ? அது யார் ? யார் ?

இன்னொன்று பாடடா என்றார்கள்.

ஐ வோன்டு பி எ ரிச் மேன்..

ஐ வோன்டு பி எ ரிச் மேன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கும், ஆதரவிற்கும் நன்றிகள் நிழலி, தப்பிலி, சாத்திரி அண்ணா, தமிழச்சி, வல்வை அக்கா :D

வேலை அனுபவம் முக்கியம் என்பதை அரசல் புரசலாக அறிந்து வைத்திருந்ததால் சம்பளம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. திருச்சியில் இருந்து கரூருக்கு ஒவ்வொரு நாளும் போய்வர வேண்டும்.unsure.gif ஆறுமணித்தியாலங்கள் பயணத்திலேயே கழியும்.

1000 ரூபாய்கள் சம்பளத்திற்காக நிறையவே உழைத்துள்ளீர்கள். அதுவே பின்னால் வந்த வெற்றிகளுக்கு அடிக்கல் :D

பல மாணவர்கள் இறுதி வருடத்தில் TOEFL, GRE போன்ற பரீட்சைகளை எழுதி வெற்றிபெற்று அமெரிக்கா செல்லக் காத்திருந்தார்கள்.

TSE என்ற பேச்சுவாக்கு ஆங்கிலமும் பல வேலைகளுக்கு முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கேள்வி கேட்பாங்க எதுமே தெரியா..

எந்தத் துறை என்றாலும் ஒரு சில சாதாரண கேள்விகள் கேட்கப்படும்

1) என்ன வேலை செய்ய விருப்பம்? (விண்ணப்பித்த வேலை என்பது சரியான பதிலாக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

2) நீண்ட காலத் திட்டம் என்ன?

3) [முன் அனுபவம் இருந்தால்] வேலையில்/வாழ்க்கையில் சந்தித்த சவால் என்ன? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?

4) [முன் அனுபவம் இருந்தால்] வேலையில் ஏதாவது தவறு விட்டீர்களா? (இல்லை என்பது பிழையான விடை!)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.